Untitled Document
June 27, 2017 [GMT]
  • Welcome
  • Welcome
திருகோணமலை எண்ணெய் தாங்கிகளை இந்தியாவுக்கு வழங்குவதற்கு அமைச்சர் சுசில் எதிர்ப்பு!
[Friday 2017-04-21 08:00]

திருகோணமலையிலுள்ள எண்ணெய் தாங்கிகளை இந்தியாவிற்கு குத்தகை அடிப்படையில் வழங்குவதற்கு தான் எதிர்ப்பை வெளியிடுவதாக அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். 
கொழும்பில் நேற்று இடம்பெற்ற மாநாடொன்றில் கலந்துக்கொண்டு உரையாற்றிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

திருகோணமலையிலுள்ள எண்ணெய் தாங்கிகளை இந்தியாவிற்கு குத்தகை அடிப்படையில் வழங்குவதற்கு தான் எதிர்ப்பை வெளியிடுவதாக அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று இடம்பெற்ற மாநாடொன்றில் கலந்துக்கொண்டு உரையாற்றிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

  
  
   Bookmark and Share Seithy.comவிரைவில் சம்பந்தன்- விக்கி சந்திப்பு! - பிரச்சினைகளை ஆராய்வர்
[Tuesday 2017-06-27 18:00]

வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் ஆகியோருக்கு இடையில் கலந்துரையாடல் ஒன்று இடம்பெறவுள்ளது. இவ் வாரத்திற்குள் இந்தச் சந்திப்பு இடம்பெறலாம் என்று தெரியவந்துள்ளது.ஜனாதிபதி மாளிகை முன் கேப்பாப்பிலவு மக்கள் போராட்டம்! Top News
[Tuesday 2017-06-27 18:00]

படையினர் வசமுள்ள தமது பூர்வீக காணிகளை விடுவிக்குமாறு கோரி, முல்லைத்தீவு - கேப்பாப்பிலவு மக்களால் ஜனாதிபதி மாளிகை இன்று முற்றுகையிடப்பட்டது. இராணுவத்தின் ஆக்கிரமிப்பில் உள்ள தமது காணிகளை மீட்டுத்தருமாறு கோரி இம் மக்கள் கடந்த 4 மாதங்களுக்கு மேலாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வந்த நிலையில், அரசாங்கத்திடமிருந்து எவ்வித பதிலும் கிடைக்கவில்லை.கல்வி அமைச்சரை நியமிக்கவில்லை! - முதலமைச்சர்
[Tuesday 2017-06-27 18:00]

வடமாகாண கல்வியமைச்சராக, மாகாணசபை உறுப்பினர் ஆர்னோல்ட் நியமிக்கப்பட்டுள்ளார் என வெளியான செய்திகளில் எவ்வித உண்மையும் இல்லை என, வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். இது குறித்து முதலமைச்சர் ஊடகங்களுக்கு இன்று அனுப்பியுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,கனடா கந்தன் ஆலயத்தின் புதிய கட்டிட புனரமைப்பு பணிகள் தீவிரமாக நடைபெறுகிறது: - 2018 ம் ஆன்ட்டில் கும்பாபிஷேகம் Top News
[Tuesday 2017-06-27 18:00]

கனடா கந்தன் ஆலயத்தின் புதிய கட்டிட புனரமைப்பு பணிகளை 25-06-2017 அன்று ஞாயிற்று கிழமை காலை ஊடகவியலாளர்கள் பார்வையிட்ட்னர். மிக பிரமாண்டமாக கட்டப்பட்டுக் கொண்டிருக்கும் கனடா கந்தன் ஆலயத்தின் வெளிப்புற மற்றும் நிலக் கீழ் மண்டபத்தின் காட்சிகள் இவை.. எதுவித தங்கு தடைகளும் இன்றி பணிகள் நடைபெறுவதாக நிர்வாகசபையினர் மற்றும் கட்டட தொழில்நுட்பவியலாளர்கள் தெரிவித்தனர்.பல்கலைக்கழக மாணவர்கள் கொலை - நீதிமன்றத்துக்கு உண்மையை மறைத்த பொலிஸ்!
[Tuesday 2017-06-27 18:00]

யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் இருவர் சுட்டுப் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக, நீதிமன்றுக்கு வழங்கப்பட்ட முதல் தகவலில் பிழையானதும் உண்மைக்குப் புறம்பானதுமான தகவல்கள் அடங்கியுள்ளனவா என்பது தொடர்பிலான விசாரணைகள் இடம்பெறுவதாக, சட்டத்தரணியும் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன், நீதிமன்றில் இன்று ​தெரிவித்தார்.கனடாவில் வாகனத் தரிப்பிடத்தில் எரிகாயங்களுடன் மீட்கப்பட்ட தமிழ்ப் பெண் மரணம்! Top News
[Tuesday 2017-06-27 18:00]

கனடாவில் எரிகாயங்களுடன் மீட்கப்பட்ட தமிழ் பெண்ணொருவர் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். 45 வயதுடைய இரு பிள்ளைகளின் தாயான கலைச்செல்வி சாள்ஸ் ஜெயந்தன் என்பவரே உயிரிழந்தவராவார். ஸ்காபரோவில் அமைந்துள்ள Canbe உணவகத்தின் பின்புறத்தில் அமைந்துள்ள வாகன தரிப்பிடத்திலேயே எரிகாயங்களுடன் பெண் மீட்கப்பட்டார். Canbe உணவகம் தமிழர் ஒருவருக்கு சொந்தமானதாகும்.யாழ்ப்பாண மக்களின் உடல்களில் பிக்குகளின் இரத்தமே ஓடுமாம்! - சீண்டுகிறார் ஆளுனர் Top News
[Tuesday 2017-06-27 18:00]

யாழ்ப்பாண மக்களின் உடல்களில், இனி பௌத்த பிக்குகளின் இரத்தமே ஓடும் என்று வடமாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரே தெரிவித்துள்ளார். இலங்கை தொழில் பயிற்சி அதிகார சபையினால் நடத்தப்பட்ட என்.வி.கியூ பயிற்சியை நிறைவு செய்த மாணவர்களுக்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வு, நேற்று யாழ். வீரசிங்கம் மண்டபத்தில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.வித்தியா கொலை வழக்கு - நாளை முதல் தொடர் விசாரணை!
[Tuesday 2017-06-27 18:00]

வித்தியா படுகொலை வழக்கு நாளை , 3 மேல் நீதிமன்ற நீதிபதிகள் அடங்கிய ட்ரயல் அட்பார் நீதிமன்றில் ஆரம்பமாகவுள்ளது. நாளை முதல் எதிர்வரும் ஆறு நாட்களுக்கு தொடர் விசாரணைகள் திகதிகள் நடத்தப்படவுள்ளன. பிரதம நீதியரசர் பிரியசத் டெப்பினால் நியமிக்கப்பட்ட மேல் நீதிமன்ற நீதிபதிகள் மூவரடங்கிய குழு முன்னிலையில் யாழ். மேல் நீதிமன்றத்தில் இந்த விசாரணைகள் முன்னெடுக்கப்படவுள்ளன.ஆனந்தசங்கரியை நள்ளிரவில் சந்தித்த மூன்று மாகாணசபை உறுப்பினர்கள்! Top News
[Tuesday 2017-06-27 18:00]

தமி­ழர் விடு­த­லைக் கூட்­ட­ணி­யின் செய­லா­ளர் நாய­கம் வீ.ஆனந்­த­சங்­க­ரி­யு­டன், வடக்கு மாகாண முத­ல­மைச்­சர் சி.வி.விக்னேஸ்வரனுக்கு ஆதரவான அணி­யைச் சேர்ந்த மூன்று மாகாணசபை உறுப்பினர்கள் நேற்று முன்­தி­னம் இரவு 11 மணி­ய­ள­வில் திடீரெனச் சந்தித்துப் பேச்சு நடத்­தி­யுள்­ள­னர். தமி­ழர் விடு­த­லைக் கூட்­ட­ணி ­யின் செய­லா­ளர் நாய­கம் வீ.ஆனந்­த­சங்­க­ரி­யின் கொழும்பு இல்­லத்­தி­லேயே இந்­தத் திடீர் சந்­திப்பு நடை­பெற்­றுள்­ள­து.வற்றிப் போனது ஜனாதிபதி நிதியம்!
[Tuesday 2017-06-27 18:00]

ஜனாதிபதி நிதியத்தின் நிதிக் கையிருப்பு குறைந்துள்ளமையால் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நெருக்கடிக்கு முகம் கொடுத்துள்ளார். ஜனாதிபதி நிதியத்தில் நிதிக் கையிருப்பு கணிசமாக குறைந்துள்ளதால், ஜனாதிபதி நிதியில் மேற்கொள்ளப்படும் நிவாரண நடவடிக்கைகளுக்கு பாதிப்பு ஏற்படவுள்ளது. ஜனாதிபதி நிதி மூலம் குறைந்த வருமானத்தில் வாழும் குடும்பங்களின் பிள்ளைகளுக்கு சத்திரசிகிச்சை செய்வதற்கு உதவிகள் வழங்கப்படுகின்றது.மானிப்பாயில் மர்ம நபர்கள் தாக்கி இளைஞர் காயம்!
[Tuesday 2017-06-27 18:00]

மானிப்பாய் பிரதேசத்தில் நேற்று இரவு இனந்தெரியாதோரால் தாக்கப்பட்டு காயமடைந்த நிலையில் இணுவிலைச் சேர்ந்த 26 வயதுடைய இளைஞரொருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மானிப்பாய் பிரதேசத்தில் கூரிய ஆயுதத்துடன் நான்கு மோட்டார் சைக்கிளில் வந்த சிலரே குறித்த நபரை தாக்கியுள்ளனர்.2016இல் குற்றச்செயல்கள் அதிகரிப்பு!
[Tuesday 2017-06-27 18:00]

2016ஆம் ஆண்டு பதிவான குற்றச்செயல்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக, சட்டம் மற்றும் ஒழுங்குகள் அமைச்சு தெரிவித்துள்ளது. 2015ஆம் ஆண்டில் 1,129,555ஆக இருந்த குற்றச்செயல்கள், 2016ஆம் ஆண்டில், 1,155,215ஆக அதிகரித்துள்ளது. 2015ஆம் ஆண்டில் பதிவான கடுமையான குற்றங்கள் 36,937, 2016இல் 40,188ஆக அதிகரித்துள்ளன என்றும் அமைச்சின் வருடாந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.காற்றில் பறந்த முன்பள்ளி கூரை! - மாணவர்கள், ஆசிரியர்கள் அருந்தப்பு Top News
[Tuesday 2017-06-27 18:00]

கிளிநொச்சியில் இன்று முற்பகல் 11.30 மணியளவில் வீசிய பலத்த காற்றினால் உதயநகரில் அமைந்துள்ள முன்பள்ளியின் கூரை தூக்கியெறியப்பட்டுள்ளது. இந்த சம்பவம் இடம்பெற்ற போது, மூன்று ஆசிரியர்களும் முப்பதிற்கும் மேற்பட்ட ஆசிரியர்களும் கட்டடத்துக்குள் இருந்தனர். இருப்பினும் எவருக்கும் எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை.ஆர்னோல்ட் புதிய கல்வி அமைச்சரா? - தமிழரசுக் கட்சி கூட்டத்தில் முடிவு
[Tuesday 2017-06-27 06:00]

வடக்கு மாகாண புதிய கல்வி, கலாச்சார, விளையாட்டுத்துறை அமைச்சராக இம்மானுவேல் ஆனோல்ட் நியமிக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.நேற்று மாலை யாழ்.நகரில் அமைந்துள்ள இலங்கைத் தமிழரசுக் கட்சி தலைமையகத்தில், இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா தலைமையில் கூட்டம்ஒன்று நடைபெற்றது.விசாரணைக் குழுவை அமைக்க முதலமைச்சருக்கு அதிகாரம் இல்லை! - போர்க்கொடி தூக்கும் அமைச்சர்கள்
[Tuesday 2017-06-27 06:00]

குற்றச்சாட்டுகள் குறித்து விசாரணைகளை முன்னெடுக்க முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் நியமிக்கும், விசாரணைக்குழுவில் முன்னிலையாகப் போவதில்லை என வடமாகாண சபை அமைச்சர்களான ப.டெனீஸ்வரன் மற்றும் பா.சத்தியலிங்கம் ஆகியோர் தெரிவித்துள்ளனர். ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியிலேயே அவர்கள் இதனை கூறியுள்ளனர்.பறக்கும் தட்டு வதந்தியால் நேற்றிரவு பரபரப்பான யாழ்ப்பாணம்! Top News
[Tuesday 2017-06-27 06:00]

பறக்கும் தட்டு பறப்பதாக நேற்றிரவு பரவிய வதந்தியால், யாழ்ப்பாணத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டதுடன், வீதியில் கூட்டம் கூட்டமாக நின்று வேடிக்கை பார்த்தனர். புளியங்கூடல் அம்மன் ஆலயத்தின் வருடாந்த மகோற்சவத்தில் நேற்றிரவு இசை நிகழ்ச்சி நடைபெற்றது. இதன்போது பயன்படுத்திய பெரிய மின் விளக்குகள் வானை நோக்கி செலுத்திய ஒளி, திரண்ட முகில் கூட்டங்கள் மீது பட்டு அவை பாரிய ஒளிவட்டங்களாக தென்பட்டன.60 ஆண்டுகளுக்குப் போதுமான எண்ணெய் வளம் மன்னார் கடல் படுக்கையில்!
[Tuesday 2017-06-27 06:00]

மன்னார் எண்ணெய்ப் படிவுப் படுக்கையில், 5 பில்லியன் கன அடி எண்ணெய்யும் 9 டிரிலியன் கன அடி இயற்கை வாயும் உள்ளமை கண்டறியப்பட்டுள்ளதாக, நாடாளுமன்றத்தில், சமர்ப்பிக்கப்பட்ட பொதுக் கணக்குகள் பற்றிய குழுவின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.தேவாலயங்கள் மீதான தாக்குதல்கள் - அமெரிக்கத் தூதுவர் ஆலோசனை!
[Tuesday 2017-06-27 06:00]

இலங்கையில் அண்மையில் நடந்த தேவாலயங்கள் மீதான தாக்குதல்கள் குறித்து அமெரிக்க தூதுவருக்கும் கிறிஸ்தவ குழுக்களுக்கும் இடையில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது. அமெரிக்கத் தூதுவர் அதுல் கேசப் மற்றும் Christian Evangelical Allianc அமைப்பின் பிரதிநிதிகளுக்கு இடையில் இந்தப் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது.நிறைவேற்று அதிகார ஜனாதிபதி ஆட்சி முறையை போருக்குக் காரணம்! - ராஜித சேனாரட்ண
[Tuesday 2017-06-27 06:00]

பிரிக்கப்படாத நாட்டுக்குள் அதிகாரங்களைப் பகிர சிங்களவர்களும் தமிழர்களும் இணங்கியுள்ளனர். இவ்வாறான பின்னணியில் முன்னெடுக்கப்படும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு செயற்பாடுகளை அதிகாரத்துக்கு வரவேண்டுமென்ற பேராசையில் ஒன்றிணைந்த எதிர்க்கட்சியினர் சீரழித்து வருவதாக அமைச்சர் ராஜித சேனாரட்ன குற்றஞ்சாட்டினார்.லண்டனில் நிகழ்ந்த ஐந்து தமிழர்களின் மரணத்தில் சந்தேகம் - வழக்கு நேற்று ஆரம்பம்! Top News
[Tuesday 2017-06-27 06:00]

கடந்த வருடம் பிரித்தானியாலவில், கடலில் மூழ்கி ஐந்து இலங்கையர் மரணமான சம்பவம் தொடர்பில் சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது. இது குறித்து தீவிர விசாரணைகள் தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.


SELVI-HOMES-09-02-17
Mahesan-Remax-169515-Seithy
Easankulasekaram-Remax-300716
Tharsi-home-15-10-2016
Elankeeran-debt-solution-25-06-2016
<b> 10-06-2017 அன்று கனடா - ரொரன்டோவில்          இராகாலயா நுண்கலைக்கூடம் வழங்கிய கானமாருதம் 2017 நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள்-குணா
<b> 03-06-2017 அன்று கனடா - ரொரன்டோவில் நடைபெற்ற இதயராகங்கள் இசை நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள்-குணா
<b>14-05-2017 அன்று கனடா - ரொரன்டோவில் நடைபெற்ற தாயின்மடியில் நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா