Untitled Document
April 26, 2017 [GMT]
  • Welcome
  • Welcome
இத்தாலி பிரதமர் பாலோ ஜென்டிலோனியை சந்தித்த டொனால்ட் ட்ரம்ப்!
[Friday 2017-04-21 08:00]

அமெரிக்காவின் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், இத்தாலி நாட்டுப் பிரதமர் பாலோ ஜென்டிலோனியை (Paolo Gentiloni) வெள்ளை மாளிகையில் சந்தித்தார். பின்னர், இருவரும் இணைந்து பத்திரிகையாளர்களைச் சந்தித்து பல்வேறு கேள்விகளுக்கு பதில் அளித்தனர். அப்போது ட்ரம்ப், 'ஆப்கான் போருக்கும், ஐ.எஸ் அமைப்புக்கு எதிரான போருக்கும் இத்தாலியின் ராணுவப் பங்கு மிகப்பெரியது. அமெரிக்கா மற்றும் இத்தாலி இணைந்து, பெரிய அளவிலான மக்கள் இடப்பெயர்வு மற்றும் சர்வதேசக் கடத்தல் ஆகிய பிரச்னைகளுக்கு வழி காணலாம்' என்று கூறினார்.

அமெரிக்காவின் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், இத்தாலி நாட்டுப் பிரதமர் பாலோ ஜென்டிலோனியை (Paolo Gentiloni) வெள்ளை மாளிகையில் சந்தித்தார். பின்னர், இருவரும் இணைந்து பத்திரிகையாளர்களைச் சந்தித்து பல்வேறு கேள்விகளுக்கு பதில் அளித்தனர். அப்போது ட்ரம்ப், 'ஆப்கான் போருக்கும், ஐ.எஸ் அமைப்புக்கு எதிரான போருக்கும் இத்தாலியின் ராணுவப் பங்கு மிகப்பெரியது. அமெரிக்கா மற்றும் இத்தாலி இணைந்து, பெரிய அளவிலான மக்கள் இடப்பெயர்வு மற்றும் சர்வதேசக் கடத்தல் ஆகிய பிரச்னைகளுக்கு வழி காணலாம்' என்று கூறினார்.

  

இந்த செய்தியாளர்கள் சந்திப்பு நடந்துகொண்டிருக்கும்போதுதான், ஃப்ரான்ஸில் போலீஸார் மீது துப்பாக்கிச்சூடு தாக்குதல் சம்பவம் பற்றிய செய்தியும் வெளிவரத் தொடங்கின. இது குறித்து ட்ரம்ப், 'அமெரிக்க தரப்பில் ஃப்ரான்ஸில் நடந்த தாக்குதலுக்கு இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன். இது இன்னொரு தீவிரவாத தாக்குதல் போலத்தான் தெரிகிறது' என்று கூறினார். ஆனால், இதுவரை ஃப்ரான்ஸ் அரசு இந்தத் தாக்குதல் தீவிரவாதிகளால் மேற்கொள்ளப்பட்டதா என்பது குறித்து அதிகாரபூர்வ தகவல் எதுவும் கூறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

  
   Bookmark and Share Seithy.comபடுபயங்கரமான பீராங்கி தாக்குதலை அதிரடியாக நடத்தி காட்டிய வட கொரியா:
[Wednesday 2017-04-26 17:00]

அமெரிக்கா தாக்குதலுக்கு தயார் என கூறும் வகையில் படுபயங்கரமான பீராங்கி தாக்குதல் பயிற்சியை கிம் ஜாங் முன்னிலையில் வட கொரியா ராணுவம் இன்று நடத்தியுள்ளது. வட கொரியா உலக நாடுகளை அச்சுறுத்தும் விதத்தில் தொடர்ந்து அணு ஆயுத சோதனைகளை நடத்தி வருகிறது. மேலும், அமெரிக்க, ஜப்பான் போன்ற நாடுகளை தகர்ப்போம் என பீதியை கிளப்பி வருகிறது.சீனாவின் புதிய விமானம் தாங்கி போர்க்கப்பல் நாட்டுக்கு அர்ப்பணிப்பு!
[Wednesday 2017-04-26 17:00]

உள்நாட்டு தொழில்நுட்பத்தில் தயாரிக்கப்பட்ட புதிய விமானம் தாங்கி போர்க்கப்பலை சீன அரசு நாட்டுக்கு அர்ப்பணித்துள்ளது. தெற்கு சீன கடல் பகுதியில் ஏராளமான இயற்கை வளங்கள் உள்ளன. இதற்கு, புரூனே, மலேசியா, பிலிப்பைன்ஸ் தைவான், வியட்நாம் உள்ளிட்ட நாடுகளும் போட்டி போடுகின்றன. இதுதவிர, வட கொரியா மற்றும் அமெரிக்கா இடையேயான மோதல் போக்கு அப்பகுதியில் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளத. எனவே தெற்கு சீன கடல் பகுதியை தன் கட்டுப்பாட்டில் கொண்டு வர சீன அரசு கடினமாக முயற்சி எடுத்து வருகிறது. இதற்காக ஏராளமான ராணுவ நடவடிக்கைகளையும மேற்கொண்டு வருகிறது.கொரிய தீபகற்பத்தில் குவியும் அமெரிக்க போர்க்கப்பல்கள்!
[Wednesday 2017-04-26 17:00]

வட கொரியா முன்னெடுத்த ஏவுகணை பரிசோதனைகள் மற்றும் அண்மையில் அந்நாடு எழுப்பிய கருத்துக்களால் முறுகல் நிலை ஓன்று தோன்றியுள்ள நிலையில், அமெரிக்காவின் முன்னணி நீர்முழ்கி மற்றும் போர்க்கப்பல்கள் போர் ஒத்திகைக்காக கொரிய தீபகற்பத்தில் முகாமிட்டு வருகின்றமை வலய நாடுகளிடையே பதற்றத்தை அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், வடகொரியாவிற்கு எதிராக செயற்படுவதற்காக ஜப்பான், தென்கொரியா உள்ளிட்ட நாடுகளுடன் இணைந்து போர் ஒத்திகையில் ஈடுபட்டு வருகின்றது.முகநூல் நேரலையில் தந்தை செய்த கொடூரச் செயல்!
[Wednesday 2017-04-26 14:00]

தனது 11 மாதக் குழந்தையைக் கொல்லும் காட்சியை, ஃபேஸ்புக் லைவில் ஒருவர் ஒளிபரப்பியுள்ள சம்பவம், தாய்லாந்தில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.பாங்காக்கில் வசித்துவந்த ஊட்டிசன் வோங்டாலே என்பவர், கடந்த சில மாதங்களாக மனநிலை சரியில்லாமல் இருந்துள்ளார். மனைவி தன்னிடம் அன்பாக இல்லை என்று புலம்பிவந்தாராம். இந்நிலையில், பாங்காக் நேரப்படி நேற்று மாலை 5 மணியளவில் (இந்திய நேரப்படி நேற்று மாலை 3.30 மணி) ஃபேஸ்புக் லைவ் ஆன் செய்துள்ளார் ஊட்டிசன். பின்னர், தன் 11 மாதக் குழந்தையின் கழுத்தில் கயிறு கட்டி, கட்டடத்தின் மேலிருந்து கீழே தூக்கி வீசியுள்ளார். இந்தக் காட்சி, ஃபேஸ்புக் லைவ்வில் பதிவாகி உள்ளது. இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து அவர் தற்கொலைசெய்துகொண்டு இறந்துவிட்டார்.குடும்பங்களை ஆதரிக்கும் மிகப்பெரிய சாம்பியன் டிரம்ப்: - இவான்கா பேச்சால் பெண்கள் மாநாட்டில் சலசலப்பு
[Wednesday 2017-04-26 08:00]

ஜெர்மனியில் நடந்த ஒரு கூட்டத்தில் பேசிய அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் மகள் இவான்கா டிரம்ப், பெண்கள் தொடர்பாக தனது தந்தையின் நிலைப்பாட்டை நியாயப்படுத்தினார். பெர்லினில், ஜி-20 நாடுகளின் மகளிர் மாநாட்டில், தனது தந்தை, குடும்பங்களை ஆதரிக்கும் மிகப்பெரிய சாம்பியன் என்று இவான்கா வர்ணித்தபோது, பார்வையாளர்கள் மத்தியில் இருந்து எதிர்ப்பை வெளிப்படுத்தும் முணுமுணப்புக்கள் வெளிப்பட்டன.பிரித்தானியா ஐரோப்பிய யூனியனிலிருந்து வெளியேறும் திட்டம் ரத்து? - தொழிலாளர் கட்சி
[Wednesday 2017-04-26 07:00]

பிரித்தானியாவில் நடைபெறவுள்ள பொதுத்தேர்தலில் வெற்றி பெற்றால், அரசு கொண்டு வந்துள்ள ஐரோப்பிய யூனியனிலிருந்து பிரித்தானியா வெளியேறும் திட்டத்தை ரத்து செய்துவிட்டு புதிய கொள்கையை வகுப்பதாக தொழிலாளர் கட்சி தெரிவித்துள்ளது பிரித்தானியாவில் கடந்த 2015-ம் ஆண்டு பொதுத் தேர்தல் நடைபெற்றது. தற்போதைய பாராளுமன்றத்தின் பதவிக் காலம் 2020-ல் முடிவடைகிறது.பதவிக்காலம் முடியும் முன்னரே, அதாவது ஜூன் மாதம் 8-ஆம் திகதி பொதுத்தேர்தலை நடத்த பிரதமர் தெரசா மே முடிவு செய்து அறிவிப்பை வெளியிட்டார்.அமெரிக்க படைகளை முற்றிலும் அழிப்போம்: - என வடகொரியா சபதம்
[Wednesday 2017-04-26 07:00]

வடகொரியா மீண்டும் அணுஆயுத அல்லது ஏவுகணை சோதனையில் ஈடுபடுவதை தவிர்க்கும் விதமாக அமெரிக்கா யு.எஸ்.எஸ். கார்ல் வின்சன் போர் கப்பல் அணியை கொரிய தீபகற்பத்திற்கு அனுப்பி உள்ளது.ஏவுகணைகள் தாங்கிய அமெரிக்காவின் யுஎஸ்எஸ் மிசிகான் நீர்மூழ்கி இணைகிறது. கொரிய தீபகற்பத்தில் அமெரிக்கா படைகளை விஸ்தரிப்பதால் பதற்றமானது அதிகரித்து உள்ளது.அமெரிக்கா மற்றும் வடகொரியா கடந்த சில வாரங்களாக கடுமையான வார்த்தை போரில் ஈடுபட்டு உள்ளதால் பதற்றமானது அதிகரித்து உள்ளது.இஸ்லாமிய குழந்தைகளுக்கு இந்த பெயர்களை சூட்டக்கூடாது: - அதிரடி தடை விதித்த சீனா
[Wednesday 2017-04-26 07:00]

சீனாவில் வசிக்கும் இஸ்லாமியர்கள் தங்களது குழந்தைகளுக்கு இஸ்லாம், சதாம், ஹஜ், குரான் உள்ளிட்ட பெயர்களை சூட்டக்கூடாது என உத்தரவிட்டுள்ளது.சீனாவின் ஜின்ஜியாங் மாகாணத்தில் உய்குர் இன மக்கள் அதிகம் வசித்து வருகின்றனர். இவர்கள், ஐஎஸ் தீவிரவாதிகள், தலிபான்கள் உள்ளிட்ட இஸ்லாமிய அமைப்புகளுடன் கைகோர்த்துக் கொண்டு, சீனாவுக்கு எதிராகச் செயல்படுவதாக, அந்நாடு குற்றம்சாட்டிவருகிறது. குறிப்பாக, ஜின்ஜியாங் மாகாணத்தை, தனி நாடாகப் பிரிக்கவும் அங்குள்ள உய்குர் மக்கள் கோரிக்கை எழுப்புகின்றனர்.64 வயதான தனது பள்ளி ஆசிரியை மணந்த 30 வயதான பிரான்ஸ் அதிபர் வேட்பாளர்!
[Tuesday 2017-04-25 17:00]

30 வயதாகும் பிரான்ஸ் அதிபர் வேட்பாளராக போட்டியிடும் இமானுவேல் மேக்ரன் 64 வயதான தனது பள்ளி ஆசிரியை மணந்துள்ளார். இந்த அதிபர் வேட்பாளரின் மனைவி பிரிஜ்ஜெட் ட்ரானெக்ஸ். இவருக்கு வயது 64. தன்னைவிட 25 வயது மூத்த ஒருவரை மேக்ரன் மணந்துள்ளார்.கென்யாவில் பஸ் மீது டேங்கர் லாரி மோதி விபத்து: - 27 பேர் உடல் கருகி பலி
[Tuesday 2017-04-25 13:00]

கென்யா நாட்டின் துறைமுக நகரமான மோம்பாஸாவில் இருந்து தலைநகர் நைரோபியை நோக்கி இன்று அதிகாலை சுமார் 50 பயணிகள் பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. உள்ளூர் நேரப்படி, இன்று அதிகாலை சுமார் 3 மணியளவில் நைரோபி-மோம்பாஸா தேசிய நெடுஞ்சாலையில் கிப்வேஸி என்ற பகுதி வழியாக சென்றபோது முன்னால் சென்ற ஒரு வாகனத்தை முந்திச் செல்ல அந்த பேருந்தின் டிரைவர் முயன்றார்.பிரித்தானியாவில் சூப்பர் கருத்தரிப்பு !
[Tuesday 2017-04-25 08:00]

பிரிட்டிஷ் பெண்ணொருவர்இரட்டை குழந்தைகளை கருத்தரித்து, அவற்றை கருவில் சுமந்தபோது, இன்னொரு குழந்தையையும் கருத்தரித்ததாக மூன்று குழந்தைகளை பெற்றெடுத்துள்ளார். மூன்று குழந்தைகள்இது தான் சூப்பர் கருத்தரிப்பு என்று அழைக்கப்படுகிறது. ஒரு முறை கருத்தரித்து குழந்தையாக வளர்ந்து வருகின்ற கருவை கொண்டிருக்கும் பெண், பின்னர் இரண்டு வாரத்தில் அல்லது ஒரு மாதத்திற்குள் மீண்டும் கருத்தரிப்பது இவ்வாறு அழைக்கப்படுகிறது.ஆப்கானிஸ்தானில் கைதிகளுக்கு நடக்கும் கொடூரம்: - அம்பலமான தகவல்
[Tuesday 2017-04-25 08:00]

ஆப்கானிஸ்தானில் சந்தேகத்தின் அடிப்படையில் கைது செய்யப்படும் நபர்களிடம் மிக மோசமான முறையில் விசாரணைகள் மேற்கொள்ளப்படுவதாக புகார் எழுந்துள்ளது. தீவிரவாதி என்ற சந்தேகத்தில் ஒரு நபர் கைது செய்யப்பட்டால் அந்த நபரை காவல் நிலையம் அழைத்து சென்று அவனிடம் இருந்து உண்மைகளை பெற வேண்டும் என்ற நோக்கில், கடுமையாக அடித்துத் துன்புறுத்துதல், உடல் மற்றும் குதிகால்களில் அடித்தல், அந்தரங்க உறுப்புகளில் மின்சாராம் பாய்ச்சல், தூங்க விடாமல் செய்தல், மற்றும் கொன்று விடுவோம் என்ற மிரட்டல் விடுப்பது ஆகிய கடினமான முறைகளை கையாளுகின்றனர்.பள்ளிப்பெண்கள் வேண்டும்: - சர்வாதிகாரியின் சொகுசு வாழ்க்கை அம்பலம்!
[Tuesday 2017-04-25 08:00]

அணு ஆயுத சோதனையால் உலக நாடுகளையும், தனது சர்வாதிகார ஆட்சியால் வட கொரியா மக்களையும் மிரட்டி வரும் கிம் ஜாங் உன் மற்றும் அவரது தந்தையின் ரகசிய வாழ்க்கை குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளது.வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன்னின் தந்தை கிங் ஜாங் இல் ஆவார், இவர் தனது ஆட்சியின் போது 17 அரண்மனைகளை ஆடம்பர சொகுசு வாழ்க்கைக்காக கட்டியுள்ளார்,நாட்டினை ஆட்சி செய்து வந்தாலும், மறுபுறம் பள்ளி மாணவிகளை வேட்டையாடுவதில் கைதேர்ந்தவர் ஆவார், இராணுவ வீரர்களை அனுப்பி பள்ளி மாணவிகளை அழைத்து வரச் சொல்லும் இவர், தனது 17 அரண்மனைகளில் ஒரு அண்மனையில் அவர்களை அடைத்து வைத்திருந்துள்ளார்.வடகொரியாவை தாக்க வேண்டாம்: - டிரம்பிடம் சீன அதிபர் வேண்டுகோள்!
[Tuesday 2017-04-25 08:00]

வடகொரியா உலக நாடுகளின் எதிர்ப்பினை மீறி, 4 முறை அணுகுண்டு, ஒருமுறை ஹைட்ரஜன் குண்டையும் வெடித்து சோதித்தது.இதனால் வடகொரியா மீது ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலும், அமெரிக்காவும் அந்நாட்டின் மீது மிகக்கடுமையான பொருளாதார தடைகளை விதித்தது.இருந்தத போதிலும் தற்காப்பு என்ற பெயரில் வடகொரியா தொடர்ந்து ஏவுகணை சோதனைகளை விடாமல் நடத்தி வருகிறது.தேவைப்பட்டால் அணு ஆயுதத்தை முதலில் பயன்படுத்தவும் தயங்கமாட்டோம்: - எச்சரிக்கை விடும் பிரித்தானியா!
[Tuesday 2017-04-25 08:00]

வடகொரியா தனது அணு ஆயுத பலத்தை நிரூபிப்பதற்கு தொடர்ந்து அணு குண்டு சோதனை மற்றும் ஏவுகனை சோதனைகளை மேற்கொண்டு வருகிறது.இதற்கு உலக நாடுகள் சில கண்டனம் தெரிவித்தும் கேட்பது போல் இல்லை. இதனால் அமெரிக்கா இது தொடர்பாக வடகொரியாவிற்கு மறைமுகமாக எச்சரிக்கை விடுத்தது.ஆனால் வடகொரியாவோ நேரடியாக அமெரிக்காவை வீழ்த்தும் திறமை தங்களிடம் உள்ளது. போர் நடந்தால் நாங்கள் தான் வெற்றி பெறுவோம் என்று கூறியிருந்தது.இருபது வருடங்களுக்கு பிறகு பாகிஸ்தான் சிவன் கோவிலில் வழிபட இந்துகளுக்கு அனுமதி!
[Monday 2017-04-24 21:00]

பாகிஸ்தானின் அப்போட்டாபாத் மாவட்டத்தில் சிவன் கோவில் ஒன்று உள்ளது. இந்த கோவிலில் பாகிஸ்தான் இந்துக்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டு வந்தது. இந்நிலையில், பாகிஸ்தான் சிவன் கோவிலில் வழிபட 20 வருடங்களுக்கு பிறகு அந்நாட்டு இந்துகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. பெஷாவர் ஐகோர்ட்டின் நீதிபதிகள் அடீக் ஹூசைன் ஷா தலைமையிலான அமர்வு இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.முதல்முறையாக மலேரியாவுக்கு தடுப்பூசி கண்டுபிடிப்பு!
[Monday 2017-04-24 18:00]

மலேரியாவுக்கான முதல் தடுப்பூசி கானா, கென்யா மற்றும் மலாவியில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.அடுத்த ஆண்டு தொடங்கி, இரண்டு ஆண்டுகளில் ஏழரை லட்சம் சிசுக்களுக்கு இந்த தடுப்பூசி போடப்படும்.இந்த தடுப்பூசி, பத்தில் நான்கு பேருக்கு மலேரியா ஏற்படுவதை தடுப்பதாக, பரிசோதனை முடிவுகள் பரிந்துரைத்ததை அடுத்து, உலக சுகாதார அமைப்பு இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.லொறி தாக்குதலுடன் தொடர்புடைய இரண்டாவது சந்தேக நபர் சுவீடன் பொலிசாரால் கைது!
[Monday 2017-04-24 18:00]

சுவீடனில் இடம்பெற்ற லொறி தாக்குதலுடன் தொடர்புடைய இரண்டாவது சந்தேக நபரை பொலிசார் கைது செய்துள்ளனர். கடந்த 7ம் திகதி சுவீடன் தலைநகரான Stockholm-ல் உள்ள வர்த்தக நிலையத்திற்குள் லொறி ஒன்று திடீரென பாய்ந்தது. இதில் 4 பேர் கொல்லப்பட்டனர், 15 பேர் காயமடைந்தனர்.இத்தாக்குதலில் ஈடுபட்ட உஸ்பெகிஸ்தான் நாட்டை சேர்ந்த லொறி ஓட்டுநர் ரக்மத் அக்லோவ் என்பவரை கைது செய்த பொலிசார், அவனை காவலில் வைத்துள்ளனர்.ஏஜண்ட் மூலம் சவுதி அரேபியாவில் ரூ.3 லட்சத்துக்கு விற்கப்பட்ட இந்திய பெண்!
[Monday 2017-04-24 18:00]

இந்தியாவை சேர்ந்த பெண் ஒருவர் தவறான ஏஜண்ட்கள் மூலம் சவுதி அரேபியாவில் ரூ.3 லட்சத்துக்கு விற்கப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.இந்தியாவின் தெலுங்கானா மாநிலத்தில் உள்ள ஹைதராபாத்தை சேர்ந்தவர் சல்மா பேகம் (39).சல்மா, சவுதி அரேபியாவுக்கு வேலைக்கு செல்ல முடிவெடுத்து அக்ரம் மற்றும் ஷாபி என்னும் ஏஜெண்டுகள் மூலம் கடந்த 21ஆம் திகதி சவுதிக்கு அனுப்பட்டார்.அங்கு சல்மா உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் பல கொடுமைகளை அனுபவித்து வருவது தெரியவந்துள்ளது.உலக போர் ஆரம்பிக்குமா! 230,000 அமெரிக்கர்கள் வெளியேற டிரம்ப் உத்தரவு!
[Monday 2017-04-24 10:00]

வட கொரியாவின் அணு ஆயுத மிரட்டலால் வட கொரியா மற்றும் தென் கொரியாவில் உள்ள அமெரிக்கர்களை உடனடியாக அங்கிருந்து வெளியேற்ற டொனால்டு டிரம்ப் உத்தரவிட்டுள்ளார். வட கொரியா அணு ஆயுதம் மற்றும் ஏவுகணை சோதனைகளை தொடர்ந்து நடத்தி உலக நாடுகளை பயமுறுத்தி வருகிறது. அமெரிக்கா இதற்கு கடும் கண்டனம் தெரிவித்தாலும் அதை வட கொரியா ஏற்பதாக தெரியவில்லை. மேலும், எங்களிடம் உள்ள எவுகணையை வைத்து ஒரே அடியில் அமெரிக்காவை தகர்ப்போம் என வட கொரியா எச்சரித்துள்ளது.


Mahesan-Remax-169515-Seithy
Tharsi-home-15-10-2016
SELVI-HOMES-09-02-17
Elankeeran-debt-solution-25-06-2016
Easankulasekaram-Remax-300716
<b>08-04-2017 அன்று  மார்க்கத்தில்  நடைபெற்ற IMHO DINNER NIGHT 2017 நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள்-குணா
<b>01-04-2017 அன்று ரொரன்டோவில்  நடைபெற்ற PRIMA DANCE NIGHT 2017 நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள்-குணா
<b>25-03-2017 அன்று ரொரன்டோவில்  நடைபெற்ற  பைரவி நுண்கலைக் கூட இசை அர்ப்பணம் நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள்-குணா