Untitled Document
July 22, 2017 [GMT]
  • Welcome
  • Welcome
கோவண ஆர்ப்பாட்டத்துக்குத் தயாராகிறது கொழும்பு!
[Monday 2017-07-17 08:00]

 கொழும்பில் எதிர்வரும் 26ஆம் திகதி கோவணத்துடன் ஆர்ப்பாட்டமொன்றை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக, தேசிய விவசாயிகள் கூட்டமைப்பு அறிவித்துள்ளது.   விவசாயிகளுக்கான மானியம் மற்றும் இழப்பீடுகள் இல்லாமல் செய்தல், உரமானியத்தை உரிய முறையில் வழங்காமை, அறுவடைக்கு உரிய விலையைப் பெற்றுக்கொடுப்பதற்கு நடவடிக்கை எடுக்காமை ஆகியவற்றுக்கு எதிர்ப்பு தெரிவித்தே, இந்தக் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தை முன்னெடுக்கவுள்ளதாக தேசிய விவசாயிகள் கூட்டமைப்பின் ஏற்பாட்டாளர் நாமல் கருணாரத்ன தெரிவித்தார்.

கொழும்பில் எதிர்வரும் 26ஆம் திகதி கோவணத்துடன் ஆர்ப்பாட்டமொன்றை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக, தேசிய விவசாயிகள் கூட்டமைப்பு அறிவித்துள்ளது. விவசாயிகளுக்கான மானியம் மற்றும் இழப்பீடுகள் இல்லாமல் செய்தல், உரமானியத்தை உரிய முறையில் வழங்காமை, அறுவடைக்கு உரிய விலையைப் பெற்றுக்கொடுப்பதற்கு நடவடிக்கை எடுக்காமை ஆகியவற்றுக்கு எதிர்ப்பு தெரிவித்தே, இந்தக் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தை முன்னெடுக்கவுள்ளதாக தேசிய விவசாயிகள் கூட்டமைப்பின் ஏற்பாட்டாளர் நாமல் கருணாரத்ன தெரிவித்தார்.

  

இந்தக் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தில், வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களை உள்ளடங்கிய நாடளாவிய ரீதியில் உள்ள சகல பிரதேசங்களையும் சேர்ந்த விவசாயிகளும் பங்கேற்பர் என்றும் அவர் அறிவித்துள்ளார். கொழும்பு, கோட்டை ரயில்வே நிலையத்துக்கு முன்பாக முன்னெடுக்கவுள்ள இந்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தின் பின்னர், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவைச் சந்தித்து, மகஜரொன்றையும் கையளிப்பதற்கு ஏற்பாடு செய்துள்ளதாக, அவர் மேலும் தெரிவித்தார்.

இந்தக் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்துக்கு உரிய முறையில் பதிலளிப்பதற்கு அரசாங்கம் தவறும் பட்சத்தில், மாவட்ட ரீதியில் தொடர்ச்சியான ஆர்ப்பாட்டங்களை முன்னெடுப்பதற்கும் கலந்தாலோசிக்கப்பட்டுள்ளதாக, அவர் மேலும் தெரிவித்தார்.

  
   Bookmark and Share Seithy.comவானத்தில் இருந்து விழுந்த மர்ம திரவத்தினால் வேம்படி மாணவிகள் 18 பேர் மயக்கம்! - யாழ்ப்பாணத்தில் பரபரப்பு
[Friday 2017-07-21 19:00]

வானத்தில் இருந்து விழுந்த மஞ்சள் நிற திரவம் உடலில் பட்டதால் யாழ்ப்பாண நகரில் உள்ள வேம்படி மகளிர் உயர்தரப் பாடசாலை மாணவிகள் 18 பேர் மயக்கமடைந்தனர். இவர்கள் யாழ். போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.எம்மையும் ஐ.நாவையும் ஏமாற்றுவதற்கே, காணாமற்போனோர் அலுவலகம்! - உறவுகள் விசனம் Top News
[Friday 2017-07-21 19:00]

காணாமற் போனவர்கள் தொடர்பான அலுவலகத்தை, சர்வதேசமும் புலம்பெயர் அமைப்புக்களும் வரவேற்பது வேதனைக்குரியது என, காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சார்பாக, கனகரஞ்சினி யோகராசா தெரிவித்தார். கிளிநொச்சி கந்தசுவாமி ஆலய முன்றலில், 152ஆவது நாட்களாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் இடத்தில், இன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஊடக சந்திப்பிலேயே, அவர் இதனைத் தெரிவித்தார்.இரண்டு பௌர்ணமிகளின் பின் அதிர்ச்சி காத்திருக்கிறது! - என்கிறார் மஹிந்த
[Friday 2017-07-21 19:00]

தேசிய அரசாங்கத்தில் இருந்து மிகப்பெரிய குழுவொன்று விரைவில் எம்முடன் இணையவுள்ளது. இன்னும் இரண்டு பௌர்ணமி முடிந்த பின்னர் அதிர்ச்சி காத்திருக்கின்றது. அதேபோல் ஐக்கிய தேசியக் கட்சியில் இருந்தும் ஒரு குழு இணையவுள்ளதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷ தெரிவித்தார்.காணாமல்போனோர் பணியகம்- ஐ.நா பொதுச்செயலாளர் பாராட்டு!
[Friday 2017-07-21 19:00]

காணாமல் போனோர் அலுவலகத்தை உருவாக்க அரசாங்கம் எடுத்திருக்கும் நடவடிக்கைக்கு ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் அந்தோனியோ குடேரஸ் பாராட்டுத் தெரிவித்துள்ளார். காணாமல் போன தமது விருப்பத்திற்குறிய உறவினர்கள் தொடர்பில் உண்மையை தேடும் இலங்கையர்களுக்கு இது முக்கியமான நடவடிக்கை என்று அவர் கூறியுள்ளார்.சிஐடியின் அழைப்பாணையை நிராகரித்த சிவாஜிலிங்கம்!
[Friday 2017-07-21 19:00]

குற்றப்புலனாய்வுப் பிரிவினரின் அழைப்பாணையை வடமாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் நிராகரித்துள்ளார். யாழ். ஊடக அமையத்தில், கடந்த மே மாதம் 8ஆம் திகதியன்று, ஊடகவியலாளர் சந்திப்பொன்றை நடத்திய வடமாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம், மே 18ஆம் திகதி முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் அனுஷ்டிக்கப்படவுள்ளமையால், அத்தினத்தில் முல்லைத்தீவு மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டம் நடத்தப்படக் கூடாது எனக் குறிப்பிட்டிருந்தார்.ஐ.நாவின் அரசியல் விவகாரச் செயலாளருடன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சந்திப்பு! Top News
[Friday 2017-07-21 19:00]

தமிழ்த் தேசியக்கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான இரா.சம்பந்தனுக்கும் ஐக்கிய நாடுகள் சபையின் அரசியல் விவகாரப் பொதுச்செயலாளர் ஜெஃப்ரி பெல்ட்மனுக்கும் இடையில் இன்று சந்திப்பு இடம்பெற்றுள்ளது. கொழும்பு – பௌத்தலோகா மாவத்தையிலுள்ள ஐ.நா அலுவலகத்தில் இன்றுகாலை 9.30 மணியளவில் இந்தச் சந்திப்பு இடம்பெற்றுள்ளது.வடக்கின் வரட்சி நிலை குறித்து யாழ்ப்பாணத்தில் ஆராய்வு! Top News
[Friday 2017-07-21 19:00]

வடமாகாணத்தின் வரட்சி நிலமை தொடர்பாக, யாழ்.மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலில், அனர்த்த முகாமைத்துவ அமைச்சர் அனுர பிரியதர்ஷன யாப்பா ஆராய்ந்துள்ளார். இதன்போது, யாழ்.மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள வரட்சி தொடர்பாக மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பாகவும் ஆராயப்பட்டது.அனந்திக்கு 144 மில்லியன் ரூபா ஒதுக்கீடு!
[Friday 2017-07-21 19:00]

வடமாகாண ஆளுநர் நிதிய வைப்பில் இருந்த 144 மில்லியன் ரூபாவை வடமாகாண மகளிர் விவகார அமைச்சர் அனந்தி சசிதரன் பெறுப்பேற்க வேண்டும் என, வடமாகாண அவைத்தலைவர் சி.வி.கே.சிவஞானம் தெரிவித்துள்ளார். வடமாகாண சபை கடந்த மூன்று வருடங்கள் 9 மாத கால பகுதியில் மேற்கொண்ட நடவடிக்கைகள் தொடர்பிலான மீளாய்வு செய்வதற்கான விசேட அமர்வு இன்று நடைபெற்றது. இதன் போதே அவைத்தலைவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.வடக்கு மாகாணசபையின் வினைத்திறன் - எதிர்க்கட்சித் தலைவர் காட்டம்!
[Friday 2017-07-21 19:00]

வடக்கு மாகாண சபையின் 99ஆவது அமர்வு இன்று நடைபெற்றது. இதில் வடக்கு மாகாண எதிர்க்கட்சித் தலைவர் சி.தவராசா வட மாகாண சபையின் கடந்த கால செயற்பாடுகள் தொடர்பான மீளாய்வு தொடர்பாக உரையாற்றினார்.வடக்கு மாகாண சபையின் கடந்த காலச் செயற்பாடுகள் தொடர்பாகக் காட்டமான கருத்துக்களை அவர் முன்வைத்தார்.காணாமல்போனோர் செயலக சட்டத்தினால் நாட்டுக்கு ஆபத்து! - சிங்கள ராவய
[Friday 2017-07-21 19:00]

காணாமல்போனோர் செயலக சட்டத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கைச்சாத்திட்டுள்ளதால், தேசிய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது என சிங்கள ராவய அமைப்பின் செயலாளர் மாகல்கந்தே சுதந்த தேரர் தெரிவித்தார். ராஜகிரிய சத்தர்மாராஜித விகாரையில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே இதனைத் தெரிவித்தார்.முழங்காவிலில் தீவிபத்து - கணவன் ,மனைவி காயம்!
[Friday 2017-07-21 19:00]

கிளிநொச்சி, முழங்காவில், நாச்சிக்குடா செபஸ்ரியா் நகர் பகுதியில் இன்று இடம்பெற்ற தீ விபத்தில் பெண் ஒருவர் காயமடைந்தார். அதே பகுதியைச் சேர்ந்த ஒரு பிள்ளையின் தாயான கிறிஸ்ரியா (வயது-33) என்பரே காயமடைந்தார். அவரைக் காப்பாற்றச் சென்ற அவரது கணவரும் தீக்காயங்களுக்கு உள்ளானார். காலை உணவு தயாரிககும்போதே இந்த விபத்து ஏற்பட்டது என்று தெரிவிக்கப்பட்டது. காயமடைந்த குடும்பப் பெண் முழங்காவில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுப் பின்னர் மேலதிக சிகிச்சைக்காக கிளிநொச்சி மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார்.மாட்டு வண்டியில் வந்த வெள்ளைக்கார மாப்பிள்ளை! Top News
[Friday 2017-07-21 19:00]

மீசாலையில் இன்று நடந்த திருமணத்தில், ஜேர்மனி நாட்டைச் சேர்ந்தவரான மாப்பிள்ளை மாட்டு வண்டியில் வந்து ஆச்சரியத்தை ஏற்படுத்தினார். ஜேர்மனியில் இருந்து வந்த, வெள்ளைக்கார மாப்பிள்ளையும், தமிழ்ப் பெண்ணும் மீசாலை வெள்ளைமாவடி பிள்ளையார் ஆலயத்தில் திருமண பந்தத்தில் இணைந்து கொண்டனர். மணமகனும், மணப் பெண்ணும் மாட்டு வண்டியில் ஆலயத்துக்கு வந்தனர். இந்த திருமணத்தில் மணமகனின் உறவினர்கள் தமிழர் கலாசார உடையில் காணப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.வடக்கு மாகாணசபையில் இன்று மீளாய்வு விவாதம்! - பிரச்சினைகள் சூடு பிடிக்க வாய்ப்பு
[Friday 2017-07-21 07:00]

வடமாகாண சபையின் மூன்றரை வருட செயற்பாடுகள் தொடர்பாக மீளாய்வு செய்வதற்கான விசேட அமர்வு இன்று நடைபெறவுள்ளது. வடமாகாண சபையின் மூன்றரை வருட செயற்பாடு தொடர்பாக ஆராய்வதற்கான விசேட அமர்வு ஒன்றை நடத்த வேண்டும் என எதிர்க்கட்சி தலைவர் சி.தவராசா மற்றும் மாகாணசபை ஆளுங்கட்சி உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் ஆகியோர் அவைத் தலைவர் சீ.வி.கே.சிவஞானத்திடம் கூட்டாக கோரிக்கை விடுத்திருந்தனர்.வித்தியா கொலையில் கைதான பிரதி பொலிஸ்மா அதிபர் லலித் ஜெயசிங்க சேவையில் இருந்து இடைநிறுத்தம்!
[Friday 2017-07-21 07:00]

புங்குடுதீவு மாணவி வித்தியா கொலை வழக்கு தொடர்பாக கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள சிரேஸ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் லலித் ஜயசிங்க பணி இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ளார். சுவிஸ் குமார் என்ற சந்தேக நபர் தப்பிச் செல்ல உதவியதாக சிரேஸ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.கனடாவில் நடைப்பயிற்சிக்குச் சென்ற தமிழரைக் காணவில்லை! Top News
[Friday 2017-07-21 07:00]

கனடாவின் Stouffville பகுதியில் நடைப்பயிற்சிக்குச் சென்ற 61 வயதுடைய பொன்ராசா நாகராஜா என்பவர் கடந்த 18ஆம் திகதி முதல் காணாமல் போயுள்ளதாக யோர்க் பிராந்திய பொலிஸார் தெரிவித்துள்ளனர். கடந்த 18ஆம் திகதி காலை நடைபயிற்சியில் ஈடுபடுவதற்காக சென்ற அவர் வீடு திரும்பவில்லை என தெரிவிக்கப்படுகின்றது. அவர் தனது நாயுடன் வழமையாக நடை பயற்சிக்கு செல்வார். எனினும் அன்றைய தினம் அவர் தனியாகவே சென்றுள்ளார்.கொழும்பு துறைமுகத்தில் ஜப்பானின் இரண்டு இராட்சத போர்க்கப்பல்கள்!
[Friday 2017-07-21 07:00]

ஜப்பானிய கடற்படையின் இசுமோ,சசனாமி என பெயரிடப்பட்ட இரு கப்பல்கள் நேற்று கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தன. இசுமோ என பெயரிடப்பட்ட கப்பலானது 248 மீட்டர் நீளமும் 38 மீட்டர் அகலமுடையது. இதில் 970 கடற்படையினர் உள்ளனர். மேலும் சசனாமி எனும் கப்பல் 151 மீற்றர் நீளமும் 17.4 மீற்றர் அகலமுடையது. இதில் 175 கடற்படையினர் உள்ளனர்.கையெழுத்திட்ட ஜனாதிபதிக்கு அமெரிக்கா, கனடா வரவேற்பு! - ஐ.நாவும் மகிழ்ச்சி
[Friday 2017-07-21 07:00]

காணாமல் போனோர் அலுவலக சட்டத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கையெழுத்திட்டுள்ளதற்கு, அமெரிக்கா, கனடா, ஐ.நா என்பன வரவேற்றுள்ளன. இலங்கையின் ஸ்திரமான சமாதானத்துக்கான ஒரு படிக்கல்லாக தாம் இந்த சட்டத்தில் கையெழுத்திட்டதாக ஜனாதிபதி மைத்திரிபால தமது டுவிட்டர் தளத்தின் ஊடாக தெரிவித்திருந்தார்.புலம்பெயர் புலிகளே முடிவெடுக்கிறார்கள்! - புலம்புகிறார் டலஸ்
[Friday 2017-07-21 07:00]

நாட்டின் பாதுகாப்பு தொடர்பான தீர்மானத்தை முன்னெடுப்பது புலம்பெயர் புலி ஆதரவாளர்களே என்று கூட்டு எதிர்க் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் டளஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார்.மஹிந்தவின் உடற்பயிற்சிப் படங்களை வெளியிட்ட நாமல்! Top News
[Friday 2017-07-21 07:00]

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச உடற்பயிற்சியில் ஈடுபட்டுள்ள புகைப்படங்களை, நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தனது டுவிட்டர் தளத்தில் வெளியிட்டுள்ளார். 'யோகா மீதான மஹிந்த ராஜபக்சவின் நீண்டகால பற்றும் அர்ப்பணிப்பும்' எனக் குறிப்பிட்டு நாமல் ராஜபக்ச இந்தப் புகைப்படங்களை பதிவேற்றம் செய்துள்ளார்.புதிய வருமான வரிச் சட்டமூலத்தை தோற்கடிப்போம்! -ஜேவிபி சூளுரை
[Friday 2017-07-21 07:00]

சர்வதேச நாணய நிதியத்தின் தேவைக்காகவே புதிய வருமான வரிச் சட்டமூலம் வகுக்கப்பட்டுள்ளது என்றும், அதனை எப்படியும் தோற்கடிப்போம் என்றும் சூளுரைத்துள்ளார் ஜேவிபியின் தலைவர், அநுர குமார திசாநாயக்க. புதிய வருமான வரிச் சட்டமூலம் சர்வதேச நாணய நிதியத்தினால் வகுக்கப்பட்டு இலங்கைப் பாராளுமன்றத்தில் நிறைவேற்றிக் கொள்வதற்காக தாக்கல் செய்யப்பட்ட ஒன்று. இந்த சட்டமூலத்தின் முலம் நாட்டுக்கும் மக்களுக்கும் பாதகம் ஏற்படுத்தும் பாரியளவான வரித்திருத்தங்கள் முன் வைக்கப்படுகின்றன.


Mahesan-Remax-169515-Seithy
Tharsi-home-15-10-2016
SELVI-HOMES-09-02-17
Easankulasekaram-Remax-300716
Elankeeran-debt-solution-25-06-2016
<b> 24-06-2017 அன்று கனடா-ரொரன்டோவில் பரதமைல் நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள்-குணா
<b> 10-06-2017 அன்று கனடா - ரொரன்டோவில்          இராகாலயா நுண்கலைக்கூடம் வழங்கிய கானமாருதம் 2017 நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள்-குணா
<b> 03-06-2017 அன்று கனடா - ரொரன்டோவில் நடைபெற்ற இதயராகங்கள் இசை நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள்-குணா