Untitled Document
January 21, 2018 [GMT]
  • Welcome
  • Welcome
தனுஷின் வடசென்னை படத்திலிருந்து அமலாபால் விலகலா?
[Wednesday 2017-04-19 08:00]

வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் மீண்டும் நடிக்கவிருக்கும் ‘வடசென்னை’ படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு முடிந்த கையோடு அப்படத்தின் படப்பிடிப்பு தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. இப்படத்தில் முதலில் நாயகியாக ஒப்பந்தம் ஆன சமந்தா விலகியதையடுத்து அமலாபால் இப்படத்திற்குள் நுழைந்தார். 
ஆனால், அவரும் இப்படத்திலிருந்து விலகிவிட்டதாக அடிக்கடி செய்திகள் வெளிவந்துகொண்டிருந்தன. ஆனால், அவரோ தான் இப்படத்திலிருந்து விலகவில்லை என்பதை உறுதியாக கூறிவந்தார். இந்நிலையில், தற்போது மீண்டும் அமலாபால் இப்படத்தில் விலகியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் மீண்டும் நடிக்கவிருக்கும் ‘வடசென்னை’ படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு முடிந்த கையோடு அப்படத்தின் படப்பிடிப்பு தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. இப்படத்தில் முதலில் நாயகியாக ஒப்பந்தம் ஆன சமந்தா விலகியதையடுத்து அமலாபால் இப்படத்திற்குள் நுழைந்தார். ஆனால், அவரும் இப்படத்திலிருந்து விலகிவிட்டதாக அடிக்கடி செய்திகள் வெளிவந்துகொண்டிருந்தன. ஆனால், அவரோ தான் இப்படத்திலிருந்து விலகவில்லை என்பதை உறுதியாக கூறிவந்தார். இந்நிலையில், தற்போது மீண்டும் அமலாபால் இப்படத்தில் விலகியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

  

கால்ஷீட் பிரச்சினையால் இப்படத்தில் இருந்து அமலாபால் விலகியுள்ளதாக கூறப்படுகிறது. இதுகுறித்து அதிகாரப்பூர்வ செய்தி இதுவரை வெளியாகவிட்டாலும் விரைவில் வெளியாகும் எனவும் கூறப்படுகிறது. ஏற்கெனவே, இப்படத்தில் இருந்து நடிகர் விஜய் சேதுபதியும் விலகிவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

  
   Bookmark and Share Seithy.com



கார்த்தி நடிக்கும் படத்திற்கு முதல்முறையாக இசையமைக்கும் ஹாரிஸ் ஜெயராஜ்!
[Sunday 2018-01-21 15:00]

சூர்யா படத்தில் பல முறை இணைந்த பிரபலம், கார்த்தி படத்தில் முதல் முறையாக இணைய இருக்கிறார். கார்த்தி நடிப்பில் தற்போது ‘கடைக்குட்டி சிங்கம்’ திரைப்படம் உருவாகி வருகிறது. இதில் கார்த்திக்கு ஜோடியாக சாயிஷா நடித்து வருகிறார். பாண்டிராஜ் இயக்கி வரும் இப்படத்தை சூர்யா, தனது 2டி நிறுவனம் மூலம் தயாரித்து வருகிறார். இப்படம் இறுதி கட்டத்தை நெருங்கி வருகிறது.



விமல் எடுத்த முடிவை கண்டு பயந்த இயக்குனர்!
[Sunday 2018-01-21 15:00]

நடிகர் விமலை வைத்து ‘மன்னர் வகையறா’ படத்தை இயக்கி இருக்கும் பூபதி பாண்டியன், விமல் எடுத்த முடிவை கண்டு பயந்திருக்கிறார். கமர்ஷியல் படங்களை நூறு சதவீதம் நகைச்சுவை கியாரண்டியுடன் தரக்கூடியவர் இயக்குனர் பூபதி பாண்டியன். இவர் வசனங்கள் எழுதிய வின்னர், கிரி ஆகிய படங்களின் காமெடி காட்சிகள் தான் இப்போதும் டாப் டென் காமெடிகளில் இடம்பிடித்திருக்கின்றன. அதேபோல இவர் இயக்கிய தேவதையை கண்டேன், திருவிளையாடல் ஆரம்பம், மலைக்கோட்டை உள்ளிட்ட படங்களில் உணர்வுப்பூர்வமான காட்சிகளுடன் நகைச்சுவைக்கும் சரிவிகித முக்கியத்துவம் கொடுத்திருந்தார்.



ரசிகர்களை கடுமையாக கண்டித்த நடிகர் சூர்யா!
[Sunday 2018-01-21 15:00]

ரசிகர்கள் செய்த தவறான செயல்களால், நடுரோட்டில் இறங்கி அவர்களை கடுமையாக கண்டித்திருக்கிறார் நடிகர் சூர்யா. நடிகர் சூர்யா, பொது இடங்களில் அமைதியான அணுகுமுறையை கடைப்பிடிப்பவர். அதுபோல், தன்னுடைய ரசிகர்கள் மீது பேரன்பு கொண்டவர். பொது விழாக்களில் ரசிகர்களை பற்றி பேசாமல் இருக்க மாட்டார். சமீபத்தில் தன்னுடைய காலில் விழுந்த ரசிகரிடம், மீண்டும் அவர் காலில் விழுந்தார். யார் காலிலும் விழக்கூடாது என்பதற்காக சூர்யா அவ்வாறு செய்தார்.



தமன்னாவுக்கு சௌந்தரராஜாவுடன் மதுரையில் திருமணம்!
[Saturday 2018-01-20 18:00]


நடிகர் கமல்ஹாசனின் தயாரிப்பில் முதன் முறையாக நடிக்கும் விக்ரம்!
[Saturday 2018-01-20 17:00]

நடிகர் கமல்ஹாசனின் படத் தயாரிப்பு நிறுவனமான ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனல் தயாரிக்கும் புதிய படத்தில், விக்ரம் ஹீரோவாக நடிக்கிறார். இந்தப் படத்துக்கு இன்னும் பெயர் சூட்டப்படவில்லை. தூங்காவனம் பட இயக்குநர் ராஜேஷ் எம்.செல்வா இந்தப் படத்தை இயக்குகிறார். இந்தத் தகவல், அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.



நான் நடிக்கும் படங்கள் என்னை அடுத்த கட்டத்துக்கு கொண்டு செல்லும் படங்களாக அமையும்: - தமன்னா
[Saturday 2018-01-20 09:00]

தற்போது நடித்து கொண்டிருக்கும் படங்களில் இதுவரை இல்லாத அழுத்தமான வேடங்களில் நடிப்பதாக நடிகை தமன்னா கூறியுள்ளார்.விக்ரமுடன் தமன்னா நடித்த ‘ஸ்கெட்ச்’ படம் திரைக்கு வந்துள்ளது. தற்போது, பல புதிய படங்களில் நடித்து வருகிறார். இது குறித்து தமன்னா கூறியதாவது:-



வைரலாகும் பிரபல நடிகையின் அரை நிர்வாண புகைப்படம்!
[Saturday 2018-01-20 09:00]

தெலுங்கு, பாலிவுட் என பல மொழி படங்களில் நடித்து புகழ் பெற்ற்வர் கிர்தி சனோன். இவர் நடிப்பில் கடைசியாக வந்த Bareilly Ki Barfi படம் கூட செம்ம ஹிட் அடித்தது. இந்நிலையில் இவர் தற்போது ஒரு போட்டோஷுட் நடத்தியுள்ளார், இதில் இவர் டாப்லெஸுடன் போஸ் கொடுக்க, அந்த புகைப்படம் தற்போது வைரலாக பரவி வருகின்றது.



நடுத்தெருவில் நடிகருக்கு உதட்டோடு உதடு சேர்த்து முத்தம் கொடுத்த பிரியங்கா சோப்ரா!
[Saturday 2018-01-20 09:00]

பாலிவுட்டில் முன்னணி நடிகையான பிரியங்கா சோப்ரா ஹாலிவுட் டி.வி. தொடரில் நடிக்கும் நடிகர் ஒருவருடன் நடுரோட்டில் முத்தம் கொடுத்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.இந்தி பட உலகில் முன்னணி நடிகையாக இருக்கும் பிரியங்கா சோப்ரா, ஹாலிவுட் டி.வி. தொடரான ‘குவாண்டிகோ’ விலும் நடித்து வருகிறார். இதன் முதல் இரண்டு பாகங்கள் முடிந்து விட்டன. தற்போது 3-வது பாகம் தயாராகி வருகிறது.



ஆபாச நடிகைகளுக்கு நல்ல வாழ்க்கையும் மதிப்பும் கிடைத்து விடுகிறது: - ஹீரோயின் கடும் தாக்கு
[Friday 2018-01-19 16:00]

நெஞ்சிருக்கும் வரை, உன்னைப்போல் ஒருவன், பயணம், வெடி போன்ற தமிழ் மற்றும் பல்வேறு தெலுங்கு, மலையாளம், இந்தி படங்களில் நடித்திருப்பவர் பூனம் கவுர். ஆபாச நடிகைகளுக்குத்தான் இங்கு மரியாதை தருகிறார்கள் என்று அவர் தன்னுடைய வேதனையை பகிர்ந்திருக்கிறார். ஆபாச படங்களில் நடித்த சன்னி லியோன் தற்போது கவர்ச்சி ஹீரோயினாக தமிழ், இந்தி படங்களில் நடிக்கிறார். அவரை தொடர்ந்து மற்றொரு ஆபாச நடிகை மியா மல்கோபா, ராம் கோபால்வர்மா இயக்கும், ‘காட் செக்ஸ் ட்ரூத்’ (ஜிஎஸ்டி) படத்தில் நடித்து வருகிறார்.



எம்.ஜி.ஆர். பட தொடக்க விழா: - பரபரப்பை ஏற்படுத்திய ரஜினி - கமல்
[Friday 2018-01-19 14:00]

எம்.ஜி.ஆர். பட தொடக்க விழாவில் ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசன் அருகருகே அமர்ந்து சகஜமாக பேசியது பரபரப்பை ஏற்படுத்தியது.எம்.ஜி.ஆர். தயாரித்து நடித்து இயக்கிய படம் ‘உலகம் சுற்றும் வாலிபன்’.1973-ல் வெளியாகி மிகப்பெரிய சாதனை படைத்த இந்த படம் அந்த காலகட்டத்தில் மிகவும் பேசப்பட்டது.



சிவகார்த்திகேயனின் படத்திற்கு இசையமைக்கும் ரகுமான்!
[Friday 2018-01-19 14:00]

விஷ்ணு விஷால் நடிப்பில் ரிலீசான இன்று நேற்று நாளை படத்தின் இயக்குனர் ரவிக்குமாரின் அடுத்த படத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கிறார். இன்னும் பெயரிடப்படாத இந்தப் படத்தை 24 ஏ.எம் ஸ்டுடியோஸ் தயாரிக்கிறது. ஏ.ஆர்.ரகுமான் இசை அமைக்கிறார். இது குறித்து சிவகார்த்திகேயன் கூறுகையில், ‘எனது நீண்ட நாள் மற்றும் மிகப் பெரிய கனவு, இந்தப் படத்தில் ஏ.ஆர்.ரகுமானுடன் இணைந்ததன் மூலம் நிறைவேறியுள்ளது’ என்றார்.



சவரக்கத்தியில் நடிக்க மறுத்த நான்கு முன்னணி ஹீரோயின்கள்: - மிஷ்கின்
[Friday 2018-01-19 14:00]

இயக்குனர் ராம் ஹீரோவாகவும், இயக்குனர் மிஷ்கின் வில்லனாகவும் நடித்துள்ள படம், சவரக்கத்தி. இயக்கம், ஜி.ஆர்.ஆதித்யா. அடுத்த மாதம் 9ம் தேதி ரிலீசாக உள்ள இந்தப் படத்தைப் பற்றி மிஷ்கின் கூறியதாவது: என் வாழ்க்கையில் நான் சந்தித்த இரண்டு முடிதிருத்துனர்களை பார்த்து எழுதிய கதை இது. நானும், ராமும் நிஜத்தில் ரொம்ப ரொம்ப சீரியசானவர்கள். ஆனால், இந்தப் படத்தில் காமெடியில் கலக்கியிருக்கிறோம். ராம், பொய்யைக் கட்டிப்பிடித்துக் கொண்டு வாழும் பார்பர். நான், கோபத்தைக் கட்டிப்பிடித்துக் கொண்டு அவரைத் துரத்தும் வில்லன்.



ஏப்ரல் 27ல் வெளியாகவுள்ள 2.0!
[Friday 2018-01-19 14:00]

ஷங்கர் இயக்கத்தில் ரஜினிகாந்த், அக்ஷய் குமார், எமி ஜாக்சன் நடித்துள்ள படம், 2.0. வரும் 26ம் தேதி ரிலீசாக இருந்த படம், கிராபிக்ஸ் பணிகள் தாமதமான காரணத்தால், வரும் ஏப்ரல் மாதம் ஒரே நேரத்தில் தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் ரிலீசாகும் என்று தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது. ஏப்ரல் 14ல் படம் வெளியாகும் என கூறப்பட்டது. இப்போது ஏப்ரல் 27ம் தேதி படம் வெளியாகும் என்று தெரிகிறது.



காமெடி அரசியல்வாதியாக நடிக்கும் இமான் அண்ணாச்சி!
[Friday 2018-01-19 14:00]

டிராபிக் ராமசாமி கேரக்டரில், இயக்குனர் எஸ்.ஏ.சந்திரசேகரன் நடிக்கும் டிராபிக் ராமசாமி படத்தின் படப்பிடிப்பு சென்னையில் நடந்து வருகிறது. இதில் காமெடி அரசியல்வாதியாக இமான் அண்ணாச்சி நடிக்கிறார். பாலமுரளி பாலு இசையில் கபிலன் வைரமுத்து எழுதிய, ‘சாராய மண்டைய மண்டைய குண்டக்க மண்டக்க’ என்ற பாடல் காட்சியில், சசிரேகாவுடன் இணைந்து இமான் அண்ணாச்சி ஆடியுள்ளார். இதுபற்றி அவர் கூறுகையில், ‘எனக்குள் இப்படியொரு நடனத்திறமை இருப்பதை இப்போதுதான் தெரிந்துகொண்டேன்’ என்றார்.



திடீர் கவர்ச்சி போஸ் கொடுத்த ஸ்ருதிஹாசன்!
[Thursday 2018-01-18 18:00]

நடிகை ஸ்ருதி ஹாசன், லண்டன் பாய்பிரண்ட் மைக்கேல் கோர்சேல் டேட்டிங் செய்து வருகின்றனர். இருவரும் திருமணம் செய்யவுள்ளதாக தகவல் வெளிவந்தபோதும் அதுபற்றி இருவரும் உறுதி செய்யவில்லை. ஆனால் இந்த ஆண்டில் நடிப்பதற்கு ஸ்ருதி புதிய படம் எதுவும் ஒப்புக்கொள்ளாமலிருக்கிறார். இயக்குனர்களும் ஸ்ருதியை ஒப்பந்தம் செய்வதற்கு ஒன்றுக்கு இரண்டுமுறை யோசிக்கின்றனர். திடீரென்று திருமணம் செய்துகொண்டால் அது மைனஸாகிவிடுமோ என்பது அவர்களின் பயமாக உள்ளது. திருமணம் பற்றியும், காதல் பற்றியும் ஸ்ருதி வெளிப்படையாக கருத்துதெரிவிக்க மறுத்துவிடுகிறார்.



நான் இருப்பதா? இயக்குனர் இருப்பதா? - தமன்னா கெடு
[Thursday 2018-01-18 18:00]

இந்தியில் கங்கனா ரனாவத் நடித்து திரைக்கு வந்தபடம் ‘குயின்’. இதில் அவருக்கு தேசிய விருது கிடைத்தது. தமிழ் உள்ளிட்ட தென்னிந்திய மொழிகளில் இப்படத்தை தயாரிக்க உரிமை பெறப்பட்டு ஒரு வருடத்துக்கும் மேலாக கிடப்பிலிருந்தது. கடந்த சில மாதங்களுக்கு முன்புதான் ரீமேக் செய்யும் பணி தொடங்கியது. தமிழ், கன்னடத்தில் நடிகர் ரமேஷ் அரவிந்த் இயக்க காஜல் அகர்வால், பருல் யாதவ் நடிக்கின்றனர். தெலுங்கு, மலையாளம் படத்தை நீலகண்டா இயக்க தமன்னா, மஞ்சிமா மோகன் நடிக்கின்றனர்.



நடிகை சாயிஷாவுக்கு ஐஸ் வைத்த ஆர்யா!
[Thursday 2018-01-18 18:00]

ஆர்யா, சாயிஷா நடிக்கும் புதிய படம் கஜினிகாந்த். சந்தோஷ் பி.விஜயகுமார் இயக்குகிறார். கே.ஈ.ஞானவேல்ராஜா தயாரிக்கிறார். இப்படத்தின் டீஸர் வெளியிடப்பட்டது. இதில் கலந்து கொண்டு ஆர்யா பேசும்போது,’இப்படத்தில் ஞாபகமறதி உள்ளவனாக வேடம் ஏற்றிருக்கிறேன். உண்மையில் பட இயக்குனருக்குதான் ஞாபகமறதி. ஏற்கனவே இருட்டறையில் முரட்டு குத்து படம் இயக்கிக்கொண்டிருக்கும் விஜயகுமார் அத்துடன் கஜினிகாந்த் படமும் இயக்குகிறார். காலையில் இதன் படப்பிடிப்பு மாலையில் அதன் படப்பிடிப்பு என ஓடிக்கொண்டிருப்பார்.



பிரபல இயக்குனருடன் தமன்னா மோதல்!
[Wednesday 2018-01-17 17:00]

இந்தியில் கங்கனா ரனாவத் நடித்த படம் ‘குயின்’. இப்படத்திற்காக கங்கனா ரனாவத் தேசிய விருது பெற்றார். இதே படம் தமிழில் காஜல் அகர்வால், தெலுங்கில் தமன்னா, மலையாளத்தில் மஞ்சிமா மோகன், கன்னடத்தில் பருல் யாதவ் நடிக்க நான்கு மொழிகளில் ரீமேக் ஆகி வருகிறது. தமிழ், கன்னட ரீமேக்கை ரமேஷ் அரவிந்த் இயக்குகிறார். தெலுங்கு, மலையாள மொழிகளில் நீலகண்டா இயக்குகிறார். கடந்த டிசம்பர் மாதம் முழுவதும் பிரான்ஸ் நாட்டில் இதன் படப்பிடிப்பு நடந்தது. காஜல், தமன்னா, மஞ்சிமா, பருல் நால்வரும் கலந்துகொண்டு நடித்து வந்தனர். ஒரே கதை அம்சமுள்ள படத்தில் நடித்ததால் 4 பேரும் நெருக்கமான தோழிகளாக மாறியதுடன் அடிக்கடி செல்பி படம் எடுத்து இணைய தளத்தில் பகிர்ந்து வந்தனர்.



அதர்வாவுக்காக பாலிவுட் வில்லனை தேடிய இயக்குனர்!
[Wednesday 2018-01-17 17:00]

கவுதம் கார்த்திக் படத்தை இயக்கிய ஆர்.கண்ணன் அடுத்து அதர்வா நடிக்கும் புதிய படத்தை தயாரித்து இயக்க உள்ளார். ஏற்கனவே ‘செம போத ஆகாத’, ‘இமைக்கா நொடிகள்’ படங்களில் அதர்வா நடித்து வருகிறார். இப்படங்கள் விரைவில் வெளிவரவுள்ளது. கண்ணன் இயக்கும் படத்துக்கு இன்னும் பெயரிடப்படவில்லை. இதில் அதர்வாவிற்கு ஜோடியாக மேகா ஆகாஷ் நடிக்கிறார். வில்லன் கதாபாத்திரத்தில் உபன் படேல் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார்.



அந்த காட்சிகளில் நடிக்க மறுக்கும் நயன்தாரா!
[Wednesday 2018-01-17 17:00]

முன்னணி ஹீரோக்கள் படங்கள் என்றாலும் தனக்கு முக்கியத்துவம் இருந்தால் மட்டுமே சமீபகாலமாக நடிக்க ஒப்புக்கொள்கிறார் நயன்தாரா. பெரும்பாலும் ஹீரோயினுக்கு முக்கியத்துவமுள்ள கதைகளையே தேர்வு செய்கிறார். அவரை பிரதானமாக வைத்து உருவான ‘அறம்’ படம் சமீபத்தில் வந்து வெற்றி பெற்றது. இதையடுத்து அவர் புதுகண்டிஷன்கள் போடத் தொடங்கியிருக்கிறாராம். கடந்த ஆண்டு 4 படங்கள் நயன்தாரா நடிப்பில் திரைக்கு வந்திருந்தாலும் அதில் 3 படங்கள் ஹீரோயின் முக்கியத்துவமுள்ள படங்கள். ஒரு படம்தான் ஹீரோ சிவகார்த்திகேயனுடன் இணைந்து நடித்திருந்தார்.


Tharsi-home-15-10-2016
SELVI-HOMES-09-02-17
Easankulasekaram-Remax-300716
Mahesan-Remax-169515-Seithy
<P>
 <b> 13-08-2017 அன்று ரொரன்டோவில் நடைபெற்ற இசை மாலைப் பொழுது - 2017 நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள்-குணா
</p>
<b>  கனடா-ரொரன்டோவில்  ஜூலை 29ம் 30ம்தி கதிகளில் நடைபெற்ற World Tamil Badminton Federation 5th annual tournament நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள்-குணா
<b>  கனடா-ரொரன்டோவில்  ஜூலை 7ம் 8ம் 9ம்தி கதிகளில் நடைபெற்ற குதூகலம் 2017 நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள்-குணா