Untitled Document
July 26, 2017 [GMT]
  • Welcome
  • Welcome
விமான நிறுத்துமிடத்தில் தரையிறங்க முற்பட்ட விமானம்: -நூலிழையில் தவிர்க்கப்பட்டதால் உயிர் தப்பிய பயணிகள்
[Thursday 2017-07-13 17:00]

கடந்த வெள்ளிக்கிழமை இரவு கனடாவின் வான்கோவர் நகரிலிருந்து 140 பயணிகள் மற்றும் விமான சிப்பந்திகளுடன் புறப்பட்ட ஏர் கனடா விமானம், அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோ நோக்கி வந்து கொண்டிருந்தது. விமான நிலையத்தை நெருங்கியதும் ஏர் கனடா விமானம் தரையிறங்க விமான கட்டுப்பாட்டு அறை அதிகாரிகள் அனுமதி அளித்துள்ளனர். சான் பிரான்சிஸ்கோ விமான நிலையத்தில் ஓடு தளத்திற்கு இணையாக விமானங்கள் நிறுத்துவதற்கென டாக்சி வே ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.

கடந்த வெள்ளிக்கிழமை இரவு கனடாவின் வான்கோவர் நகரிலிருந்து 140 பயணிகள் மற்றும் விமான சிப்பந்திகளுடன் புறப்பட்ட ஏர் கனடா விமானம், அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோ நோக்கி வந்து கொண்டிருந்தது. விமான நிலையத்தை நெருங்கியதும் ஏர் கனடா விமானம் தரையிறங்க விமான கட்டுப்பாட்டு அறை அதிகாரிகள் அனுமதி அளித்துள்ளனர். சான் பிரான்சிஸ்கோ விமான நிலையத்தில் ஓடு தளத்திற்கு இணையாக விமானங்கள் நிறுத்துவதற்கென டாக்சி வே ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.

  

விமானங்கள் நிறுத்தும் டாக்சி வே-யில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பயணிகளுடன் 4 விமானங்கள் புறப்பட தயார் நிலையில் இருந்துள்ளன. அப்போது ஏர் கனடா விமானம், தவறுதலாக டாக்சி வே-ஐ நோக்கி 175 அடி உயரத்தில் தாழ்வாக பறந்து வந்ததால் அதிர்ச்சியடைந்த கட்டுப்பாட்டு அறை அதிகாரிகள், உடனடியாக விமானத்தை மேலே எழுப்ப உத்தரவிட்டனர். சாமார்த்தியமாக விமானத்தை உயர்த்திய ஏர் கனடா விமானி, சற்று நேரம் வானில் வட்டமிட்ட பிறகு மீண்டும் விமான நிலையத்தில் பத்திரமாக தரையிறக்கியுள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக அமெரிக்க விமான போக்குவரத்து அதிகாரிகள் மேற்கொண்டு வரும் விசாரணையில் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. நின்று கொண்டிருந்த 4 விமானத்தில் ஒன்றின் விமானி, தங்களை நோக்கி விமானம் ஒன்று பறந்து வருவதாக கட்டுப்பாட்டு அறைக்கு ஒலிபெருக்கி மூலம் தகவல் கொடுத்ததையடுத்தே இந்த விபத்து தவிர்க்கப்பட்டதாக கூறப்படுகிறது. ஒருவேலை இந்த விபத்து நிகழ்ந்திருக்கும் பட்சத்தில் மிகப்பெரிய உயிரிழப்பு நிகழந்திருக்கும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

  
   Bookmark and Share Seithy.com



ஆப்கானிஸ்தானில் ராணுவ முகாம் மீது தீவிரவாதிகள் அதிரடி தாக்குதல்: - 26 ராணுவ வீரர்கள் உயிரிழப்பு
[Wednesday 2017-07-26 17:00]

ஆப்கானிஸ்தானில் ராணுவ முகாம் மீது தலிபான் தீவிரவாதிகள் நடத்திய அதிரடி தாக்குதலில் ராணுவ வீரர்கள் 26 பேர் உயிரிழந்தனர். கந்தக்காரை தலைமையிடமாக கொண்டு செயல்படும் தலிபான் தீவிரவாத அமைப்பு இந்த தாக்குதலில் ஈடுபட்டுள்ளதாக ஆப்கான் ராணுவத்தினர் தெரிவித்துள்ளனர். ஆப்கானிஸ்தான் நாட்டில் தலிபான் தீவிரவாதிகள் அரசுக்கு எதிராக தொடர் தாக்குதலில் ஈடுபட்டு வருகின்றனர். இதில் பொதுமக்கள் மற்றும் வீரர்கள் என பலர் பலியாகியுள்ளனர்.



கற்றல் திறன் மற்றும் நினைவாற்றலை அதிகரிக்கும் ஆல்கஹால்: - ஆய்வில் தகவல்
[Wednesday 2017-07-26 17:00]

மது குடித்தால் உடல்நலத்திற்குகெடு என்று எல்லோறும் அறிந்த ஒன்று, ஆனால் மதுவில் உள்ள ஆல்கஹால் நினைவாற்றல் மற்றும் கற்றல் திறனை அதிகரிக்கும் என்று ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மது குடிப்பது உடல் நலத்துக்கு கேடு விளைவிக்கும், வீட்டுக்கும் நாட்டுக்கும் கேடு என்பன போன்ற பிரசாரங்கள் மேற்கொள்ளப்படுகின்றன.



இத்தாலியில் வறட்சி எதிரொலி: - வத்திக்கானின் செயற்கை நீரூற்றுகளை நிறுத்தினார் போப்
[Wednesday 2017-07-26 13:00]

இத்தாலியின் பல பகுதிகளில் வறட்சி நிலவி வருவதால் வத்திக்கான் தன்னுடைய பிரபல செயற்கை நீரூற்றுக்களில் நீர்வரத்தை நிறுத்த தொடங்கியுள்ளது.இந்த நடவடிக்கை சுற்றுச்சூழல் தொடர்பான போப் பிரான்சிஸின் போதனைகளுக்கு ஒத்ததாக அமைகிறது என்று வத்திக்கான் வானொலி தெரிவித்திருக்கிறது.சுற்றுச்சூழலால் உருவாகக்கூடிய தன்னுடைய அச்சங்களை 2015-ஆம் ஆண்டு வெளியிட்ட திருமுகத்தில் போப் பிரான்சிஸ் குறிப்பிட்டுள்ளார்.



கால்பந்து விளையாட்டு பந்தயத்தில் தோல்வி: - எலி இறைச்சி சாப்பிட்ட மேயர்
[Wednesday 2017-07-26 12:00]

பிரான்ஸ் நாட்டில் கால்பந்து விளையாட்டு பந்தயத்தில் தோல்வி அடைந்த அந்நாட்டு மேயர் ஒருவர் எலி இறைச்சி சாப்பிட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.மேற்கு பிரான்ஸில் உள்ள Mont-de-Marsan நகர் மேயராக Charles Dayot என்பவர் பதவி வகித்து வருகிறார்.கால்பந்து விளையாட்டு ரசிகரான இவர் போட்டிகள் நடக்கும்போது பந்தயத்தில் ஈடுப்படுவது வழக்கம்.



மெக்சிகோவில் மலையில் மோதிய பயணிகள் விமானம்: -விமானி உட்பட 7 பேர் பலி
[Wednesday 2017-07-26 12:00]

மெக்சிகோவில் மலைப்பகுதியில் பயணிகள் விமானம் மோதியதில் விமானி உட்பட 7 பேர் பலியாகியுள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.மெக்சிகோவின் Tamazula நகரிலிருந்து U206 ரக சிறிய பயணிகள் விமானம் Culiacan நகரை நோக்கி சென்று கொண்டிருந்தது.விமானத்தில் விமானி உட்பட 7 பேர் பயணம் செய்தார்கள். Sinaloa மாகாணத்தின் Imala பகுதியில் சென்று கொண்டிருந்த போது மலைப்பகுதியில் பயங்கரமாக மோதி விமானம் விபத்துள்ளானது.



ஆல்பாபெட் நிறுவனத்தின் இயக்குனர்களில் ஒருவராக நியமிக்கப்பட்ட சுந்தர் பிச்சை!
[Wednesday 2017-07-26 07:00]

கூகுள் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி சுந்தர் பிச்சை, அதன் தாய் நிறுவனமான ஆல்பாபெட் நிறுவனத்தின் இயக்குனர்களில் ஒருவராக நியமிக்கப்பட்டுள்ளார். சென்னையில் பிறந்து கோரக்பூர் ஐஐடியில் படித்தவர் சுந்தர் பிச்சை. பிரபல தேடுதல் வலைதளமான கூகுள் நிறுவனத்தில் இவர் கடந்த 2004ம் ஆண்டு சேர்ந்தார்.



போர்னியோ தீவில் படகு கவிழ்ந்து விபத்து: - 10 பேர் பலி
[Wednesday 2017-07-26 07:00]

இந்தோனேசியாவில் உள்ள போர்னியோ தீவில் வேகமாக சென்ற ஒரு படகு நேற்று கவிழ்ந்தது. இந்த கோர விபத்தில் 10 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.இந்த விபத்து நடந்தபோது அந்தப் படகில் 40 பேர் பயணம் செய்ததாக தகவல்கள் கூறுகின்றன.



பொது மக்களின் மொபைல் போன்களைக் கண்காணிக்கவிருக்கும் சீனா!
[Tuesday 2017-07-25 18:00]

தணிக்கை என்ற பெயரில் கூகுள், ஃபேஸ்புக், விக்கிப்பீடியா போன்ற தளங்களுக்கு சீனாவில் தடை இருக்கிறது. அந்நாட்டைப் பொறுத்தவரை... மக்கள் எதைச் செய்ய வேண்டுமென்பதை அந்நாட்டு அரசுதான் தீர்மானிக்கிறது.



பிரித்தானியாவில் கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்ட இந்திய வம்சாவளி இளம்பெண்!
[Tuesday 2017-07-25 18:00]

பிரித்தானியாவில் இந்திய வம்சாவளி இளம்பெண் ஒருவர் சித்தரவதை செய்யப்பட்டு கொடூரமான முறையில் கவுரவ கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அரபு நாட்டை சேர்ந்த இளைஞருடன் தொடர்பு வைத்துக் கொண்டதாக கூறி 19 வயதே ஆன இந்திய வம்சாவளி இஸ்லாமிய பெண் கடத்தப்பட்டு, பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது.



10 ஆண்டுகளில் மொழிபெயர்ப்பு கருவி உதவியுடன் நாயுடன் பேச முடியும்: - அமெரிக்க பேராசிரியர் தகவல்
[Tuesday 2017-07-25 18:00]

வீட்டில் வளர்க்கப்படும் செல்ல நாய்கள் தங்களது எஜமானரை பார்த்து குரைக்கும்.அதன் மூலம் தனது தேவையை அது வெளிப்படுத்துகிறது. ஆனால் பெரும்பாலானோருக்கு தெரிவதில்லை.அக்குறையை போக்க கம்ப்யூட்டர் மொழிபெயர்ப்பு கருவி உருவாக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் வடக்கு அரிசோனா பல்கலைக்கழக பேராசிரியர் கான்ஸ்லோபான்ட்சிகோப் இதை தயாரித்து இருக்கிறார்.



ஜெருசலேமில் பதற்றம்: - இஸ்ரேல் விரைந்தார் அமெரிக்க சிறப்பு தூதர்
[Tuesday 2017-07-25 13:00]

ஜெருசலேமில் உள்ள புனிதத் தலம் அருகே வந்த இளைஞரை சோதனையிடும் இஸ்ரேல் பாதுகாப்புப் படையினர்.ஜெருசலேம் புனிதத் தலம் அருகே புதிய பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டதைத் தொடர்ந்து ஏற்பட்டுள்ள பதற்ற நிலையைத் தணிக்க அமெரிக்க அதிபர் டிரம்ப்பின் சிறப்பு தூதர் இஸ்ரேல் விரைந்தார். உள்ளது.



பாகிஸ்தான் பஞ்சாப் மாகாணத்தில் மனித வெடிகுண்டு தாக்குதல்: - 26 பேர் உயிரிழப்பு
[Tuesday 2017-07-25 08:00]

பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில், முதல்வர் வீடு அருகே நடத்தப்பட்ட மனித வெடிகுண்டு தாக்குதலில் 26 பேர் உயிரிழந்துள்ளனர். பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாண தலைநகர் லாகூர். இங்கு முதலமைச்சராக இருப்பவர் ஷபாஸ் ஷெரீப். இவர் பிரதமர் நவாஸ் ஷெரீப்பின் சகோதரர்.



அமெரிக்க இரட்டைக் கோபுரம் தகர்ப்பு: - கத்தாருக்கு தொடர்பா?
[Tuesday 2017-07-25 07:00]

தீவிரவாதத்துக்கு துணைபோவதாக கூறி வளைகுடாவைச் சேர்ந்த ஐந்து நாடுகள் கத்தார் நாட்டுடன் தூதரக உறவை முறித்துள்ளன. இந்நிலையில் , சவுதி அரேபியாவின் ஸ்கை நியூஸ் தொலைக்காட்சி, நியூயார்க் நகர இரட்டைக் கோபுரம் தகர்க்கப்பட்டதில் கத்தாருக்கு தொடர்புள்ளதாக டாகுமெண்டரி ஒன்றை ஒளிபரப்பியுள்ளது.



கன்றுக்குட்டியை கணவராக பாவித்து மரியாதை செலுத்தி வரும் 74 வயது பெண்மணி!
[Tuesday 2017-07-25 07:00]

கம்போடியாவை சேர்ந்த 74 வயது பெண்மணி ஒருவர் கன்றுக்குட்டியை தனது கணவராக பாவித்து மரியாதை செலுத்தி வருகிறார்.கம்போடியாவை சேர்ந்தவர் கிம் ஹாங், இவரது கணவர் டோல் குட் ஒரு வருடத்துக்கு முன்பு இறந்து விட்டார். இதனால் சோகமாக இருந்த கிம் ஹாங் சாமியார் ஒருவரை சந்தித்துள்ளார்.அப்போது, உங்கள் வீட்டில் உள்ள மாடு கன்று போடும், உன் கணவனே கன்றுக்குட்டியாக பிறப்பார் என கூறியுள்ளார்.



பூமிக்கு அடியில் 31 மாடியில் சுரங்க ரெயில் நிலையம்: -சீனாவின் சாதனை
[Monday 2017-07-24 17:00]

சீனாவில் பூமிக்கு அடியில் 31 மாடியில் சுரங்க ரெயில் நிலையம் ஒன்றை அமைக்கும் பணியில் அங்குள்ள மெட்ரோ ரெயில் அமைப்பு தீவிரம் காட்டி வருகிறது.சீனாவின் சாங்கிங் மாகாணத்தில் உள்ள மெட்ரோ சுரங்க ரெயில் நிலையத்தில் இந்த 31 மாடி கட்டிடம் அமைய உள்ளது. இது சுமார் 94 மீற்றர் ஆழம் வரை செல்லக் கூடியதாகும்.



டொனால்டு டிரம்புக்கு சூனியம் வைத்த பிரபல பாடகி!
[Monday 2017-07-24 12:00]

அமெரிக்க அதிபர் டிரம்புக்கு அந்நாட்டின் பிரபல பாடகி லானா டெல் ரே 'சூனியம்' வைத்த தகவல் தற்பொழுது வெளியாகியுள்ளது.அமெரிக்க அதிபராக டொனால்டு ட்ரம்ப் இந்த ஆண்டு துவக்கத்தில் தேர்தடுக்கப்பட்ட சமயத்தில் இருந்து அவருக்கு எதிர்ப்புகள் தொடர்ந்து வலுத்து வருகிறது. அவரது வலதுசாரி தாக்கம் உடைய சிந்தனைகளும், அமெரிக்க நாட்டினரைத் தவிர பிற நாட்டினர் மீது காட்டும் துவேஷமும் இதற்கு முக்கிய காரணங்களாகும். அமெரிக்காவின் பல முக்கிய பிரபலங்களும் டிரம்புக்கு எதிராக கருத்துகளை தெரிவித்து வருகின்றனர்



போதை மருந்து கடத்தல்காரர்களை போலீஸார் சுட்டுத் தள்ள வேண்டும்: - இந்தோனேசியா அதிபர்
[Monday 2017-07-24 12:00]

கைது நடவடிக்கையின் போது சரணடைய மறுக்கும் போதை மருந்து கடத்தல்காரர்களை போலீஸார் சுட்டுத் தள்ள வேண்டும் என இந்தோனேசியா அதிபர் ஜோகோ விடோடோ அதிரடியாக அறிவித்துள்ளார்.இந்தோனேசியாவில் நடைபெற்ற அரசியல் கட்சிகளின் கூட்டத்தில் பங்கேற்ற அதிபர் ஜோகோ விடோடோ இதுகுறித்து மேலும் தெரிவித்துள்ளதாவது:



காபூலில் கார் தற்கொலை குண்டு தாக்குதல்: - 24 பேர் பலி
[Monday 2017-07-24 12:00]

ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் கார் தற்கொலை குண்டு வெடித்ததில் குறைந்தது 24 பேர் கொல்லப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.குறைந்தது 42 பேர் காயமடைந்துள்ளனர்; பலியானவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என அச்சங்கள் எழுந்துள்ளன



வெனிசுவேலாவில் அரசுக்கு எதிரான போராட்டத்தில் வயலின் இசைத்தவர் காயம்!
[Monday 2017-07-24 08:00]

வெனிசுவேலா நாட்டில் அரசுக்கு எதிரான போராட்டத்தில் வயலின் இசைத்துப் பிரபலபடைந்த உய்லி ஆர்டீகா என்பவர் காயமடைந்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.போலீசுக்கும், போராட்டக்காரர்களுக்கும் இடையில் தலைநகர் காரகாசில் அண்மையில் நடந்த மோதலில் அவருக்கு இந்தக் காயம் ஏற்பட்டது.



ஈராக்கில் தான் தீவிரவாத தாக்குதல்கள் அதிகம்!
[Monday 2017-07-24 08:00]

உலகளவில் 2016ம் ஆண்டில் அதிகளவு தீவிரவாத தாக்குதல் நடந்த நாடுகளின் பட்டியலில் ஈராக் முதலிடம் பிடித்துள்ளது. அமெரிக்கா வெளியிட்டுள்ள Conuntry Report on Terrorism என்ற பட்டியலில் 2965 தீவிரவாத தாக்குதலுடன் ஈராக் முதலிடத்தில் உள்ளது.1340 தாக்குதல்களுடன் ஆப்கானிஸ்தான் இரண்டாம் இடத்திலும், 972 தாக்குதல்களுடன் இந்தியா மூன்றாம் இடத்திலும், 737 தாக்குதல்களுடன் பாகிஸ்தான் நான்காம் இடத்திலும் உள்ளது.


SELVI-HOMES-09-02-17
Tharsi-home-15-10-2016
Mahesan-Remax-169515-Seithy
Easankulasekaram-Remax-300716
Elankeeran-debt-solution-25-06-2016
<b> 30-06-2017 அன்று கனடா-ரொரன்டோவில் நடைபெற்ற மின்னல் 2017 நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள்-குணா
<b> 24-06-2017 அன்று கனடா-ரொரன்டோவில் பரதமைல் நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள்-குணா
<b> 10-06-2017 அன்று கனடா - ரொரன்டோவில்          இராகாலயா நுண்கலைக்கூடம் வழங்கிய கானமாருதம் 2017 நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள்-குணா