Untitled Document
October 24, 2017 [GMT]
  • Welcome
  • Welcome
ஜெனிவா தீர்மான அமுலாக்கம் குறித்து 36 ஆவது கூட்டத்தொடரில் கேள்வி எழுப்பத் தயாராகும் அமைப்புகள்!
[Saturday 2017-08-12 15:00]

ஐக்­கிய நாடுகள் மனித உரிமை பேர­வையின் 36 ஆவது கூட்டத் தொடர்   அடுத்­த­மாதம் 11 ஆம்­ தி­க­தி­யி­லி­ருந்து  29 ஆம்­ தி­க­தி­வரை  நடை­பெ­ற­வுள்ள நிலையில்   இலங்கை குறித்து  எந்­த­வொரு விட­யமும் கலந்­து­ரை­யா­டப்­ப­ட­மாட்­டாது என எதிர்­பார்க்­கப்­ப­டு­கி­றது. எனினும்  சர்­வ­தேச மனித உரிமை அமைப்­புக்கள் மற்றும்  அரச சார்­பற்ற நிறு­வ­னங்கள்   ஜெனிவா பிரே­ர­ணையின் அமு­லாக்கம் தொடர்பில் இம்­மு­றையும்  ஜெனிவா கூட்டத் தொடரில் கேள்வி எழுப்­பு­ம் என தெரி­விக்­கப்­ப­டு­கி­றது.

ஐக்­கிய நாடுகள் மனித உரிமை பேர­வையின் 36 ஆவது கூட்டத் தொடர் அடுத்­த­மாதம் 11 ஆம்­ தி­க­தி­யி­லி­ருந்து 29 ஆம்­ தி­க­தி­வரை நடை­பெ­ற­வுள்ள நிலையில் இலங்கை குறித்து எந்­த­வொரு விட­யமும் கலந்­து­ரை­யா­டப்­ப­ட­மாட்­டாது என எதிர்­பார்க்­கப்­ப­டு­கி­றது. எனினும் சர்­வ­தேச மனித உரிமை அமைப்­புக்கள் மற்றும் அரச சார்­பற்ற நிறு­வ­னங்கள் ஜெனிவா பிரே­ர­ணையின் அமு­லாக்கம் தொடர்பில் இம்­மு­றையும் ஜெனிவா கூட்டத் தொடரில் கேள்வி எழுப்­பு­ம் என தெரி­விக்­கப்­ப­டு­கி­றது.

  

இம்­முறை கூட்டத் தொடரில் இலங்கை தொடர்­பான எந்­த­வொரு விட­யமும் இடம்­பெ­று­வ­தற்­கான சாத்­தி­ய­மில்லை. காரணம் இலங்கை ஐக்­கி­ய­நா­டுகள் மனித உரிமை பேர­வையின் பிரே­ர­ணையை எவ்­வாறு நிறை­வேற்­று­கி­றது என்­பது தொடர்­பான இடைக்­கால அறிக்கை அடுத்­த­வ­ருடம் மார்ச் மாதம் நடை­பெ­ற­வுள்ள 37 ஆவது கூட்டத் தொட­ரி­லேயே சமர்ப்­பிக்­கப்­ப­ட­வுள்­ளது. அந்த வகையில் 36 ஆவது கூட்டத் தொடரில் இலங்கை தொடர்­பான எந்­த­வொரு விட­யமும் விவா­தத்­திற்கு எடுத்­துக்­கொள்­ளப்­ப­ட­மாட்­டாது.

கடந்த மார்ச் மாதம் நடை­பெற்ற ஐக்­கிய நாடுகள் மனித உரிமை பேர­வையின் 34ஆவது கூட்­டத்­தொடர் இலங்கை தொடர்­பாக ஒரு பிரே­ரணை நிறை­வேற்­றப்­பட்­டது. அதா­வது 2015 ஆம் ஆண்டு இலங்கை குறித்து நிறை­வேற்­றப்­பட்ட பிரே­ர­ணையை அமுல்­ப­டுத்­து­வ­தற்கு மேலும் இரண்­டு­வ­ரு­ட­கால அவ­காசம் வழங்கும் வகை­யி­லேயே இம்­முறை மார்ச் மாத பிரே­ரணை நிறை­வேற்­றப்­பட்­டது. அதன்­படி இந்த இரண்டு வரு­ட­கால அவ­கா­சத்தில் இலங்கை எவ்­வாறு பிரே­ர­ணையை அமுல்­ப­டுத்­து­கி­றது என்­பது தொடர்பில் இடைக்­கால அறிக்­கையை அடுத்­த­வ­ருடம் மார்ச் மாதம் நடை­பெ­ற­வுள்ள ஜெனிவா மனித உரிமை பேர­வையின் 37 ஆவது கூட்டத் தொடரில் முன்­வைக்க வேண்டும்.

அதன்­பின்னர் 2019 ஆம் ஆண்டு மார்ச் மாதம் நடை­பெ­ற­வுள்ள ஐ.நா. மனித உரிமை பேர­வையின் 40 ஆவது கூட்டத் தொடரில் இலங்கை இரண்­டு­வ­ரு­ட­கால அவ­கா­சத்தில் ஜெனிவா பிரே­ர­ணையை முழு­மை­யாக அமுல்­ப­டுத்­தி­யதா என்­பது தொடர்­பான இறுதி அறிக்­கையை சமர்ப்­பிக்­க­வேண்டும். இதன்­போது இலங்­கையும் ஒரு பரந்­து­பட்ட அறிக்­கையை ஜெனிவா மனித உரிமை பேர­வைக்கு சமர்ப்­பிக்கும் என எதிர்­பார்க்­கப்­ப­டு­கி­றது. அதே­போன்று ஐ.நா. மனிதவுரிமை அலு­வ­ல­கமும் இலங்கை தொடர்­பாக ஒரு பரந்­து­பட்ட அறிக்­கையை முன்­வைக்கும் என எதிர்­பார்க்­கப்­ப­டு­கி­றது.

மேலும் மனி­தா­பி­மான நிறு­வ­னங்­களும் சர்­வ­தேச அர­ச­சார்­பற்ற நிறு­வ­னங்­க­ளும் இலங்கை தொடர்பில் அறிக்­கை­களை தாக்கல் செய்யும் என தெரி­விக்­கப்­ப­டு­கி­றது. அதன்­படி அர­சாங்­க­மா­னது 2019 ஆம் ஆண்டு மார்ச் மாதத்­திற்குள் ஜெனிவா பிரே­ரணையை அமுல்­ப­டுத்­து­வ­தற்கு நட­வ­டிக்கை எடுக்­க­வேண்டும். குறிப்­பாக வெளி­நாட்டு நீதி­ப­தி­களின் பங்­கேற்­புடன் விசா­ரணை பொறி­முறை ஒன்றை உரு­வாக்கி பொறுப்­புக்­கூ­றலை முன்­னெ­டுக்­க­வேண்டும். அதில் பாதிக்­கப்­பட்ட மக்­க­ளுக்கு நீதி நிலை­நாட்­டப்­ப­ட­வேண்டும்.

அது­மட்­டு­மன்றி உண்­மையைக் கண்­ட­றிதல், நட்­ட­ஈ­டு­வ­ழங்­குதல், நீதியை நிலை­நாட்­டுதல் மற்றும் மீள் நிக­ழா­மையை உறுதி செய்தல். ஆகிய நான்கு விட­யங்­களின் அடிப்­ப­டையில் பொறுப்­புக்­கூ­றலை முன்­னெ­டுப்­ப­தாக அர­சாங்கம் உறு­தி­ய­ளித்­தி­ருக்­கி­றது. எப்­ப­டி­யி­ருப்­பினும் உண்­மையைக் கண்­ட­றியும் பிரிவின் கீழ் தற்­போது அர­சாங்கம் காணா­மல்­போனோர் தொடர்­பாக ஆராயும் அலு­வ­ல­கத்தை அமைத்­தி­ருக்­கி­றது. விரைவில் உண்­மையைக் கண்­ட­றியும் ஆணைக்­குழு ஒன்று நிறு­வப்­படும் எனத் தெரி­விக்­கப்­ப­டு­கி­றது.

தென்­னா­பி­ரிக்­காவில் முன்­னெ­டுக்­கப்­பட்ட உண்­மையைக் கண்­ட­றியும் ஆணைக்­குழு தொடர்­பான அனு­ப­வங்­க­ளையும் பெற்று இலங்­கையில் ஒரு ஆணைக்­கு­ழுவை அமைக்க நட­வ­டிக்கை எடுக்­கப்­ப­டு­மென அர­சாங்கம் தெரி­வித்து வரு­கி­றது. இதே­வேளை, கடந்­த­மாதம் இலங்­கைக்கு விஜயம் செய்த ஐக்­கி­ய­நா­டு­களின் பயங்­க­ர­வா­தத்­திற்­கான நட­வ­டிக்கை மற்றும் மனித உரிமை விவ­கா­ரங்­க­ளுக்­கான விசேட நிபுணர் பென் எமர்சன் கடும் விமர்­ச­னங்­களை முன்­வைத்­து­விட்டு சென்­றி­ருந்தார். அதா­வது பொறுப்­புக்­கூறல் செயற்­பாட்டில் எவ்­வி­த­மான முன்­னேற்­றத்­தையும் காண­மு­டி­ய­வில்லை என்றும் அந்த செயற்­பா­டுகள் ஒரு இடத் தில் நிறுத்தி வைக்­கப்­பட்­டுள்­ள­தா­கவே தெரி­வ­தா­கவும் அவர் கூறி­யி­ருந்தார்.

அது­மட்­டு­மன்றி இலங்கை அர­சாங்கம் குறித்த கால அவ­கா­சத்­திற்குள் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதியை வழங்காவிடின் இலங்கை விவகாரம் மனித உரிமை பேரவையிலிருந்து ஐ.நா. பாதுகாப்பு சபைக்கு செல்லும் சாத்தியம் இருப்பதாகவும் சர்வதேசத்தின் பொறுமைக்கும் ஒரு எல்லை உண்டு என்றும் கூறியிருந்தார். அவரின் இலங்கை விஜயம் தொடர்பான அறிக்கையையும் எதிர்வரும் மார்ச் மாதம் ஜெனிவா மனித உரிமை பேரவையில் சமர்ப்பிக்கவுள்ளார். அந்தவகையில் அடுத்த வருட மார்ச் மாதக் கூட்டத் தொடரில் இலங்கை தொடர்பாக பல்வேறு அறிக்கைகள் தாக்கல் செய்யப்படவுள்ளன.

  
   Bookmark and Share Seithy.com



யுத்தவெற்றி வீரர்களை பாதுகாப்பதாக கூறுவது நீதிமன்ற சுயாதீனத்தை மீறும் செயல்! - ஐ.நா நிபுணர் எச்சரிக்கை
[Tuesday 2017-10-24 08:00]

யுத்த வெற்றிவீரர்களை நீதிமன்றத்தின் முன் கொண்டுவரமாட்டோம் என யாரும் கூற முடியாது. அதனை நீதிமன்றமே தீர்மானிக்க வேண்டும். யுத்த வெற்றிவீரர்களை இவ்வாறு பாதுகாப்பதாக கூறுவது சுயாதீன நீதித்துறையின் பண்புகளை மீறுவதாகும் என உண்மை, நீதி, நட்டஈடு,மற்றும் மீள் நிகழாமை தொடர்பான ஐக்கிய நாடுகளின் விசேட நிபுணர் பப்லோ டி கீரீப் தெரிவித்தார்.



அரசியல் கைதிகளின் உண்ணாவிரதம் இன்று அல்லது நாளையுடன் முடிவுக்கு வரும் சாத்தியம்!
[Tuesday 2017-10-24 08:00]

தமிழ் அரசியல் கைதிகளின் உணவு தவிர்ப்பு போராட்டம் நாளையுடன் நிறைவுக்கு வரும் சாத்தியம் உள்ளதாக வட மாகாணசபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார். அத்துடன், போதைவஸ்த்து கடத்தல் மற்றும் பாரிய குற்றங்களை செய்த கைதிகளுடன் தமிழ் அரசியல் கைதிகள் இனிமேல் தடுத்துவைக்கப்படமாட்டார்கள் என்றும் அதற்கான உடனடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.



அரசியல் ஆதாயம் தேடுவதை நிறுத்துங்கள்! - கேப்பாப்பிலவு மக்கள்
[Tuesday 2017-10-24 08:00]

எமது போராட்டத்தை தாமே நடத்துவதாக உரிமை கோருவதை அரசியல் கட்சிகள் நிறுத்த வேண்டும். எமது போராட்டத்தை அரசியலாக்க வேண்டாம் என்று கேப்பாபிலவில் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்கள் தெரிவித்தனர் . இராணுவத்தின் வசம் உள்ள தமது காணிகளை விடுவிக்க வலியுறுத்தி கேப்பாபிலவு மக்கள் கடந்த எட்டுமாதங்களாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.



சம்பந்தனிடம் உடல் சோதனை செய்த மைத்திரியின் பாதுகாப்பு அதிகாரிகள்!
[Tuesday 2017-10-24 08:00]

தேசிய தீபாவளி நிகழ்வில் கலந்து கொள்ளச் சென்றிருந்த எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தனை, ஜனாதிபதி பாதுகாப்பு பிரிவின் அவமரியாதையாக நடத்தியுள்ளனர் என்று சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. கடந்த 15ஆம் திகதி ஜனாதிபதி, பிரதமர் தலைமையில் அலரி மாளிகையில் இடம்பெற்ற தேசிய தீபாவளி நிகழ்வில் கலந்து கொள்ளுமாறு எதிர்க்கட்சித் தலைவருக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.



விமானங்களைத் தயாரிக்கும் முயற்சியில் விமானப்படை!
[Tuesday 2017-10-24 08:00]

இலங்கையில் முதற்தடவையாக விமானப்படையினர், விமானம் தயாரிப்பு பணியில் ஈடுபடவுள்ளதாக விமானப்படை தளபதி எயார் மாஷல் கபில ஜயம்பதி தெரிவித்தார். இதற்கான தொழில்நுட்ப ஆய்வுகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.



கைது செய்யப்பட்ட மாகாணசபை உறுப்பினர் வீட்டில் துப்பாக்கி ரவைகள், குண்டு துளைக்காத கவச உடை மீட்பு!
[Tuesday 2017-10-24 08:00]

திவுலபிட்டிய, துனகஹா, பல்லபான வீதியின் ஹேன்பிட்டகெதர பிரதேசத்தில் நேற்று இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தையடுத்து ஐக்கிய தேசிய கட்சியின் மேல் மாகாணசபை உறுப்பினர் ரந்தீர் ரொட்ரிகோவும் அவரது மனைவியும் கைது செய்யப்பட்டுள்ளனர்.



வவுனியாவில் 10 ஊடகவியலாளர்களுக்கு இரத்தினதீப தேசிய சமூக விருதுகள்! Top News
[Tuesday 2017-10-24 08:00]

வவுனியா மாவட்டத்தில் ஊடகத்துறையில் நீண்டகாலமாக பணியாற்றி சமூகத்தின்பால் செயற்பட்ட பத்து ஊடகவியலாளர்கள் உட்பட 44 பேருக்கு இரத்தினதீப தேசிய சமூக விருதுகள் வழங்கி வைக்கும் நிகழ்வு வவுனியாவில் இடம்பெற்றது. நோர்த் மாஸ் மீடியா கல்லூரியின் பணிப்பாளர் அ. நபீஸ் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் மலையக கலைகலாசார மன்றம் சமூக சேவையாளருக்கான இரத்தின தீப தேசிய சமூக விருதுகளை வழங்கியிருந்தது.



கண்காணிப்புக்காக ஸ்கூட்டியில் சென்ற அமைச்சர்! Top News
[Tuesday 2017-10-24 08:00]

அமைச்சர் பைசர் முஸ்தபா தனது அமைச்சின் கீழ் மேற்கொள்ளப்பட்டு வரும் கிராமிய உட்கட்டமைப்பு வசதிகளை கண்காணிப்பதற்காக மோட்டார் சைக்கிளில் சென்று பார்வையிட்டுள்ளார். அமைச்சர் பைஸர் முஸ்தபா அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சருக்குரிய அதிகாரங்களை தேவையற்ற வகையில் பயன்படுத்தமாட்டார் என மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி சபைகள் அமைச்சு தெரிவித்துள்ளது.



இயக்கச்சியில் கஞ்சாவுடன் சிக்கினார் பெண்! Top News
[Tuesday 2017-10-24 08:00]

கிளிநொச்சி - இயக்கச்சி பகுதியில் கேரள கஞ்சாவுடன் பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். வெற்றிலைக்கேணி பகுதியிலிருந்து கொள்வனவு செய்யப்பட்ட கஞ்சா பொதியுடன் நேற்று மாலை திருகோணமலைக்கு செல்லவிருந்த நிலையிலேயே, குறித்த பெண் சிக்கியுள்ளார். சந்தேகநபர் வசம், 4.70 கிலோ கிராம் கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளது. கைதுசெய்யப்பட்டுள்ள பெண் 32 வயதுடையவர் எனத் தெரியவந்துள்ளது. இது தொடர்பான மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.



நம்பகமான பொறுப்புக்கூறல் இடம்பெறுவதை உறுதிப்படுத்த வேண்டும்! - ஐ.நா அறிக்கையாளர் Top News
[Monday 2017-10-23 19:00]

முன்னாள் இராணுவத் தளபதி ஜெனரல் ஜெகத் ஜயசூரியவுக்கு எதிராக பிரேசிலில் தொடரப்பட்டுள்ள வழக்கு, மிகப்பெரிய பிரச்சினையாக உருவெடுக்கலாம் என்று ஐ.நாவின் சிறப்பு அறிக்கையாளர் பப்லோ டி கிரெய்ப் எச்சரிக்கை செய்துள்ளார். இலங்கையில் 14 நாட்கள் பயணத்தை மேற்கொண்டிருந்த, உண்மையை ஊக்குவித்தல், நீதி, இழப்பீடு, மற்றும் மீள நிகழாமையை உத்தரவாதப்படுத்தலுக்கான ஐ.நாவின் சிறப்பு அறிக்கையாளர் பப்லோ டி கிரெய்ப் தமது பயணத்தின் முடிவில் இந்தக் கருத்தை வெளியிட்டுள்ளார்.



சுட்டுக்கொல்லப்பட்ட இளைஞனின் சடலம் உறவினர்களிடம் ஒப்படைப்பு! Top News
[Monday 2017-10-23 18:00]

அரியாலை கிழக்கு, மணியம்தோட்டம் பகுதியில் இனந்தெரியாத நபர்களின் துப்பாக்கி சூட்டில் உயிரிழந்த இளைஞரின் சடலம் இன்று மாலை உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. மணியம் தோட்டம் உதயபுரம் கடற்கரை வீதி சந்தியில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த டொன் போஸ்கோ ரிஸ்மன் மற்றும், நிஷாந்தன் ஆகியோர் மீது இனந்தெரியாதோரால் நேற்று பிற்பகல் துப்பாக்கி சூட்டு மேற்கொள்ளப்பட்டிருந்தது.



அரசியல் கைதிகளை விடுவிக்கக் கோரி பல்கலைக்கழக மாணவர்கள் கையெழுத்துப் போராட்டம்! Top News
[Monday 2017-10-23 18:00]

அநுராதபுர சிறைச்சாலையில் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ள அரசியல் கைதிகளின் கோரிக்கைகளை நிறைவேற்றி, அவர்களை விடுவிக்க வேண்டுமென வலியுறுத்தி யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் கையெழுத்துப் போராட்டமொன்றை இன்று ஆரம்பித்துள்ளனர்.





வடக்கில் சிங்களக் குடியேற்றங்களுக்கு சுமந்திரனும், செல்வமும் துணைபோகின்றனர்! - சுரேஸ் குற்றச்சாட்டு
[Monday 2017-10-23 18:00]

தமிழ்தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சுமந்திரனும் செல்வம் அடைக்கலநாதனும் தமிழர் பகுதிகளை சிங்கள மயமாக்குவதற்கு உடந்தையாக செயற்படுகின்றனர் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமசந்திரன் குற்றம்சாட்டியுள்ளார்.



அரசியல் கைதிகளை விடுவிக்கக் கோரி கிழக்கு பல்கலைக்கழக மாணவர்கள் போராட்டம்! Top News
[Monday 2017-10-23 18:00]

பயங்கரவாத தடைச் சட்டத்தை நீக்கவேண்டும், விசாரணையின்றி சிறைவாசம் அனுபவிக்கும் தமிழ் அரசியல் கைதிகளை நிபந்தனைகளின்றி விடுதலை செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து, கிழக்குப் பல்கலைக்கழக மாணவர்கள், இன்று கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.



3 பொலிஸ் குழுக்கள் விசாரணை!
[Monday 2017-10-23 18:00]

அரியாலை பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ள மூன்று பொலிஸ் குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளன.இந்த தகவலை பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ரூவான் குணசேகர தெரிவித்துள்ளார்.சம்பவம் தொடர்பில் ஏற்கனவே பலரிடம் வாக்கு மூலங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.



கொழும்பு வருகின்றன ஆறு அமெரிக்கப் போர்க்கப்பல்கள்!
[Monday 2017-10-23 18:00]

அமெ­ரிக்­காவின் ஆறு நாச­காரி போர்க்­கப்­பல்கள் இம்­மாத இறு­தியில் இலங்­கை வரவுள்ளன. விமானம் தாங்­கி போர்க்­கப்பல் ஒன்­றுடன் இணைந்தே இந்த போர்க்­கப்­பல்கள் இலங்­கை நோக்­கி பய­ணத்தை ஆரம்­பித்­துள்­ளன. இம்­மாதம் 28 ஆம் திக­தியில் இருந்து 31 ஆம் திக­திக்குள் கொழும்பு துறை­மு­கத்தை இவை வந்­த­டையும் என தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது. ஒரு வார காலம் இந்த கப்­பல்கள் இலங்­கையில் தரித்­தி­ருக்க வாய்ப்­புகள் உள்­ள­தா­கவும் கூறப்­ப­டு­கின்­றது.



இறம்பைக்குளத்தில் டிப்பர் கவிழ்ந்து ஒருவர் படுகாயம்! Top News
[Monday 2017-10-23 18:00]

ஏ9 வீதியூடாக வவுனியா நோக்கி பயணித்த டிப்பர் வாகனம் இன்று காலை ஓமந்தை, இறம்பைக்குளம் பகுதியில் வேகக்கட்டுப்பாட்டை மீறி பனை மரத்துடன் மோதி தடம்புரண்டு விபத்துக்குள்ளானது.இந்த விபத்தில் சாரதி காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ஓமந்தை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.



போருக்குப் பின்னர் தமிழ் மக்களின் அரசியல் விழிப்புணர்வு மந்தம்! - துரைரட்ணசிங்கம் எம்.பி Top News
[Monday 2017-10-23 18:00]

போர் முடிவுக்கு வந்த பிற்பாடு, மக்கள் மத்தியில் அரசியல் விழிப்புணர்வு மந்தகதியில் இருக்கின்றது. அற்ப சொற்ப சலுகைகளுக்காக மக்கள் பலரையும் நாடுகின்ற நிலைமை காணப்படுகின்றது.இவைகளில் இருந்து விடுபட்டு எமது மக்கள், விழிப்புணர்வுடன் செயற்பட வேண்டும் என திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் க.துரைரெட்ணசிங்கம் தெரிவித்தார்.



நாவற்குழியுடன் ரயில் சேவைகள் இடைநிறுத்தம்!
[Monday 2017-10-23 18:00]

கொழும்பு - காங்கேசன்துறை வரையான ரயில் சேவை நாவற்குழி ரயில் நிலையம் வரை மட்டுப்படுத்தப்படவுள்ளது. நாவற்குழியில் உள்ள ரயில் பாலத்தில் உள்ள திருத்த பணிகள் இடம்பெறுவதாலே குறித்த பகுதிகளுக்கான ரயில் சேவை இடை நிறுத்தப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.



எப்போது வேண்டுமானாலும் தேர்தலுக்குத் தயார்! - மஹிந்த
[Monday 2017-10-23 18:00]

பலவந்தமாக அரசியலமைப்பு திருத்தத்தை கொண்டு வருவதன் மூலம், நாட்டில் நல்லிணக்கத்தை கட்டியெழுப்புவது சிக்கலுக்குரியது என, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். மருதானையில் ஊடகங்களுக்கு கருத்து வௌியிட்ட போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார். அரசாங்கம் தேர்தலைப் பிற்போடுவது பயத்தினால் என குறிப்பிட்ட மஹிந்த, தேர்தல் எப்போது வந்தாலும் அதற்கு தாம் தயாராக இருப்பதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார்.


Mahesan-Remax-169515-Seithy
SELVI-HOMES-09-02-17
Easankulasekaram-Remax-300716
Tharsi-home-15-10-2016
<P>
 <b> 13-08-2017 அன்று ரொரன்டோவில் நடைபெற்ற இசை மாலைப் பொழுது - 2017 நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள்-குணா
</p>
<b>  கனடா-ரொரன்டோவில்  ஜூலை 29ம் 30ம்தி கதிகளில் நடைபெற்ற World Tamil Badminton Federation 5th annual tournament நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள்-குணா
<b>  கனடா-ரொரன்டோவில்  ஜூலை 7ம் 8ம் 9ம்தி கதிகளில் நடைபெற்ற குதூகலம் 2017 நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள்-குணா