Untitled Document
May 11, 2024 [GMT]
வங்காளதேஸில் பெண்கள் வயல் வேலைக்கு செல்ல தடை விதித்த மதத் தலைவர் கைது!
[Wednesday 2017-12-13 17:00]

இஸ்லாமிய சட்டதிட்டங்கள் நடைமுறையில் இருக்கும் வங்காளம் தேசம் நாட்டில் முன்னர் பெண்கள் கொத்தடிமைகள் போல் நடத்தப்பட்டு வந்தனர். வீடுகளுக்குள்ளே முடங்கி கிடந்த அவர்கள் பிற்காலத்தில் மெல்ல,மெல்ல ஆண்களுக்கு நிகராக வெளி வேலைகளுக்கு செல்ல தொடங்கினர்.

இஸ்லாமிய சட்டதிட்டங்கள் நடைமுறையில் இருக்கும் வங்காளம் தேசம் நாட்டில் முன்னர் பெண்கள் கொத்தடிமைகள் போல் நடத்தப்பட்டு வந்தனர். வீடுகளுக்குள்ளே முடங்கி கிடந்த அவர்கள் பிற்காலத்தில் மெல்ல,மெல்ல ஆண்களுக்கு நிகராக வெளி வேலைகளுக்கு செல்ல தொடங்கினர்.

  

தற்போது அந்நாட்டில் உள்ள 40 லட்சம் தொழிலாளர்களில் சுமார் 80 சதவீதம் பேர் பெண்களாக காணப்படுகின்றனர். நாடு முழுவதும் உள்ள சுமார் 4500 ஜவுளி தொழிற்சாலைகளில் இவர்கள் பணியாற்றி வருகின்றனர். இந்நிலையில், வங்காளதேசம் நாட்டின் மேற்கு பகுதியில் உள்ள குமர்காலி நகரில் உள்ள மசூதி ஒலிபெருக்கியில் இருந்து கடந்த வெள்ளிக்கிழமை பிற்பகல் ஜும்மா தொழுகைக்கு பின்னர் ஒரு மத அறிவிப்பு (பத்வா) வெளியானது. அப்பகுதியில் உள்ள பெண்களில் யாரும் இன்று முதல் வயல் வேலைகளுக்கு செல்ல கூடாது என்று உத்தரவாக வெளியான அறிவிப்பு அந்நாட்டின் மனித உரிமை ஆர்வலர்களின் கவனத்தை ஈர்த்தது.

மதத் தலைவர்கள் இதுபோன்ற பொது அறிவிப்புகளை (பத்வா) வெளியிடுவதற்கு கடந்த 2001-ம் ஆண்டு அந்நாட்டு அரசு தடை விதித்திருந்தது. பின்னர், இந்த உத்தரவை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் தொடரப்பட்ட வழக்கில் அந்த தடையை நீக்கி உத்தரவிட்டப்பட்டது. மதம் சார்ந்த விவகாரங்களில் உடலுக்கு காயம் விளவிக்காத உத்தரவுகளை இமாம்கள் பிறப்பிக்க அனுமதி அளிக்கப்பட்டது. இந்நிலையில், கடந்த வெள்ளிக்கிழமை பெண்களில் யாரும் வயல் வேலைகளுக்கு செல்ல கூடாது என்று மத உத்தரவு (பத்வா) பிறப்பித்த குமர்காலி பகுதி மதத் தலைவர் மற்றும் அங்குள்ள 5 மசூதிகளின் இமாம்களை போலீசார் கைது செய்துள்ளனர். இவர்கள் 6 பேரின் மீதும் ராணுவ காலத்து சிறப்பு அதிகார சட்டத்தின்கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிகிறது.

  
   Bookmark and Share Seithy.com



புகலிடக்கோரிக்கையாளர்கள் தொடர்பில் பிரித்தானியாவின் திட்டம்: லண்டனில் திடீர் போராட்டம்!
[Saturday 2024-05-11 06:00]

பிரித்தானியாவில் புகலிடக்கோரிக்கையாளர்களை மிதவைப்படகில் ஏற்றும் திட்டத்திற்கு மீண்டும் எதிர்ப்பு தெரிவித்து சமூக ஆர்வலர்கள் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. பிரித்தானியா - லண்டனிலுள்ள தனியார் விடுதியில் புகலிடக்கோரிக்கையாளர்கள் நீண்டகாலமாக தங்கியிருக்கும் நிலையில், இன்று (10.05.2024) காலை 10.00 மணியளவில் பொலிஸார் சுமார் 5 பொலிஸ் வான்களில் அங்கு வந்துள்ளனர்.



ஜெர்மனியின் இராணுவ திட்டத்திற்கு கனடா நிதியுதவி!
[Saturday 2024-05-11 06:00]

உக்ரைனுக்காக வான் பாதுகாப்பை வழங்குவதற்கான ஜெர்மனியின் திட்டத்திற்கு கனடா(Canada) பூரண ஆதரவை வழங்கும் என கனேடிய பாதுகாப்பு அமைச்சர் பில் பிளேயர் உறுதியளித்துள்ளார். இந்த திட்டத்தின் முதல் கட்டமாக 76 மில்லியன் கனேடிய டொலர்களை(55 மில்லியன் அமொரிக்க டொலர்) உதவியாக வழங்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.



அபுதாபி இளவரசர் ஷேக் ஹஸ்ஸா காலமானார்!
[Saturday 2024-05-11 06:00]

அபுதாபி (Abu dhabi) இளவரசர் ஷேக் ஹஸ்ஸா பின் சுல்தான் பின் சயீத் அல் நஹ்யான் (Sheikh Hazza bin Sultan bin Zayed Al Nahyan )காலாமானதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இவர் (09.05.2024) காலமானதாக அபுதாபி ஜனாதிபதி அலுவலகம் தெரிவித்துள்ளது. காலமான அபுதாபி இளவரசர் ஐக்கிய அரபு அமீரகத்தின் ஜனாதிபதி ஷேக் முகமது பின் சயீத் அல் நஹ்யானின் மூத்த மகனாவார்.



200,000 அகதிகளை வரவேற்ற வரலாற்று நிகழ்வை நினைவுகூர்ந்த கனடா அரசு!
[Friday 2024-05-10 18:00]

கனடா, ஒரு காலகட்டத்தில், 200,000 அகதிகளை வரவேற்றுள்ளது என்பது உங்களுக்குத் தெரியுமா? ஆம், நேற்று, வரலாற்றுச் சிறப்புமிக்க அந்த சம்பவம் தொடர்பான நிகழ்வொன்று கனடாவில் நடைபெற்றது. 1975ஆம் ஆண்டு, வியட்நாம் போர் முடிவடை ந்ததைத் தொடர்ந்து, துன்புறுத்தல் மற்றும் மோசமான வாழ்க்கைச் சூழலுக்குத் தப்பி ஏராளமானோர் வியட்நாம், கம்போடியா போன்ற நாடுகளிலிருந்து பல நாடுகளுக்கு அகதிகளாகச் சென்றார்கள்.



அமெரிக்க ஜனாதிபதியின் எச்சரிக்கைக்கு பெஞ்சமின் நெதன்யாகுவின் பதில்!
[Friday 2024-05-10 18:00]

இஸ்ரேல் தன்னிடம் உள்ள அனைத்துவளங்களையும் பயன்படுத்தி தனியாக போரிடும் எனவும், எங்கள் விரல்நகங்களையும் பயன்படுத்தி போரிடும்வோம் எனவும் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்துள்ளார். இஸ்ரேலிற்கான ஆயுதவிநியோகத்தினை இடைநிறுத்துவது தொடர்பில் அமெரிக்க ஜனாதிபதி விடுத்துள்ள எச்சரிக்கைக்கு பதில் அளித்து அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.



கனடாவில் வாடகை குடியிருப்பாளர்களுக்கு ஏற்பட்டுள்ள நெருக்கடி!
[Friday 2024-05-10 18:00]

கனடாவில் வாடகைக் குடியிருப்பாளர்கள் பெரும் நிதி நெருக்கடி நிலைமையை எதிர்நோக்க நேரிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஒப்பீட்டளவில் வீட்டு உரிமையாளர்களை விடவும் வாடகைக் குடியிருப்பாளர்கள் இந்த நெருக்கடிகளை எதிர்நோக்குவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.



பிரித்தானியாவில் கக்குவான் இருமல்: 5 சிறுவர்கள் உயிரிழப்பு!
[Friday 2024-05-10 18:00]

பிரித்தானியாவில் பரவிவரும் “100 நாள் இருமல்” என கூறப்படும் கக்குவான் இருமல் தொற்று காரணமாக ஐந்து குழந்தைகள் உயிரிழந்துள்ளதாக சர்வதேச தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த உயிரிழப்புக்கள் ஜனவரி முதல் மார்ச் இறுதி வரையான மூன்று மாதங்களில் பதிவானவை என UK Health Security Agency தெரிவித்துள்ளது.



கனடாவிற்கு குடிபெயர்வதற்கு எவ்வளவு பணம் தேவை: வெளியாகியுள்ள புதிய அறிவிப்பு!
[Friday 2024-05-10 06:00]

புலம்பெயர் கனேடிய விண்ணப்பதாரர்களின் நிதி ஆதாரம் தொடர்பில் அந்நாட்டின் அகதிகள் மற்றும் குடியுரிமை அமைப்பானது(IRCC) புதிய அறிவிப்பொன்றை விடுத்துள்ளது. இதன்படி கனடாவுக்கான எக்ஸ்பிரஸ் நுழைவு வீசா விண்ணப்பதாரர்கள் எதிர்வரும் மே 27. 2024ஆம் திகதிக்கு முன்னர் புதிய நிதிச் சான்றுடன் தங்கள் சுயவிவரங்களைப் புதுப்பிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. விண்ணப்பதாரர்களுக்கான புதிய நிதி திட்டத்தை மே 28, 2024 முதல் நடைமுறைக்குக் கொண்டுவருவதாக கனடா அறிவித்துள்ளது.



விடுதலைப்புலிகளுக்கு எதிரான போரை பாடமாகக்கொண்டு ஹமாஸ் செயற்படவேண்டும்: விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!
[Friday 2024-05-10 06:00]

ஹமாஸ்(Hamas) அமைப்பு, தமிழீழ விடுதலைப்புலிகள்(LTTE) மற்றும் இலங்கை அரசாங்கத்துக்கு இடையிலான யுத்தத்தை பாடமாகக்கொண்டு, பணயக்கைதிகளை விடுவித்து நேர்மையை காட்டும் வரையில் இஸ்ரேல் நிராயுதப்பாணிகள் மீதான தாக்குதல்களை நிறுத்தாது என்று சர்வதேச ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.



வெளிநாடொன்றில் ஓடுபாதையில் விபத்துக்குள்ளான விமானம் : 11 பேர் காயம்!
[Friday 2024-05-10 06:00]

மேற்கு ஆப்பிரிக்க நாடான செனகலில்(Senegal) உள்ள பிரதான விமான நிலையத்தில் 78 பயணிகளுடன் புறப்பட்ட விமானம் ஓடுபாதையில் விபத்துக்குள்ளானதில் 11 பேர் காயமடைந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. குறித்த விபத்தானது (09.05.2024) அதிகாலை இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.



ரஃபா மீது தாக்குதல்: ஜோபைடன் பகிரங்க எச்சரிக்கை!
[Thursday 2024-05-09 18:00]

காசாவின் ரஃபாமீது , இஸ்ரேல் பாரிய தாக்குதலை மேற்கொண்டால் இஸ்ரேலிற்கு சில ஆயுதங்களை வழங்குவதை நிறுத்துவோம் என அமெரிக்க ஜனாதிபதி ஜோபைடன் எச்சரித்துள்ளார். ரஃபாவிற்குள் நுழைந்தால் நான் ரஃபா விடயத்தில் வரலாற்றுரீதியாக பயன்படுத்தப்படும் சில ஆயுதங்களை வழங்க தயாரில்லை எனவும் பைடன் தெரிவித்துள்ளார்.



அமெரிக்க பாடசாலைகளிலும் யூதவெறி தாக்குதல்கள்!
[Thursday 2024-05-09 18:00]

காஸா போரைத் தொடர்ந்து அமெரிக்க பல்கலைக்கழகங்களில் யூத மாணவர்களுக்கு எதிரான தாக்குதல்கள் அதிகரித்ததைப் போல், பாடசாலைகளிலும் தாக்குதல் சம்பவங்கள் நடந்துவருவதாக கூறப்படுகின்றது.



கனடாவில் உயிரற்ற நிலையில் கண்டெடுக்கப்பட்ட கேரளப் பெண்!
[Thursday 2024-05-09 18:00]

கனடாவில் தன் கணவருடன் வாழ்ந்துவந்த கேரளப் பெண்ணொருவர் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டுள்ளார். இந்தியாவின் கேரள மாநிலத்தைச் சேர்ந்த படிகலா சாஜன் மற்றும் புளோரா தம்பதியின் மகள் டோனா சாஜா (34). தன் கணவரான லால் கே. பவுலஸுடன் கனடாவில் வாழ்ந்துவந்த டோனா, நேற்று முன்தினம் தன் வீட்டில் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டார்.



ஐநா அழுத்தம் காரணமாக காசா பாதை திறப்பு!
[Thursday 2024-05-09 18:00]

இஸ்ரேல், காசா போரால் பாதிக்கப்பட்டு, காசா பகுதியில் சுமார் 23 லட்சம் பேர் நிவாரணப் பொருட்களை எதிர்நோக்கியுள்ளனர். எகிப்து மற்றும் காசா எல்லை என இரண்டு சாலைகள் உள்ள நிலையில், பாதுகாப்பு காரணமாக அவற்றை இஸ்ரேல் தடுத்து வைத்துள்ளது.



உளவு குற்றச்சாட்டு தொடர்பில் ரஷ்ய அதிகாரியை வெளியேற்றும் பிரித்தானியா!
[Thursday 2024-05-09 06:00]

ரஷ்ய தூதரக அதிகாரியை உளவு குற்றச்சாட்டுகள் தொடர்பில் பிரித்தானியா வெளியேற்றுகிறது. பிரித்தானிய பாராளுமன்ற உறுப்பினர்களை இலக்காகக் கொண்ட சைபர் தாக்குதல், ரஷ்ய நலன்களுக்கு சேவை செய்ய முக்கிய தகவல்களை கசியவிடுவது உட்பட, அதன் முகவர்கள் இலக்கு வைக்கப்பட்ட கொலைகள் மற்றும் உளவு பார்த்தல் போன்றவற்றை குற்றம்சாட்டி, பிரித்தானியா பல ஆண்டுகளாக ரஷ்யாவுடன் ஒரு அமைதியற்ற உறவையே கொண்டுள்ளது.



பாலஸ்தீன ஆதரவு போராட்டத்தில் ஈடுபடும் மாணவர்களை பணியமர்த்த மாட்டோம்: அமெரிக்க நீதிபதிகள் திட்டவட்டம்!
[Thursday 2024-05-09 06:00]

அமெரிக்காவில் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் சட்ட மாணவர்களை, எழுத்தர்கள் பணிக்கு அமர வைக்கமாட்டோம் என நீதிபதிகள் தெரிவித்துள்ளனர். கொலம்பியா பல்கலைக்கழக மாணவர்கள் பாலஸ்தீன ஆதரவு நிலைப்பாட்டில் போராட்டம் நடத்தி வருகின்றனர். ஆனால், இதற்கு டொனால்ட் டிரம்பால் நியமிக்கப்பட்ட கன்சர்வேடிவ் பெடரல்சின் நீதிபதிகள் குழு எதிர்ப்பு தெரிவித்துள்ளது.



இஸ்ரேலுக்கான வெடிகுண்டு ஏற்றுமதியை இடைநிறுத்திய அமெரிக்கா!
[Thursday 2024-05-09 06:00]

இஸ்ரேலின் தீவிரமான தரைப்படைத் தாக்குதலை தொடர்ந்து இஸ்ரேலுக்கான வெடிகுண்டு ஏற்றுமதியை அமெரிக்கா இடை நிறுத்தியுள்ளது. இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனின் ஹமாஸ் அமைப்பினருக்கு இடையிலான போர் ஆனது கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் முதல் விடாமல் நடைபெற்று வருகிறது.



நோர்வேயில் பயங்கரம்: காரில் எரிந்த நிலையில் யாழ் தமிழரின் சடலம்!
[Wednesday 2024-05-08 18:00]

நோர்வேயில் யாழ்ப்பாணத்தை சேர்ந்த புலம்பெயர் தமிழர் காரில் எரிந்த நிலையில் இளம் குடும்பஸ்தர் சடலமாக மீட்பட்டுள்ளதாக கூற்றப்படுகின்றமை அதிர்ச்சியினை ஏற்படுத்தியுள்ளது. சம்பவத்தில் உயிரிழந்தவர் இரண்டு பிள்ளைகளின் தந்தை என கூறப்படுகின்றது. யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இளம் குடும்பஸ்தரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.



ஹமாஸ் நிபந்தனையை ஏற்க மறுத்த இஸ்ரேல்!
[Wednesday 2024-05-08 18:00]

காஸாவை விட்டு வெளியேறுமாறு ஹமாஸ் விதித்த நிபந்தனையை இஸ்ரேல் ஏற்க மறுத்துவிட்டதாக கூறப்படுகின்றது. அதை தொடர்ந்து இஸ்ரேலிய ராணுவ வீரர்கள் கூட்டு பிரார்த்தனை செய்துவிட்டு ரஃபா நகருக்குள் நுழைந்தனர். இஸ்ரேல் ராணுவம் தாக்குதல் நடத்தினால் பிணை கைதிகளை விடுவிக்க மாட்டோம் என ஹமாஸ் அறிவித்திருந்தது.



அமெரிக்காவில் அதிர்ச்சி: 3 வயது மகனை கொன்று தாய் தற்கொலை!
[Wednesday 2024-05-08 18:00]

அமெரிக்காவில் 3 வயது மகனை துப்பாக்கியால் சுட்டு கொலை செய்து விட்டு, தாய் தற்கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்த அதிர்ச்சி சம்பவம் பற்றி போலீசார் விசாரணை நடத்தியதில், பல விசயங்கள் தெரிய வந்துள்ளன. அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் வசித்து வந்தவர் சவான்னா கிரிகர் (வயது 32). இவருடைய மகன் கெய்தன் (வயது 3).


NKS-Ketha-04-11-2021
Airlinktravel-2020-01-01
Ambikajewellers-01-08-2021-seithy
Rajeef sebarasha 2023/04/19
 gloriousprinters.com 2021
Karan Remax-2010
Asayan-Salon-2022-seithy
Mahesan-Remax-169515-Seithy
Vaheesan-Remax-2016
Logan-Kumaresh-Homelife-02-02-2021
Kugeenthiran-200-2022-seithy
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> 12 10 2019 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Skanda Nite 2019 125th Anniversary நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா