Untitled Document
October 24, 2017 [GMT]
  • Welcome
  • Welcome
காக்கைவன்னியன் போன்று சதிசெய்வோரால் தமிழர் சமுதாயம் அழிந்து விடும்! - விக்னேஸ்வரன் Top News
[Thursday 2017-04-20 17:00]

காக்கை வன்னியன் போல் சுயநல சிந்தனையுடன் சதி வேலைகளில் எம்முட் சிலர் ஈடுபடுவது முழுத் தமிழர் சமுதாயத்தையும் அழித்து விடும் என வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். முல்லைத்தீவில்  வடக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தால் அமைக்கப் பெற்ற மாவீரன் குலசேகரம் வயிரமுத்து பண்டாரவன்னியனின் உருவச்சிலை திறப்பு விழா இன்று  காலை 10.00 மணிக்கு நடைபெற்றது. அந்நிகழ்வில் பிரதம விருந்தினராக கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் அவ்வாறு தெரிவித்தார்.

காக்கை வன்னியன் போல் சுயநல சிந்தனையுடன் சதி வேலைகளில் எம்முட் சிலர் ஈடுபடுவது முழுத் தமிழர் சமுதாயத்தையும் அழித்து விடும் என வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். முல்லைத்தீவில் வடக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தால் அமைக்கப் பெற்ற மாவீரன் குலசேகரம் வயிரமுத்து பண்டாரவன்னியனின் உருவச்சிலை திறப்பு விழா இன்று காலை 10.00 மணிக்கு நடைபெற்றது. அந்நிகழ்வில் பிரதம விருந்தினராக கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் அவ்வாறு தெரிவித்தார்.

  

வன்னி இராச்சியத்தின் மாவீரனாக விளங்கிய பண்டாரவன்னியன் அவர்களின் திருவுருவச் சிலையை முல்லைத்தீவில் நிறுவ வேண்டும் என்ற தீராத அவாவில் பல முயற்சிகளை மேற்கொண்ட வடமாகாண சபையின் உறுப்பினர் கௌரவ திரு.துரைராஜா ரவிகரன் அவர்களின் நீண்டநாள் கனவும் இன்று நனவாகியுள்ளது. தமிழர்களின் வீரம் செறிந்த வாழ்வியல் முறைமைகளை உலகுக்கு பறைசாற்றி நிற்கும் வன்னி மண்ணின் இறுதித் தமிழ் மன்னனாக விளங்கிய மாவீரன் பண்டாரவன்னியனின் வரலாறு பற்றி எமது இளம் சிறார்களும் ஏனையோர்களும் அறிந்திருத்தல் அவசியமாகும்.

பண்டார வன்னியன் 1777ம் ஆண்டில் பிறந்ததாகக் கூறப்படுகின்றது. 1771ல் பிறந்ததாகவும் கூறப்படுகிறது. 1803ம் ஆண்டு உயிர் நீத்ததாகவும் கூறப்படுகின்றது. அப்படியானால் அவர் 26 வருடங்களே வாழ்ந்தார் என்று கொள்ள வேண்டும் அல்லது 32 ஆண்டுகள் வாழ்ந்தார் என்று கொள்ளப்பட வேண்டும். அரசாங்கத்தால் பண்டார வன்னியன் தினமாகப் பிரகடனப்படுத்தியிருக்கும் தினம் ஆகஸ்ட் மாதம் 25ந் திகதி. வன்னியின் கடைசி மன்னனான பண்டாரவன்னியன் திருமணஞ் செய்தது தற்போது அனுராதபுர மாவட்டத்தினுள் அடங்கும் நுவரவாவியின் குமாரசிங்க மகா வன்னியனின் மகளை.

அக்காலத்தில் நுவரவாவிப் பிரதேசம் தமிழர் வாழ் இடமாக இருந்தது. என் பிள்ளைப் பிராயத்தில் பழைய அனுராதபுர நகரத்தில் தமிழ் மக்கள் பெருவாரியாக வாழ்ந்து வந்தார்கள். 18 வருடங்கள் அனுராதபுரம் நகரசபையின் தலைவராக இருந்து வந்தவர் திரு.நடராஜா என்ற ஒரு தமிழரே. முல்லைத்தீவைச் சேர்ந்த பண்டாரவன்னியன் தெற்கில் மணம் முடித்ததால் வன்னியின் வடக்கிலும் தெற்கிலும் அவன் ஆதிக்கம் பரவியிருந்தது.

1621ல் போர்த்துக்கீசர்கள் இலங்கையின் கரையோரங்களைக் கைப்பற்றிய பின்னர் வன்னி இராச்சியத்தை கைப்பற்றுவதற்கு முயன்ற போதும் அவர்களின் ஆட்சி முடிவுக்கு வரும்வரை வன்னி இராச்சியத்தை அவர்கள் கைப்பற்ற முடியவில்லை. வன்னியர் என்ற சொல் ‘வன்மை’ என்ற தமிழ்ச் சொல்லில் இருந்து தோன்றியதாக கருதப்படுகின்றது. வன்மை என்ற சொல்லுக்கு ‘வலிமை நிறைந்த’ என்பது பொருளாகும். வன்னியர் என்னும் சொல்லுக்கு நெருப்பில் இருந்து பிறந்தவர்கள் என்றும் வன்னி மரங்கள் அடர்ந்த பகுதிகளில் ஆட்சி செய்தவர்கள் என்றும் இரு வேறு விதமான கருத்துக்கள் நிலவுகின்றன. வன்னி என்ற சொல் நெருப்பையும் குறிக்கும்.

எனினும் 1882ம் ஆண்டில் ஒல்லாந்தர்கள் இலங்கையைக் கைப்பற்றிய பின்னர் முதன் முதலாக வன்னி இராச்சியம் அவர்களின் கட்டுப்பாட்டில் கொண்டுவரப்பட்டது. இப்போர் பற்றி திரு.லூயி என்ற வரலாற்று ஆசிரியர் பின்வருமாறு குறிப்பிடுகின்றார். ‘ஒல்லாந்தர்கள் உலகில் எத்தனையோ நாடுகளுடன் போர் தொடுத்திருக்கின்றார்கள். எனினும் இலங்கையில் தமிழ் மன்னர்களுடன்; மேற்கொண்ட போர் அவர்களுக்கு தமிழனின் வீரம் செறிந்த போர்த் தந்திரத்தையும் மன உறுதியையும் வியந்து போற்ற வைத்தது’ எனக் குறிப்பிட்டுள்ளார்.

அதன் பின்னர் ஆட்சியைக் கைப்பற்றிய வெள்ளையர்கள் இலங்கையின் அனைத்துப் பாகங்களையும் தமது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்த போதும் வன்னி அரசை தமது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவருவதற்கு பல தந்திரங்களை கையாள வேண்டியிருந்தது. சோழப் பேரரசின் வழிவந்த பண்டார வன்னியன் வெள்ளையர்களால் அமைக்கப்பட்ட முல்லைத்தீவு கோட்டையை தகர்த்தெறிந்து வன்னி இராச்சியத்தை கைப்பற்றியதுடன் மட்டும் நின்றுவிடாது ஆங்கிலப் படைகள் கண்டி இராச்சியத்தை கைப்பற்ற முயற்சித்த போது கண்டிய மன்னனுடன் இணைந்து ஆங்கிலேயருக்கு எதிராக பெரும் போர் தொடுத்து ஆங்கிலேயர்களை புறமுதுகிட்டோடச் செய்தான்.

திரும்பவும் ஆங்கிலேயர்கள் வன்னிப் பெருநிலப்பரப்பில் போர் தொடுப்பதற்கு முன்பதாக வன்னி இராச்சியத்தின் மன்னனாக விளங்கிய மாவீரன் பண்டாரவன்னியனுடன் ஒரு சமாதான ஒப்பந்தத்தை ஏற்படுத்தி அவனுடன் நெருங்கிப்பழகி வன்னி இராச்சியத்தை கைப்பற்ற மேற்கொண்ட முயற்சிகள் பண்டாரவன்னியனால் ஏற்றுக் கொள்ளப்படாத போதும் அவனின் அருமைத்தம்பியர்களான கைலாயவன்னியனதும், பெரியமெயினாரினதும் வற்புறுத்தலின் பெயரில் ஆங்கிலேயர்களுடன் பேச்சு வார்த்தை நடாத்துவதற்காக யாழ்ப்பாணக் கோட்டைக்கு சென்றிருந்தான்.

அங்கே பண்டாரவன்னியனுக்கு பிரமாதமான வரவேற்புக்கள் வழங்கப்பட்டதுடன் எப்படியாவது பண்டாரவன்னியனை தமது ஆட்சிக்குள் அடக்கிவிட வேண்டும் என்ற முனைப்பில் ஆங்கிலேய தளபதிகள் முயன்றனர். இவ்வாறான பொறிமுறைகள் இப்போது எம் அரசாங்கங்களாலும் நடைமுறைப்படுத்தப்படுகின்றது. ‘வா’ என்று அழைப்பார்கள். போனல் குடிக்கத் தருவார்கள், சாப்பிடத் தருவார்கள். ஆனால் உரித்துக்களைத் தரமாட்டார்கள்!

எனினும் அஞ்சா நெஞ்சன் மாவீரன் பண்டாரவன்னியன் அவர்களின் கோரிக்கைகளை தூக்கி எறிந்து போருக்கு தயாரானான். பண்டாரவன்னியனுடன் நேருக்கு நேர் போர் புரிந்து அவனை வெல்ல முடியாது என்பதை நன்கு அறிந்த ஆங்கிலேயப் படைகள் வன்னி இராச்சியத்தின் சிற்றரசனாக விளங்கிய காக்கை வன்னியனின் உதவியுடன் பண்டாரவன்னியன் போர்ப் பாசறையில் தனித்திருந்த போது அவனை தந்திரமாக ஒட்டிசுட்டான் வரை கூட்டிச்சென்று வெள்ளையர்களின் இராணுவத் தளபதி திரு.வொன் டிறிபேர்க் அவர்கள் மூலம் கைது செய்து விசாரணை என்ற போர்வையில் சுட்டுக் கொன்றார்கள் என்று கூறப்படுகின்றது.

வன்னியைச் சேர்ந்த எமது சுகாதார அமைச்சர் வைத்தியகலாநிதி சத்தியலிங்கம் அவர்கள் காக்கை வன்னியன் ஒரு கற்பனைப் பாத்திரமே என்று எங்கோ கூறியிருந்தார். ஆனால் காக்கை வன்னியன் போன்ற கதாபாத்திரங்கள் இன்றும் எம்மிடையே வாழ்கின்றார்கள் என்பதை அவர் ஒப்புக் கொள்வார் என்று நம்புகின்றேன். பண்டாரவன்னியன் தனது இறுதி மூச்சு இருக்கும் வரை ஆங்கிலேயப் படைகளுக்கு அஞ்சாது பெரு வீரனாக வன்னி இராச்சியத்தை ஆண்ட இறுதித் தமிழ் மன்னன் என்ற பெயருடன் உயிர் நீத்தான்.

பண்டாரவன்னியனின் வரலாறு எம் அனைவருக்கும் புத்துணர்வையும் நம்பிக்கையையுந் தரவல்லது. நேர் சிந்தனையுடன் நிமிர்ந்து நடந்து வாழ்க்கையை எதிர் கொண்ட மாவீரன் அவன். அவனின் வாழ்க்கை உத்தியோகபூர்வமாக எழுதப்பட வேண்டும் என்று கோரிக்கைவிடப்பட்டது. சரித்திர ஆசிரியர்களையும் வன்னி பற்றிய அறிவு படைத்த அறிவாளிகளையும் கொண்ட ஒரு குழுவை அமைத்து சகல செய்தித்தரவுகளையும் அறிந்த பின் ஒரு நூலினை வெளியிடலாம் என்று நினைக்கின்றேன். பத்திரிகையில் வேண்டுமெனில் அறிக்கை விடுத்து தகவல்கள் அறிந்தவர்கள் அவற்றை அந்த குழுவின் கவனத்திற்குக் கொண்டுவருமாறு கோரலாம். இவற்றிற்கான செலவை எமது பண்பாட்டலுவல்கள் அமைச்சர் எமக்குத் தந்துதவுவார் என்று நம்புகின்றேன்.

தோல்விகள் நிரந்தரமானது அல்ல. அதே போன்று வெற்றி வாகை சூடியவர்களும் தொடர்ந்து வெற்றியாளர்களாக மிளிர முடியாது என்பதற்கு பண்டாரவன்னியனின் வரலாறு ஒரு சிறந்த சான்றாகும். வன்னி இறுதி யுத்தத்தின் போது மறைந்த பல்லாயிரக்கணக்கான மக்களின் உணர்வுகளை ஒன்று திரட்டி இன்று பண்டாரவன்னியனின் உருவத்தில் இங்கு சிலையாக வடித்திருக்கின்றோம். தமிழர்களின் வீரம் செறிந்த வரலாறுகளையும் அவர்களின் யார்க்கும் அஞ்சா மனோதிடத்தையும் இந்த சிலை என்றென்றும் உலகுக்குப் பறைசாற்றிக் கொண்டிருக்கும். அதை வடித்த தம்பி பாலமுருகனுக்கு எமது பாராட்டுக்கள் உரித்தாகுக!

இன்று எமது மக்கள் சொல்லொண்ணாத்துயரங்களில் வாடுகின்றார்கள். உறவுகளை இழந்தவர்கள், உடமைகளை இழந்தவர்கள், இருப்பிடங்களை இழந்தவர்கள், நிலபுலங்களை இழந்தவர்கள் என பல்லாயிரக்கணக்கான மக்கள் துன்பச் சுமைகளுடன் வாழுகின்றார்கள். இவர்களின் துன்பங்களை எவ்வாறு துடைக்க முடியும் அல்லது இவர்களுக்கு எந்த வகையில் எம்மால் உதவிகளை அல்லது ஒத்தாசைகளை வழங்க முடியும் என நாம் யாவரும் அல்லும் பகலும் செய்வதறியாது சிந்தித்த வண்ணம் உள்ளோம்.

இந்தத் தருணத்தில் எமது வேற்றுமைகளைக் களைந்து ஒற்றுமையுடன் எமது மக்களின் தேவைகளைப் பூர்த்தி செய்ய நாம் முன்வர வேண்டும். காக்கை வன்னியன் போல் சுயநல சிந்தனையுடன் சதி வேலைகளில் எம்முட் சிலர் ஈடுபடுவது முழுத் தமிழர் சமுதாயத்தையும் அழித்து விடும் என்பதை நாம் மறந்து விடக் கூடாது.

இன்றைய இந்தப் புனித தினத்தில், பண்டார வன்னியனின் சிலை அவனின் வீரப் பிரதாபங்களை மக்கள் மனதில் சுடர் விட்டு எரிய விட்டுக் கொண்டிருக்கும் இவ் வேளையில் வடக்கு கிழக்கு மாகாண தமிழ்ப் பேசும் மக்கள் யாவரும் ஒன்றிணைந்து எமது உரிமைகளுக்காகக் போராடுவோம் என மேலும் தெரிவித்தார்.

  
   Bookmark and Share Seithy.com



நம்பகமான பொறுப்புக்கூறல் இடம்பெறுவதை உறுதிப்படுத்த வேண்டும்! - ஐ.நா அறிக்கையாளர் Top News
[Monday 2017-10-23 19:00]

முன்னாள் இராணுவத் தளபதி ஜெனரல் ஜெகத் ஜயசூரியவுக்கு எதிராக பிரேசிலில் தொடரப்பட்டுள்ள வழக்கு, மிகப்பெரிய பிரச்சினையாக உருவெடுக்கலாம் என்று ஐ.நாவின் சிறப்பு அறிக்கையாளர் பப்லோ டி கிரெய்ப் எச்சரிக்கை செய்துள்ளார். இலங்கையில் 14 நாட்கள் பயணத்தை மேற்கொண்டிருந்த, உண்மையை ஊக்குவித்தல், நீதி, இழப்பீடு, மற்றும் மீள நிகழாமையை உத்தரவாதப்படுத்தலுக்கான ஐ.நாவின் சிறப்பு அறிக்கையாளர் பப்லோ டி கிரெய்ப் தமது பயணத்தின் முடிவில் இந்தக் கருத்தை வெளியிட்டுள்ளார்.



சுட்டுக்கொல்லப்பட்ட இளைஞனின் சடலம் உறவினர்களிடம் ஒப்படைப்பு! Top News
[Monday 2017-10-23 18:00]

அரியாலை கிழக்கு, மணியம்தோட்டம் பகுதியில் இனந்தெரியாத நபர்களின் துப்பாக்கி சூட்டில் உயிரிழந்த இளைஞரின் சடலம் இன்று மாலை உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. மணியம் தோட்டம் உதயபுரம் கடற்கரை வீதி சந்தியில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த டொன் போஸ்கோ ரிஸ்மன் மற்றும், நிஷாந்தன் ஆகியோர் மீது இனந்தெரியாதோரால் நேற்று பிற்பகல் துப்பாக்கி சூட்டு மேற்கொள்ளப்பட்டிருந்தது.



அரசியல் கைதிகளை விடுவிக்கக் கோரி பல்கலைக்கழக மாணவர்கள் கையெழுத்துப் போராட்டம்! Top News
[Monday 2017-10-23 18:00]

அநுராதபுர சிறைச்சாலையில் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ள அரசியல் கைதிகளின் கோரிக்கைகளை நிறைவேற்றி, அவர்களை விடுவிக்க வேண்டுமென வலியுறுத்தி யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் கையெழுத்துப் போராட்டமொன்றை இன்று ஆரம்பித்துள்ளனர்.





வடக்கில் சிங்களக் குடியேற்றங்களுக்கு சுமந்திரனும், செல்வமும் துணைபோகின்றனர்! - சுரேஸ் குற்றச்சாட்டு
[Monday 2017-10-23 18:00]

தமிழ்தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சுமந்திரனும் செல்வம் அடைக்கலநாதனும் தமிழர் பகுதிகளை சிங்கள மயமாக்குவதற்கு உடந்தையாக செயற்படுகின்றனர் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமசந்திரன் குற்றம்சாட்டியுள்ளார்.



அரசியல் கைதிகளை விடுவிக்கக் கோரி கிழக்கு பல்கலைக்கழக மாணவர்கள் போராட்டம்! Top News
[Monday 2017-10-23 18:00]

பயங்கரவாத தடைச் சட்டத்தை நீக்கவேண்டும், விசாரணையின்றி சிறைவாசம் அனுபவிக்கும் தமிழ் அரசியல் கைதிகளை நிபந்தனைகளின்றி விடுதலை செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து, கிழக்குப் பல்கலைக்கழக மாணவர்கள், இன்று கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.



3 பொலிஸ் குழுக்கள் விசாரணை!
[Monday 2017-10-23 18:00]

அரியாலை பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ள மூன்று பொலிஸ் குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளன.இந்த தகவலை பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ரூவான் குணசேகர தெரிவித்துள்ளார்.சம்பவம் தொடர்பில் ஏற்கனவே பலரிடம் வாக்கு மூலங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.



கொழும்பு வருகின்றன ஆறு அமெரிக்கப் போர்க்கப்பல்கள்!
[Monday 2017-10-23 18:00]

அமெ­ரிக்­காவின் ஆறு நாச­காரி போர்க்­கப்­பல்கள் இம்­மாத இறு­தியில் இலங்­கை வரவுள்ளன. விமானம் தாங்­கி போர்க்­கப்பல் ஒன்­றுடன் இணைந்தே இந்த போர்க்­கப்­பல்கள் இலங்­கை நோக்­கி பய­ணத்தை ஆரம்­பித்­துள்­ளன. இம்­மாதம் 28 ஆம் திக­தியில் இருந்து 31 ஆம் திக­திக்குள் கொழும்பு துறை­மு­கத்தை இவை வந்­த­டையும் என தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது. ஒரு வார காலம் இந்த கப்­பல்கள் இலங்­கையில் தரித்­தி­ருக்க வாய்ப்­புகள் உள்­ள­தா­கவும் கூறப்­ப­டு­கின்­றது.



இறம்பைக்குளத்தில் டிப்பர் கவிழ்ந்து ஒருவர் படுகாயம்! Top News
[Monday 2017-10-23 18:00]

ஏ9 வீதியூடாக வவுனியா நோக்கி பயணித்த டிப்பர் வாகனம் இன்று காலை ஓமந்தை, இறம்பைக்குளம் பகுதியில் வேகக்கட்டுப்பாட்டை மீறி பனை மரத்துடன் மோதி தடம்புரண்டு விபத்துக்குள்ளானது.இந்த விபத்தில் சாரதி காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ஓமந்தை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.



போருக்குப் பின்னர் தமிழ் மக்களின் அரசியல் விழிப்புணர்வு மந்தம்! - துரைரட்ணசிங்கம் எம்.பி Top News
[Monday 2017-10-23 18:00]

போர் முடிவுக்கு வந்த பிற்பாடு, மக்கள் மத்தியில் அரசியல் விழிப்புணர்வு மந்தகதியில் இருக்கின்றது. அற்ப சொற்ப சலுகைகளுக்காக மக்கள் பலரையும் நாடுகின்ற நிலைமை காணப்படுகின்றது.இவைகளில் இருந்து விடுபட்டு எமது மக்கள், விழிப்புணர்வுடன் செயற்பட வேண்டும் என திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் க.துரைரெட்ணசிங்கம் தெரிவித்தார்.



நாவற்குழியுடன் ரயில் சேவைகள் இடைநிறுத்தம்!
[Monday 2017-10-23 18:00]

கொழும்பு - காங்கேசன்துறை வரையான ரயில் சேவை நாவற்குழி ரயில் நிலையம் வரை மட்டுப்படுத்தப்படவுள்ளது. நாவற்குழியில் உள்ள ரயில் பாலத்தில் உள்ள திருத்த பணிகள் இடம்பெறுவதாலே குறித்த பகுதிகளுக்கான ரயில் சேவை இடை நிறுத்தப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.



எப்போது வேண்டுமானாலும் தேர்தலுக்குத் தயார்! - மஹிந்த
[Monday 2017-10-23 18:00]

பலவந்தமாக அரசியலமைப்பு திருத்தத்தை கொண்டு வருவதன் மூலம், நாட்டில் நல்லிணக்கத்தை கட்டியெழுப்புவது சிக்கலுக்குரியது என, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். மருதானையில் ஊடகங்களுக்கு கருத்து வௌியிட்ட போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார். அரசாங்கம் தேர்தலைப் பிற்போடுவது பயத்தினால் என குறிப்பிட்ட மஹிந்த, தேர்தல் எப்போது வந்தாலும் அதற்கு தாம் தயாராக இருப்பதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார்.



நவாலியில் மோட்டார் சைக்கிளுக்கு தீவைத்த வாள்வெட்டுக் குழு!
[Monday 2017-10-23 18:00]

நவாலி பகுதியில் வீட்டுக்கு முன்னால் நிறுத்தி வைத்திருந்த மோட்டார் சைக்கிளுக்கு வாள்வெட்டுக் குழுவினர் தீ வைத்து விட்டு தப்பி சென்ற சம்பவம் நேற்று இரவு இடம்பெற்றுள்ளது. இதன்போது, 270,000 ரூபாய் பெறுமதியான மோட்டார் சைக்கிள் தீயில் எரிந்துள்ளதாக மானிப்பாய் பொலிஸார் தெரிவித்தனர். நான்கு மோட்டார் சைக்கிள்களில் வந்த எட்டுப் பேர் கொண்ட குழுவினரே இச்சம்பவத்தில் ஈடுபட்டுள்ளனர். சம்பவம் தொடர்பில் வழக்குப் பதிவு செய்துள்ள குற்றத்தடுப்பு பொலிஸார், சி.சி.டி.வி கமராக்களின் உதவியுடன் சந்தேகநபர்களை கைது செய்ய நடவடிக்கை எடுத்துள்ளனர்.



யாழ்ப்பாணத்தில் சுடப்பட்ட இளைஞன் நேற்றிரவு மரணம்! - விசாரணைக்கு நீதிவான் உத்தரவு Top News
[Monday 2017-10-23 08:00]

யாழ்ப்பாணம்- அரியாலை கிழக்கு மணியம்தோட்டம் பகுதியில் நேற்று பிற்பகல் இனந்தெரியாதோரின் துப்பாக்கி சூட்டுக்கு இலக்காகி படுகாயமடைந்த இளைஞன், சுவாசப்பையில் ஏற்பட்ட கடுமையான இரத்த போக்கினால் சிகிச்சை பலனின்றி நேற்றிரவு உயிரிழந்தார். மணியம் தோட்டம் -உதயபுரம் கடற்கரை வீதி சந்தியில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த தொன் போஸ்கோ ரிஸ்மன் மற்றும், நிஷாந்தன் ஆகியோர் மீது இனந்தெரியாதோரால் துப்பாக்கி சூடு நடத்தப்பட்டிருந்தது.



கொக்குவிலில் கடை மீது பெற்றோல்குண்டு வீச்சு! - உரிமையாளர் மீது வாள்வெட்டு
[Monday 2017-10-23 08:00]

கொக்குவில் ரயில் நிலையத்திற்கு அருகிலுள்ள பிறவுண் வீதியில், நேற்றிரவு கூரிய வாள்களுடன் வந்த ஆறு பேர் கொண்ட குழு அப்பகுதியில் அமைந்துள்ள வர்த்தக நிலையமொன்றில் மீது பெற்றோல் குண்டு வீசி விட்டு வர்த்தக நிலையத்திற்குள் புகுந்து உரிமையாளரை வாளால் வெட்டிக் காயப்படுத்தி விட்டுத் தப்பிச் சென்றனர். பெற்றோல் குண்டு வீச்சு மற்றும் வாள்வெட்டுக் குழுவினரின் தாக்குதல் காரணமாக குறித்த வர்த்தக நிலையத்திற்கும் சேதங்கள் ஏற்பட்டுள்ளது. இதனால், அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.



அரசியல் கைதிகளுக்கு ஆதரவாக லண்டனில் போராட்டம்! Top News
[Monday 2017-10-23 08:00]

அரசியல் கைதிகளுக்கு ஆதரவாக லண்டனில் புலம்பெயர் தமிழர்கள் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை முன்னெடுத்தனர். இந்த போராட்டம், பிரித்தானிய பிரதமர் அலுவலகத்திற்கு முன்பாக நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் ஏற்பாட்டில் நேற்று நடைபெற்றது.இதன்போது, அரசியல் கைதிகளை உடன் விடுவிக்க வேண்டும், இராணுவம் அபகரித்து வைத்திருக்கும் மக்களின் காணிகளை மீள கையளிக்க வேண்டும், காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பான உண்மைகளை வெளியிட வேண்டும் போன்ற கோரிக்கைகளை முன்வைத்து மகஜர் ஒன்றும் பிரித்தானிய பிரதமருக்கு வழங்கப்பட்டுள்ளது.



அரசியல் கைதிகளின் உடல்நிலை மோசம்! - மீண்டும் வைத்தியசாலையில் அனுமதி
[Monday 2017-10-23 08:00]

அனுராதபுரம் சிறையில் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகள் மூவரது உடல்நிலை மீண்டும் மிகமோசமான கட்டத்தை அடைந்துள்ளது. இதனையடுத்து அவர்கள் மூவரும் பலாத்காரமாக சிறை அலுவலர்களால் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களிற்கு சேலைன் ஏற்றப்பட்டுள்ளதாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.



நாட்டைப் பிரிக்கும் அரசியலமைப்பை சட்டமாக அனுமதியேன்! - சபாநாயகர் திட்டவட்டம்
[Monday 2017-10-23 08:00]

நாட்டை பிரிக்கும், நாட்டை துண்டாடும், பௌத்த மதத்துக்கு அல்லது வேறு சமயங்களுக்கு பாதிப்பு ஏற்படுத்தும் வகையில் அமைந்த எந்தவொரு அரசியலமைப்பும் சட்டமாக்கப்படுவதற்கு தேவையான சபாநாயகர் ஒப்பத்தை தான் ஒரு போதும் இடமாட்டேன் என சபாநாயகர் கரு ஜயசூரிய தெரிவித்துள்ளார்.



சின்னையாவின் கதி இன்று தெரியும்!
[Monday 2017-10-23 08:00]

கடற்படைத் தளபதி ட்ராவிஸ் சின்னையாவின் தொடர்ந்து பதவியில் நீடிப்பாரா என்பது இன்று தீர்மானிக்கப்படும். ட்ராவிஸ் சின்னையா 55ஆவது வயது பூர்த்தி காரணமாக கடந்த செப்டம்பர் 23ஆம் திகதி பதவியில் இருந்து ஓய்வுபெறும் நிலையில் இருந்தார். அக்காலப் பகுதியில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அமெரிக்காவுக்கான பயணமொன்றை மேற்கொள்ள இருந்த நிலையில் கடற்படைத் தளபதிக்கு ஒருமாத கால பதவி நீடிப்பை வழங்கி, இது தொடர்பாக நாடு திரும்பிய பின் கலந்துரையாட அவகாசமளிப்பதாக உறுதியளித்திருந்தார்.



நாளை கட்டார் செல்கிறார் ஜனாதிபதி!
[Monday 2017-10-23 08:00]

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நாளை கட்டாருக்குப் பயணம் மேற்கொள்ளவுள்ளார். ஜனாதிபதியுடன் அமைச்சர்கள் ராஜித சேனாரத்ன, ராவூப் ஹக்கீம் உள்ளிட்ட அமைச்சர்கள், அதிகாரிகளும் கட்டார் செல்லவுள்ளனர்.



கட்சித் தலைவர்களின் பிரஜாவுரிமையை ஆராய்கிறது தேர்தல் திணைக்களம்!
[Monday 2017-10-23 08:00]

புதிய ஜனநாயக முன்னணியின் தலைவர் சஹீல முனசிங்க வெளிநாட்டவர் என்ற விடயம் தெரியவந்ததையடுத்து. நாட்டில் அனைத்து கட்சிகளின் நிர்வாகிகளினதும் பிரஜாவுரிமைகள் தொடர்பில் பரீட்சிக்க தேர்தல்கள் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது. கடந்த 19ஆம் திகதி தேர்தல்கள் ஆணைக்குழு முழுமையாக ஆராய்ந்துள்ளது. இந்த நிலையில் தேர்தல்கள் சட்டத்தின்கீழ் கட்சிகளின் நிர்வாகிகள் வெளிநாட்டவர்களாக இருக்க முடியாது என்ற விடயத்தை கருத்திற்கொண்டு அனைத்து கட்சி நிர்வாகிகளின் பிரஜாவுரிமைகளையும் ஆராய ஆணைக்குழு தீர்மானித்துள்ளது.


SELVI-HOMES-09-02-17
Easankulasekaram-Remax-300716
Mahesan-Remax-169515-Seithy
Tharsi-home-15-10-2016
<P>
 <b> 13-08-2017 அன்று ரொரன்டோவில் நடைபெற்ற இசை மாலைப் பொழுது - 2017 நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள்-குணா
</p>
<b>  கனடா-ரொரன்டோவில்  ஜூலை 29ம் 30ம்தி கதிகளில் நடைபெற்ற World Tamil Badminton Federation 5th annual tournament நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள்-குணா
<b>  கனடா-ரொரன்டோவில்  ஜூலை 7ம் 8ம் 9ம்தி கதிகளில் நடைபெற்ற குதூகலம் 2017 நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள்-குணா