Untitled Document
July 26, 2017 [GMT]
  • Welcome
  • Welcome
நாட்டில் மீண்டும் ஒரு யுத்தம் இடம் பெறக்கூடாது! - மன்னாரில் ரணில்
[Friday 2017-05-19 19:00]

மன்னார் மாவட்டத்துக்கு இன்று ஒரு விசேட தினமாகும். யுத்தத்தின் போது இராணுவ வீரர்கள் மற்றும் பொதுமக்கள் எனப் பல ஆயிரக்கணக்கான உயிர்கள் பறிபோன ஒரு நாள் என்பதனை நாங்கள் நினைவுகூற வேண்டும். இரு தரப்பில் இருந்தும் யுத்தத்தில் போரிட்டவர்கள், உயிரிழந்தவர்கள், பாதிக்கப்பட்டவர்கள் அனைவரும் வெளிநாட்டவர்கள் அல்லர். அவர்கள் அனைவரும் இலங்கைப் பிரஜைகளும் அப்பாவிப் பொதுமக்களுமே ஆவர் என, பிரதமர் ரணில் விக்கிமசிங்க தெரிவித்தார்.

மன்னார் மாவட்டத்துக்கு இன்று ஒரு விசேட தினமாகும். யுத்தத்தின் போது இராணுவ வீரர்கள் மற்றும் பொதுமக்கள் எனப் பல ஆயிரக்கணக்கான உயிர்கள் பறிபோன ஒரு நாள் என்பதனை நாங்கள் நினைவுகூற வேண்டும். இரு தரப்பில் இருந்தும் யுத்தத்தில் போரிட்டவர்கள், உயிரிழந்தவர்கள், பாதிக்கப்பட்டவர்கள் அனைவரும் வெளிநாட்டவர்கள் அல்லர். அவர்கள் அனைவரும் இலங்கைப் பிரஜைகளும் அப்பாவிப் பொதுமக்களுமே ஆவர் என, பிரதமர் ரணில் விக்கிமசிங்க தெரிவித்தார்.

  

மன்னாரில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட மன்னார் மாவட்டச் செயலகக் கட்டடத் தொகுதியை, இன்று திறந்து வைத்து உரையாற்றும் போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அங்கு அவர் தொடர்ந்து கூறியதாவது,

“மன்னார் மாவட்டத்தின் அபிவிருத்திகள் மற்றும் குறைபாடுகள் தொடர்பாக, நாடாளுமன்ற குழுக்களின் பிரதி அவைத்தலைவர் செல்வம் அடைக்கலநாதன், நாடாளுமன்ற உறுப்பினர்களான சார்ள்ஸ் நிர்மலநாதன், கே.கே.மஸ்தான் ஆகியோர், நாடாளுமன்றத்தில் என்னை சந்திக்கின்றபோது, தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். மாவட்டத்தின் அபிவிருத்திக்கான நிதி ஒதுக்கீடுகளைச் செய்வதற்கும் மாகாண சபையூடாக நிதித் திட்டங்களை வழங்குவதற்குமான அவகாசத்தை நாங்கள் வழங்கியுள்ளோம். யுத்தத்தினால் சேதமடைந்த மற்றும் யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மன்னார் மாவட்டத்தினை, பல்வேறு வகையிலும் முன்னேற்றுவதற்காக மாகாண சபை, மத்தியரசு எனப் பார்க்காது இரண்டு தரப்பக்களினூடாகவும் இணைந்து, குறித்த திட்டங்களை முன்னெடுக்கவுள்ளோம்.

இந்த நாட்டில் மீண்டும் ஒரு யுத்தம் இடம் பெறக்கூடாது. அதற்கான வழி வகைகளை நாம் மேற்கொள்ளக்கூடாது. நல்லிணக்கத்தை ஏற்படுத்த வேண்டும். அரசியல் ரீதியில் தீர்வு ஒன்றைப் பெற்றுக்கொள்ள வேண்டும். விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசங்களில் இருந்த இளைஞர், யுவதிகளுக்கு இவ்விதமான கட்டுப்பாடுகளும் விதிக்கப்படவில்லை. வேறு வழிகளும் அவர்களுக்கு தெரியவில்லை. ஆகவே, அவர்களையும் நாங்கள் இந்த சமூகத்தோடு இணைத்துக்கொண்டு, அவர்களுக்கான கௌரவத்தை வழங்க ஒத்துழைக்க வேண்டும். அதற்கு அவகாசத்தை எமக்கு வழங்க வேண்டும். அதற்காக இந்தப் பிரதேசம் அபிவிருத்தி செய்யப்பட வேண்டும்.

இந்தப் பிரதேசத்தின் அபிவிருத்திப் பணிகளை நாங்கள் பூரணப்படுத்துவது போல, யாழ்ப்பாணம், முல்லைத்தீவு, மன்னார், தம்புளை போன்ற பிரதேசங்களுக்கான பெருந்தெருக்களை நிர்மாணிப்பதற்கான வழிவகைகளை மேற்கொண்டுள்ளோம். அதேபோன்று, வீடமைப்புத் திட்டங்களையும் நிர்மாணிப்பதற்கு நாங்கள் எதிர்பார்த்திருக்கின்றோம். வடக்கு பிரதேசங்களுக்கு கைத்தொழில் முன்னெற்ற நடவடிக்கைகளுக்கு விசேட சலுகைகளை வழங்கத் தீர்மானித்துள்ளோம். அதேபோன்று, சுற்றுலா மற்றும் மீன்பிடித் துறையை விருத்திசெய்யத் தீர்மானித்துள்ளோம். ஒரு சில மாதங்களில், சுற்றுலாத் துறையை விருத்தி செய்வது தொடர்பான கலந்துரையாடல்களையும் மேற்கொள்ளவுள்ளோம்.

மேலும், யுத்தத்தினால் காணாமல் போனவர்கள் தொடர்பில் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொள்ள நாங்கள் முன்வந்துள்ளோம். இந்தச் சந்தர்ப்பத்தில், எல்லோராலும் ஏற்றுக்கொள்ளக்கூடிய யாப்பு ஒன்றை ஒழுங்குசெய்ய வேண்டும். இது தொடர்பில், வடமாகாண முதலமைச்சருடனும் எதிர்க்கட்சித் தலைவருடனும் கலந்துரையாடப்பட்டுள்ளது. மிக விரைவாக, ஒரு தீர்மானத்திற்கு வரவேண்டும் என அங்கு வலியுறுத்தப்பட்டது. ஆகவே, இவ்விடயம் தொடர்பில் ஒரு சில மாதங்களில் அடிப்படை விடயங்கள் ஆராயப்பட்டு, இறுதியாக பூரண அறிக்கை ஒன்றை வெளியிடவுள்ளோம். இந்த விடயத்தை நாங்கள் இழுத்தடித்துக்கொண்டு செல்ல முடியாது.

இனவாதம், மதவாதம் என்று கதைத்துக்கொண்டு, இந்த பிரச்சினைகளைத் தீர்க்க முடியாது. இந்த நாட்டில் பிளவை ஏற்படுத்துகின்ற விடையங்களைக் கலந்துரையாட முடியாது. நாங்கள் அனைவரும், இந்த விடயத்தில் ஒருமித்து கலந்துரையாடி முடிவுகளை எடுக்கவேண்டும். சிறந்த நல்லிணக்கம் உள்ள சமாதானமுள்ள ஒரு தீர்வையே, மக்கள் எங்களிடம் எதிர்ப்பார்க்கின்றனர். மக்களுக்கு பொறுப்புக்கூற வேண்டிய, மக்களுக்கு தீர்வைப்பெற்றுக்கொடுக்க வேண்டிய அரசாங்கம் ஒன்றை ஏற்படுத்த வேண்டும். செயற்பாடு ரீதியாக, நாடாளுமன்றம் ஒன்றை ஏற்படுத்த வேண்டும்.

மக்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வொன்றைப் பெற்றுக்கொள்ள வேண்டும் என்றே, இந்த நாட்டின் பெரும்பாலான மக்கள், மைத்திரிபால சிறிசேனவை ஜனாதிபதியாகத் தெரிவு செய்தனர். ஜனாதிபதியும் எதிர்க்கட்சித் தலைவரும், நானும், இவ்விடயங்கள் தொடர்பாக கலந்தாலோசித்திருக்கின்றோம். எனவே, யாப்பு ஒன்றையும் அறிக்கை ஒன்றையும் தயாரிப்பதற்கான சகல முயற்சிகளையும் மேற்கொண்டுள்ளோம். அவ்வாறான நிலைமை தோன்றுமாக இருந்தால், நாங்கள் இயல்பான நிலையில் எல்லா நடவடிக்கைகளையும் முன்னெடுப்போம் என்பதில் சந்தேகம் இல்லை” என்றார்.

  
   Bookmark and Share Seithy.com



தமிழீழ விடுதலைப் புலிகள் மீதான தடை நீங்கியது!
[Wednesday 2017-07-26 17:00]

பயங்கரவாத இயக்கங்கள் பட்டியலிலிருந்து விடுதலைப் புலிகள் அமைப்பின் பெயர் நீக்கப்பட்டுள்ளது. 2009-ம் ஆண்டிலிருந்து எந்தப் பயங்கரவாத செயல்களிலும் ஈடுபடாததால் விடுதலைப் புலிகள் மீதான தடையை ஐரோப்பிய யூனியன் நீதிமன்றம் நீக்கியுள்ளது.



மேரிலன்ட் மாநில ஆளுனர் பதவிக்கு களமிறங்கும் இலங்கைத் தமிழ்ப் பெண்!
[Wednesday 2017-07-26 07:00]

அமெரிக்காவின் மேரிலன்ட் மாநில ஆளுனர் தேர்தலில் இலங்கைத் தமிழ்ப் பெண்ணான 37 வயதுடைய, கிரிசாந்தி விக்னராஜா போட்டியிடவுள்ளதாக அமெரிக்க ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது. அமெரிக்காவின் முன்னாள் முதல் பெண்மணியான மிச்சேல் ஒபாமாவின், கொள்கைப் பணிப்பாளர்களில் ஒருவராக செயற்பட்ட கிரிசாந்தி விக்னராஜா, மேரிலன்ட் மாநில ஆளுனர் பதவிக்குப் போட்டியிடவுள்ளார்.



கொலன்னாவ எண்ணெய் களஞ்சியம் இராணுவத்தின் கட்டுப்பாட்டில்! - எரிபொருள் விநியோகத்தில் இறங்கியது Top News
[Wednesday 2017-07-26 07:00]

கொலன்னாவ எண்ணெய் களஞ்சிய கட்டிட தொகுதியை நள்ளிரவில் சுற்றி வளைத்த பெருமளவு இராணுவத்தினர் அதனை தமது கட்டுப்பாட்டில் கொண்டு வந்துள்ளனர். அதேவேளை, எரிபொருள் விநியோகம் அத்தியாவசிய சேவையாக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான வர்த்தமானியில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கையொப்பம் இட்டுள்ளனர். இந்த புதிய சட்டம் உடன் அமுலுக்கு வரும் வகையில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.



வெலிக்கடைப் படுகொலை - நல்லூரில் நினைவு நிகழ்வு! Top News
[Wednesday 2017-07-26 07:00]

வெலிக்கடை சிறைச்சாலைப் படுகொலையின் 34ஆம் ஆண்டு நினைவேந்தலும், தமிழ்த்தேசிய வீரர்கள் தினமும் ரெலோ அமைப்பினால் உணர்வு பூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டது. யாழ்.நல்லார் கந்தசுவாமி ஆலயத்தின் பின்னால் உள்ள தியாக தீபம் திலீபனின் நினைவுத் தூபியில் நேற்று இந்த நிகழ்வு இடம்பெற்றது.



இலங்கையில் சாதனை படைத்த தமிழ் மருத்துவர்! - ஒருவரின் காலை இன்னொருவருக்கு பொருத்தினார் Top News
[Wednesday 2017-07-26 07:00]

மூளைச்சாவு அடைந்த ஒருவரின், காலை அகற்றி காலை இழந்திருந்த மற்றொருவருக்குப் பொருத்தி இலங்கை தமிழ் மருத்துவர் ஒருவர் சாதனை படைத்துள்ளார். பிரபல சத்திர சிகிச்சை நிபுணர் யோ.அருட்செல்வன் வெற்றிகரமாக இந்த சிகிச்சையை மேற்கொண்டு சாதனை படைத்துள்ளார். இலங்கையில் முதன் முறையாக இந்த சத்திர சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.



இந்திய - இலங்கை உடன்படிக்கையே பிரபாகரனைத் தோற்கடித்தது! - நவீன் திசநாயக்க
[Wednesday 2017-07-26 07:00]

இந்திய - இலங்கை உடன்படிக்கையினால் தான், தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் தோற்கடிக்கப்பட்டார் என அமைச்சர் நவீன் திஸாநாயக்க தெரிவித்துள்ளார். ஐக்கிய தேசியக் கட்சியினால் இந்திய இலங்கை உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டதாகவும் இந்த சந்தர்ப்பத்தில் தமது தந்தை காமினி திசாநாயக்க அமைச்சராக கடமையாற்றியதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.



சிராந்தி, யோசிதவை விசாரணைக்கு அழைப்பு!
[Wednesday 2017-07-26 07:00]

பிரபல ரகர் வீரர் வசீம் தாஜூதீன் கொலை தொடர்பாக, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் மனைவி ஷிராந்தி ராஜபக்சவிடமும், அவரது மகன் யோசித ராஜபக்சவிடமும் நாளை விசாரணை நடத்தப்படவுள்ளது. இது தொடர்பான விசாரணைகளுக்காக ஷிராந்தி ராஜபக்ச மற்றும் யோசித ராஜபக்ச ஆகியோருக்கு, நாளை புலனாய்வுப் பிரிவில் முன்னிலையாகுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.



பிரதான சந்தேக நபருக்கு ஆகஸ்ட் 8 வரை விளக்கமறியல்!
[Wednesday 2017-07-26 07:00]

நல்லூர் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள பிரதான சந்தேகநபரை எதிர்வரும் 8 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார் யாழ். நீதிமன்ற நீதிவான் சி.சதீஸ்தரன். சந்தேக நபர் நேற்று நீதிவானின் இல்லத்துக்குப் பொலிஸாரால் கொண்டு செல்லப்பட்டு, முற்படுத்தப்பட்டார். அதன்போதே நீதிவான் இவ்வாறு உத்தரவிட்டார்.



காணாமல்போயுள்ள 5101 இராணுவத்தினர் மீதும் கவனம்!
[Wednesday 2017-07-26 07:00]

காணாமல்போயுள்ள 5 ஆயிரத்து 101 இராணுவத்தினர் தொடர்பிலும் காணாமல்போனோர் தொடர்பான பணியகம் கவனம் செலுத்தும் என அமைச்சர் எஸ்.பி. திஸாநாயக்க தெரிவித்துள்ளார். “சர்வதேச ரீதியில் செயற்படும் பல மனித உரிமை அமைப்புகள் யுத்தம் முடிவுக்கு கொண்டு வரப்பட்டதன் பின்னர் காணாமல்போனோர் தொடர்பில் கேள்வி எழுப்பி வருகின்றன. இந்த நிலையில், இராணுவத்தின் கௌரவத்தை பாதுகாக்கும் நோக்கில் காணாமல்போனோர் தொடர்பான பணியகம் உருவாக்கப்படவுள்ளது.



மைத்திரியும்- ரணிலும் இணைந்து வெட்டிய கேக்! Top News
[Wednesday 2017-07-26 07:00]

பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் 40 ஆண்டுகால அரசியல்வாழ்வை முன்னிட்டு நேற்று ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் கேக் வெட்டப்பட்டது. ஜனாதிபதி, பிரதமர் ஆகியோர் இணைந்து கேக் வெட்டினர். அமைச்சர்கள் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.



மஹிந்த அரசின் கடன்களை அடைக்க 3.2 ட்ரில்லியன் ரூபா தேவை!
[Wednesday 2017-07-26 07:00]

மஹிந்த ராஜபக்‌ஷ அரசாங்கம் பெற்றுக்கொண்ட கடன்களை மீளச் செலுத்த 2019ஆம் ஆண்டு 3.2 ட்ரில்லியன் ரூபா தேவைப்படுவதாக அமைச்சர் மங்கள சமரவீர பாராளுமன்றத்தில் தெரிவித்தார். வெளிநாட்டுச் செலாவணி சட்டமூலம் தொடர்பான இரண்டாவது வாசிப்பு மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அமைச்சர் இதனைக் கூறினார்.



வடக்கு,கிழக்கில் கண்டனப் பேரணிகள், ஆர்ப்பாட்டங்கள்! Top News
[Tuesday 2017-07-25 20:00]

யாழ். மேல் நீதிமன்ற நீதிபதி மா. இளஞ்செழியனை இலக்கு வைத்து கடந்த சனிக்கிழமை நல்லூரில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டைக் கண்டித்து, வடக்கு - கிழக்கு பகுதிகளில் இன்று ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன. வடக்கு, கிழக்கு ஒருங்கிணைப்புக் குழுவினரின் ஏற்பாட்டில் இந்தப் போராட்டங்கள் எட்டு மாவட்டங்களிலும் முன்னெடுக்கப்பட்டிருந்தன.



தமிழீழ இசைக் கல்லூரி பொறுப்பாளர் கண்ணதாசனுக்கு ஆயுள் தண்டனை! -வவுனியா நீதிமன்றம் தீர்ப்பு
[Tuesday 2017-07-25 20:00]

விடுதலைப் புலிகள் அமைப்புக்காக, கட்டாய ஆள் சேர்ப்பில் ஈடுபட்டார் என்று குற்றம்சாட்டப்பட்ட, தமிழீழ இசைக் கல்லூரி பொறுப்பாளர் கண்ணதாசனுக்கு, வவுனியா மேல் நீதிமன்றம் பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் ஆயுள் தண்டனை வழங்கி, தீர்ப்பளித்துள்ளது.



சப் இன்ஸ்பெக்டர் ஹேமசந்திரவின் உடலுக்கு முதலமைச்சர் விக்கி அஞ்சலி! Top News
[Tuesday 2017-07-25 20:00]

யாழ். மேல் நீதிமன்ற நீதிபதி மா. இளஞ்செழியனை இலக்கு வைத்து நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் உயிரிழந்த சப் இன்ஸ்பெக்டர் ஹேமசந்திரவின் உடலுக்கு வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் இன்று அஞ்சலி செலுத்தினார். சிலாபத்திலுள்ள அவரது வீட்டுக்குச் சென்ற முதலமைச்சர் ஹேமசந்திரவின் மனைவி மற்றும் பிள்ளைகளுக்கும் ஆறுதல் கூறினார்.



இளஞ்செழியனை இலக்கு வைத்த தாக்குதலுக்கு கிளிநொச்சி சந்தையை மூடி கண்டனம்! Top News
[Tuesday 2017-07-25 20:00]

யாழ். மேல் நீதிமன்ற நீதிபதி மா. இளஞ்செழியனை இலக்கு வைத்து, நல்லூரில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தை கண்டித்து இன்று கிளிநொச்சி பொதுச் சந்தை பூட்டப்பட்டு கண்டனம் தெரிவிக்கப்பட்டது. அத்துடன், கிளிநொச்சி நகரில், ஏ9 வீதியில் உள்ள வியாபார நிலையங்களிலும் கறுப்புக் கொடிகள் பறக்க விடப்பட்டு எதிர்ப்பு வெளிப்பபடுத்தப்பட்டது.



பிரதி பொலிஸ்மா அதிபருக்கு விளக்கமறியல் நீடிப்பு! - விஜயகலாவின் வீடியோ குறித்தும் விசாரிக்க உத்தரவு
[Tuesday 2017-07-25 20:00]

புங்குடுதீவு மாணவி வித்தியா கொலை வழக்கில், பிரதான சந்தேக நபரான சுவிஸ் குமாரை தப்பிக்க வைத்தார் என்ற சந்தேகத்தில் கைது செய்யப்பட்டுள்ள, மூத்த பிரதிப் பொலிஸ்மா அதிபர் லலித் ஜெயசிங்கவின் விளக்கமறியல் எதிர்வரும் 8ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கு ஊர்காவற்துறை நீதிமன்றில் இன்று எடுத்துக் கொள்ளப்பட்டது.



இலங்கைக்கு அழுத்தங்கள் தொடரும்! -பிரித்தானிய எம்.பி
[Tuesday 2017-07-25 20:00]

மனித உரிமை விவகாரங்கள் தொடர்பாக இலங்கைக்குத் தொடர்ந்தும் அழுத்தம் கொடுக்கப்படும் என பிரித்தானியாவின், தமிழர்களுக்கான அனைத்து பாராளுமன்ற குழுவின் தலைவர் போல் ஸ்கலி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக சர்வதேச ரீதியில் அழுத்தங்கள் பிரயோகிக்கப்படும். இலங்கை வாழ் தமிழ் சமூகத்திற்கு ஆதரவளிக்கப்படும்.



மலேரியா நோயைக் காவும் நுளம்புகள் இந்தியாவில் இருந்து பரவும் ஆபத்து!
[Tuesday 2017-07-25 20:00]

மலேரியா நோயைக் காவும் நுளம்புகள் இந்தியாவிலிருந்து இலங்கைக்கு பரவுவதற்கான ஆபத்து உள்ளதாக வடக்கு மாகாண சுகாதார அமைச்சர் ப.சத்தியலிங்கம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “2016ம் ஆண்டு செப்டெம்பர் மாதம் மலேரியா அற்ற நாடாக உலக சுகாதார நிறுவனத்தினால் இலங்கைக்கு சான்றிதழ் வழங்கப்பட்டிருந்தது. இதனால் இலங்கை பெருமை கொண்டிருந்தது.



வவுனியாவில் ரயில் மோதி சாரதி பலி!
[Tuesday 2017-07-25 20:00]

வவுனியா- குஞ்சுக்குளம் பகுதியில் இன்று ரயில் மோதி ஒருவர் உயிரிழந்தார். வவுனியா தனியார் பேரூந்து சாரதியும், வவுனியா மாவட்ட தனியார் பேரூந்து சாரதி – நடத்துனர் சங்கத்தின் செயலாளருமான 32 வயதுடைய மரியசெல்வம் மயூரன் என்ற இளைஞனே மரணமானவராவார்.



அம்பாந்தோட்டை துறைமுக ஒப்பந்தம் – அமைச்சரவை பச்சைக்கொடி!
[Tuesday 2017-07-25 20:00]

அம்பாந்தோட்டை துறைமுகத்தை சீன நிறுவனத்துக்கு குத்தகைக்கு வழங்குவது தொடர்பான திருத்தப்பட்ட ஒப்பந்தத்துக்கு, அமைச்சரவை இன்று அங்கீகாரம் வழங்கியுள்ளது. பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவினால் சமர்ப்பிக்கப்பட்ட அமைச்சரவைப் பத்திரத்துக்கே இந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதையடுத்து விரைவில் சீன நிறுவனத்துடன் ஒப்பந்தம் கையெழுத்திடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


Tharsi-home-15-10-2016
SELVI-HOMES-09-02-17
Mahesan-Remax-169515-Seithy
Elankeeran-debt-solution-25-06-2016
Easankulasekaram-Remax-300716
<b> 30-06-2017 அன்று கனடா-ரொரன்டோவில் நடைபெற்ற மின்னல் 2017 நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள்-குணா
<b> 24-06-2017 அன்று கனடா-ரொரன்டோவில் பரதமைல் நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள்-குணா
<b> 10-06-2017 அன்று கனடா - ரொரன்டோவில்          இராகாலயா நுண்கலைக்கூடம் வழங்கிய கானமாருதம் 2017 நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள்-குணா