Untitled Document
November 24, 2017 [GMT]
  • Welcome
  • Welcome
மக்கள் மத்தியில் நம்பிக்கையின்மை காணப்பட்டது! - கலந்தாலோசனை செயலணி உறுப்பினர் ஜே.மஜித்
[Tuesday 2017-03-21 07:00]

நாம் இந்த கலந்தாலோசனை அமர்வுகளை நடத்திய போது மக்கள் மத்தியில் நம்பிக்கையின்மை காணப்பட்டது. கசப்பான அனுபவங்கள் அவர்கள் மனதில் இருந்தன. கடந்த காலங்களில் ஆணைக்குழுக்களின் அறிக்கைகளுக்கு எதுவும் நடக்காமையே இதற்கு காரணமாகும்என்று முல்லைத்தீவு மாவட்டத்தில் மக்கள் கலந்தாலோசனை செயற்பாட்டில் ஈடுபட்ட ஜே.மஜித்  தெரிவித்தார்.

நாம் இந்த கலந்தாலோசனை அமர்வுகளை நடத்திய போது மக்கள் மத்தியில் நம்பிக்கையின்மை காணப்பட்டது. கசப்பான அனுபவங்கள் அவர்கள் மனதில் இருந்தன. கடந்த காலங்களில் ஆணைக்குழுக்களின் அறிக்கைகளுக்கு எதுவும் நடக்காமையே இதற்கு காரணமாகும்என்று முல்லைத்தீவு மாவட்டத்தில் மக்கள் கலந்தாலோசனை செயற்பாட்டில் ஈடுபட்ட ஜே.மஜித் தெரிவித்தார்.

  

ஜெனிவா வளாகத்தில் நேற்று நடைபெற்ற நல்லிணக்க செயலணியின் அறிக்கை தொடர்பான விசேட உபக்குழுக்கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

இதில் முஸ்லீம் மக்களின் நிலைமையை எடுத்து பார்த்தால் அவர்கள் இந்த யுத்தத்தில் இணையாவிட்டாலும் முஸ்லீம்களுக்கான நீதி நிலைமாற்று கால நீதியில் வராது என்றதொரு கருத்து நிலவியதை நாங்கள் பார்க்க கூடியதாக இருந்தது. இறுதியில் நாங்கள் அறிக்கையை கொண்டு வந்தோம். எவ்வாறெனினும் இந்த காலப்பகுதியில் சில தடைகளை நாங்கள் அவதானித்தோம் உதாரணமாக கலந்தாலோசனை செயற்பாடுகள் நடைபெற்றுக்கொண்டிருக்கின்ற போது பாராளுமன்றத்தில் காணாமல் போனோர் சட்டமூலம் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது இது மக்கள் மத்தியில் சிக்கலான நிலையை தோற்றுவித்தது. எமது அறிக்கை வெளிவந்ததும் மக்கள் அதில் திருப்தியடைந்தனர் என்றார்.

இந்த விசேட உப குழுக் கூட்டத்தில் மனித உரிமை செயற்பாட்டாளர் நிமால்கா பெர்ணான்டோ உள்ளிட்ட முக்கியஸ்தர்களும் தமிழ்த் தரப்பு பிரதிநிதிகளும் புலம்பெயர் அமைப்பின் பிரதிநிதிகளும் சர்வதேச மனித உரிமை அமைப்புக்களின் முக்கியஸ்தர்களின் அரசசார்பற்ற நிறுவன மற்றும் சிவில் சமூக தலைவர்களும் கலந்து கொண்டனர்.

அதேவேளை, அரசாங்கத்திற்கு கால அவகாசம் வழங்குவதன் மூலமே ஜெனிவா பிரேரணையையும் ஏனைய விடயங்களையும் அமுல் படுத்திக்கொள்ள முடியும். அதாவது அரசாங்கத்திற்கு இந்த கால அவகாச பகுதியில் அழுத்தங்களை பிரயோகித்து பரிந்துரைகளை அமுல்படுத்திக்கொள்ள முடியும் என்று மாற்றுக் கொள்கைகளுக்கான நிலையத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் கலாநிதி பாக்கியசோதி சரவணமுத்து தெரிவித்தார்.

  
   Bookmark and Share Seithy.comகோத்தாவைக் கைது செய்ய வேண்டாமென பொலிஸ்மா அதிபருக்கு அழுத்தம்!
[Friday 2017-11-24 07:00]

பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்சவைக் கைது செய்வதற்கு, சட்டமா அதிபர் அனுமதி அளித்துள்ள நிலையில், அவர் கைது செய்யப்படுவதைத் தடுத்து நிறுத்துவதற்கு பொலிஸ்மா அதிபர் மீது அழுத்தங்கள் கொடுக்கப்படுவதாக கூறப்படுகிறது. பாதுகாப்பு அமைச்சின் நிதியை தவறாகப் பயன்படுத்தி, டி.ஏ.ராஜபக்ச நினைவிடத்தை அமைத்தார் என்ற குற்றச்சாட்டுக்கு உள்ளாகியிருக்கும் கோத்தாபய ராஜபக்சவை, உடனடியாக கைது செய்வதற்கு, பொலிஸ்மா அதிபருக்கு, சட்டமா அதிபர் அனுமதி அளித்துள்ளார்.இலங்கைக்கு எச்சரிக்கை விடுத்துள்ள அமெரிக்க காலநிலை முன்னறிவிப்பு மையம்!
[Friday 2017-11-24 07:00]

தென்மேற்கு வங்காள விரிகுடாவில் உருவாகி வரும் புயலினால் அடுத்தவாரம் இலங்கையும், தமிழ்நாட்டின் தெற்கு கரையோரப் பகுதிகளும் கடுமையான பாதிப்புக்களைச் சந்திக்கக் கூடும் என்று அமெரிக்க காலநிலை முன்னறிவிப்பு மையம் எச்சரித்துள்ளது. வார இறுதியில் இருந்து இந்தப் புயலின் தாக்கத்தை எதிர்கொள்ளும் நிலை ஏற்படும் என்றும், தெரிவிக்கப்பட்டுள்ளது.சர்வேஸ்வரனை ஜனாதிபதி பதவி நீக்க வேண்டும்! - பீரிஸ் கூறுகிறார்
[Friday 2017-11-24 07:00]

தேசியக் கொடியை ஏற்றுவதற்கு மறுப்பு தெரிவித்த வடமாகாண கல்வியமைச்சர் சர்வேஸ்வரனை, பதவியிலிருந்து நீக்கும் முழு அதிகாரமும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு இருப்பதாகவும், ஆனால் அதனை செய்யாமல் ஜனாதிபதி தொடர்ந்தும் மௌனமாக இருப்பது ஏற்றுக்கொள்ள முடியாதென முன்னாள் வெளிவிவகார அமைச்சர் ஜி.எல். பீரிஸ் தெரிவித்தார்.சிறுமியை துஸ்பிரயோகம் செய்த வயோதிபருக்கு 1 வருட கடூழியச் சிறைத்தண்டனை!
[Friday 2017-11-24 07:00]

யாழ்ப்பாணத்தில் 9 வயது பாடசாலை மாணவி ஒருவரை பாலியல் துஸ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்ட வயோதிபர் ஒருவருக்கு ஒரு வருட கடூழிய சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. அத்துடன், அவருக்கு 10 ஆயிரம் ரூபா அபராதமும் விதித்து யாழ்ப்பாண மேல் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.புலிகளின் காலத்தில் காவல்துறையுடன் நல்லுறவு இருந்தது! - பொலிஸ் அதிகாரியிடம் சுட்டிக்காட்டிய பொது அமைப்புகள்
[Friday 2017-11-24 07:00]

விடுதலைப்புலிகளின் காலத்தில் காவல்துறைக்கும் பொது மக்களுக்குமான உறவு நெருக்கமாக இருந்தது. இதனால் பிரச்சினைகளை உடனுக்குடன் தெரியப்படுத்தி தீர்வுகளை பெற்றுக்கொள்ள கூடியதாகவும் இருந்தது என பொது அமைப்புகளின் பிரதிநிதிகள் தெரிவித்துள்ளனர்.சம்பந்தனிடம் உள்ள பதவியை தந்தால் தான் சுதந்திரக் கட்சியுடன் பேச்சு! - மகிந்த அணி திட்டவட்டம்
[Friday 2017-11-24 07:00]

பிரதமர் அல்லது எதிர்கட்சித் தலைவர் பதவி வழங்கினால் மாத்திரமே ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியுடன் கலந்துரையாடல்கள் முன்னெடுக்கப்படும் என கூட்டு எதிரணி முடிவெடுத்துள்ளது. நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்த ராஜபக்ஸ தலைமையில் நாடாளுமன்றக் கட்டடத் தொகுதியில் நடைபெற்ற கட்சியின் உறுப்பினர்கள் கூட்டத்திலேயே இந்த முடிவு எட்டப்பட்டுள்ளது.தமிழர்களின் சனத்தொகைப் பெருக்கம் அதிகரிக்க வேண்டும்! - சர்வேஸ்வரன்
[Friday 2017-11-24 07:00]

தேசிய மக்கள் தொகைப் பெருக்க விகிதத்தில் சராசரியை விட மிகக்கீழ் மட்டத்திலேயே தமிழ் மக்களின் சனத்தொகைப் பெருக்கம் அமைந்துள்ளது.இந்தநிலை மாற வேண்டும். எங்களுடைய சனத் தொகைப் பெருக்கம் அதிகரிக்கப்பட வேண்டும் என,வடக்கு மாகாண கல்வி அமைச்சர் கந்தையா சர்வேஸ்வரன் தெரிவித்துள்ளார்.ஜேவிபியும் தனியாக கொண்டு வருகிறது நம்பிக்கையில்லா பிரேரணை!
[Friday 2017-11-24 07:00]

அமைச்சர் பைஸர் முஸ்தபாவுக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானம் ஒன்று கொண்டு வரப்படவுள்ளதாக ஜேவிபி தெரிவித்துள்ளது. இன்று குறித்த நம்பிக்கையில்லாத் தீர்மானத்தை சபாநாயகரிடம் கையளிக்கும் ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அனுரகுமார திசநாயக்க தெரிவித்துள்ளார்.பசிலுக்கு தலைவலியாகும் சொகுசு மாளிகை!
[Friday 2017-11-24 07:00]

முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்‌ஷவுக்கு சொந்தமானதாக கருதப்படும் மல்வானையில் அமைந்துள்ள ஆடம்பர மாளிகை தொடர்பான வழக்கு 2018 மார்ச் மாதம் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளது. தொம்பே, மல்வானைப் பிரதேசத்தில் 16 ஏக்கர் காணியொன்றைக் கொள்வனவு செய்து அதில் சொகுசு பங்களா ஒன்றை நிர்மாணித்து சுமார் 28 கோடி 80 லட்சம் ரூபா அரசாங்க நிதியை துஷ்பிரயோகம் செய்துள்ளதாக பசில் ராஜபக்‌ஷ மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.தேசியக்கொடி விவகாரம் - முதலமைச்சரிடம் விளக்கம் கோரினார் ஆளுனர்!
[Thursday 2017-11-23 18:00]

வடமாகாண கல்வி அமைச்சர் சர்வேஸ்வரன், தேசிய கொடியை ஏற்ற மறுத்த விடயம் தொடர்பாக வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனிடம் வடமாகாண ஆளுனர் ரெஜினோல்ட் குரே விளக்கம் கோரியுள்ளார். இது தொடர்பில் வடமாகாண முதலமைச்சருக்கு ஆளுனர் கடிதம் ஒன்றை அனுப்பி விளக்கம் கோரியுள்ளார்.மோடியுடன் ரணில் முக்கிய விடயங்கள் குறித்து பேச்சு! Top News
[Thursday 2017-11-23 18:00]

இந்தியா சென்றுள்ள பிரதமர் ரணில் விக்ரமசிங்க புதுடெல்லியில் இந்திய பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து பேசியுள்ளார். 4 நாள் பயணமாக கடந்த செவ்வாய்க்கிழமை இந்தியா சென்ற பிரதமர் இன்றையதினம் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்தார்.இந்த சந்திப்பின்போது இருதரப்பு உறவு மற்றும் கடல்சார் பாதுகாப்பு தொடர்பான பிரச்சனைகள் மற்றும் மீனவர்கள் பிரச்சினை குறித்தும் பேசப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.தேசியக் கொடியை அவமதிக்கவில்லை! - சர்வேஸ்வரன் விளக்கம்
[Thursday 2017-11-23 18:00]

தேசியக் கொடியை தாம் அவமதிக்கவில்லை என்று, வடமாகாண கல்வி அமைச்சர் க.சர்வேஸ்வரன் விளக்கமளித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் இன்று செய்தியாளர் சந்திப்பு ஒன்றை நடத்திய அவர், இதுபற்றி விளக்கம் அளித்துள்ளார்.வடக்கு உள்ளிட்ட பகுதிகளில் கடும் மழைக்கு வாய்ப்பு! - வெள்ளப்பெருக்கு ஏற்படலாம் என்றும் எச்சரிக்கை
[Thursday 2017-11-23 18:00]

வடக்கு மற்றும் மத்திய மாகாணங்களில் அடுத்த சில நாட்களுக்குள் பெய்யவுள்ள கடும் மழையால் வெள்ளப்பெருக்கு ஏற்படலாம் என வானிலை அவதான நிலையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.ஆவா குழு முக்கியஸ்தர் சுதுமலையில் கைது!
[Thursday 2017-11-23 18:00]

மானிப்பாய் - சுதுமலை அம்மன் கோவிலுக்கு அருகில் வைத்து ஆவா குழுவின் முக்கியஸ்தர் ஒருவரை கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். 23 வயதுடைய குறித்த சந்தேக நபரை இன்று காலை மானிப்பாய் பொலிஸார் கைது செய்தனா். சந்தேகநபர், பல வாள்வெட்டுச் சம்பவங்களுடன் தொடர்புடையவர் என்றும், ஆவா குழுவில் முக்கிய அங்கம் வகித்து வந்தவர் என்றும் தெரிவிக்கப்பட்டது.வடமாகாணசபையில் மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்த அனுமதி மறுப்பு!
[Thursday 2017-11-23 18:00]

வடமாகாணசபையில் மாவீர்களுக்கு அஞ்சலி செலுத்துவதற்கு முன் வைக்கப்பட்ட கோரிக்கைக்கு அவைத் தலைவர் சி.வி.கே. சிவஞானம் மறுப்புத் தெரிவித்துள்ளார். வடமாகாணசபையின் 110வது அமர்வு இன்று கைதடியிலுள்ள பேரவைச் செயலகத்தில் அவைத் தலைவர் சி.வி.கே. சிவஞானம் தலைமையில் இடம்பெற்றது.சிறுமி துஸ்பிரயோகத்துக்கு கண்டனம் தெரிவித்து வவுனியாவில் பேரணி! Top News
[Thursday 2017-11-23 18:00]

வவுனியா - கணேசபுரத்தில், சிறுமியொருவர் அண்மையில் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தப்பட்ட சம்வத்துக்குக் கண்டனம் தெரிவித்தும், குறித்த பகுதியில், இளைஞர்களால் மேற்கொள்ளப்படும் அடாவடித்தனத்துக்கு எதிராக, உரிய அதிகாரிகள் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக்கோரியும், இன்று பிரதேச மக்கள் பேரணியொன்றை நடத்தினர்.நீர்கொழும்பு மீனவரின் வலையில் சிக்கிய 2 கோடி ரூபா பெறுமதியான புளுபின் துனா மீன்! Top News
[Thursday 2017-11-23 18:00]

மிகவும் அரிதாகப் பிடிபடும் புளுபின் துனா (bluefin tuna) என்ற வகையைச் சேர்ந்த மீன் ஒன்று நீர்கொழும்பு - மங்குளி கடற்பகுதியில் மீனவர் ஒருவரினால் பிடிக்கப்பட்டுள்ளது. 230 கிலோவிற்கு மேற்பட்ட எடையை கொண்ட இந்த மீனின் சந்தைப் பெறுமதி இரண்டு கோடி ரூபாவிற்கும் அதிகம் என்று தெரியவந்துள்ளது.அமைச்சர் பைஸர் முஸ்தபாவுக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை!
[Thursday 2017-11-23 18:00]

அமைச்சர் பைஸர் முஸ்தபாவுக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை சபாநாயகர் கரு ஜயசூரியவிடம் கையளிக்கப்பட்டுள்ளது. இதில் 13 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்ற உறுப்பினர் தினேஸ் குணவரதனவின் தலைமையின் கீழ் குறித்த நம்பிக்கையில்லாப் பிரேரணை,​ சபாநாயகரிடம் கையளிக்கப்பட்டுள்ளது.மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபராகப் பொறுப்பேற்றார் உதயகுமார்! Top News
[Thursday 2017-11-23 18:00]

மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபராக நியமிக்கப்பட்ட மாணிக்கம் உதயகுமார், இன்று உத்தியோகபூர்வமாக தனது கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டார். மட்டக்களப்பு மாவட்டத்தின் புதிய மேலதிக அரசாங்க அதிபர் சுதர்சினி சிறிகாந்த், உதவி மாவட்டச் செயலாளர் ஏ.நவேஸ்வரன், பிரதம கணக்காளர் எஸ்.நேசராஜா, மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர் ஆர்.நெடுஞ்செழியன், பிரதேச செயலாளர்கள், திணைக்களத் தலைவர்கள், மாவட்ட செயலக உத்தியோகத்தர்கள், ஊழியர்கள் உட்பட பலரும் இதில் கலந்துகொண்டிருந்தனர்.இலங்கையில் முதல் முறையாக ஆணுறை விநியோக இயந்திரங்கள்! - கொழும்பில் பொருத்த நடவடிக்கை
[Thursday 2017-11-23 18:00]

இலங்கையில் முதன்முறையாக ஆணுறைகளை விநியோகிக்கும் தன்னியக்க இயந்திரங்களை பொருத்தும் நடவடிக்கைகள் ஆரம்பமாகியுள்ளன. ஆணுறை வாங்க விரும்பும் ஒருவர் தனது கைபேசி எண்ணை இந்த இயந்திரத்தில் பதிவு செய்தவுடன், அவரது கைபேசிக்கு ஒரு குறியீட்டு எண் ஒன்று அனுப்பி வைக்கப்படும். அதன் பின் எப்போது தேவைப்பட்டாலும் அந்தக் குறியீட்டு எண்ணை உட்செலுத்தி ஆணுறைகளைப் பெற்றுக்கொள்ள முடியும்.


Tharsi-home-15-10-2016
Easankulasekaram-Remax-300716
SELVI-HOMES-09-02-17
Mahesan-Remax-169515-Seithy
<P>
 <b> 13-08-2017 அன்று ரொரன்டோவில் நடைபெற்ற இசை மாலைப் பொழுது - 2017 நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள்-குணா
</p>
<b>  கனடா-ரொரன்டோவில்  ஜூலை 29ம் 30ம்தி கதிகளில் நடைபெற்ற World Tamil Badminton Federation 5th annual tournament நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள்-குணா
<b>  கனடா-ரொரன்டோவில்  ஜூலை 7ம் 8ம் 9ம்தி கதிகளில் நடைபெற்ற குதூகலம் 2017 நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள்-குணா