Untitled Document
August 19, 2017 [GMT]
  • Welcome
  • Welcome
ரவிராஜ் வழக்கில் விடுதலையான ஹெட்டி மாயம்: - மேன்முறையீட்டு நீதிமன்றம் பிறடிவிறாந்து!
[Saturday 2017-08-12 11:00]
 
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தபோது படுகொலை செய்யப்பட்ட நடராஜா ரவிராஜின் படுகொலையுடன் தொடர்புடையவர் என்று பிரதிவாதியாகக் குறிப்பிடப்பட்டு, விடுதலை செய்யப்பட்ட கடற்படை லெப்டினன் கொமாண்டர் பிரசாத் ஹெட்டியாராச்சியைக் காணவில்லை என, முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. இவ்விடயம் தொடர்பில், அவருடைய மனைவியால், வெல்லம்பிட்டி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யபட்டுள்ளதாக, வெல்லம்பிட்டி பொலிஸாரால், கொழும்பு மேலதிக நீதவான் ரங்க திஸாநாயக்கவின் கவனத்துக்குக் கொண்டுவரப்பட்டது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தபோது படுகொலை செய்யப்பட்ட நடராஜா ரவிராஜின் படுகொலையுடன் தொடர்புடையவர் என்று பிரதிவாதியாகக் குறிப்பிடப்பட்டு, விடுதலை செய்யப்பட்ட கடற்படை லெப்டினன் கொமாண்டர் பிரசாத் ஹெட்டியாராச்சியைக் காணவில்லை என, முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. இவ்விடயம் தொடர்பில், அவருடைய மனைவியால், வெல்லம்பிட்டி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யபட்டுள்ளதாக, வெல்லம்பிட்டி பொலிஸாரால், கொழும்பு மேலதிக நீதவான் ரங்க திஸாநாயக்கவின் கவனத்துக்குக் கொண்டுவரப்பட்டது.

  

அவர், உள்நாட்டில் உள்ளாரா அல்லது வெளிநாட்டுக்குச் சென்றுள்ளாரா என்ற கோணங்களில் விசாரணை செய்துவருவதாக பொலிஸார் அறிவித்ததையடுத்து, அது தொடர்பில், ஒக்டோபர் 26ஆம் திகதி அறிக்கை சமர்பிக்குமாறு, நீதவான் உத்தரவிட்டார். இதேவேளை, நடராஜா ரவிராஜ் எம்.பி படுகொலை வழக்கில், கொழும்பு மேல் நீதிமன்றத்தினால் வழங்கப்பட்ட தீர்ப்பை எதிர்த்து, ரவிராஜ் எம்.பியின் மனைவியால் சமர்ப்பிக்கப்பட்ட மேன்முறையீட்டு மனுவின் இரண்டாவது பிரதிவாதி​யாக, பிரசாத் ஹெட்டியாராச்சி குறிப்பிடப்பட்டுள்ளார்.

அவரைக் கைதுசெய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு, மேன்முறையீட்டு நீதிமன்றம், பிறடிவிறாந்து பிறப்பித்துள்ளதுடன், கொழும்பில் மாணவர்கள் ஐவர் கடத்தப்பட்டு, திருகோணமலையிலுள்ள கடற்படை முகாமுக்குக் கொண்டுசெல்லப்பட்ட விவகாரம் தொடர்பில், கோட்டை நீதவான் நீதிமன்றமும் அவருக்குப் பிடியாணை பிறப்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

  
   Bookmark and Share Seithy.comசித்தாண்டியில் காணாமல் ஆக்கப்பட்ட 62 பேரின் 27ஆவது ஆண்டு நினைவு தினம் அனுஷ்டிப்பு! Top News
[Saturday 2017-08-19 18:00]

மட்டக்களப்பு, சித்தாண்டியில் காணாமல்ஆக்கப்பட்ட 62 பேரின், 27ஆவது ஆண்டு நினைவு தினம், இன்று அனுஷ்டிக்கப்பட்டது. 1990ஆம் ஆண்டு காலப்பகுதியில் அசாதாரண சூழ்நிலை காரணமாக தொடர்ச்சியான சுற்றிவளைப்புகள் நடந்து கொண்டிருந்த வேளையில் வாழைச்சேனை, பேத்தாளை, முறாவோடை, கிண்ணையடி, கிரான், சந்திவெளி, முறக்கொட்டான்சேனை, சித்தாண்டி, மாவடிவேம்பு ஆகிய கிராமங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான பொதுமக்கள் உயிர் அபாயத்தை எதிர்நோக்கினர்.பிரபாகரனை தமிழ் மக்கள் போற்றியது ஏன்? - எரிக் சொல்ஹெய்முக்கும் இன்னமும் குழப்பம்
[Saturday 2017-08-19 18:00]

விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனை, தமிழ் மக்கள் ஏன் மகத்தான ஒரு தலைவராக விரும்பினார்கள் என்று தம்மால் புரிந்து கொள்ள முடியவில்லை என்று இலங்கைக்கான நோர்வேயின் முன்னாள் சமாதானத் தூதுவர் எரிக் சொல்ஹெய்ம் தெரிவித்துள்ளார்.விடுதலைப் புலிகள் மீதான ஐரோப்பிய ஒன்றியத்தின் தடை தவறானது: - பிரதமர் வி.உருத்திரகுமாரன் !
[Saturday 2017-08-19 18:00]

தமிழீழ விடுதலைப் புலிகள் மீதான ஐரோப்பிய ஒன்றியத்தின் தடை என்பது தவறான அணுகமுறை எனத் தெரிவித்துள்ள பிரதமர் வி.உருத்திரகுமாரன், தமிழீழ விடுதலைப் புலிகள் மீதான தடையை நீக்கிய ஐரோப்பிய நீதிமன்றத்தின் தீர்ப்பை, நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் வரவேற்பதாக தெரிவித்துள்ளார். கடந்த சில வாரங்களுக்கு முன்னர் ஐரோப்பிய ஒன்றியத்தின் தடைநீக்கம் தொடர்பிலான தனது நிலைப்பாட்டினை மீள்உறுதி செய்திருந்தது.சமூக ஊடகங்களில் இடம்பெறும் சிறுவர் துஷ்பிரயோகங்களுக்கு எதிரான பாதயாத்திரை! Top News
[Saturday 2017-08-19 18:00]

இணையவெளியில் சமூக ஊடகங்களில் இடம்பெறும் சிறுவர் துஷ்பிரயோகங்களுக்கெதிரான பாதயாத்திரை, ஏறாவூர் நகர் மற்றும் செங்கலடியிலும், இன்று இடம்பெற்றது. ஏறாவூர் நகர பொலிஸ் நிலையம் முன்பாக மணிக்கூட்டுக்கோபுர சந்தியிலிருந்தும் செங்கலடி-பதுளை வீதிச் சந்தியிலிருந்தும் ஆரம்பமான இந்த பாத யாத்திரை, செங்கலடி யுனைட்டட் விளையாட்டு மைதானத்தைச் சென்றடைந்ததுடன், இணையவெளி சிறுவர் துஷ்பிரயோகங்களுக்கெதிரான பிரச்சாரமும் இடம்பெற்றது.இந்தியப் படையினருக்கு கோப்பாயில் அஞ்சலி செலுத்திய தென்பிராந்திய தளபதி! Top News
[Saturday 2017-08-19 18:00]

இந்தியாவின் தென்பிராந்திய இராணுவத் தளபதி பி.எம்.ஹரிஸ் தலைமையிலான குழுவினர் இன்று யாழ்ப்பாணத்திலுள்ள இந்திய இராணுவத்தினரின் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினர். 1987 - 89ஆம் ஆண்டு இந்திய இராணுவம் யாழ்ப்பாணத்தில் நிலைகொண்டிருந்தபோது இடம்பெற்ற மோதல்களில் விடுதலைப் புலிகளால் கொல்லப்பட்ட இந்திய இராணுவத்தினருக்கு அஞ்சலி செலுத்தும் முகமாக குறித்த இந்தியாவின் தெற்கு பிராந்திய இராணுவத் தளபதி அடங்கிய குழுவினர் யாழ்ப்பாணம் வருகை தந்துள்ளனர்.இந்த வருட இறுதிக்குள் இந்தியாவிடம் மத்தல விமான நிலையம்!
[Saturday 2017-08-19 18:00]

மத்தல விமான நிலையத்தை இந்த ஆண்டு இறுதிக்குள் இந்தியாவிடம் கையளிக்க எதிர்பார்த்திருப்பதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க கூறியுள்ளார். அத்துரலிய பிரதேசத்தில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றிய பிரதமர் ரணில் விக்ரமசிங்க, மத்தல விமான நிலையத்தை இந்த வருட இறுதிக்குள் இந்திய நிறுவனத்திடம் கையளிக்க எதிர்பார்ப்பதாக குறிப்பிட்டுள்ளார்.செப்ரெம்பருக்குள் மகிந்தவை பிரதமராக்க வேண்டும்! - காலக்கெடு விதிக்கும் பிரதி அமைச்சர்
[Saturday 2017-08-19 18:00]

செப்ரெம்பர் மாத இறுதிக்குள் பிரதமர் பதவியை முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுக்கு வழங்கவில்லை என்றால், தாமும் இன்னும் சிலரும் அரசாங்கத்தில் இருந்து விலகி கூட்டு எதிர்க்கட்சியில் இணைந்து கொள்வதை தடுக்க முடியாது என பிரதியமைச்சர் அருந்திக பெர்னாண்டோ தெரிவித்துள்ளது.சாவகச்சேரி சந்தைக்கு தேங்காய் கொண்டு சென்றவர் டிப்பர் மோதி மரணம்!
[Saturday 2017-08-19 18:00]

வீட்டில் பறித்த தேங்காயை சாவகச்சேரி சந்தையில் விற்பனை செய்வதற்கு கொண்டு சென்றவர் டிப்பர் மோதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இந்த விபத்து இன்று காலை சாவகச்சேரி நீதிமன்றத்துக்கு முன்னால் நடந்தது. சைக்கிளில் தேங்காய் மூடையைக் கட்டிக் கொண்டு சாவகச்சேரி பொதுச் சந்தைக்குச் சென்றவரை, எதிரே வந்த டிப்பர் வாகனம் மோதித் தள்ளியது.வெலிக்கடைப் படுகொலை - தனக்குத் தெரியாது என்கிறார் கோத்தா!
[Saturday 2017-08-19 18:00]

வெலிக்கடை சிறைச்சா​லை படுகொலை சம்பந்தமாக தனக்கு எதுவும் தெரியாது என முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச தெரிவித்துள்ளார். சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்த நியமிக்கப்பட்ட குழுவின் விசாரணை அறிக்கையில், சிறைச்சாலைக்குள் நடத்தப்பட்ட படை நடவடிக்கை பற்றி கோத்தபாய ராஜபக்ச அறிந்திருந்தாக கூறப்பட்டுள்ளது. இந்த நிலையிலேயே தனக்கு எதுவும் தெரியாது என முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கூறியுள்ளார்.முறாவோடை மைதான காணி பிரச்சனைக்கு விரைவில் தீர்வு! Top News
[Saturday 2017-08-19 18:00]

நீண்டகால பிரச்சனையாக இருந்து வந்த முறாவோடை மைதான காணி பிரச்சினைக்கு விரைவில் தீர்வு பெற்றுத் தரப்படும் என்று கோறளைப்பற்று பிரதேச அபிவிருத்திக் குழு இணைத் தலைவர்களான கிராமிய பொருளாதார அலுவல்கள் பிரதியமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஸ்வரன் ஆகியோர் தெரிவித்தனர்.வவுனியாவில் கஞ்சாவுடன் ஒருவர் கைது!
[Saturday 2017-08-19 18:00]

யாழ்ப்பாணத்திலிருந்து நீர்கொழும்பிற்கு கஞ்சாவை கொண்டு செல்ல முற்பட்ட சந்தேகநபர் நேற்று இரவு வவுனியா மத்திய பேருந்து நிலையத்தில் 2 கிலோ கேரளா கஞ்சா பொதியுடன்பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். வவுனியா பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் யு.பி.எஸ்.கருணாநாயக்க எனும் 50 வயதான சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.வெங்காய வெடியால் யானை மரணம்! Top News
[Saturday 2017-08-19 18:00]

வவுனியா பாலமோட்டையில் இறந்த நிலையில் யானை ஒன்று மீட்கப்பட்டுள்ளது. பாலமோட்டை ஊரல்குளத்தில் யானை ஒன்று இறந்து காணப்பட்டதை அவதானித்த ஊர் மக்கள் ஓமந்தை பொலிஸாருக்கு தகவல் வழங்கினர். ஓமந்தை பொலிஸாரும், வன ஜீவராசிகள் திணைக்களமும் சம்பவ இடத்துக்கு சென்றதுடன், வன ஜீவராசிகள் திணைக்கள வைத்திய அதிகாரியால் யானை இறந்ததற்குரிய காரணம் தொடர்பாக மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது.ஜெனிவா தீர்மானமே வெளிவிவகார அமைச்சின் பிரதான சவால்! - திலக் மாரப்பன
[Saturday 2017-08-19 07:00]

மனித உரிமைகளுக்கெதிராக ஐ.நா மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முன்வைக்கப்பட்டுள்ள பிரேரணையே வெளிவிவகார அமைச்சுக்குள்ள மிகப்பெரிய சவால் என்று புதிய வெளிவிவகார அமைச்சர் திலக் மாரப்பன நேற்று தெரிவித்தார். புதிய வெளிவிவகார அமைச்சராக தனது கடமைகளை நேற்றுப் பொறுப்பேற்றுக் கொண்டதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு கூறினார்.புலித்தேவனின் கடைசி தொலைபேசி அழைப்பு - நேரடியாக பதிலளிக்காத எரிக் சொல்ஹெய்ம்!
[Saturday 2017-08-19 07:00]

போரின் இறுதிக்கட்டத்தில், 2009ஆம் ஆண்டு மே 17ஆம் நாள், விடுதலைப் புலிகளின் சமாதான செயலக பணிப்பாளர் புலித்தேவனிடம் இருந்து, தமக்கு தொலைபேசி அழைப்பு வந்ததாகவும், ஆனால் தாம் அவருடன் நேரடியாகப் பேசவில்லை என்றும் நோர்வேயின் முன்னாள் சமாதானத் தூதுவர் எரிக் சொல்ஹெய்ம் தெரிவித்துள்ளார்.சன் சீ கப்பலில் ஆட்கடத்தலுக்கு உதவியவருக்கு 18 வருட சிறைத்தண்டனை விதிக்கக் கோருகிறது கனேடிய சட்டத்துறை!
[Saturday 2017-08-19 07:00]

சன் சீ கப்பலில் ஆட்களைக் கடத்தினார் என்று குற்றம்சாட்டப்பட்டுள்ள தமிழிருக்கு 18 வருட சிறை தண்டனை வழங்கப்பட வேண்டும் என கனேடிய சட்டத்துறை கோரியுள்ளது. தாய்லாந்தில் இருந்து 492 இலங்கை தமிழர்களுடன் சட்டவிரோத பயணத்தில் ஈடுபட்டிருந்த 'சன் சீ' என்ற கப்பல் 2010 ஆண்டு கனடாவின், பிரிட்டிஷ் கொலம்பியாவில் நங்கூரமிட்டது.சர்வஜன வாக்கெடுப்புக்குத் தயார்!
[Saturday 2017-08-19 07:00]

சர்வஜன வாக்கெடுப்பு ஒன்று நடத்தப்படுமானால் அதற்கு தயார் என தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார். சர்வஜன வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டுமென உத்தரவிடப்பட்டு ஆறு வாரங்களுக்குள் சர்வஜன வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும். அரசியல் சாசன திருத்தங்கள் அல்லது அது தெடார்பான காரணிகளுக்காக அரசியல் சாசனத்தின் அடிப்படையில் சர்வஜன வாக்கெடுப்பு நடத்த ஜனாதிபதிக்கு அதிகாரம் உண்டு என அவர் தெரிவித்துள்ளார்.ஆளுனருக்கு டெனீஸ்வரன் அவசர கடிதம்!
[Saturday 2017-08-19 07:00]

வட மாகாண போக்குவரத்து, மீன்பிடி அமைச்சராகத் தானே தொடர்ந்தும் பதவியில் நீடித்து வருவதாக வடமாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரேவிற்கு வடமாகாண அமைச்சர் பா.டெனீஸ்வரன் அறிவித்துள்ளார். இது தொடர்பாக நேற்று முன்தினம் அவர் வடமாகாண ஆளுநருக்கு அனுப்பி வைத்துள்ள அவசர கடிதத்தில் தெரிவித்துள்ளார்நல்லூர் கந்தன் தேர்த்திருவிழா நாளை!
[Saturday 2017-08-19 07:00]

வரலாற்றுச் சிறப்பு மிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலய பெருந்திருவிழாவின் தேர்த் திருவிழா நாளை காலை 07 மணிக்கு பக்திபூர்வமாக இடம்பெறவுள்ளது. 23 ஆம் திருவிழாவான இன்று சனிக்கிழமை மாலை-05 மணிக்குச் சப்பறத் திருவிழா இடம்பெறவுள்ளதுடன் நாளை மறுதினம் திங்கட்கிழமை காலை-07 மணிக்குத் தீர்த்தத் திருவிழாவும் நடைபெறும்.ஒருபோதும் நான் அப்படிக் கூறவில்லை! - யோகேஸ்வரன் எம்.பி.
[Saturday 2017-08-19 07:00]

வாழைச்சேனை, முறாவோடை சக்தி வித்தியால மைதானக் காணி முஸ்லிம்களுக்குரியது என, நான் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் கூறியதில்லை என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சீனித்தம்பி யோகேஸ்வரன் தெரிவித்தார்.மட்டக்களப்பில் நேற்றிரவு வயோதிபரின் சடலம் மீட்பு!
[Saturday 2017-08-19 07:00]

மட்டக்களப்பு லொயிட் அவன்னியூக்கு முன்பால் உள்ள வாவிக்கரையோரம் வயோதிபர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது . நேற்றிரவு சுமார் 7.30 மணியளவில் பொலிஸாருக்கு கிடைத்த தகவலை அடுத்து குறித்த சடலம் மீட்கப்படுள்ளது. சுமார் 60 வயது மதிக்கத்தக்க வயோதிபர் ஒருவரே இவ்வாறு சடலமாக மீட்கப்படுள்ளதாக முதற்கட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.


Easankulasekaram-Remax-300716
Mahesan-Remax-169515-Seithy
SELVI-HOMES-09-02-17
Elankeeran-debt-solution-25-06-2016
Tharsi-home-15-10-2016
<b>  கனடா-ரொரன்டோவில்  ஜூலை 29ம் 30ம்தி கதிகளில் நடைபெற்ற World Tamil Badminton Federation 5th annual tournament நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள்-குணா
<b>  கனடா-ரொரன்டோவில்  ஜூலை 7ம் 8ம் 9ம்தி கதிகளில் நடைபெற்ற குதூகலம் 2017 நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள்-குணா
<b> 30-06-2017 அன்று கனடா-ரொரன்டோவில் நடைபெற்ற மின்னல் 2017 நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள்-குணா