Untitled Document
July 23, 2017 [GMT]
  • Welcome
  • Welcome
முக்கிய அமைச்சுக்களைக் குறிவைக்கும் பேராசை இல்லை! - என்கிறார் சரத் பொன்சேகா
[Tuesday 2017-03-21 07:00]

முக்கிய அமைச்சுப் பதவிகளை இலக்கு வைக்கும் எவ்வித பேராசையும் தமக்குக் கிடையாது என பிரதேச அபிவிருத்தி அமைச்சர் பீல்ட் மார்சல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். அமைச்சரவை மாற்றம் தொடர்பில் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.“ தற்பொது வகித்து வரும் பதவியை வகிக்கவே நான் விரும்புகின்றேன். மிகவும் சிரமப்பட்டு புதிய அமைச்சு ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது. இந்த அமைச்சில் தொடர்ந்தும் கடமையாற்றவே விரும்புகின்றேன், முக்கிய அமைச்சுக்கள் தொடர்பில் எனக்கு எவ்வித பேராசையும் கிடையாது என அவர் தெரிவித்துள்ளார்.

முக்கிய அமைச்சுப் பதவிகளை இலக்கு வைக்கும் எவ்வித பேராசையும் தமக்குக் கிடையாது என பிரதேச அபிவிருத்தி அமைச்சர் பீல்ட் மார்சல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். அமைச்சரவை மாற்றம் தொடர்பில் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.“ தற்பொது வகித்து வரும் பதவியை வகிக்கவே நான் விரும்புகின்றேன். மிகவும் சிரமப்பட்டு புதிய அமைச்சு ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது. இந்த அமைச்சில் தொடர்ந்தும் கடமையாற்றவே விரும்புகின்றேன், முக்கிய அமைச்சுக்கள் தொடர்பில் எனக்கு எவ்வித பேராசையும் கிடையாது என அவர் தெரிவித்துள்ளார்.

  
  
   Bookmark and Share Seithy.com



துப்பாக்கிச் சூட்டில் படுகாயமடைந்த நீதிபதி இளஞ்செழியனின் மெய்க்காவலர் மரணம்! - சுட்டவர் தீவகத்தில் கைது? Top News
[Sunday 2017-07-23 07:00]

யாழ்.நல்லூர் பின் வீதியில் நேற்று மாலை இடம்பெற்ற துப்பாக்கி சூட்டு சம்பவத்தில் படுகாயமடைந்த, பொலிஸ் சார்ஜன்ட் இன்று அதிகாலை 12.20 மணியளவில், சிகிச்சை பயனின்றி உயிரிழந்தார். யாழ்.நல்லூர் பின் வீதியில் நேற்று மாலை இடம்பெற்ற துப்பாக்கி சூட்டு சம்பவத்தில் யாழ்.மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியனின் மெய்ப்பாதுகாவலர்கள் இருவர் காயமடைந்தனர்.



நல்லூர் துப்பாக்கிச் சூடு: நடந்தது என்ன? - நீதிபதி இளஞ்செழியன் விளக்கம் Top News
[Sunday 2017-07-23 07:00]

மேல் நீதிமன்ற நீதிபதியான என் மீது மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகமானது நீதித்துறைக்கு விடுக்கப்பட்ட சவாலாகவே நான் கருதுகின்றேன் என யாழ்.மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியன் தெரிவித்தார். யாழ். நல்லூர் பின் வீதியில் நேற்று மாலை மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் தொடர்பாக விபரித்த போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.



துப்பாக்கிச் சூட்டை நேரில் பார்த்தவர் கூறும் தகவல்கள்! Top News
[Sunday 2017-07-23 07:00]

வீதியில் நின்ற இளைஞன் ஒருவரை நோக்கியே, மர்மநபர் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டார் என்று நல்லூர் பகுதியில் நேற்று மாலை இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டுச் சம்பவத்தை நேரில் பார்த்ததாகத் தெரிவித்த இளைஞன் தெரிவித்தார். இதுகுறித்து அவர் ஊடகங்களிடமும் பொலிஸ் அதிகாரிகளிடமும் தகவல் வெளியிடுகையில் -



துப்பாக்கி மீட்பு - நள்ளிரவில் கிடைத்தது மகசின்! Top News
[Sunday 2017-07-23 07:00]

நல்லூரில் நேற்று மாலை மேல் நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியனின் மெய்ப்பாதுகாவலர்கள் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டுக்குப் பயன்படுத்தப்பட்டதாகக் கூறப்படும் பிஸ்டல் நல்லூர் ஆலய வீதியில் உடனடியாகவே மீட்கப்பட்டது. அதனை தடயவியல் துறை அதிகாரிகள் பரிசோதித்த போது, அதனுள் மகசின் இருக்கவில்லை.



போராட்டத்தில் உயிரிழந்த பொதுமக்கள், போராளிகளை நினைவுகூரும் நிகழ்வு! Top News
[Sunday 2017-07-23 07:00]

ஈரோஸ் ஏற்பாட்டில் விடுதலைப் போராட்டத்தில் இன்னுயிர்களை அர்ப்பணித்த போராளிகள் மற்றும் பொதுமக்களை நினைவு கூரும் நிகழ்வு வவுனியா- கனகராயன்குளத்தில் நேற்று மாலை 4.00 மணியளவில் இடம்பெற்றது. இதன்போது, யுத்தத்தில் உயிர் நீத்த போராளிகள் ,பொதுமக்களுக்கு பொதுச்சுடர் ஏற்றி வைக்கப்பட்டு அஞ்சலி செலுத்தப்பட்டது.



பின்னணியில் உள்ள சதித்திட்டங்களை கண்டுபிடிக்க வேண்டும்! - கூட்டமைப்பு
[Sunday 2017-07-23 07:00]

நீதிபதி இளஞ்செழியன் மீதான துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வன்மையாக கண்டித்துள்ளது. நீதிபதி இளஞ்செழியன் மீது இனம் தெரியாத நபர்கள் மேற்கொண்ட துப்பாச்சூட்டுச் சம்பவம் குறித்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும், அந்தக் கட்சியின் ஊடகப் பேச்சாளருமான எம்.ஏ. சுமந்திரன் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.



இந்நாடு தனியொரு இனத்துக்கு மட்டும் சொந்தமானதல்ல என்ற உண்மையை வெளிக்கொண்டு வந்துள்ளோம்! - மனோ கணேசன்
[Sunday 2017-07-23 07:00]

சிங்கள இனத்தின் முதல் மன்னன் விஜயன் வெளியில் இருந்து வந்து இலங்கை தீவில் குடியேறினான், யாழ்ப்பாண இராஜ்ஜியம், நவீன இலங்கை எழுச்சிக்கு மலையக தமிழரின் பங்களிப்பு, இலங்கை முஸ்லிம்கள் உட்பட இந்நாட்டில் பல இன, மதத்தவர் வாழ்கின்றனர், கண்டி இராஜ்ஜியத்தின் கடைசி ஐந்து மன்னர் தமிழர், இந்நாட்டின் ஆதிகுடிகள் வேடர் போன்ற உண்மைகள் திரைப்போட்டு மறைக்கப்பட்டு, திரிக்கப்பட்டு வரும் இந்நாட்டு சரித்திரத்தை, சவாலுக்கு உட்படுத்தி, இந்நாடு தனி ஒரு இனத்துக்கு மட்டும் சொந்தமானதல்ல என்ற உறங்கும் உண்மையை நான் வெளிக்கொண்டு வந்துள்ளேன்.



பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைதானவரை அடையாளம் காட்டிய நீதிபதி!
[Sunday 2017-07-23 07:00]

பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கொலை புரிந்த மற்றும் கைத்துப்பாக்கியை உடமையில் வைத்திருந்த குற்றச்சாட்டுக்களின் அடிப்படையில் கைது செய்யப்பட்ட நபரை 14 ஆண்டுகளின் பின்பு, நீதிபதி ஒருவர் அடையாளம் காட்டினார்.



3 மாகாணசபைகளுக்கு ஒக்ரோபரில் வேட்புமனு!
[Sunday 2017-07-23 07:00]

சப்ரகமுவ, வட மத்திய மற்றும் கிழக்கு மாகாண சபைகளுக்கான தேர்தலுக்கான வேட்புமனு எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 02 ஆம் திகதி வெளியிடப்படும் என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார். உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்கான சட்டமூலத்தை நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்து அதற்கான அனுமதி கிடைக்கும் வரையில் உள்ளூராட்சி சபைத் தேர்தலை நடத்த முடியாதுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.



வவுனியாவில் நேற்றிரவு வாள்வெட்டு - இருவர் படுகாயம்!
[Sunday 2017-07-23 07:00]

வவுனியா வைத்தியசாலைக்கு அருகில் நேற்றிரவு 10.30 மணியளவில் இடம்பெற்ற வாள்வெட்டுச் சம்பவத்தில் இருவர் காயமடைந்ததாக வவுனியா பொலிஸார் தெரிவித்தனர். மோட்டர் சைக்கிளில் வந்த இருவர் மீது வாள்வெட்டு இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இச் சம்பவத்தில் இருவர் படுகாயமடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.



கடலோரக் காவல்படையினர் மீது தாக்குதல் – வடமராட்சி கிழக்கில் பதற்றம்! Top News
[Saturday 2017-07-22 17:00]

வடமராட்சி கிழக்கு குடத்தனைப் பகுதியில், நேற்று மாலை சட்டவிரோத மணல் கடத்தலை தடுக்க முனைந்த கடலோரக் காவல்படையினர் தாக்குதலுக்குள்ளான நிலையில், அவர்கள் பதிலுக்கு துப்பாக்கிச்சூடு நடத்தினர். இந்தச் சம்பவத்தை அடுத்து இன்று காலை தொடக்கம், அந்தப் பகுதியில் அதிகளவு கடற்படையினர் குவிக்கப்பட்டனர். வல்லிபுர வீதியின் இரு மருங்கிலும் 300க்கும் அதிகமான கடற்படையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர்.



நீதிபதி இளஞ்செழியனை இலக்கு வைத்து துப்பாக்கிச் சூடு! - இரு பொலிசார் காயம் Top News
[Saturday 2017-07-22 17:00]

யாழ். மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியனின் பாதுகாப்பு பொலிஸார் மீது இன்று மாலை 5.10 மணியளவில் துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இளஞ்செழியன் தனது வாகனத்தில் சென்று கொண்டிருந்தபோது, அவரது பாதுகாப்பு பொலிஸார் இருவர் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தனர். இதன்போது, நல்லூர் தெற்கு வீதி பகுதியில் இருவர், பாதுகாப்பு பொலிஸாரை வழி மறித்து தர்க்கத்தில் ஈடுபட்டுள்ளனர்.



முள்ளிப் பகுதியில் இராணுவத்தினர் மீது வாள்வெட்டு? - பொலிஸ் மறுப்பு
[Saturday 2017-07-22 17:00]

வடமராட்சியையும் தென்மராட்சியையும் இணைக்கின்ற முள்ளி வெளிப் பகுதியில், இராணுவத்தினர் மீது இனந்தெரியாத நபர்கள் வாள்வெட்டுத் தாக்குதலை நடத்தியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இன்று இடம்பெற்ற இந்தச் சம்பவத்தில் இரண்டு படையினர் காயமடைந்ததாகவும் கூறப்படுகிறது.



நாளை கொழும்பில் நடக்கிறது சம்பந்தன்- விக்கி சந்திப்பு!
[Saturday 2017-07-22 17:00]

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனுக்கும், வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனுக்கும் இடையிலான சந்திப்பு நாளை நடைபெறவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. வட மாகாண சபையில் அண்மையில் ஏற்பட்ட குழப்பங்கள் தொடர்பாகவே இவர்கள் சந்தித்துப் பேச்சு நடத்தவுள்ளனர். கொழும்பில் நடக்கவுள்ள இந்தச் சந்திப்பில், பல்வேறு பிரச்சினைகள் தொடர்பாகவும் கலந்துரையாடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.



வட்டுவாகலில் பொதுமக்களின் காணியை நிரந்தரமாக அபகரிக்க கடற்படை புதிய திட்டம்! Top News
[Saturday 2017-07-22 17:00]

முல்லைத்தீவு வட்டுவாகல் பகுதியில் பொதுமக்களின் காணிகளை அபகரித்துள்ள கடற்படையினர் அதனை நிரந்தரமாக அபகரிக்கும் நோக்கில், மரநடுகை திட்டம் ஒன்றை ஆரம்பித்துள்ளனர். மக்களின் காணிகளை உள்ளடக்கி கடற்படையினர் தமது கட்டுப்பாட்டு வளாகத்தை சுற்றி நீண்ட வேலி ஒன்றை அமைத்துள்ளனர். குறித்த வேலியோரம் சுமார் 100ற்கும் மேற்பட்ட மரங்களை கடற்படையினர் நடுகை செய்து பராமரித்து வருகின்றனர்.



இலங்கை விடயத்தில் இந்தியா தவறிழைத்து விட்டது! – சிவ்சங்கர் மேனன்
[Saturday 2017-07-22 17:00]

அண்டை நாடுகளைக் கையாளும் விடயத்தில் இந்தியாவின் அணுகுமுறைகளில் மாற்றம் செய்யப்பட வேண்டும் என்றும், இலங்கை விடயத்தில் இந்தியா தவறிழைத்து விட்டதாகவும், இந்தியாவின் முன்னாள் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சிவ்சங்கர் மேனன் தெரிவித்துள்ளார்.



இலங்கையில் கடந்த ஆண்டில் எயிட்ஸ் நோயினால் 200 பேர் மரணம்!
[Saturday 2017-07-22 17:00]

இலங்கையில் கடந்த ஆண்டில் மாத்திரம் 200 பேர் எய்ட்ஸ் நோயினால் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பாரிஸில் இடம்பெற்ற ஐக்கிய நாடுகள் சபையின் எய்ட்ஸ் அறிவியல் கருத்தரங்கில் வெளியிடப்பட்ட ஆய்வறிக்கையிலேயே இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. அதேவேளை, உலகம் முழுவதும் கடந்த 2016 ஆம் ஆண்டில் மாத்திரம் 10 இலட்சம் பேர் எய்ட்ஸ் நோயினால் உயிரிழந்துள்ளனர் என்றும் இந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.



இந்திய மீனவர்கள் 8 பேர் பருத்தித்துறையில் கைது!
[Saturday 2017-07-22 17:00]

இலங்கை கடல் எல்லைக்குள் சட்ட விரோதமாக மீன் பிடியில் ஈடுபட்டார்கள் என்ற குற்றச்சாட்டில், 8 தமிழக மீனவர்கள் கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர். நாகை மாவட்டத்தைச் சேர்ந்த இந்த மீனவர்களை பருத்தித்துறைக்கு வடகிழக்கில் கடற்படையினர் கைது செய்தனர். மேலும் மீனவர்களின் படகு மற்றும் மீன்பிடி உபகரணங்களையும் கடற்படையினர் கைப்பற்றியுள்ளனர்.



தாயைத் தாக்கி விட்டு மகளைக் கடத்திச் சென்ற கும்பல்! -வடமராட்சியில் சம்பவம்
[Saturday 2017-07-22 17:00]

அல்வாய்ப் பகுதியில் வீடொன்றினுள் புகுந்த இனந்தெரியாத நபர்கள் தாயாரைத் தாக்கிக் காயப்படுத்தி விட்டு, 19 வயதுடைய மகளை கடத்திச் சென்றுள்ளனர். நேற்றுக் காலை 08.30 மணியளவில் இச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.



உங்களுக்குள் ஒற்றுமை முக்கியம் – கூட்டமைப்பினருக்கு புத்திமதி சொன்ன ஐ.நாவின் உதவிச் செயலாளர்!
[Saturday 2017-07-22 17:00]

வடக்கு மாகாண சபையில் நடந்த விடயங்களை அறிந்திருக்கின்றோம். என்றும் உங்களின் ஒற்றுமை முக்கியம். நீங்கள் ஒற்றுமையாகத் தொடர்ந்தும் பயணிக்க வேண்டும் என்று ஐ.நாவின் அரசியல் விவகாரங்களுக்கான உதவிச் செயலாளர் ஜெப்ரி பெல்ட்மன், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரிடம் அறிவுரை கூறியுள்ளார்.


SELVI-HOMES-09-02-17
Elankeeran-debt-solution-25-06-2016
Tharsi-home-15-10-2016
Mahesan-Remax-169515-Seithy
Easankulasekaram-Remax-300716
<b> 24-06-2017 அன்று கனடா-ரொரன்டோவில் பரதமைல் நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள்-குணா
<b> 10-06-2017 அன்று கனடா - ரொரன்டோவில்          இராகாலயா நுண்கலைக்கூடம் வழங்கிய கானமாருதம் 2017 நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள்-குணா
<b> 03-06-2017 அன்று கனடா - ரொரன்டோவில் நடைபெற்ற இதயராகங்கள் இசை நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள்-குணா