Untitled Document
May 11, 2024 [GMT]
கம்பவாரிதி ஒரு நல்ல கில்லாடி; அவரது கழகம் ஒரு கலாச்சார கலகம் அடக்கும் படை: - மனோ கணேசன்
[Sunday 2017-02-12 19:00]

கில்லாடி என்று தமிழிலும் பயன்படுத்தப்படும் ஹிந்தி வார்த்தைக்கு போக்கிரி என்ற ஒரு அர்த்தமும் உள்ளது. போக்கிரி என்றால் அதில் நல்ல போக்கிரியும் இருக்கின்றார்கள். தீய போக்கிரிகளும் இருக்கின்றார்கள். போக்கிரி என்பதைவிட கில்லாடி என்றால் ஒரு கெட்டிக்காரன் என்ற அர்த்தமும் தமிழில் புரிந்துக்கொள்ளப்படுகிறது. கோபிகையரின் வெண்ணையை திருடி திங்கும் கிருஷ்ணனும் ஒரு கில்லாடிதான். அவன் பகவான் விஷ்ணுவின் அவதாரமான ஒரு நல்ல கில்லாடி. மகாபாரதத்திலே திரெளபதையிடம் தர்மசங்கடமான கேள்வியை எப்போதும் போல கேட்கும், நாரதரும் ஒரு கில்லாடிதான்.

கில்லாடி என்று தமிழிலும் பயன்படுத்தப்படும் ஹிந்தி வார்த்தைக்கு போக்கிரி என்ற ஒரு அர்த்தமும் உள்ளது. போக்கிரி என்றால் அதில் நல்ல போக்கிரியும் இருக்கின்றார்கள். தீய போக்கிரிகளும் இருக்கின்றார்கள். போக்கிரி என்பதைவிட கில்லாடி என்றால் ஒரு கெட்டிக்காரன் என்ற அர்த்தமும் தமிழில் புரிந்துக்கொள்ளப்படுகிறது. கோபிகையரின் வெண்ணையை திருடி திங்கும் கிருஷ்ணனும் ஒரு கில்லாடிதான். அவன் பகவான் விஷ்ணுவின் அவதாரமான ஒரு நல்ல கில்லாடி. மகாபாரதத்திலே திரெளபதையிடம் தர்மசங்கடமான கேள்வியை எப்போதும் போல கேட்கும், நாரதரும் ஒரு கில்லாடிதான்.

  

அவரது கலகம் நன்மையில் முடியும் என்பதால் அவரும் ஒரு நல்ல கில்லாடிதான். கம்பன் கழக காப்பாளர் கம்பவாரிதியும் ஒரு கில்லாடிதான். ஒரு நல்ல கில்லாடி. வெண்ணெய் திருடி திங்கும் கண்ணனை போல, நல்ல விளைவை கொண்டுவரும் கலகக்காரர் நாரதரை போல, இவர் ஒரு நல்ல கில்லாடி என தேசிய சகவாழ்வு கலந்துரையாடல் மற்றும் அரசகரும மொழிகள் அமைச்சரும், தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவருமான மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

வெள்ளவத்தை இராமகிருஷ்ண மண்டபத்தில் கொழும்பு கம்பன் கழகம் நடாத்தும் கம்பன் விழாவில் தலைமையுரை ஆற்றிய அமைச்சர் மனோ கணேசன் மேலும் கூறியதாவது,

இராமாயண சிற்பி கம்பனின் பெயரால் கொழும்பு கம்பன் கழகம் நடத்தும் விழாவிலே, மகாபாரத பாத்திரங்களை பற்றியே பேசுகிறேன் என யோசிக்காதீர்கள். கம்பராமாயண நாயகனும் பகவான் விஷ்ணு அவதாரம் தானே. அது இந்த விழாவின் பிதாமகன் கம்பவாரிதிக்கு இது நன்கு புரியும். இங்கே நான் சொல்ல வருவதே அதுதான். கம்பவாரிதியும் ஒரு கில்லாடிதான். ஒரு நல்ல கில்லாடி. வெண்ணெய் திருடி திங்கும் கன்னணனை போல, நல்ல விளைவை கொண்டுவரும் கலகக்காரர் நாரதரை போல, இவர் ஒரு நல்ல கில்லாடி.

அதுமட்டுமல்ல, அவர் ஒரு கள்வன். ஆமா, உள்ளம் கவர் கள்வன். உள்ளத்தை கவரும் கள்ளன்கள் அல்லது கள்ளிகள் எப்போதும் தமிழ் சினிமாவின் அஜித்குமார், விஜய், நயன்தாரா, சமந்தா என்றுதான் இருக்க வேண்டுமா? தமிழ் அரசியலில், ஐயா, சின்னையா, அம்மா, சின்னம்மா என்றுதான் இருக்கவேண்டுமா? பாருங்கள் இலங்கையில் வாழும் தமிழ் நடிக கலைஞர்களையோ அல்லது என்னைபோன்ற தமிழ் அமைச்சர்களையோ, எதிர்க்கட்சி தலைவர்களையோ, முதலமைச்சர்களையோ நான் இங்கே குறிப்பிடவில்லை. ஏனென்றால், நான் அல்லது நாங்கள் தமிழ் மக்களின் உள்ளங்களை கவர்ந்துள்ளோமோ என்று எனக்கு தெரியாது. ஆனால், கம்பவாரிதி இ. ஜெயராஜ், இலங்கையின் இங்கே மேலகத்தில், வடக்கில், கிழக்கில், மலையகத்தில், தெற்கில் வாழும் அனைத்து தமிழ் பேசும் பெருங்குடி மக்களின் உள்ளங்களையும் கவர்ந்துள்ளார். இது மிகையான வார்த்தைகள் அல்ல. அதேபோல் அவரது கம்பன் கழகம் ஒரு கலகம் அடக்கும் படை. ஆம், கலாச்சார கலகங்களை அடக்கி, எம் மொழி, இன, மத விழுமியங்களை ஒருமுகப்படுத்தி கலாச்சாரத்தை கட்டிக்காக்கும் கலகம் அடக்கும் படைதான் கம்பன் கழகம்.

அரசியல்வாதியான நான் இங்கே வந்து அரசியல் பேசாமல் போக முடியுமா? இது கலாச்சார மேடை என் நான் நினைத்திடவில்லை. கம்பவாரிதியே பெரும் அரசியல்வாதி. தேர்தலில் போட்டியிட்டு பதவி வகித்தால்தான் அரசியல்வாதியா? பலருக்கு தெரியாமல் இருக்கலாம். பல சந்தப்பங்களில் அவருடன் நான் முக்கிய அரசியல் விவகாரங்கள் தொடர்பில் கலந்தாலோசனை செய்துள்ளேன். அவரும் அதை அப்படி செய்யுங்கள். இதை இப்படி செய்யுங்கள் என ஆலோசனை கூறியுள்ளார்.

இன்று நாம் ஒரு தீர்மானக்கரமான திருப்பத்தில் இருக்கின்றோம். அரசியல் தீர்வு ஒருபுறம் இருக்க, நமது இனத்தின் நாளாந்த வாழ்க்கை மற்றும் மனித உரிமை பிரச்சினைகளே தீர்ந்தபாடில்லை. கிழக்கில் எழுக தமிழ் போராட்டம் சுதந்திரமாக நடத்த முடிகிறது. மறுபுறம் கேப்பாபிளவில் காணி மீட்பு சத்தியாகிரகம் நடைபெறுகிறது. வவுனியாவில் காணாமல் போனோர் உண்ணாவிரதம் நடந்தது. அரசியல் கைதிகள் விவகாரம் பேசப்படுகிறது. இவற்றை சுதந்திரமாக செய்ய முடிகிறது.

ஆனால் இந்த பிரச்சினைகளுக்கு இன்னமும் தீர்வுகள் கிடைக்கவில்லை. தீர்வுகள் கிடைக்காத வரைக்கும் போராட்டங்களை நடத்த வேண்டாம் என சொல்ல முடியாது. போராட்டங்கள் நடைபெறவே வேண்டும். மலையகத்தில் தனி வீட்டு திட்டம் நடைமுறையாகிறது. காணி வழங்கப்பட்டு அதற்கு சட்ட உறுதி பத்திரம் வழங்கப்படுகிறது. ஒரு அடி முன்னே போனால், இரண்டு அடி பின்னால் வருகிறோமா என தெரியவில்லை. அரசுக்கு வெளியே நடைபெறும் போராட்டத்தை போலவே, அரசுக்கு உள்ளேயும் நாம் போராடுகிறோம். இதனை மக்கள் புரிந்துக்கொண்டுள்ளார்கள்.

ஆகவே கிடைத்துள்ள சந்தப்பங்களை கவனமாக பயன்படுத்த வேண்டியுள்ளது. 1948ம் வருடமே, பிடிவாதமாக நின்று முஹமத் அலி ஜின்னாவை போல தனிநாட்டை பெற முயன்று இருக்கலாம். அதில்லாவிட்டாலும் அன்று தென்னிலங்கை சிங்கள தலைவர்களே தர தயார் என சொன்ன சமஷ்டியையாவது பெற்று இருக்லாம். சமஷ்டியையே வேண்டாம் என மறுத்துவிட்ட முட்டாள்களை ஆரம்பகால தலைவர்களாக கொண்ட இனம், இலங்கையிலே தமிழ் இனம். 1987ல் இந்திய பிரதமர் ராஜீவ் காந்தி, வடக்கு கிழக்கை இணைத்து தந்த தீர்வை புறக்கணித்தவர்கள், நாம். 2000ம் வருடம், சந்திரிகா பண்டாரநாயக்க கொண்டுவந்த தீர்வு, இன்று கிடைக்கும் என எதிர்பார்க்கும் தீர்வை விட முன்னேற்றகரமானது, அதையும் நாம் புறக்கணித்தோம்.

அன்று அதை ஐதேக பாராளுமன்றில் எரித்து எதிர்த்தது என்பதை சொல்லும் நாம், அன்று தமிழர் விடுதலை கூட்டணியும் அதை ஆதரிக்கவில்லை என்பதை பற்றி பேசுவதில்லை. கூட்டணியிடம் இருந்திருந்த எட்டு வாக்குகள் கிடைத்திருந்தால், அந்த சட்டம் நிறைவேறி இருக்கும் என்பதை இங்கே அமர்ந்து இருக்கும் சித்தார்த்தன் எம்பி தலையசைத்து ஏற்றுக்கொள்கிறார். கடைசியில் 2005ல் ரணிலை வெல்ல விடாமல் செய்து, ஒஸ்லோ தீர்மான திட்டத்தையும் இழந்தோம். ஆகவே வரலாறு முழுக்க சந்தப்பங்கள் நிறைய கைநழுவி போய் விட்டன என்பதை நாம் மனதில் கொள்ள வேண்டும்.

  
   Bookmark and Share Seithy.com



சிறீதரனைச் சந்தித்தார் இந்தியத் தூதுவர்!
[Saturday 2024-05-11 05:00]

இலங்கைக்கான இந்தியத் தூதுவர் சந்தோஷ் ஜாவுக்கும் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரனுக்கும் இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.



பொலிசார் உதைத்து விழுந்தியதால் மின்கம்பத்தில் மோதி ஒருவர் பலி! - யாழ்ப்பாணத்தில் சம்பவம்.
[Saturday 2024-05-11 05:00]

யாழ்ப்பாணம் - புன்னாலைக் கட்டுவனில் நேற்றிரவு பொலிஸார் விரட்டிச் சென்ற ஒருவர், மின்கம்பத்தில் மோதி உயிரிழந்தார். குறித்த சம்பவத்தில் அப்பகுதியில் பொதுமக்கள் கூடியதால் குழப்பமான சூழ்நிலை ஏற்பட்டதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.



ஜனாதிபதி தேர்தலுக்கு சிறந்த வேட்பாளர் கிடைக்கவில்லை!
[Saturday 2024-05-11 05:00]

ஜனாதிபதி தேர்தலுக்கு நாங்கள் தயார் ஆனால் சிறந்த வேட்பாளர் இதுவரை கிடைக்கவில்லை. நாட்டுக்காக எவருடனும் இணைந்து செயற்பட தயார் என ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் ஸ்தாபகர் பஷில் ராஜபக்ஷ தெரிவித்தார்.



அறிவுள்ளவர்கள் அனுரவுக்கு வாக்களிக்கமாட்டார்களாம்!
[Saturday 2024-05-11 05:00]

அறிவார்ந்தவர்கள் மக்கள் விடுதலை முன்னணிக்கு வாக்களிக்களிக்க மாட்டார்கள். மக்கள் விடுதலை முன்னணியின் உண்மை முகம் தற்போது அவர்களின் பேச்சிலேயே வெளிப்படுகிறது.ராஜபக்ஷர்களின் ஒத்துழைப்பு இல்லாமல் எவருக்கும் ஆட்சியமைக்க முடியாது என பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ தெரிவித்தார்.



4 ஆண்டுகளில் 81 பாடசாலைகள் மூடப்பட்டன!
[Saturday 2024-05-11 05:00]

2019ஆம் ஆண்டு முதல் 2023ஆம் ஆண்டு வரை 81 அரச பாடசாலைகளை மூட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.



மொட்டு நிறுத்தும் வேட்பாளரே அடுத்த ஜனாதிபதி!
[Saturday 2024-05-11 05:00]

இலங்கையின் 9 ஆவது ஜனாதிபதியாக பதவி பிரமாணம் செய்யும் நபரையே ஜனாதிபதி வேட்பாளராக களமிறக்குவோம்.பெரும்பாலான மக்கள் ராஜபக்ஷர்களுடனே உள்ளார்கள் என ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்தார்.



தமிழ்த் தலைமைகள் ஒன்றுபட்டு ஜனாதிபதி தேர்தல் குறித்து தீர்மானித்தால் மக்கள் ஏற்றுக் கொள்வார்கள்!
[Saturday 2024-05-11 05:00]

வடகிழக்கில் உள்ள அனைத்து தமிழ் தலைமைகளும் ஒன்றிணைந்து ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் வலுவான தீர்மானம் ஒன்றை எடுத்து தமிழ் மக்கள் முன் கொண்டு செல்லும்போது அதனை அவர்கள் ஏற்றுக்கொள்வார்கள் என முன்னாள் கிழக்கு மாகாணசபை உறுப்பினரும் ஈபிஆர்எல்எப்.பத்மநாபா மன்றத்தின் தலைவருமான இரா.துரைரெட்னம் தெரிவித்தார்.



அடுத்தடுத்து சிக்கிய ஐஸ் வியாபாரிகள்!
[Saturday 2024-05-11 05:00]

ஐஸ் போதைப் பொருளை வைத்திருந்த குற்றச்சாட்டில் வவுனியா பொலிசாரால் கைது செய்யப்பட்ட மூவரை 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்க வவுனியா நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.



பரீட்சை இடைவேளையில் மோதிக்கொண்ட மாணவர்கள்! - வவுனியாவில் பரபரப்பு.
[Saturday 2024-05-11 05:00]

வவுனியா நகரப்பகுதியில் இரு பாடசாலைகளின் மாணவர்கள் கடுமையாக மோதிக் கொண்டுள்ளனர். குறித்த சம்பவம் வவுனியா குடியிருப்பு பகுதியில் அமைந்துள்ள க.பொ.த சாதாரண தர பரீட்சை நிலையத்திற்கு முன்பாக நேற்று மதியம் இடம்பெற்றது.



தலைவராக செயற்பட விதிக்கப்பட்ட தடையை எதிர்த்து மைத்திரி மேன்முறையீடு!
[Saturday 2024-05-11 05:00]

ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவராக செயற்படுவதற்கு தடை விதித்து கொழும்பு மாவட்ட நீதிமன்றம் பிறப்பித்த இடைக்கால உத்தரவை ரத்து செய்யுமாறு கோரி முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சிவில் மேன்முறையீட்டு நீதிமன்றில் மேன்முறையீடு செய்துள்ளார்.



இலங்கைக்கு வருகிறார் அமெரிக்காவின் துணை இராஜாங்கச் செயலர் டொனால்ட் லூ!
[Friday 2024-05-10 16:00]

தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்கான அமெரிக்காவின் துணை செயலர் டொனால்ட் லூ இலங்கக்கு விஜயம் செய்யவுள்ளார். அமெரிக்காவின் துணை செயலர் டொனால்ட் லூ, இந்தியா, இலங்கை மற்றும் பங்களாதேஷ் ஆகிய நாடுகளுக்கான விஜயத்தை இன்று முதல் எதிர்வரும் 15 ஆம் திகதி வரை மேற்கொள்கிறார்.



நேற்றிரவு மீண்டும் ரணிலைச் சந்தித்த பசில்!
[Friday 2024-05-10 16:00]

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் முன்னாள் தேசிய அமைப்பாளர் பசில் ராஜபக்சவுக்கும் நேற்று வியாழக்கிழமை கலந்துரையாடலொன்று இடம்பெற்றுள்ளது.



அதிநவீன பிரசார அலுவலகத்தை திறந்தது பொதுஜன பெரமுன!
[Friday 2024-05-10 16:00]

எதிர்வரும் தேர்தல் பிரசாரங்களை முன்னெடுப்பதற்காக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன பத்தரமுல்ல நெலும் மாவத்தை ஜெயந்திபுரவில் அதிநவீன தேர்தல் அலுவலகத்தை இன்று காலை திறந்து வைத்துள்ளது.



வெளிநாட்டில் உள்ளவரின் காணியை மோசடியாக ஈடு வைத்தவர் கைது!
[Friday 2024-05-10 16:00]

யாழ்ப்பாணத்தில் வெளிநாட்டில் உள்ளவரின் காணியை மோசடியான முறையில் ஈடு வைத்து பணம் பெற்ற நபர் நீதிமன்ற உத்தரவுக்கு அமைய விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.



பொதுத் தேர்தல் திட்டத்துக்கு ஆப்பு வைக்கவே தேர்தல் ஆணையாளரின் அறிக்கை!
[Friday 2024-05-10 16:00]

பொதுத்தேர்தல் ஒன்றை நடத்துவது குறித்த அரசியல் கலந்துரையாடலை முறியடிக்கும் ஒரு நடவடிக்கையாகவே தேர்தல்கள் ஆணைக்குழு ஜனாதிபதி தேர்தல் குறித்து நேற்று அறிவிப்பை வெளியிட்டது என அரசியல் வட்டாரங்கள் கருதுவதாக டெய்லிமிரர் செய்தி வெளியிட்டுள்ளது.



மன்னாரில் நுங்குத் திருவிழா! Top News
[Friday 2024-05-10 16:00]

வன்னி மண் அறக்கட்டளை அனுசரணையுடன் மன்னார் மாவட்ட உள்ளூர் உற்பத்தியாளர்களின் விற்பனை நிலையத்தின் அமுலாக்கத்துடனும் நுங்குத் திருவிழா இன்று காலை 10.30 மணியளவில் மன்னாரில் நடைபெற்றது.



தாவடியில் கஞ்சா செடி வளர்த்தவர் கைது!
[Friday 2024-05-10 16:00]

யாழ்ப்பாணம் - தாவடி பகுதியில் உள்ள வீடொன்றில் கஞ்சா செடி வளர்த்த நபரொருவர் இன்றையதினம் கைது செய்யப்பட்டுள்ளார்.



சாதாரண தரப் பரீட்சையில் முறைகேடு! - சிஐடியில் முறைப்பாடு.
[Friday 2024-05-10 16:00]

நடைபெறும் கல்விப் பொதுத்தராதர பரீட்சையில் இடம்பெற்ற முறைகேடு தொடர்பில் குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் இன்று முறைப்பாடு செய்யவுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.



எம்.பியாக சத்தியப்பிரமாணம் செய்தார் முஜிபுர் ரஹ்மான்!
[Friday 2024-05-10 15:00]

சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன முன்னிலையில், பாராளுமன்ற உறுப்பினராக முஜிபுர் ரஹ்மான் இன்று சத்தியப்பிரமாணம் செய்து கொண்டார். டயானா கமகே பாராளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கப்பட்டதை அடுத்து வெற்றிடமான இடத்துக்கு முஜிபுர் ரஹ்மான் நியமிக்கப்பட்டுள்ளார்.



தீக்குளித்து உயிர் மாய்த்தார் இளம் பெண்!
[Friday 2024-05-10 15:00]

வல்வெட்டித்துறை ஸ்ரீ முருகன் குடியேற்ற பகுதியைச் சேர்ந்த, 26 வயதான இளம்பெண் ஒருவர், நேற்றுஇரவு தீக்குளித்து உயிரை மாய்த்துள்ளார்.


Vaheesan-Remax-2016
NKS-Ketha-04-11-2021
Ambikajewellers-01-08-2021-seithy
Airlinktravel-2020-01-01
Logan-Kumaresh-Homelife-02-02-2021
Rajeef sebarasha 2023/04/19
Asayan-Salon-2022-seithy
 gloriousprinters.com 2021
Karan Remax-2010
Mahesan-Remax-169515-Seithy
Kugeenthiran-200-2022-seithy
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> 12 10 2019 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Skanda Nite 2019 125th Anniversary நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா