Untitled Document
January 17, 2018 [GMT]
  • Welcome
  • Welcome
ரஜினி இந்த மண்ணை ஆள வேண்டும் என்று நினைப்பதை நாங்கள் விரும்பவில்லை: - சீமான்
[Friday 2017-05-19 14:00]

நடிகர் ரஜினிகாந்த் தலைவராக இருந்து மக்களுக்கு சேவை செய்யட்டும், முதல்வராக இருந்து ஆள வேண்டும் என நினைக்கக்கூடாது என சீமான் கூறியுள்ளார்.ரசிகர்கள் முன்னிலையில் இன்று பேசிய ரஜினி, அரசியலில் எதிர்ப்புதான் மூலதனம், தமிழகத்தில் அரசியல் நிலவரம் சரியாக இல்லை, நிர்வாக அமைப்பு சீர்கெட்டுப்போய் இருக்கிறது எனச் சாடினார்.
அவருடைய பேச்சில் ஸ்டாலின், சீமான், அன்புமணி, திருமாவளவன் உள்ளிட்டவர்களைப் பாராட்டினார்.

நடிகர் ரஜினிகாந்த் தலைவராக இருந்து மக்களுக்கு சேவை செய்யட்டும், முதல்வராக இருந்து ஆள வேண்டும் என நினைக்கக்கூடாது என சீமான் கூறியுள்ளார்.ரசிகர்கள் முன்னிலையில் இன்று பேசிய ரஜினி, அரசியலில் எதிர்ப்புதான் மூலதனம், தமிழகத்தில் அரசியல் நிலவரம் சரியாக இல்லை, நிர்வாக அமைப்பு சீர்கெட்டுப்போய் இருக்கிறது எனச் சாடினார். அவருடைய பேச்சில் ஸ்டாலின், சீமான், அன்புமணி, திருமாவளவன் உள்ளிட்டவர்களைப் பாராட்டினார்.

  

இதுகுறித்து நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியதாவது, ரஜினி எவ்வளவு காலம் வேண்டுமானாலும் நடிக்கட்டும், எவ்வளவு ஆயிரம் கோடிகளையும் சம்பாதிக்கட்டும், இப்போதும் ரஜினிகாந்தை மதிக்கிறோம்.அதைவிடுத்து, எங்களுக்கு முதல்வராக இருந்து ஆள வேண்டும் என்று நீங்கள் நினைக்கக் கூடாது. எங்கள் நாட்டை நாங்கள்தான் ஆள வேண்டும்.ரஜினியைப் பொறுத்தவரையில், அவர் கர்நாடகாவைச் சேர்ந்தவர். இந்த மண்ணில் அவர் கரைந்து வாழ்கின்றவர் என்பதை ஏற்றுக் கொள்கிறோம். ஆனால், அவர் இந்த மண்ணை ஆள வேண்டும் என்று நினைப்பதை நாங்கள் விரும்பவில்லை.ஜல்லிக்கட்டு, கச்சத்தீவு, காவிரி விவகாரம் போன்றவற்றில் அவருடைய நிலைப்பாடு என்ன? அரசியலுக்கு அவர் வர வேண்டிய தேவை இல்லை.அவர் மிகுந்த நேர்மையாளர் என்கிறார்கள், மிகத் தவறான கருத்து இது, இதுவரையில் நடித்த படங்களுக்கு நேர்மையான முறையில்தான் அவர் சம்பளம் வாங்கினாரா? என சீமான் கேள்வி எழுப்பியுள்ளார்.

  
   Bookmark and Share Seithy.comவீரத்தின் விளைநிலமாக திகழ்ந்த தமிழகம் நோய்களின் கூடாரமாக மாறிவிடும்: - அன்புமணி
[Wednesday 2018-01-17 07:00]

''தமிழகத்தில் 35 லட்சம் பேர் குட்கா உள்ளிட்ட புகையிலைப் பொருட்களுக்கு அடிமையாகியுள்ளனர். இவர்களில் கிட்டத்தட்ட 50 விழுக்காட்டினர் பள்ளி, கல்லூரி மாணவர்கள் மற்றும் அவர்களையொத்த வயதினர் என ஆய்வுகளில் தெரியவந்துள்ளது'' என்று பா.ம.க இளைஞரணித் தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.மாசி 21-ம் திகதி கட்சி பெயர் அறிவிப்பு: - கமல்ஹாசன் அதிரடி
[Wednesday 2018-01-17 07:00]

பிப்ரவரி 21-ம் தேதி கட்சி பெயர் அறிவிப்பு..! கமல்ஹாசன் அதிரடி கார்த்திக்.சி பிப்ரவரி 21-ம் தேதி கட்சியின் பெயரை அறிவித்து தனது அரசியல் பயணத்தைத் தொடங்க இருப்பதாக நடிகர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். நடிகர் கமல்ஹாசன், அரசியல் கட்சி தொடங்கவுள்ளதாக முன்னரே தெரிவித்திருந்தார். தற்போது, இதுகுறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 'என்னை வளர்த்தெடுத்த என் சமூகத்துக்கு நிறைய நன்றி சொல்லியிருக்கிறேன். சொல்லில் சொன்ன நன்றியைத் தாண்டிய கடமைகள் நிறைய இருக்கின்றன. அக்கடமைகளின் தொடக்கமாய் எம் மக்களை நேரில் சந்திக்கும் பயணத்தை நான் பிறந்த ராமநாதபுரத்திலிருந்து வருகிற பிப்ரவரி மாதம் 21-ம் தேதி தொடங்கஇருக்கிறேன்.தை அமாவாசையை முன்னிட்டு ஏற்றப்பட்ட 10,008 தீபங்கள்!
[Wednesday 2018-01-17 07:00]

கோவில்பட்டி, ஸ்ரீ செண்பகவல்லியம்மன் உடனுறை பூவனநாத சுவாமி திருக்கோவிலில் தை அமாவாசையை முன்னிட்டு 10,008 விளக்கு பூஜை நடைபெற்றது. இதில் வண்ணக் கோலங்களில் சுவாமிகளின் திருவுருவம் வரையபட்டு விளக்கு ஏற்றப்பட்டது பக்தர்கள் அனைவரையும் கவர்ந்தது.காளைகள் கொம்புகளால் குத்தியதில் இருவர் உயிரிழப்பு: - மஞ்சுவிரட்டில் நடந்த சோகம்
[Tuesday 2018-01-16 15:00]

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகிலுள்ள சிராவயல் கிராமத்தில், மஞ்சுவிரட்டு ஒரு பக்கமும் ஜல்லிக்கட்டு இன்னொரு பக்கமும் நடைபெற்றுவருகிறது. கட்டுப்பாடு இல்லாத விளையாட்டாக, பாதுகாப்பு இல்லாமல் நடைபெற்றுவருவது, பொதுமக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியிருக்கிறது.புனித நீராட கடலுக்கு சென்ற 5 மாணவர்களுக்கு நடந்த சோகம்!
[Tuesday 2018-01-16 15:00]

நாகை மாவட்டம், வேதாரண்யம் கடலில் மூழ்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 5 ஆக உயர்ந்துள்ளது. கடலில் குளித்த பரத், பிரவீன் குமார், யுகேந்திரன், கனிஷ்கர் ராஜாமணி உள்ளிட்டோர் நீரில் மூழ்கி உயிரிழந்தனர். மீட்கப்பட்டவர்கள், மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர்.காதல் திருமணம் செய்பவர்களை யாரும் தடுக்கக் கூடாது: - உச்ச நீதிமன்றம் சாட்டையடி தீர்ப்பு
[Tuesday 2018-01-16 15:00]

'காதல் திருமணம் செய்பவர்களை யாரும் தடுக்கக் கூடாது' என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான மூன்று பேர்கொண்ட அமர்வு, வடமாநிலங்களில் அதிகரித்துவரும் கட்டப்பஞ்சாயத்துகள் தொடர்பான வழக்கை இன்று விசாரித்தன.ஒவ்வொரு நிமிடமும் பரபரப்பு...உயிரைப் பிடிக்கும் பரபர பயணம்: - பிறரின் உயிர்காக்க பறக்கும் தேவதைகள்
[Tuesday 2018-01-16 09:00]

12 மணி நேரப் பணி... ஒவ்வொரு நிமிடமும் பரபரப்பு... உயிரைப் பிடிக்கும் பரபர பயணம். ஆனால் குறைந்த சம்பளம். பணி நிரந்தரம் இல்லை. பாதுகாப்பு இல்லை. இயற்கை உபாதையைக் கழிப்பதற்கும் நேரமோ இடமோ இல்லாத ஒரு பணிச்சூழல். அப்பேர்பட்ட பணியில் இரவும் பகலுமாக உழைக்கும் பெண்கள்... உங்களில் சிலர், இவர்களை நேரடியாகச் சந்தித்திருக்கலாம். இல்லையென்றால், இவர்கள் செல்லும் வாகனம் தினம்தினம் நம்மைக் கடந்துசெல்வதைப் பார்த்திருப்போம். ரத்தமும் சதையுமே இவர்கள் தினமும் சந்திப்பது. ஆம், ஆம்புலன்ஸில் பிறரின் உயிர்காக்க பறக்கும் தேவதைகள்.உலகப் பொதுமறையான திருக்குறளை தேசிய நூலாக அறிவிக்க வேண்டும்: - வலியுறுத்தும் தமிழ் அமைப்புகள்
[Tuesday 2018-01-16 09:00]

உலகப் பொதுமறையான திருக்குறளை, தேசிய நூலாக மத்திய அரசு அறிவிக்க வேண்டும் என்று திருவள்ளுவர் தினத்தில் தமிழ் அமைப்புகள் கோரிக்கை விடுத்துள்ளன. நெல்லையில், திருவள்ளுவர் சிலைக்கு அரசியல் கட்சியினர், தமிழ் அமைப்பினர் மாலை அணிவித்து மரியாதைசெலுத்தினர்.தஞ்சை பெருங்கோயிலில் ஆயிரம் கிலோ காய்கறிகள் மற்றும் பழங்களால் நந்தி சிலைக்கு அலங்காரம்!
[Tuesday 2018-01-16 09:00]

மாட்டுப் பொங்கலை முன்னிட்டு தஞ்சாவூர் பெரிய கோவிலில் உள்ள நந்திக்கு காய்கறிகள் மற்றும் பழங்களைக் கொண்டு அலங்காரம் செய்யப்பட்டது. இது வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளை வெகுவாக கவர்ந்தது. ஆண்டு தோறும் மாட்டுப் பொங்கல் அன்று காய்கறிகள் மற்றும் பழங்களால் நந்திக்கு அலங்காரம் செய்யப்படுவது வழக்கம். இதனைக் கண்டு களிக்கவும் தரிசிக்கவும் தஞ்சை மற்றும் இதன் சுற்றுவட்டார ஊர்களில் இருந்து பல்லாயிரக்கணக்கான மக்கள் தஞ்சை பெரிய கோவிலுக்கு வருகை புரிவார்கள்.ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் தற்கொலை: - போகி அன்று நடந்த சோகம்
[Monday 2018-01-15 18:00]

திருமணமான சில நாள்களிலேயே, பெண் ஒருவர் பெற்றோர், தங்கையுடன் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்ட சோகச் சம்பவம், நாகை மாவட்டத்தில் நிகழ்ந்துள்ளது.நாகை மாவட்டம், தரங்கம்பாடி அருகே உள்ள ஆக்கூர் மெயின் ரோடு பகுதியைச் சேர்ந்தவர், கண்ணன் (55). இவர், தனது வீட்டின் கீழ் பகுதியில் ஒரு மளிகைக்கடை நடத்திவந்துள்ளார். வீட்டின் மேல் பகுதியில் குடும்பத்துடன் வசித்துவந்தார். இவரின் மனைவி குணசுந்தரி (50). இவர்களுக்கு சரண்யா (22), சுகன்யா (20) என்ற இரு மகள்கள். மூத்த மகள் சரண்யாவுக்கு கடந்த 6 மாதங்களுக்கு முன்பு கரூர் மாவட்டத்தைச் சேர்ந்த விக்னேஷ்வரர் என்பவருடன் திருமணம் நடைபெற்றது.வைரலாகும் விஜயகாந்த்தின் பொங்கல் கொண்டாட்ட புகைப்படங்கள்!
[Monday 2018-01-15 18:00]

தே.மு.தி.க தலைவர் விஜயகாந்த் பொங்கல் கொண்டாடிய புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகிவருகிறது. பச்சை சட்டை, ஜீன்ஸ் பேன்ட் அணிந்து உற்சாகம் பொங்க மாடுகளுடன் கொஞ்சி விளையாடுகிறார் விஜயகாந்த். பொங்கல் கொண்டாட்ட புகைப்படங்கள் விஜயகாந்த்தின் அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்தில் பகிரப்பட்டுள்ளது. ’எங்கள் வீட்டு லட்சுமி, அட்சயா , அர்த்தநாரி, மீனாட்சிக்கு சர்க்கரைப்பொங்கல் ஊட்டி மாட்டுப்பொங்கல் கொண்டாடினோம்’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.காரை வரி ஏய்ப்புசெய்த வழக்கு: - போலீஸில் சரணடைந்தார் நடிகை அமலா பால்!
[Monday 2018-01-15 18:00]

தனது சொகுசு காரை புதுச்சேரியில் பதிவுசெய்து வரி ஏய்ப்புசெய்த வழக்கில், நடிகை அமலா பால் கேரள க்ரைம் பிராஞ்ச் முன்பு சரணடைந்தார்.தமிழ், மலையாள மொழிகளில் முன்னணி நடிகையாக இருப்பவர் அமலா பால். இவர், ஒரு கோடி மதிப்புள்ள சொகுசு கார் ஒன்றை வாங்கியுள்ளார். இந்தக் காரை கேரளாவில் பதிவுசெய்ய ரூ.20 லட்சம் வரி கட்ட வேண்டும்.கேரளாவில் சகோதரரின் மரணத்துக்கு நீதி கேட்டு 764 நாட்களாக போராட்டம்!
[Monday 2018-01-15 18:00]

கேரளாவில் சகோதரர் மரணத்துக்கு நீதி கேட்டு இளைஞர் ஒருவர் 764 நாட்களாக தலைமை செயலகம் முன்பு போராட்டம் நடத்தி வருகிறார்.கடந்த 2014ம் ஆண்டு மே 19ம் திகதி ஸ்ரீஜித்தின் சகோதரர் ஸ்ரீஜீவ், மொபைல் போனை திருடு செய்வதாக கூறி பாரசால பொலிசார் கைது செய்தனர்.இந்நிலையில் சிறையில் விஷம் அருந்தியதாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஸ்ரீஜீவ், 21ம் திகதியே இறந்துபோனார்.மாணவியை கொடூரமாக கற்பழித்து கொன்ற கும்பல்!
[Monday 2018-01-15 08:00]

டெல்லியில் சில ஆண்டுகளுக்கு முன்பு நிரூபயா என்ற மாணவியை பஸ்சில் கடத்தி சென்று ஒரு கும்பல் கொடூரமாக கற்பழித்து கொலை செய்தது. இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.இதேபோன்ற சம்பவம் ஒன்று இப்போது அரியானா மாநிலம் குருஷேத்திரத்தில் நடந்துள்ளது. அங்குள்ள ஜன்சா என்ற கிராமத்தை சேர்ந்த தையல் தொழிலாளி மகள் ஒருவர் 10-ம் வகுப்பு படித்து வந்தார். இந்த தொழிலாளிக்கு மொத்தம் 3 குழந்தைகள். அதில் மூத்தவர் தான் இந்த மாணவி.புதிய மதம்...வித்தியாசமான உடை...சில ஆச்சரியங்கள்: - இது மெய்வழிச்சாலை கிராமத்தின் கதை
[Monday 2018-01-15 08:00]

புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் அருகே உள்ளது 'மெய்வழிச்சாலை' என்ற கிராமம். இங்கு வசிக்கும் மக்கள் ஒரு புதிய மதத்தின் அடையாளத்துடனும் வித்தியாசமான உடை அலங்காரத்துடனும் பழக்க வழக்கங்களுடனும் வலம் வருகிறார்கள். ஆண்கள் எல்லோரும் தங்களது பெயருக்கு முன்னால் 'மெய்வழிச்சாலை'என்று சொந்த கிராமத்தின் பெயரை கட்டாயமாகப் போட்டுக்கொள்கிறார்கள். உலகின் பல பகுதிகளிலும் வசிக்கும் இவர்கள் இந்த பொங்கல் பண்டிகை நாளில் மட்டும் ஊருக்கு வந்து ஒன்று கூடி,பொதுப் பொங்கல் வைத்து ஒன்றாக உண்கிறார்கள். இன்னும் பல ஆச்சரியங்களைக் கொண்ட தங்களது சமூகம் பற்றி 'மெய்வழிச்சாலை' மாணிக்கம் என்பவர் விவரித்தார்.சபரிமலையில் மகரஜோதி தரிசனம்: - பக்தர்களின் சரண கோஷத்தால் அதிர்ந்தது சபரிமலை
[Monday 2018-01-15 08:00]

சபரிமலையில் லட்சக்கணக்கான பக்தர்கள் மகர ஜோதி தரிசனம் செய்தனர்.சபரி மலை ஐயப்பன் கோயிலில் நடைபெறும் முக்கிய நிகழ்வுகளில் ஒன்று மகர ஜோதி தரிசனம். அதற்காகவே அன்றைய தினம் லட்சக்கணக்கான ஐயப்ப பக்தர்கள் விரதமிருந்து கோயிலுக்கு வருவார்கள். இன்று மகரஜோதி தரிசன தினமாகும்.படகு விபத்தில் 4 மாணவர்கள் பலி
[Sunday 2018-01-14 22:00]
இந்தியாவின் மஹாராஷ்டிரா மாநிலத்தில் படகொன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 4 மாணவர்கள் பலியாகினர். மகாராஷ்டிர மாநிலத்தில் உள்ள பர்னகா என்ற கடற்கரையிலே இந்த அனர்த்தம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுகிறது.


யானையுடன் விளையாடுவதும் பாம்புக்கு முத்தம் கொடுப்பதும் ஆத்மதிருப்தி தரும்: - ரியல் துருவன்
[Sunday 2018-01-14 17:00]

ஒடிசா மாநிலம் மாயூர்பஞ்ச் மாவட்டம் உதானி நுவாகோன் கிராமத்தைச் சேர்ந்தவர் கிருஷ்ணா சந்திர கோச்சாயத். இவரை பாம்புகளின் நேசர் என்றே அந்தப் பகுதி மக்கள் அழைக்கின்றனர். ஏனெனில், இதுவரை 5,000-க்கும் மேற்பட்ட பாம்புகளைப் பிடித்து இவர் பத்திரமாக காட்டுக்குள் விட்டுள்ளார். சுற்றுவட்டாரப் பகுதியைச் சேர்ந்தவர்கள் பாம்பை கண்டாலே இவரைத் தான் உடனே தொடர்பு கொள்கிறார்களாம்.உலகமெங்கும் தமிழர் திருநாள் கொண்டாட்டம்: -புதுப்பானையில் பொங்கல் இட்டு மக்கள் உற்சாகம்!
[Sunday 2018-01-14 16:00]

இயற்கை நன்றி செலுத்தும் உயர்வான விழாவான உழவர் திருநாள் தை முதல் நாளில் கொண்டாடுவது தமிழர்களின் மரபு ஆகும். அப்படிப்பட்ட பொங்கல் விழாவை முன்னிட்டு இன்று தரணி எங்கும் தமிழக மக்கள் பொங்கல் விழாவை கொண்டாடி வருகின்றனர். அதிகாலையிலேயே எழுந்து வீட்டின் முன் வண்ண கோலங்கள் தீட்டி புதுப்பானையில் புத்தரிசியிட்டு மஞ்சள், கரும்பு உள்ளிட்டவைகள் வைத்து பொங்கலோ பொங்கல் என உற்சாக குரல் எழுப்பி வழிபட்டனர். சென்னை, மதுரை, கோவை உட்பட தமிழகம் முழுவதும் மக்கள் அதிகாலையில் பொங்கல் வைத்து சூரியனை வழிபட தொடங்கினர்.என் கட்டுரை யார் மனதையும் புண்படுத்தாது: - வைரமுத்து விளக்கம்
[Sunday 2018-01-14 16:00]

ஶ்ரீவில்லிபுத்தூரில் ஆண்டாள் குறித்து நடந்த கருத்தரங்கத்தில் வைரமுத்து கலந்துகொண்டார். அப்போது, ஆண்டாள் வாழ்ந்த காலம், தெய்வம் மற்றும் கடவுள்களுக்கிடையே உள்ள வேறுபாடு பற்றி அவர் தெரிவித்த கருத்துகள் சர்ச்சையை ஏற்படுத்தின. அவருடைய கருத்துக்கு பா.ஜ.க தேசியச் செயலாளர் ஹெச்.ராஜா கடுமையான எதிர்ப்புகளைத் தெரிவித்தார். இதற்குப் பலத்த எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இந்நிலையில், இந்த விஷயம் குறித்து அறிக்கை மூலம் விளக்கம் அளித்துள்ளார் வைரமுத்து.


Tharsi-home-15-10-2016
SELVI-HOMES-09-02-17
Mahesan-Remax-169515-Seithy
Easankulasekaram-Remax-300716
<P>
 <b> 13-08-2017 அன்று ரொரன்டோவில் நடைபெற்ற இசை மாலைப் பொழுது - 2017 நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள்-குணா
</p>
<b>  கனடா-ரொரன்டோவில்  ஜூலை 29ம் 30ம்தி கதிகளில் நடைபெற்ற World Tamil Badminton Federation 5th annual tournament நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள்-குணா
<b>  கனடா-ரொரன்டோவில்  ஜூலை 7ம் 8ம் 9ம்தி கதிகளில் நடைபெற்ற குதூகலம் 2017 நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள்-குணா