Untitled Document
December 18, 2017 [GMT]
  • Welcome
  • Welcome
'13 படங்கள்' ஒரே நாளில் ரிலீஸ்..
[Tuesday 2017-03-21 08:00]

வருகிற வெள்ளிக்கிழமை அன்று, ஒரே நாளில் 13 படங்கள் ரிலீசாக உள்ளன. தமிழ் சினிமாவை பொறுத்தவரை வாரத்தின் கடைசியிாள, வெள்ளிக்கிழமை தோறும் ஒன்றுக்கும் மேற்பட்ட படங்கள்  ரிலீசாகின்றன. ஆனால் ரிலீசாகும் அனைத்து படங்களுமே வெற்றி பெறுவதாக கூற முடியாது. முன்பெல்லாம் 50 நாள்கள்  அல்லது 100 நாள்கள் ஓடினால் தான் படத்தின் வெற்றியை கொண்டாடினார்கள். ஆனால் தற்போதைய சூழ்நிலையில் படங்கள் 2 முதல் 3 நாள்கள் திரைகளில் முழுவதுமாக ஓடினாலே வெற்றிப் படம் என கொண்டாடுகின்றனர்.

வருகிற வெள்ளிக்கிழமை அன்று, ஒரே நாளில் 13 படங்கள் ரிலீசாக உள்ளன. தமிழ் சினிமாவை பொறுத்தவரை வாரத்தின் கடைசியிாள, வெள்ளிக்கிழமை தோறும் ஒன்றுக்கும் மேற்பட்ட படங்கள் ரிலீசாகின்றன. ஆனால் ரிலீசாகும் அனைத்து படங்களுமே வெற்றி பெறுவதாக கூற முடியாது. முன்பெல்லாம் 50 நாள்கள் அல்லது 100 நாள்கள் ஓடினால் தான் படத்தின் வெற்றியை கொண்டாடினார்கள். ஆனால் தற்போதைய சூழ்நிலையில் படங்கள் 2 முதல் 3 நாள்கள் திரைகளில் முழுவதுமாக ஓடினாலே வெற்றிப் படம் என கொண்டாடுகின்றனர்.

  

பொழுதுபோக்கிற்காகவும், மனநிம்மதிக்காகவும் திரையரங்குகளில் படங்களை பார்க்க வரும் ரசிகர்கள் மனநிம்மதியுடன் திரும்புகிறார்களா? என்றால் உறுதியாக கூறமுடியாது. அந்த வகையில் ரசிகர்களின் எதிர்பார்ப்பை திருப்திபடுத்தும் வகையில் ஒரு சில படங்கள் தொடர்ந்து வந்து கொண்டுதான் இருக்கின்றன. அந்த வகையில் வருகிற வெள்ளிக்கிழமை ஒரே நாளில் 13 படங்கள் ரிலீசாக உள்ளது. இவ்வாறு ஒரே நாளில் பல படங்கள் ரிலீசாவதால் பல படங்கள் தோல்வியையே சந்திக்கின்றன. வாரவாரம் அடுத்தடுத்து மேலும் பல படங்கள் வரிசைக்கட்டி நிற்பதால் படத் தயாரிப்பாளர்கள் கடும் நஷ்டத்தை சந்திக்கின்றனர்.

இதில் கோடை விடுமுறை தொடங்குவதால் ஒரே நாளில் 13 படங்கள் அணிவகுத்து வர இருக்கின்றன. வருகிற 24- ந் தேதி `பாம்புசட்டை', `என்கிட்ட மோதாதே', `தாயம்', `வைகை எக்ஸ்பிரஸ்', `ஆக்கம்', `ஜுலியும் 4 பேரும்', `1 ஏ.எம்.', `ஒரு கனவு போல', `இவன் யாரென்று தெரிகிறதா', `465', `கடுகு', `அரசகுலம்', `சாந்தன்' ஆகிய 13 படங்கள் திரைக்கு வருகின்றன. இதில் திரையரங்குகள் கிடைக்காத பட்சத்தில் ஒரு சில படங்கள் தள்ளிப்போக வாய்ப்பு உள்ளது.

  
   Bookmark and Share Seithy.comநிறைவு பெற்ற நயன்தாராவின் இமைக்கா நொடிகள்!
[Monday 2017-12-18 17:00]

அஜய் ஞானமுத்து இயக்கத்தில் ஆக்‌ஷன் த்ரில்லராக உருவாகி வரும் இமைக்கா நொடிகள்' படத்தில் அதர்வா, நயன்தாரா முன்னணி கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். அதர்வா ஜோடியாக ராஷி கண்ணா தமிழில் அறிமுகமாகிறார். இந்த படத்தில் அதர்வாவுக்கு அக்காவாக நயன்தாரா நடிக்கிறார். நயன்தாராவின் கணவராக விஜய் சேதுபதி சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளார்.சினிமாவில் முத்தக்காட்சி எடுக்க தயங்குகிறார்கள்: - அரவிந்த்சாமி கேள்வி
[Monday 2017-12-18 17:00]

15வது சென்னை சர்வதேச திரைப்பட விழா சென்னையில் தொடங்கியது. வரும் 21ம் தேதிவரை நடக்கிறது. 50 நாடுகளை சேர்ந்த 140 படங்கள் திரையிடப்படுகின்றன. இந்நிகழ்ச்சியில் பேசிய நடிகர் அரவிந்த்சாமி,’2வது நூற்றாண்டிலேயே சமஸ்கிருத கவிஞரால் காமசூத்ரா எழுத முடிந்தது. ஆனால் 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு பிறகும் சினிமாவில் முத்தக்காட்சி எடுக்க தயங்குகிறார்கள். வன்முறை மிக்க படங்களை எடுக்க இயக்குனர்கள் தயக்கம் காட்டுவதில்லை. ஆனால் காதல் மற்றும் காதல் தொடர்பான படங்களை இயக்க தயங்குகிறார்கள்.ஹீரோவாக மாறும் காமெடி நடிகர்!
[Monday 2017-12-18 16:00]

அயன், கோ, மரியான், இரும்பு குதிரை, தூங்காவனம், அனேகன், பையா உள்பட நாற்பதுக்கும் மேற்பட்ட படங்களில் காமெடி வேடத்தில் நடித்தவர், ஜெகன். இப்போது, எனக்கு இன்னும் கல்யாணம் ஆகல என்ற படத்தில் ஹீரோவாக நடிக்கிறார். அவருக்கு ஜோடி, ரஹானா. பாடலாசிரியர் பிறைசூடன் வில்லனாக நடிக்கிறார். முத்து விநாயகா மூவிஸ் சார்பில் ராஜாமணி முத்துகணேஷ் தயாரிக்கிறார். ஒளிப்பதிவு, சிவராஜ். கதை, திரைக்கதை, வசனம்: காரைக்குடி நாராயணன். இயக்கம், முருகலிங்கம்.இரும்புத்திரை இயக்குனரை பதற வைத்த விஷால்!
[Monday 2017-12-18 16:00]

விஷால் பிலிம் பேக்டரி சார்பில் விஷால் தயாரித்து நடிக்கும் படம், இரும்புத்திரை. சமந்தா ஹீரோயின். அர்ஜூன் வில்லன். ஒளிப்பதிவு, ஜார்ஜ் சி.வில்லியம்ஸ். இசை, யுவன்சங்கர்ராஜா. இயக்கம், மித்ரன். அவர் கூறியதாவது: விஷாலிடம் இரும்புத்திரை படத்தின் கதையை நான் சொன்னபோது, இதை நானே தயாரித்து நடிக்கிறேன். ஆனால், பவர்ஃபுல்லான அந்த வில்லன் வேடத்தில் தான் நடிப்பேன் என்று சொன்னார். பதறிப்போன நான் விஷாலிடம் விவரமாகப் பேசி, அவரை ஹீரோவாக நடிக்க வைத்தேன்.அம்மாவின் ஆசையை நிறைவேற்றிய நைனிகா!
[Monday 2017-12-18 16:00]

மலையாள இயக்குனர் சித்திக் தமிழில் விஜய், சூர்யா நடித்த பிரெண்ட்ஸ் படத்தை இயக்கியபோது, முதலில் தேவயானி கேரக்டருக்குப் பேசப்பட்டவர் மீனா. சித்திக் இயக்கத்தில் நடிக்க மிகவும் விரும்பினார். ஆனால், அப்போது வேறு சில படங்களில் பிசியாக இருந்த காரணத்தால், கடைசிவரை விஜய்க்கு ஜோடியாக மீனாவால் நடிக்க முடியவில்லை. என்றாலும், ஷாஜகான் படத்தில் இடம்பெற்ற ‘சரக்கு வெச்சிருக்கேன்’ என்ற பாடல் காட்சியில் விஜய்யுடன் இணைந்து ஆடினார்.தெலுங்கில் நடிக்கும் ஆசை இருக்கிறது: - சிபிராஜ்
[Monday 2017-12-18 07:00]

பிரதீப் கிருஷ்ணமூர்த்தி இயக்கியுள்ள படம் சத்யா. இதன் சக்சஸ் மீட்டில் சிபிராஜ் பேசுகையில், ‘சத்யா படத்தின் ஒரிஜினலான, தெலுங்கு ஷனம் படத்தை எழுதி நடித்த ஆத்விசேஷும், நானும் தமிழ் மற்றும் தெலுங்கில் ஒரு படத்தில் இணைந்து நடிக்கிறோம். எனக்கும் தெலுங்கில் நடிக்கும் ஆசை இருக்கிறது. சத்யா படத்துக்கு நல்ல விமர்சனம் வருவதைக் கேள்விப்பட்ட விஜய், எனக்குப் போன் செய்து பாராட்டினார்.மூன்று கதாநாயகர்களை வைத்து படம் இயக்கும் அட்லி!
[Sunday 2017-12-17 15:00]

விஜய்யின் மெர்சல் படத்தை அடுத்து மூன்று ஹீரோக்களை வைத்து படம் இயக்க இருக்கிறார் இயக்குனர் அட்லி.ஆர்யா, ஜெய், நயன்தாரா, நஸ்ரியா ஆகியோரை வைத்து ‘ராஜா ராணி’ படத்தை இயக்கியவர் இயக்குனர் அட்லி. இப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றது. இதையடுத்து விஜய்யை வைத்து ‘தெறி’ படத்தை இயக்கினார். இப்படமும் வெற்றி பெற்று வசூலை அள்ளியது.தனது வருங்கால மனைவி எப்படி இருக்க வேண்டும்: - மனம்திறந்த பிரபாஸ்
[Saturday 2017-12-16 18:00]

பாகுபலி படத்தின் மூலம் இந்தியா முழுவதும் பிரபலமாகி இருக்கும் பிரபாஸ் தனது வருங்கால மனைவி எப்படி இருக்க வேண்டும் என்பது குறித்து மனம் திறந்திருக்கிறார். பாகுபலி நாயகன் பிரபாசும் உடன் நடித்த அனுஷ்காவும் திருமணம் செய்து கொள்வார்கள் என்று பேசப்பட்டது. ஆனால் அதை இருவரும் மறுத்தனர். என்றாலும் அந்த எதிர்பார்ப்பு நீடிக்கிறது.அன்பும் விளையாட்டும் நிறைந்தவர் ஆர்யா: - சாயிஷா
[Saturday 2017-12-16 18:00]

ஸ்டூடியோகிரீன் ஞானவேல்ராஜா தயாரிப்பில் ஆர்யா நடிப்பில் உருவாகி வரும் ‘கஜினிகாந்த்’ படத்தில் அவருக்கு ஜோடியாக நடிக்கும் - சாயிஷா, ஆர்யாவை விளையாட்டும், அன்பும் நிறைந்தவர் என்று கூறியிருக்கிறார்.ஸ்டூடியோகிரீன் ஞானவேல்ராஜா தயாரிப்பில் ஆர்யா நடிக்கும் படம் ‘கஜினிகாந்த்’. ‘ஹரிஹர மகாதேவி’ படத்தை இயக்கிய சந்தோஷ் பி.ஜெயக்குமார் இதை இயக்குகிறார்.நடிகை சன்னிலியோன் நடனத்துக்கு தடை விதித்த கர்நாடக அரசு!
[Saturday 2017-12-16 18:00]

பெங்களூருவில் நடைபெற இருந்த நடிகை சன்னிலியோன் நடனத்துக்கு கர்நாடக அரசு தடை விதித்துள்ளது.ஆபாச பட நடிகையான சன்னிலியோன் இந்தி படங்களில் நடித்து வருகிறார். ‘வடகறி’ என்ற தமிழ் படத்தில் ஒரு பாடலுக்கு கவர்ச்சி நடனம் ஆடினார். தற்போது இன்னொரு தமிழ் படத்தில் கதாநாயகியாக நடிக்கவும் ஒப்பந்தமாகி உள்ளார்.உடல் எடையை கூட்ட சொன்ன இயக்குனருக்கு மறுப்பு தெரிவித்த நடிகை கீர்த்தி சுரேஷ்!
[Saturday 2017-12-16 18:00]

‘மகாநதி’ படத்துக்காக உடல் எடையை கூட்ட சொன்ன இயக்குனரிடம் மறுப்பு தெரிவித்திருக்கிறார் நடிகை கீர்த்தி சுரேஷ். தமிழ் திரையுலகில் 1960 மற்றும் 1970-களில் புகழின் உச்சத்தில் இருந்தவர், ‘நடிகையர் திலகம்’ சாவித்ரி. இவருடைய வாழ்க்கை வரலாறு ‘மகாநதி’ என்ற பெயரில், தமிழ்-தெலுங்கு ஆகிய 2 மொழிகளில் தயாராகி வருகிறது. இதில், சாவித்ரியாக கீர்த்தி சுரேஷ் நடித்து வருகிறார்.நான் இருந்திருந்தால் அவரது காலை உடைத்திருப்பேன்: - கங்கனா ரணாவத்
[Friday 2017-12-15 19:00]

‘சாயிரா வாசிம் இடத்தில் நான் இருந்திருந்தால், பாலியல் தொல்லை கொடுத்த நபரின் காலை உடைத்திருப்பேன்” என்று நடிகை கங்கனா ரணாவத் தெரிவித்துள்ளார்.நடிகர் அமீர்கானின் ‘தங்கல்’ படத்தில் அவரது மகளாக நடித்து பிரபலம் அடைந்தவர், சாயிரா வாசிம். இவர் கடந்த சனிக்கிழமை டெல்லியில் இருந்து மும்பைக்கு விமானத்தில் வந்த போது, பின் இருக்கையில் அமர்ந்திருந்த தொழில் அதிபரால் பாலியல் தொல்லைக்கு ஆளானார்.பொங்கல் பண்டிகைக்கு வீரவிளையாட்டாக மதுரைவீரன் படம் ரிலீசாகும்: - விஜயகாந்த்
[Friday 2017-12-15 12:00]

தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகைக்கு வீரவிளையாட்டாக `மதுரைவீரன்' படம் ரிலீசாகும் என்று நடிகர் விஜயகாந்த் ரிலீஸ் தேதியை வெளியிட்டுள்ளார்.பொங்கல் பண்டிகைக்கு சூர்யாவின் தானா சேர்ந்த கூட்டம், விக்ரமின் ஸ்கெட்ச் பிரபுதேவாவின் குலேபகாவலி ரிலீசாக இருப்பது உறுதியாகி இருக்கிறது. விஷால் நடிப்பில் உருவாகி வரும் இரும்புத்திரை பொங்கல் ரேசில் இருந்து விலகி குடியரசு தினத்தில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.அரசியலில் குதிக்கிறாரா வரலட்சுமி சரத்குமார்?
[Friday 2017-12-15 12:00]

அரசியலில் குதிக்க போகிறதாக வந்த செய்திக்கு வரலட்சுமி சரத்குமார் விளக்கம் அளித்துள்ளார்.வரலட்சுமி சரத்குமார் நடிப்பில் இந்த வருடம் ‘விக்ரம் வேதா’ மற்றும் ‘சத்யா’ திரைப்படம் வெளியானது. இந்த இரண்டு படமும் வெற்றி படமாக அமைந்திருக்கிறது. இதில் சத்யா படத்தின் வெற்றி விழா பத்திரிகையாளர் சந்திப்பில் வரலட்சுமி பேசும்போது, ‘சத்யா திரைப்படத்துக்கு நல்ல விமர்சனங்களை கொடுத்த அனைத்து பத்திரிகையாளர், தொலைக்காட்சி மற்றும் இணையதள நண்பர்களுக்கு நன்றி.விக்ரம் வேதா படத்தால் மக்களின் அன்பையும் நன்மதிப்பையும் சம்பாதித்திருக்கிறேன்: - விஜய் சேதுபதி நெகிழ்ச்சி
[Friday 2017-12-15 08:00]

புஷ்கர் - காயத்ரி இயக்கத்தில் மாதவன் - விஜய் சேதுபதி நடிப்பில் வெளியாகி 100 நாட்களை கடந்து ஓடிக் கொண்டிருக்கும் `விக்ரம் வேதா' படம் எனது வரலாறில் முக்கிய இடத்தில் இருக்கும் என்று விஜய் சேதுபதி கூறினார்.புஷ்கர் - காயத்ரி இயக்கத்தில் கடந்த ஜுலை 21-ஆம் தேதி வெளியாகியது.எப்போதும் இளைஞர்களை ஊக்குவிக்க தவறுவதில்லை: - இளைய தளபதியை புகழ்ந்த சிபிராஜ்
[Friday 2017-12-15 08:00]

மிகப்பெரிய ஹீரோவாக இருந்தாலும் விஜய் அண்ணா இளைஞர்களை ஊக்குவிக்க தவறுவது இல்லை என்று நடிகர் சிபிராஜ் கூறியுள்ளார்.சிபிராஜின் சத்யா திரைப்படத்தின் வெற்றி விழா பத்திரிகையாளர் சந்திப்பு இன்று நடைபெற்றது. இதில் நாயகன் மற்றும் தயாரிப்பாளர் சிபிராஜ், நாயகிகள் ரம்யா நம்பீசன், வரலட்சுமி சரத்குமார், இயக்குநர் பிரதீப் கிருஷ்ண மூர்த்தி, இசையமைப்பாளர் சைமன் கே கிங் மற்றும் படக்குழுவினர் கலந்துகொண்டனர். சிறப்பு விருந்தினராக தயாரிப்பாளர் தனஞ்ஜெயன், இயக்குநர் அறிவழகன், ஷணம் (தெலுங்கு) திரைப்படத்தின் கதாநாயகன் அதிவிசேஷ் ஆகியோர் கலந்து கொண்டனர்.சினிமாவில் 15 ஆண்டுகளை நிறைவு செய்த த்ரிஷா!
[Thursday 2017-12-14 15:00]

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வரும் நடிகை த்ரிஷா திரையுலகில் 15 ஆண்டுகளை தாண்டி முன்னணி நடிகையாக வலம் வருகிறார்.அமீர் இயக்கத்தில் கடந்த 2002-ம் ஆண்டு டிசம்பர் 13-ந் தேதி வெளியான படம் ‘மவுனம் பேசியதே’. சூர்யா நாயகனாக நடித்த இந்த படத்தில், திரிஷா நாயகியாக அறிமுகம் ஆனார்.அடங்க மறுக்கிறாரா ஜெயம் ரவி?
[Thursday 2017-12-14 15:00]

`சங்கமித்ரா' படத்திற்கு முன்னதாக கார்த்திக் தங்கவேல் இயக்கத்தில் ஜெயம் ரவி நடிக்கவிருக்கும் புதிய படத்தின் தலைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.`டிக் டிக் டிக்' படத்தை தொடர்ந்து ஜெயம் ரவி அடுத்ததாக கார்த்திக் தங்வேல் இயக்கத்தில் நடிக்க இருக்கிறார். ஹோம் மூவி மேக்கர்ஸ் சார்பில் சுஜாதா விஜயகுமார் தயாரிக்கும் இந்த படத்திற்கு அடங்கமறு என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.ரவிக்குமார் இயக்கத்தில் நடிக்கும் சிவகார்த்திகேயன்!
[Thursday 2017-12-14 08:00]

`வேலைக்காரன்', `சீமராஜா' படங்களைத் தொடர்ந்து சிவகார்த்திகேயன் நடிப்பில் அடுத்ததாக உருவாக இருக்கும் புதிய படம் குறித்த அறிவிப்பு வெளியாகி இருக்கிறது.சிவகார்த்திகேயன் நடிப்பில் `வேலைக்காரன்' படம் வருகிற கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு வெளியாக இருக்கிறது. மோகன் ராஜா இயக்கத்தில் சமூக பிரச்சனையை மையமாக வைத்து உருவாகி இருக்கும் இந்த படத்தில் நயன்தாரா, பகத் பாஷில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.நாப்கினுக்கு எதிராக பிரசாரம் செய்து வரும் தியா மிர்ஸா!
[Thursday 2017-12-14 08:00]

பெண்களுக்கு மிகவும் அவசியமான விஷயம் நாப்கின். பல நடிகைகள் இதற்காக விதவிதமான விளம்பரங்களில் நடிக்கின்றனர். பல அரசு பள்ளிகளிலும் இவை மாணவிகளுக்கு இலவசமாக தரப்படுகின்றன. ஆனால் நாப்கினுக்கு எதிராக பிரசாரம் செய்து வருகிறார் தியா மிர்ஸா. ஹம் தும் அவுர் கோஸ்ட், லவ் பிரேக்அப்ஸ் ஜிந்தகி, பாபி ஜோஸ் போன்ற பல இந்தி படங்களில் நடித்ததுடன் தற்போது சஞ்சய் தத் வாழ்க்கை வரலாறு படத்திலும் நடித்து வருகிறார்.


Easankulasekaram-Remax-300716
SELVI-HOMES-09-02-17
Mahesan-Remax-169515-Seithy
Tharsi-home-15-10-2016
<P>
 <b> 13-08-2017 அன்று ரொரன்டோவில் நடைபெற்ற இசை மாலைப் பொழுது - 2017 நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள்-குணா
</p>
<b>  கனடா-ரொரன்டோவில்  ஜூலை 29ம் 30ம்தி கதிகளில் நடைபெற்ற World Tamil Badminton Federation 5th annual tournament நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள்-குணா
<b>  கனடா-ரொரன்டோவில்  ஜூலை 7ம் 8ம் 9ம்தி கதிகளில் நடைபெற்ற குதூகலம் 2017 நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள்-குணா