Untitled Document
May 23, 2017 [GMT]
  • Welcome
  • Welcome
ஆஸ்துமா (Asthma) வைக் கட்டுப்பாட்டிற்குள் வைத்திருப்பதற்கு என்ன செய்யவேண்டும்!
[Thursday 2017-04-20 08:00]
 
உங்களுக்கு தொடர்ச்சியான இருமல், மூச்சு விடுவதில் சிரமம், மூச்சுவிடும் போது ஒலி ஏற்படுதல் (Wheezing) போன்றவற்றிற்கு அடிப்படையான காரணமாக அமைவது ஆஸ்துமா (ASthma) என்று சொல்லப்படும் ஒரு நிலை ஆகும். இது சுவாசக் குழாய்களைப் பாதிக்கும் ஒரு பிரச்சினையாகும். இது சுவாசக்குழாய்களின் உட்சுவரில் அலர்ச்சி / ஒவ்வாமை ஏற்படுத்தும் பொருட்களால் உண்டாகும் தாக்கம் காரணமாக ஏற்படுகிறது.

உங்களுக்கு தொடர்ச்சியான இருமல், மூச்சு விடுவதில் சிரமம், மூச்சுவிடும் போது ஒலி ஏற்படுதல் (Wheezing) போன்றவற்றிற்கு அடிப்படையான காரணமாக அமைவது ஆஸ்துமா (ASthma) என்று சொல்லப்படும் ஒரு நிலை ஆகும். இது சுவாசக் குழாய்களைப் பாதிக்கும் ஒரு பிரச்சினையாகும். இது சுவாசக்குழாய்களின் உட்சுவரில் அலர்ச்சி / ஒவ்வாமை ஏற்படுத்தும் பொருட்களால் உண்டாகும் தாக்கம் காரணமாக ஏற்படுகிறது.

  

இதனால் சுவாசக்குழாய்களின் உட்சுவரின் சுற்றளவு குடைவடைகின்றது. இவ்வாறாக சுருக்கமடைந்த சுவாசக்குழாயினுடாக வழியானது செல்லும் போது மூச்சிறைப்பு / இழுப்பு (Wheezing) எனும் ஒலி ஏற்படுகின்றது. அத்துடன் மூச்சு விடுதலில் சிரமம், இருமல் மற்றும் மார்புப்பகுதியில் இறுக்கம் போன்றன ஏற்படுகின்றது.

இந்த அறிகுறிகள் குறிப்பாக இரவு மற்றும் அதிகாலை வேளையிலேயே அதிகமாகக் காணப்படும். இவை தானாகவோ சில மருந்துகளின் பாவனையின் பின்னரோ மீண்டும் பழைய நிலைக்கு திரும்புகின்றது. நீங்கள் சில முறையான பழக்கவழக்கங்களைக் கடைப்பிடிப்பதன் மூலம் ஆஸ்துமா (Asthma) வைக் கட்டுப்பாட்டில் வைத்திருக்க முடியும்.

ஆஸ்துமா (Asthma) வைக் கட்டுப்பாட்டிற்குள் வைத்திருப்பதற்கு நீங்கள் செய்ய வேண்டியது உங்கள் Asthma வைத் தீவிரப்படுத்தும் காரணிகளைக் கண்டறிந்து அவற்றைத் தவிர்த்துக் கொள்வதாகும். நீங்களும், உங்கள் குடும்ப அங்கத்தவர்களும் இந் நோய் பற்றியும் அதனைத் தூண்டும் காரணிகள் பற்றியும் அறிந்திருப்பதாலும், அவற்றைத் தவிர்ப்பதாலும் உங்கள் ஆஸ்துமாவை (Asthma) நீங்கள் கட்டுப் பாட்டிற்குள் வைத்திருக்க முடியும்.

உங்களுக்கு சில ஒவ்வாமை ஏற்படுத்தும் பொருட்களால் ஆஸ்துமா (Asthma) தீவிரமடையலாம். உதாரணமாக தூசு, பூக்களின் மகரந்தம், பூனை, நாய் போன்ற மிருகங்களின் முடி, தூசியிலுள்ள சிறு பூச்சிகள், காற்றிலுள்ள மாசுக்கள், புகை – உதாரணமாக சிகரெட் புகை, அடுப்பு, நுளம்புச்சுருள் புகை, சில வாசனை யூட்டிகள் (Perfumes). எனவே நீங்கள் இவற்றை தவிர்த் துக்கொள்ள வேண்டும்.

வீடு, படுக்கை விரிப்பு, போர்வை போன்றவற்றை வழக்கமாக கழுவி தூசு சேராதவாறு பார்த்துக்கொள்ளவும். தூசு உள்ள இடத்தை சுத்தம் செய்யும்போது நீங்கள் உங்கள் மூக்கை துணியால் கட்டி தூசியிலிருந்து பாதுகாத்துக் கொள்ளலாம். உங்களுக்கு குளிரான கால நிலை மற்றும் குளிரூட்டப்பட்ட அறைகளால் ஆஸ்துமா (Asthma) தூண்டப்படலாம். அவ்வாறான சந்தர்ப்பங்களில்பொருத்தமான நடவடிக்கைகளை மேற்கொள்வது நல்லது.

சிலவேளைகளில் மனஅழுத்தம், உணர்ச்சிவசப்பட்ட நிலை போன்றவற்றினால் உங்களுக்கு ஆஸ்துமா (Asthma) காணப்படலாம். இதற்கு தியானம், மூச்சுப் பயிற்சி போன்றன உதவியாக அமையும். நீங்கள் தொழில் புரியும் இடத்திலுள்ள சில பொருட்களாலும் ஆஸ்துமா (ASthma) தீவிரமடையலாம். உதாரணமாக மரத்தூள், சில இரசாயனப் பொருட்கள். இவ்வாறான சந்தர்ப்பங்களில் தகுந்த நடவடிக்கைகளை மேற்கொண்டு தொடர்ந்து அந்த ஒவ்வாமை ஏற்படுத்தும் பொருட்களிலிருந்து விலகிக்கொள்வது நல்லது.

சிலவேளை தடிமன் / சளிப்பிடித்தல் போன்ற சுவாசத்தொகுதி தொற்று நோய்களும் உங்கள் ஆஸ்துமா (ASthma) தீவிரமடைய காரணமாகலாம். எனவே இவற்றுக்கு உடனடியாக சிகிச்சை பெறுவது நல்லது.

உடற்பருமன் அதிகமாக இருப்பதும் ஆஸ்துமா (Asthma) கட்டுப்பாடில்லாமல் இருப்பதற்கு காரணமாகலாம். எனவே உங்கள் உடல் நிறையை சரியானளவில் பேணவேண்டும்.

சில மருந்து வகைகளும் ஆஸ்துமா (Asthma) வைத்தூண்டலாம். எனவே நீங்கள் மருந்து ஏதும் பாவிப்பின் வைத்தியரின் ஆலோசனையைப் பெறுவது நல்லது.

நீங்கள் வைத்தியரை வேறு காரணங்களுக்காக சந்திக்கும் போதும் உங்களுக்கு ஆஸ்துமா (Asthma) இருப்பதைத் தெரியப்படுத்தவும்.

ஆஸ்துமா (Asthma) விற்கு வழங்கப்படும் மருந்து வழியான சிகிச்சை முறைகள்.

தற்போது அநேகமான ஆஸ்துமா (Asthma) மருந்துவகைகள் மூச்சினால் உள்வாங்கப்படுபவையாக (உறிஞ்சப்படுபவை Inhaler) வருகின்றன. இவைநேரடியாகசுவாசக்குழாய்களைச்சென்றடைந்து தொழிற்படுகின்றன. எனவே சிறிய அளவான மருந்தே இங்கு பயன்படுத்தப்படுகிறது.

அத்துடன் இவை உடலின் ஏனைய பாகங்களுக்குச் செல்வது குறைவு என்பதனால் இதனால் ஏற்படும்பக்க விளைவுகள் மிகமிகக்குறைவாகும்.

இம்மருந்துகள் 2 விதமான தொழிற்பாடுடையன.

Salbutamol, TCrbutalinc போன்ற மருந்துகள் நிவாரணமளிக்கும் மருந்துகளாகும். இவை மூச்சி றைப்பு (Wheezing), மூச்செடுப்பதில் கடினம், நெஞ்சு இறுக்கம் போன்ற குணம் குறி உள்ள போது பாவிக்கப்பட வேண்டியவை. இவை உடனடியாக நோய் நிவார ணத்தைத் தருகின்றன.

Beclomethasone போன்ற (Brown நிற உறிஞ்சி) மருந்துகள் ஆஸ்துமா (ASmatha) வைக் கட்டுப்படுத் தும் மருந்துகளாகும். இம் மருந்துகள் உங்களுக்கு ஆஸ்துமா (Asthma) அறிகுறி இருந்தாலும், இல்லாவிட் டாலும் தொடர்ச்சியாகப் பாவிக்க வேண்டும். ஏனெனில் இவை தொழிற்படுவதற்கு நீண்ட காலம் எடுக்கும். இம்மருந்தை வைத்தியரின் அறிவுரைப்படி குறித்தளவு மருந்தை குறிப்பிட்ட காலத்திற்குப் பாவிப்பதால் உங்கள் ஆஸ்துமா (Asthma) வைக்கட்டுப்பாட்டிற்குள் வைத்திருக்கலாம்.

நீங்கள் உங்கள் உறிஞ்சிமருந்துகளை (Inhaler) பெற்றுக் கொள்ளும் போது அவற்றின் பாவனை முறை பற்றி வைத்தியரிடம் தெளிவாக கேட்டு தெரிந்து கொள்வது நல்லது.

ஆஸ்துமா (Asthma) என்பது உங்கள் வாழ்க் கையைக் கட்டுப்படுத்தும் பாரதூரமான நோய் அல்ல. இது உங்களின்கட்டுப்பாட்டிற்குள்வைத்திருக்கக்கூடியஒரு விடயமாகும். இதனைக் கட்டுப்பாட்டிற்குள் வைத்திருப் பதனால் நீங்கள் ஒரு சாதாரண வாழ்க்கையை மகிழ்ச்சியாக அனுபவிக்கலாம்.

Dr.திவாகரன் சிவமாறன்

  
   Bookmark and Share Seithy.com



அழகாக தெரிய வேண்டுமா? - ஆாய்ச்சியாளர்களின் சுகமான கண்டுபிடிப்பு
[Monday 2017-05-22 08:00]

சரியாக தூங்கினால் அழகாகவும் சரியாக தூங்கவில்லை என்றால் அழகு குறைந்து மந்தமாகவும் காணப்படுவது உண்மை என ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.ஓரிரு இரவுகள் சரியாகத் தூங்கவில்லை என்றால் நாம் அழகு குறைந்து காணப்படுவதற்கு அதுவே போதுமானதாக உள்ளது என இந்த ஆய்வில் தெரியவந்துள்ளது.



ஏன் பழங்களையும் காய்கறிகளையும் நீங்கள் அன்றாடம் சேர்க்காமல் இருக்கக் கூடாது?
[Friday 2017-05-19 08:00]

மனித வாழ்வில் பழங்கள் மற்றும் காய்கறிகள் ஏன் மிக முக்கிய பங்கு வகிக்கின்றது என்று உங்களுக்குத் தெரியுமா? ஏனெனில், பழங்கள் மற்றும் காய்கறிகள் அவற்றின் மருத்துவ குணத்தால் மனித உடலில் ஏற்படும் ஆரோக்கிய குறைபாடுகளைப் போக்கவல்லது. இதனால் தான் அன்றாட உணவில் காய்கறிகள் மற்றும் பழங்கள் சேர்க்கப்படுகின்றன. இவை மனிதனின் ஆயுட்காலத்தையும் நீட்டிக்கிறது. வாருங்கள் இப்பொழுது நாம் சில காய்கறிகள் மற்றும் பழங்களின் மருத்துவ குணங்களைப் பார்ப்போம்… பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும் ஆப்பிள் ஆப்பிள் சாப்பிட்டால் இதயம் ஆரோக்கியமாக இருக்கும்.



மனச்சோர்வால் பீடிக்கப்பட்ட ஒருவருக்கு எவ்வாறு உதவலாம்?
[Saturday 2017-05-13 18:00]

மனச்சோர்வு என்றால் என்ன அதிலிருந்து எவ்வாறு மீளலாம் என்ற அறிவு எமக்கு இருப்பின் மற்றவர்களுக்கும் நாம் உதவிசெய்யலாம். தொடர்ச்சியான கவலையும் வழக்கமாகச் சந்தோசப்படும் விடயங்களில் கவனம் செலுத்தமுடியாமல் இருப்பதும் நாளாந்த வாழ்க்கையை கிரமமாக நடத்த முடியாமல் இருப்பதும் இவ் அறிகுறிகளாக ஆகக் குறைந்தது இருவாரங்களுக்கு நீடித்திருப்பதும் ஒருவர் மனச்சோர்வால் பாதிக்கப்பட்டுள்ளார் என்பதைத் தெரியப்படுத்தும்.



இருதயநோய் மற்றும் கொலஸ் ரோல் நோய் உள்ளவர்களும் முட்டைகள் உண்ணுவது நல்லது:
[Saturday 2017-05-13 08:00]

முட்டை வளர்ந்தவர்களுக்கு நல்லதல்ல, ஆபத்தான உணவு, கொலஸ் ரோலை அதிகரிக்கும் என்றெல்லாம் ஒரு தப்பான அபிப்பிராயம் நிலவி வருகிறது. அண்மையில் நடத்தப்பட்ட ஆய்வுகளின்படி அனைத்து தரப்பினருக்கும்முட்டைபாதுகாப்பான உணவு மட்டுமல்ல அதிசிறந்த உணவு என்பது உறுதிசெய்யப்பட்டிருக்கிறது. முட்டை ஒப்பீட்டளவிலே மலிவான, இயற்கையான, அனைத்து ஊட்டச் சத்துக்களையும் கொண்ட இரசாயனப்பொருட்கள் எதுவும் சேர்க்கப்படாத இலகுவில் சமிபாடடையக்கூடிய உணவாகும். இது பலநோய்களிலிருந்து மனிதனைப் பாதுகாக்கும் நோய் எதிர்ப்புச்சக்தியை மேம்படுத்த உதவுகிறது.



வெற்றிலையை பற்றி நமக்கு தெரிந்தது சில! தெரியாதது பல!
[Friday 2017-05-12 19:00]

குழந்தைகள் சரியாகப் பால் குடிக்காத நிலையில், பிரசவித்தப் பெண்களுக்கு மார்பில் பால் கட்டிக்கொண்டு வீக்கமும் வலியும் இருக்கும். வெற்றிலையைத் தணலில் வாட்டி மார்பில் வைத்துக் கட்டிவர வீக்கமும் வலியும் குறையும். அதே சமயம், வெற்றிலையை ஆமணக்கு எண்ணெய் தடவி வாட்டி, மார்பில் வைத்துக் கட்டினால் அதிக பால் சுரக்கும். சிறு குழந்தைகளுக்குப் பால் மற்றும் பால் பொருட்களால் செரியாமை ஏற்படும். பத்து வெற்றிலைக் காம்பு, ஒரு வசம்பு, கால் டீஸ்பூன் சீரகம், கால் டீஸ்பூன் ஓமம், இரண்டு பூண்டு பல், இரண்டு கிராம்பு ஆகியவற்றை மண் சட்டியில் கருக வறுத்து, ஒரு டம்ளர் தண்ணீர் ஊற்றி ஒரு பாலாடை ஆகும் அளவுக்கு சுண்டக் காய்ச்சவும். இதனுடன் தேன் அல்லது நாட்டுச் சர்க்கரை கலந்து குழந்தைகளுக்குக் கொடுக்க, செரியாமை நீங்கும்.



மொபைல் பேட்டரி வெடிக்கப்போகிறது என்பதற்கான 5 அறிகுறிகள்.!
[Wednesday 2017-05-10 18:00]

சமீப காலமாக இந்த மொபைல் பேட்டரி வெடிக்குமா..? என்ற ஒரு தனிப்பட்ட பயம் அனைவரின் கண்களிலும் தெரிகிறது மற்றும் நாம் இப்போது இந்த குறிப்பிட்ட சந்தேக தலைப்பில் இருந்து தப்பிக்கவே முடியாது. ஒரு தீர்க்கமான தெளிவை பெற்றே தீர வேண்டிய நிலையில் உள்ளோம் குறிப்பாக நம் அன்புக்குரியவர்களின் கைகளில் கேஜெட்டுகள் தவழும் இத்தருணத்தில் நாம் தெளிவை பெற்றே ஆக வேண்டும். இம்மாதிரியான பேட்டரி வெடிப்பு சம்பவங்களில் சாம்சங் ஸ்மார்ட்போன் பெயர் தான் அதிகம் அடிபடுகிறது.



ஆஸ்துமா நோயைக் கட்டுப்படுத்த முழுமையான சிவப்பு அரிசி சாப்பிடுங்க.!
[Wednesday 2017-05-10 11:00]

இன்றைக்கு வெள்ளை வெளேர் என இருக்கும் அரிசியில் வடித்த சாதத்தைத்தான் நாம் எல்லோருமே விரும்பிச் சாப்பிடுகிறோம். அதாவது, நெல்லின் மேல் தோலான உமி, உள் தோலான தவிடு அத்தனையும் நீக்கப்பட்டு, பலமுறை பாலீஷ் செய்யப்பட்டு, வெறும் சக்கையாகத்தான் நமக்கு வெள்ளை அரிசி கிடைக்கிறது. சிவப்பு அரிசியை நாம் பயன்படுத்துவது வெகு குறைவே. சிவப்பு அரிசி, பெரிய கடைகளில், மால்களில், டிபார்ட்மென்ட் ஸ்டோர்களில் மட்டுமே கிடைக்கும் ஓர் அரிய பொருளாகிவிட்டது. அதன் அருமை, பெருமைகளை தெரிந்துகொண்டால், சிவப்பு அரிசியை நாம் ஒதுக்க மாட்டோம்.



வலியை நொடியில் குணப்படுத்தும் கொன்றை..!
[Tuesday 2017-05-09 19:00]

பச்சைநிறமே பச்சைநிறமே இச்சை மூட்டும் பச்சைநிறமே…’ இது, அலைபாயுதே படத்தில் இடம்பெற்ற பாடல். அதில், ‘தங்கத்தோடு ஜனித்த மஞ்சள் கொன்றைப்பூவில் குளித்த….’ என்ற வரி இடம்பெறும். அந்த அளவுக்கு இன்றைய நூற்றாண்டு மனிதர்கள் மத்தியிலும் பிரபலமாகியிருக்கிறது கொன்றை மலர் என்னும் சரக்கொன்றை. அவ்வை மூதாட்டி கொன்றை வேந்தன் எனும் பெயரில் அறநூல் ஒன்றை இயற்றினார். கொன்றை மலரை விரும்பி அணியும் கடவுள் சிவன் என்றும், அவரது மகன்களுள் ஒருவரான முருகனைப்போற்றியும் இந்நூலில் போற்றிப் பாடப்பட்டுள்ளது.



முடியின் அடர்த்தியை அதிகரிக்க இதை செய்யுங்கள்! 2 வாரத்தில் பலன்
[Tuesday 2017-05-09 18:00]

சிலருக்கு முடி அடர்த்தி இல்லாமல் இருக்கும். இதற்கு முடிக்குத் தேவையான ஊட்டச்சத்துக்கள் கிடைக்காதது தான் முக்கிய காரணம். அதிலும் மழைக்காலம் ஆரம்பித்துவிட்டது. இக்காலத்தில் முடி அதிகம் கொட்ட ஆரம்பிக்கும். எனவே இக்காலத்தில் சரியான பராமரிப்புக்களை கொடுக்க வேண்டும். இல்லாவிட்டால், நாளடைவில் வழுக்கைத் தலை ஏற்படும். குறிப்பாக, ஆண்கள் தங்களுக்கு முடி கொட்ட ஆரம்பித்தால், உடனே அதனை சரிசெய்யும் முயற்சியில் ஈடுபட வேண்டும். இல்லையெனில், முடியின் அடர்த்தி மெதுவாக குறைந்து, பின் வழுக்கையை சந்திக்க நேரிடும். அதுவே பெண்களை எடுத்துக் கொண்டால், அவர்களுக்கு முடியின் அடர்த்தி குறைந்து, எலி வால் போல் ஆகிவிடும்.



மூலநோயை முற்றிலும் குணப்படுத்த கருணை கிழங்கு!
[Saturday 2017-05-06 08:00]

நமக்கு எளிதில், அருகில் கிடைக்க கூடிய மூலிகைகள், இல்லத்தில் இருக்கும் உணவுப் பொருட்களை கொண்டு பாதுகாப்பான, பக்கவிளைவில்லாத மருத்துவத்தை பார்த்து வருகிறோம். அந்தவகையில், கருணை கிழங்கின் மருத்துவ குணங்களை பார்க்கலாம்.பல்வேறு நன்மைகளை கொண்ட கருணை கிழங்கு, மாதவிலக்குக்கு முன்பு ஏற்படும் இடுப்பு வலி, கைகால் வலியை போக்கும் மருந்தாக விளங்குகிறது. கொழுப்பு சத்தை கரைக்க கூடியது.



மார்பக புற்றுநோய் பலரையும் தாக்குவதற்கு முக்கிய காரணம்:
[Friday 2017-05-05 22:00]

தற்போது புற்றுநோய் பலரை உயிரை காவு வாங்கிக் கொண்டிருக்கிறது. குறிப்பாக மார்பக புற்றுநோய் பல பெண்களையும் அமைதியாக தாக்கி அவஸ்தைப்படச் செய்கிறது. இப்படி மார்பக புற்றுநோய் பலரையும் தாக்குவதற்கு முக்கிய காரணம் நாம் உண்ணும் உணவுப் பொருட்கள் தான். சமீபத்திய ஆய்வு ஒன்றில் நாம் தினமும் குடிக்கும் பால் மார்பக புற்றுநோயின் அபாயத்தை அதிகரிப்பதாக கண்டறியப்பட்டுள்ளது. சரி, இப்போது அதுக் குறித்து விரிவாக காண்போம். தொடர்ந்து படியுங்கள்.



புற்று நோய் இருப்பதை ஒரு துளி இரத்தம் மூலம் கண்டுபிடிக்கலாம்: - சீன விஞ்ஞானிகள் தகவல்
[Friday 2017-05-05 16:00]

உயிர் கொல்லி நோயான புற்று நோய்க்கு உலகம் முழுவதும் கோடிக்கணக்கான மக்கள் பலியாகி வருகின்றனர். கடந்த 2015-ம் ஆண்டில் மட்டும் 9 கோடியே 5 லட்சம் பேர் புற்று நோய் தாக்குதலுக்கு ஆளாகினர். ஆண்டு தோறும் 1 கோடியே 41 லட்சம் பேர் பாதிக்கப்படுகின்றனர். உலகம் முழுவதும் 88 லட்சம் பேர் உயிரிழந்துள்ளனர். சீனாவில் மட்டும் 28 லட்சம் பேர் பலியாகி உள்ளனர்.



உறவுமுறையில் இந்த 5 வார்த்தைகளை பயன்படுத்தாதீர்கள்!
[Friday 2017-05-05 07:00]

உறவுமுறையில் விரிசல் ஏற்படுவதற்கு சண்டையின் போது தம்பதியினர் பயன்படுத்தும் ஒரு சில மோசமான வார்த்தைகளே காரணம் ஆகும். தீயினால் சுட்ட புண் புறத்தே வடு இருந்தாலும் உள்ளே ஆறிவிடும்; ஆனால் நாவினால் தீய சொல் கூறிச் சுடும் வடு என்றும் ஆறாது. இது வள்ளுவரின் வாக்கு. நாவினால் சுட்ட சொல்லுக்கு, நீங்கள் எந்த வகையில் மன்னிப்பு கேட்டாலும் அது பாதிக்கப்பட்டவர்களின் மனதில் இருந்து ஆறவே ஆறாது.



இளமையை நீட்டிக்கும் ஆரோக்கியத்தை தக்க வைக்க திருமூலரின் எளிய வழிமுறைகள்..!
[Thursday 2017-05-04 18:00]

"உணவே மருந்து" என்பது அந்தக் காலம். "மருந்தே உணவு" என்பது இந்தக் காலம். ஒரு பக்கம் வளர்ந்து வரும் தொழில்நுட்பத்தால் எத்தகைய கொடுமையான நோயையும் குணப்படுத்தமுடியும் என்னும் நிலை உள்ளது. மறு பக்கம் மருத்துவமனைக்குச் செல்லும் நோயாளிகளின் எண்ணிக்கை என்னவோ அதிகரித்துக் கொண்டுதான் இருக்கிறது. நோயை நீக்கி இன்பத்தைப் பெறுவதற்கு என்ன செய்யலாம் ? என்றும் இளமையோடு வாழவும், ஆரோக்கியமான தலைமுறையை உருவாக்கவும் திருமூலர் கூறும் எளிய வழியைப் பின்பற்றலாம்.



சர்க்கரை நோயை கவனிக்காவிட்டால் இப்படி தான் நடக்கும்!
[Thursday 2017-05-04 18:00]

சர்க்கரை நோய் உலகளவில் வேகமாய அதிகமாய் பரவிக் கொண்டிருக்கிற நோய். தொற்று நோய் கூட இவ்வளவு எளிதில் பரவுவதில்லை. நமது ஒட்டுமோத்த வாழ்க்கை முறை மாறியதாலும், உணவுக் கலப்படம், செயற்கை இனிப்பு ஆகியவற்றாலும் மரபணுவில் உண்டான கோளாறினால் உண்டான நோய்களில் சர்க்கரை வியாதியும் ஒன்று. ரத்தத்தில் குளுகோஸை கட்டுப்படுத்தும் இன்சுலின் சுரக்காமலேயே போனால் அது டைப் 1 சர்க்கரை வியாதி. இன்சுலின் சுரந்தும் அது உபயோகிக்க முடியாமல் இருந்தால் அது டைப் 2 சர்க்கரை வியாதி.



பப்பாளி விதையுடன் தேன் கலந்து சாப்பிடுவதால் கிடைக்கும் பலன்கள்:
[Wednesday 2017-05-03 18:00]

நவீன மருத்துகள் அதிகரித்து வரும் இந்த காலத்தில் வியாதிகளும் அதிகரித்து விட்டன. பண்டைய காலக்கட்டத்தில் வாழ்ந்த நம் முன்னோர்கள் பலர் நீண்ட காலம் ஆரோக்கியமான வாழ்ந்தனர். இதற்கு காரணம் அப்போது அவர்கள் உபயோகித்து வந்த இயற்கை மருத்துவ முறைகள். அந்த மருந்துக்கள் நோய்களில் இருந்த குணப்படுத்துவ மட்டுமல்லாது உடலில் நோய் எதிர்ப்பு சக்தியையும் அதிகரித்தது. புற்றுநோய் மற்றும் எய்ட்ஸ் போன்ற நோய்கள் இப்போது தான் அதிகமாக உள்ளன. அந்த காலத்தில் இவையெல்லாம் மிகவும் அரிதான நோய்கள்.



கைப்பேசியும் கையுமாக இருப்பவர்கள் கவனத்துக்கு..!
[Wednesday 2017-05-03 18:00]

ஒரு காலத்தில் மனிதனுக்கு தனிமையைக் கழிக்கவும் பொழுது போக்கவும் புத்தகங்கள் உதவின. பிறகு அந்த இடத்தை தொலைக்காட்சி பிடித்தது. இன்று அந்த இடத்தை செல்போன் ஆக்கிரமித்துக்கொண்டிருக்கிறது. பெரும்பாலானவர்களுக்கு பொழுது விடிவதும், இரவு முடிவதும் செல்போன் திரையில்தான். எப்போதும் செல்போனும் கையுமாக இருப்பதால் ஏற்படும் பாதிப்புகள் என்னென்ன என்பதை அறிந்தால் ஆடிப்போய்விடுவீர்கள் தெரிந்துகொள்வோமா?



ஒளி பயணம் செய்யும் வேகத்தை போட்டோ எடுக்கும் அதிவேக கேமராவை கண்டு பிடித்த விஞ்ஞானிகள்!
[Wednesday 2017-05-03 12:00]

சுவீடனில் உள்ள லுண்டு பல்கலைக்கழகத்தின் எலியாஸ் கிறிஸ் டென்ஸ்சன் தலைமையிலான குழுவினர் அதிவேக ‘கேமரா’வை உருவாக்கியுள்ளனர். இந்த கேமரா மூலம் ஒளியின் பயணத்தை போட்டோ எடுக்க முடியும்.



மூன்று கால் சிறுமி - வெற்றிகரமாக முடிந்தது அறுவை சிகிச்சை!
[Monday 2017-05-01 17:00]

இடுப்புடன் இணைந்த மூன்றாவது காலுடன் பிறந்த வங்தேச சிறுமி, ஆஸ்திரேலியாவில் செய்யப்பட்ட வெற்றிகரமான அறுவை சிகிச்சைக்கு பின் வங்கதேசம் திரும்பினார். மூன்று வயதாகும் சோய்டி கதூன் பிறப்பிலேயே இடுப்பெலும்பில் இரட்டை பகுதிகள் கொண்டவர். சோய்டி கதூனின் கூடுதல் உறுப்பை அகற்றுவது மற்றும் இடுப்பு மண்டலத்தை மறுகட்டமைப்பது குறித்து ஆஸ்திரேலிய அறுவை சிகிச்சை நிபுணர்கள் பல மாதங்களாக ஆலோசனை நடத்தினார்கள்.



எந்தவித தொந்தரவுமின்றி குழந்தைகள் உறங்க நவீன தொட்டில்..!
[Monday 2017-05-01 17:00]

ஐரோப்பிய நாடுகளில் கைக்குழந்தை வைத்திருக்கும் பெற்றோர் பலரிடம் ஃபோர்டு நிறுவனம் சமீபத்தில் கருத்துக்கணிப்பு ஒன்றை மேற்கொண்டது. இந்த ஆய்வை வைத்து, வீட்டில் எந்தவித தொந்தரவுமின்றி குழந்தைகள் உறங்க, புதிய தொழில்நுட்பத்துடன் கூடிய படுக்கை அமைப்பை ஃபோர்டு தயாரித்துள்ளது. மேக்ஸ் மேட்டார் ட்ரீம்ஸ் க்ரிப் என்ற பெயரில் அந்நிறுவனம் தயாரித்துள்ள குழந்தைகளுக்கான இந்தத் தொட்டிலில் பல வியத்தகு தொழில்நுட்பங்களும் இடம்பெற்றுள்ளன.


Tharsi-home-15-10-2016
Elankeeran-debt-solution-25-06-2016
Mahesan-Remax-169515-Seithy
Easankulasekaram-Remax-300716
SELVI-HOMES-09-02-17
<b>14-05-2017 அன்று கனடா - ரொரன்டோவில் நடைபெற்ற தாயின்மடியில் நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b>06-05-2017 அன்று கனடா- ரொரன்டோவில் அபிநயாலயா நாடியாலயம் நடாத்திய 20வது ஆண்டுவிழா நிகழ்வின் படத்தொகுப்பு. </b> படங்கள் - குணா
<b>30-04-2017 அன்று கனடா- ரொரன்டோவில்  நடைபெற்ற சங்கீத சங்கமம் நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா