Untitled Document
January 17, 2018 [GMT]
  • Welcome
  • Welcome
மகிந்தவை அழைக்கிறது இந்தியா! - அடுத்தமாதம் பயணமாகிறார்
[Tuesday 2017-09-12 19:00]

முன்­னாள் ஜனாதிபதி மகிந்த ராஜ­பக்ச அடுத்த மாதம் 14ஆம் திகதி இந்தியாவுக்குப் பய­ணம் மேற்கொள்ளவுள்ளார்.  மகா­ராஷ்டிரா மாநி­லத்­தில் நடை­பெ­றும் பௌத்த நிகழ்­வில் கலந்து கொள்­வ­தற்கு அழைக்­கப்­பட்­டுள்ள முன்­னாள் அரச தலை­வர் மகிந்த ராஜ­பக்ச, இந்த நிகழ்­வின் பின்­னர் இந்­திய மத்திய அர­சின் முக்­கிய தலை­வர்­க­ளு­டன் பேச்சு நடத்­த­வுள்­ள­தா­கத் தெரி­ய­வ­ரு­கின்­றது.

முன்­னாள் ஜனாதிபதி மகிந்த ராஜ­பக்ச அடுத்த மாதம் 14ஆம் திகதி இந்தியாவுக்குப் பய­ணம் மேற்கொள்ளவுள்ளார். மகா­ராஷ்டிரா மாநி­லத்­தில் நடை­பெ­றும் பௌத்த நிகழ்­வில் கலந்து கொள்­வ­தற்கு அழைக்­கப்­பட்­டுள்ள முன்­னாள் அரச தலை­வர் மகிந்த ராஜ­பக்ச, இந்த நிகழ்­வின் பின்­னர் இந்­திய மத்திய அர­சின் முக்­கிய தலை­வர்­க­ளு­டன் பேச்சு நடத்­த­வுள்­ள­தா­கத் தெரி­ய­வ­ரு­கின்­றது.

  

இலங்கை அரசு சீனா­வின் பக்­கம் சாய்ந்­து­விட்­ட­தாக புது­டில்லி உணர்­வ­தா­லேயே இந்த அதி­ரடி இரா­ஜ­தந்­திர காய்­ந­கர்த்­த­லுக்கு நட­வ­டிக்கை எடுத்­துள்­ள­தா­கக் கூறப்­ப­டு­கின்­றது. தமது பக்­கம் இலங்கை அரசை வளைத்­துப் போடு­வ­தற்கு, மகிந்­தவை ஆயு­த­மா­கப் பாவிப்­ப­தற்கு புது­டில்லி தீர்­மா­னித்­துள்­ளது. அதன் கார­ண­மா­கவே மகிந்த இந்­தி­யா­வுக்கு அழைக்­கப்­பட்­டுள்­ளார்.

மகிந்த ஆட்­சி­யில் இருந்­த­போது சீனா­வின் பக்­கம் சாய்ந்து செயற்­பட்­டார் என்­ப­தால், இந்­தியா அவர் மீது அதி­ருப்­தி­யில் இருந்­தது. மகிந்த ராஜ­பக்ச அவ­ரது சகோ­த­ரர் கோத்­த­பாய ராஜ­பக்ச ஆகி­யோர் கூட இந்­தக் குற்­றச்­சாட்டை பகி­ரங்­க­மாக முன்­வைத்­தி­ருந்­த­னர். தற்­போது இலங்கை அர­சும் அதே­பா­ணி­யில் செயற்­ப­டு­வ­தால், அதனை தமது பக்­கத்­துக்கு திருப்­பு­வ­தற்கு இந்­தியா இந்த முயற்­சி­யைக் கையி­லெ­டுத்­துள்­ளது. இலங்­கைக்கு கடந்த மே மாதம் வருகை தந்த இந்­திய தலைமை அமைச்­சர் நரேந்­திர மோடி, மகிந்த ராஜ­பக்­சவை தனியே சந்­தித்­துப் பேசி­யமை குறிப்­பி­டத்­தக்­கது.

  
   Bookmark and Share Seithy.comஇடைக்கால அறிக்கை: மாயைகளை கட்டுடைத்தல் - யாழ்ப்பாணத்தில் கருத்தமர்வும் கலந்துரையாடலும்! Top News
[Tuesday 2018-01-16 19:00]

இடைக்கால அறிக்கை – மாயைகளை கட்டுடைத்தல் என்னும் தலைப்பில் கருத்தமர்வும் கலந்துரையாடலும் தமிழ் மக்கள் பேரவையின் ஏற்பாட்டில் யாழ்.வீரசிங்கம் மண்டபத்தில் இன்று பிற்பகல் நடைபெற்றது. இக்கலந்துரையாடல் மற்றும் கருத்தமர்வில், வடமாகாண முதலமைச்சரும், தமிழ் மக்கள் பேரவையின் இணைத்தலைவருமான சி.வி.விக்னேஸ்வரன் தலைமை உரை நிகழ்த்தினார்.அமைச்சரவைக் கூட்டத்தை விட்டு கோபத்துடன் வெளியேறிய ஜனாதிபதி!
[Tuesday 2018-01-16 19:00]

மதுபான விவகாரம் குறித்து நிதி அமைச்சர் மங்கள சமரவீரவினால் கொண்டு வரப்பட்ட வர்த்தமானி அறிவித்தல் குறித்து அமைச்சரவையில் சலசலப்பு ஏற்பட்டதையடுத்து அமைச்சரவை கூட்டத்தில் இருந்து ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன இன்று வெளிநடப்புச் செய்தார். மேற்கு நாடுகள் பரிந்துரைக்கும் அனைத்தையும் நாட்டில் நடைமுறைபடுத்த முயற்சிக்க வேண்டாம் என ஜனாதிபதி கடும் தொனியில் தெரிவித்துள்ளார்.தற்கொலைக் குண்டுதாரிக்கு உதவிய பெண்ணுக்கு ஒத்திவைக்கப்பட்ட சிறைத்தண்டனை!
[Tuesday 2018-01-16 19:00]

விடுதலைப் புலிகள் அமைப்பின் பெண் தற்கொலைத்தாரி ஒருவருக்கு உதவிய பெண்ணுக்கு ஒத்திவைக்கப்பட்ட சிறைத்தண்டனை விதித்து கொழும்பு மேல்நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்துள்ளது. ஈ.பி.டி.பி. கட்சியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான டக்ளஸ் தேவானந்தாவை படுகொலை செய்ய முயற்சித்த தற்கொலைத்தாரி ஒருவருக்கு உதவி செய்த யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த 3 பிள்ளைகளின் தாயொருவருக்கே இன்று இவ்வாறு தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.மாடு மீது மோதியது ரயில் - மாணவிக்கு காயம்!
[Tuesday 2018-01-16 19:00]

மீசாலை- வீரசிங்கம் மகாவித்தியாலயத்துக்கு முன்பாக உள்ள ரயில் பாதையில் இன்று புல் மேய்ந்து கொண்டிருந்த இரண்டு பசு மாடுகள் மீது ரயில் மோதியது. இதில் ஒரு பசுமாடு உயிரிழந்ததுடன் மாணவி ஒருவரும் காயமடைந்தார். யாழ்பாணத்தில் இருத்து கொழும்பு நோக்கி சென்று கொண்டு இருந்த ரயில், புல் மேய்ந்து கொண்டிருந்த இரண்டு பசு மாடுகளை மோதி தூக்கி வீசியது.கோத்தாவே அடுத்த ஜனாதிபதியாம்!
[Tuesday 2018-01-16 19:00]

அடுத்த முறை ஜனாதிபதித் தேர்தலில் கூட்டு எதிரணி சார்பில் முன்னாள் பாதுகாப்பு அமைச்சரான கோத்தாபய ராஜபக்ச போட்டியிடுவார் என்றும் அவரே வெற்றிபெறுவார் என்றும் பாராளுமன்ற உறுப்பினர் ரொஷான் ரணசிங்க தெரிவித்தார். ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன சார்பில் நடைபெற்ற பிரச்சாரக் கூட்டமொன்றில் பேசுகையிலேயே அவர் இதனைத் தெரிவித்தார். தேர்தலில் போட்டியிடுவது மட்டுமல்லாமல், அதில் கோத்தாபய ராஜபக்சவே வெற்றிபெற்று ஜனாதிபதி நாற்காலியில் அமர்வார் என்றும் அவர் கூறியுள்ளார்.ஜனாதிபதி முதலில் தனது கட்சியை சுத்தப்படுத்த வேண்டும்! - ஐதேக அமைச்சர் காட்டம்
[Tuesday 2018-01-16 19:00]

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முதலில் தனது கட்சியை தூய்மைப்படுத்திக்கொள்ள வேண்டுமென இராஜாங்க அமைச்சர் திலிப் வெதாரச்சி தெரிவித்துள்ளார். தங்காலையில் இன்று நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் உரையாற்றிய போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.மட்டக்களப்பில் இளைஞர்கள் கடத்தல் - வேட்பாளர்கள் உள்ளிட்ட ஐவர் கைது!
[Tuesday 2018-01-16 19:00]

மட்டக்களப்பு - கல்லடியில் இரு இளைஞர்கள் கடத்தப்பட்ட சம்பவம் தொடர்பில், நேற்று கைது செய்யப்பட்டவர்களில் இருவர், உள்ளூராட்சித் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் என, காத்தான்குடி பொலிஸார் தெரிவித்தனர். இவர்கள், மட்டக்களப்பு மாநகர சபைத் தேர்தலில், சுயேட்சையாக போட்டியிடும் கஜ மோகன் மற்றும் கவிதாஸ் ஆகியோர் என விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளதாக, பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.நடுக்கத்தைச் சமாளிக்கவே கூட்டமைப்பினர் எங்களிடம் பேசினர்! - வரதர் Top News
[Tuesday 2018-01-16 19:00]

மாற்று அணி குறித்து கூட்டமைப்பினர் அச்சம் கொண்டதால் தான் எம்மிடம் பேசினர் என வட கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் வரதராஜப் பெருமாள் தெரிவித்துள்ளார். தமிழர் சமூக ஐனநாயகக் கட்சியின் தேர்தல் விஞ்ஞாபன வெளியீட்டு நிகழ்வு யாழ். வை.எம்.சி.ஏ மண்டபத்தில் இன்று நடைபெற்றது. இங்கு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.கிளிநொச்சியில் மஞ்சள் விரட்டு! Top News
[Tuesday 2018-01-16 19:00]

கிளிநொச்சி - பெரியபரந்தனில் இன்W நடைபெற்ற மஞ்சள் விரட்டு விளையாட்டில் இளைஞர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர். ஆண்கள் தங்கள் வீரத்தையும் வலிமையையும், பறைசாற்றும் விதமாக ஜல்லிக்கட்டில் மஞ்சள் விரட்டு என்ற போட்டி உள்ளது.குறித்த விளையாட்டு கிளிநொச்சியின் பல பகுதியில் யுத்தத்திற்கு முன்னரான காலப்பகுதியில் இடம்பெற்று வந்துள்ளது. யுத்தத்திற்கு பின்னர் நடத்தப்படவில்லை.எனினும், இம் முறை மீண்டும் மஞ்சள் விரட்டும் விளையாட்டு கிளிநொச்சி பிரதேச இளைஞர்களால் ஏற்பாடு செய்யப்பட்டது.நெடுந்தீவு கடற்பரப்பில் 16 இந்திய மீனவர்கள் கைது!
[Tuesday 2018-01-16 19:00]

நெடுந்தீவு கடற்பரப்பில் சட்டவிரோதமாக மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்ட 16 இந்திய மீனவர்கள் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இன்று அதிகாலை குறித்த மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதுடன், இவர்களது 4 ரோலர் படகுகளும் கைப்பற்றப்பட்டுள்ளதாக கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.பன்னங்கண்டி பாலத்தின் கீழ் இளைஞனின் சடலம் மீட்பு! Top News
[Tuesday 2018-01-16 19:00]

கிளிநொச்சி- வட்டக்கச்சி பன்னங்கண்டி பாலத்திலிருந்து இன்று காலை இளைஞன் ஒருவரது சடலம் மீட்கப்பட்டுள்ளது என கிளிநொச்சி பொலிஸார் தெரிவித்தனர். வட்டக்கச்சி மயவனுரை சேர்ந்த இராசேந்திரம் சர்வானந்தம் (வயது 22) என்பவரது சடலமே மீட்கப்பட்டுள்ளது. குறித்த நபர் சென்ற மோட்டார் சைக்கிள், வேகக்கட்டுப்பாட்டை இழந்ததால் இவ்விபத்து ஏற்பட்டிருக்கலாம் என பொலிஸார் தெரிவித்தனர்.கிளிநொச்சியில் கஞ்சாவுடன் சிக்கியவருக்கு சிறைத்தண்டனை!
[Tuesday 2018-01-16 19:00]

கிளிநொச்சியில் கஞ்சாவுடன் கைது செய்யப்பட்ட நபருக்கு ஒரு மாத கால சிறைத்தண்டனையும் 10,000 ரூபா தண்டப்பணமும் விதிக்கப்பட்டுள்ளது. குறித்த உத்தரவை கிளிநொச்சி மாவட்ட நீதிவான் நீதிமன்ற நீதிவான் ஏ.ஏ. ஆனந்தராஜா நேற்று பிறப்பித்துள்ளார். கிளிநொச்சி பகுதியில் கஞ்சா வைத்திருந்த ஒருவரை கைது செய்து அவருக்கு எதிராக கிளிநொச்சி பொலிஸார் வழக்கு பதிவு செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.வடக்கில் 274 மாணவர்கள் மூன்று பாடங்களிலும் ஏ சித்தி!
[Tuesday 2018-01-16 09:00]

ஜி.சி.ஈ உயர்தரத்தில் வடக்கு மாகாணத்தில் இருந்து பாடசாலைப் பரீட்சார்த்திகளாகத் தோற்றிய 11 ஆயிரத்து 591 மாணவர்களில் 274 மாணவர்கள் மூன்று பாடங்களிலும் ‘ஏ’ தரச் சித்தி பெற்று சாதனை படைத்துள்ளனர். அதேநேரம் 7 ஆயிரத்து 925 மாணவர்கள் மூன்று பாடங்களிலும் சித்தி பெற்று பல்கலைக்கழகத்துக்கு விண்ணப்பிக்கத் தகுதி பெற்றுள்ளனர்.அதாவது 68.37 வீதத்தினர் தகுதி பெற்றுள்ளனர். அதேநேரம் தோற்றியோரில் 816 மாணவர்கள் ஒரு பாடத்திலும் சித்தியடையவில்லை.யாழ்ப்பாணத்தில் மீண்டும் வாள்வெட்டு! - இருவர் படுகாயம்
[Tuesday 2018-01-16 09:00]

யாழ்ப்பாணத்தில் நேற்று இரவு நடந்த வாள்வெட்டுச் சம்பவங்களில் இருவர் காயமடைந்தனர். இந்தச் சம்பவங்கள் ஆனைக்கோட்டை வராகி அம்மன் ஆலயத்தை அண்மித்த பகுதியிலும், கொக்குவில் பூநாரிமடத்தை அண்மித்த பகுதியிலும் நடந்துள்ளன. முகத்தைக் கறுப்புத் துணிகளால் மறைத்தவாறு மோட்டார் சைக்கிளில் வந்தவர்களே வாள்வெட்டில் ஈடுபட்டனர் . அந்தப் பகுதியில் வான், முச்சக்கர வண்டியில் பயணித்தவர்களை அந்தக் கும்பல் தாக்கியது. அதில் இருவர் காயமடைந்தனர் என்று மானிப்பாய் பொலிஸார் தெரிவித்தனர்.இலங்கையின் உண்மையான பங்காளியாக இந்தியா இருக்கும்! - இந்திய அமைச்சர்
[Tuesday 2018-01-16 09:00]

இலங்கை மக்­களின் எதிர்­காலம் அபி­வி­ருத்தி மற்றும் சமா­தானம் என்­ப­ன­வற்றின் சிறந்த உண்­மை­யான பங்­கா­ளி­யாக இந்­தி­யா­ தொடர்ந்து செயற்­படும் என்று இலங்­கைக்கு விஜயம் மேற்­கொண்­டுள்ள இந்­தி­யாவின் சட்டம் நீதி­த்­துறை தகவல் தொழில்­நுட்பம் மற்றும் இலத்­தி­ர­னியல் துறை அமைச்சர் ரவி சங்கர் பிரசாத் தெரி­வித்தார்.கூட்டமைப்பின் பிரசாரக் கூட்டத்தில் வேறோரு கட்சியின் வேட்பாளர் கலகம்!
[Tuesday 2018-01-16 09:00]

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் பிரச்சார கூட்டத்தில் வேறு கட்சியை சேர்ந்த வேட்பாளர் ஒருவர் புகுந்து அடாவடி நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக அந்த பகுதியில் ஒருவித குழப்ப நிலை ஏற்பட்டிருந்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது.புலிகளுக்கு நிதி சேகரித்ததாக 13 புலம்பெயர் தமிழர்களுக்கு எதிரான வழக்கு விசாரணைகள் தொடர்கின்றன! Top News
[Tuesday 2018-01-16 09:00]

விடுதலைப் புலிகள் அமைப்பிற்கு நிதி சேகரித்ததாக 13 புலம்பெயர் தமிழர்களுக்கு எதிராக குற்றம் சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டு தொடர்பாக விசாரணைகள் சுவிட்சர்லாந்து Belinzona வில் அமைந்துள்ள குற்றவியல் நீதிமன்றத்தில் இடம்பெற்று வருகின்றன. கடந்த 8ஆம் திகதி ஆரம்பமான வழக்கு விசாரணைகள் நேற்றும் இடம்பெற்றன. குற்றஞ்சாட்டப்பட்ட அனைவரும் நேற்று தத்தமது சட்டத்தரணிகளுடன் நீதிமன்றில் முன்னிலையாகியிருந்தனர்.1000 கோடி ருபா பெறுமதியான போதைப் பொருட்கள் அழிப்பு!
[Tuesday 2018-01-16 09:00]

பொலிஸ் போதைப் பொருள் தடுப்புப் பிரிவினரால் பறிமுதல் செய்யப்பட்ட 928 கிலோ கொக்கைன் போதைப்பொருள் கட்டுநாயக்க முதலீட்டு ஊக்குவிப்பு வலய வளாகத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஆகியோரின் கண்காணிப்பின் கீழ் அழிக்கப்பட்டது. கைப்பற்றப்பட்ட கொக்கைன் போதைப்பொருள் பகிரங்கமாக அழிக்கப்படும் முதலாவது சந்தர்ப்பம் இதுவாகும்.தேசிய அரசாங்கம் நிலைத்திருப்பது அவசியம்! - சுமந்திரன்
[Tuesday 2018-01-16 09:00]

புதிய அரசியலமைப்பை உருவாக்கும் செயற்பாடு தொடரவேண்டுமாயின் தேசிய அரசாங்கம் நிலைத்திருப்பது அவசியம் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ. சுமந்திரன் வலியுறுத்தினார். எது நடந்தாலும் தேசிய அரசாங்கம் நீடித்திருக்கவேண்டும் என்பதே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நோக்கமாகும் என்றும் அவர் குறிப்பிட்டார்.மடுரோட் விபத்தில் ஒருவர் காயம்!
[Tuesday 2018-01-16 09:00]

மன்னார் - கொழும்பு பிரதான வீதியில் மடுரோட் பகுதியில் நேற்று இரவு 7 மணியளவில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் செட்டிகுளம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மன்னாரில் இருந்து கொழும்பு நோக்கி சென்று கொண்டிருந்த மோட்டார் சைக்கிளை அதே வழியில் சென்ற கனரகவாகனம் முந்திச் செல்ல முற்பட்ட போதே குறித்த விபத்து இடம் பெற்றுள்ளதாகவும் குறித்த கனரக வாகனத்தை கைப்பற்றியுள்ளதாகவும் மடு பொலிஸார் தெரிவிக்கின்றனர்.


SELVI-HOMES-09-02-17
Tharsi-home-15-10-2016
Mahesan-Remax-169515-Seithy
Easankulasekaram-Remax-300716
<P>
 <b> 13-08-2017 அன்று ரொரன்டோவில் நடைபெற்ற இசை மாலைப் பொழுது - 2017 நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள்-குணா
</p>
<b>  கனடா-ரொரன்டோவில்  ஜூலை 29ம் 30ம்தி கதிகளில் நடைபெற்ற World Tamil Badminton Federation 5th annual tournament நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள்-குணா
<b>  கனடா-ரொரன்டோவில்  ஜூலை 7ம் 8ம் 9ம்தி கதிகளில் நடைபெற்ற குதூகலம் 2017 நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள்-குணா