Untitled Document
April 30, 2017 [GMT]
  • Welcome
  • Welcome
இலங்கைத் தூதரகத்தை முற்றுகையிட முயன்ற வைகோ கைது!
[Saturday 2017-03-18 16:00]

சென்னை நுங்கம்பாக்கத்தில் அமைந்துள்ள இலங்கைத் தூதரகத்தை முற்றுகையிட முயன்ற வைகோ உள்பட, ம.தி.மு.க-வினரை காவல்துறையினர் கைதுசெய்துள்ளனர்.
ஜெனிவாவில், மார்ச் 22-ம் திகதி ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் பாதுகாப்புக் கூட்டம் நடைபெற உள்ளது. 2009-ம் ஆண்டு, இலங்கையில் நடைபெற்ற போர் குறித்து விசாரணை அறிக்கை சமர்ப்பிக்க, அந்நாட்டு அரசு மேலும் 18 மாத காலம் அவகாசம் கேட்க உள்ளது. இதனை அமெரிக்கா, பிரித்தானியா உள்ளிட்ட நாடுகள் ஆதரிக்கும் என்று தெரிய வந்துள்ளது.

சென்னை நுங்கம்பாக்கத்தில் அமைந்துள்ள இலங்கைத் தூதரகத்தை முற்றுகையிட முயன்ற வைகோ உள்பட, ம.தி.மு.க-வினரை காவல்துறையினர் கைதுசெய்துள்ளனர். ஜெனிவாவில், மார்ச் 22-ம் திகதி ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் பாதுகாப்புக் கூட்டம் நடைபெற உள்ளது. 2009-ம் ஆண்டு, இலங்கையில் நடைபெற்ற போர் குறித்து விசாரணை அறிக்கை சமர்ப்பிக்க, அந்நாட்டு அரசு மேலும் 18 மாத காலம் அவகாசம் கேட்க உள்ளது. இதனை அமெரிக்கா, பிரித்தானியா உள்ளிட்ட நாடுகள் ஆதரிக்கும் என்று தெரிய வந்துள்ளது.

  

ஏற்கெனவே, இலங்கையில் நடைபெற்ற போர் குறித்து சர்வதேச விசாரணை கோரி வந்ததை இலங்கை மறுத்துவரும் நிலையில், தற்போது உள்நாட்டு விசாரணையையும் தாமதப்படுத்திவருகிறது. இதைக் கண்டித்து, வைகோ சார்பில் சென்னை வள்ளுவர் கோட்டம் அருகே இன்று கண்டன ஆர்பாட்டம் நடைபெற்றது. அப்போது பேசிய வைகோ, 'ஜெனிவாவில் நடைபெற உள்ள ஐ.நா மாநாட்டில், இலங்கை அரசுக்கு ஆதரவாகவோ அல்லது நடுநிலையாகவோ செயல்படக்கூடாது. இலங்கை அரசுக்கு எதிராக இந்தியா வாக்களிக்க வேண்டும்' என்று தெரிவித்தார்.இதைத் தொடர்ந்து, நுங்கம்பாக்கத்தில் அமைந்துள்ள இலங்கைத் தூதரகத்தை முற்றுகையிட முயன்ற வைகோ உள்பட, ம.தி.மு.க-வினரை காவல்துறையினர் கைதுசெய்தனர்.

  
   Bookmark and Share Seithy.comமுன்னாள் இந்திய பிரதமர் ராஜீவ் காந்தியை போன்று நரேந்திர மோடி மீதும் தாக்குதல் நடத்தப்படுமா!?
[Sunday 2017-04-30 09:00]

இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் இலங்கை விஜயத்தை முன்னிட்டு விசேட பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. ஜனாதிபதி பாதுகாப்புப் பிரிவு மற்றும் பொலிஸ் விசேட அதிரடிப்படை ஆகியன கூட்டாக இணைந்து விசேட பிரபுக்கள் பாதுகாப்பு படையணி ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது.இந்த விசேட படையணியே நரேந்திர மோடியின் இலங்கை விஜயம் குறித்த பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கொண்டு வருகின்றன.தலித் மக்கள் குடிநீருக்காக பயன்படுத்தும் கிணற்றில் மண்ணெண்ணெய் ஊற்றி ஆதிக்க சாதியினர் அராஜகம்!
[Sunday 2017-04-30 09:00]

மத்திய பிரதேசத்தில் இருந்து 200 கி.மி தொலைவில் உள்ளது அகர் மால்வா என்ற கிராமம். இந்த கிராமத்தில் தலித் மக்கள் பயன்படுத்தும் கிணற்றில் மண்ணெண்ணெய்யை கொட்டி அப்பகுதியில் உள்ள ஆதிக்க சாதியினர் கொடுஞ்செயல் புரிந்துள்ளனர். இதனால் குடிப்பதற்கு கூட தண்ணீர் இல்லாமல் அல்லாடி வருகின்றனர் தலித் மக்கள்.வாகன விபத்தில் பிரபல நடிகை மரணம்: - உயிருக்கு போராடும் நடிகர்
[Sunday 2017-04-30 08:00]

இந்தியாவில் இடம்பெற்ற வாகன விபத்தில் பெங்காலி மொடல் அழகியும், பிரபல நடிகையுமான சோனிகா சிங் சௌஹான் உயிரிழந்துள்ளார்.காரை ஓட்டி சென்ற நடிகர் விக்ரம் சாட்டர்ஜி படுகாயமடைந்த நிலையில் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.கொல்கத்தாவில் குறித்த விபத்து நடந்துள்ளது, 28 வயதான சோனிகா சிங், விக்ரம் சாட்டர்ஜியுடன் காரில் பயணித்துக்கொண்டிருந்த போது கார் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து நடைமேடையில் மோதி பயங்கர விபத்து ஏற்பட்டுள்ளது.சுந்தர் பிச்சையின் அதிரவைக்கும் கடந்த ஆண்டு வருமானம்!
[Saturday 2017-04-29 13:00]

கூகுள் நிறுவனத்தின் சி.இ.ஓ சுந்தர் பிச்சைக்கு கடந்த ஆண்டின் பங்குத் தொகையாக 200 மில்லியன் அமெரிக்க டாலர் அளித்துள்ளது அந்த நிறுவனம். இந்தத் தொகை அவர் 2015-ம் ஆண்டு பெற்ற தொகையைவிட இரண்டு மடங்காகும். தமிழகத்தைச் சேர்ந்த சுந்தர் பிச்சை கூகுள் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரியாக 2015-ம் ஆண்டு பொறுப்பேற்றார். 2016-ம் ஆண்டுக்கான ஆண்டு வருமானமாக 6,50,000 அமெரிக்க டாலர் அவர் பெற்றுள்ளார். 2015-ம் ஆண்டு வாங்கிய சம்பளத்தைவிட சற்று குறைவாகும்.அதிமுக-வின் இரு அணிகளும் இணைய வாய்ப்பில்லை: - பன்னிர் செல்வம் சற்று நேரத்தில் அதிகாரபூர்வமாக அறிவிப்பு?
[Saturday 2017-04-29 13:00]

அதிமுக-வின் இரு அணிகளும் இணைய வாய்ப்பில்லை என ஓ.பன்னிர் செல்வம் சற்று நேரத்தில் அதிகாரபூர்வமாக அறிவிப்பார் என தகவல் வெளியாகியுள்ளது.அதிமுக பொதுச் செயலாளர் சசிகலாவின் குடும்பத்தால் கட்சிக்கு பிரச்சனை என எண்ணிய எடப்பாடி அணியினர், ஓ.பி.எஸ் அணியுடன் இணைய பேச்சுவார்த்தை நடத்த தயார் என கூறினார்கள்.இதற்கு ஓ.பி.எஸ் அணியும் சம்மதம் தெரிவித்ததால் பேச்சு வார்த்தை நடத்தப்பட்டு இரு அணிகளும் இணையும் என எதிர்ப்பார்க்கபட்டது.பொலிசாரால் தேடப்பட்டு வந்த ஜெயலலிதாவின் கார் ஓட்டுனர் மர்மமான முறையில் உயிரிழப்பு!
[Saturday 2017-04-29 13:00]

கொடநாடு எஸ்டேட் கொலை வழக்கில் பொலிசாரால் தேடப்பட்டு வந்த ஜெயலலிதாவின் கார் ஓட்டுனர் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளார்.தமிழ்நாட்டின் நீலகிரியில் உள்ள கொடநாடு எஸ்டேட்டில் மறைந்த ஜெயலலிதாவுக்கு சொகுசு பங்களா உள்ளது.அங்கு காவலாளியாக இருந்த ஓம் பகதூர் என்பவர் சில நாட்களுக்கு முன்னர் மர்ம நபர்களால் அடித்து கொல்லபட்டார்.பருந்தின் உயிரை காப்பற்றிய நபர்: - உயிர் காத்தவனை தினமும் பார்க்க வரும் பருந்து
[Saturday 2017-04-29 07:00]

பருந்தின் உயிரை ஒருவர் காப்பற்றியதையடுத்து அது தினமும் அந்த நபரின் வீட்டுக்கு வருவதை வாடிக்கையாக கொண்டுள்ளது. தமிழ்நாட்டின் பொள்ளாச்சி அருகில் இருக்கும் கிராமத்தில் வசித்து வருபவர் அனில்குமார்.தப்பி பண்ணிட்டேன் சார் நானும் சாக வேண்டும்: - அம்மா, சகோதரியை கொன்ற இளைஞர் கதறல்
[Friday 2017-04-28 18:00]

சென்னையில் தனது அம்மா மற்றும் சகோதரியை கொலை செய்த இளைஞருக்கு பொலிசார் கவுன்சிலிங் கொடுத்து வருகிறார்கள். சென்னையில் சைதாபேட்டையை சேர்ந்தவர் ஹேமலதா, இவருக்கு ஜெயலட்சுமி என்ற மகளும், பால முருகன் என்ற மகனும் உள்ளனர்.ஹேமலதாவின் கணவர் கடந்த வருடம் உடல் நலக்குறைவால் உயிரிழந்து விட்டார்.ஈழத்தமிழர்கள் படுகொலை: - வைகோவின் வேண்டுகோளை ஏற்ற ஐநா சபை
[Friday 2017-04-28 13:00]

ஈழத்தமிழர்கள் குறித்த வைகோ வேண்டுகோளை ஐநா சபை ஆய்வுக்கு அனுப்பி வைத்துள்ளது. மனித உரிமை கவுன்சில் உறுப்பினர்களின் ஆய்வுக்கு சுற்றறிக்கையாக ஐநா அனுப்பியுள்ளது. இலங்கை தமிழர் படுகொலை தொடர்பாக விசாரணை ஆணையம் அமைக்க வைகோ கோரிக்கை விடுத்திருந்தார்.அசைவ உணவு வேணும் அடம்பிடித்த மணமகன்: - திருமணத்தை நிறுத்திய மணமகள்
[Friday 2017-04-28 13:00]

உத்தரப்பிரதேசத்தில், திருமணத்தின்போது சைவ உணவு பரிமாறப்பட்டதால் பிரச்னைசெய்த மணமகனை, திருமணம் செய்துகொள்ள மாட்டேன் என்று மணமகள் திருமணத்தை நிறுத்தினார். யோகி ஆதித்யநாத், உத்தரப்பிரதேசத்தின் முதல்வராகப் பொறுப்பேற்ற பிறகு, சட்டவிரோதமாகச் செயல்படும் இறைச்சிக் கடைகளைத் தடைசெய்தார். மேலும், இந்துத்துவ அமைப்புகளின் எதிர்ப்புகள் காரணமாகவும் உத்தரப்பிரதேசத்தில் ஏராளமான இறைச்சிக் கடைகள் மூடப்பட்டன.கர்ப்பிணி பெண்ணை அடித்து கொலை செய்த பெற்றோர்!
[Friday 2017-04-28 13:00]

தமிழ்நாட்டில் 7 மாதம் கர்ப்பமாக இருந்த பெண்ணை பெற்றோரே அடித்து கொலை செய்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழ்நாட்டின் அரியலூர் மாவட்டதை சேர்ந்த தங்கராசு - பவானி தம்பதிகளின் மகள் சர்மிளா.இவர் அப்பகுதியை சேர்ந்த கலைராஜ் என்பவரை காதலித்து வந்தார். சர்மிளாவின் காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததால் கடந்த 2008ல் அவர் தனது காதலனுடன் தலைமறைவானார்.அதிமுகவுடன் ஐக்கியமாகும் சமத்துவ மக்கள் கட்சி: - சரத்குமார் திடீர் முடிவு
[Friday 2017-04-28 13:00]

சமத்துவ மக்கள் கட்சியை கலைத்துவிட்டு அதிமுகவுடன் ஐக்கியமாகும் முடிவில் சரத்குமார் இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.பன்னீர்செல்வம் அணி, எடப்பாடி அணி, தினகரன் அணி, திவாரகன் அணி என அதிமுக கட்சி நான்கு துண்டுகளாக சிதறி கிடக்கிறது.இதனால் அதிமுக எம்எல்ஏக்கள் யாருக்கு ஆதரவு கொடுப்பது என தெரியாமல் தவித்து வருகின்றனர்.இந்நிலையில், தற்போது தமிழகத்தின் முதல்வராக இருக்கும் எடப்பாடி பழனிச்சாமி, அதிக எம்எல்ஏக்களின் ஆதரவுகளை பெற்று எப்படியாவது முதல்வர் நாற்காலியை தக்க வைத்துக்கொள்ள வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறார்.தினகரன் வீட்டில் கேமராவுடன் நிற்கும் இந்த பெண் யார் தெரியுமா?
[Friday 2017-04-28 08:00]

இரட்டை இலைச் சின்னத்தைப் பெற லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கில் கைதுசெய்யப்பட்டுள்ள டி.டி.வி. தினகரனிடம், அவரது அடையாறு இல்லத்தில் நேற்று 6 மணி நேரம் விசாரணை நடைபெற்றது. தினகரனை, டெல்லி குற்றப்பிரிவு போலீஸார் அடையாறு இல்லத்துக்கு அழைத்துவருவதற்கு முன்பே, அவரது வீட்டின் முன்பு பல்வேறு ஊடகத்தினர் குவிந்துவிட்டனர். சுமார் 6 மணி நேரம் நடந்த விசாரணையில், பணம் அனுப்பிவைக்கப்பட்டது எப்படி என்பதுகுறித்து அப்போது கேட்டறிந்தனர்.தினகரனுக்கு ரகசிய தோழி: - அவர் என்ன செய்திருக்கிறார் தெரியுமா?
[Friday 2017-04-28 07:00]

இரட்டை இலை சின்னம் லஞ்சம் தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ள டிடிவி தினகரனின் மனைவி மற்றும் அவரது ரகசிய தோழி ஒருவரிடம் பொலிசார் விசாரணை மேற்கொண்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளனஇரட்டை இலை சின்னத்தை பெறுவதற்கு, லஞ்சம் கொடுத்த வழக்கி டிடிவி தினகரன் அண்மையில் கைது செய்யப்பட்டார். அவரிடம் டெல்லி பொலிசார் கிடுக்குப்பிடி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.கள்ளக்காதலனுடன் மனைவி கும்மாளம்: - இருவருக்கும் தர்ம அடி கொடுத்த கணவன்
[Friday 2017-04-28 07:00]

கள்ளக்காதலனுடன் ஒன்றாக இருந்த மனைவியை பார்த்த கணவர் அவர்கள் இருவருக்கும் தர்ம அடி கொடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.தமிழகத்தின் ஜோலார் பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் குமார்(28). இவருக்கு நந்தினி(23) என்ற மனைவியும், மூன்று குழந்தைகளும் உள்ளனர்.நன்றாக சென்று கொண்டிருந்த இவர்கள் வாழ்க்கையில் அடியத்தூர் பகுதியைச் சேர்ந்த தேவேந்திரன்(24) என்பவர் புகுந்துள்ளார். அதவாது நந்தினிக்கும், தேவந்திரனுக்கும் அவ்வப்போது கள்ளத்தொடர்பு இருந்துள்ளது.திரைப்பட நடிகர் வினுச்சக்கரவர்த்தி காலமானார்:
[Thursday 2017-04-27 23:00]

வினுச்சக்கரவர்த்தி மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் 1945-ம் ஆண்டு டிசம்பர் மாதம் பிறந்தவர். தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னட மொழிப்படங்களில் நடித்து உள்ளார். வில்லன், காமெடி மற்றும் குணச்சித்திர வேடங்களில் நடித்து புகழ் பெற்றவர். கதை மற்றும் வசனகர்த்தாவாக திரை உலகிற்கு அறிமுகம் ஆனவர். தென் இந்திய மொழிகளில் 1000-த்திற்கும் அதிகமான படங்களில் நடித்து உள்ளார். ரஜினி, கமல், பிரபு உள்பட நட்சத்திர நடிகர்களுடனும் நடித்தவர்.ஜாமீன் கிடைத்தும் வெளியெ செல்ல வைகோ மறுப்பு!
[Thursday 2017-04-27 18:00]

மதிமுக பொதுச்செயலாளர் வைகோவை மேலும் 35 நாட்கள் சிறையில் அடைக்க சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தேச துரோக வழக்கில் சென்னை முதன்மை கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் வைகோ ஆஜர்ப்படுத்தப்பட்டார். அப்போது ஜூன் 2-ம் தேதி வரை வைகோவை காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதனால் அவர் மேலும் 35 நாட்கள் சிறையில் இருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. சிறைக்கு செல்லும் செய்தியாளர்களிடம் பேசிய வைகோ தமிழகம் மற்றும் விவசாயிகளின் நலனில் பிரதமருக்கு அக்கறையில்லை என்று கூறினார். தமிழக விவசாயிகளை அவமதித்த பிரதமர் மோடிக்கு அவர் கண்டனம் தெரிவித்தார். சென்னையில் 2009-ம் ஆண்டு நடைபெற்ற நிகழ்ச்சியில் இந்திய ஒருமைப்பாட்டுக்கு எதிராக பேசியதாக தொடரப்பட்ட வழக்கை சென்னை எழும்பூர் நீதிமன்றம் விசாரித்து வருகிறது.அரிய வகை வயது நோயால் 160 வயதுடையவரை போல் தோற்றமளிக்கும் 21 வயது மனிதன்!
[Thursday 2017-04-27 18:00]

உத்தர பிரதேசம் மாநிலம் அலகாபாத் மாவட்டத்தில் உள்ள ஹனுமன்கஞ் கிராமத்தில் 160 வயதுடையவரை போல் தோற்றமளிக்கும் 21 வயது மனிதன். அரிய வகை வயது நோயால் பாதிக்கப்பட்ட ரூபேஷ் குமாரின் வயது வழக்கத்தை விட 8 மடங்கு அதிகமானதாக இருக்கிறது. ஹட்சின்சன்-கில்ஃபோர்ட் ப்ரோகேரியா என்ற நோயால் பாதிக்கப்பட்டுள்ளார், 8 மில்லியன் மக்களில் ஒருவருக்கு இந்த நோய் தாக்கம் இருக்கும் என்று மருத்துவர்கள் கூறியுள்ளனர். இவரின் எடை வெறும் மூன்று கல் ஆகும். ரூபேஷ் குமாரின் தந்தையான ராபாபதி குமார் (45), என் மகன் சிறியவனாக இருக்கும்போதே அடிக்கடி தலைவலி மற்றும் வயிற்று வலியால் அவதிப்பட்டான். அவனை பல மருத்துவர்களிடம் அழைத்துக் கொண்டு சென்றோம், ஆனால் அவர்களில் யாரும் ரூபேஷின் நிலைமையை கண்டறிய முடியவில்லை.சிறையில் தாயுடன் வசிப்பதற்கு 2 வயது குழந்தைக்கு அனுமதி!
[Thursday 2017-04-27 18:00]

சென்னை புழல் சிறையில் தனது தாயுடன் வசிப்பதற்கு 2 வயது குழந்தைக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.பாட்டியின் சொத்துக்களை அபகரிப்பதற்காக ரமேஷ் என்ற நபர் தனது பாட்டியை கொலை செய்துள்ளார்.இதில் இவருக்கு உடந்தையாக இருந்த அவரது மனைவி திவ்யாவும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.திவ்யா சிறையில் அடைக்கப்படும்போது கர்ப்பிணியாக இருந்துள்ளார். இந்நிலையில் திவ்யாவுக்கு குழந்தை பிறந்துள்ளது.ரயில் கழிவறையில் குழந்தையை பெற்றெடுத்த பெண் : - தண்டவாளத்தில் விழுந்த குழந்தை - நடந்த அதிசயம்
[Thursday 2017-04-27 18:00]

இந்தியாவில் ஓடும் ரயிலின் கழிவறையில் பெண் ஒருவர் குழந்தையை பெற்றெடுத்துள்ளது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. மேற்கு வங்காள மாநிலத்தை சேர்ந்தவர் சந்தனா (26), நிறை மாத கர்ப்பிணியான இவர் தனது கணவருடன் ரயிலில் மும்பையில் இருக்கும் தனது தாய் வீட்டுக்கு சென்று கொண்டிருந்தார்.ரயிலில் சென்று கொண்டிருக்கும் போது கழிவறைக்குள் சென்ற சந்தனாவுக்கு பிரசவ வலி ஏற்பட்டு அங்கேயே குழந்தை பிறந்துள்ளது.


Easankulasekaram-Remax-300716
Tharsi-home-15-10-2016
SELVI-HOMES-09-02-17
Mahesan-Remax-169515-Seithy
Elankeeran-debt-solution-25-06-2016
<b>08-04-2017 அன்று  மார்க்கத்தில்  நடைபெற்ற IMHO DINNER NIGHT 2017 நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள்-குணா
<b>01-04-2017 அன்று ரொரன்டோவில்  நடைபெற்ற PRIMA DANCE NIGHT 2017 நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள்-குணா
<b>25-03-2017 அன்று ரொரன்டோவில்  நடைபெற்ற  பைரவி நுண்கலைக் கூட இசை அர்ப்பணம் நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள்-குணா