Untitled Document
May 28, 2017 [GMT]
  • Welcome
  • Welcome
ரணில் வருகைக்கு எதிராக மன்னாரில் கருப்புக்கொடிப் போராட்டம்! Top News
[Friday 2017-05-19 19:00]

புதிதாக நிர்மாணிக்கப்பட்ட மன்னார் மாவட்டச் செயலக கட்டடத் தொகுதியைத் திறந்து வைப்பதற்காக, மன்னாருக்கு இன்று வருகை தந்த பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிராக, காணாமற்போன உறவினர்களால் கருப்புக் கொடிப் போராட்டம் நடத்தப்பட்டது. மன்னார் மாவட்டத்தில் காணாமல் போனவர்களது உறவினர்கள் அனைவரும் ஒன்றிணைந்து, மாவட்டச் செயலகத்துக்கு முன்னால், இந்தப் போராட்டத்தை முன்னெடுத்தனர்.

புதிதாக நிர்மாணிக்கப்பட்ட மன்னார் மாவட்டச் செயலக கட்டடத் தொகுதியைத் திறந்து வைப்பதற்காக, மன்னாருக்கு இன்று வருகை தந்த பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிராக, காணாமற்போன உறவினர்களால் கருப்புக் கொடிப் போராட்டம் நடத்தப்பட்டது. மன்னார் மாவட்டத்தில் காணாமல் போனவர்களது உறவினர்கள் அனைவரும் ஒன்றிணைந்து, மாவட்டச் செயலகத்துக்கு முன்னால், இந்தப் போராட்டத்தை முன்னெடுத்தனர்.

  

இருப்பினும், போராட்டம் ஆரம்பிப்பதற்கு முன்னர், மாவட்டச் செயலக வளாகத்துக்குள் சென்ற பிரதமர் உள்ளிட்ட குழுவினர், மாவட்டச் செயலகத்தைத் திறந்து வைக்கும் நிகழ்வில் கலந்து கொண்டு விட்டு, பின்வாசல் வழியாகவே வெளியேறிச் சென்றார்.

  
   Bookmark and Share Seithy.comபோர்க்குற்றவாளிகளுக்கு எதிராக அரசாங்கம் வழக்குத் தொடர வேண்டும்! - யஸ்மீன் சூகா
[Saturday 2017-05-27 20:00]

இறுதி யுத்தத்தின்போது குற்றமிழைத்தவர்களை ஊக்குவிப்பதற்குப் பதிலாக அவர்களுக்கு எதிராக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வழக்கு தொடர வேண்டும் என சர்வதேச உண்மை மற்றும் நீதிக்கான செயற்திட்டம் வலியுறுத்தியுள்ளது. குறித்த அமைப்பினால் நேற்று வெளியிடப்பட்ட அறிக்கை ஒன்றிலேயே இவ்வாறு கூறப்பட்டுள்ளது.நினைவுகூரலுக்கு ஏற்பாடு செய்த எழில்ராஜனுக்கு துன்புறுத்தல்! - சர்வதேச மன்னிப்பு சபை கண்டனம்
[Saturday 2017-05-27 19:00]

போரில் இறந்து போன தமது உற­வு­களை நினைவு கூரு­வ­தற்கு பொதுமக்களுக்கு உத­வி­ய­தற்­காக அருட்­தந்தை எழில்­ரா­ஜன் பொலி­ஸா­ரால் தொடர் துன்­பு­றுத்­தல் களுக்கு உள்­ளா­வ­தாக சர்வதேச மன்­னிப்­புச் சபை குற்­றஞ்சாட்­டி­யுள்ளது. இரண்டு தடவை எழில்­ரா­ஜன் விசா­ரிக்­கப்­பட்­டார். மூன்­றா­வது தட­வை­யா­க­வும் அவரை விசா­ர­ணைக்கு வரு­ மாறு அழைத்த பொலி­ஸார், பின்­னர் அந்த உத்­த­ரவை நீக்­கி­னர் என மன்­னிப்­புச் சபை சுட்­டிக்­காட்­டியுள்­ளது.300 பௌத்த பிக்குகள் நயினாதீவில் சிறப்பு பூஜை! Top News
[Saturday 2017-05-27 19:00]

தென்னிலங்கையி்ல் இருந்து வந்த 300 பௌத்த பிக்குகள் இன்று நயினாதீவில் விசேட பூஜை வழிபாடுகளில் ஈடுபட்டுள்ளனர். தென்னிலங்கை பௌத்த அமைப்பு ஒன்றின் ஏற்பாட்டில், கடந்த வியாழக்கிழமை இந்த விசேட பூஜை வழிபாடு நாவற்குழி பௌத்த விகாரையில் இடம்பெறவிருந்தது.மஹிந்த காலத்தில் மௌனமாக இருந்தவர்கள் இப்போது தீவிரமாகப் பேசுவது ஏன்? - கேள்வி எழுப்பிய சம்பந்தன்
[Saturday 2017-05-27 19:00]

மஹிந்த ராஜபக்ச ஆட்சிக் காலத்தில் மௌனமாக இருந்தோர், இப்போது தீவிரத்தன்மையுடன் பேசுவது ஏன் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான இரா.சம்பந்தன், நாடாளுமன்றக் குழுக் கூட்டத்தில் காரசாரமாக தெரிவித்துள்ளார்.நாவற்குழியில் ரயில் மீது கல்வீச்சு - இராணுவ சிப்பாய் படுகாயம்!
[Saturday 2017-05-27 19:00]

நாவற்குழியில் ரயில் மீது கல்வீச்சு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதில் அதில் பயணித்த இராணுவ சிப்பாய் ஒருவர் படுகாயமடைந்துள்ளார். யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பு நோக்கி இன்று காலை பயணித்த ரயில் மீதே கல்வீச்சு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. வீசப்பட்ட கல் ரயிலில் பயணித்த இராணுவ சிப்பாயின் தலை மீது பட்டதில் அவர் படுகாயமடைந்துள்ளார். படுகாயமடைந்த இராணுவ சிப்பாய் யாழ். போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். கல்வீச்சு தாக்குதல் தொடர்பாக சாவசக்சேரி பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.வவுனியாவில் சிறுமி வன்புணர்வு - சிவில் பாது­காப்பு படைச் சிப்பாய்க்கு 60 ஆண்டு சிறைத்தண்டனை!
[Saturday 2017-05-27 19:00]

வவு­னி­யா­வில் பதின்ம வய­துச் சிறு­மியை வன்­பு­ணர்ந்த சிவில் பாது­காப்பு படைச் சிப்­பாய்க்கு 60 ஆண்­டு­கள் கடூ­ழி­யச் சிறைத் தண்­ட­னையை விதித்து வவு­னியா மேல் நீதிமன்றம் நேற்றுத் தீர்ப்பளித்தது.நிவாரண உதவிகளுடன் இந்திய கப்பல் கொழும்பு வந்தது! Top News
[Saturday 2017-05-27 19:00]

இலங்கையில் வெள்ளம், நிலச்சரிவு போன்ற இயற்கை அனர்த்தங்களினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான நிவாரண உதவிகளுடன் இந்திய கடற்படைக் கப்பல், இன்று காலை கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்ததது. ஐஎன்எஸ் கிரிச் என்ற இந்தக் கப்பலில் எடுத்து வரப்பட்ட உதவிப் பொருட்களை இந்திய தூதுவர் தரன்ஜித் சிங் சந்து, வெளிவிவகார அமைச்சர் ரவி கருணாநாயக்கவிடம் கையளித்தார். உதவிப் பொருட்களுடன் மற்றுமொரு கப்பல் நாளை வரவிருகிறது.புதிய வெளிவிவகார அமைச்சரை முதலில் சந்தித்த இந்தியத் தூதுவர்! Top News
[Saturday 2017-05-27 19:00]

புதிய வெளிவிவகார அமைச்சர் ரவி கருணாநாயக்கவுடன், இலங்கைக்கான இந்தியத் தூதுவர் தரன்ஜித் சிங் சந்து பேச்சு நடத்தியுள்ளார். அமைச்சரவை மாற்றத்தின் பின்னர் புதிய வெளிவிவகார அமைச்சராக நியமிக்கப்பட்ட ரவி கருணாநாயக்க நேற்று முன்தினம் தனது கடமைகளைப் பொறுப்பேற்றுக்கொண்டார். வெளிவிவகார அமைச்சராக பொறுப்பேற்ற பின்னர் தனது முதலாவது உத்தியோகபூர்வ சந்திப்பை ரவி கருணாநாயக்க, இலங்கைக்கான இந்தியத் தூதுவருடன் நடத்தியுள்ளார்.நாடு திரும்பினார் ஜனாதிபதி- வெள்ளம் பாதித்த களுத்துறையில் அவசர கூட்டம்!
[Saturday 2017-05-27 19:00]

அவுஸ்திரேலியாவிற்கு உத்தியோகபூர்வ பயணமொன்றை மேற்கொண்டிருந்த ஜனாதிபதி இன்று அதிகாலை நாடு திரும்பினார். சிங்கப்பூர் விமானச் சேவைக்குச் சொந்தமான விமானமொன்றில் ஜனாதிபதி நாடு திரும்பியுள்ளார். இதையடுத்து உடனடியாகவே களுத்துறைக்குச் சென்று வெள்ளம் பாதித்த பகுதிகளை நேரடியாகப் பார்வையிட்டார்.அனர்த்தங்களினால் உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு இந்தியப் பிரதமர் இரங்கல்!
[Saturday 2017-05-27 19:00]

இலங்கையில் மழை, வெள்ளம் மற்றும் மண்சரிவு ஆகிய அனர்த்தங்களினால் உயிழந்தோர் குடும்பங்களுக்கு இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தனது இரங்கலைத் தெரிவித்துள்ளார். இதேவேளை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுவதற்காக நிவாரண பொருட்களுடன் இந்தியா இரண்டு கப்பல்களை அனுப்ப உள்ளதாகவும், முதல் கப்பல் இன்று காலை, கொழும்பை சென்றடைந்துள்ளது. இன்னொரு கப்பல் நாளை புறப்படும் என்றும் அவர் தனது டுவிட்டரில் கூறியுள்ளார்.திருகோணமலையில் கேரளா கஞ்சாவுடன் ஆசிரியர் உள்ளிட்ட மூவர் கைது!
[Saturday 2017-05-27 19:00]

திருகோணமலையில் 106 கிராம் கேரளா கஞ்சாவுடன் மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். திருகோணமலை பிராந்திய விஷத்தன்மை போதைபொருள் ஒழிப்பு பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலையடுத்து நேற்று மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது இம்மூவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்களில் ஒருவர் பாடசாலை ஒன்றின் ஆசிரியர் என்று தெரிய வந்துள்ளது. கைது செய்யப்பட்டவர்கள் இன்று திருகோணமலை தலைமை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.வெள்ளம், நிலச்சரிவுக்கு பலியானோர் தொகை 100 ஐ தாண்டியது! Top News
[Saturday 2017-05-27 09:00]

இலங்கையின் 14 மாவட்டங்களில் கடும் மழையினால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு மற்றும் மண்சரிவில் சிக்கி 100 பேருக்கும் அதிகமானோர் உயிரிழந்ததுடன், நூறிற்கும் அதிகமானோர் காணாமல் போயுள்ளனர். காலி, மாத்தறை, அம்பாந்தோட்டை, களுத்துறை, இரத்தினபுரி, கம்பஹா, கொழும்பு உள்ளிட்ட 14 மாவட்டங்களை சேர்ந்தவர்களே இந்த அனர்த்தத்தினால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.மீட்புப்பணியில் ஹெலிகள், படகுகள், கவச வாகனங்கள்! Top News
[Saturday 2017-05-27 09:00]

இலங்கையில் ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலையால் நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. தென் மாகாணத்தின் பல்வேறு நகரங்கள் நீர்மூழ்கியுள்ளதுடன், பல இடங்களில் மண்சரிவு ஏற்பட்டுள்ளமையால் மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றாக பாதிக்கப்பட்டுள்ளது. அனர்த்தம் காரணமாக சுமார் ஆறு இலட்சம் பேர் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் அறிவித்துள்ளது.வடக்கு கிழக்கிலும் சூறைக்காற்று வீசும்! - வானிலை அவதான நிலையம் எச்சரிக்கை
[Saturday 2017-05-27 09:00]

இலங்கையின் வடக்கு, கிழக்கு பகுதிகளில் குறிப்பாக கடற்பகுதிகளில் காற்றின் வேகம் மணிக்கு சுமார் 80 கிலோ மீற்றர் வரை அதிகரிக்கலாம் என கூறியிருக்கும் யாழ்.மாவட்ட வானிலை அவதான நிலையம் மீனவர்கள் மிக மிக அவதானமாக இருக்குமாறு எச்சரிக்கை விடுத்துள்ளது.சிங்கள பெளத்த தலைமைகளின் இராஜதந்திரத்தை வெற்றி கொள்ளும் திறன் தமிழ்த் தலைமைகளுக்கு உண்டா? - யாழ்ப்பாணத்தில் கருத்தரங்கு
[Saturday 2017-05-27 09:00]

தமிழ் மக்களின் வாழ்வுரிமைக்கான செயற்பாட்டு மையத்தின் ஏற்பாட்டில் 'சிங்கள பெளத்த தலைமைகளின் இராஜதந்திரத்தை வெற்றி கொள்ளும் திறன் தமிழ்த் தலைமைகளுக்கு உண்டா?' எனும் தலைப்பிலான கருத்துரையும், கலந்துரையாடலும் யாழ். குப்பிளான் அறிவொளி சனசமூக நிலைய மண்டபத்தில் நாளை பிற்பகல் 2.30 மணியளவில் இடம்பெறவுள்ளது.தமிழ் மக்களின் அபிலாசைகளைப் பூர்த்தி செய்யாத எந்த தீர்வையும் ஈரோஸ் நிராகரிக்கும்! - அருளர்
[Saturday 2017-05-27 09:00]

தமிழ் மக்களின் அபிலாசைகளைப் பூர்த்தி செய்யாத எந்த தீர்வையும் மக்களுடன் இணைந்து ஈரோஸ் அமைப்பும் நிராகரிக்கும் என்று ஈரோஸ் அமைப்பு தெரிவித்துள்ளது. சிங்கள மக்களுக்கு சமஸ்டி என்றால் என்ன என்பதை தெளிவாக விளங்கப்படுத்தியிருந்தால் அவர்கள் நிச்சயம் விளங்கிக்கொண்டிருப்பார்கள் என்று ஈரோஸ் அமைப்பின் ஸ்தாபக தலைவர்களில் ஒருவரான ஏ.ஆர்.அருட்பிரகாசம் தெரிவித்தார்.வடக்கில் பிளாஸ்டிக் பாவனையை தவிர்க்கும் உறுதிமொழி!
[Saturday 2017-05-27 09:00]

வடக்கு மாகாணத்தில் உள்ள சகல பாடசாலைகளிலும் எல்லா வகையான பிளாஸ்ரிக் பைகளையும் ஒருநாள் பயன்படுத்திவிட்டு வீசும் பிளாஸ்ரிக் பொருட்களையும் தவிர்ப்பதற்கான உறுதிமொழி மே 29ஆம் திகதி எடுக்கப்படவுள்ளது என வடக்கு சுற்றாடல் அமைச்சு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.மீண்டும் அதிகாரத்துக்கு வருவதற்காக பொய்கூறுவோரை நம்பாதீர்கள்! - மைத்திரி கோரிக்கை
[Saturday 2017-05-27 08:00]

அதிகாரத்தில் இருந்த சிலர், மீண்டும் அதிகாரத்துக்கு வருவதற்காக தாய்நாட்டுக்கு எதிரான பொய்ப் பிரசாரங்களில் ஈடுபட்டு வருகின்றனர். உண்மையை விடவும் பொய் வேகமாக பரவுவதனால் அந்த பொய் பிரசாரங்களை நம்பி ஏமாற வேண்டாம் என உலகெங்கும் வாழும் இலங்கையர்களிடம் கோருவதாக, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.உதவிக்கு இரண்டு கப்பல்களை அனுப்பியது இந்தியா!
[Saturday 2017-05-27 08:00]

வௌ்ளம் மற்றும் மண் சரிவினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ இந்தியா முன் வந்துள்ளது. பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி வழங்க முன்வருமாறு இலங்கை அரசாங்கம் கேட்டுக்கொண்டதை அடுத்து உடனடியாக இந்திய அரசாங்கம் இரண்டு கப்பல்களில் உதவிப் பொருட்களை அனுப்பியுள்ளது. நிவாரணப் பொருட்களுடன் இன்றும் நாளையும் இரண்டு இந்தியக் கப்பல்கள் கொழும்பு வரவுள்ளன.மீட்புப்பணியின் போது ஹெலியில் இருந்து விழுந்த விமானப்படை வீரர் மரணம்!
[Saturday 2017-05-27 08:00]

காலியில் வெள்ள அனர்த்தத்தில் பாதிக்கப்பட்டவர்களை காப்பாற்றும் நடவடிக்கையில் ஈடுப்பட்ட போது, ஹெலியில் இருந்து கீழே வீழ்ந்து காயமடைந்த விமானப்படை சிப்பாய் உயிரிழந்தார்.வெள்ளத்தில் சிக்கியிருந்த பெண் ஒருவரை கேபிள் உதவியுடன் ஹெலியில் ஏற்றும் நடவடிக்கையில் ஈடுபட்ட போது விமானப்படை சிப்பாய் கீழே விழுந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.


Tharsi-home-15-10-2016
Elankeeran-debt-solution-25-06-2016
Easankulasekaram-Remax-300716
SELVI-HOMES-09-02-17
Mahesan-Remax-169515-Seithy
<b>14-05-2017 அன்று கனடா - ரொரன்டோவில் நடைபெற்ற தாயின்மடியில் நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b>06-05-2017 அன்று கனடா- ரொரன்டோவில் அபிநயாலயா நாடியாலயம் நடாத்திய 20வது ஆண்டுவிழா நிகழ்வின் படத்தொகுப்பு. </b> படங்கள் - குணா
<b>30-04-2017 அன்று கனடா- ரொரன்டோவில்  நடைபெற்ற சங்கீத சங்கமம் நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா