Untitled Document
July 23, 2017 [GMT]
  • Welcome
  • Welcome
புற்றுநோய் செல்களை அழிக்கும் சக்தி வாய்ந்தது 'பீன்ஸ்'
[Sunday 2017-03-12 20:00]


பீன்ஸ் புற்றுநோய் செல்களை அழிக்கும். பீன்ஸ் சாப்பிட்டு வந்தால் அதில் உள்ள ஃப்ளேவோனாய்டுகள் புற்றுநோயை உண்டாக்கும் செல்களின் வளர்ச்சியை தடுத்து புற்றுநோய் வருவதற்கான வாய்ப்பைத் தடுக்கும். சிறுநீரக கல் பிரச்சினைக்கு சிறந்த மருந்து பீன்ஸ். இந்த நோயால் அதிகம் மக்கள் அவதியுறுகிறார்கள் இதற்கு தீர்வாக பல சிகிச்சைகள் முன்வைக்கப்பட்டாலும் பிரச்சனை என்னவோ அப்படியேதான் இருக்கிறது.

பீன்ஸ் புற்றுநோய் செல்களை அழிக்கும். பீன்ஸ் சாப்பிட்டு வந்தால் அதில் உள்ள ஃப்ளேவோனாய்டுகள் புற்றுநோயை உண்டாக்கும் செல்களின் வளர்ச்சியை தடுத்து புற்றுநோய் வருவதற்கான வாய்ப்பைத் தடுக்கும். சிறுநீரக கல் பிரச்சினைக்கு சிறந்த மருந்து பீன்ஸ். இந்த நோயால் அதிகம் மக்கள் அவதியுறுகிறார்கள் இதற்கு தீர்வாக பல சிகிச்சைகள் முன்வைக்கப்பட்டாலும் பிரச்சனை என்னவோ அப்படியேதான் இருக்கிறது.

  

1. ரத்தம் உறையாமல் பாதுகாக்கும். நீரிழிவு நோயாளிகள் பீன்ஸை அடிக்கடி உணவில் சேர்த்து வந்தால் நோயினால் உண்டான பாதிப்புகள் குறையும்.

2. நார்ச்சத்து, வைட்டமின் ஏ, சி, கே, ஃபோலேட், மாங்கனீஷ் உள்ளன. இந்த நார்ச்சத்தானது இரத்தத்தில் உள்ள கொலஸ்ட்டிராலைக் குறைத்து அதை சத்தாக மாற்றுகிறது. இதில் வைட்டமின் ஏ சத்து நிறைந்துள்ளதால் கண்பார்வை தெளிவடையச் செய்கிறது. லூட்டின், ஸியாசாந்தின், கரோட்டின் இருப்பதால் உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கச் செய்கிறது.

3. எலும்பு அடர்த்தியை அதிகப்படுத்தும். பீன்ஸில் வைட்டமின் பி6, தையமின், வைட்டமின் சி, இருப்பதால் உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தியைக் கொடுக்கிறது.

4. இரும்புச்சத்தைக் கிரகிக்கும் தன்மை பெற்றது. செரிமான சக்தியை அதிகரிக்கும். வாயுத் தொல்லையை நீக்கும். இதில் உள்ள நார்ச்சத்து மலச்சிக்கலைப் போக்கும்.

5. இரைப்பைப் பிரச்சனைகளைச் சரிசெய்யும். வேகவைத்த காய்களைத்தான் மனிதக் குடலானது எளிதில் சீரணிக்கும். மற்றும் அதன் சத்துகளை எளிதாக உட்கிரகிக்கும்.

6. சர்க்கரை நோயாளிகளுக்கு ஏற்றது. ஒருநாளுக்குத் தேவையான ஃபோவேட் சத்துக்களைத் தரும். வயிறு தொடர்பான புற்றுநோய் வராமல் தடுக்கும்.

  
   Bookmark and Share Seithy.com



குறட்டைப் பழக்கத்தை போக்கும் அரிய மூலிகை:
[Wednesday 2017-07-19 07:00]

குறட்டை என்ற ஒரு வியாதிதான், அந்த வியாதி உள்ளவர்களுக்கு அதன் சிரமம் ஒன்றும் அந்த சமயத்தில் தெரியாமல், அவரைச்சார்ந்தோருக்கு, அதிக அளவில், மன வேதனை, தூக்கம் கெட்டு ஏற்படும் உடல் வேதனை மற்றும் மன உளைச்சல் ஆகிய துன்பங்களை அடைய வைக்கும் ஒரு மோசமான வியாதி.



நீண்ட காலம் வாழ உதவும் கோப்பி: - ஆய்வில் தகவல்
[Monday 2017-07-17 08:00]

நாளொன்றுக்கு மூன்று கப் காபி அருந்துவது நீங்கள் நீண்ட காலம் வாழ உதவலாம் என்று 10 ஐரோப்பிய நாடுகளில் ஏறத்தாழ அரை மில்லியன் மக்களிடையே நடத்தப்பட்ட ஆய்வு கூறுகிறது. உள்மருந்துக்கான வருடாந்திர இதழில் பிரசுரிக்கப்பட்ட அந்த ஆய்வில், காஃபின் நீக்கப்பட்டிருந்தாலும் கூட, கூடுதலாக ஒரு கப் காபி, ஒருவரின் ஆயுளை அதிகரிக்கலாம் என யோசனை தெரிவிக்கப்பட்டுள்ளது.



அமெரிக்காவிலும், கனடாவிலும் செய்தி நிறுவனங்களின் வருமானத்தை சுரண்டும் ஃபேஸ்புக், கூகுள்:
[Wednesday 2017-07-12 19:00]

ஆன்லைன் மூலம் செய்தி நிறுவனங்களுக்கு வரும் வருமானத்தின் பெரும்பகுதி கூகுள் மற்றும் ஃபேஸ்புக் நிறுவனங்களுக்கு சென்றுவிடுகின்றன என்று அமெரிக்காவின் செய்தி நிறுவனங்கள் குற்றம்சாட்டியுள்ளன. இதுகுறித்து கூகுள், ஃபேஸ்புக் நிறுவனங்களோடு பேசுவதற்கான வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும் என்று அமெரிக்க நாடாளுமன்றத்தில் செய்தி நிறுவனங்கள் கோரிக்கை வைத்துள்ளன.



மிகவும் ஆழமான பகுதிகளில் தாமாகவே ஒளியைப் பிறப்பிக்கும் பவளப்பாறைகள் கண்டுபிடிப்பு!
[Tuesday 2017-07-11 20:00]

சமுத்திரங்களின் மிகவும் ஆழமான பகுதிகளில் சூரிய ஒளி கிடைப்பது மிக மிக அரிதாகவே இருக்கும். இதனால் அப் பகுதிகளில் உயிரினங்கள் வாழ்வதும் அரிதாகவே இருக்கும். ஆனால் சில வகையான பவளப்பாறைகள் சூரிய ஒளிக்கு பதிலாக தாமே ஒளியைப் பிறப்பித்து தம்மைத் தாமே உயிர்பிழைக்கச் செய்கின்றன என்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இவை ஆழமான பகுதிகளில் அல்காக்கள் உணவு தயாரிப்பில் ஈடுபட உதவியாகவும் இருக்கின்றன.



தலைக்கவசம் அணிவதால் ஏற்படும் முடி உதிர்வதை தடுப்பது எப்படி?
[Wednesday 2017-07-05 17:00]

ஆண் - பெண் இருவருக்கும் ஹெல்மெட் அணிவதனால் தலை முடி உதிரும். இப்போது ஹெல்மெட் அணிவதால் ஏற்படும் முடி உதிர்வதை தடுப்பது எப்படி என்று பார்க்கலாம்.



திடீரென்று மாரடைப்பு வந்தால் என்ன செய்ய வேண்டும்?
[Wednesday 2017-07-05 17:00]

திடீரென்று உங்கள் இதயத்தில் அதிக வலி ஏற்படுவதை உணர்கிறீர்கள், அந்த வலியானது மேல் கை முதல் தோள்பட்டை வரை பரவுவதை உணருகிறீர்கள். அப்போது என்ன செய்ய வேண்டும் என்று பார்க்கலாம்.



ஒரே ஒரு உறவில் கர்ப்பம் தரிக்க முடியுமா?
[Wednesday 2017-07-05 17:00]

கர்ப்பம் தரிப்பது என்பது உடலுறவு எண்ணிக்கையில் இல்லை, பெண்களின் உடல் நலனுடன், கர்ப்பம் தரிக்கும் திறனுடன் சம்பந்தப்பட்டது என்பதே நிஜம்.



தூக்கமின்மையால் அவதிபடுபவர்களா? - அப்ப இந்த பிராணாயாமம் செய்யுங்க
[Wednesday 2017-07-05 17:00]

தூக்கமின்மையால் உங்கள் நரம்பு மண்டலம் கிளர்ச்சியடைந்து உங்களது மன அழுத்த ஹார்மோன் அதிகமாக சுரக்கும் அபாயமும் உண்டாகிறது. நீங்கள் இரவு நேரத்தில் அமைதியான நிம்மதியான ஆழ்ந்த உறக்கத்தை மேற்கொள்ள யோகா பயிற்சிகள் செய்ய வேண்டும். கீழே கொடுக்கப்பட்டுள்ள யோகா பயிற்சி ஆழ்ந்த நிம்மதியான உறக்கத்திற்கு உதவும்.



வறட்டு இருமல் சளியை கட்டுப்படுத்தும் ஏலக்காய்!
[Wednesday 2017-07-05 17:00]

சளி, வறட்டு இருமல் தொல்லையால் அவதிப்படுபவர்கள் இந்த ஏலக்காய் டீயை குடிக்கலாம். இன்று ஏலக்காய் டீ தயாரிப்பது எப்படி என்று பார்க்கலாம். சளி, இருமலை கட்டுப்படுத்தும்



சிறுநீர் தாரையில் ஏற்படும் எரிச்சலை போக்கும் கொத்தமல்லி பானம்!
[Monday 2017-07-03 18:00]

நமக்கு எளிதில், அருகில் கிடைக்க கூடிய மூலிகைகள், இல்லத்தில் உள்ள அஞ்சறைப் பெட்டியில் உள்ள உணவுப்பொருட்களை கொண்டு பாதுகாப்பான பக்கவிளைவில்லாத பயனுள்ள மருத்துவத்தை பார்த்து வருகிறோம். அந்தவகையில், பருத்திப்பாலின் நன்மைகள், சிறுநீர் தாரையில் ஏற்படும் எரிச்சலை போக்கும் கொத்தமல்லி பானம் குறித்து பார்க்கலாம்.ஆடைக்கு பயன்படுவது பருத்தி. இதன் விதைகள் சத்தூட்டமான உணவாக விளங்குகிறது. பருத்தி பாலில் புரதம் உள்ளிட்ட சத்துக்கள் உள்ளன. பால் ஒவ்வாமை உள்ளவர்கள் பருத்தி பாலை குடித்து வருவதன் மூலம் போதிய சத்துக்களை பெறமுடியும். பருத்தி பாலை அடிக்கடி குடிப்பதால் முறையற்ற மாதவிலக்கு சரியாகும்.



பழங்களில் உப்பு தூவி சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்!
[Monday 2017-07-03 18:00]

பழங்களில் உப்பு தூவி சாப்பிடுவதால், பழங்களின் சுவை அதிகரிப்பதோடு, வேறு சில காரணங்களும் அடங்கியுள்ளன. இது குறித்து விரிவாக தெரிந்து கொள்ளலாம்.



சர்க்கரை நோய் ஒரு நோயல்ல: - தெரிந்து கொள்ள வேண்டிய குறிப்புகள்!
[Monday 2017-07-03 18:00]

இது ஒரு நோயல்ல... குறைபாடு. கணையத்தின் பீட்டா செல்களால் இன்சுலினை சுரக்க முடியாமல் போகும்போது ரத்தத்தில் சேரும் குளூக்கோஸின் அளவு கூடும். இதைத்தான் `டயாபடீஸ்’ என ஆங்கிலத்திலும் `சர்க்கரைநோய்’ என தமிழிலும் சொல்கிறோம். மற்ற நாடுகளில் 55 வயதிலும், இந்தியாவில் 40 வயதிலும் சர்க்கரை நோயால் பாதிக்கப்படுகிறார்கள் என்கிறது ஆய்வு. சர்க்கரைநோய், உடலுக்கு பலவிதமான நோய்களை கொண்டுவந்து சேர்க்கும் நுழைவு வாயில் ஆகும். இதயநோய், சிறுநீரக கோளாறு, பக்கவாதம்... என ஒரு பெரும் பட்டியலே உண்டு. சர்க்கரைநோயை முற்றிலும் போக்க முடியாது. ஆனால், கட்டுக்குள் வைத்திருக்கலாம். அதன் மூலம் ஆரோக்கியத்தை பராமரிக்கலாம். சர்க்கரை நோயாளிகள் பின்பற்றவேண்டிய வழிமுறைகள்...



கேன்சரை குணமாக்கும் மருந்து மூலிகை ஒன்று குயின்ஸ்லாந்தின் மழைக்காடுகளில் கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளது.
[Monday 2017-07-03 07:00]

உலகில் மிக கொடிய நோயான கேன்சரை குணமாக்கும் அறிய மருந்து ஒன்று குயின்ஸ்லாந்தின் மழைக்காடுகளில் கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளது. பல நோய்களுக்கு மருந்துகள் கண்டுபிடிக்கப்பட்ட இடத்தில் கேன்சரின் விளைவுகளை எதிர்த்து போராடுவதற்கான அற்புதமான புதிய மருந்து ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. BREAK DRUG EBC-46, இது தான் புற்றுநோயை குணப்படுத்தும் அந்த மருந்து. இந்த மருந்து பிளஷ்வுட் (Blushwood) எனப்படும் மரத்தில் காய்க்கும் பெர்ரியில் இருந்து பெறப்படுகிறது.



கொழுப்புகளைக் குறைக்க உதவும் கார்டியோ பயிற்சிகள்!
[Sunday 2017-07-02 18:00]

உடலில் சேரும் கெட்டக் கொழுப்புகளைக் குறைக்க கார்டியோ பயிற்சிகள் பெரிதும் உதவுகிறது.அதிக எடை மற்றும் கொலஸ்ட்ரால் பிரச்சனை உள்ளவர்கள், கட்டுக்கோப்பான உடலமைப்பைப் பெற விரும்புவர்கள் என்று 10-50 வயது வரை உள்ள அனைவருமே இந்த கார்டியோ பயிற்சியை பின்பற்றலாம்.



மூக்கடைப்பு பிரச்சனையை குணமாக்கும் மருத்துவம்!
[Sunday 2017-07-02 18:00]

நாசிக் குழி வீக்கம் அடைவதால், சளி அதிகமாக முகத்தில் சேர்ந்து முக்கில் அடைப்பு மற்றும் காதில் வலியை ஏற்படுத்தி இரவு நேரத்தில் நிம்மதியான தூக்கத்தை கெடுக்கிறது.இத்தகைய பிரச்சனையில் இருந்து விடுபட சில எளிய இயற்கை மருத்துவக் குறிப்புகள்.



ஆரோக்கியமான ஒருவருக்கு இடுப்புச்சுற்றளவு எவ்வளவாக இருத்தல் வேண்டும்?
[Saturday 2017-07-01 08:00]

நிறையை கட்டுப்பாட்டில் வைத்திருப்பது போல எமது இடுப்புச் சுற்றளவையும் போதிய உடற்பயிற்சி மற்றும் உணவுக்கட்டுப்பாடுகள் மூலம் சரியான அளவிலே பேணி வருவோமாக இருந்தால் பல தொற்று நோய்களிலிருந்து தப்பித்துக் கொள்ள முடியும். ஆண்கள் தமது இடுப்புச் சுற்றளவை 90cm இலும் குறைவாகவும் பெண்கள் தமது இடுப்புச் சுற்றளவை 80cm இலும் குறை வாகவும் பேணிவருவது ஆரோக் கியமானது என்று ஆய்வுகள் உறுதி செய்கின்றன.



சர்க்கரை நோயை கட்டுக்குள் வைத்திருக்கும் முள்ளங்கி!
[Friday 2017-06-30 19:00]

அன்றாட சமையலுக்கு பயன்படுத்தப்படும் காய் வகையை சேர்ந்த முள்ளங்கி எப்போதும் எளிதாக கிடைக்க கூடியது. இதில் சுவை மட்டுமல்ல மருத்துவ குணங்களும் ஏராளம். எனவே உணவாக மட்டுமின்றி முள்ளங்கி மருந்தாகவும் பயன்படுகிறது. இதில் உள்ளசத்துக்கள் ஆண்களின் உயிரணுக்களை அதிகரிக்க செய்கிறது. உடலில் உள்ள நச்சுகளை வெளியேற்றி மஞ்சள் காமாலை வராமல் பாதுகாக்கிறது. புற்றுநோய் வராமல் தடுக்கிறது. முள்ளங்கியில் வைட்டமின் சி, உள்ளிட்ட சத்துகள் அதிகம் உள்ளது. முள்ளங்கி இலைகளும் மருத்துவ மகத்துவம் கொண்டது. கல்லீரலை பாதுகாக்கிறது. தொடர்ந்து பயன்படுத்தும் போது சர்க்கரை நோயை கட்டுக்குள் வைக்கும் திறன் கொண்டது.



மூளையின் செயல்திறனை மேம்படுத்தும் தோப்புக்கரணம்!
[Friday 2017-06-30 19:00]

பள்ளியில் தவறு செய்தாலோ, வீட்டுப்பாடம் எழுதி வராவிட்டாலோ ஆசிரியர்கள் மாணவர்களைத் தோப்புக்கரணம் போட வைப்பார்கள். சில மாணவர்கள் அதிக மதிப்பெண் பெற தாங்களாகவே தேர்வு நேரங்களில் பிள்ளையார் முன் தோப்புக்கரணம் போடுவதும் உண்டு.இந்த தோப்புக்கரணம் என்பது வெறும் மதம் சார்ந்த வழிபாடோ, நம்பிக்கையோ மட்டுமே அல்ல: மூளையின் செயல்திறனை மேம்படுத்தும் அற்புத ஆற்றல் கொண்டது என்று அமெரிக்காவில் கண்டுபிடித்திருக்கிறார்கள்.



முறையற்ற யோகா பயிற்சியில் ஈடுபடுவதால் காயங்கள் ஏற்படும் சதவீதம் அதிகரிக்கிறது: - ஆய்வில் தகவல்
[Friday 2017-06-30 09:00]

பழமையான இந்திய தியான பயிற்சியில் ஒன்றாக யோகா, மனிதர்களின் தசை மற்றும் எலும்பு வலி போக்குகிறது என்று பரவலாக கூறப்பட்டு வருகிறது, இதனை ஆராய்ச்சியாளர்களும் நம்பி வருகின்றனர். இந்நிலையில் முறையற்ற யோகா பயிற்சி பாதுகாப்பானது அல்ல என்று ஒரு நாளிதழில் குறிப்பிட்டுள்ளனர். அதாவது, பாடிஒர்க் அண்ட் மூவ்மென்ட் தெரஃபி என்று சொல்லக்கூடிய நாளிதழ் ஒன்று, யோகா பயிற்சியில் ஈடுபடுவதால் காயங்கள் ஏற்படும் சதவீதம் அதிகரிக்கிறது என்று அதிர்ச்சியூட்டும் தகவலை வெளியிட்டுள்ளது.



போக்குவரத்து இரைச்சலால் ஆண்களுக்கு மலட்டுத்தன்மை ஏற்படும்: - ஆய்வில் தகவல்
[Friday 2017-06-30 09:00]

போக்குவரத்து இரைச்சலால் ஆண்களுக்கு மலட்டுத்தன்மை ஏற்படும் என ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது.போக்குவரத்து நெரிசலால் ஏற்படும் உடல்நலப் பாதிப்புகள் குறித்து சியோன் நேஷனல் பல்கலைகழக விஞ்ஞானிகள் ஆய்வு நடத்தினர்.கடந்த 8 ஆண்டுகளாக இரண்டு லட்சத்து ஆறாயிரத்து ஆண்களிடம் ஆய்வு நடத்தப்பட்டது, இதில் ஆண்களுக்கு மலட்டுத்தன்மை ஏற்படும் என தெரியவந்துள்ளது.


SELVI-HOMES-09-02-17
Easankulasekaram-Remax-300716
Elankeeran-debt-solution-25-06-2016
Tharsi-home-15-10-2016
Mahesan-Remax-169515-Seithy
<b> 24-06-2017 அன்று கனடா-ரொரன்டோவில் பரதமைல் நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள்-குணா
<b> 10-06-2017 அன்று கனடா - ரொரன்டோவில்          இராகாலயா நுண்கலைக்கூடம் வழங்கிய கானமாருதம் 2017 நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள்-குணா
<b> 03-06-2017 அன்று கனடா - ரொரன்டோவில் நடைபெற்ற இதயராகங்கள் இசை நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள்-குணா