Untitled Document
January 17, 2018 [GMT]
  • Welcome
  • Welcome
ஈரான்-ஈராக் நிலநடுக்கம்: - பலி எண்ணிக்கை 400 ஆக உயர்வு - 6 ஆயிரம் பேர் படுகாயம்
[Tuesday 2017-11-14 08:00]

ஈரான்-ஈராக் நாடுகளின் எல்லையில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. இதில் 400 பேர் பலியாயினர். 6 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர்.ஈரான்-ஈராக் நாடுகளின் எல்லையில் ஜக்ரோஸ் மலைப்பிரதேசம் உள்ளது. இதன் பெரும் பகுதி ஈரான் எல்லைக்குள் கெர்மான்ஷா என்ற மாகாணத்துக்குள் இருக்கிறது. ஈராக்கின் குர்திஸ்தான் மாகாணத்தின் கிழக்கு நகரான ஹலாப்ஜாவும் இந்த மலைப்பகுதியில் அமைந்த முக்கிய நகராகும். இவை அவ்வப்போது நிலநடுக்கத்துக்கு உள்ளாகும் அபாயகர பகுதிகள்.

ஈரான்-ஈராக் நாடுகளின் எல்லையில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. இதில் 400 பேர் பலியாயினர். 6 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர்.ஈரான்-ஈராக் நாடுகளின் எல்லையில் ஜக்ரோஸ் மலைப்பிரதேசம் உள்ளது. இதன் பெரும் பகுதி ஈரான் எல்லைக்குள் கெர்மான்ஷா என்ற மாகாணத்துக்குள் இருக்கிறது. ஈராக்கின் குர்திஸ்தான் மாகாணத்தின் கிழக்கு நகரான ஹலாப்ஜாவும் இந்த மலைப்பகுதியில் அமைந்த முக்கிய நகராகும். இவை அவ்வப்போது நிலநடுக்கத்துக்கு உள்ளாகும் அபாயகர பகுதிகள்.

  

இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு திடீரென்று இப்பகுதியில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. பூமிக்கு அடியில் 23.2 கிலோ மீட்டர் ஆழத்தில் 31 கிலோ மீட்டர் சுற்றளவிற்கு மையம் கொண்டிருந்த இந்த நிலநடுக்கம் ரிக்டர் ஸ்கேல் அளவில் 7.3 புள்ளியாக பதிவானது. இந்த நிலநடுக்கம் சில வினாடிகள் நீடித்தது. நிலநடுக்கத்தின்போது உண்டான அதிர்வு சத்தம் மத்திய தரைக்கடல் பகுதியிலும், ஈராக் தலைநகர் பாக்தாத்திலும் உணரப்பட்டது.

இதனால், அன்றாட பணிகளை முடித்துவிட்டு இரவில் தூங்குவதற்காக ஆயத்தமான ஜக்ரோஸ் பிரதேச மக்கள் மிகுந்த அதிர்ச்சிக்கு உள்ளாயினர். குழந்தைகள், பெண்கள், முதியோரை அழைத்துக்கொண்டு அலறியடித்தவாறு வீடுகளை விட்டு வெளியே ஓடினர்.

எனினும் பலத்த நில அதிர்வு காரணமாக 10 கிராமங்களில் ஆயிரக்கணக்கான வீடுகள் இடிந்து தரைமட்டம் ஆயின. ஈரானின் சர்போல் -இ ஜகாப் என்ற சிறுநகரம் முற்றிலுமாக சேதம் அடைந்தது. அங்குள்ள 2 மருத்துவமனைகளும் பலத்த சேதம் அடைந்ததால் நிலநடுக்கத்தில் காயம் அடைந்தவர்களுக்கு சிகிச்சை அளிக்க முடியாத நிலை ஏற்பட்டு உள்ளது.

இந்த நிலநடுக்கத்தில் ஈரானில் 380 பேரும், ஈராக்கில் 20 பேரும் பரிதாபமாக உயிர் இழந்தனர். இடிபாடுகளுக்குள் 6 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் சிக்கி படுகாயம் அடைந்தனர். இவர்களில் 400 பேர் ஈராக்கியவர்கள் ஆவர். பலியானவர்களில் பெரும்பாலானோர் மலைப்பகுதியில் கால்நடைகள் வளர்ப்பு தொழிலை வாழ்வாதாரமாக கொண்டவர்கள் ஆவர்.

நிலநடுக்கம் ஏற்பட்ட சில மணி நேரங்களில் மீட்பு, நிவாரண பணிகளில் இரு நாடுகளின் ராணுவமும் இறங்கின. ஈராக் பிரதமர் ஹைதர் அல்-அபாதி உடனடியாக தேசிய பேரிடர் படையினரை ஜக்ரோஸ் பகுதிக்கு அனுப்பி வைத்தார்.

இதேபோல ஈரான் அதிபர் அயத்துல்லா அலி கமேனியும் பேரிடர் மீட்பு பணியில் ஈடுபட உத்தரவிட்டார். நிலநடுக்கத்தில் பலியானவர்களின் குடும்பத்தினருக்கு அவர் ஆழ்ந்த இரங்கலையும் தெரிவித்தார். ஈரானில் மட்டும் 70 ஆயிரம் பேர் வீடு, வாசல்களை இழந்து பரிதவிப்புக்கு உள்ளாகி இருக்கின்றனர்.

கட்டிடங்கள், வீடுகள் ஆங்காங்கே இடிந்து கிடப்பதால் மீட்பு பணிகள் சற்று மந்தமாக நடந்து வருகின்றன. மேலும் சக்திவாய்ந்த நிலநடுக்கத்துக்கு பின்னர் அடுத்தடுத்து 100 முறை பூமி குலுங்கியதால் உயிர் தப்பியவர்கள் பீதியில் உறைந்தனர்.

நிலநடுக்கம் பற்றி பாக்தாத் நகர பெண்மணி மஜிதா அமீர் கூறுகையில், “எனது குழந்தைகள் மூவருடன் இரவு உணவு சாப்பிட்டுக் கொண்டிருந்தேன். அப்போது எங்கள் வீடு நடனம் ஆடியதுபோல் இருந்தது. முதலில் யாரோ வெடிகுண்டு போட்டு விட்டார்கள் என்று நினைத்தேன். அப்போது எல்லோரும் ‘நிலநடுக்கம், நிலநடுக்கம்’ என கத்திக் கொண்டே வீட்டை விட்டு வெளியே ஓடினர். நானும் குழந்தைகளுடன் வெளியே ஓடி வந்துவிட்டேன்” என்றார்.ஈரானில் 2003-ம் ஆண்டு ஏற்பட்ட நிலநடுக்கத்தில் பாம் என்ற நகரில் 26 ஆயிரம் பேர் பலியாயினர் என்பது நினைவு கூரத்தக்கது.

  
   Bookmark and Share Seithy.com



13 குழந்தைகளை அடைத்து கொடுமை செய்த பெற்றோர்: - அமெரிக்காவில் சம்பவம்
[Wednesday 2018-01-17 07:00]

அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் தங்களது 13 குழந்தைகளை ஒரே வீட்டில் வைத்து கொடுமை செய்த பெற்றோர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள பெரீஸ் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. அந்த வீட்டிலிருந்து தப்பித்த 17 வயதான பெண் ஒருவர், தனக்கு கிடைத்த மொபைல் போன் மூலம் போலீசாருக்கு இதுகுறித்து தகவல் தெரிவித்துள்ளார். இதையடுத்து அங்கு சென்ற போலீசார் 2 வயது முதல் 29 வயது வரையில் பதிமூன்று பேர் அடைத்து வைக்கப்பட்டிருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.



மருத்துவ பரிசோதனையில் டிரம்ப் தேறி விட்டார்: - வெள்ளை மாளிகை
[Wednesday 2018-01-17 07:00]

அதிபராக தொடர்வதற்கு டிரம்ப் போதிய மனநிலையில் இல்லை என சர்ச்சை புத்தகம் வெளியான நிலையில், முதன் முறையாக அவருக்கு மருத்துவ பரிசோதனைகள் நடந்துள்ளன. அமெரிக்காவில் மைக்கேல் வோல்ப் என்பவர் எழுதிய ‘பயர் அண்ட் ப்யூனி: இன்சைட் தி டிரம்ப் வொயிட் ஹவுஸ்’ என்ற புத்தகத்தில், டிரம்ப்பின் மனநிலை குறித்து பல கேள்விகளை ஆசிரியர் எழுப்பியிருந்தார். அதிபராக தொடர்வதற்கு தேவையான மனநிலையை அவர் கொண்டுள்ளாரா? என்றும் கேட்டு இருந்தார்.



பொருளாதார தேவைகளுக்காக வயதான ஆண்களுடன் டேட்டிங்: - இணையதளத்தில் குவிந்த பிரித்தானிய மாணவிகள்
[Tuesday 2018-01-16 16:00]

பிரித்தானியாவில் பல்கலைக்கழங்களில் படிக்கும் மாணவிகள் தங்களது படிப்பு செலவு மற்றும் இதர பொருளாதார தேவைகளுக்காக, SeekingArrangement.com எனும் இணையதளத்தை நாடுகின்றனர்.அதாவது, இந்த இணையதளம் டேட்டிங் செல்வதற்கு பயன்படுத்தப்படுகிறது. வயதான நபர்களுடன் இப்பெண்கள் டேட்டிங் செல்வதால் அவர்கள் 'sugar daddies' என அழைக்கப்படுகின்றனர். அதே போன்று இந்த மாணவிகள் 'sugar baby' என அழைக்கப்படுகின்றனர்.



300 ஆண்டுகள் பழமையான கடல்சார் அருங்காட்சியகம் தீக்கிரை!
[Tuesday 2018-01-16 16:00]

17 ஆயிரம் தீவு கூட்டங்களை உள்ளடக்கிய இந்தோனேசியா நாடு டச்சு எனப்படும் நெதர்லாந்து நாட்டின் காலனி (அடிமை) நாடாக இருந்து வந்தது. அவர்களின் ஆட்சி காலத்தில் டச்சு கிழக்கிந்திய கம்பெனி நிறுவனம் விலையுயர்ந்த தேயிலை, காபிக்கொட்டை மற்றும் மசாலா பொருட்களை சேமித்து வைப்பதற்காக ஜகர்தா நகரில் மிகப்பெரிய கிடங்கு ஒன்றை கடந்த 17-ம் நூற்றாண்டுவாக்கில் கட்டியது.



சவுதியில் 35 ஆண்டுகளுக்கு பின் திரைப்படங்களை திரையிட அனுமதி!
[Tuesday 2018-01-16 16:00]

சவுதியில் 35 ஆண்டுகளுக்கு பின் திரைப்படங்களை திரையிட அனுமதி வழங்கப்பட்டுள்ள நிலையில், முதற்கட்டமாக அனிமேஷன் திரைப்படங்கள் திரைப்படவுள்ளன. மன்னர் முகமத் பின் சல்மான் ஆட்சியில் பல்வேறு அதிரடி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.இதன் ஒரு பகுதியாக சவுதியில் திரைப்படங்களை திரையிடுவதற்கு கடந்த ஆண்டு டிசம்பர் 11ம் தேதி அனுமதி வழங்கப்பட்டுள்ளது.



கனடாவில் ஹிஜாப் அணிந்த சிறுமி தாக்கப்பட்டாரா? - விளக்கம் அளித்த பொலிஸ்
[Tuesday 2018-01-16 09:00]

கனடாவின் டொரண்டோவில் ஹிஜாப் அணிந்து பள்ளிக்கு சென்ற 11 வயது சிறுமி தாக்கப்பட்டதாகவும், கத்திரிக்கோலால் அவளது ஹிஜாப் வெட்டப்பட்டதாகவும் செய்திகள் வெளியாகின.இதை கனடா நாட்டு அரசியல்வாதிகள் வன்மையாகக் கண்டித்திருந்தனர், இதற்கு கனடா பிரதமரும் மிகவும் வருத்தம் தெரிவித்திருந்தார்.



வருங்கால பிரித்தானியா இளவரசி மெர்க்கலின் கவர்ச்சி போட்டோ ஷூட்!
[Tuesday 2018-01-16 09:00]

பிரபல அமெரிக்க பத்திரிக்கைக்கு கடைசியாக மேகன் மெர்க்கல் நடித்து கொடுத்த கவர்ச்சியான போட்டோ ஷூட்டின் புகைப்படங்கள் வைரலாகியுள்ளது.பிரபல நடிகையும், மொடலுமான மேகன் மெர்க்கலும், பிரித்தானிய இளவரசர் ஹரியும் காதலித்து வரும் நிலையில் இருவருக்கும் மே மாதம் பிரம்மாண்டமாக திருமணம் நடைபெறவுள்ளது.இந்நிலையில் Good Housekeeping பத்திரிக்கையின் அமெரிக்க பதிப்புக்காக மெர்க்கல் கவர்ச்சியான போட்டோ ஷூட்டில் நடித்திருந்தார்.



கோல்டன் குளோப் விருது வென்ற இந்திய வம்சாவளி ஹாலிவுட் நடிகர் மீது செக்ஸ் புகார்!
[Tuesday 2018-01-16 09:00]

சிறந்த ஹாலிவுட் சினிமா படங்களுக்கு வழங்கப்படும் ‘கோல்டன் குளோப்’ விருது விழா அமெரிக்காவின் கலிபோர்னியாவில் சமீபத்தில் நடந்தது.அதில் சிறந்த தொலைக்காட்சி நகைச்சுவை நடிகருக்கான விருது ஆசிஷ் அன்சாரிக்கு வழங்கப்பட்டது.இவர் இந்திய வம்சாவளியை சேர்ந்தவர், இவரது தந்தை டாக்டர் சவுகத் அன்சாரி, இவர் நெல்லை மாவட்டம் வாசுதேவநல்லூரை சேர்ந்தவர்.



வருங்கால பிரித்தானிய இளவரசியிடம் மன்னிப்பு கோரிய மொடல் அழகி!
[Monday 2018-01-15 18:00]

பிரித்தானியாவின் வருங்கால இளவரசி மேகன் மெர்க்கலை கருப்பித்தனவர் என இனவாதத்தை தூண்டும் விதமாக கருத்து தெரிவித்த மொடல் அழகி அதற்காக மன்னிப்பு கோரியுள்ளார்.UK Independence Party- யின் தலைவராக இருக்கும் Henry Bolton(54) - யின் காதலியும், மொடலுமான Jo Marney, இனவாதத்தை தூண்டும் வகையில் மேகன் மெர்க்கல் குறித்து கருத்து தெரிவித்திருந்தார்.



கலிபோர்னியா வில் சாலை தடுப்பில் மோதி, வானில் பறந்து மாடிக்குள் பாய்ந்த கார்!
[Monday 2018-01-15 18:00]

அமெரிக்கா நாட்டின் கலிபோர்னியா மாநிலத்தின் தென் பகுதியில் உள்ள சாண்ட்டா அனா பகுதி சாலை வழியாக (உள்ளூர் நேரப்படி) நேற்று அதிகாலை சுமார் 5.30 மணியளவில் படுவேகமாக வந்த ஒரு வெள்ளைநிற சொகுசு கார் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையின் குறுக்கே இருந்த தடுப்பு சுவரின்மீது பயங்கரமாக மோதியது.



நான் இன வெறியன் அல்ல: - டொனால்டு டிரம்ப்
[Monday 2018-01-15 18:00]

அமெரிக்காவில் குடியேறிய வெளி நாட்டினரின் மறு சீரமைப்பு குறித்து எம்.பி.க்கள் மற்றும் செனட்டர்கள் கூட்டம் வாஷிங்டன் வெள்ளை மாளிகையில் கடந்த வாரம் நடந்தது. அதில் அதிபர் டொனால்டு டிரம்ப் கலந்து கொண்டு பேசினார்.அப்போது ஆசிய மற்றும் ஆப்பிரிக்க நாடுகளில் இருந்து அமெரிக்காவில் குடியேறியவர்கள் குறித்து பேசினார். மேலும் எல்சால்வேடர், ஹோண்டுராஸ் மற்றும் ஹைதி நாட்டில் இருந்து வந்து வெளியேறியவர்களையும் குறிப்பிட்டார்.



300 ஆண்டுகளுக்கு முன்பு மரணித்தவரின் ஆவியை திருமணம் செய்த பிரித்தானியா பெண்!
[Monday 2018-01-15 18:00]

பிரித்தானியாவை சேர்ந்த பெண் ஒருவர் 300 ஆண்டுகளுக்கு முன்பு மரணித்த மனிதரின் ஆவியை சட்டப்பூர்வமாக திருமணம் செய்துள்ளார்.பிரித்தானியாவை சேர்ந்த பெண் Amanda Teague(வயது 45), ஐரிஷ் கடற்கரையில் குடும்ப உறவுகள் மற்றும் நண்பர்கள் புடைசூழ 300 ஆண்டுகளுக்கு முன்பு இறந்து போன ஹைதியின் கடற்கொள்ளையரான ஜாக் என்பவரின் ஆவியை திருமணம் செய்து கொண்டுள்ளார்.கடந்த 1700 ஆண்டுகளில் வசித்து தூக்கிலிடப்பட்டவர் தான் ஜாக், 2014ம் ஆண்டு படுக்கையறையில் இருந்த போது தன்னுள் ஆவி வந்ததை உணர்ந்திருக்கிறார் Amanda Teague.அன்றிலிருந்து ஆவியுடன் பேச ஆரம்பித்தபோது சுவாரசியமாக இருந்ததாம்,



வெடித்து சிதறும் எரிமலை: - பப்புவா நியூகினி தீவில் ஆயிரக்கணக்கான மக்கள் வெளியேற்றம்
[Monday 2018-01-15 08:00]

ஒசானியாவில் அமைந்துள்ள பப்புவா நியூகினி தீவின் வடக்குப் பகுதியில் உள்ள எரிமலை வெடித்து சிதறி வருவதால் ஆயிரக்கணக்கான மக்கள் அங்கிருந்து வெளியேற்றப்பட்டு வருகின்றனர்.ஒசானியா கண்டத்தில் அமைந்துள்ளது பப்புவா நியூகினி தீவு. இதனருகில் உள்ள கடோவர் தீவிலுள்ள எரிமலை கடந்த 5-ம் தேதி முதல் குமுறி கொண்டிருந்தது.



ஓடுதளத்திலிருந்து விலகி பள்ளத்தில் விழுந்த விமானம்: - அதிர்ஷடவசமாக உயிர்தப்பிய பயணிகள்
[Monday 2018-01-15 08:00]

துருக்கி விமான நிலையத்தில் தரையிறங்கிய விமானம் ஓடுதளத்தில் இருந்து விலகி பள்ளத்தில் விழுந்தது. அதிர்ஷடவசமாக பெரும் உயிரிழப்பு ஏற்படவில்லை. துருக்கி நாட்டு தலைநகர் அங்காராவில் இருந்து டிராப்சான் நகருக்கு விமானம் ஒன்று சென்று கொண்டிருந்தது.



பொங்கலோ பொங்கலோ: - சமூக வலைத்தளங்களில் வாழ்த்து தெரிவித்து அசத்திய சிங்கப்பூர் பிரதமர்
[Sunday 2018-01-14 17:00]

சிங்கப்பூர் பிரதமர் லீ சியன் லூங் பொங்கல் வைக்கும் பழையப் புகைப்படம் ஒன்று தற்போது வைரலாகி வருகிறது. லீ சியன் லூங் ’பொங்கலோ பொங்கல்!’ என்று வாழ்த்துத் தெரிவித்து இன்று ட்விட்டர் மற்றும் ஃபேஸ்புக்கில் பதிவு செய்திருந்தார். தமிழரின் திருநாளான பொங்கல், சிங்கப்பூரில் விமர்சையாக கொண்டாடப்படுவதாகவும் குறிப்பிட்டிருந்தார்.



பெரு நாட்டில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்: - ரிக்டர் அளவில் 7.3 ஆக பதிவு
[Sunday 2018-01-14 17:00]

தென் அமெரிக்க நாடான பெரு நாட்டில் கடலோரப் பகுதியில் பலத்த நிலநடுக்கம் ஏற்பட்டது. பூகியோ என்ற இடத்தில் ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 7.3 ஆக பதிவாகியுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.



அமெரிக்க அதிபர் டிரம்ப் மன்னிப்பு கேட்க வேண்டும்: - 55 ஆப்ரிக்க நாடுகள் தீர்மானம்
[Sunday 2018-01-14 17:00]

இனவெறி குறித்து விமர்சனம் செய்த அமெரிக்க அதிபர் டிரம்ப் மன்னிப்பு கேட்க வேண்டும் என 55 ஆப்ரிக்க நாடுகள் தீர்மானம் நிறைவேற்றி உள்ளன.வெளிநாடுகளில் இருந்து வெளியேறி அமெரிக்காவில் அகதிகளாக பலர் குடியேறி வருகின்றனர். அது குறித்த ஆய்வு கூட்டம் வெள்ளை மாளிகையில் நடந்தது. செனட் உறுப்பினர்கள் மற்றும் எம்.பி.க்கள் கலந்து கொண்ட இக்கூட்டத்திற்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் தலைமை வகித்தார். இந்த கூட்டத்தில் ஹைதி மற்றும் ஆசிய, ஆப்பிரிக்க நாடுகளில் இருந்து வந்து அகதிகளாக குடியேறியவர்கள் குறித்து டிரம்ப் பேசினார்.



போர்த்துகல்: ஓய்வு விடுதியில் தீவிபத்து - 8 பேர் உயிரிழப்பு
[Sunday 2018-01-14 13:00]

போர்த்துகல் நாட்டில் ஒரு ஓய்வு விடுதியில் நேற்றிரவு ஏற்பட்ட தீவிபத்து மற்றும் அதைத்தொடர்ந்து ஏற்பட்ட கூட்டநெரிசலில் சிக்கி சுமார் 8 பேர் உயிரிழந்தனர்.

 


தென் ஆப்பிரிக்காவில் மர்ம நோய்க்கு 60 பேர் பலி!
[Sunday 2018-01-14 12:00]

தென் ஆப்பிரிக்காவில் லிஸ்டீரியோசிஸ் அல்லது லிஸ்டீரியா என்ற மர்ம நோய் தாக்கியதில் 60 பேர் பலியாகி உள்ளனர்.தென் ஆப்பிரிக்காவில் லிஸ்டீரியோசிஸ் அல்லது லிஸ்டீரியா என்று அழைக்கப்படுகிற மர்ம நோய், மனிதர்களை தாக்கி வருகிறது.



தமிழ்ச் சமூகத்தால் நாங்கள் பெருமையடைகிறோம்: - பிரிட்டன் பிரதமர் பொங்கல் வாழ்த்து
[Sunday 2018-01-14 12:00]

உலகம் முழுவதும் உள்ள தமிழர்கள் தை முதல் நாளான இன்று பொங்கல் பண்டிகையை உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர். குறிப்பாக கனடா, அமெரிக்கா, ஐரோப்பியா நாடுகள் மட்டுமல்லாது ஆஸ்திரேலியா, மலேசியா, சிங்கப்பூரில் உள்ள தமிழர்கள் உறவுகளுடன் பண்டிகையை கொண்டாடி வருகின்றனர்.


Easankulasekaram-Remax-300716
Mahesan-Remax-169515-Seithy
SELVI-HOMES-09-02-17
Tharsi-home-15-10-2016
<P>
 <b> 13-08-2017 அன்று ரொரன்டோவில் நடைபெற்ற இசை மாலைப் பொழுது - 2017 நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள்-குணா
</p>
<b>  கனடா-ரொரன்டோவில்  ஜூலை 29ம் 30ம்தி கதிகளில் நடைபெற்ற World Tamil Badminton Federation 5th annual tournament நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள்-குணா
<b>  கனடா-ரொரன்டோவில்  ஜூலை 7ம் 8ம் 9ம்தி கதிகளில் நடைபெற்ற குதூகலம் 2017 நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள்-குணா