Untitled Document
November 18, 2017 [GMT]
  • Welcome
  • Welcome
தமிழரசுக் கட்சி தலைவர் திரு - மாவைசேனாதிராசா வன்னிப் பெருநிலப்பரப்பு பிரதிநிதிகளுடன் சந்திப்பு:
[Wednesday 2017-09-13 22:00]

தமிழரசுக் கட்சியின் தலைவரும், கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினருமாகிய திரு மாவை சேனாதிராஜா அவர்கள் தற்போது கனடாவுக்கு வருகைதந்திருப்பது யாவரும் அறிந்ததே. அவரைப் பல்வேறு தரப்பினரும் சந்தித்து இலங்கையின் அரசியல் நிலவரம், அங்கு வாழ்கின்ற தமிழ்மக்களது வாழ்வாதாரத் தேவைகள்,மக்களது கல்வி வேலைவாய்ப்புக்கள் பற்றிக் கலந்துரையாடி வருகின்றார்கள். அந்த வகைகில் கனடாவில் வாழ்கின்ற வன்னிப் பிரதேசத்தினைச் சேர்ந்த மக்களும் திரு மாவை சேனாதிராஜா அவர்களைக் கடந்த சனிக்கிழமை காலை 10 மணியளவில் அவர் தங்கியிருக்கும் இல்லத்தில் சந்தித்து வன்னிப் பிரதேசம் தொடர்பில் பல்வேறு விடங்களைக் கலந்தாலோசித்தார்கள்.

தமிழரசுக் கட்சியின் தலைவரும், கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினருமாகிய திரு மாவை சேனாதிராஜா அவர்கள் தற்போது கனடாவுக்கு வருகைதந்திருப்பது யாவரும் அறிந்ததே. அவரைப் பல்வேறு தரப்பினரும் சந்தித்து இலங்கையின் அரசியல் நிலவரம், அங்கு வாழ்கின்ற தமிழ்மக்களது வாழ்வாதாரத் தேவைகள்,மக்களது கல்வி வேலைவாய்ப்புக்கள் பற்றிக் கலந்துரையாடி வருகின்றார்கள். அந்த வகைகில் கனடாவில் வாழ்கின்ற வன்னிப் பிரதேசத்தினைச் சேர்ந்த மக்களும் திரு மாவை சேனாதிராஜா அவர்களைக் கடந்த சனிக்கிழமை காலை 10 மணியளவில் அவர் தங்கியிருக்கும் இல்லத்தில் சந்தித்து வன்னிப் பிரதேசம் தொடர்பில் பல்வேறு விடங்களைக் கலந்தாலோசித்தார்கள்.

  

முக்கியமாக வன்னிப் பிரதேசத்தில் வாழ்கின்ற பெண்களைத் தலைமைத்துவமாகக் கொண்ட குடும்பங்களுக்கான வாழ்வாதார உதவி, வலுவளர்களுக்கான உதவிகள், தொழில் வாய்ப்புக்களை உருவாக்கக் கூடிய சிறு தொழில்களைத் தொடங்குதல் போன்ற விடங்கள் விரிவாகக் கலந்துரையாடப்பட்டது. அத்தோடு இராணுவத்தினால் கையகப்படுத்தப்பட்ட பொதுமக்களது காணிகளை விடுவிப்பது தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டபோது முக்கியமாக கேப்பாபுலவுக் காணிகள் விடுவிப்பது தொடர்பில் விரிவாகப் பேசப்பட்டது. தற்போது கேப்பாபுலவில் இராணுவத்தினர் கையகப்படுத்தியுள்ள காணிகளில் 70 வீதமானவற்றினை விடுவிப்பதற்கு ஜனாதிபதியும், இராணுவத்தினரும் இணங்கியிருப்பதாகத் தெரிவித்தார்.

இதற்காக அமைச்சரவை தற்போது இராணுவ முகாமினை நகர்த்துவதற்குரிய செலவீட்டுக்கு நிதியினை ஒதுக்கி அதற்கு அங்கீகாரம் வழங்கியிருப்பதாகவும் தெரிவித்தார். மேலும் ஒட்டுசுட்டான் ஓட்டுத் தொழிற்சாலையினைத் திறப்பது தொடர்பாகவும் வினாவப்பட்ட போது அதற்கான முன்னெடுப்பு நடவடிக்கைகள் இடம்பெறுவதாகவும், விரைவாக அத்தொழிற்சாலையினை இயங்கவைப்பதற்கான வேலைகள் ஆரம்பமாகும் எனவும் தெரிவித்தார். அத்தோடு அவர் தனது கோரிக்கையாக தாயக மக்களுக்கு உதவி செய்பவர்கள் ஒன்றினைந்து ஓர் அமைப்பின் ஊடாக செய்யும்போது ஒருவர் பலஇடங்களில் ஒன்றுக்கு மேற்பட்ட தடவை உதவி பெற்றுக் கொள்வதைத் தடுப்பதோடு, அதிகமான மக்களுக்கு உதவி வாய்ப்புக்கள் கிட்டும் என்பதனையும் வலியுறுத்திக் கூறினார்.

இச் சந்திப்பில் கலந்துகொண்டபோது நடைபெற்ற கலந்துரையாடல் மிகவும் பயனுள்ளதாக அமைந்ததாக தெரிவித்தனர்.

  
   Bookmark and Share Seithy.com



காலியில் முஸ்லிம்களுக்கு எதிராக வன்முறை! - ஊரடங்கு சட்டம் Top News
[Saturday 2017-11-18 09:00]

காலி மாவட்டத்தின் சில பகுதிகளில் நேற்று இரவு ஏற்பட்ட அமைதியற்ற சூழ்நிலை காரணமாக சில பிரதேசங்களில் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டது. காலி மாவட்டத்தின் குருந்துவத்தை, வெலிபிட்டிமோதர, மஹாலபுகல, உக்வத்த, ஜின்தோட்டை (மேற்கு மற்றும் கிழக்கு), பியதிகம ஆகிய பிரதேசங்களில் நேற்று இரவு ஊரடங்கு சட்டம் அறிவிக்கப்பட்டது.



தேசியக்கொடி ஏற்ற மறுத்த வடக்கு கல்வி அமைச்சருக்கு எதிராக விசாரணை?
[Saturday 2017-11-18 09:00]

வட மாகாண கல்வி அமைச்சர் சர்வேஸ்வரன் தேசியக்கொடியை ஏற்ற மறுத்திருப்பது தொடர்பில் உடன் விசாரணை ஒன்றை நடத்தும் பொறுப்பு வட மாகாண ஆளுநருக்கு இருப்பதாக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் முன்னாள் ஆணையாளர் பிரதிபா மஹாநாமஹேவா தெரிவித்துள்ளார்.



வடக்கில் பொலிசாரின் விடுமுறைகள் ரத்து!
[Saturday 2017-11-18 09:00]

வடமாகாணத்துக்கு உட்பட்ட பொலிஸ் நிலையங்களிலிருந்து விடுமுறையில் சென்ற பொலிஸார் அனைவரினதும் விடுமுறை, உடனடியாக அமுலுக்கு வரும்வகையில் இரத்து செய்யப்பட்டுள்ளதாக, வடமாகாண சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் ரொஷான் பெர்ணான்டோ தெரிவித்துள்ளார். வடமாகாணத்தில் பூதாகரமாகியுள்ள வாள் வெட்டுச் சம்பவங்கள் மற்றும் மாவீரர் தின அனுஷ்டிப்பை கருத்திற்கொண்டே, பொலிஸாரின் விடுமுறை இரத்துச் செய்யப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.



எஸ்.எம்.ஜீயின் உடல் நல்லடக்கம்! Top News
[Saturday 2017-11-18 09:00]

மூத்த ஊடகவியலாளர் எஸ்.எம். கோபாலரத்தினம் (எஸ்.எம்.ஜீ) அவர்களின் இறுதிக்கிரியை நேற்றுமாலை நடைபெற்றது. மட்டக்களப்பில் கடந்த புதன்கிழமை காலமான ஊடகவியலாளர் எஸ்.எம். கோபாலரத்தினம் அவர்களின் பூதவுடலுக்கு அரசியல்வாதிகள், ஊடகவியலாளர்கள், பொதுமக்கள் என பலர் அஞ்சலி செலுத்தினர். தொடர்ந்து மட்டக்களப்பு கள்ளியங்காடு இந்துமயானத்தில் அன்னாரின் பூதவுடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.



நான்காகப் பிரிக்கப்படுகிறது கல்முனை மாநகரசபை! - சம்பந்தன் தலைமையில் குழு அமைப்பு
[Saturday 2017-11-18 09:00]

கல்முனை மாநகரசபையை 04 உள்ளூராட்சி சபைகளாக பிரிப்பதற்கு இணக்கம் காணப்பட்டுள்ளது. கல்முனை மாநகர சபைக்குட்பட்ட சாய்ந்தமருதுக்கு தனியான பிரதேசசபை வேண்டும் என்று வலியுறுத்தி கடந்த தினங்களில் போராட்டங்களும் இடம்பெற்றிருந்தன. இதற்கு சிலர் எதிரப்பும் தெரிவித்திருந்தனர்.



யாழ். குடாநாட்டின் புவியியல் அமைப்பில் மாற்றம்!
[Saturday 2017-11-18 09:00]

யாழ். குடாநாட்டில் கடந்த சில வாரங்களாக பெய்த மழை காரணமாக புவியியல் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளதாக கொழும்பு ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. யாழ். பல்கலைக்கழக புவியியல் பிரிவு பேராசிரியர்களை மேற்கோள்காட்டி, இந்தத் தகவல் வெளியிடப்பட்டுள்ளது.



நாடாளுமன்ற குழு அறைக்குள் பாம்பு!
[Saturday 2017-11-18 09:00]

நாடாளுமன்றத்தின், முதலாவது இலக்க குழு அறைக்குள் இருந்து பாம்பு ஒன்று நேற்று நாடாளுமன்றப் பணியாளர்களால் கண்டுபிடிக்கப்பட்டது. நாடாளுமன்ற தரைத்தளத்தில் உள்ள முதலாவது இலக்க குழு அறையில் நேற்றுக்காலை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டிருந்த பணியாளர்கள், அங்கு ஒளிந்திருந்த பாம்பு ஒன்றை கண்டுபிடித்து பிடித்துச் சென்றனர். பிடிக்கப்பட்ட பாம்பு, பூனைப்பாம்பு வகையைச் சேர்ந்தது என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.



முஸ்லிம்களுக்கு சிறந்த அரசியல் தலைவர்கள் கிடைத்துள்ளார்கள்! - பாராட்டுகிறார் அனந்தி!
[Saturday 2017-11-18 09:00]

விடுதலைப் புலிகளைப் பிளவுபடுத்திய தென்னிலங்கைத் தலைவர்கள் தமிழ் தேசிய கூட்டமைப்பை உடைப்பதிலும் வெற்றி கண்டுள்ளனர் என வடக்கு மாகாண அமைச்சர் அனந்தி சசிதரன் குற்றஞ்சாட்டினார். யாழ்ப்பாணத்தில் நடத்திய செய்தியாளர்கள் சந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.



மயிலிட்டி மீள்குடியேற்றத்துக்கு 150 மில்லியன் ரூபா வழங்குகிறது நோர்வே!
[Saturday 2017-11-18 09:00]

யாழ்ப்பாண மாவட்டத்தில் புதிதாக விடுவிக்கப்பட்ட மயிலிட்டித் துறைமுகத்தை அண்டிய பகுதிகளில் மீளக் குடியேறும் மக்களுக்கான உதவிகளை வழங்குவதற்கு 150 மில்லியன் ரூபாவை வழங்க நோர்வே அரசாங்கம், முன்வந்துள்ளது.



எந்த வன்முறை குழுவையும் யாழ்ப்பாணத்தில் மீண்டும் தலையெடுக்க விடமாட்டோம்! சூளுரைக்கும் அமைச்சர்
[Friday 2017-11-17 19:00]

ஆவா குழு என கூறப்படும் குழுவை அல்லது வேறு எந்த வன்முறை குழுவையும் யாழ்ப்பாணத்தில் மீண்டும் தலையெடுக்க அரசாங்கம் விடமாட்டோம் என்று சட்டம் மற்றும் ஒழுங்கு அமைச்சர் சாகல ரத்நாயக்க தெரிவித்துள்ளார். “இந்த வன்செயல் குழுவின் செயற்பாடுகளைக் கட்டுப்படுத்தவும் இந்தக் குழுவுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கவும் பொலிஸ், அதன் முழு சக்தியையும் பிரயோகிக்கும்.



வாள்வெட்டு சம்பவங்களுடன் பொலிசாருக்கு தொடர்பு! - சந்தேகம் கிளப்புகிறார் வட மாகாணசபை உறுப்பினர்
[Friday 2017-11-17 18:00]

வாள்வெட்டு சம்பவங்களுடன் தொடர்புடையவர்கள் எவரும் கைது செய்யப்பட்டதாக தெரியவில்லை. எனவே இவ்வாறான வாள்வெட்டு சம்பவங்களுக்கு பொலிஸார் உடந்தையாக இருக்கிறார்களா? என்னும் சந்தேகம் எழுகின்றது என வட மாகாணசபை உறுப்பினர் ச.சுகிர்தன் தெரிவித்துள்ளார்.



சம்பந்தனின் கேள்விகளுக்கு பதிலளிக்காமலேயே நழுவிய மகிந்த!
[Friday 2017-11-17 18:00]

பாரா­ளு­மன்­றத்தில் நேற்று வர­வு–­செ­ல­வுத்­திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான ஆறாம் நாள் விவாதத்தினை எதிர்க்­கட்­சித் ­த­லை­வரும் தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் தலை­வ­ரு­மான இரா.சம்­பந்தன் முற்­பகல் 10.17 மணிக்கு ஆரம்­பித்தார்.



பொலிஸ் பிடியில் இருந்து தப்பியோடிய ஆவா குழு தலைவன் நிஷா விக்டர்! - மீண்டும் கைது
[Friday 2017-11-17 18:00]

ஆவா குழுவின் பிரதான சந்தேக நபர் என கருதப்படும் நிஷா விக்டர் இன்று காலை பொலிஸாரின் கட்டுப்பாட்டில் இருந்து தப்பிச் சென்றிருந்தார்.வழக்கு விசாரணைக்காக மல்லாகம் நீதிவான் நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்ட போது தப்பிச் சென்ற நிஷா விக்டர் மீண்டும் கைது செய்யப்பட்டுள்ளார். கோப்பாய் பிரதேசத்தில் உள்ள அவரின் உறவினரின் வீட்டில் பதுங்கி இருந்த போது கைது செய்யப்பட்டுள்ளார்.



வழக்கில் இருந்து கோத்தாவை விடுவிக்க நீதிமன்றம் மறுப்பு!
[Friday 2017-11-17 18:00]

அவன்காட் வழக்கில் இருந்து விடுவிக்குமாறு பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ விடுத்த கோரிக்கையை, கொழும்பு பிரதான நீதிவான் லால் ரணசிங்க பண்டார நிராகரித்துள்ளார். அவன்காட் வழக்குத் தொடர்பில் பிரதிவாதிகளாக குறிப்பிட்டப்பட்டுள்ள தான் உள்ளிட்ட பிரதிவாதிகளை விடுதலை செய்யுமாறு அவர் சார்பில் ஆஜரான சட்டத்தரணிகள் நீதிமன்றத்தில் கோரி நின்றனர். அந்த கோரிக்கை​யே நிராகரிக்கப்பட்டுள்ளது.



வவுனியாவில் 16 வயதுச் சிறுமியை கடத்திச் சென்று வல்லுறவு - இரண்டு இளைஞர்கள் கைது!
[Friday 2017-11-17 18:00]

வவுனியா, கணேசபுரத்தில் சிறுமி ஒருவரை கடத்திச் சென்று பாலியல் வல்லுறவுக்குட்படுத்திய இரு இளைஞர்களை பொலிஸார் கைது செய்துள்ளனர். வவுனியா, கணேசபுரத்திலுள்ள தனது வீட்டிற்குச் சென்று கொண்டிருந்த சிறுமியை முச்சக்கரவண்டியில் கடத்திக்கொண்டு சென்று பாலியல் வல்லுறவிற்குட்படுத்திய இரு இளைஞர்களையே பொலிஸார் கைது செய்துள்ளனர்.



உள்ளூராட்சித் தேர்தலுக்கான வேட்புமனு குறித்த அறிவிப்பு 27ஆம் திகதி வெளியாகும்!
[Friday 2017-11-17 18:00]

உள்ளூராட்சி தேர்தலுக்கான வேட்பு மனுக்களை கோருவது தொடர்பிலான அறிவித்தல் எதிர்வரும் 27ஆம் திகதி வெளியிடப்படும்வி என்று தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்தார்.



பியர் வரி குறைப்புக்கு எதிராக யாழ்ப்பாணத்தில் போராட்டம்! Top News
[Friday 2017-11-17 18:00]

வரவுசெலவுத் திட்டத்தில் பியர் விலை குறைக்கப்பட்டுள்ளதை கண்டித்தும் அதை உடனடியாக மீண்டும் அதிகரிக்குமாறு வலியுறுத்தியும் யாழ்ப்பாணத்தில் கவனயீர்ப்பு போராட்டம் இடம்பெற்றது. மதுசாரத்திற்கான இளைஞர் அணியின் ஏற்பாட்டில் இந்த கவனயீர்ப்பு பேரணி இன்று யாழ்ப்பாணத்திலுள்ள வடமாகாண ஆளுனர் அலுவலகத்திற்கு முன்பாக இடம்பெற்றது.



கூட்டமைப்புக்கு யாரும் வரலாம், யாரும் வெளியே போகலாம்!
[Friday 2017-11-17 18:00]

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கதவு திறந்துள்ளது. யாரும் வரலாம், யாரும் போகலாம் என கூட்டமைப்பின் பங்காளிக் கட்சி தலைவர்கள் தெரிவித்துள்ளனர். கொழும்பிலுள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் நேற்றிரவு நடைபெற்ற கூட்டத்திலேயே அவர்கள் இவ்வாறு தெரிவித்துள்ளனர்.



அமெரிக்காவுக்கான முன்னாள் தூதுவருக்கு பிடியாணை!
[Friday 2017-11-17 18:00]

அமெரிக்காவுக்கான இலங்கையின் முன்னாள் தூதுவர் ஜாலிய விக்ரமசூரியவை கைது செய்யுமாறு, கோட்டை நீதிமன்ற நீதிவான், பிடியாணை பிறப்பித்துள்ளார். அவர், தூதுவராக பதவிவகித்த காலத்தில், அரசாங்கத்துக்கு சொந்தமான 132,000 டொலரை முறைக்கேடாக பயன்படுத்தினார் என்று அவருக்கு எதிராக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.



மட்டக்களப்பு விபத்தில் இளைஞன் பலி!
[Friday 2017-11-17 18:00]

மட்டக்களப்பு - காயாங்குடா பிரதேசத்தில் இன்று காலை இடம்பெற்ற விபத்தில் 19 வயதுடைய இளைஞன் ஒருவர் உயிரிழந்தார். உழவு இயந்திரம் ஒன்றில் மணல் ஏற்றிக்கொண்டு சென்ற போது, சாரதிக்கு அருகில் அமர்ந்து வந்த இளைஞனே தவறி கீழே விழுந்து சில்லுக்குள் அகப்பட்டு உயிரிழந்துள்ளார். மட்டக்களப்பு தம்பானம்வெளி பிரதேசத்தைச் சேர்ந்த பிரபாகரன் லவன் என்ற இளைஞனே உயிரிழந்துள்ளார். பொலிஸார் உழவு இயந்திரத்தின் சாரதியை கைது செய்துள்ளதுடன், மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


Mahesan-Remax-169515-Seithy
Tharsi-home-15-10-2016
Easankulasekaram-Remax-300716
SELVI-HOMES-09-02-17
<P>
 <b> 13-08-2017 அன்று ரொரன்டோவில் நடைபெற்ற இசை மாலைப் பொழுது - 2017 நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள்-குணா
</p>
<b>  கனடா-ரொரன்டோவில்  ஜூலை 29ம் 30ம்தி கதிகளில் நடைபெற்ற World Tamil Badminton Federation 5th annual tournament நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள்-குணா
<b>  கனடா-ரொரன்டோவில்  ஜூலை 7ம் 8ம் 9ம்தி கதிகளில் நடைபெற்ற குதூகலம் 2017 நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள்-குணா