Untitled Document
December 16, 2017 [GMT]
  • Welcome
  • Welcome
ரோஹிங்கியா மக்கள் மீதான தாக்குதல்: - கிரிமினல் விசாரணைக்கு ஐ.நா. மனித உரிமைகள் அமைப்பு பரிந்துரை
[Wednesday 2017-12-06 18:00]

மியான்மர் நாட்டில் ராணுவத்தினரின் தாக்குதலால் உயிருக்கு பயந்து ரோஹிங்கியா முஸ்லிம்கள் வங்காளதேசத்திற்கு தப்பிச் சென்ற வண்ணம் உள்ளனர். ராணுவ நடவடிக்கைகள் தொடங்கிய நாளில் இருந்து சுமார் 6 லட்சத்து 20 ஆயிரம் ரோஹிங்கியா முஸ்லிம்கள் அங்கிருந்து வெளியேறி அண்டை நாடான வங்காளதேசத்தில் அகதிகளாக தஞ்சம் அடைந்துள்ளனர். ரக்கினே மாநிலத்துக்குள் பத்திரிகையாளர்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. பலகாலமாக மியான்மரின் ஆட்சியை கைப்பற்றி வைத்திருந்த ராணுவம் ஆட்சியாளர்களின் கட்டளைக்கு கீழ்படிய மறுத்து இஸ்லாம் மதத்தினரான ரோஹிங்கியா மக்கள்மீது அடக்குமுறையை பயன்படுத்தி வருவதாக அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் குற்றம்சாட்டி வருகின்றன.

மியான்மர் நாட்டில் ராணுவத்தினரின் தாக்குதலால் உயிருக்கு பயந்து ரோஹிங்கியா முஸ்லிம்கள் வங்காளதேசத்திற்கு தப்பிச் சென்ற வண்ணம் உள்ளனர். ராணுவ நடவடிக்கைகள் தொடங்கிய நாளில் இருந்து சுமார் 6 லட்சத்து 20 ஆயிரம் ரோஹிங்கியா முஸ்லிம்கள் அங்கிருந்து வெளியேறி அண்டை நாடான வங்காளதேசத்தில் அகதிகளாக தஞ்சம் அடைந்துள்ளனர். ரக்கினே மாநிலத்துக்குள் பத்திரிகையாளர்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. பலகாலமாக மியான்மரின் ஆட்சியை கைப்பற்றி வைத்திருந்த ராணுவம் ஆட்சியாளர்களின் கட்டளைக்கு கீழ்படிய மறுத்து இஸ்லாம் மதத்தினரான ரோஹிங்கியா மக்கள்மீது அடக்குமுறையை பயன்படுத்தி வருவதாக அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் குற்றம்சாட்டி வருகின்றன.

  

மியான்மரில் ரோஹிங்கியா முஸ்லிம்கள் மீது ராணுவம் நடத்திவரும் ஒடுக்குமுறைகளுக்கு ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்டெரெஸ் கண்டனம் தெரிவித்திருந்தார். இந்நிலையில், மியான்மர் நாட்டில் ரோஹிங்கியா இன மக்களுக்கு எதிராக அரசுப் படைகள் நடத்திய ‘இன அழிப்பு’ தாக்குதல் தொடர்பாக சர்வதேச கிரிமனல் விசாரணைக்கு ஐ.நா. மனித உரிமைகள் அமைப்பின் பொதுச் செயலாளர் உத்தரவிட்டுள்ளார்.

மியான்மரில் இருந்து வங்காளதேசம் நாட்டுக்கு அடைக்கலம் தேடிச் செல்லும் ரோஹிங்கியா அகதிகள் விவகாரம் தொடர்பாக சுவிட்சர்லாந்து நாட்டின் ஜெனிவா நகரில் நேற்று நடைபெற்ற ஐ.நா. மனித உரிமைகள் அமைப்பின் சிறப்பு கூட்டத்தின்போது உரையாற்றிய இவ்வமைப்பின் உயர் கமிஷனர் ஸெய்ட் ராட் அல் ஹுசேன் கூறியதாவது:-

ரோஹிங்கியா அகதிகளின் துயரத்தை நேரில் கேட்டறிவதற்காக இந்த அலுவலகம் மூன்று குழுக்களை அனுப்பி வைத்தது. இதன் மூலம் ரோஹிங்கியா மக்களுக்கு எதிராக இழைக்கப்பட்ட காட்டுமிராண்டித்தனமான தாக்குதல்கள், வீடுகளுக்குள்ளே மக்களை வைத்து எரித்த கொடூரம், குழந்தைகளையும், இளம் வயதினரையும் கொன்றது மட்டுமின்றி உயிருக்கு பயந்து தப்பிச்சென்ற பொதுமக்களை கண்மூடித்தனமாக சுட்டுக்கொன்றது, சிறுமிகள் மற்றும் இளம்பெண்களை கற்பழித்தது, வீடுகள்,பள்ளிக்கூடங்கள், சந்தைகள் மற்றும் மசூதிகளை எரித்தும், இடித்தும் நாசப்படுத்தியது உள்ளிட்ட அத்துமீறல்கள் அங்கு நடந்திருப்பது தெரியவந்தது.

ரோஹிங்கியா மக்களை ரோஹிங்கியாக்கள் என்றழைக்கவும், அவர்களுக்கான சுய அடையாளத்தை மதிக்கவும் அங்கீகரிக்கவும் சர்வதேச சமுதாயமும், அவர்கள் வாழும் நாடும் மறுத்து வருவதை மற்றொரு அவமரியாதை என்பது அவமானகரமான செயலாக கருத வேண்டியுள்ளது.

தங்களுக்கு உரிய அங்கீகாரம் அளிக்கப்படாததாலும், மனிதநேயமற்ற முறையில் பாரபட்சமான முறையில் தனிமைப்படுத்தப்பட்டும், கொடூரமான முறையிலான வன்முறையால் வாழ்விடங்களில் இருந்து பலவந்தமாக வெளியேற்றப்பட்டும், திட்டமிட்டு கிராமங்கள், வீடுகள், சொத்துகள் மற்றும் வாழ்வாதாரங்கள் அழிக்கப்பட்டும் கடந்த ஆகஸ்ட் மாதம் முதல் ரோஹிங்கியா மக்களுக்கு எதிராக இழைக்கப்படும் கொடுமைகளில் இன அழிப்புக்கான பங்கு இல்லை என்று யாராலும் புறந்தள்ள முடியுமா?

இவ்விவகாரங்கள் மிகவும் கவலைக்குரியவை. இதுதொடர்பாக உடனடியாக சீராய்வு செய்ய வேண்டியுள்ளதால் தகுதிவாய்ந்த சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் தான் இதற்கான சட்ட தீர்வை தர இயலும். எனவே, இதுதொடர்பாக உண்மையை கண்டறியவும், பாரபட்சமற்ற வகையில் இதற்கு காரணமானவர்கள் மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்க துணை புரியவும் சுதந்திரமான விசாரணை நடத்தும் ஒரு அமைப்பை ஏற்படுத்தவும் ஐக்கிய நாடுகள் சபை பொதுச் செயலாளருக்கு ஐ.நா. மனித உரிமைகள் அமைப்பு பரிந்துரை செய்கிறது.

  
   Bookmark and Share Seithy.com



சீனாவில் 3 கிலோ மீட்டர் நீளமான நூடுல்ஸ் தயாரித்து கின்னஸ் சாதனை!
[Friday 2017-12-15 19:00]

சீன சமையல் கலைஞர்கள், கையால் தயாரிக்கப்பட்ட 3 கிலோ மீட்டர் நீளமான நூடுல்ஸ் உருவாக்கி புதிய கின்னஸ் சாதனை படைத்துள்ளனர். சீனாவின் ஹூனான் மாகாணத்தில் உள்ள உணவு நிறுவனத்தின் சமையல் நிபுணர்கள் உலகின் மிக நீளமான நூடுல்ஸை கைகளால் தயாரித்து கின்னஸ் சாதனை படைத்துள்ளனர். அதன் மொத்த நீளம் 3 கி.மீ அல்லது 10 ஆயிரத்து 100 அடியாகும்.



சூரிய குடும்பத்திற்கு வெளியே கண்டு பிடிக்கப்பட்ட புதிய கோள்: - நாசா தகவல்
[Friday 2017-12-15 11:00]

சூரிய மண்டலத்திற்கு வெளியே பூமி அளவில் இருக்கும் 7 புதிய கோள்கள் கண்டுபிடிக்கப்பட்டது. கடந்த பிப்ரவரி மாதம் விண்வெளியில் பூமியை போன்று 7 கோள்கள் இருப்பதாக நாசா அறிவித்தது. சூரிய குடும்பத்தை போன்று இக்கோள்களும் பெரிய நட்சத்திரத்தை சுற்றி வருகின்றன. இந்த குடும்பத்திற்கு கெப்ளர் 90 என பெயரிடப்பட்டது.



நெதர்லாந்தில் கத்திக்குத்து தாக்குதல்: - இரண்டு பேர் பலி
[Friday 2017-12-15 11:00]

நெதர்லாந்து நாட்டின் மாஸ்ட்ரிச் நகரில் சில நிமிட இடைவேளையில் நடந்த இரண்டு கத்திக்குத்து தாக்குதல்களில் இருவர் உயிரிழந்துள்ள நிலையில், இது தீவிரவாத தாக்குதலா? என போலீசார் விசாரித்து வருகின்றனர்.ஐரோப்பிய நாடான நெதர்லாந்தில் தெற்கு பகுதியில் இருக்கும் மாஸ்ட்ரிச் நகரில் இந்த தாக்குதல் நடந்துள்ளது. இரண்டு தாக்குதல்களுமே சில நிமிட இடைவேளையில் நடந்துள்ளதாக கூறப்படுகிறது. இருவர் உயிரிழந்துள்ள நிலையில், 4 பேர் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.



விண்வெளி சுற்றுலா செல்ல அனைவருக்கும் வாய்ப்பு: - ரூ.1.60 கோடி இருந்தால் போதும்
[Friday 2017-12-15 08:00]

அடுத்த ஆண்டு முதல் அனைவரும் விண்வெளி சுற்றுலா செல்லும் வாய்ப்பை அமெரிக்க நிறுவனம் வழங்க உள்ளது. இதற்கு ரூ.1.60 கோடி இருந்தால் போதும். விண்வெளி ஆராய்ச்சிதான் இதுவரை நடந்து வந்து இருக்கிறது. தற்போது முதன்முறையாக அனைவரையும் விண்வெளி சுற்றுலா அழைத்துச் செல்லும் புதிய திட்டத்தை அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் ஒன்று மேற்கொண்டது. மேற்கு டெக்ஸாசில் உள்ள புளூ ஆர்ஜின் என்ற அந்த நிறுவனம் விண்வெளிக்கு பொதுமக்களும் பயணம் செய்யக்கூடிய அளவுக்கு கேப்சூல் வகை விண்கலத்தை தயார் செய்து வந்தனர். அதை கடந்த செவ்வாய்க்கிழமை வெற்றிகரமாக விண்ணில் ஏவி சோதனை செய்துள்ளனர்.



பிரிட்டன் பிரதமர் தெரசா மேவுக்கு எதிராக அணிதிரண்ட எம்.பி.க்கள்!
[Friday 2017-12-15 08:00]

ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து வெளியேறும் விவகாரம் தொடர்பாக, பிரிட்டன் பிரதமர் தெரசா மேவுக்கு கடும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது.ஐரோப்பிய யூனியனில் இருந்து இங்கிலாந்து விலகுவது குறித்த பொது ஓட்டெடுப்பு கடந்தாண்டு நடந்தது. அதில் 52 சதவீதம் பேர் வெளியேற வேண்டும் என வாக்களித்தனர். இதையடுத்து, ஐரோப்பிய யூனியனில் இருந்து விலகுவதாக பிரிட்டன் அறிவித்தது. இந்த தீர்மானத்துக்கு எதிராக இருந்த முன்னாள் பிரதமர் டேவிட் கேமரூன் பதவி விலகினார். புதிய பிரதமராக தெரசா மே தேர்ந்தெடுக்கப்பட்டார்.



பூமியின் சகோதரன் வெள்ளி கிரகத்தில் தரையிறங்க முடியுமா?
[Thursday 2017-12-14 14:00]

“இன்னைக்கு இருக்கற பொருளாதார சூழல்ல செவ்வாய் கிரகத்துக்கு எல்லாம் ஒரு மனுஷன் போக முடியுமா?” என்று போதையில் நம் மயில்சாமி கேட்ட கேள்வியை இன்று அமெரிக்காவில் நாசாவைப் பார்த்து பலர் கேட்டுக் கொண்டிருக்கிறார்கள். அதற்குத் தூபம் போடும் விதமாக டொனால்ட் ட்ரம்ப்பும், “ஃபர்ஸ்ட் நிலா, அப்பறம் செவ்வாய்!” என்று நாசாவுக்கு புது ஸ்கெட்ச் போட்டுக் கொடுத்திருக்கிறார். “இதுக்கெல்லாம் எங்க பாஸ் நிதி? வழக்கம் போல எக்ஸ்ட்ரா டேக்ஸ் தானா?” என்று மக்களும் பீதியில் உள்ளனர்.



சோமாலியாவில் பொலீஸ் அக்கடமி மீது தற்கொலைப்படை தாக்குதல்: - 13 பேர் பலி
[Thursday 2017-12-14 14:00]

ஆப்ரிக்க நாடான சோமாலியாவின் தலைநகரில் உள்ள போலீஸ் அகாடமி மீது தற்கொலைப்படை தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 13 போலீசார் பலியாகினர்.ஆப்ரிக்க நாடான சோமாலியாவின் தலைநகரான மொகாடிசுவில் போலீஸ் அகாடமி உள்ளது. இந்நிலையில், இன்று உடலில் குண்டுகளை கட்டி எடுத்து வந்த தீவிரவாதிகள் அகாடமியின் உள்ளே நுழைந்து வெடிக்க வைத்தனர். இந்த தாக்குதலில் 13 போலீசார் உயிரிழந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.



30 நாய்கள் உயிரிழக்கக் காரணமானவருக்கு 90 ஆண்டுகள் சிறை தண்டனை!
[Thursday 2017-12-14 14:00]

ஃபிலிப்பைன்ஸில் 30 நாய்கள் உயிரிழக்கக் காரணமானவருக்கு 90 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட வாய்ப்புள்ளது.நாய்களுக்கான கண்காட்சிக்கு அழைத்துச் செல்லப்படுவதற்காக 40 நாய்கள் காற்றோட்டமில்லாத வேன் ஒன்றில் ஏற்றி கொண்டு செல்லப்பட்டன. கண்காட்சி நடைபெறும் இடத்தை அடைந்ததும், வேனின் கதவுகள் திறக்கப்பட்டபோது அதில் 30 நாய்கள் உயிரிழந்தவிட்டதைக் கண்டு அங்கிருந்து நாய்பிரியர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.



திருமணமாகாத ஆண்களே தனிமையில் இருப்பதாக உணர்கிறார்கள்: - ஆய்வில் தகவல்
[Thursday 2017-12-14 14:00]

தனியாக உள்ள பெண்களை விட தனியாக உள்ள ஆண், தான் தனிமைப்படுத்தப்பட்டதாக உணர்வது ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது.ஐசிஎம் என்ற அமைப்பு உணர்ச்சி மற்றும் உறவு என்பது தொடர்பாக 4054 பேரிடம் ஆய்வு ஒன்றை மேற்கொண்டது. இதில் திருமணமாகாதவர்களின் சுதந்திரம், பொழுதுபோக்குக்கு கிடைக்கும் நேரம், உடல் தொடர்பு ஆகியவை குறித்து கடந்த நவம்பர் 1ம் தேதி முதல் 3ம் தேதி வரை வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. இந்த ஆய்வில் திருமணமாகாத 1,418 பேரும் பங்கேற்றனர்.



அமெரிக்க ராணுவத்துக்கு ரூ.44 லட்சம் கோடியை ஒதுக்கீடு செய்த அதிபர் டிரம்ப்!
[Thursday 2017-12-14 08:00]

அமெரிக்க ராணுவத்துக்கு ரூ.44 லட்சம் கோடியை அதிபர் டிரம்ப் ஒதுக்கீடு செய்துள்ளார். அமெரிக்க ராணுவ செலவுக்கு ரூ.44 லட்சம் கோடி (626 பில்லியன் டாலர்) மதிப்பில் பட்ஜெட் தயார் செய்யப்பட்டது. இதற்கான நிதி ஒதுக்கீடு மசோதாவுக்கு ஒப்புதல் வழங்கி அதிபர் டிரம்ப் நேற்று கையெழுத்திட்டார். இதன் மூலம் வெளிநாடுகளில் உள்ள அமெரிக்க படைகளுக்கு கூடுதலாக 66 பில்லியன் டாலர் வழங்கப்படுகிறது.



இங்கிலாந்தில் உடலுக்கு வெளியே இதயம் கொண்ட குழந்தை: - - உயிர்பிழைத்த அதிசயம்
[Thursday 2017-12-14 08:00]

இங்கிலாந்தை சேர்ந்தவர் டீன் விலின்ஸ் (43). இவர் மனைவி நயோமி பிண்ட்லே (31). நயோமி கர்ப்பமாக இருந்த நிலையில் அவரின் ஒன்பது வார கர்ப்பத்தின் போது மருத்துவர்கள் ஸ்கேன் எடுத்து பார்த்தனர். அப்போது, அவர் வயிற்றில் இருந்த குழந்தையின் இதயம் வெளிப்பகுதியில் இருப்பது கண்டுப்பிடிக்கப்பட்டது. இந்நிலையில், கடந்த மாதம் 22-ஆம் தேதி நயோமிக்கு லியிசெஸ்டர் நகரில் உள்ள கிளின்பீல்ட் மருத்துவமனையில் சிசேரின் மூலம் பெண் குழந்தை பிறந்தது.



வங்காளதேஸில் பெண்கள் வயல் வேலைக்கு செல்ல தடை விதித்த மதத் தலைவர் கைது!
[Wednesday 2017-12-13 17:00]

இஸ்லாமிய சட்டதிட்டங்கள் நடைமுறையில் இருக்கும் வங்காளம் தேசம் நாட்டில் முன்னர் பெண்கள் கொத்தடிமைகள் போல் நடத்தப்பட்டு வந்தனர். வீடுகளுக்குள்ளே முடங்கி கிடந்த அவர்கள் பிற்காலத்தில் மெல்ல,மெல்ல ஆண்களுக்கு நிகராக வெளி வேலைகளுக்கு செல்ல தொடங்கினர்.



விண்வெளியில் புதிய விண்கல் ஒன்றை கண்டறிந்த விஞ்ஞானிகள்!
[Wednesday 2017-12-13 16:00]

விண்வெளியில் புதிய விண்கல் ஒன்றை விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். அது சிறிய கோளாக இருக்கும் எனக்கூறப்பட்டது. விண்கல்லை கண்டறிந்த ஹவாய் பல்கலைக்கழகம் அதற்கு ஓயூமுயா எனப் பெயரிட்டுள்ளனர். இதை பன் - ஸ்டார்ஸ் 1 என்ற தொலைநோக்கியின் மூலம் கண்டறிந்தனர். இது குறித்து விஞ்ஞானிகள் தீவிரமாக ஆராய்ச்சி செய்து வருகின்றனர்.



சிங்கப்பூரில் உதவி கேட்ட சிறுமியுடன் பாலியல் உறவு: - வாலிருக்கு 18 மாதம் சிறை
[Wednesday 2017-12-13 16:00]

சிங்கப்பூரை சேர்ந்த 14 வயது மாணவி புதியரக செல்போன் வாங்குவதற்கு ஆசைப்பட்டார். இதற்காக தனது நட்பு வட்டாரங்களிடம் உதவிகேட்டு சமூக வலைத்தளத்தில் பதிவு செய்திருந்தார்.இதை அந்தப் பெண் வசிக்கும் பகுதியின் அருகாமையில் இருந்த ஹரி குமார் அன்பழகன் என்ற வாலிபர் சமூக வலைத்தளத்தின் மூலம் அறிந்துகொண்டு அவரை நாடினார்.



எகிப்தில் வாழைப்பழம் சாப்பிடும் வீடியோ வெளியிட்ட பாடகிக்கு இரண்டாண்டுகள் சிறை!
[Wednesday 2017-12-13 16:00]

பிரபல எகிப்து நாட்டு பாப் பாடகி ஷாய்மா அகமது சமீபத்தில் ஒரு மியூசிக் வீடியோவை வெளியிட்டிருந்தார். ஒரு வகுப்பறையில் நடப்பது போன்று அமைக்கப்பட்டிருந்த இந்த மியூசிக் வீடியோவில் பாப் பாடகி ஷ்யாமா அகமதுவும் அவரது குழுவினர்களும் நடனம் ஆடியிருந்தனர்.



புவி வழிக்காட்டி செயற்கைகோள் அமைப்பை உருவாக்கி ஐரோப்பிய ஒன்றியம் சாதனை!
[Wednesday 2017-12-13 16:00]

அமெரிக்கா, ரஷ்யாவை தொடர்ந்து ஐரோப்பிய ஒன்றியமும் புவி வழிக்காட்டி செயற்கைகோள் அமைப்பை வெற்றிகரமாக உருவாக்கி உள்ளது. அமெரிக்காவில் ஜிபிஎஸ், ரஷ்யாவின் குளோனஸ் ஆகியவற்றிற்கு இணையான புவி வழிக்காட்டி அமைப்பை உருவாக்கும் முயற்சியின் ஒரு பகுதியாக ஒரே நேரத்தில் 4 செயற்கைகோள்களை ஐரோப்பிய ஒன்றியம் விண்ணில் செலுத்தியுள்ளது.



வடகொரியா அணு ஆயுத சோதனையை நிறுத்தினால் பேச்சுவார்த்தை நடத்த தயார்: - அமெரிக்கா
[Wednesday 2017-12-13 16:00]

வடகொரியா அணு ஆயுத சோதனைகளை நிறுத்த ஒப்புக்கொண்டால் அந்நாட்டுடன் பேச்சுவார்த்தை நடத்த தயாராக இருப்பதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. வடகொரியாவின் அணு ஆயுதசோதனைகளைத் தொடர்ந்து அமெரிக்கா – வடகொரியா இடையேயான வார்த்தைப் யுத்தம் பதற்றத்துக்கு வழிவகுத்தன. இந்நிலையில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அமெரிக்க ராஜாங்க செயலாளர் ரெக்ஸ் டில்லர்சன், வடகொரியாவின் அணு ஆயுத சோதனைகளில் இருந்து பாதுகாத்துக்கொள்வது குறித்து அமெரிக்கா சீனாவுடன் ஆலோசனை நடத்தியதாகத் தெரிவித்தார்.



அமெரிக்க அதிபர் ட்ரம்ப் மீது பாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டு!
[Wednesday 2017-12-13 06:00]

அமெரிக்க அதிபர் ட்ரம்ப் மீது பாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டை பாதிக்கப்பட்ட பெண்கள் நேரடியாகவே ஊடகங்களின் முன்பு பதிவு செய்துள்ளனர்.



62 மாடி கட்டிடத்தில் சாகசம் செய்ய முயன்ற வாலிபர் மரணம்!
[Tuesday 2017-12-12 17:00]

சீனாவைச் சேர்ந்த வு யாங்கிங் என்ற வாலிபர் உயரமான கட்டிடங்களின் மீது ஏறி சாகசங்கள் செய்வார். அதனை வீடியோ எடுத்து சீன இணையதளங்களில் பதிவு செய்து வந்தார். அவரின் சாகசங்களை கண்டு அவரை சீனாவின் சூப்பர்மேன் என்று அழைத்தனர்.ஆனால் அவரின் சாகச முயற்சியே அவருடைய மரணத்திற்கு காரணமாக அமைந்தது. யாங்கிங் சீனாவில் உள்ள 62 மாடி கட்டிடத்தின் மாடியில் சாகசம் செய்வதற்காக தயாரானார். அதை வீடியோ எடுக்க அனைவரும் தயாராக இருந்தனர். அவர் மாடியில் புல்-அப் செய்தார். இரண்டு கால்களையும் கீழே தொங்கவிட்டு கைகளால் கட்டிடத்தை பிடித்திருந்தார். சில நிமிடங்களில் கை நழுவி கீழே விழுந்த அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.



மீண்டும் அமெரிக்க ராணுவத்தில் திருநங்கைகளுக்கு அனுமதி: - பெண்டகன் அறிவிப்பு
[Tuesday 2017-12-12 17:00]

அமெரிக்க ராணுவத்தில் திருநங்கைகளை சேர்க்கும் திட்டத்தை முன்னாள் அதிபர் பாரக் ஒபாமா கொண்டு வந்தார். இந்த திட்டத்தை பலரும் ஆதரித்த நிலையில், அதிபராக டொனால்டு டிரம்ப் பொறுப்பேற்ற பின் அமெரிக்க ராணுவத்தில் திருநங்கைகளை தேர்வு செய்வது தற்காலிகமாக ஒத்தி வைப்பதாக கூறப்பட்டது.


Tharsi-home-15-10-2016
Mahesan-Remax-169515-Seithy
SELVI-HOMES-09-02-17
Easankulasekaram-Remax-300716
<P>
 <b> 13-08-2017 அன்று ரொரன்டோவில் நடைபெற்ற இசை மாலைப் பொழுது - 2017 நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள்-குணா
</p>
<b>  கனடா-ரொரன்டோவில்  ஜூலை 29ம் 30ம்தி கதிகளில் நடைபெற்ற World Tamil Badminton Federation 5th annual tournament நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள்-குணா
<b>  கனடா-ரொரன்டோவில்  ஜூலை 7ம் 8ம் 9ம்தி கதிகளில் நடைபெற்ற குதூகலம் 2017 நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள்-குணா