Untitled Document
June 23, 2017 [GMT]
  • Welcome
  • Welcome
செவ்வாயில் உருளை கிழங்கு பயிர்ச்செய்கை..!!
[Friday 2017-03-10 21:00]

பெருவில் செவ்வாய் கிரகத்தின் நிலவமைப்பை கொண்டு, மேற்கொள்ளப்பட்ட  ஆய்வில் செவ்வாய் கிரகத்தில் விவசாயம் செய்வது சாத்தியமான விடயம் என தெரியவந்துள்ளது.   பெருவை தலைமையகமாக கொண்டு இயங்கும் சர்வதேச உருளை கிழங்கு மையத்தில், செவ்வாய் கிரகத்தில் நிலவும் சுற்றுச்சூழல் அமைப்பு மற்றும் காலநிலையில் உருளை கிழங்கு பயிர்ச்செய்கை சாத்தியபடுமா என்ற வகையில், கடந்தாண்டு பெப்ரவரி மாதம் 14 ஆம் திகதி மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் முடிவுகள் அண்மையில் வெளியாகியுள்ளது.

பெருவில் செவ்வாய் கிரகத்தின் நிலவமைப்பை கொண்டு, மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் செவ்வாய் கிரகத்தில் விவசாயம் செய்வது சாத்தியமான விடயம் என தெரியவந்துள்ளது. பெருவை தலைமையகமாக கொண்டு இயங்கும் சர்வதேச உருளை கிழங்கு மையத்தில், செவ்வாய் கிரகத்தில் நிலவும் சுற்றுச்சூழல் அமைப்பு மற்றும் காலநிலையில் உருளை கிழங்கு பயிர்ச்செய்கை சாத்தியபடுமா என்ற வகையில், கடந்தாண்டு பெப்ரவரி மாதம் 14 ஆம் திகதி மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் முடிவுகள் அண்மையில் வெளியாகியுள்ளது.

  

குறித்த ஆய்வானது லிமா பொறியியல் மற்றும் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தில் மேற்கொள்ளப்பட்டது. குறித்த ஆய்விற்கு செவ்வாய் கிரகத்தில் நிலவும் சுற்றுச்சூழல் அமைப்பு மற்றும் காலநிலை என்பன உருவாக்கப்பட்ட நிலையிலேயே குறித்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. மேலும் குறித்த ஆய்விற்காக அமெரிக்க விண்வெளி ஆய்வு மையமான நாசா வழங்கிய, அறிவுரை மற்றும் வடிவமைப்பு மாதிரிகளை கொண்டு பிரத்தியேகமாக தயாரிக்கப்பட்ட கியூசாட்டில் உருளைக்கிழங்குகள் நடப்பட்டன. இதற்கான பிரத்தியேக கியூப்சாட்டினை லிமா பொறியியல் மற்றும் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தை சேர்ந்த பொறியாளர்கள் வடிவமைத்திருந்தனர்.

இந்நிலையில் ஆய்வின் பலனை கொண்டு, கியூப்சாட்டில் கட்டமைக்கப்பட்ட கடுமையான சுற்றுச்சூழலில், உருளைக்கிழங்கு வளரும் என்றால், இவை செவ்வாய் கிரகத்திலும் வளர்வதற்கு அதிக வாய்ப்புள்ளதாகவும், அத்தோடு குறித்த பயிர்செய்கைகள் தொடர்பாக பல்வேறு கட்ட ஆய்வுகள் தொடர்ந்து நடத்தப்பட்டு, இலகுவாக வளரும் உருளை கிழங்கு வகை கண்டறியப்படும் என லிமா பல்கலைக்கழக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

  
   Bookmark and Share Seithy.com



சாம்சங் கேலக்ஸி நோட் 8 இந்த ஆண்டு தென் கொரியாவில் அறிமுகம்:
[Thursday 2017-06-22 18:00]

பாவனையாளர்களால் அதிகம் எதிர்பார்க்கப்பட்டு வரும் சாம்சங் கேலக்ஸி நோட் 8 ஸ்மார்ட் போன் இந்த ஆண்டு நடைபெற இருக்கும் ஐ.எஃப்.ஏ. விழாவிற்கு முன்னதாகவே வெளியிடப்படும் என கூறப்பட்டது. இந்நிலையில் தென் கொரிய தளம் ஒன்று ஓகஸ்டு 26ம் திகதி நடைபெற இருக்கும் விழாவில் அறிமுகம் செய்யப்படும் என தகவல் வெளியிட்டுள்ளது. சாம்சங் நிறுவனம் நோட் 8 அறிமுக விழாவினை அமெரிக்காவின் நியூ யார்க் நகரில் நடத்த திட்டமிட்டுள்ளது.



ஆவிகள் கேமராவில் சிக்குவது எப்படி?
[Thursday 2017-06-22 18:00]

ஆவிகள், பேய்கள் என்றாலே ஒருவித அச்ச உணர்வுகள் ஏற்படுவது இயல்பு. ஆனால் இந்த ஆவிகள் நம் கண்களுக்கு புலப்படாமல், கமெராவில் சிக்குகின்றன.



உங்களது எரிச்சலையும், கோபத்தையும் தூண்டும் உணவுப்பொருட்கள்:
[Wednesday 2017-06-21 18:00]

அனைவருக்குமே ஆரோக்கியமான உணவுகளை உட்கொள்வதாலும், உடற்பயிற்சியில் ஈடுபடுவதாலும், மன அமைதி கிடைத்து, சந்தோஷத்தை உணர முடியும் என்பது தெரியும். ஆனால் ஒருசில உணவுகளை உட்கொண்டால், அவை மனநிலையைக் கெடுப்பதோடு, எரிச்சலையும், கோபத்தையும் தூண்டும்.



கொலெஸ்ட்ராலைக் குறைக்கும் புதிய தடுப்பு மருந்து: - மனிதர்களில் சோதிக்க முடிவு
[Tuesday 2017-06-20 14:00]

இதய நோய்களை தடுக்க உதவும் கொலஸ்ட்ரோலை குறைக்கும் தடுப்பு மருந்தை மனிதர்களில் சோதிக்க விஞ்ஞானிகள் ஆரம்பித்துள்ளனர். இரத்த நாளங்களில் அடைப்பை ஏற்படுத்தும் வகையில் கொழுப்பு படிவதை தடுப்பதற்காக இந்த மருந்து ஊசி மூலம் ஏற்றப்படும். பக்கவாதம், இதயவலி மற்றும் மாரடைப்பு ஏற்படுவதை தடுப்பதற்காக தினமும் மாத்திரை உண்பதற்கு பதிலாக இது அமையும்.



இந்த மூலிகை நீரை குடிச்சா சர்க்கரைவியாதி புற்று நோய் உங்களை திரும்பி கூட பார்க்காது:
[Tuesday 2017-06-20 07:00]

புற்று நோய் சர்க்கரைவியாதி இரண்டும் பற்றியதான விழிப்புணர்வு நம்மிடையே இன்னும் அதிகரிக்க வேண்டும். இவற்றின் தீவிரம் பற்றி தெரிந்து வைத்திருக்கோமே தவிர எவ்வாறு நடைமுறைப்படுத்த வேண்டும் என்பதை மறந்துவிடுகிறோம். பெருகும் துரித மசாலா உணவுக் கடைகளே எடுத்துக் காட்டு. நாம் அவற்றை உண்பதை குறைத்துவிட்டால் இந்த கடைகளின் என்ணிக்கையும் குறையும். நம் நாட்டில் எண்ணெற்ற மூலிகை பயன் கொண்ட காய் மற்றும் கீரை வகைகள் உள்ளன. அவற்றின் நன்மைகள் எளிதில் கூறி சுருக்கிட முடியாது. அவ்வளவு பயன்களை தருபவை. அப்படி ஒன்றுதான் முருங்கைக் கீரை.



எவ்வித பக்கவிளைவும் ஏற்படாமல் நரை முடியை கருமையாக்க அற்புதமான வழி:
[Tuesday 2017-06-20 07:00]

தலை முடியில் எண்ணெய் பசை குறைவாக இருப்பதால், இளம் வயதிலே நரை முடி பிரச்சனைகள் ஏற்படுகிறது. அதனை போக்க, கடைகளில் கிடைக்கும் ரசாயனங்கள் நிறைந்த சாயங்களை பயன்படுத்தி, ஒவ்வாமை, தோல் அலர்ஜி போன்ற பிரச்சனைகளுக்கு தள்ளப்படுகின்றோம். ஆனால் இயற்கை முறையில் எவ்வித பக்கவிளைவும் ஏற்படாமல், நரை முடியை கருமையாக்க ஒரு அற்புதமான வழி உள்ளது.



நட்சத்திரங்களை விட வெப்பமான புதிய கிரகம் கண்டுபிடிப்பு
[Wednesday 2017-06-14 20:00]

மேற்பரப்பில் தோராயமாக 4,000 டிகிரி சென்டிகிரேட் வெப்பநிலையை கொண்ட வித்தியாசமான உலகம் கொண்ட கிரகத்தை விஞ்ஞானிகள் கண்டுபிடித்திருக்கின்றனர். அது கிட்டத்தட்ட நமது சூரியனைப் போன்றே வெப்பமானது. KELT-9b சுற்றிவரும் நட்சத்திரம் மிகவும் வெப்பமானதாக இருப்பது ஒரு பகுதிக் காரணம்தான்; இந்த வேற்றுலகம் அந்த நட்சத்திரத்திற்கு மிக அருகிலேயே இருப்பதும் தான் அதன் அதிவெப்பத்திற்கு காரணம்.



வயிற்றில் ரத்தப்போக்கை அதிகரிக்கும் அஸ்பிரின்
[Wednesday 2017-06-14 20:00]

முன்பு கருதப்பட்டதை விட அஸ்பிரின் மருந்தை எடுத்துக் கொள்வது அதிக ஆபத்தானது, குறிப்பாக வயதானவர்கள் எடுத்துக்கொள்வதில் பிரச்சனை உள்ளது என பிரிட்டனில் நடத்தப்பட்ட ஒரு மருத்துவ ஆய்வு கூறுகிறது. ஆஸ்பிரின் மருந்து பரவலாக மாரடைப்பு மற்றும் பக்கவாதத்தைத் தடுக்க பயன்படுத்தப்படுகிறது. நெடுங்காலமாக ரத்தப்போக்கு குறிப்பாக வயிற்றில் இருந்து அதிகரிக்கும் ஆபத்தோடு ஆஸ்பிரின் தொடர்புபடுத்தப்பட்டது.



ஐபோன் 8 பற்றிய புதிய தகவல் கசிந்தது
[Wednesday 2017-06-14 18:00]

ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் 8 சார்ந்த தகவல்கள் இணையத்தில் வெளியாகி வரும் நிலையில். ஐடிராப் தளம் மூலம் வெளியாகியுள்ள புகைப்படங்களில் ஐபோன் 8- ஐ.ஒ.எஸ். 11 இயங்குதளம் கொண்டு இயங்குவது தெரியவந்துள்ளது. ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் 8 வெளியாக இன்னும் சில மாதங்கள் உள்ள நிலையில், புதிய ஸ்மார்ட்போன் சார்ந்த தகவல்கள் தொடர்ந்து வெளியாகி வருகிறது. அதன்படி ஐடிராப் வெளியிட்டுள்ள புதிய புகைப்படங்களில் ஐபோன் 8 ஆப்பிளின் புதிய ஐஓஎஸ் 11 கொண்டு இயங்குவதை வெளிப்படுத்தியுள்ளது.



மூன்று உணவு பொருட்கள் - முந்நூறு பலன்கள்!
[Tuesday 2017-06-13 19:00]

இதயம்-கல்லீரல் – நுரையீரல் மூன்றையும் சுத்தப்படுத்த அருமையான,எளியமருந்து செய்முறை!

(1)-சில நோய்களை சாதாரணமாக தினமும் நாம் உபயோகப்படுத்தும் சில உணவு பொருட்களைக் கொண்டே குணப்படுத்தலாம். பூண்டு, எலுமிச்சைப்பழம், இஞ்சி இவற்றைக்கொண்டு இரத்தத்திலுள்ள கொழுப்பு, இதயதமனி அடைப்பு, தொற்றுநோய் மற்றும் சளி தொல்லைகளிலிருந்து விடுதலை பெறுவது எப்படி என்று பார்ப்போம்.



உலகின் சக்தி வாய்ந்த கடவுச்சீட்டு யார் பயன்படுத்துகிறார்கள் தெரியுமா?
[Tuesday 2017-06-13 19:00]

ஒரு கடவுச் சீட்டின் மதிப்பு என்பது அதை பயன்படுத்தும் நபர் ஒருவர் விசா ஏதுமின்றி எத்தனை நாடுகளுக்கு பயணிக்க முடியும் என்பதை முடிவு செய்வதாகும். இதன் அடிப்படையில் பல லட்சம் மக்கள் பயன்படுத்திவரும் ஜேர்மன் கடவுச் சீட்டானது உலகில் விசா ஏதுமின்றி அனுமதிக்கும் 218 நாடுகளில் 176 நாடுகளில் அனுமதிக்கப்படுகிறது. ஆனால் Sovereign Military Order of Malta எனப்படும் கடவுச் சீட்டானது மிக அரிதானது மட்டுமின்றி உலகில் வெறும் 3 பேர் மட்டுமே குறித்த கடவுச் சீட்டினை பயன்படுத்தியும் வருகின்றனர்.



இந்த பழத்தை சாப்பிட்டு விதையை தூக்கிப்போடாதீங்க!
[Saturday 2017-06-10 18:00]

நாவல் பழத்தை சாப்பிட்டுவிட்டு அதில் உள்ள விதையை தூக்கி வீசிவிடுவோம். ஆனால் அந்த கொட்டையில் தான் ஏராளமான சத்துக்கள் அடங்கியிருக்கின்றன. இந்த பழத்தை சாப்பிட்டு கொட்டையை தூக்கிப்போடாதீங்க பழங்கள் எல்லா வயதினருக்கும் ஏற்ற ஆரோக்கிய உணவு வகைகளுள் ஒன்று. அதிலும் அந்தந்த சீசன்களில் கிடைக்கும் பழங்களை தவறாமல் சாப்பிட வேண்டும். அவை அந்தந்த பருவகாலத்துக்கு ஏற்றபடி உடலை தகவமைத்து வைத்திருக்கும்.



பலாப்பழ பிரியரா நீங்கள்..? இதையும் சற்று படியுங்கள்.
[Friday 2017-06-09 18:00]

பாலாப் பழம் என்றாலே சுவை தனி ரகம்தான். தமிழர்கள் புலம்பெயர் நாடுகளில் அதிக விலைகொடுத்து வாங்கும் பழங்களில் முதன்மையானது பாலாப் பழம் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் பழம் பலாப்பழம். தனது இனிப்பான சுவையால் அனைவரையும் சுண்டி இழுக்கும் இந்த பழத்தால் சில தீமைகளும் உள்ளன.



உடலில் உள்ள கொழுப்பை கரைத்து நீரிழிவு நோய்களை குணமாக்கும் வெங்காயத்தாள்:
[Friday 2017-06-09 18:00]

வெங்காயத்தாள் மிகவும் பிரபலமான காய்கறிகளில் ஒன்றாகும். மேலும், அவைகள் வெள்ளை, மஞ்சள் மற்றும் சிவப்பு உட்பட பல்வேறு வகைகளில் கிடைக்கிறது. இந்த இளந்தளிர் வெங்காயத்தாளில் மிகுந்த சுவை மற்றும் ஊட்டச்சத்துக்கள் நிறைந்திருக்கின்றன. நீண்ட காலமாக வெங்காயத்தாள் சீன பாரம்பரிய மருந்துகளில் பயன்படுத்தப்படுகின்றன. வெங்காயம் போலவே வெங்காயத்தாளிலும் கூட கந்தகச்சத்து அதிகமாக உள்ளது. அதிக அளவிலான கந்தகச்சத்து பல சுகாதார நன்மைகளை வழங்குகிறது.



செவ்வாய் கிரகத்திற்கான ஸ்பெஷல் வாகனம் அறிமுகம்:
[Thursday 2017-06-08 18:00]

செவ்வாய் கிரகம் பற்றி எடுக்கப்பட்ட ஹாலிவுட் படங்களில் வருவது போன்ற விண்வெளிக்கான வாகனத்தை நாசா அறிமுகப்படுத்தி உள்ளது. செவ்வாய் கிரகத்திற்காக பயணிக்க தயாராகி வரும் திட்ட மாதிரிகளை ஃபிளோரிடாவின் கென்னடி விண்வெளி வளாகத்தில் நாசா கட்டமைத்துள்ளது. அங்கு, விண்வெளி துறையில் ஆர்வம் கொண்ட இளைஞர்களுக்கு வேண்டி, மார்ஸ் ரோவர் கான்செப்ட்டில் இந்த வாகனத்தை நாசா தயாரித்து அறிமுகம் செய்து வைத்துள்ளது.



சைனஸ் முதல் ஆஸ்துமா வரை: - நுரையீரல் பிரச்னைகள் தீர்க்கும் வழிமுறைகள்!
[Wednesday 2017-06-07 06:00]

இதய நோய், மூட்டுவலி எனப் பெரிய பெரிய நலக் குறைபாடுகளுக்குக்கூட மருந்து, மாத்திரை சாப்பிட்டால் வலிக்கு நிவாரணம் கிடைத்துவிடும். ஆனால், இந்த சளியும் ஜலதோஷமும் இருக்கிறதே... அது வந்துவிட்டால், அதற்காக மாத்திரை சாப்பிட்டாலும்கூட ஒரு வாரம் பாடாய்ப் படுத்தி எடுத்துவிட்டுத்தான் நம்மைவிட்டு அகலும். சளித் தொந்தரவு வந்துவிட்டால், முழுமையாக வேலையில் கவனம் செலுத்தவோ, நிம்மதியாகத் தூங்கவோகூட முடியாது.



புற்றுநோயை வேரறுக்கக் கூடிய ஒரே மூலிகை நித்திய கல்யாணி
[Wednesday 2017-06-07 06:00]

‘நீரின்றி அமையாது உலகு’ என்பது போல, பூவின்றி ஒரு நாளும் அமையாது நித்திய கல்யாணி. நள்ளிரவில் ஒரு பூ உதிர்ந்தால்கூட, உடனே இன்னொன்று அதற்கு ஈடாக மலர்ந்துவிடும் குணம் கொண்டது. அதனால்தான் நித்தியமும்(தினமும்) பூத்துக்குலுங்கும் கல்யாணி(திருமணப் பெண்) என்று இதன் பெயர் அமைந்தது.வெண்மை நிறத்தோடும், ரோஜா பூ நிறத்ேதாடும் விளையும் ஒரு குறுஞ்செடிதான் இந்த நித்திய கல்யாணி. இது பெரும்பாலும் இடுகாட்டில் (சுடுகாட்டில்) காணப்பெறுவதால் இதற்கு இடுகாட்டுமல்லி என்று பெயரிட்டு அழைப்பர்.



நீரிழிவு நோயை முற்றிலும் குணப்படுத்தும் ஆவாரை
[Tuesday 2017-06-06 19:00]

அழகிய மஞ்சள் வண்ணத்தில் கொத்துக் கொத்தான மலர்களைத் தாங்கி எங்கும் வளரும் ஒரு செடி ஆவாரை ஆகும். சாலை ஓரங்களிலும் சிறுகுன்றுகளிலும் நம் கண்ணுக்கு அதிகம் விருந்தாகிற செடியான ஆவாரை, மூன்று அடிகள் வரை வளரும் ஒரு குத்துச் செடியாகும். ஆவாரையின் தாவரவியல் பெயர் Cassia Aariculata என்பதாகும். இதை ஆங்கிலத்தில் Tanners Cassia என்றும், வடமொழியில் ‘தெலபோதகம்’ என்றும், தெலுங்கில் ‘தங்கேடு’ என்றும் குறிப்பது வழக்கம்.



அடிக்கடி முதுகு வலி வருவதற்கு என்ன காரணம் தெரியுமா..?
[Tuesday 2017-06-06 19:00]

முதுகு வலி என்பது நம்மிடையே காணப்படும் சர்வ சாதாரண சொல். 90 சதவீத மக்கள் வாழ்வில் ஒரு முறையாவது முதுகு வலி அனுபவிக்காமல் இருந்திருக்க முடியாது. இதற்காக மருத்துவரிடம் செல்பவர் அநேகர். முதுகுவலி, கீழ் முதுகு வலியெல்லாம் கடினம்தான் என்றாலும் பொதுவில் ஆபத்தானதாக இருப்பதில்லை. முதுகுவலி யாருக்கு வேண்டுமானாலும் வரலாம். ஆயினும் 25 வயது முதல் 55 வயது உடையோர் அடிக்கடி கூறுவர்.



பேஸ்புக்கால் தவறான பாதைக்கு போகும் சிறுவர்கள்: - தடுக்க வந்து விட்டது Talk என்ற புதிய செயலி!
[Monday 2017-06-05 18:00]

டீன்ஏஜ் சிறுவர்கள் மற்றும் சிறுமிகள் மெசேஜ் செய்வதற்காக பேஸ்புக், டாக்(Talk) என்னும் புதிய செயலி வரவுள்ளது. உலகளவில் பேஸ்புக் சமூகவலைதளத்தை பயன்படுத்துவோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதிலும், டீன்ஏஜ் சிறுவர்களும் பேஸ்புக்கில் மூழ்கி கிடக்கும் இந்த சூழலில், ஓன்லைன் மேசேஜ் மூலம் தவறான நபர்களிடம் பழகி அவர்கள் வாழ்க்கையே வீணாகும் நிலை ஏற்படுகிறது. இதிலிருந்து சிறுவர்களை பாதுகாக்க டாக் (Talk) என்ற புதிய செயலி வெளிவரவுள்ளது.


Tharsi-home-15-10-2016
Easankulasekaram-Remax-300716
Mahesan-Remax-169515-Seithy
SELVI-HOMES-09-02-17
Elankeeran-debt-solution-25-06-2016
<b> 10-06-2017 அன்று கனடா - ரொரன்டோவில்          இராகாலயா நுண்கலைக்கூடம் வழங்கிய கானமாருதம் 2017 நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள்-குணா
<b> 03-06-2017 அன்று கனடா - ரொரன்டோவில் நடைபெற்ற இதயராகங்கள் இசை நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள்-குணா
<b>14-05-2017 அன்று கனடா - ரொரன்டோவில் நடைபெற்ற தாயின்மடியில் நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா