Untitled Document
August 24, 2017 [GMT]
  • Welcome
  • Welcome
அமெரிக்க நகர் ஒன்றின் மீது வடகொரியா அணுகுண்டு தாக்குதல்! - காட்சியால் பார பரப்பு!
[Wednesday 2017-04-19 17:00]

அமெரிக்கா – வடகொரியா இடையே பதற்ற நிலை முற்றியுள்ள நிலையில், வடகொரியா ஏவிய ஏவுகணையொன்று அமெரிக்க நகர் ஒன்றில் விழுந்து வெடிப்பதுபோன்ற காட்சியொன்றை வடகொரியா வெளியிட்டுள்ளது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
வடகொரிய ஜனாதிபதி கிம் ஜோங் உன்னின் பாட்டனார் கிம் இல் சங்கின் பிறந்த நாள் நேற்று (18ஆம் திகதி) கொண்டாடப்பட்டது. ‘சூரியனின் தினம்’ என்ற பெயரில் வருடந்தோறும் அனுஷ்டிக்கப்படும் இந்த நிகழ்வில் இராணுவ அணிவகுப்பு மற்றும் இராணுவத்தின் பலத்தை வெளிப்படுத்தும் வகையில் அமைக்கப்படும் கலை நிகழ்ச்சிகளை நடத்துவது வடகொரியாவின் வழக்கம்.

அமெரிக்கா – வடகொரியா இடையே பதற்ற நிலை முற்றியுள்ள நிலையில், வடகொரியா ஏவிய ஏவுகணையொன்று அமெரிக்க நகர் ஒன்றில் விழுந்து வெடிப்பதுபோன்ற காட்சியொன்றை வடகொரியா வெளியிட்டுள்ளது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வடகொரிய ஜனாதிபதி கிம் ஜோங் உன்னின் பாட்டனார் கிம் இல் சங்கின் பிறந்த நாள் நேற்று (18ஆம் திகதி) கொண்டாடப்பட்டது. ‘சூரியனின் தினம்’ என்ற பெயரில் வருடந்தோறும் அனுஷ்டிக்கப்படும் இந்த நிகழ்வில் இராணுவ அணிவகுப்பு மற்றும் இராணுவத்தின் பலத்தை வெளிப்படுத்தும் வகையில் அமைக்கப்படும் கலை நிகழ்ச்சிகளை நடத்துவது வடகொரியாவின் வழக்கம்.

  

அதன்படி, நேற்று நடைபெற்ற நிகழ்வில், இராணுவத்தினரின் இசை நிகழ்ச்சியொன்றும் நடத்தப்பட்டது. இதில், வடகொரியாவின் இராணுவ பலத்தை இராணுவ வீரர்கள் உணர்ச்சிபூர்வமான பாடல் மூலம் வெளிப்படுத்தினர். இதையொட்டி, பிரமாண்டத் திரையொன்றில், அமெரிக்கா மீது வடகொரியா ஏவுகணைத் தாக்குதலை நடத்துவது போன்ற ‘அனிமேஷன்’ காணொளியொன்றும் வெளியிடப்பட்டது.

அதில், வடகொரியா ஏவும் ஏவுகணையொன்று பெயர் குறிப்பிடப்படாத அமெரிக்க நகர் ஒன்றின் மீது விழுந்து வெடிப்பதாகக் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. மேலும், அந்த ஏவுகணை வெடிக்கும்போது, அணுகுண்டு வெடிப்பதற்கொப்பான எதிர்விளைவுகள் ஏற்படுவது போல் காட்டப்பட்டுள்ளது. அத்துடன், அமெரிக்கக் கொடியில் உள்ள நட்சத்திரங்கள் கல்லறை மீது சொரிவது போலவும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.

இதன்மூலம், அமெரிக்கா மீது வடகொரியா அணுவாயுதத் தாக்குதலையே நடத்துவதாகவும் சித்திரிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம், தமது நாட்டு விவகாரத்தில் அமெரிக்கா மூக்கை நுழைத்தால் அணுகுண்டுத் தாக்குதல் நடத்தப்படும் என்ற எச்சரிக்கை அமெரிக்காவுக்கு விடுக்கப்பட்டுள்ளது என்றே நம்பப்படுகிறது.

  
   Bookmark and Share Seithy.com



அஹோசின் தேவதை படுகொலை! - நைஜீரியருக்கு ஆயுள் தண்டனை?
[Thursday 2017-08-17 18:00]

இலங்கையைச் சேர்ந்த அகதிப் பெண் ஒருவர் ஜேர்மனியின் அஹோஸ் நகரில் கொலைசெய்யப்பட்டமை தொடர்பில் கைதானவரின் வழக்கு விசாரணை நேற்று இடம்பெற்றது. அஹோஸ் பகுதியில் வசித்து வந்த 22 வயதான சூபிகா பரமநாதன் என்ற குறித்தப் பெண், அவரது ஆண் நண்பர் என்று கூறப்படும் நைஜீரியாவைச் சேர்ந்த அகதி ஒருவரால் கடந்த பெப்ரவரி மாதம் கொலை செய்யப்பட்டார். அகதிகளுக்கான தொண்டுபணிகளியில் ஈடுபட்டு வந்த அவரை ‘அஹோசின் தேவதை’ என்று அந்த பகுதி மக்கள் அழைத்துவந்ததாக ஜேர்மனியின் ஊடகங்கள் தெரிவிக்கின்றன.



12 வயது சிறுவனுக்கு 12 அங்குலமுள்ள பெரிய கைகள்: -ஒதுக்கிய கிராம மக்கள்
[Sunday 2017-08-13 07:00]

இந்தியாவில் 12 வயது சிறுவனுக்கு ஏற்பட்ட அரிய வகை நோயினால் அவனது கை 12 அங்குலம் அளவிற்கு பெரியதாகியுள்ளதால், அப்பகுதியில் உள்ள கிராம மக்கள் இது சிறுவனுக்கு ஏற்பட்ட சாபம் என ஒதுக்கியுள்ளனர். உத்திரப்பிரதேசம் மாநிலத்தைச் சேர்ந்த சிறுவன் Tarik. 12 வயதாகும் இச்சிறுவனுக்கு பிறக்கும் போதே அரியவகை நோயின் பாதிப்பினால் அவனது கைகள் சாதரணமாக மனிதனுக்கு இருப்பதை விட பெரிய கைகளாக இருந்துள்ளது.



மலேசியாவில் மகளை பாலியல் தொல்லை செய்த தந்தைக்கு 12 ஆயிரம் வருடம் சிறை:
[Friday 2017-08-11 18:00]

மலேசியாவில் தனது மகளுக்கு தொடர்ந்து பாலியல் தொல்லை கொடுத்து வந்த 36 வயது தந்தையை கைது செய்த போலீஸ் நீதிமன்றம் அவருக்கு 12 ஆயிரம் வருடங்கள் வரை சிறைத் தண்டனை கொடுக்க வேண்டும் என கோரியது. மலேசியாவை சேர்ந்த 36 வயதுடைய ஆண் ஒருவர் அவருடைய மனைவியை விவாகரத்து செய்து 15 வயது மகளும் வசித்து வந்தார். இவருடன் மனைவி இல்லாமலிருந்த ஜனவரி மாதம் முதல் ஜூலை வரையிலான இடைப்பட்ட அந்த நபர் மகளை பலமுறை பாலியல் வன்புணர்வு செய்துள்ளார்.



உலகம் செப்டம்பரில் அழிந்து விடுமா? - பிரபல நிபுணர் பரபரப்பு தகவல்
[Tuesday 2017-08-08 09:00]

பூமியில் மனித இனம் சந்திக்கும் கடைசி மாதம் ஆகஸ்ட் எனவும், அடுத்து வரும் செப்டம்பர் மாதத்தில் உலகம் அழிந்துவிடும் எனவும் பிரபல எண் கணித நிபுணர் வெளியிட்டுள்ள தகவல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.அமெரிக்காவை சேர்ந்த David Meade என்பவர் எண்களையும், பூமியில் ஏற்படும் நிகழ்வுகளையும் பைபிளுடன் ஒப்பிட்டு எதிர்காலத்தை துள்ளியமாக கணிப்பதில் சிறந்தவர் ஆவார்.



சிறையில் அடைக்கப்பட்ட சீனாவை சேர்ந்த 4 வயது பெண் குழந்தை!
[Tuesday 2017-08-01 18:00]

சீனாவை சேர்ந்த 4 வயது பெண் குழந்தை கேரள சிறையில் அடைக்கப்பட்டுள்ளது.Han Riu Hou என்ற 4 வயது பெண் குழந்தை தனது தாய் Zialoin மற்றும் மாமா Song Qi Hou ஆகிய இருவருடன் கேரளாவுக்கு வந்துள்ளது.



குழந்தையை இரக்கமின்றி கொடூரமாக கொலை செய்த தாய்: - ஆயுள் தண்டனை விதித்த நீதிமன்றம்
[Friday 2017-07-28 09:00]

குழந்தையை இரக்கமின்றி கொடூரமாக கொலை செய்த தாய்க்கு நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது. பிரித்தானியாவை சேர்ந்தவர் Paul Hogan. இவர் மனைவி Cody-Anne Jackson (20) இவர்களுக்கு Macey Hogan (2) என்ற பெண் குழந்தை உள்ளது.மனைவியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக Paul அவரை பிரிந்து சென்று விட்டார். இந்நிலையில் கடந்த வருடம் அக்டோபர் மாதம் Maceyயின் புகைப்படத்தை Paul-க்கு Jackson அனுப்பியுள்ளார்.



பழிக்கு பழியாக குடும்பத்தினர் எதிரிலேயே சிறுமியை பலாத்காரம் செய்ய உத்தரவிட்ட பஞ்சாயத்து!
[Thursday 2017-07-27 18:00]

பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் ‘பழிக்கு பழி’ வாங்கும் விதமாக 16 வயது சிறுமி பெற்றோர் மற்றும் உறவினர்கள் எதிரிலேயே பஞ்சாயத்து உத்தரவுப்படி, பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் உலகம் முழுவதிலும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. முஸாஃபராபாத்தின் ராஜ்பூர் கிராமத்தில் ஜூலை 18ம் தேதி இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது. அஷ்ஃபாக் என்பவரின் தங்கையை வாடா என்ற இளைஞர் ஜூலை 16ம் தேதி பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது.



கனடாவில் காணாமல் போன தமிழர்! - தகவல் அறிந்தால் தருமாறு பொலிஸார் உதவி கோரியுள்ளனர்.
[Friday 2017-07-21 07:00]

கனடாவின் Stouffville பகுதியில் தமிழர் ஒருவர் காணாமல் போயுள்ளதாக யோர்க் பிராந்திய பொலிஸார் தெரிவித்துள்ளனர். கடந்த 18ஆம் திகதி முதல் இந்த நபர் காணாமல் போயுள்ளதாக பொலிஸார் தெரிவித்தள்ளனர். 61 வயதான பொன்ராசா நாகராஜா என்பவரே இவ்வாறு காணாமல் போயுள்ளார். கடந்த 18ஆம் திகதி காலை நடைபயிற்சியில் ஈடுபடுவதற்காக சென்றுள்ள நிலையில் அவர் வீடு திரும்பவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.



5 கிலோ வெள்ளி, 30 லட்சம் பணம் 100 சவரன் தங்கம் கொட்டி கொடுத்தும் மருமகளை அடித்தே கொன்ற டாக்டர் குடும்பம்: Top News
[Wednesday 2017-07-19 20:00]

5 கிலோ வெள்ளி, 30 லட்சம் பணம் 100 சவரன் தங்கம் கொட்டி கொடுத்தும் போதவில்லை , 10 லட்சம் கேட்டு மருமகளை அடித்தே கொன்று நாடகமாடிய டாக்டர் குடும்பம் , மன்னார் குடியில் நடந்த பயங்கரம் – வீடியோ அதிகமாக பகிருங்கள் இவர்களுக்கு தண்டனை கிடைக்க வேண்டும். திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் வரட்சனை கொடுமையால் இளம் பெண் அடித்து கொலை செய்யப்பபட்டுள்ளார்.



ஷாப்பிங் சென்று விட்டு உள்ளே வரும் சசிகலா!
[Tuesday 2017-07-18 18:00]

பெங்களூர்: பெரா வழக்கில் எழும்பூர் நீதிமன்றத்தில் வீடியோ கான்பிரன்சிங் மூலம் ஆஜரான போது வெள்ளை நிற சிறை கைதி ஆடை அணித்திருந்த சசிகலா அன்னியன் மாதிரி அவ்வப்போது சூழ்நிலைக்கு தகுந்தாற்போல் ஆடையை மாற்றியிருப்பது அம்பலமாகி உள்ளது. சொத்துக் குவிப்பு வழக்கில் சிறையில் உள்ள சசிகலா சொகுசு வாழ்க்கை வாழ்ந்து வருவதாக டிஐஜி ரூபா அம்பலப்படுத்தினாா். மேலும் சிறைத் துறை அதிகாரியின் காரிலேயே அவர் பலமுறை சிறையை விட்டு வெளியே சென்று வந்துள்ளார் என்று தெரிகிறது.



அமெரிக்காவில் சாதனை படைத்த இலங்கை பெண்:
[Tuesday 2017-07-11 20:00]

இலங்கையில் சாதாரண குடும்பம் ஒன்றில் பிறந்து அமெரிக்காவில் சிறந்த சமையல்காரராக மாறி பெண், அந்த நாட்டு உணவகம் ஒன்றுக்கு உரிமையாளராகியுள்ளார். அயோமா கருணாரத்ன என பெயர் கொண்ட குறித்த இலங்கை பெண், திருமணத்திற்கு பின்னர் அயோமா வைலன் என அழைக்கப்படுகின்றார். கண்டி மாஹாமாய பாடசாலையின் பழைய மாணவியான அவர் சாதாரண ஒரு குடும்பத்தில் பிறந்தவராகும். அவரது தந்தை பேராதனை பகுதியில் உள்ள மிகச்சிறிய கடை ஒன்றின் உரிமையாளராகும்.



அறுவை சிகிச்சை மூலம் கழுத்திலிருந்து அகற்றப்பட்ட 90 குண்டூசிகள்!
[Saturday 2017-07-08 15:00]

ராஜஸ்தானை சேர்ந்த பத்ரிலால் என்பவரது ழுத்தில் இருந்து 90 குண்டூசிகள் அறுவை சிகிச்சை மூலம் அகற்றப்பட்டுள்ளது. மனநலம் பாதிக்கப்பட்டவரான இவர் அதிகமான குண்டூசிகளை விழுங்கியுள்ளார். இதனால் கழுத்தில் வலி மற்றும் உணவு சாப்பிட மிகவும் சிரமப்பட்டுள்ளார்.டில்லியில் உள்ள ஆந்திய மருத்துவ அறிவியல் நிறுவன மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்குள்ள மருத்துவர்கள் அவரை சி.டி.ஸ்கேன் சோதனைக்கு உட்படுத்திய போது, அவரது உடலின் உள்ளே பல்வேறு இடங்களில், 150 குண்டூசிகள் இருந்தது தெரிய வந்தது.



பாசத்திற்கும் சட்டத்திற்கும் நடுவில் ஊசலாடும் 11 மாதக் குழந்தையின் உயிர் போராட்டம்!
[Wednesday 2017-07-05 17:00]

சட்டப்புத்தங்களின் வரிகளுக்கு நடுவிலும், பெற்றோரின் தணியாத முயற்சிகளுக்கு இடையிலும் ஒரு 11 மாதக் குழநதையின் உயிர் போராட்டம் நடந்து கொண்டிருக்கும் சம்பவம் மனதை நெகிழச் செய்வதாக உள்ளது.



ஜெர்மனியில் ஃபேஸ்புக், ட்விட்டர் சமூக வலைத்தளங்களுக்கு அபராதம் விதிக்க புதிய சட்டம்:
[Tuesday 2017-07-04 07:00]

சட்டவிரோதமான பதிவுகளை நீக்காத ஃபேஸ்புக், ட்விட்டர் போன்ற சமூக வலைத்தளங்களுக்கு அபராதம் விதிக்கும் புதிய சட்டம் ஜெர்மனியில் அமலாகியுள்ளது. ஜெர்மனியில் அகதிகள் மீது இனவெறியை தூண்டும் விதத்தில் ஃபேஸ்புக், ட்விட்டர் போன்ற சமூக வலைத்தளங்களில் பதிவுகள் வெளியாகி வருகிறது. வன்முறையை தூண்டுவது, மதம் தொடர்பான பிரிவினைவாதத்திற்கு ஊக்கம் அளிப்பது போன்ற தகவல்களைப் பகிர அந்நாட்டு அரசு எதிர்ப்பு தெரிவித்துள்ளது.



முதலையுடன் திருமணம் செய்து கொண்ட மேயர்: - மெக்ஸிகோவில் பர பரப்பு
[Tuesday 2017-07-04 07:00]

தெற்கு மெக்ஸிகோவில் உள்ள சாண்ட் பெட்ரோ ஹூமெலூலா நகர மேயர் முதலையை திருமணம் செய்து கொண்டுள்ள வினோத சம்பவம் அரங்கேறியுள்ளது. மெக்ஸிகோவில் சாண்ட் பெட்ரோ ஹூமெலூலா நகரத்தில் நூற்றுக்கணக்கான ஆண்டுகளாக இந்த பாரம்பரியம் நடைமுறையில் உள்ளதாக கூறப்படுகிறது. தங்கள் நாட்டின் மீனவர்களுக்கு தொழிலில் அதிர்ஷ்டம் ஏற்பட வேண்டும் என்பதற்காக இது போன்ற வினோத நிகழ்ச்சி ஒவ்வொரு ஆண்டும் அங்கு நடைபெறுகிறது. அந்நகரின் மேயராக இருப்பவர் ஹொமேலூலா விக்டர்.



செல்பி மோகத்தால் அணையில் மூழ்கி பலியான மாணவிகள்!
[Monday 2017-07-03 07:00]

‘செல்பி’ மோகத்தால் நர்சிங் மாணவிகள் 3 பேர் அணையில் மூழ்கி பலியானார்கள். அவர்களை காப்பாற்ற முயன்ற மாணவனும் பரிதாபமாக உயிரிழந்தான்.மராட்டிய மாநிலம் வார்தா மாவட்டத்தில் உள்ள காரன் கானா கிராமத்தில் மகா காளி அணைப்பகுதி உள்ளது. நேற்றுமுன்தினம் நர்சிங் கல்லூரியை சேர்ந்த 3 மாணவிகள் இந்த அணைப்பகுதியை சுற்றிப்பார்க்க வந்தனர். அவர்கள் அணையில் ‘செல்பி’ எடுக்க விரும்பினர். தண்ணீரில் இறங்கி 3 பேரும் செல்பி எடுத்தனர்.



ஆளில்லா விமான சோதனை ஓட்டத்தில் சாதனை படைத்த பேஸ்புக் நிறுவனம்!
[Sunday 2017-07-02 18:00]

தொலைதூரத்தில் அமைந்துள்ள பகுதிகளுக்கும் இணைய சேவையை அளிப்பதற்காக ஃபேஸ்புக் நிறுவனத்தால் வடிவமைக்கப்பட்டுள்ள சூரிய சக்தியால் இயங்கக் கூடிய ஆளில்லா விமானத்தின் இரண்டாவது சோதனை ஓட்டம் வெற்றி அடைந்துள்ளது.



ஜெர்மனியும் ஒரினச் தேர்கையாளர்களின் திருமணத்திற்கு  பச்சைக் கொடி!
[Friday 2017-06-30 09:00]

பல மேற்கு ஐரோப்பிய நாடுகள் அங்கீகாரம் வழங்கியது போல , இப்பொழுது ஜெர்மனியும் ஒரினச் தேர்கையாளர்களின் திருமணத்திற்கு  பச்சைக்  கொடி காட்டி இருக்கின்றது . இடதுசாரிகள் கொடுத்த பலமான ஆதரவே ஜெர்மன் சட்டம் ஓரினச்சேர்க்கையாளர்களுக்கு ஆதரவாக மாற வழி வகுத்துள்ளது. ஜெர்மனியின் கீழவை 393-226 என்ற கணக்கில் , இதை இதைச் சட்டமாக்கி  உள்ளது . மேலவை ஏற்கனவே இதற்கு அங்கீகாரம் வழங்கி விட்டது.



பூனையைவிட சிறியதாகப் பிறந்த குதிரை! - கின்னஸ்க்கு பரிந்துரை
[Friday 2017-06-30 09:00]

வடமேற்கு ரஷ்யாவின் ஸ்கொட்நோயோ என்னும் கிராமத்தில்தான் இந்த அதிசய குதிரை பிறந்துள்ளது. குதிரையின் உரிமையாளர் எலெனா சிஸ்ட்யாகாவா ரஷ்ய ஊடகங்களுக்கு அளித்த பேட்டியில் ‘நான் வளர்த்துவரும் குதிரை குள்ளமாக இருக்கக்கூடிய ரகத்தைச் சேர்ந்தது. அது கடந்த மாதம் மிகவும் குட்டியான குதிரையைப் பெற்றெடுத்தது. அதற்கு நான் குலிவர் என்று பெயரிட்டுள்ளேன். குலிவரின் உயரம் ஒரு பூனையின் உயரத்தைவிடக் குறைவு. ரஷ்யாவிலேயே இதுதான் குள்ளமான குதிரையாக இருக்கும்.



தபால் ஊழியரைத் தாக்கிய கனடா காகம்: - நிறுத்தி வைக்கப்பட்ட தபால் சேவை
[Thursday 2017-06-29 19:00]

கனடாவில் கிழக்கு வான்கூவர் நகரத்தில் தபால் ஊழியரை கேனக் (Canuck ) என்றறியப்படும் ஒரு காகம் தாக்கியதை அடுத்து அந்த பகுதிக்கு தபால் விநியோகம் நிறுத்திவைக்கப்பட்டுள்ளது.கிழக்கு வான்கூவரில், இந்தப் பிரச்சனை இல்லை என்று உறுதியான பிறகுதான் அங்குள்ள பல முகவரிகளுக்கு அளிக்கப்படவேண்டிய தபால்கள் வழங்கப்படும் என்று கனடா தபால் நிறுவனம் தெரிவித்துள்ளது.


Easankulasekaram-Remax-300716
Elankeeran-debt-solution-25-06-2016
SELVI-HOMES-09-02-17
Mahesan-Remax-169515-Seithy
Tharsi-home-15-10-2016
<b>  கனடா-ரொரன்டோவில்  ஜூலை 29ம் 30ம்தி கதிகளில் நடைபெற்ற World Tamil Badminton Federation 5th annual tournament நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள்-குணா
<b>  கனடா-ரொரன்டோவில்  ஜூலை 7ம் 8ம் 9ம்தி கதிகளில் நடைபெற்ற குதூகலம் 2017 நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள்-குணா
<b> 30-06-2017 அன்று கனடா-ரொரன்டோவில் நடைபெற்ற மின்னல் 2017 நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள்-குணா