Untitled Document
May 23, 2017 [GMT]
  • Welcome
  • Welcome
கிளிநொச்சி போராட்டம் 60 ஆவது நாளை எட்டியது! Top News
[Thursday 2017-04-20 17:00]

காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களினால் கிளிநொச்சியில் நடத்தப்பட்டு வரும் போராட்டம் இன்று 60ஆவது நாளாக தொடர்கிறது. கிளிநொச்சி - கந்தசுவாமி ஆலய முன்றலில் இந்த போராட்டம் கடந்த 60 நாட்களாக நடைபெற்று வருவதாக காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் சங்கத்தின் தலைவி கலாரஞ்ஜினி தெரிவித்துள்ளார்.

காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களினால் கிளிநொச்சியில் நடத்தப்பட்டு வரும் போராட்டம் இன்று 60ஆவது நாளாக தொடர்கிறது. கிளிநொச்சி - கந்தசுவாமி ஆலய முன்றலில் இந்த போராட்டம் கடந்த 60 நாட்களாக நடைபெற்று வருவதாக காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் சங்கத்தின் தலைவி கலாரஞ்ஜினி தெரிவித்துள்ளார்.

  

கிளிநொச்சியில் கடந்த பெப்ரவரி மாதம் 20 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்ட இந்த போராட்டம் இரவு பகலாக தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. பல்வேறு எதிர்பார்ப்புக்களுக்கு மத்தியில் தாம் இந்த போராட்டத்தை முன்னெடுத்து வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார். தம்மால் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற இந்த போராட்டத்தை எவரும் பொருட்படுத்தவில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இந்த நிலையில். கிளிநொச்சி நகரில் எதிர்வரும் 27ஆம் திகதி முழு கடையடைப்பு போராட்டத்திற்கான அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

முழு கடையடைப்பு போராட்டத்திற்கு வர்த்தக சங்கங்கள், பொது அமைப்புக்கள், போக்குவரத்து சங்கங்கள், சிவில் அமைப்புக்கள் மற்றும் அரசியல்வாதிகள் தமக்கு பூரண ஒத்துழைப்புக்களை வழங்க வேண்டும் என காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் சங்கத்தின் தலைவி கலாரஞ்ஜினி கோரிக்கை விடுத்துள்ளார்.

அதேவேளை, முல்லைத்தீவில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களால் மேற்கொள்ளப்பட்டு வரும் போராட்டம் 44 ஆவது நாளாகவும் முன்னெடுக்கப்படுகிறது. குறித்த போராட்டம் முல்லைத்தீவு மாவட்ட செயலகம் முன்பாக முன்னெடுக்கப்பட்டு வருகிறது.

இதனிடையே வவுனியாவில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களினால் மேற்கொள்ளப்பட்டு வரும் சுழற்சி முறையிலான உணவு தவிர்ப்புப் போராட்டம் 56ஆவது நாளாகவும் இன்று தொடர்கிறது. குறித்த போராட்டம் கையளிக்கப்பட்ட உறவினர்கள் தொடர்பில் பதிலளிக்க கோரியும், அரசியல் கைதிகளை விடுதலை செய்யக் கோரியும் மற்றும் பயங்கரவாத தடைச்சட்டத்தினை நீக்குமாறு வலியுறுத்தியும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. இந்த நிலையில் சாதகமான பதில் கிடைக்கும் வரையில் தமது போராட்டம் தொடரும் என போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

  
   Bookmark and Share Seithy.com



நாவற்குழியில் சட்டவிரோதமாக கட்டப்படும் விகாரைக்குத் தடை!
[Tuesday 2017-05-23 08:00]

நாவற்குழியில் புதிதாக தாதுகோபம் அமைப்பதற்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகளை இடைநிறுத்துமாறு சாவகச்சேரி பிரதேச சபையினால் எழுத்துமூலமான அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது. அனுமதியின்றி சட்டவிரோதமான கட்டிட வேலைகள் எதனையும் மேற்கொள்ள வேண்டாம் என்றும் பிரதேச சபை தெரிவித்துள்ளது.



வடக்கில் பாதுகாப்பு அதிகரிப்பு - தயார் நிலையில் விசேட அதிரடிப்படை!
[Tuesday 2017-05-23 08:00]

வடக்கில் பாதுகாப்பை தீவிரப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். இதற்கமைய வட மாகாணத்திலுள்ள அனைத்து பொலிஸ் நிலையங்களிலும் பொலிஸ் அதிகாரிகளை தயார் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.



மான்செஸ்டர் குண்டுவெடிப்பில் இலங்கையர்களுக்குப் பாதிப்பு இல்லை!
[Tuesday 2017-05-23 08:00]

பிரி்த்தானியாவில் மான்செஸ்டர் நகரில் நேற்றிரவு நடந்த குண்டுவெடிப்பில் 19 பேர் கொல்லப்பட்டனர். 50க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர். மான்செஸ்டர் அரேனா உள்ளக அரங்கில் இந்த சம்பவம் இடம்பெற்றது. பிரபல பாப் பாடகியான Ariana Grande-ன் சிறப்பு நிகழ்ச்சியைப் பார்க்க ஆயிரக்கணக்கான மக்கள்கூ டியிருந்த சந்தர்ப்பத்தில் இந்த குண்டு வெடிப்பு சம்பவம் இடம்பெற்றுள்ளது.



வித்தியா கொலை வழக்கு - இந்த வாரம் முடிவு!
[Tuesday 2017-05-23 08:00]

புங்குடுதீவு மாணவி வித்தியா படுகொலை வழக்கினை யாழ்ப்பாணத்திலேயே நடத்துமாறு பிரதம நீதியரசரை சட்டமா அதிபர் கோரியுள்ளதாக சட்டமா அதிபர் திணைக்கள தகவல்கள் தெரிவிக்கின்றன. குறித்த வழக்கின் குற்றப்பத்திரமும் அதனுடான ஆவணங்களும் கடந்த வாரம் சட்டமா அதிபரால் யாழ்.மேல் நீதிமன்றுக்கு அனுப்பி வைக்கப்பட்டிருந்தன. அவை தற்போது யாழ்.மேல் நீதிமன்ற பதிவாளரால் இரும்பு பெட்டகத்தில் பாதுகாக்கப்பட்டு வருகிறது.



மனோ கணேசன் நாகரிகமான முறையில் பேசுவதற்கு பழகிகொள்ள வேண்டும்! - சிவாஜிலிங்கம் சாடல்
[Tuesday 2017-05-23 08:00]

அமைச்சர் மனோ கணேசன் பொது பலசேனாவோடு தன்னை இணைத்து பேசியதற்கு வடக்கு மாகாணசபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் தனது எதிர்ப்பு வெளியிட்டுள்ளதுடன் அமைச்சர் மனோ கணேசன் நாகரிகமான முறையில் பேசுவதற்கு பழகிகொள்ள வேண்டும் எனவும் தெரிவித்தார்.



பிரதமர் ரணிலைச் சந்தித்த அமெரிக்க உயர் அதிகாரி! Top News
[Tuesday 2017-05-23 08:00]

அமெரிக்காவின் தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்கான பிரதம பிரதி உதவிச் செயலாளர் பில் டொட், இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் அதுல் கெஷாப் ஆகியோர், பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை, நேற்று சந்தித்துக் கலந்துரையாடினர். அமெரிக்காவில் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பின்னர், இலங்கை வந்துள்ள மூத்த அமெரிக்க அதிகாரி இவராவார்.



இன்று அவுஸ்ரேலியா செல்கிறார் ஜனாதிபதி!
[Tuesday 2017-05-23 08:00]

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, இன்று அவுஸ்திரேலியாவுக்கு பயணமாகவுள்ளார். அவுஸ்திரேலியப் பிரதமர் மல்கம் டேர்ண்புல்லின் அழைப்பை ஏற்றே அவர், அங்கு பயணிக்கவுள்ளார் என்று, ஜனாதிபதி ஊடகப்பிரிவு அறிவித்தது.



ஆறுமுகன் தொண்டமானுக்கு விரைவில் அமைச்சர் பதவி!
[Tuesday 2017-05-23 08:00]

இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஆறுமுகன் தொண்டமானுக்கு விரைவில் கால்நடை அபிவிருத்தி அமைச்சு பதவி வழங்கப்படவுள்ளது. இந்திய பிரதமர் நரேந்திர மோடி வருகை தந்த போது ஆறுமுகன் தொண்டமானுக்கு அமைச்சு பதவி வழங்கப்பட வேண்டும் என கோரப்பட்டமைக்கு அமைவாக விரைவில் ஆறுமுகன் தொண்டமானுக்கு அமைச்சு பதவி வழங்கப்படவுள்ளது. கால்நடை அபிவிருத்தி அமைச்சு தொண்டமானுக்கு வழங்கப்படும் என்று தெரியவருகின்றது.



ஜனாதிபதிக்கு எதிராக போராட்டம் நடத்தப்படும்!
[Tuesday 2017-05-23 08:00]

ஜனாதிபதிக்கு எதிராக யாழ்ப்பாணத்தில் மக்கள் போராட்டங்கள் முன்னெடுக்கப்படும் என வலி.வடக்கு மீள் குடியேற்ற தலைவர் ச.சஜீவன் தெரிவித்துள்ளார். யாழ்.ஊடக அமையத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவ்வாறு தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில்-



பிரபாகரனை விட ஆபத்தானவர் ரணில்! - என்கிறார் ஞானசார தேரர்
[Tuesday 2017-05-23 08:00]

விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனை விடவும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஆபத்தானவர் என பொதுபல சேனா இயக்கத்தின் பொதுச் செயலாளர் கலகொடத்தே ஞானசார தேரர் தெரிவித்துள்ளார். 'ரணில் விக்ரமசிங்க ஓர் வஞ்சகமான நரி என பிரபாகரன் கூறியிருந்தார். அதன் அர்த்தம் தற்போது புரிகின்றது. அதனை விடவும் ரணில் மோசமானவர்.



கிளிநொச்சியில் பிள்ளையார் கோவிலை ஆக்கிரமித்து புத்த விகாரை! Top News
[Monday 2017-05-22 19:00]

கிளிநொச்சி - கிருஸ்ணபுரம் கிராமத்தில் முப்பது வருடங்களாக இருந்து வந்த பிள்ளையார் கோவில், புத்த விகாரையாக மாற்றப்பட்டுள்ளது. கிளிநொச்சி கரைச்சி பிரதேச செயலக பிரிவில் உள்ள கிருஸ்ணபுரம் கிராமத்தில் ஒரு அரச மரத்தின் கீழ் கடந்த முப்பது வருடங்களாக பிள்ளையார் கோவில் ஒன்று இருந்து வந்தது.



9 அமைச்சர்களின் பதவிகளில் மாற்றம் - திலக் மாரப்பனவும் சேர்ப்பு! Top News
[Monday 2017-05-22 19:00]

இன்று இடம்பெற்ற அமைச்சரவை மாற்றத்தின் போது ஒன்பது அமைச்சர்களின் பதவிகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதுடன் திலக் மாரப்பனவும் அமைச்சரவையில் சேர்த்துக் கொள்ளப்பட்டுள்ளார். வௌிவிவகார அமைச்சராக இருந்த மங்கள சமரவீர நிதி மற்றும் வெகுஜன ஊடக அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்.



நினைவேந்தல்கள் தொடர்பாக அச்சுறுத்தப்பட்டால் முறைப்பாடு செய்யுங்கள்! - சிவாஜிலிங்கம்
[Monday 2017-05-22 19:00]

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வில் கலந்து கொண்டமைக்காக மக்கள் யாரும் அச்சுறுத்தப்பட்டிருந்தால் மாகாண சபை உறுப்பினர்கள் ஊடாக முறைப்பாடு கொடுங்கள் என வடமாகாண சபை உறுப்பினர் எம். கே.சிவாஜிலிங்கம் தெரிவித்தார்.



வாசுதேவ நாணயக்காரவுக்கு மாரடைப்பு! - ஆபத்தான கட்டத்தை தாண்டினார்
[Monday 2017-05-22 19:00]

கூட்டு எதிரணியின் பாராளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார திடீர் சுகயீனம் காரணமாக கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சமீப காலமாக சளி மற்றும் ஆஸ்துமா பிரச்சினை காரணமாக சிகிச்சை பெற்று வந்த அவர், திடீரென ஏற்பட்ட மாரடைப்பினால் வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டதாக ஜனநாயக இடதுசாரி முன்னணி கட்சியின் தகவல்கள் தெரிவித்தன. இருப்பினும், வாசுதேவவின் நிலைமை கவலைக்கிடமாக இல்லை என, வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.



புலிகள் இயக்கத்தின் வளர்ச்சிக்கு உதவிய இந்திரா காந்தி, எம்.ஜி.ஆர்! - கே.பி பேட்டி
[Monday 2017-05-22 19:00]

தமிழக முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர் என அழைக்கப்படும் எம்.ஜி.ராமச்சந்திரன் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பிற்கு நிதி உள்ளிட்ட உதவிகளை வழங்கியதாக, தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் முக்கிய உறுப்பினராக இருந்த கே.பி என அழைக்கப்படும் குமரன் பத்மநாதன் இந்திய ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியில் கூறியுள்ளார்.



மங்கள சமரவீரவின் கடைசிச் சந்திப்பு! Top News
[Monday 2017-05-22 19:00]

அமைச்சர் மங்கள சமரவீர இன்று பிற்பகல், தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்கான அமெரிக்காவின் பதில் பிரதி செயலாளர் பில் டொட் ஐ, சந்தித்துப் பேச்சு நடத்தினார். இதன்போது இருதரப்பு உறவுகள் குறித்து கலந்துரையாடப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. வெளிவிவகார அமைச்சராக சுமார் இரண்டரை ஆண்டுகள் மங்கள சமரவீர பதவி வகித்துள்ளார். இன்று காலை இடம்பெற்ற அமைச்சரவை மறுசீரமைப்பின்போது, நிதி மற்றும் ஊடகத்துறை அமைச்சராக அவர் நியமிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.



பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் 9 ஆண்டுகள் சிறையில் இருந்தவருக்கு விடுதலை!
[Monday 2017-05-22 19:00]

பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் ஒன்பது வருடங்களாக சிறையில் இருந்து வந்த ஒருவர், கொழும்பு விசேட மேல் நீதிமன்ற நீதிபதியால் விடுதலை செய்யப்பட்டுள்ளார். கிளிநாச்சியை சேர்ந்த ஜெயராம் ராமநாதனுக்கு எதிராக சட்டமா அதிபரினால் பயங்கரவாதச் சட்டத்தின் கீழ் கொழும்பு மேல் 2010ஆம் ஆண்டு நீதிமன்றில் குற்றச்சாட்டுப் பத்திரம் தாக்கல் செய்யப்பட்டது.



டென்மார்க்கில் எழுச்சியோடு நடைபெற்ற முள்ளிவாய்க்கால் படுகொலையின் 8 ம் ஆண்டு வணக்க நிகழ்வு! Top News
[Monday 2017-05-22 19:00]

முள்ளிவாய்க்கால் மண்ணிலே சிறிலங்கா அரசு மேற்கொண்ட திட்டமிட் ட தாக்குதலில் பல்லாயிரக்கணக்கா ன மக்களை உயிர்பலி கொண்ட முள் ளிவாய்க்கால் பேரவலத்தின் தமிழி ன அழிப்பின் 8ம்ஆண்டு வணக்க நிகழ்வு 20.05.17 ம் நாளன்று றணாஸ் நகரில் மிகவும் உணர்வுபூர்வமாக நினைவுகூரப்பட்டது.



ரிவிர பத்திரிகை அலுவலக கட்டடம் சீல் வைப்பு!
[Monday 2017-05-22 19:00]

ராஜபக்ச குடும்பத்தினரின் பங்கு முதலீட்டில் இயங்கி வந்த ரிவிர சிங்களப் பத்திரிகை அலுவலகம் இன்று பொலிசாரினால் சீல் வைக்கப்பட்டு மூடப்பட்டது. சிங்களப் பத்திரிகைகளில் அண்மைக்காலமாக அரசாங்கத்துக்கு விரோதமான கருத்துக்களை துணிச்சலாக வெளியிடும் போக்கு ரிவிர பத்திரிகை நிர்வாகத்திடம் காணப்பட்டது. இவர்களின் செய்திகள் குறித்து சில சமயங்களில் அமைச்சர்கள் காரசாரமாக பதில் கருத்து தெரிவிக்கும் நிலையும் ஏற்பட்டிருந்தது.



"முள்ளிவாய்க்கால் முற்றம்" இதழ் 6! - சிறுவர்களின் வெளியீடு Top News
[Monday 2017-05-22 19:00]

புலம்பெயர்ந்து பிறந்து வளர்ந்தாலும் எமது தாய்மண்ணையும், இன அடையாளத்தையும் எம் சிறார்களுக்கு ஊட்டி வளர்க்கும் முகமாக கடந்த 6 வருடங்களாக தமிழ் பெண்கள் அமைப்பு யேர்மனி , பேர்லின் கிளையினரால் "முள்ளிவாய்க்கால் முற்றம்" எனும் சிறுவர்களின் ஆக்கம் கையெழுத்துப் பிரதியாக வெளியிடப்படுகின்றது.


Mahesan-Remax-169515-Seithy
SELVI-HOMES-09-02-17
Easankulasekaram-Remax-300716
Elankeeran-debt-solution-25-06-2016
Tharsi-home-15-10-2016
<b>14-05-2017 அன்று கனடா - ரொரன்டோவில் நடைபெற்ற தாயின்மடியில் நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b>06-05-2017 அன்று கனடா- ரொரன்டோவில் அபிநயாலயா நாடியாலயம் நடாத்திய 20வது ஆண்டுவிழா நிகழ்வின் படத்தொகுப்பு. </b> படங்கள் - குணா
<b>30-04-2017 அன்று கனடா- ரொரன்டோவில்  நடைபெற்ற சங்கீத சங்கமம் நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா