Untitled Document
September 19, 2017 [GMT]
  • Welcome
  • Welcome
ப்ளூவேல் கேம்: - பிளேடால் நகக்கண்ணை கிழித்த மாணவன்!
[Wednesday 2017-09-13 07:00]

தர்மபுரி அருகே ப்ளூவேல் கேம் விளையாடிய அரசு பள்ளி மாணவர், நகக்கண்ணில் பிளேடால் கிழித்து காயப்படுத்தியதையடுத்து அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருடன் இந்த கேமை விளையாடியதாக கூறப்படும் மேலும் 3 மாணவர்கள் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். தர்மபுரி மாவட்டம் இண்டூர் அடுத்த பூட்டுகாரன்தோப்பை சேர்ந்த 15 வயது மாணவர், அதே பகுதியில் உள்ள அரசு பள்ளியில் பிளஸ் 1 படித்து வருகிறார். நேற்று முன்தினம், வீட்டில் படுத்திருந்த மாணவர், திடீரென இரவு 11 மணியளவில் படுக்கையில் இருந்து எழுந்து நான் சுடுகாட்டிற்கு போக வேண்டும்.

தர்மபுரி அருகே ப்ளூவேல் கேம் விளையாடிய அரசு பள்ளி மாணவர், நகக்கண்ணில் பிளேடால் கிழித்து காயப்படுத்தியதையடுத்து அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருடன் இந்த கேமை விளையாடியதாக கூறப்படும் மேலும் 3 மாணவர்கள் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். தர்மபுரி மாவட்டம் இண்டூர் அடுத்த பூட்டுகாரன்தோப்பை சேர்ந்த 15 வயது மாணவர், அதே பகுதியில் உள்ள அரசு பள்ளியில் பிளஸ் 1 படித்து வருகிறார். நேற்று முன்தினம், வீட்டில் படுத்திருந்த மாணவர், திடீரென இரவு 11 மணியளவில் படுக்கையில் இருந்து எழுந்து நான் சுடுகாட்டிற்கு போக வேண்டும்.

  

உங்களை எல்லாம் காப்பாற்ற நான் சாக வேண்டும் என கூறியுள்ளார். இதனால் பயந்து போன பெற்றோர், மாணவரை ஆசுவாசப்படுத்த முயன்றனர். அப்போது, அவரது நகக்கண்ணில் பிளேடால் கிழித்து, சேதப்படுத்தியிருந்தது கண்டு அதிர்ச்சியடைந்தனர். பின்னர், விடிய, விடிய அவருடன் சேர்ந்து விழித்திருந்தனர். இரவு முழுவதும் தூங்காமல் இருந்த அந்த மாணவர், உலகத்தை காக்க வேண்டும். மக்களை காப்பாற்ற வேண்டும் என கூறியபடியே இருந்தார். நேற்று அதிகாலை, மாணவரை தர்மபுரி அரசு மருத்துவமனைக்கு அவரது பெற்றோர் அழைத்து வந்தனர்.

மருத்துவர்களிடம் அந்த மாணவர் கூறுகையில், ‘’எனது நண்பர்கள் மூவருடன் செல்போனில் ப்ளூவேல் கேம் விளையாடினேன். இதுவரை நான் 15 நிலைகளை தாண்டி விட்டேன். இன்னும் 35 நிலைகள் உள்ளன.’’ என்றார். இதையடுத்து, அவருக்கு டாக்டர்கள் மனநல சிகிச்சை அளித்து வருகின்றனர். இதுகுறித்து தர்மபுரி அரசு மருத்துவமனை டாக்டர்கள் கூறுகையில், ‘’மாணவருக்கு மேனியாஸ் டிப்ரஸிஸ் சைக்கோசிஸ் என்ற பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்த நோய் பாதிப்பு உள்ளவர்கள் கற்பனையாக எண்ணுவதை, உண்மை என்று அப்படியே நம்புவார்கள். மாணவருக்கு உரிய சிசிச்சை அளிக்கப்பட்டு வருகிறது,’’ என்றனர். இதுகுறித்து மாணவரின் பெற்றோர் கூறியதாவது, ‘’கடந்த 10 நாட்களாக எங்களது மகனின் மனநிலையில் மாற்றம் ஏற்பட்டது. அடிக்கடி எங்கள் மீது கோபம் கொண்டான். நேற்றிரவு திடீரென சம்பந்தம் இல்லாமல் பேச தொடங்கினான். நாங்கள் அவனுக்கு செல்போன் வாங்கி தரவில்லை. ஆனாலும் ப்ளூவேல் கேம் விளையாடியதாக கூறினான்.

நோட்டில் ப்ளூ கலர் திமிங்கிலம் படம் வரைந்திருந்தான். நாங்கள் பார்த்ததும் அதை கிழித்து விட்டான். பிளேடால் நகக்கண்ணை கிழித்திருந்ததை கண்டதும், எங்களுக்கு அதிர்ச்சி ஏற்பட்டது. அவன் பள்ளியில் படிக்கும் 3 பேருடன் ப்ளூவேல் கேம் விளையாடியதாக கூறுகிறான்.’’ என்றனர். இதுகுறித்து மாணவர் படிக்கும் பள்ளி தலைமையாசிரியர் கூறுகையில், ‘’மாணவர், கடந்த மாதம் 10ம் தேதி தான், எங்களது பள்ளியில் பிளஸ் 1 படிப்பில் சேர்ந்துள்ளார். எங்களது பள்ளியில் மாணவர்கள் செல்போன் வைத்திருக்க அனுமதிப்பதில்லை. அந்த மாணவர் நன்றாக படித்து வருகிறார். நேற்று(11ம் தேதி) காலாண்டு முதல் தேர்வை எழுதி விட்டுத்தான் சென்றார். பள்ளியில் இருந்தவரை, அவரது நடவடிக்கையில் எந்த மாற்றமும் இல்லை’’ என்றார். இதனிைடயே, மாணவருடன் ப்ளூவேல் கேம் விளையாடியதாக கூறப்படும் மற்ற 3 பேர் யார் என போலீசார் விசாரித்து வருகின்றனர்.

  
   Bookmark and Share Seithy.com



இரு குழந்தைகளுக்கு மேல் பெற்றால் அரச வேலை இல்லை: - அரசு அதிரடி
[Tuesday 2017-09-19 16:00]

இரண்டு குழந்தைகளுக்கு மேல் உள்ளவர்களுக்கு அரசு வேலையோ உள்ளாட்சி பிரதிநிதி பதவியோ இனி இல்லை என்ற அதிரடி திட்டத்தை அசாம் அரசு கொண்டுவந்துள்ளது. அசாம் மாநில அரசு புதிய மக்கள் தொகை கொள்கையை அறிமுகப்படுத்தியுள்ளது. அதன்படி அரசு ஊழியர்கள் 2 குழந்தைகளுக்கு மேல் பெற்றால் பதவி பறிபோகும், சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிடுபவர்களுக்கும் 2 குழந்தைகளுக்கு மேல் இருக்கக்கூடாது.



12 பெண்களை பாலியல் வன்கொடுமை செய்த மகனை கூலிப்படை வைத்து கொன்ற தாய்!
[Tuesday 2017-09-19 07:00]

12 பெண்களை பாலியல் வன்கொடுமை செய்த மகனை கூலிப்படை வைத்து கொன்ற தாய் உட்பட நால்வரை பொலிசார் கைது செய்துள்ளனர்மகாராஷ்டிரா மாநிலத்தின் பயந்தர் பகுதியை சேர்ந்தவர் ராம்சரண் ராம்தாஸ் (21), போதை பழக்கத்துக்கு அடிமையான இவர் தனது உறவினர்கள் உட்பட 12 பேரை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.



திருமுருகன் காந்தி மீதான குண்டர் தடுப்புச் சட்டத்தை ரத்து செய்த சென்னை உயர் நீதிமன்றம்!
[Tuesday 2017-09-19 07:00]

மே 17 இயக்கத்தின் திருமுருகன் காந்தி உள்ளிட்ட நான்கு பேர் மீதான குண்டர் தடுப்புச் சட்ட நடவடிக்கையை ரத்துசெய்து, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை மெரினா கடற்கரையில், கடந்த மே 21-ம் தேதியன்று, இனப் படுகொலையில் கொல்லப்பட்ட ஈழத் தமிழர்களுக்கான மெழுகுவத்தி அஞ்சலி நிகழ்ச்சி நடத்தப்பட்டது. கடந்த ஏழு ஆண்டுகளில், திடீரென இந்த ஆண்டு மட்டும் அந்த அஞ்சலி நிகழ்ச்சிக்குக் கெடுபிடிசெய்து, அதில் பங்கேற்றவர்களை போலீஸார் கைதுசெய்தனர். மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி, டைசன், இளமாறன் மற்றும் அருண்குமார் ஆகிய நான்கு பேர் மட்டும் சிறையில் அடைக்கப்பட்டனர். தொடர்ந்து, அவர்கள்மீது குண்டர் சட்ட வழக்கும் பதிவுசெய்யப்பட்டது.



பேரறிவாளனின் பரோல் காலத்தை நீட்டிக்க அற்புதம்மாள் கோரிக்கை மனு!
[Tuesday 2017-09-19 07:00]

ராஜீவ்காந்தி படுகொலை வழக்கில், 26 ஆண்டுகள் சிறைவாசத்துக்குப் பிறகு, முதன்முறையாக ஒரு மாத கால பரோல் கிடைத்துள்ள பேரறிவாளனின் பரோல் காலத்தை நீட்டிக்க, அற்புதம்மாள் கோரிக்கை வைத்துள்ளார்.



டாக்டர் சீட்டுக்கு தகுதி பெறாத மனைவியை எரித்துக்கொன்ற கணவர்: - பெற்றோர் புகார்
[Tuesday 2017-09-19 07:00]

மனைவியை எரித்துக்கொன்றதாக கணவர் மீது உயிரிழந்த பெண்ணின் பெற்றோர் புகாரளித்துள்ளனர்.தெலுங்கானா மாநிலத்தில் உள்ள நகோல் பகுதியைச் சேர்ந்த ஹரிகா என்பவர் மருத்துவக்கல்லூரியில் விண்ணப்பித்துள்ளார். ஆனால், அவருக்கு போதிய மதிப்பெண் இல்லாததால் பல் மருத்துவத்திற்கான இடம் கிடைத்துள்ளது. இந்நிலையில், நேற்று முந்தினம் ஹரிகாவின் கணவர், அப்பெண்ணின் பெற்றோருக்கு போன் செய்து ஹரிகா உடலில் தீ வைத்துக்கொண்டு தற்கொலை செய்ததாக கூறியுள்ளார்.



ஆசிரியர் அடித்ததில் மாணவர் மூளைச்சாவு: - அதிர்ச்சி சம்பவம்
[Monday 2017-09-18 18:00]

நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் சித்தம்பூண்டி கிராமத்தைச் சேர்ந்தவர் பெருமாள்- சின்ராஜ் தம்பதியினரின் மூத்த மகன் விஸ்வேஸ்வரன். இந்த மாணவனைக் குப்புசாமி என்ற ஆசிரியர் அடித்ததில் மூளைச்சாவு அடைந்ததாகக் கூறப்படுகிறது. இதுபற்றி விஸ்வேஸ்வரனின் அம்மா சின்ராஜிடம் கேட்டபோது,



மகளுக்கு விஷ ஊசி செலுத்தி கொன்று விட்டு தாயும் தற்கொலை: - சோகத்தை ஏற்படுத்திய சம்பவம்
[Monday 2017-09-18 18:00]

மகளுக்கு விஷ ஊசி செலுத்தி அவர் உயிரிழந்த நிலையில், தாயும் விஷ ஊசி செலுத்தி கொண்டு உயிரை விட்டுள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.பஞ்சாப் மாநிலத்தின் மொஹாலி நகரை சேர்ந்தவர் ராம்பால் சிங், இவர் மனைவி பரம்ஜித் கவுர் (38), இவர்களுக்கு சுக்மந்தீப் கவுர் (12) என்ற மகள் உள்ளார்.பரம்ஜித் தனியார் மருத்துவமனையில் செவிலியராக பணியாற்றி வந்தார்.



நண்பர்களுடன் இணைந்து மாமியாரை பலாத்காரம் செய்து கொலை செய்த மருமகன்!
[Monday 2017-09-18 18:00]

மாமியாரை மருமகன் உட்பட மூன்று பேர் சேர்ந்து பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.தமிழ்நாட்டின் மதுரையை சேர்ந்தவர் ஜோதி, இவர் தனது மகளை செல்வின் என்பவருக்கு திருமணம் செய்து கொடுத்துள்ளார்.



தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் 18 பேரை தகுதிநீக்கம்: - சபாநாயகர் அதிரடி நடவடிக்கை
[Monday 2017-09-18 13:00]

டி.டி.வி.தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் 18 பேரை தகுதிநீக்கம் செய்து சபாநாயகர் உத்தரவிட்டுள்ளார். முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மீதான நம்பிக்கையை இழந்துவிட்டதாக தங்க தமிழ்ச்செல்வன் உள்ளிட்ட 19 பேர் ஆளுநர் வித்யாசாகர் ராவை நேரில் சந்தித்துத் தனித்தனியாகக் கடிதம் அளித்தனர். இதனால், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கலாம் என்று அரசு கொறடா, சபாநாயகருக்கு பரிந்துரை செய்திருந்தார். இதுதொடர்பாக நேரில் விளக்கம் அளிக்குமாறு எம்.எல்.ஏக்களுக்கு சபாநாயகர் தனபால் நோட்டீஸ் அளித்திருந்தார். அவர்களில் எம்.எல்.ஏ ஜக்கையன் தவிர 18 பேர் தகுதிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.



மூன்று ஆண்களை திருமணம் செய்து லட்சக்கணக்கில் மோசடி செய்த பெண் மருத்துவர்!
[Monday 2017-09-18 08:00]

மூன்று ஆண்களை வெவ்வேறு காலகட்டத்தில் திருமணம் செய்து ஏமாற்றிய பெண் மருத்துவரை பொலிசார் கைது செய்துள்ளனர்.தெலுங்கானா மாநிலத்தின் ஹைதராபாத்தை சேர்ந்தவர் சரிதா (37), ஹோமியோபதி மருத்துவம் படித்துள்ளார்.



எனது கணவரை தமிழ் மண்ணில் புதைக்க வேண்டும்: -நெகிழ்ச்சியை ஏற்படுத்திய மூதாட்டியின் வைராக்கியம்
[Monday 2017-09-18 08:00]

கேரளாவில் உயிரிழந்த எனது கணவரை தமிழ் மண்ணில் புதைக்க வேண்டும் என 60 வயது மூதாட்டி கூறியது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டத்தைசேர்ந்த காசி (62)- சகுந்தலா(60) தம்பதியினருக்கு குழந்தைகள் இல்லை.



வாட்ஸ்-அப்பில் காதலனுக்கு நிர்வாண படத்தை அனுப்பி மாட்டிக்கொண்ட மருத்துவ மாணவி!
[Monday 2017-09-18 08:00]

காதலனுக்கு அனுப்பிய தனது நிர்வாண படம் வாட்ஸ்-அப்பில் பரவியதால் பல் மருத்துவ மாணவி சிக்கலில் மாட்டிக்கொண்டார். அவரை காப்பாற்றுவதாக கூறி மணந்த தொழில் அதிபர் பாலியல் தொல்லை கொடுப்பதால் விரக்தி அடைந்த மாணவியின் நிலை மேலும் மோசமாகி உள்ளது.பெங்களூருவில் வசித்துவரும் 20 வயது பல் மருத்துவ மாணவி 2015-ம் ஆண்டு ஒருவரை தீவிரமாக காதலித்தார். இருவரும் வாட்ஸ்-அப்பில் அரட்டை அடித்து வந்தனர். அப்போது, நிர்வாண படத்தை அனுப்பும்படி மாணவியிடம் காதலன் கேட்டதால் அவர் மீதான நம்பிக்கையில் தனது நிர்வாண படத்தை வாட்ஸ்-அப் மூலம் அனுப்பினார்.



ஐ.நாவின் 35-வது மனித உரிமைகள் மாநாட்டில் பங்கேற்க ஜெனிவா செல்கிறார் வைகோ!
[Sunday 2017-09-17 17:00]

ஐ.நா-வின் மனித உரிமைகள் மாநாட்டில் பங்கேற்பதற்காக ஜெனிவா பயணமாகியுள்ளார் வைகோ.ஐ.நாவின் 35-வது மனித உரிமைகள் மாநாடு, ஜெனிவாவில் ஜூன் 12-ம் தேதி தொடங்கி 20-ம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்தக் கூட்டத்தில், உலக நாடுகள் அனைத்திலும் நடைபெறும் மனித உரிமைகள் மீறல்கள் குறித்தும் அதற்கான தீர்வுகள் குறித்தும் விவாதிக்கப்படும். இந்தக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக ஜெனிவா பயணமாகியுள்ளார் ம.தி.மு.க-வின் பொதுச்செயலாளர் வைகோ.



கோஹ்லி என்னை திருமணம் செய்து கொள்ளுங்கள்: - பாகிஸ்தான் போலீஸ்காரரின் விருப்பம்!
[Sunday 2017-09-17 17:00]

இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோஹ்லிக்கு உலகம் முழுவதும் ரசிகர்கள் பட்டாளம் உள்ளது. ஸ்டைலான பேட்டிங், துணிச்சல், ஆக்ரோஷமான அணுகுமுறை என விராட் கோஹ்லியிடம் உள்ள ஒவ்வொரு சிறப்பம்சமும் ரசிகர்களை ஈர்க்கிறது. இந்தியாவின் பரம எதிரியாக கருதப்படும் பாகிஸ்தானில் கூட விராட் கோஹ்லிக்கு கணக்கிட முடியாத எண்ணிக்கையில் ரசிகர்கள் உள்ளனர். பாகிஸ்தான்-உலக லெவன் இடையே, லாகூரில் சமீபத்தில் நடைபெற்ற டி20 போட்டிகளின்போது, இதை உணர முடிந்தது. விராட் கோஹ்லி, டோனி போன்ற இந்திய வீரர்கள், உலக லெவன் அணியில் இடம் பெறாத ஏக்கம், மைதானத்தில் பாகிஸ்தான் ரசிகர்கள் காட்டிய பேனரில் வெளிப்பட்டது.



தமிழகத்தில் கள்ளிச்செடி கூட வளரும் ஆனால் பா.ஜனதா கட்சி வளராது: - சீமான்
[Sunday 2017-09-17 16:00]

காவிரி பிரச்சினைக்காக நாம் தமிழர் கட்சி சார்பில் கடந்த ஆண்டு எழும்பூரில் நடந்த ஊர்வலத்தில் அக்கட்சியை சேர்ந்த விக்னேஷ் தீக்குளித்து உயிரிழந்தார்.அவரது முதலாம் ஆண்டு நினைவு நாள் பொதுக் கூட்டம் விருகம்பாக்கம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட சாலி கிராமத்தில் நேற்று நடந்தது. ஒருங்கிணைப்பாளர் ராஜேந்திரன் தலைமை தாங்கினார்.தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-



கமல் - ரஜினி அரசியலுக்கு வந்தால் மக்கள் ஏற்க மாட்டார்கள்: - சிங்கமுத்து
[Sunday 2017-09-17 16:00]

ஈரோடு பெரியார்நகர் அ.தி.மு.க.சார்பில் அண்ணா பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம் ஈரோடு சூரம்பட்டி நால்ரோடு பகுதியில் நடந்தது. கூட்டத்துக்கு மாநகர் மாவட்ட செயலாளர் கே.வி.ராமலிங்கம் தலைமை தாங்கினார். எம்.பி.செல்வகுமார சின்னையன், பகுதி செயலாளர்கள் பெரியார் நகர் மனோகரன், சூரம்பட்டி ஜெகதீசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் தலைமை கழக பேச்சாளரும், நடிகருமான சிங்கமுத்து கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் பேசியதாவது.-



ரஜினி கமலோடு இணையத் தேவையில்லை: - தமிழருவி மணியன்
[Sunday 2017-09-17 08:00]

கமல்தான் ரஜினியோடு இணைய வேண்டும். ரஜினி கமலோடு இணையத் தேவையில்லை' தமிழகத்தில் இரண்டு திராவிட கட்சிகளை அகற்றுவதற்கு இருவரும் இணைந்து செயல்பட்டால் நன்றாக இருக்கும் " என்று காந்திய மக்கள் கட்சியின் தலைவர் தமிழருவி மணியன் புதுச்சேரி செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்துள்ளார். மேலும் ரஜினி அரசியல் கட்சி தொடங்குவதற்கான பணிகளை மூன்று மாதத்துக்கு முன்பே தொடங்கி விட்டார். ரஜினி அரசியலுக்கு வருவது உறுதி. அதில் எவ்வித மாற்றுக் கருத்தும் இல்லை என்றும் தெரிவித்துள்ளார்.



ரோகிங்யா முஸ்லிம்களை அகதிகளாக ஏற்க மறுக்கும் முடிவை கைவிட வேண்டும்: - வேல்முருகன்
[Sunday 2017-09-17 08:00]

" அரசியல் சாசனத்தையும் சர்வதேச சட்டங்களையும் மீறி, அரசையே குறிப்பாக முஸ்லிம்களுக்கு எதிராகக் கொண்டுசெலுத்தும் மோடியை வன்மையாகக் கண்டிக்கிறோம். ரோகிங்யா முஸ்லிம்களை அகதிகளாக ஏற்க மறுக்கும் முடிவை மோடி உடனடியாகக் கைவிட வேண்டும்" என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் வேல்முருகன் கேட்டுக்கொண்டுள்ளார்.



குடும்ப சண்டையில் வீட்டுக்குள் வைத்து பூட்டிவிட்டு சென்ற ஒன்றரை மாத கைக்குழந்தை பலி!
[Saturday 2017-09-16 18:00]

ராஜஸ்தான் மாநிலம், பன்ஸ்வாரா மாவட்டம், கோத்வாலி போலீஸ் நிலைய எல்லக்குட்ப்பட்ட ஒரு வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசுவதாக அங்கன்வாடி காப்பகத்தில் பணியாற்றும் ஒரு பெண் நேற்று போலீசாருக்கு தகவல் அளித்தார். விரைந்துவந்த போலீசார், அந்த வீட்டின் கதவில் இருந்த பூட்டை உடைத்து திறந்துப் பார்த்தபோது, உள்ளே ஒன்றரை மாத பெண் குழந்தை இறந்து கிடந்தது.



3 வயது குழந்தை ரூ.100 கோடி சொத்தை விட்டு விட்டு துறவிகளான இளம்தம்பதி!
[Saturday 2017-09-16 18:00]

மத்திய பிரதேச மாநிலம் நீமுச் எனும் ஊரில் வசித்து வருபவர் ராஜேந்திரசிங் ரதோர்.சிமெண்ட் தொழிற் சாலைகளுக்கு சாக்கு தயாரித்து கொடுக்கும் நிறுவனம் நடத்தி வருகிறார். கோடீசுவரரான இவரது ஒரே மகன் சுமித் ரதோர் (வயது35). லண்டனில் உள்ள கல்லூரியில் ஏற்றுமதி- இறக்குமதி நிர்வாகம் பற்றிய டிப்ளமோ படித்த அவர் 2 ஆண்டுகள் அங்கு பணி புரிந்து வந்தார். பிறகு மத்திய பிரதேசம் திரும்பி இவர் தனது தந்தையின் சாக்கு தயாரிக்கும் நிர்வாகத்தை செய்து வந்தார்.


SELVI-HOMES-09-02-17
Mahesan-Remax-169515-Seithy
Easankulasekaram-Remax-300716
Tharsi-home-15-10-2016
Elankeeran-debt-solution-25-06-2016
<P>
 <b> 13-08-2017 அன்று ரொரன்டோவில் நடைபெற்ற இசை மாலைப் பொழுது - 2017 நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள்-குணா
</p>
<b>  கனடா-ரொரன்டோவில்  ஜூலை 29ம் 30ம்தி கதிகளில் நடைபெற்ற World Tamil Badminton Federation 5th annual tournament நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள்-குணா
<b>  கனடா-ரொரன்டோவில்  ஜூலை 7ம் 8ம் 9ம்தி கதிகளில் நடைபெற்ற குதூகலம் 2017 நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள்-குணா