Untitled Document
November 20, 2017 [GMT]
  • Welcome
  • Welcome
கல்வியிலும் விளையாட்டிலும் சிறந்து விளங்க வேண்டும்! - முதலமைச்சரின் எதிர்பார்ப்பு இது
[Sunday 2017-07-16 05:00]

கல்வியிலும், விளையாட்டிலும் முன்னணியில் உள்ள ஒரு மாகாணமாகத் திகழ வேண்டும் என வட மாகாண முதலமைச்சர் சீ.வி விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். அகில இலங்கை பாடசாலைகளுக்கு இடையேயான மினி மரதன் தெரிவுப் போட்டி மற்றும் வீதி ஓட்ட நிகழ்வுகள் யாழ்ப்பாணம் துரையப்பா விளையாட்டு மைதானத்தில்நேற்று மாலை 7 மணியளலவில் இடம்பெற்றது. குறித்த நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே இவ்வாறு கூறியுள்ளார்.

கல்வியிலும், விளையாட்டிலும் முன்னணியில் உள்ள ஒரு மாகாணமாகத் திகழ வேண்டும் என வட மாகாண முதலமைச்சர் சீ.வி விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். அகில இலங்கை பாடசாலைகளுக்கு இடையேயான மினி மரதன் தெரிவுப் போட்டி மற்றும் வீதி ஓட்ட நிகழ்வுகள் யாழ்ப்பாணம் துரையப்பா விளையாட்டு மைதானத்தில்நேற்று மாலை 7 மணியளலவில் இடம்பெற்றது. குறித்த நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே இவ்வாறு கூறியுள்ளார்.

  

இன்றைய தோல்விகள் யாவும் நாளைய வெற்றிக்குப் படிகளாக அமைய வேண்டும். எனினும் விளையாட்டு நிகழ்வுகளில் எமது மாணவர்கள் வேகமாக முன்னேறிவரும் இன்றைய ஆரோக்கியமான நிலை தொடர வாழ்த்துகள். விளையாட்டுப் போட்டிகளில் மட்டுமன்றி கல்வியிலும் சிறந்து விளங்கி எதிர்காலத்தில் கல்வியில் உயர்ச்சி நிலையை அடைவதுடன் பண்பட்ட ஒரு சமூகத்தையும் உருவாக்குவதற்கு நாம் அனைவரும் ஒன்றாக இணைந்துகொண்டு பாடுபட வேண்டும். எதிர்பார்ப்புக்கு விஞ்சிய சாதனைகளை நாம் எமது இளைஞர் யுவதிகளிடம் இன்று எதிர் பார்க்கின்றோம்.

அத்துடன், நெஸ்லே நிறுவனத்தின் முழு ஆதரவில் இடம்பெறுகின்ற அகில இலங்கைப் பாடசாலைகளுக்கு இடையேயான மினி மரதன் ஓட்டப் போட்டியின் தெரிவுப் போட்டிகள் வடமாகாணம், வடமத்திய மாகாணம், கிழக்கு மாகாணம் ஆகிய மூன்று மாகாணங்களுக்கும் இடையே மேற்கொள்ளப்பட்டு வெற்றியாளர்கள் இறுதிப் போட்டிக்காக வடமாகாணத்தில் இதுபோன்ற பாடசாலைகளுக்கு இடையிலான நிகழ்வு முதல் முறையாக மிகச் சிறப்பாக நடைபெற்றிருப்பது எமக்கு மகிழ்வையும் மனத்திருப்தியையும் உண்டாக்குகின்றன.

நெஸ்லே நிறுவனத்தின் ஏற்பாட்டில் 2011ம் ஆண்டு வடமாகாணத்தில் சகல மட்டத்தினருக்கும் நடத்தப்பட்ட மரதன் ஓட்டப்போட்டியில் 7500 போட்டியாளர்கள் வரை கலந்து கொண்டு அந்த நிகழ்வை சிறப்பித்திருந்தமை நினைவு கூரப்படுவதுடன், அந்த நிகழ்வானது ஆசியாவிலேயே சிறந்த சாதனையாக இதுவரை முறியடிக்கப்படாத ஒரு RECORD ஆக விளங்குவது இந் நிறுவனத்திற்கு கிடைத்த ஒரு மாபெரும் வெற்றியாகும்.

தூர ஓட்டமான மரதன் என்பதன் உத்தியோகபூர்வ ஓடுந் தூரம் 26 மைல் 385 யார்களாகும். வழமையாக இது தெருவில் ஓடும் ஓட்டப் பந்தயமாகவே இருந்து வருகின்றது. பீடிபீடேஸ் என்ற கிரேக்க போர் வீரர் மரதன் என்ற இடத்தில் நடந்த போரில் அதென்ஸ் நகர கிரேக்கர்கள் வென்று விட்டார்கள் என்ற செய்தியை ஓடி வந்து அந்த மக்களுக்குத் தெரிவித்துவிட்டு உடனே உயிர் நீத்ததாகவும் அந்த நிகழ்வை நினைவுப்படுத்தும் முகமாகவே மரதன் ஓட்டப் போட்டி தொடங்கியதாகவும் கூறப்படுகிறது.

1896 இல் நவீன ஒலிம்பிக் போட்டிகள் தொடங்கியபோது மரதனும் ஒரு தூர ஓட்ட நிகழ்வாக இருந்தது. ஆனால் ஓடவேண்டிய தூரம் 26 மைல்கள் 385 யார்களாகத் தீர்மானிக்கப்பட்டது 1921 ஆம் ஆண்டிலேயே. இன்றைய மினி மரதன் ஓட்டப்போட்டியுடன் சேர்த்து இன்னோர் வீதி ஓட்ட நிகழ்வும் நடைபெற்றிருந்தது. மினி மரதன் 21கி.மீ தூரத்தையும் வீதி ஓட்டம் 5 கி.மீ தூரத்தையும் கொண்டதாக காணப்பட்டது.

இதில் கலந்து கொண்ட வீர வீராங்கனைகள் அனைவரதும் உடல்நிலை தகுதிகள் பற்றி யாழ். போதனா வைத்தியசாலை வைத்தியர்களால் இன்று காலை வைத்தியப் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு சான்றிதழ்கள் பெறப்பட்டவர்கள் மட்டுமே இப்போட்டிகளில் கலந்துகொள்ள அனுமதிக்கப்பட்டிருந்தனர். இதன்மூலம் அவர்களின் உடற்தகுதி நிலை உறுதிப்படுத்தப்பட்டிருந்தது. அத்துடன் இன்றைய போட்டிகள் இங்கிருந்து ஆரம்பித்து காங்கேசன்துறை வீதியூடாக தட்டாதெரு, சுன்னாகம் வரை சென்று மீண்டும் அப்பாதையில் திரும்ப வந்து துரையப்பா விளையாட்டு அரங்கை வீரர்கள் அடைந்திருக்கின்றார்கள்.

சன நெரிசல் மிகுந்த இவ்வீதியூடாக இந்நிகழ்வை வடமாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் றொஷான் பெர்ணான்டோ தொடக்கி வைத்தார். அத்துடன், 150க்கு மேற்பட்ட பொலிஸாரை வீதி ஒழுங்குப் பணிகள் மற்றும் வீரர்களுக்கான பாதுகாப்புக் கடமைகளுக்கு ஈடுபடுத்தினார்.மேலதிகமாக 03 நோயாளர் காவு வண்டிகள், வைத்திய உதவியாளர்கள், மற்றும் மோட்டார் சைக்கிள் உதவியாளர்கள் என மிகக் கூடுதலான பாதுகாப்பு ஒழுங்குகள் மேற்கொள்ளப்பட்டிருந்தமை இத்தருணத்தில் நன்றியறிதலுடன் நினைவுகூரப்படுகின்றது.

இவ்வாறான நிகழ்வுகள் நடாத்தப்படும் போது இந்த நிகழ்வுகளை சீராக ஒழுங்கு செய்வதோடு வீரர்களின் பாதுகாப்பும் உறுதி செய்யப்படுதல் மிக அத்தியவசியமாகும். அந்த வகையில் வடமாகாண பொலிஸ் துறையினர் மிகச் சிறப்பாக செயற்பட்டுள்ளமை பாராட்டுக்குரியது. எமது வீர வீராங்கனைகள் விளையாட்டு நிகழ்வுகளில் காட்டுகின்ற ஆர்வம் மற்றும் ஈடுபாடு என்பன வடமாகாண பாடசாலை மாணவ மாணவியருக்கு இடையேயான போட்டிகளின் போதும் எம்மால் அவதானிக்கக்கூடியதாக இருந்தது.

இந்த வருடம் நடைபெற்ற போட்டிகளில் கடந்தகாலம் போன்று 15 வயதிற்குட்பட்டவர்கள் மற்றும் 17, 19 வயதுக்கு உட்பட்டவர்கள் என்ற பிரிவுகள் மாற்றப்பட்டு 12, 14, 16, 18, 20 என 5 பிரிவுகளாக தேசிய ரீதியில் மாற்றப்பட்டுள்ளது. இதனால் குறிப்பிட்ட பிரிவினருக்கான அடைவு மட்டங்கள் கல்வித் திணைக்கள அதிகாரிகளால் தீர்மானிக்கப்பட்டிருந்தன.

ஓட்டப்பந்தயங்களில் எதிர்பார்த்த நேர அளவுகளை விடக் குறைவாகவும் மற்றும் களப் பந்தயங்களில் எதிர்பார்த்த உயர, தூர அளவுகளை விட கூடுதலாகவும் தமது திறமைகளை வெளிப்படுத்தியவர்களுக்கு அவர்களுக்கான சான்றிதழ்களுடன் மேலதிகமாக வர்ணச் சான்றிதழ்களும் வழங்கப்பட்டன. இதற்கான வர்ணச் சான்றிதழ்கள் 200 வரை போதுமானதென திணைக்களம் தீர்மானித்த போதும் போட்டியின் போது 350 சான்றிதழ்கள் வரை அவசர அவசரமாக அச்சேற்ற வேண்டிய தேவை ஏற்பட்டது.

இதன்மூலம் எமது வீர வீராங்கனைகள் எமது எதிர்பார்ப்பை விஞ்சிவிட்டார்கள் என்ற உண்மை தெரிய வருகின்றது என வட மாகாண முதலமைச்சர் சீ.வி. விக்னேஸ்வரன் குறிப்பிட்டுள்ளார்.

  
   Bookmark and Share Seithy.comஜனாதிபதி ஆணைக்குழு முன் இன்று ஆஜராகிறார் பிரதமர் ரணில்! - இலங்கை வரலாற்றில் முதல் முறை
[Monday 2017-11-20 07:00]

மத்திய வங்கி பிணை முறி மோசடி தொடர்பில் ஆராயும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க இன்று காலை முன்னிலையாகவுள்ளார். அண்மையில் குறித்த ஆணைக்குழுவில் முன்னிலையாகி விளக்கமளிக்க தாம் தயார் என பிரதமர் தெரிவித்திருந்தார். அதனடிப்படையில் அவருக்கு சாட்சியமளிக்க ஆணைக்குழு அழைப்பு விடுத்திருந்தது.புலிகளின் பாடல்கள் ஒலிபரப்பப்பட்டதா? - ஜனநாயகப் போராளிகள் கட்சியிடம் விசாரணை Top News
[Monday 2017-11-20 07:00]

மாவீரர் தினத்தை முன்னிட்டு முல்லைத்தீவில் நடத்தப்படும் மாவீரர் பெற்றோர் கௌரவிப்பு மற்றும் வணக்க நிகழ்வுகளில் விடுதலைப் புலிகளின் எழுச்சி கீதங்கள் இசைக்கவிடப்படுகின்றதா என்று பொலிஸார் விசாரணை நடத்தியுள்ளனர். புதுகுடியிருப்பு ஜனநாயப் போராளிகள் கட்சி அலுவலகத்தில் பொலிஸார் இது தொடர்பில் விசாரணை ஒன்றையும் நடத்தியதாக தெரிவிக்கபடுகின்றது.சுயேட்சையாக தனித்துப் போட்டி, ஒத்துழைக்காவிடின் துரோகிகளாக ஒதுக்கி வைக்கப்படுவர்! - காரைதீவு கூட்டத்தில் முடிவு
[Monday 2017-11-20 07:00]

உள்ளுராட்சித்தேர்தலில் காரைதீவு பிரதேசசபைக்கு சுயேட்சையாகப் போட்டியிடுவதென காரைதீவு மக்கள் நேற்று தீர்மானம் ஒன்றை நிறைவேற்றியுள்ளனர். காரைதீவு விபுலானந்த மணி மண்டபத்தில் அறங்காவலர் சபைச் செயலாளர் சி.நந்தேஸ்வரன் தலைமையில் நேற்று ஊர்ப்பொதுக்கூட்டம் நடைபெற்றது.சுமார் 3 மணிநேரம் இடம்பெற்ற இக்கூட்டத்தில் ஊருக்கான மகாசபையை அமைப்பதென்றும் அதன் முதற்கட்டமாக பிரிவுதோறும் ஒவ்வொரு உறுப்பினர்களைத் தெரிவு செய்ததோடு தலைவர், செயலாளர், பொருளாளர் உள்ளிட்ட நிறைவேற்றுச்சபையும் தெரிவு செய்யப்பட்டது.வதந்தியால் மீண்டும் வாகனங்கள் முண்டியடிப்பு!
[Monday 2017-11-20 07:00]

மீண்டும் பெற்றோல் தட்டுப்பாடு ஏற்படலாம் என்ற அச்சத்தில், நேற்று மாலை முதல், எரிபொருள் நிரப்பு நிலையங்கள் பலவற்றில், வாகனங்கள் நீண்ட வரிசையில் நி்ன்றதைக் காண முடிந்தது. எனினும் பெற்றோல் தட்டுப்பாடு ஏதும் கிடையாது என, இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.வவுனியாவில் பெற்றோல் குண்டு வீச்சில் இரண்டு கடைகள் நாசம்! Top News
[Monday 2017-11-20 07:00]

வவுனியா நகரில் பள்ளிவாசல் பகுதியில் அமைந்துள்ள கடைத்தொகுதியில் இன்று அதிகாலை தீ விபத்தில் இரு கடைகள் எரிந்து நாசமாகியுள்ளதுடன், இரு கடைகள் பகுதியளவில் எரிந்து சேதமாகியுள்ளன.எம்.பிக்களின் சிறப்புரிமை மீறப்பட்டு விட்டது! - ஐதேக எம்.பி போர்க்கொடி
[Monday 2017-11-20 07:00]

கோப் உறுப்பினர்களின் தொலைபேசி அழைப்புகள் சம்பந்தமான தகவல்களை, பிணைமுறி தொடர்பான ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவில் சமர்ப்பித்தமை, நாடாளுமன்ற உறுப்பினர்களின் சிறப்புரிமை மீறலாகுமென, ஐக்கிய தேசியக் கட்சியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர் தெரிவித்தனர்.குடாநாட்டில் மஹிந்த அணி வேட்பாளர்களை திரட்டும் நடவடிக்கை தீவிரம்!
[Monday 2017-11-20 07:00]

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான, ஸ்ரீ லங்கா பொதுஜன முன்னணியின் சார்பாக, யாழ். மாவட்டத்திலிருந்து உள்ளூராட்சிமன்றத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் விண்ணப்பங்களைப் பரிசீலிக்கும் நடவடிக்கைகள், முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.கொக்குவில் தொழில்நுட்பக் கல்லூரி மாணவர்கள் ஐவர் கைது!
[Monday 2017-11-20 07:00]

கொக்குவில் தொழில்நுட்பக் கல்லூரியில், இரு மாணவர் குழுக்களுக்கிடையில் இடம்பெற்ற மோதல் சம்பவம் தொடர்பில், ஐந்து மாணவர்களை நேற்று முன்தினம் மாலை கைதுசெய்ததாக, யாழ்ப்பாணம் பொலிஸார் தெரிவித்தனர்.மின்னல் தாக்கி பெண் பலி!
[Monday 2017-11-20 07:00]

மட்டக்களப்பு- துறைநீலாவணை 8 ஆம் வட்டார கிராமத்தில் நேற்றுக் காலை மின்னல் தாக்கி இரண்டு பிள்ளைகளின் தாயான ரோபாலன் கலைவாணி (35 வயது) உயிரிழந்தார். தொலைக்காட்சி பார்த்துக் கொண்டிருந்த நிலையில் மின்னல் தாக்கத்திற்கு அச்சமடைந்து குறித்த பெண் தொலைக்காட்சியினை நிறுத்த எத்தனித்த போது இடி மின்னல் விழுந்ததன் காரணமாக தரையில் தலை அடிபட்ட நிலையில் படுகாயமடைந்திருந்தார்.தேசியக்கொடியை தூக்கிய சம்பந்தனுக்கு நீங்கள் காட்டிய நல்லெண்ணம் என்ன?
[Sunday 2017-11-19 21:00]

அமைச்சர் மனோ தெற்கு சிங்கள தலைமைகளை நோக்கி கேள்வி தேசிய கொடியை தூக்க மறுத்த வடமாகாணசபை அமைச்சரை கண்டிப்போம். ஆனால், இன்று இந்த அமைச்சர் தேசிய கொடியை தூக்கவில்லை என்பதில் குறை காணும் தென்னிலங்கை தீவிரவாதிகள், அன்று தேசியக்கொடியை தூக்கிய சம்பந்தனுக்கு காட்டிய நல்லெண்ணம் என்ன?யாழ். குடாநாட்டில் வாள்வெட்டு சந்தேக நபர்கள் 47 பேர் கைது!
[Sunday 2017-11-19 18:00]

யாழ்ப்பாணத்தில் அண்மையில் இடம்பெற்ற தாக்குதல் சம்பவங்கள் தொடர்பில் 47 பேர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளதாக, பொலிஸார் தெரிவித்துள்ளனர். அண்மையில் யாழ்ப்பாணத்தின் கோப்பாய், மானிப்பாய் போன்ற பகுதிகளில் சிலர் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது. இந்த சம்பவம் தொடர்பில் பொலிஸ்மா அதிபரின் உத்தரவுக்கு அமைய, வட மாகாணத்திற்குப் பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபரின் நேரடி கண்காணிப்பின் கீழ் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக, பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவான் குணசேகர தெரிவித்தார்.தேசியக்கொடி பிரதிபலிக்கும் மக்களை உதாசீனம் செய்யக் கூடாது! - விக்னேஸ்வரன்
[Sunday 2017-11-19 18:00]

தேசியக் கொடி என்பது ஒரு நாட்டின் மக்களை அடையாளப்படுத்துகின்றது. மக்களுக்குள் முரண்பாடுகள் இருக்கலாம். கட்சிகளுள் வேற்றுமைகள் இருக்கலாம். ஆனால் அதை வைத்து தேசியக்கொடி பிரதிபலிக்கும் மக்களை உதாசீனம் செய்யக் கூடாது என முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.வறுமை நிலையில் முதல் ஐந்து இடங்களில் வடக்கு, கிழக்கிலுள்ள மாவட்டங்கள்!
[Sunday 2017-11-19 18:00]

வடக்கு கிழக்கு மாகாணங்களிலுள்ள தமிழ் மக்கள் வாழும் மாவட்டங்கள் வறுமை நிலையில் முதன்மை நிலையில் உள்ளதாக இலங்கை மத்திய வங்கியின் மதிப்பீடுகள் தெரிவிக்கின்றன. கிளிநொச்சி, முல்லைத்தீவு, மட்டக்களப்பு, திருகோணமலை, யாழ்ப்பாணம் ஆகிய ஐந்து மாவட்டங்களும் நாடளாவிய ரீதியில் வறுமை நிலையில் முதல் ஐந்து இடங்களிலுள்ளன என இலங்கை மத்திய வங்கியின் வறுமை ஒழிப்பு பிரிவின் குழுக்களின் தலைவர் ஆர்.ஸ்ரீ.பத்மநாதன் தெரிவித்தார்.தமிழ் இனவாதம் வலிமை பெற்றால், சிங்கள இனவாதம் வலுப்பெறும்! - அநுரகுமார
[Sunday 2017-11-19 18:00]

இலங்கையில் இனவாத மனோநிலை உருவாகியுள்ளதாக ஜே.வி.பியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார். நேற்று நாடாளுமன்றத்தில் உரையாற்றிய அவர், “இந்தநிலைக்கு அரசியல் வாதிகளே காரணம்.தேசிய கொடியை ஏற்றுவதற்கு வடக்கு மாகாண கல்வி அமைச்சர் சர்வேஸ்வரன் மறுப்பு தெரிவித்துள்ளார். இது தமிழ் தேசிய கூட்டமைப்பின் நிலைப்பாடா? என்பதை தமிழ் தேசிய கூட்டமைப்பினர் நாடாளுமன்றத்திற்கு கூறவேண்டும்.காங்கேசன்துறை கடலில் 55 கிலோ கஞ்சா மீட்பு!
[Sunday 2017-11-19 18:00]

காங்கேசன்துறைக் கடற்பரப்பில் 55 கிலோ கஞ்சா இன்று மீட்கப்பட்டது. காங்கேசன்துறை கடற்படையினரே கஞ்சாவை மீட்டதாகவும் சந்தேகநபர் எவரும் கைது செய்யப்படவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டது. மீட்கப்பட்ட கஞ்சா பொதியை காங்கேசன்துறை பொலிஸாரிடம் ஒப்படைக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.இரட்டைக்குடியுரிமை அதிகாரிகளுக்கும் ஆப்பு?
[Sunday 2017-11-19 18:00]

அரசாங்க நிறுவனங்களின் உயர் பதவிகளில் உள்ள இரட்டை குடியுரிமை பெற்ற தலைவர்கள் மற்றும் நிறைவேற்று அதிகாரிகள் தொடர்பில் அறிக்கை ஒன்றை வழங்குமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.அச்சுவேலியில் கஞ்சாவுடன் ஒருவர் கைது!
[Sunday 2017-11-19 18:00]

அச்சுவேலி - வல்லை வீதிப் பகுதியில் 2 அரைக் கிலோ கஞ்சா வைத்திருந்த குற்றச்சாட்டில் ஒருவர் இன்று கைது செய்யப்பட்டார். வல்லைப் பகுதியைச் சேர்ந்த 25 வயதுடைய நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டார் என அச்சுவேலிப் பொலிஸார் தெரிவித்தனர். மேலதிக விசாரணைகளைப் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.புதன்கிழமை புதுடெல்லி செல்கிறார் ரணில்!
[Sunday 2017-11-19 18:00]

பிரதமர் ரணில் விக்ரமசிங்க எதிர்வரும் 22 ஆம் திகதி புதன்கி்ழமை இந்தியாவுக்குப் பயணம் மேற்கொள்ளவுள்ளார். இரண்டு நாள் பயணமாக இந்தியாவுக்குச் செல்லும் அவர், இந்திய அரசியல் தலைவர்கள் பலருடனும் சந்திப்பில் ஈடுபடவுள்ளார். அவருடன் அமைச்சர்களான மங்கள சமரவீர, மலிக் சமரவிக்ரம உள்ளிட்ட உயர் மட்டக்குழுவினரும் பயணிக்கவுள்ளனர்.வடக்கு, கிழக்கில் முஸ்லிம் காங்கிரஸ் தனித்துப் போட்டி!
[Sunday 2017-11-19 18:00]

உள்ளூராட்சித் ​தேர்தலில், வடக்கு மற்றும் கிழக்கில் தனித்துப் போட்டியிடுவதற்கு முஸ்லிம் காங்கிரஸ் தீர்மானித்துள்ளதாக, கட்சியின் செயலாளர் நிஷாம் காரியப்பர் தெரிவித்தார். இவ்விடயம் தொடர்பாக மத்திய செயற்குழுக் கூட்டத்திலேயே இறுதித் தீர்மானம் எடுக்கப்படும் எனவும், அவர் தெரிவித்தார்.தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி கட்சியின் வட்டுக்கோட்டைத் தொகுதி அலுவலக திறப்புவிழா! Top News
[Sunday 2017-11-19 18:00]

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி- அகில இலங்கைத் தமிழ் காங்கிரஸ் கட்சியின் வட்டுக்கோட்டைத் தொகுதி அலுவலக திறப்புவிழா நேற்று சங்கரத்தை வீதி, வட்டுக்கோட்டையில் இடம்பெற்றது. வட்டு மண்ணின் மைந்தன் பிரபல இளம் சட்டத்தரணி கனகரட்ணம் சுகாஸ் அவர்களது தலைமையில் மேற்படி நிகழ்வு இடம்பெற்றது.


SELVI-HOMES-09-02-17
Mahesan-Remax-169515-Seithy
Tharsi-home-15-10-2016
Easankulasekaram-Remax-300716
<P>
 <b> 13-08-2017 அன்று ரொரன்டோவில் நடைபெற்ற இசை மாலைப் பொழுது - 2017 நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள்-குணா
</p>
<b>  கனடா-ரொரன்டோவில்  ஜூலை 29ம் 30ம்தி கதிகளில் நடைபெற்ற World Tamil Badminton Federation 5th annual tournament நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள்-குணா
<b>  கனடா-ரொரன்டோவில்  ஜூலை 7ம் 8ம் 9ம்தி கதிகளில் நடைபெற்ற குதூகலம் 2017 நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள்-குணா