Untitled Document
June 23, 2017 [GMT]
  • Welcome
  • Welcome
சரத் வீரகேசர ஒரு யுத்த குற்றவாளி - ஜெனிவா உப குழுக் கூட்டத்தில் சர்ச்சை!
[Tuesday 2017-03-21 07:00]

ஜெனிவாவில் ஐ.நா மனித உரிமை பேரவை வளாகத்தில் நேற்று நடைபெற்ற இலங்கை தொடர்பான விசேட உப குழு கூட்டத்தில் இலங்கையிலிருந்து சென்றிருந்த றியர் அட்மிரல் சரத் வீரகேசரவுக்கும் நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதிநிதிகளுக்கும் இடையில் கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டது.

ஜெனிவாவில் ஐ.நா மனித உரிமை பேரவை வளாகத்தில் நேற்று நடைபெற்ற இலங்கை தொடர்பான விசேட உப குழு கூட்டத்தில் இலங்கையிலிருந்து சென்றிருந்த றியர் அட்மிரல் சரத் வீரகேசரவுக்கும் நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதிநிதிகளுக்கும் இடையில் கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டது.

  

இதனையடுத்து முன்னாள் எம்.பி. சரத் வீரகேசர ஒரு யுத்த குற்றவாளி என்றும் சுவிஸ் அரசாங்கம் அவரைக் கைது செய்ய வேண்டும் என்றும் நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் மனித உரிமை பிரதிநிதி மணிவண்ணன் பத்மநாதன் தெரிவித்ததையடுத்து சர்ச்சை நிலை ஏற்பட்டது.

இலங்கை தொடர்பான ஜெனிவா பிரரேணையின் ஆறு மற்றும் எட்டு ஆகிய செயற்பாட்டு பந்திகளை நடைமுறைப்படுத்த வேண்டும் என்பதே வலியுறுத்தி இந்த உப குழு கூட்டம் நடைபெற்றது. இதில் அரச சார்பற்ற நிறுவனங்களின் பிரதிநிதிகளான நிரஞ்சலா, மற்றும் தர்சா ஜெகதீஸ்வரன்,அருட்தந்தை செபமாலை உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

  
   Bookmark and Share Seithy.comபூநகரி - மன்னார் வீதியை மறித்து போராட்டத்தில் குதித்தனர் இரணைதீவு மக்கள்! Top News
[Friday 2017-06-23 09:00]

கடற்படையினர் வசமுள்ள தமது பூர்வீக நிலமான இரணைதீவை விடுவிக்கக்கோரி கடந்த 54 நாட்களாக போரட்டத்தில் ஈடுபட்டு வந்த, மக்களுக்கான பதிலை அரசாங்கம் வழங்காத நிலையில், இன்று அப்பகுதிமக்கள் பூநகரி -மன்னார் வீதியை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.இலங்கையின் முதல் பெண் நீதிபதி சிவகாமசுந்தரி காலமானார்!
[Friday 2017-06-23 09:00]

இலங்கையின் முதலாவது பெண் நீதிபதியான சிவகாமசுந்தரி, 81 ஆவது வயதில் நேற்று நியூசிலாந்தில் காலமானார். புலோலி மேற்கைப் பிறப்பிடமாக கொண்ட இவர் பருத்தித்துறை மெதடிஸ்த பெண்கள் கல்லூரி கல்வி கற்று சட்டத்துறைக்குள் பிரவேசித்து 1972 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 11 ஆம் திகதி வழக்கறிஞர் ஆனார்.இலங்கைத் தமிழருக்கு ஆயுள்தண்டனை விதித்த கனடிய நீதிமன்றம்!
[Friday 2017-06-23 09:00]

கனடாவில் அயல்வீட்டுக் காரரை கொலை செய்த இலங்கைத் தமிழருக்கு கனேடிய நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்துள்ளது. இந்த வழக்கு விசாரணை நேற்றுமுன்தினம் நடைபெற்றபோதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. எனினும் அவரால் 10 வருட சிறைத்தண்டனையின் பின்னர் வெளியேற முடியும்.அமைச்சர் தயாசிறியை குரங்கு என விமர்சித்த மலிங்கவுக்கு எதிரான விசாரணை!
[Friday 2017-06-23 09:00]

விளையாட்டுத் துறை அமைச்சர் தயாசிறி ஜெயசேகரவை குரங்கு என விமர்சித்த, கிரிக்கெட் வீரர் லசித் மலிங்க மீது விசாரணை நடத்தப்படும் என்று அமைச்சர் தயாசிறி ஜெயசேகர தெரிவித்துள்ளார்.அவைத் தலைவர் சீ.வி.கே.யைச் சாடுகிறார் கஜேந்திரகுமார்!
[Friday 2017-06-23 07:00]

சீ.வி.கே. சிவஞானம் நேர்மையில்லாத, படுமோசமான சந்தர்ப்பவாதி என தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் கடுமையாகச் சாடியுள்ளார். ' ஆரம்பத்தில் தமிழரசுக் கட்சியில் இருந்தவர் அவர். தமிழரசுக் கட்சியில் போட்டியிட இடம் வழங்காத போது தமிழ்க் காங்கிரசின் காலில் விழுந்து ஆசனம் வழங்குமாறு கோரியிருந்தார்.பல்கலைக்கழக மாணவர்களா? பயங்கரவாதிகளா? - மஹிந்தவின் கேள்வி
[Friday 2017-06-23 07:00]

பல்கலைக்கழக மாணவர்கள் பயங்கரவாதிகளைப் போன்று நடந்து கொண்டனர் என அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். மஹாவலி அமைச்சில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார். 'கோரிக்கைகளை வென்றெடுப்பதற்கு பல்வேறு சங்கங்கள் மேற்கொண்டு வரும் போராட்டங்கள், ஆர்ப்பாட்டங்களை நடத்த பொருத்தமான தனியிடமொன்றை அரசாங்கம் ஒதுக்க வேண்டும்.தேசிய அரசியலில் நீடிப்பதா? - 3 மாதங்களில் முடிவு என்கிறார் டிலான்
[Friday 2017-06-23 07:00]

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கு எதிர்வரும் மூன்று மாத காலப்பகுதி தீர்க்கமான காலப்பகுதியாக அமையவுள்ளது. ஏனெனில் குறித்த காலப்பகுதியில் இடம்பெறும் விடயங்களை அடிப்படையாக் கொண்டே ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தேசிய அரசாங்கத்தில் அங்கம் வகிப்பதா இல்லையா என்பது தொடர்பில் தீர்மானம் எடுக்கப்படவுள்ளது. மேலும் நல்லாட்சி அரசாங்கத்தின் கடந்த இரு வருட ஆட்சி தொடர்பில் தனிப்பட்ட வகையில் தனக்கு திருப்தியில்லை என அமைச்சர் டிலான் பெரேரா தெரிவித்தார்.குமார் குணரட்ணத்துக்கு வழங்கப்பட்டது இலங்கை குடியுரிமை!
[Friday 2017-06-23 07:00]

முன்னிலை சோசலிச கட்சியின் தலைவர் குமார் குணரட்ணத்துக்கு இலங்கை குடியுரிமை வழங்கப்பட்டுள்ளது. பன்னிப்பிட்டியில் அமைந்துள்ள கட்சி அலுவலகத்திற்கு இது தொடர்பான கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. உட்துறை அமைச்சர் எஸ்.பி.நாவின்ன மற்றும் அமைச்சின் செயலாளர்களது கையொப்பங்களுடன் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.எவராக இருந்தாலும் சட்டத்திற்கு புறம்பாக செயற்பட முடியாது! - ரணில்
[Friday 2017-06-23 07:00]

சாதாரண மக்கள், மதப்பெரியார் யாராக இருந்தாலும், சட்டத்திற்கு புறம்பாக செயற்பட முடியாது என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். நேற்று மாலை அலரி மாளிகையில் நடைபெற்ற ரமழான் நோன்பு துறப்பு நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே இதனைத் தெரிவித்துள்ளார்.முழங்காவில் பொலிஸ் நிலையம் பொதுமக்களால் முற்றுகை! Top News
[Thursday 2017-06-22 18:00]

சிறுவனை மோதிவிட்டுச் சென்ற வாகனத்தைக் கண்டுபிடிக்க முழங்காவில் பொலிஸார் இதுவரை எவ்வித நடவ​டிக்கையையும் எடுக்காததைக் கண்டித்து, 300க்கும் மேற்பட்ட கிராம மக்கள், மதத் தலைவர்கள் மற்றும் பொதுஅமைப்புகள் பொலிஸ் நிலையத்தை, இன்று முற்றுகை இட்டனர். நாச்சிக்குடா சந்தியில் இருந்து முழங்காவில் பொலிஸ் நிலையம் வரை பேரணியாகச் சென்ற பொதுமக்கள் பொலிஸ் நிலையத்தை முற்றுகை இட்டனர்.அவுஸ்திரேலியாவில் கணவரை கொலை செய்த இலங்கை பெண்ணிற்கு சிறை:
[Thursday 2017-06-22 18:00]

தமது குற்றச்சாட்டுக்கு எதிராக இலங்கையில் பிறந்த பெண் வைத்தியர் தாக்கல் செய்த மனுவை, அவுஸ்திரேலிய நீதிமன்றம் நிராகரித்துள்ளது. தனது கணவரை கொலை செய்த குற்றத்துக்காக இலங்கையில் பிறந்த பெண் வைத்தியரான ஷாமரி லியனகே என்பவருக்கு 2014ஆம் ஆண்டு சிறைத்தண்டனை வழங்கப்பட்டது. கடந்த மார்ச் மாதம் இவருக்கு பரோல் வழங்கப்பட்டது. இந்நிலையில் தமது சிறைத்தண்டனை மற்றும் குற்றச்சாட்டுக்கு எதிராக அவர் தாக்கல் செய்த மனுவை இன்று அவுஸ்திரேலியாவின் மூன்று நீதிபதிகளை கொண்ட நீதிமன்றம் நிராகரித்துள்ளது.இரு அமைச்சர்களை விசாரிக்க விரைவில் புதிய குழு! - முதலமைச்சர்
[Thursday 2017-06-22 18:00]

வடமாகாண போக்குவரத்து மற்றும் சுகாதார அமைச்சர்கள் மீதான குற்றச்சாட்டுகள் தொடர்பில் விசாராணை செய்வதற்காக புதிய விசாரணை குழு ஒன்றை மிக விரைவில் நியமிக்கவிருப்பதாக வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.வடக்கு மாகாணசபையில் புயலுக்குப் பிந்திய அமைதி! Top News
[Thursday 2017-06-22 18:00]

பல்வேறு குழப்பங்களுக்குப் பின், வட மாகாண சபையின் 97ஆவது அமர்வு, இன்று மிக அமைதியான முறையில்இடம்பெற்றது. சில தினங்களுக்கு முன்னர், வட மாகாண சபையின் ஆளும் கட்சிக்குள் பெரும் குழப்பங்கள் ஏற்பட்டிருந்தன. கடந்த ஒரு வாரமாக காணப்பட்ட பரபரப்பு, நேற்று மாலை முதலமைச்சருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை மீள பெறப்பட்டதையடுத்து, தணிந்தது.வடக்கு கிழக்கிலுள்ள இராணுவ முகாம்களை உடனடியாக அகற்ற வேண்டும்! - ஐ.நாவில் கோரிக்கை
[Thursday 2017-06-22 18:00]

வடக்கு, கிழக்கிலுள்ள இராணுவ முகாம்களை உடனடியாக அகற்ற வேண்டும் என பெங்களூர் பல்கலைக்கழகத்தின் மனித உரிமை பேராசிரியர் போல் நியூவ்மன் தெரிவித்துள்ளார். ஐ.நா மனித உரிமை பேரவையில் நேற்று உரையாற்றும் போதே அவர் இவ்வாறு கோரிக்கை விடுத்தார். சர்வதேச நீதிபதிகளின் முன்னிலையில் இலங்கையில் நடைபெற்ற மனித உரிமை மீறல்கள் மற்றும் இனப்படுகொலை தொடர்பில் விசாரணைகள் நடைபெற வேண்டும் எனவும் இதன்போது குறிப்பிட்டுள்ளார்.கூட்டமைப்பின் இலக்கைக் கெடுக்கும் அரசியல் கோமாளிகள்! - சம்பந்தன் சாடல்
[Thursday 2017-06-22 18:00]

வடக்கு- கிழக்கில் மக்களால் தோற்கடிக்கப்பட்ட சில அரசியல் கோமாளிகள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் இலக்கை கெடுப்பதாக எதிர்க்கட்சித்தலைவர் இரா.சம்பந்தன் குற்றம்சாட்டினார். நாடாளுமன்றத்தில் நேற்று உரையாற்றிய அவர், “தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு எதிராகவும், 2010ஆம் ஆண்டு இடம்பெற்ற தேர்தலிலும், 2015ஆம் ஆண்டு இடம்பெற்ற தேர்தலிலும் தோல்வியடைந்து எதிர்வரும் தேர்தலிலும் தோல்வியடையப் போகும் சில தரப்பினர் இருக்கின்றனர்.முதல்வர் நிதியத்துக்காக திரட்டப்பட்ட நிதி - கனடிய தமிழர் சமூக அமையம் அறிக்கை! Top News
[Thursday 2017-06-22 18:00]

வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனின் கனடா பயணத்தின் போது முதல்வர் நிதியத்துக்காக திரட்டப்பட்ட நிதி தொடர்பாக உண்மைக்கு புறம்பான செய்திகள் வெளியிடப்பட்டதாக கனடிய தமிழர் சமூக அமையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக விளக்கமளித்துள்ள கனடிய தமிழர் சமூக அமையம், கணக்கு விவரம் குறித்த தகவல்களையும் வெளியிட்டுள்ளது.புதிய அமைச்சர்கள் நியமனம் குறித்து விரைவில் முடிவு!
[Thursday 2017-06-22 18:00]

கல்வி மற்றும் விவசாய அமைச்சர்கள் நியமனம் தொடர்பாக இதுவரையில் முடிவு எடுக்கவில்லை என வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். “வடமாகாண கல்வி மற்றும் விவசாய அமைச்சர்களை நியமிப்பதற்காக உறுப்பினர்களில் இருவரை தெரிவு செய்வதற்காக அவர்களிடம் சுயவிபர கோவைகளை தருமாறு கோரி இருந்தேன். அதன் அடிப்பையில் சில உறுப்பினர்கள் தங்களுடைய சுய விபர கோவைகளை கையளித்துள்ளனர்.ஐ.நா மனித உரிமை ஆணையாளருக்கு எதிராக சரத் வீரசேகர முறைப்பாடு!
[Thursday 2017-06-22 18:00]

ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் செயிட் ராட் அல் ஹூசைன் மற்றும் ஐ.நா. சிறப்பு பிரதிநிதி மொனிகா பின்டோ ஆகியோருக்கு எதிராக நடவடிக்கை எடுக்குமாறு, ஐ.நா. மனித உரிமை பேரவையின் தலைவரிடம், முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. தற்போது நடைபெற்று வரும் ஐ.நா. கூட்டத்தொடரில் கலந்து கொண்டுள்ள இலங்கையின் முன்னாள் படையதிகாரி றியர் அட்மிரல் சரத் வீரசேகரவே இந்த முறைப்பாட்டைச் செய்துள்ளார்.கண்காணிப்புக் குழுவில் இருந்து மங்களவை வெளியேற்றிய ரணில்!
[Thursday 2017-06-22 18:00]

ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் பரிந்துரைகளை அமுல்படுத்த அமைச்சரவை மத்திய ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு பொறிமுறையை உருவாக்குவதற்கான அமைச்சரவை பத்திரத்தை பிரதமர் ரணில் விக்ரமசிங்க நேற்று 1அமைச்சரவையில் சமர்ப்பித்துள்ளார். கடந்த இரண்டரை ஆண்டுகளாக ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபை தீர்மானத்தை நிறைவேற்றுவதற்காக கடுமையாக செயற்பட்ட முன்னாள் வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர இந்த குழுவில் நியமிக்கப்படவில்லை.இந்திய மீனவர்கள் நால்வர் கடற்படையினரால் கைது!
[Thursday 2017-06-22 18:00]

எல்லைதாண்டி மீன் பிடித்தார்கள் என்ற குற்றச்சாட்டில், நான்கு இந்திய மீனவர்களை, காரைநகர் கடற்படையினர், நேற்று இரவு கைது செய்துள்ளதாக, கடற்றொழில் நீரியல்வளத்துறை உதவி பணிப்பாளர் ஜெயராஜசிங்கம் சுதாகரன் தெரிவித்தார். கைதான நால்வரும், தமிழ்நாடு - இராமேஸ்வரம் பகுதியைச் சேர்ந்தவர்கள் எனவும் அவர் தெரிவித்தார்.


Elankeeran-debt-solution-25-06-2016
Mahesan-Remax-169515-Seithy
Tharsi-home-15-10-2016
Easankulasekaram-Remax-300716
SELVI-HOMES-09-02-17
<b> 10-06-2017 அன்று கனடா - ரொரன்டோவில்          இராகாலயா நுண்கலைக்கூடம் வழங்கிய கானமாருதம் 2017 நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள்-குணா
<b> 03-06-2017 அன்று கனடா - ரொரன்டோவில் நடைபெற்ற இதயராகங்கள் இசை நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள்-குணா
<b>14-05-2017 அன்று கனடா - ரொரன்டோவில் நடைபெற்ற தாயின்மடியில் நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா