Untitled Document
April 26, 2024 [GMT]
ஜனாதிபதிக்கு எதிராக போராட்டம் நடத்தப்படும்!
[Tuesday 2017-05-23 08:00]

ஜனாதிபதிக்கு எதிராக யாழ்ப்பாணத்தில் மக்கள் போராட்டங்கள் முன்னெடுக்கப்படும் என வலி.வடக்கு மீள் குடியேற்ற தலைவர் ச.சஜீவன் தெரிவித்துள்ளார். யாழ்.ஊடக அமையத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவ்வாறு தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில்-

ஜனாதிபதிக்கு எதிராக யாழ்ப்பாணத்தில் மக்கள் போராட்டங்கள் முன்னெடுக்கப்படும் என வலி.வடக்கு மீள் குடியேற்ற தலைவர் ச.சஜீவன் தெரிவித்துள்ளார். யாழ்.ஊடக அமையத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவ்வாறு தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில்-

  

வடக்கில் இராணுவத்தினர் பல ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலத்தினை அபகரித்து நிலை கொண்டுள்ளனர். அதனால் மக்கள் தமது சொந்த காணிகளை இழந்து நலன்புரி நிலையங்களில் வாழ்கின்றனர். இந்த நிலையில் ஜனாதிபதி வடக்கில் காணிகள் விடுவிக்கப்பட்டு விட்டன. தற்போது காணி வேண்டி போராடுபவர்கள் மேலதிக காணி வேண்டியே போராடுகின்றார்கள் என திருகோணமலையில் நடைபெற்ற நிகழ்வொன்றில் பேசியுள்ளார்.

அதனால் நாம் அதிர்ச்சி அடைந்துள்ளோம். வலி.வடக்கு மக்கள் இடம்பெயர்ந்து நலன்புரி நிலையங்களில் வாழும் பகுதிகளுக்கு கடந்த 2015 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் சென்ற ஜனாதிபதி உங்களை ஆறு மாத கால பகுதிக்குள் சொந்த இடங்களில் மீள் குடியேற்றுவேன் என வாக்குறுதிகளை தந்து சென்றார். ஒன்றரை வருடங்கள் கடந்த நிலையிலும் மீள் குடியேற்றம் பூரண படுத்தப்படவில்லை. இந்த நிலையில் ஜனாதிபதியின் அந்த கருத்தினை கேட்டு நாம் அதிர்ச்சியும் கவலையும் அடைந்துள்ளோம். ஜனாதிபதி இதே மனநிலையுடன் யாழ்ப்பாணம் வருவாராயின் மக்களை ஒன்று திரட்டி ஜனாதிபதிக்கு எதிரான பாரிய மக்கள் போராட்டம் முன்னெடுக்கப்படும் என தெரிவித்தார்

  
   Bookmark and Share Seithy.com



சஹ்ரானை வளர்த்து விட்டவர் சுரேஸ் சாலே! - சரத் பொன்சேகா குற்றச்சாட்டு.
[Friday 2024-04-26 16:00]

உயிர்த்த ஞாயிறு குண்டுதாக்குதலில் ஈடுபட்ட சஹ்ரான் ஹாசிமை வளர்த்தவர் தேசிய புலனாய்வு பிரிவின் தலைவர் சுரேஸ் சாலே என ஐக்கிய மக்கள் சக்தி நாடாளுமன்ற உறுப்பினரும் முன்னாள் இராணுவ தளபதியுமான சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.



தந்தை செல்வாவின் 47ஆவது நினைவேந்தல் நிகழ்வு! Top News
[Friday 2024-04-26 16:00]

தந்தை செல்வாவின் 47ஆவது நினைவேந்தல் நிகழ்வு இன்று யாழ்ப்பாணம் தந்தை செல்வா நினைவிட வளாகத்தில் ஓய்வுநிலை ஆயர் கலாநிதி சு.ஜெபநேசன் தலைமையில் இடம்பெற்றது. தந்தை செல்வா நினைவு அறக்காவற் குழுவின் ஏற்பாட்டில் நடந்த இந்த நிகழ்வில், தந்தை செல்வாவின் சிலைக்கு மலர் மாலை அணிவித்ததுடன் அன்னாரின் சமாதிக்கு மலரஞ்சலி செலுத்தினர்.



மத்தல விமான நிலைய நிர்வாகம் இந்திய, ரஷ்ய நிறுவனங்களிடம்!
[Friday 2024-04-26 16:00]

மத்தல விமான நிலையத்தின் நிர்வாகத்தை இந்திய ரஸ்ய நிறுவனங்களிடம் ஒப்படைப்பதற்கு இலங்கை அரசாங்கம் தீர்மானித்துள்ளது.



வவுனியாவில் புளொட் பிரமுகர் வீட்டில் திருடப்பட்டதாக கூறப்பட்ட நகைகள் வீட்டுக் கூரைக்குள் இருந்து மீட்பு!
[Friday 2024-04-26 16:00]

வவுனியா - நகரசபையின் முன்னாள் உபநகர பிதாபின் வீட்டில் திருடப்பட்ட ஒரு கோடி ரூபாய் பெறுமதியான 60 பவுண் நகைகள் அவரது வீட்டு கூரையில் இருந்து இன்று மீட்கப்பட்டுள்ளதாக வவுனியா பொலிசார் தெரிவித்தனர்.



வட்டுக்கோட்டை இளைஞன் படுகொலை - ஒளிந்திருந்த சந்தேக நபர் கைது!
[Friday 2024-04-26 16:00]

யாழ்ப்பாணம்- வட்டுக்கோட்டை பகுதியில் இளைஞனை கடத்தி சித்திரவதைக்கு உள்ளாக்கி படுகொலை செய்த சம்பவத்துடன் தொடர்புடைய குற்றச்சாட்டில் தேடப்பட்டு வந்த சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.



ஆஸ்துமா நோயால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளில் இலங்கை முன்னிலையில்!
[Friday 2024-04-26 16:00]

உலகில் ஆஸ்துமா நோயால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளில் இலங்கை முன்னிலையில் உள்ளதாக இலங்கை சுவாச நோய் நிபுணர்கள் சங்கத்தின் தலைவர் வைத்தியர் நெரஞ்சன் திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.



பிரதான சான்றுப் பொருள் இல்லை - நீதிபதி இளஞ்செழியன் மீதான துப்பாக்கிச் சூட்டு வழக்கு ஒத்திவைப்பு!
[Friday 2024-04-26 16:00]

நீதிபதி மா. இளஞ்செழியன் மீதான துப்பாக்கி சூடு வழக்கின் பிரதான சான்று பொருளான கைத்துப்பாக்கி அரச பகுப்பாய்வு பிரிவிடம் இருந்து மீள பெறப்படாததால் , வழக்கு மே மாதத்திற்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.



அளவெட்டியில் எரிந்த நிலையில் முதியவரின் சடலம்!
[Friday 2024-04-26 16:00]

யாழ்ப்பாணம் - அளவெட்டி தெற்கு பகுதியில் உள்ள வீடு ஒன்றில் இருந்து முழுமையாக எரிந்த நிலையில் முதியவர் ஒருவருடைய சடலம் நேற்று மாலை மீட்கப்பட்டுள்ளது. அதே பகுதியைச் சேர்ந்த ஐயம்பிள்ளை தேவராசா (வயது 73) என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.



சகோதரியை பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய சகோதரன் கைது!
[Friday 2024-04-26 16:00]

தனது சகோதரியை பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தி வந்ததுடன், அவரை வலுக்கட்டாயமாக பாலியல் தொழிலில் ஈடுபடுத்தி வந்த குற்றச்சாட்டில் சகோதரன் கைது செய்யப்பட்டு, நீதிமன்ற உத்தரவில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.



சுவீடனுக்குப் பறந்தார் அனுரகுமார!
[Friday 2024-04-26 16:00]

தேசிய மக்கள் சக்தியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான அனுரகுமார திஸாநாயக்க சுவீடன் நாட்டிற்கு விஜயம் மேற்கொண்டுள்ளார்.



நாட்டில் தமிழர்கள் வாழக்கூடாது என அரசு நினைக்கின்றதா?
[Friday 2024-04-26 08:00]

இந்த நாட்டில் தமிழர்கள் இருக்கக்கூடாது அல்லது வாழக்கூடாது என அரசு நினைக்கின்றதா? என கேள்வியெழுப்பிய தமிழ் தேசியக் கூட்டமைப்பின் யாழ் மாவட்ட எம்.பி. யான எஸ்.ஸ்ரீதரன் யுத்தம் முடிந்து 15 ஆண்டுகள் நிறைவுறுவதாக சொல்லப்படுகின்ற நிலையில் கூட தமிழர்கள் சுதந்திரமாக வாழ முடியாதுள்ளது என்று சுட்டிக்காட்டினார்.



முறிகண்டியில் விபத்து - சிப்பாய் பலி, 7 பேர் காயம்!
[Friday 2024-04-26 08:00]

முல்லைத்தீவு - முறிகண்டி பகுதியில் இன்றுகாலை இடம்பெற்ற விபத்தில் இராணுவ சிப்பாய் ஒருவர் பலியானார். மேலும் 7 பேர் காயமடைந்துள்ளனர்.



வடக்கு ஆளுநர் செயலகத்தில் அடிதடி!
[Friday 2024-04-26 08:00]

வடமாகாண ஆளுநர் செயலகத்தில் ஏற்பட்ட கைகலப்பில் ஒருவர் கழுத்தில் காயமடைந்த நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.



உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சர்வதேச சூழ்ச்சி இல்லை!
[Friday 2024-04-26 08:00]

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவத்தின் பின்னால் சர்வதேச சூழ்ச்சி இருந்ததாக தெரியவில்லை என்று எதிர்க்கட்சி பிரதம கொரடாவான ஐக்கிய மக்கள் சக்தி பாராளுமன்ற உறுப்பினர் லக்‌ஷ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார்.



பிள்ளையானைப் பிடித்தால் உண்மைகளை அறிந்து கொள்ளலாம்!
[Friday 2024-04-26 08:00]

பிள்ளையானை கைது செய்து விசாரணை நடத்தினால் 2005 முதல் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் வரையிலான அனைத்த உண்மை தகவல்களையும் அறிந்துகொள்ளலாம் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் இராசமாணிக்கம் தெரிவித்தார்.



நல்லூர் ஆலய சூழல் துப்பாக்கி சூடு நடத்தி விளையாடும் திடல் இல்லை!
[Friday 2024-04-26 08:00]

நல்லூர் ஆலய சூழல், துப்பாக்கி சூடு நடாத்தி விளையாடும் திடல் இல்லை என வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதி மா. இளஞ்செழியன் தனது சாட்சியத்தில் தெரிவித்தார்.



பொருளாதாரம் இலக்கைத் தாண்டி 6 வீதம் மேலதிக வளர்ச்சி!
[Friday 2024-04-26 08:00]

இந்த வருடத்தின் முதல் காலாண்டில், அரச வருமானம் 834 பில்லியன் ரூபாவாக உயர்ந்திருப்பதாகவும், இது எதிர்பார்க்கப்பட்ட அரச வருமானத்திற்கு மேலதிகமான 6% வளர்ச்சியாகும் எனவும் அரச பெருந்தோட்ட தொழில்முயற்சிகள் மறுசீரமைப்பு அமைச்சரும் நிதி இராஜாங்க அமைச்சருமான ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்தார்.



தாக்குதல்தாரிகளும், தாக்குதலை தடுக்கத் தவறியவர்களும் கூட்டாக சேர்ந்து செயற்பட்டனரா?
[Friday 2024-04-26 08:00]

வவுணதீவில் பொலிஸ் உத்தியோகத்தர்கள் இருவர் சஹ்ரான் தரப்பினரால் கொல்லப்பட்ட போது அதன் விசாரணைகள் ஏன் வேறு பக்கத்திற்கு திருப்பப்பட்டன? எனக்கேள்வி எழுப்பிய ஜே .வி.பி தலைவரும்,எம்.பி.யுமான அநுரகுமார திஸாநாயக்க தாக்குதல்தாரிகளும் தாக்குதலை தடுக்கத் தவறியதாக கூறப்படும் தரப்பினரும் கூட்டாக இணைந்து உயிர்த்த ஞாயிறு தாக்குதலை நடத்தினரா என்ற சந்தேகங்கள் உள்ளதாகவும் கூறினார்.



சுதந்திரக் கட்சியின் பதில் பொதுச் செயலாளராக துமிந்த திஸாநாயக்க!
[Friday 2024-04-26 08:00]

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் பதில் பொதுச் செயலாளராக துமிந்த திஸாநாயக்க நியமிக்கப்பட்டுள்ளார். அக்கட்சியின் அரசியல் குழு கூட்டத்தில் இது குறித்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் அரசியல் குழு கூட்டம் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தலைமையில் நேற்று பிற்பகல் கொழும்பில் இடம்பெற்றது.



வவுனியா கடவுச்சீட்டு காரியாலயம் முன்பாக கஞ்சாவுடன் இளைஞன் கைது!
[Friday 2024-04-26 08:00]

வவுனியா பிராந்திய கடவுச்சீட்டு காரியாலயம் முன்பாக வியாழக்கிழமைகாலை பொலிஸார் முன்னெடுத்த திடீர் சோதனை நடவடிக்கையின் போது கஞ்சாவினை கைவசம் வைத்திருந்த குற்றச்சாட்டில் மகாறம்பைக்குளம் பகுதியைச் சேர்ந்த இளைஞன் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.


Rajeef sebarasha 2023/04/19
NKS-Ketha-04-11-2021
Vaheesan-Remax-2016
Asayan-Salon-2022-seithy
Kugeenthiran-200-2022-seithy
Logan-Kumaresh-Homelife-02-02-2021
Airlinktravel-2020-01-01
 gloriousprinters.com 2021
Mahesan-Remax-169515-Seithy
Karan Remax-2010
Ambikajewellers-01-08-2021-seithy
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> 12 10 2019 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Skanda Nite 2019 125th Anniversary நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா