Untitled Document
May 8, 2024 [GMT]
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு என்று பெயர் சூட்டியது கூட்டமைப்பு தான்! - ஆனந்தசங்கரி
[Sunday 2017-08-20 09:00]

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு  விடுதலைப் புலிகளால் வழிநடத்தப்படுகிறது என்ற மாயை உண்மைக்கு புறம்பானதாகும். உண்மையில் கூட்டமைப்பு சந்தேகத்துக்கிடமின்றி தமிழர் விடுதலைக் கூட்டணியாலே ஆரம்பிக்கப்பட்டது என்பதை ஆர்.சம்பந்தன் ஏற்றுக்கொண்டுள்ளார் என தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் ஆனந்த சங்கரி தெரிவித்துள்ளார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு விடுதலைப் புலிகளால் வழிநடத்தப்படுகிறது என்ற மாயை உண்மைக்கு புறம்பானதாகும். உண்மையில் கூட்டமைப்பு சந்தேகத்துக்கிடமின்றி தமிழர் விடுதலைக் கூட்டணியாலே ஆரம்பிக்கப்பட்டது என்பதை ஆர்.சம்பந்தன் ஏற்றுக்கொண்டுள்ளார் என தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் ஆனந்த சங்கரி தெரிவித்துள்ளார்.

  

தமிழர் விடுதலை கூட்டணியின் தலைவர் ஆனந்த சங்கரியால் விடுக்கப்பட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது. குறித்த அறிக்கையில் மேலும்-

எமது நாட்டில், குறிப்பாக தமிழ் மக்கள் பகிரங்கமாக தெய்வவாக்கு போன்ற உண்மையான விடயங்கள் என அறிந்தும் அதனை நம்பமாட்டார்கள். ஆனால் மனசாட்சிக்கு விரோதமாக பிள்ளையையும் கிள்ளிவிட்டு தொட்டிலையும் ஆட்டி தமது தேவைகளுக்காக, விடுதலைப் புலிகளை பயன்படுத்தி செயற்படும் சில சுயநல அரசியல்வாதிகள் கூறுவதை முழுமையாக நம்பி வீட்டுக் கூரைகளின் மீது ஏறிநின்று கத்துவார்கள்.

அதைவிட சிவராம் என்று அழைக்கப்படுகின்ற விடுதலைப்புலிகளின் தீவிர ஆதரவாளரான தராக்கி, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எந்தளவுக்கு கணிக்கப்படுகின்றதோ அதனை மிகைப்படுத்தி கூறுவதும், விடுதலைப் புலிகளாலேயே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உருவாக்கப்பட்டது என்ற மாயையும் பற்றி தெளிவாக கூறியுள்ளார்.

அவர் மேலும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு விடுதலைப் புலிகளால் வழிநடத்தப்படுகிறது என்ற மாயை உண்மைக்கு புறம்பானதாகும். உண்மையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சந்தேகத்துக்கிடமின்றி தமிழர் விடுதலைக் கூட்டணியாலே ஆரம்பிக்கப்பட்டது என்பதை ஆர்.சம்பந்தன் ஏற்றுக்கொண்டுள்ளார்.

ஈ.பி.ஆர்.எல்.எப், ரெலோ ஆகியவற்றை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் இணைத்துக்கொள்ள வேண்டுமென விரும்பிய அகில இலங்கை தமிழ் காங்கிரஸ், தமிழர் விடுதலைக் கூட்டணி ஆகிய கட்சிகள் தமிழ் அரசியல் கட்சிகளின் ஒன்றியம் என பெயரிட விரும்பியிருந்த போதும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு என்ற பெயர் ஊடகங்களால் சூட்டப்பட்டதாகும்.

இவை அத்தனையும் மறுக்கமுடியாத உண்மைகள் ஆனால் மிக குள்ளத்தனமாக, அப்பாவி தமிழ் மக்கள் நம்பக்கூடியவாறு விடுதலைப் புலிகளால் தமது அரசியல் அங்கமாக சிருஷ்டிக்கப்பட்டுள்ளதாக நம்ப வைக்கப்பட்டுள்ளனர். அச்சு, இலத்திரனியல் ஊடகங்கள் மூலம் மேற்கூறப்பட்டுள்ள அனைத்தும் போதியளவு பிரச்சாரம் செய்யப்பட்டுள்ளபோதும் தமிழ் சமூகத்துக்கு துரதிஷ்டவசமாக அச்சு, இலத்திரனியல் ஊடகங்களின் ஒரு பகுதியினர் இனப்பிரச்சினைக்கு இடையூறு விளைவிக்கின்றோம் என்பதைகூட உணராமல் இருட்டடிப்பு செய்கின்றனர்.

மிகவும் மோசமான விடயம் யாதெனில் தெரிந்தோ, அப்பாவித்தனமாகவோ சில தமிழ் அரசியல் தலைவர்களை பெரும் வீரர்களாக வெளிப்படுத்துகின்றனர். பல தமிழ் அமைப்புக்கள், தமிழ் அரசியல் கட்சிகள், புத்திஜீவிகள், வடக்கு கிழக்கு பல்கலைகழக மாணவர்களுடன் மட்டக்களப்பு தமிழர் மறுமலர்சி கழகம் போன்ற அமைப்புக்கள் அனைத்தும் ஒன்றிணைந்து இரண்டு வருட காலமாக மேற்கொண்ட முயற்சி, சகல தமிழ் அரசியல் கட்சிகளை ஒரே குடையின் கீழ், ஒரே கட்சியாக, ஒரே கொள்கையில், ஒரே பொதுச்சின்னமாகிய உதயசூரியன் சின்னத்தில் 2004ம் ஆண்டு பொதுத் தேர்தலில் போட்டியிட தயாராக இருந்த விடயம் யாருக்கும் தெரியாததல்ல.

அரசியலில் அக்கறை கொண்ட ஒவ்வொரு தமிழருக்கும் தெரிந்திருந்தும் துரதிஷ்டவசமாக சில அரசியல் தலைவர்கள் எதுவும் தெரியாதது போல் நடித்துக்கொண்டு தமது திட்டங்களின்படியே செயற்பட்டனர். இரண்டு ஆண்டுகளாக பல தமிழ் அமைப்புக்கள் அயராது உழைத்து, இந்த ஆலோசனைகள் அமுல்படுத்தப்பட்டிருந்தால் முடிவு மிகபிரமாதமாக அமைந்திருக்கும். மிகவும் அபூர்வமாக விடுதலைப்புலிகள் தலைவர்கள், அவர்களுடன் நெருங்கிய ஆதரவாளர்கள், தராக்கி போன்றவர்கள் இதற்கு சம்மதம் தெரிவித்து ஆதரவு வழங்கினர்.

இந்த விடயத்தில் மிகவும் கவர்ச்சிகரமான அம்சம், அநேகர் கவனிக்க தவறியது யாதெனில் இந்த விடயத்தில் விடுதலைப் புலிகள் யுத்தத்தை நிறுத்தி பேச்சுவார்த்தைக்கு சம்மதம் தெரிவித்து தயாரான நிலையில் இருந்தனர் எனக் கருதலாம். இனப்பிரச்சினை தீர்வுக்கு சாதகமாக அமைந்த அம்சங்கள் பின்வருமாறு:

01. 2004ம் ஆண்டு பொதுத்தேர்தலில் நடந்தது போன்று அல்லாமல் வெற்றியீட்டிய 22 பேரும் நம்பமுடியாத அளவுக்கு பெரும்பான்மை வாக்குகளை பெற்றிருப்பர். அவர்களுக்கு கிடைத்திருக்கக்கூடிய பெரும்பான்மை வாக்குகள் 1977ம் ஆண்டு தமிழர் விடுதலைக் கூட்டணி உருவாக்கப்பட்டபோது பெறப்பட்ட பெரும்பான்மையான வாக்குகளை நினைவூட்டியிருக்கும். இதில் வேடிக்கை என்னவென்றால், 2004ம் ஆண்டு பொதுத்தேர்தலில் காலையில் தோல்வியுற்ற பிரமுகர் மாலையில் வெற்றீட்டியுள்ளார்.

02. தேர்தல் முடிவுகள் 03-04-2004 அன்று அறிவிக்கப்பட்ட வேளை யுத்தம் நிறுத்தப்பட்டிருக்கும்.

03. மிகவும் விரைவாக அரசுடனான பேச்சுவார்த்தை ஆரம்பிக்கப்பட்டிருந்திருக்கும்.

04. ஏறக்குறைய ஐம்பது தொடக்கம் நூறு இலட்சம் வரையிலான அப்பாவி பொது மக்கள், போராளிகள், இராணுவத்தினர் இன்னும் பலருடைய உயிர்கள் காப்பாற்றப்பட்டிருக்கும்.

05. பல கோடி ரூபா பெறுமதியான சொத்துக்கள் அழிவிலிருந்து காப்பாற்றப்பட்டிருக்கும்.

06. காணாமல் போனவர்களின் எண்ணிக்கை மிகைப்படுத்தப்பட முடியாதளவுக்கு மிகச்சொற்பமாக இருந்திருக்கும்.

07. விவரிக்க முடியாத இன்னும் பல நன்மைகளை அடைந்திருக்க முடியும். ஆனால் என்ன நடந்தது? நடந்த எல்லாவற்றுக்கும் யார் பொறுப்பு?

இந்த விடயத்தில்தான் நான் ஊடகங்களுடன் குறைகாண வேண்டியேற்படுகிறது. ஏனெனில் சில உண்மைகளை மக்கள் தெரிந்துகொள்வதிலிருந்து மறைப்பதே. மாவை சேனாதிராஜா, இரா.சம்பந்தன் ஆகிய இருவரும் சில விடயங்களை காலவரையறையின்றி தட்டிக்கழிப்பதற்கான காரணம் என்ன என்பதை மக்கள் இவ்விருவரிடமும் எதிர்ப்பார்க்கிறார்கள்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தலைவர் இரா.சம்பந்தன், தமிழரசு கட்சி தலைவர் மாவை சேனாதிராஜா ஆகிய இருவரிடமும் நான் கேட்க விரும்புவது, அவர்கள் ஏன் தொடர்ந்து நாடாளுமன்றத்திலும், தங்கள் பதவிகளிலும் அங்கத்துவம் வகிக்கின்றார்கள் என்பதை மனச்சாட்சியை தொட்டுச் சொல்லுங்கள் என்று.

மோசடி மூலம் என்னை அரசியலில் இருந்து ஒதுங்க வைத்து எனது சேவையை அப்பாவி மக்களுக்கு 13 ஆண்டுகளுக்கு மேல் கிடைக்காதவாறு செய்ததை தவிர, பல வகையிலும் துன்பத்துக்குள்ளான அப்பாவி மக்களுக்கு வேறு எதனை செய்தார்கள். தத்தமது வாழ்க்கையை வளம்பெறச் செய்தது தவிர வேறெதுவும் செய்யவில்லை.

நான் அவர்களுக்கு எதிராக பல குற்றச்சாட்டுக்களை முன்வைத்த போதும் அவர்களிடமிருந்து எந்தவிதமான பதில் ஏதும் இல்லை. நான் அவர்களிடமிருந்து பதிலையும் வற்புறுத்தி கேட்கின்றேன். வழங்கத் தவறினால் என்னால் சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்களை அவர்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும். இந்திய-இலங்கை ஒப்பந்தத்தில் பயங்கரவாதத் தடுப்புச்சட்டம் பாதுகாப்புச் சம்பந்தமான வேறு சட்டங்கள் ஆகியவற்றின் கீழ் கைது செய்யப்பட்டு தடுப்புக்காவலில் வைக்கப்பட்டு, குற்றஞ்சாட்டப்பட்டு, அல்லது குற்றவாளியாக காணப்பட்டுள்ள கைதிகள் கூட பொது மன்னிப்பு மூலம் விடுதலை செய்யப்படும் அதிகாரம் ஜனாதிபதிக்கு உண்டு என்பதை இவர்கள் அறிவார்களா? என்பதை நானறியேன்.

யுத்தம் தொடங்கியதற்கு பின் ஆரம்பிக்கப்பட்ட புதிய இராணுவ முகாம்கள், பாதுகாப்பு நிலையங்கள் போன்றவை மூடப்பட வேண்டும் அல்லது அப்புறப்படுத்தப்பட வேண்டுமென்று தமிழர் விடுதலைக் கூட்டணி பல காலமாக குரல்கொடுத்து வந்துள்ளமை பற்றி இவர்களுக்கு நினைவூட்ட விரும்புகின்றேன். இவற்றை இவர்கள் செய்து கொடுக்க முடியாத பட்சத்தில் செய்யக்கூடியவர்களுக்கு வழியைவிட்டு தமது நாடாளுமன்ற பதவிகளை இராஜினாமா செய்ய வேண்டுமென கேட்டுக்கொள்கிறேன்.

இறுதியாக முக்கியமானவொரு விடயம் யாதெனில், மாவை சேனாதிராஜா தமிழர் விடுதலைக் கூட்டணி நாடாளுமன்ற உறுப்பினராக இருந்துகொண்டு தமிழரசு கட்சியை உருவாக்கிய தந்தை செல்வா இறந்து 26 ஆண்டுகளின் பின் மீண்டும் தமிழரசு கட்சியை மீள புதுப்பித்த செயலால் 2004ஆம் ஆண்டு முடிவுக்கு வந்திருக்க வேண்டிய யுத்தம் 2009ம் ஆண்டுவரை ஏறக்குறைய ஐந்து ஆண்டுகளாக நீடிக்கப்பட்டு பல அழிவுகளுக்கும் காரணமாக இருந்தார்கள் என்பதை இவர்கள் மறுப்பார்களா?

இரா.சம்பந்தன், மாவை சேனாதிராஜா இருவரும் மேலே குறிப்பிடப்பட்டுள்ள அத்தனை விடயங்களையும் இன்றைக்காவது ஏற்பட்டுள்ள இத்தனை அழிவுகளும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை உருவாக்கியது விடுதலைப் புலிகள்தான் என மக்களை நம்ப வைத்தமையே.

அக்கட்டத்தில் விடுதலைப் புலிகளால் கோரப்படும் எதனையும் செய்வதை மக்கள் தமது கடமையாக கருதினர் என்று அந்த அறிக்கையில் தொடர்ந்தும் குறிப்பிடப்பட்டுள்ளது.

  
   Bookmark and Share Seithy.com



உள்ளக பொறிமுறை மூலம் நீதி கிடைக்காது! - சுமந்திரன் கூறுகிறார்.
[Wednesday 2024-05-08 05:00]

யுத்த அத்துமீறல் குற்றச் சாட்டுக்களுக்கு உள்ளக பொறிமுறை மூலமாக சரியான நீதி கிடைக்காது என்பதற்கு யுத்தம் முடிவடைந்த இந்த 15 வருட காலமாக எதுவுமே நடக்காமல் இருப்பதே சான்றாக உள்ளது என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.



வெளிநாடுகளுக்கு வளங்களை கொடுத்திருந்தால் புலிகள் இயக்கம் அழிக்கப்பட்டிருக்காது!
[Wednesday 2024-05-08 05:00]

தாயக வளங்களை வெளிநாடுகளுக்கு கொடுத்திருந்தால் புலிகள் இயக்கம் 2009 இல் அழிக்கப்பட்டிருக்காது என முன்னாள் வடக்கு மாகாணசபை உறுப்பினர் சபா.குகதாஸ் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே இவ்விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.



வடக்கு கிழக்கில் இன்று முதல் மழைக்கு வாய்ப்பு - அடுத்தவாரம் சூடு தணியும்!
[Wednesday 2024-05-08 05:00]

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்கள் உட்பட்ட நாட்டின் பல பகுதிகளிலும் தற்போது நிலவும் அதிகமான வெப்பநிலை தற்காலிகமாக எதிர்வரும் வாரம் சற்று குறைவாக இருக்கும் என, யாழ். பல்கலைக்கழக புவியியல்துறை சிரேஷ்ட விரிவுரையாளரும் அங்கீகரிக்கப்பட்ட வானியலாளருமான கலாநிதி நாகமுத்து பிரதீபராஜா தெரிவித்துள்ளார்.



மோசடியை அம்பலப்படுத்திய இளைஞனுக்கு நெருக்கடி கொடுத்தால் சிக்கல் வரும்!
[Wednesday 2024-05-08 05:00]

விசா விநியோகத்தில் இடம்பெறவிருந்த பாரிய மோசடியை தனி ஒருவனாக இளைஞர் ஒருவர் அம்பலப்படுத்தியுள்ளார். எனவே தவறுகளை அரசாங்கம் திருத்திக் கொள்ள வேண்டும் என ஜேவிபி நாடாளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் கேட்டுக்கொண்டார்.



ஏமாந்து விடாதீர்கள் - படையினருக்கு கமல் குணரத்ன வேண்டுகோள்!
[Wednesday 2024-05-08 05:00]

ரஷ்ய - உக்ரைன் போர் நடவடிக்கையில் பணியாற்றுவதற்கு ஆட்களை சேர்க்கும் மனித கடத்தல்காரர்களுக்கு பலியாக வேண்டாம் என இலங்கை படையினருக்கு பாதுகாப்புச் செயலாளர் கமல் குணரத்ன வேண்டுகோள் விடுத்துள்ளார்.



சீனாவின் உதவியுடன் டிஜிட்டல் மயமாக்கப்படும் கல்வி!
[Wednesday 2024-05-08 05:00]

இலங்கையில் பொதுக் கல்வியை டிஜிட்டல் முறையில் மாற்றும் திட்டத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. கல்வியின் டிஜிட்டல் மாற்றம் தொடர்பில் சமர்ப்பிக்கப்பட்ட திட்ட முன்மொழிவுக்கு சீன அரசாங்கம் ஆதரவை வழங்க இணங்கியுள்ளதாக அரசாங்கம் குறிப்பிட்டுள்ளது.



இந்த ஆண்டு ஜனாதிபதி தேர்தல் மட்டும் தான்! - வேறெதுவும் நடக்காது என்கிறார் பிரசன்ன ரணதுங்க.
[Wednesday 2024-05-08 05:00]

அரசியலமைப்பின் பிரகாரம் ஜனாதிபதித் தேர்தலைத் தவிர வேறு எந்தத் தேர்தலும் இவ்வருடம் நடைபெறாது என ஆளுநர் கட்சியின் பிரதான அமைப்பாளர் அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.



மோடியின் நண்பனின் நிறுவனத்துக்கே விசா வழங்கும் அனுமதி!
[Wednesday 2024-05-08 05:00]

இலங்கை சட்டத்தின் பிரகாரம் விசா வழங்குவதற்கு முழுமையான அதிகாரம் குடிவரவுத் திணைக்களத்திற்கே உள்ள நிலையில், 'ரணில் - ராஜபக்ச' அரசாங்கம் வருகை விசா மற்றும் இணைய விசா வழங்குவதற்கான அனுமதியை இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் நெருங்கி நண்பரான சுபின் கர்கரியாவுக்கு சொந்தமான விஎவ்எஸ் குளோபல் (VFS Global) நிறுவனத்துக்கு வழங்கியுள்ளதாக தேசிய சுதந்திர முன்னணி குற்றம் சுமத்தியுள்ளது.



இது பொலிஸ் ராஜ்யமல்ல - சஜித் எச்சரிக்கை!
[Wednesday 2024-05-08 05:00]

கருத்து தெரிவித்தமைக்காக விசாரணைக்கு அழைப்பதற்கு இலங்கை பொலிஸ் இராஜ்ஜியமல்ல .இலங்கை ஜனநாயக நாடு என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.



உள்ளூராட்சி சபைகளுக்கு மீண்டும் உயிர் கொடுக்க சதி! - தயாசிறி குற்றச்சாட்டு.
[Wednesday 2024-05-08 05:00]

தேர்தல் நடத்தப்படாமல் இருக்கும் நிலையில், கலைந்துள்ள உள்ளூராட்சி சபைகளை மீள செயற்படும் வகையில் அரசாங்கம் திட்டங்களை முன்னெடுப்பதாக சுயாதீன எதிரணி பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.



வெலிக்கடை சிறையில் முன்னாள் போராளி உண்ணாவிரதம்! - சிறிதரன், கஜேந்திரன் பார்வையிட்டனர்.
[Tuesday 2024-05-07 16:00]

கடந்த பெப்ரவரி மாதம் பயங்கரவாத விசாரணைப் பிரிவினரால் விசாரணைக்கு அழைக்கப்பட்டு கொழும்பில் வைத்துக் கைது செய்யப்பட்ட வவுனியாவைச் சேர்ந்த முன்னாள் போராளி செல்வநாயகம் ஆனந்தவர்ணன் மற்றும் கடந்த ஒரு வருடத்திற்கும் மேலாக நீதிமன்றில் முற்படுத்தப்படாமல் அடைத்து வைக்கப்பட்டிருக்கும் மூதூரைச் சேரந்த எஸ்.சுதாகரன் ஆகிய இருவரையும் இன்று பாராளுமன்ற உறுப்பினர்களான செல்வராசா கஜேந்திரன் மற்றும் சிவஞானம் சிறீதரன் ஆகியோர் கொழும்பு விளக்கமறியல் சிறைச்சாலைக்குச் சென்று பார்வையிட்டார்கள் .



விஜயதாசவின் மனுவை விசாரணையின்றி நிராகரித்தது மேன்முறையீட்டு நீதிமன்றம்!
[Tuesday 2024-05-07 16:00]

நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்ஷவினால் தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரணையின்றி நிராகரித்து மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.



தாயின் கழுத்தை நெரித்துக் கொன்ற 16 வயது மகன்! - விசாரணையில் ஒப்புக்கொண்டான்.
[Tuesday 2024-05-07 16:00]

அம்மாவின் கழுத்தை நானே நெரித்து கொலை செய்தேன் என 16 வயது சிறுவன் பொலிஸ் விசாரணைகளில் தெரிவித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.



யாழ்ப்பாணத்தில் வெப்ப அலையினால் 5 பேர் பலி!
[Tuesday 2024-05-07 16:00]

யாழ்ப்பாணத்தில் நிலவும் அதிக வெப்பம் மற்றும் வெப்ப அலை காரணமாக 05 பேர் உயிரிழந்துள்ளனர் என யாழ்.போதான வைத்தியசாலையின் பொது மருத்துவ நிபுணர் ரி.பேரானந்தராஜா தெரிவித்துள்ளார்.



ஆட்சிக்கு வந்ததும் மதுபான உரிம பத்திரங்கள் ரத்து!- சஜித் அறிவிப்பு.
[Tuesday 2024-05-07 16:00]

தேர்தலை இலக்காக வைத்து மதுபான உரிம பத்திரங்களை வழங்கும் நடைமுறையை நிறுத்த வேண்டும். இந்த ஆண்டு இறுதிக்குள் மக்கள் ஆசிர்வாதத்துடன் ஆட்சிக்கு வந்தால் இது கட்டாயம் நிறுத்தப்படும். ஐக்கிய மக்கள் சக்தி அரசாங்கத்தில் இந்த உரிமங்கள் அனைத்தும் இரத்துச் செய்யப்படும். இது தொடர்பாக நீதிமன்றங்களை நாடினால், பாராளுமன்ற சட்டத்தின் மூலமாக இந்த உரிமங்களை தடை செய்வோம் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.



விசா நடைமுறையை மாற்ற விட்டால் பதவி விலகுவேன்! - ஹரீன் எச்சரிக்கை.
[Tuesday 2024-05-07 16:00]

புதிய விசா நடைமுறைகளில் மாற்றங்களை மேற்கொள்ளாவிட்டால் பதவி விலகுவேன் என சுற்றுலாத்துறை அமைச்சர் ஹரீன்பொணாண்டோ அமைச்சரவை கூட்டத்தில் எச்சரித்துள்ளார். புதிய திட்டம் முன்வைக்கப்பட்ட வேளை வி.எவ்.எஸ் கட்டணங்கள் குறித்து எதுவும் தெரிவிக்கப்படவில்லை. ஆனால் இது குறித்து தெரியவந்ததும் நான் எனது எதிர்ப்பை வெளியிட்டேன் என ஹரீன் பெர்ணாண்டோ தெரிவித்துள்ளார்.



மொட்டு எம்.பிக்கள், அமைப்பாளர்கள் அவசரமாக கொழும்புக்கு அழைப்பு!
[Tuesday 2024-05-07 16:00]

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவை பிரதிநிதித்துவப்படுத்தும் பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அனைத்து அமைப்பாளர்களும் கொழும்புக்கு அழைக்கப்பட்டுள்ளனர்.



வித்தியா கொலை வழக்கு - விசாரணையில் இருந்து விலகினார் நீதியரசர் துரைராஜா!
[Tuesday 2024-05-07 16:00]

புங்குடுதீவு மாணவி சிவலோக நாதன் வித்தியா கடத்தப்பட்டு கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் மரணதண்டனை விதிக்கப்பட்டவர்களின் மேன்முறையீட்டு மனுக்கள் மீதான விசாரணையில் இருந்து நீதியரசர் எஸ். துரைராஜா விலகியுள்ளார்.



போதை மாத்திரைகளுடன் கைது செய்யப்பட்ட திருகோணமலை ஊடகவியலாளர்!
[Tuesday 2024-05-07 16:00]

திருகோணமலையில்போதை மாத்திரைகளுடன் கைது செய்யப்பட்ட ஊடகவியலாளர், நீதிமன்ற உத்தரவின் பேரில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.



வீசா சேவைக் கட்டணத்துக்கு பாராளுமன்ற அனுமதி பெறப்படவில்லை!
[Tuesday 2024-05-07 16:00]

விசா கட்டணம் அதிகரிக்க பாராளுமன்றத்தில் அனுமதிக்கப்பட்டபோதும் வீ,எப்.எஸ். சேவை கட்டணத்துக்கு பாராளுமன்றத்தின் அனுமதி இல்லை. சட்டவிரோதமான முறையிலேயே வீ,எப்.எஸ். கட்டண அதிகரிப்பு பிரேரணை நுழைக்கப்பட்டுள்ளது. பாராளுமன்றத்தை பிழையாக வழிநடத்தப்பட்டிருப்பது தொடர்பில் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என எதிர்க்கட்சி பிரதம கொறடா லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்தார்.


Mahesan-Remax-169515-Seithy
Airlinktravel-2020-01-01
Rajeef sebarasha 2023/04/19
Kugeenthiran-200-2022-seithy
 gloriousprinters.com 2021
NKS-Ketha-04-11-2021
Ambikajewellers-01-08-2021-seithy
Vaheesan-Remax-2016
Asayan-Salon-2022-seithy
Karan Remax-2010
Logan-Kumaresh-Homelife-02-02-2021
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> 12 10 2019 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Skanda Nite 2019 125th Anniversary நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா