Untitled Document
November 20, 2017 [GMT]
  • Welcome
  • Welcome
கடற்படையினரைத் தாக்கிய ஒருவர் அடையாள அணிவகுப்பில் சிக்கினார்!
[Tuesday 2017-11-14 18:00]

பருத்தித்துறை கிழக்குப் பகுதியில், கடற்படையினர் மீது  தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் தொடர்பில், இன்று  இடம்பெற்ற அடையாள அணிவகுப்பின் போது ஒருவர் கடற்படையினரால் அடையாளம் காணப்பட்டுள்ளதாக, பருத்தித்துறை பொலிஸார் தெரிவித்தனர்.
குடவத்தை பகுதியைச் சேர்ந்த  ஒருவரே, இவ்வாறு இடையாளம் காணப்பட்டுள்ளார்.

பருத்தித்துறை கிழக்குப் பகுதியில், கடற்படையினர் மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் தொடர்பில், இன்று இடம்பெற்ற அடையாள அணிவகுப்பின் போது ஒருவர் கடற்படையினரால் அடையாளம் காணப்பட்டுள்ளதாக, பருத்தித்துறை பொலிஸார் தெரிவித்தனர். குடவத்தை பகுதியைச் சேர்ந்த ஒருவரே, இவ்வாறு இடையாளம் காணப்பட்டுள்ளார்.

  

கடந்த ஜூலை மாதம் மணல் ஏற்றிவந்த கன்டர் ரக வாகனத்தை, கடலோர காவற்கடமையில் ஈடுபட்டிருந்த கடற்படையினர் நிறுத்த முயற்சித்தபோது, அவர்கள் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டிருந்தது. இச்சம்பவம் தொடர்பில், பருத்தித்துறை பொலிஸாரால் ஐவர் கைது செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

  
   Bookmark and Share Seithy.comதேசியக்கொடியை தூக்கிய சம்பந்தனுக்கு நீங்கள் காட்டிய நல்லெண்ணம் என்ன?
[Sunday 2017-11-19 21:00]

அமைச்சர் மனோ தெற்கு சிங்கள தலைமைகளை நோக்கி கேள்வி தேசிய கொடியை தூக்க மறுத்த வடமாகாணசபை அமைச்சரை கண்டிப்போம். ஆனால், இன்று இந்த அமைச்சர் தேசிய கொடியை தூக்கவில்லை என்பதில் குறை காணும் தென்னிலங்கை தீவிரவாதிகள், அன்று தேசியக்கொடியை தூக்கிய சம்பந்தனுக்கு காட்டிய நல்லெண்ணம் என்ன?யாழ். குடாநாட்டில் வாள்வெட்டு சந்தேக நபர்கள் 47 பேர் கைது!
[Sunday 2017-11-19 18:00]

யாழ்ப்பாணத்தில் அண்மையில் இடம்பெற்ற தாக்குதல் சம்பவங்கள் தொடர்பில் 47 பேர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளதாக, பொலிஸார் தெரிவித்துள்ளனர். அண்மையில் யாழ்ப்பாணத்தின் கோப்பாய், மானிப்பாய் போன்ற பகுதிகளில் சிலர் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது. இந்த சம்பவம் தொடர்பில் பொலிஸ்மா அதிபரின் உத்தரவுக்கு அமைய, வட மாகாணத்திற்குப் பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபரின் நேரடி கண்காணிப்பின் கீழ் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக, பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவான் குணசேகர தெரிவித்தார்.தேசியக்கொடி பிரதிபலிக்கும் மக்களை உதாசீனம் செய்யக் கூடாது! - விக்னேஸ்வரன்
[Sunday 2017-11-19 18:00]

தேசியக் கொடி என்பது ஒரு நாட்டின் மக்களை அடையாளப்படுத்துகின்றது. மக்களுக்குள் முரண்பாடுகள் இருக்கலாம். கட்சிகளுள் வேற்றுமைகள் இருக்கலாம். ஆனால் அதை வைத்து தேசியக்கொடி பிரதிபலிக்கும் மக்களை உதாசீனம் செய்யக் கூடாது என முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.வறுமை நிலையில் முதல் ஐந்து இடங்களில் வடக்கு, கிழக்கிலுள்ள மாவட்டங்கள்!
[Sunday 2017-11-19 18:00]

வடக்கு கிழக்கு மாகாணங்களிலுள்ள தமிழ் மக்கள் வாழும் மாவட்டங்கள் வறுமை நிலையில் முதன்மை நிலையில் உள்ளதாக இலங்கை மத்திய வங்கியின் மதிப்பீடுகள் தெரிவிக்கின்றன. கிளிநொச்சி, முல்லைத்தீவு, மட்டக்களப்பு, திருகோணமலை, யாழ்ப்பாணம் ஆகிய ஐந்து மாவட்டங்களும் நாடளாவிய ரீதியில் வறுமை நிலையில் முதல் ஐந்து இடங்களிலுள்ளன என இலங்கை மத்திய வங்கியின் வறுமை ஒழிப்பு பிரிவின் குழுக்களின் தலைவர் ஆர்.ஸ்ரீ.பத்மநாதன் தெரிவித்தார்.தமிழ் இனவாதம் வலிமை பெற்றால், சிங்கள இனவாதம் வலுப்பெறும்! - அநுரகுமார
[Sunday 2017-11-19 18:00]

இலங்கையில் இனவாத மனோநிலை உருவாகியுள்ளதாக ஜே.வி.பியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார். நேற்று நாடாளுமன்றத்தில் உரையாற்றிய அவர், “இந்தநிலைக்கு அரசியல் வாதிகளே காரணம்.தேசிய கொடியை ஏற்றுவதற்கு வடக்கு மாகாண கல்வி அமைச்சர் சர்வேஸ்வரன் மறுப்பு தெரிவித்துள்ளார். இது தமிழ் தேசிய கூட்டமைப்பின் நிலைப்பாடா? என்பதை தமிழ் தேசிய கூட்டமைப்பினர் நாடாளுமன்றத்திற்கு கூறவேண்டும்.காங்கேசன்துறை கடலில் 55 கிலோ கஞ்சா மீட்பு!
[Sunday 2017-11-19 18:00]

காங்கேசன்துறைக் கடற்பரப்பில் 55 கிலோ கஞ்சா இன்று மீட்கப்பட்டது. காங்கேசன்துறை கடற்படையினரே கஞ்சாவை மீட்டதாகவும் சந்தேகநபர் எவரும் கைது செய்யப்படவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டது. மீட்கப்பட்ட கஞ்சா பொதியை காங்கேசன்துறை பொலிஸாரிடம் ஒப்படைக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.இரட்டைக்குடியுரிமை அதிகாரிகளுக்கும் ஆப்பு?
[Sunday 2017-11-19 18:00]

அரசாங்க நிறுவனங்களின் உயர் பதவிகளில் உள்ள இரட்டை குடியுரிமை பெற்ற தலைவர்கள் மற்றும் நிறைவேற்று அதிகாரிகள் தொடர்பில் அறிக்கை ஒன்றை வழங்குமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.அச்சுவேலியில் கஞ்சாவுடன் ஒருவர் கைது!
[Sunday 2017-11-19 18:00]

அச்சுவேலி - வல்லை வீதிப் பகுதியில் 2 அரைக் கிலோ கஞ்சா வைத்திருந்த குற்றச்சாட்டில் ஒருவர் இன்று கைது செய்யப்பட்டார். வல்லைப் பகுதியைச் சேர்ந்த 25 வயதுடைய நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டார் என அச்சுவேலிப் பொலிஸார் தெரிவித்தனர். மேலதிக விசாரணைகளைப் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.புதன்கிழமை புதுடெல்லி செல்கிறார் ரணில்!
[Sunday 2017-11-19 18:00]

பிரதமர் ரணில் விக்ரமசிங்க எதிர்வரும் 22 ஆம் திகதி புதன்கி்ழமை இந்தியாவுக்குப் பயணம் மேற்கொள்ளவுள்ளார். இரண்டு நாள் பயணமாக இந்தியாவுக்குச் செல்லும் அவர், இந்திய அரசியல் தலைவர்கள் பலருடனும் சந்திப்பில் ஈடுபடவுள்ளார். அவருடன் அமைச்சர்களான மங்கள சமரவீர, மலிக் சமரவிக்ரம உள்ளிட்ட உயர் மட்டக்குழுவினரும் பயணிக்கவுள்ளனர்.வடக்கு, கிழக்கில் முஸ்லிம் காங்கிரஸ் தனித்துப் போட்டி!
[Sunday 2017-11-19 18:00]

உள்ளூராட்சித் ​தேர்தலில், வடக்கு மற்றும் கிழக்கில் தனித்துப் போட்டியிடுவதற்கு முஸ்லிம் காங்கிரஸ் தீர்மானித்துள்ளதாக, கட்சியின் செயலாளர் நிஷாம் காரியப்பர் தெரிவித்தார். இவ்விடயம் தொடர்பாக மத்திய செயற்குழுக் கூட்டத்திலேயே இறுதித் தீர்மானம் எடுக்கப்படும் எனவும், அவர் தெரிவித்தார்.தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி கட்சியின் வட்டுக்கோட்டைத் தொகுதி அலுவலக திறப்புவிழா! Top News
[Sunday 2017-11-19 18:00]

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி- அகில இலங்கைத் தமிழ் காங்கிரஸ் கட்சியின் வட்டுக்கோட்டைத் தொகுதி அலுவலக திறப்புவிழா நேற்று சங்கரத்தை வீதி, வட்டுக்கோட்டையில் இடம்பெற்றது. வட்டு மண்ணின் மைந்தன் பிரபல இளம் சட்டத்தரணி கனகரட்ணம் சுகாஸ் அவர்களது தலைமையில் மேற்படி நிகழ்வு இடம்பெற்றது.அத்துமீறிய இந்திய மீனவர்கள் 8 பேர் கைது! Top News
[Sunday 2017-11-19 18:00]

சட்டவிரோதமாக எல்லை தாண்டி மீன்பிடியில் ஈடுபட்ட எட்டு இந்திய மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர். அவர்களின் இரண்டு படகுகளையும் இலங்கை கடற்படை வசப்படுத்தியுள்ளது. கச்சத்தீவு பகுதியில் நேற்று இரவு 7.15 மணியளவில் இந்திய மீனவர்கள் நால்வர் சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட நிலையில் இலங்கை கடற்படையினரால் கைதுசெய்யப்பட்டனர்.பிரபாகரனிடமே போரைக் கற்றுக்கொண்டோம்! - சரத் பொன்சேகா
[Sunday 2017-11-19 09:00]

விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்­பிள்ளை பிர­பா­க­ர­னி­டம் இருந்தே நாம் போரைக் கற்­றுக்­கொண்­டோம். பிர­பா­க­ரன் உரு­வா­கி­ய­தன் கார­ண­மா­கவே பீல்ட் மார்­சல் உரு­வா­கி­னார் என்று பிராந்­திய அபி­வி­ருத்தி அமைச்­சர் பீல்ட்­மார்­சல் சரத் பொன்­சேகா தெரி­வித்­தார்.ஊடரங்கு நீக்கம் - இராணுவம், அதிரடிப்படை குவிப்பு!
[Sunday 2017-11-19 09:00]

காலி பொலிஸ் பிரிவின் ஏழு கிராம சேவகர் பிரிவுகளில் அமுல்படுத்தப்பட்டிருந்த ஊரடங்குச் சட்டம் இன்று காலை 6 மணியுடன் நீக்கப்பட்டுள்ளது. வெலிபிடிமோதர, மஹபுகல, ரக்வத்தை, கிங்தொட கிழக்கு, கிங்தொட மேற்கு, பியதிகம மற்றும் குருந்துவத்தை ஆகிய கிராம சேவர் பிரிவுகளில் இந்த ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டது. அந்தப் பகுதிகளில் பொலிஸாருடன் விஷேட அதிரடிப் படையினர் மற்றும் இராணுவத்தினரும் பாதுகாப்புக் கடமைகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக, பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.தேசியக்கொடி ஏற்ற மறுத்த சர்வேஸ்வரன் - சட்டமா அதிபரின் ஆலோசனையை கோருகிறார் ஆளுனர்!
[Sunday 2017-11-19 09:00]

வட மாகாண கல்வி அமைச்சர் எஸ்.சர்வேஸ்வரன் தேசியக் கொடியை ஏற்ற மறுத்த விவகாரம் தொடர்பில், சட்டமா அதிபரின் ஆலோசனையின் படி, நடவடிக்கை எடுக்கவுள்ளதாக, வடக்கு ஆளுநர் ரெஜினோல்ட் குரே கூறியுள்ளார். நாளை இது குறித்து சட்டமா அதிபரின் ஆலோசனையைப் பெற நடவடிக்கை எடுத்துள்ளதாக, அவர் கூறினார்.அவுஸ்ரேலியா ஏற்க மறுத்த 197 இலங்கை அகதிகளை திருப்பி அழைக்க நடவடிக்கை!
[Sunday 2017-11-19 09:00]

அவுஸ்திரேலியாவில் புகலிடம் மறுக்கப்பட்டு நௌரு, பபுவா நியூகினியா, கிறிஸ்மஸ்தீவு, அவுஸ்திரேலிய தடுப்பு முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ள 197 இலங்கையர்களை மீண்டும் கொழும்புக்கு அழைத்து வருவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படும் என வெளிவிவகார அமைச்சர் திலக் மாரப்பன, தெரிவித்துள்ளார்.வாள்வெட்டுகள் குறித்து 11 பேரிடம் விசாரணை!
[Sunday 2017-11-19 09:00]

யாழ்ப்பாணத்தில் அண்மைக்காலமாக இடம்பெற்ற வாள்வெட்டுச் சம்பவங்களுடன் தொடர்புடையவர்கள் எனச் சந்தேகிக்கப்படும் 11 பேர் விசாரணையில் வைக்கப்பட்டுள்ளனர். அவர்கள் இன்னும் கைது செய்யப்படவில்லை என்று வடக்கு மாகாண மூத்த பொலிஸ்மா அதிபர் ரொஷான் பெர்னாண்டோ தெரிவித்தார்.கொடிகாமத்தில் 35 கிலோ கஞ்சா மீட்பு - இருவர் கைது!
[Sunday 2017-11-19 09:00]

கொடி­கா­மத்­தில் நேற்று இரவு 35 கிலோ கஞ்சா மீட்­கப்­பட்­டது. சந்­தே­க­த்தில் இருவர் கைது செய்­யப்­பட்­டனர் என்று கொடி­கா­மம் பொலி­ஸார் தெரி­வித்­த­னர். இர­க­சி­யத் தக­வ­லை­ய­டுத்து கொடி­கா­மம் திருநாவுக்கரசு மகாவித்தியாலயத்தை ஒட்டி சோதனை செய்த பொலி­ஸார் கஞ்­சாவை மீட்­ட­னர். பொதி­யி­டத் தயா­ராக இருந்த நிலை­யில் 35 கிலோ கஞ்சா கைப்­பற்­றப்­பட்­டது. இதனை வைத்­தி­ருந்த சந்­தே­கத்­தில் இருவ­ரைக் கைது செய்­துள்­ளோம்’’ என்று பொலி­ஸார் தெரி­வித்­த­னர்.கிந்­தொட்ட கலவரத்துக்கு முஸ்லிம்களை குற்றம்சாட்டுகிறது பொது பலசேனா!
[Sunday 2017-11-19 09:00]

காலி - கிந்­தொட்ட பிர­தே­சத்தில் நேற்று முன்தினம் இடம்­பெற்ற இனக்­க­ல­வரம் தொடர்பில் பொது­பலசேனா அமைப்பின் தலைவர் ஞான­சார தேர­ரினால் அறிக்­கைகள் எதுவும் வெளி­யி­டப்­ப­டாத நிலையில் அவரின் பெயரில் அறிக்­கைகள் வெளி­யி­டப்­பட்­டுள்­ள­தா­கவும் த­ளங்­க­ளூ­டாக அவ­ரு­டைய பெயரைப் பயன்­ப­டுத்தி ஊடக பிர­சா­ரங்கள் வெளி­யி­டப்­ப­டு­வ­தா­கவும் பொது பல சேனா அமைப்பு தெரி­வித்­துள்­ளது.ஆவா குழுவைச் சேர்ந்த இருவர் கைது!
[Sunday 2017-11-19 09:00]

கொக்குவில் பகுதியில் நேற்று இரவு ஆவா குழுவைச் சேர்ந்தவர்கள் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். கொக்குவில் ரயில் நிலையத்திற்கு அருகில் குறித்த சந்தேகநபர்கள் இருவரும் நேற்று இரவு நீண்ட நேரமாக நின்றுள்ளனர். இது தொடர்பாக யாழ். பொலிஸாருக்கு கிடைத்த இரகசியத் தகவலுக்கமைய யாழ். தலைமைப்பீட பொறுப்பதிகாரியின் உத்தரவின் அடிப்படையில் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.


Tharsi-home-15-10-2016
Easankulasekaram-Remax-300716
Mahesan-Remax-169515-Seithy
SELVI-HOMES-09-02-17
<P>
 <b> 13-08-2017 அன்று ரொரன்டோவில் நடைபெற்ற இசை மாலைப் பொழுது - 2017 நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள்-குணா
</p>
<b>  கனடா-ரொரன்டோவில்  ஜூலை 29ம் 30ம்தி கதிகளில் நடைபெற்ற World Tamil Badminton Federation 5th annual tournament நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள்-குணா
<b>  கனடா-ரொரன்டோவில்  ஜூலை 7ம் 8ம் 9ம்தி கதிகளில் நடைபெற்ற குதூகலம் 2017 நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள்-குணா