Untitled Document
May 7, 2024 [GMT]
ஏலத்தில் விற்கப்படும் மணப்பெண்கள்: - பேரம் பேசி வாங்கி செல்லும் ஆண்கள்
[Monday 2018-04-30 06:00]
திருமணம் என்றால் வரதட்சணை கொடுத்து பெண்களை திருமணம் முடித்துவைப்பார்கள் என்றுதான் நாம் அறிந்திருப்போம்.ஆனால், ஒரு சில இடங்களில் பெண்கள் தட்டுப்பாடல் விலை கொடுத்து மணப்பெண்கள் வாங்கப்படுகின்றனர். இன்னும் ஒரு சில இடங்களில் ஏலத்தில் பெண்கள் விற்கப்படுகின்றனர்.இந்தியாவின் ஹரியானா மாநிலத்தில் உள்ள இளைஞர்களுக்கு பெண்கள தட்டுப்பாடு இருக்கிறது. இங்கு சுற்றியுள்ள பகுதிகளில் பெண்களின் பிறப்பு விகிதம் குறைவாக உள்ளது. 1000 ஆண்கள் இருந்தால், 800 பெண்கள் தான் இருக்கிறார்கள்.

திருமணம் என்றால் வரதட்சணை கொடுத்து பெண்களை திருமணம் முடித்துவைப்பார்கள் என்றுதான் நாம் அறிந்திருப்போம்.ஆனால், ஒரு சில இடங்களில் பெண்கள் தட்டுப்பாடல் விலை கொடுத்து மணப்பெண்கள் வாங்கப்படுகின்றனர். இன்னும் ஒரு சில இடங்களில் ஏலத்தில் பெண்கள் விற்கப்படுகின்றனர்.இந்தியாவின் ஹரியானா மாநிலத்தில் உள்ள இளைஞர்களுக்கு பெண்கள தட்டுப்பாடு இருக்கிறது. இங்கு சுற்றியுள்ள பகுதிகளில் பெண்களின் பிறப்பு விகிதம் குறைவாக உள்ளது. 1000 ஆண்கள் இருந்தால், 800 பெண்கள் தான் இருக்கிறார்கள்.

  

இதனால், ஹாரியானா, மேற்குவங்க இளைஞர்கள் வெளிநாடுகளிலிருந்து விலைகொடுத்து மணப்பெண்களை வாங்குகின்றனர். அதுவும் அமெரிக்காவில் இருந்து கூட இந்தியாவுக்கு மணப்பெண்கள் வருகின்றனர். அதில் ஒரு சில அமெரிக்க பெண்கள் இந்திய வாழ்க்கை முறை ஒத்துக்கொள்ளாத காரணத்தால், இங்கிருந்து சென்றுவிடுகின்றனர். ஒரு சில பெண்கள் சந்தோஷமாக திருமண வாழ்க்கையை நடத்தி தங்கள் கணவர்களையும் வெளிநாட்டிற்கு அழைத்து செல்கின்றனர். வெளிநாடு மட்டுமின்றி அருகில் உள்ள உள்ள மாநிலத்தில் இருந்தும் பெண்களை விலை கொடுத்து வாங்குகின்றனர். Joginder Singh என்பவர் மேற்கு வங்க மாநிலத்தில் இருந்து, 20,000 கொடுத்து மணப்பெண்ணை விலைக்கு வாங்கியுள்ளார்.

ஹரியானாவில் பெண்கள் தட்டுப்பாட்டால் இப்படி நடக்கிறது என்றால், பல்கேரியாவில் பெண்களை விலைபேசி விற்பதற்காகவே ஒவ்வொரு ஆண்டும் சந்தை ஒன்று செயல்படுகிறது. இது பாரம்பரியமாக ரோமானிய இன மக்களால் பின்பற்றப்பட்டு வருகிறது, Stara Zagora நகரில் ஒவ்வொரு வருடமும் இதற்காக ஒரு சந்தை அமைக்கப்பெறும். இதற்கு மணமகள் விற்பனை சந்தை என்று பெயர், இந்த சந்தையில் கலந்துகொள்ளும் பெண்களுக்கு வயது வரம்பு கிடையாது. மணமகளாக செல்கிறவர்கள் தங்களை அழகாக அலங்கரித்துக்கொள்வார்கள்.

பெற்றோர்களே, தங்களது பிள்ளைகளை மிகவும் அழகாக அழைத்து செல்வார்கள். அங்கு வருபவர்கள் சாப்பிடுவதற்காக கடைகள் அமைக்கப்பட்டிருக்கும், மேலும் இளம் வயதினர்களின் நடனங்கள் அரங்கேறும். இங்கு, வரும் ஆணுக்கு ஒரு பெண்ணை பிடித்துவிட்டால், 5 நிமிடம் வரை பேசுவதற்கு நேரம் ஒதுக்கப்படும். அதன்பின்னர் அந்த ஆணுக்கு அப்பெண்ணை பிடித்துவிட்டால், ஒரு குறிப்பிட்ட தொகை நிர்ணயிக்கப்படும். அந்த தொகை அதிகம் என்றால், பேரம் பேசி தொகையை பெற்றோரிடம் கொடுத்துவிட்டு அப்பெண்ணை அழைத்து சென்றுவிடுவார்கள். ஒரு பெண்ணை பல ஆண்களுக்கு பிடித்துவிட்டால், அப்பெண் ஏலத்தில் விடப்படுவார், இங்கு, இளம்வயது பெண்களுக்கு அதிக விலை நிர்ணயிக்கப்படுகிறது. வறுமையில் வாடும் குடும்பத்தினர் தங்கள் பெண்களுக்கு திருமணம் செய்து வைக்க முடியாமல் பொருளாதாரா பிரச்சனையில் இருப்பார்கள். அப்படிப்பட்ட குடும்பத்தினர் இதுபோன்ற மணமகள் சந்தை வாய்ப்பினை பயன்படுத்திக்கொள்கிறார்கள்.

  
   Bookmark and Share Seithy.com



உ.பி.யில் வாக்களிக்க வந்த இஸ்லாமிய பெண்கள் மீது தாக்குதல்!
[Tuesday 2024-05-07 18:00]

நாடு முழுவதும் ஒவ்வொரு கட்டங்களாக தேர்தல் நடைபெற்று வருகிறது. முதற்கட்டமாக ஏப்ரல் 19ஆம் தேதி அன்று தமிழ்நாடு, மணிப்பூர், உள்ளிட்ட 102 தொகுதிகளுக்கும் தேர்தல் நடைபெற்றது. இதனையடுத்து, இரண்டாம் கட்டமாக ஏப்ரல் 26ஆம் தேதி கேரளா, கர்நாடகா உள்ளிட்ட 89 தொகுதிகளுக்கும் தேர்தல் நடைபெற்றது. டீ தொடர்ந்து உத்தரப்பிரதேசம் - 10, மேற்கு வங்கம் - 4 ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசத்திற்கு உட்பட்ட அனந்த்நாக் - ரஜௌரி - 1, தாத்ரா நகர் ஹவேலி, டாமன் டையூ ஆகிய தொகுதிகளிலும் மூன்றாம் கட்ட தேர்தல் நடைபெற்று வருகிறது.



பிரஜ்வல் ரேவண்ணா ஆபாச வீடியோ விவகாரம்: மெளனம் கலைத்த பிரதமர் மோடி!
[Tuesday 2024-05-07 18:00]

முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் பேரனும், ஹாசன் மக்களவைத் தொகுதியின் எம்.பி.யுமான பிரஜ்வல் ரேவண்ணா பல பெண்களைப் பாலியல் வன்கொடுமை செய்ததாகப் புகார் எழுந்தது. அதாவது தன்னிடம் உதவி கேட்டு வந்த ஏராளமான பெண்களை பிரஜ்வல் ரேவண்ணா பாலியல் தேவைகளுக்காகப் பயன்படுத்திக் கொண்டதாகப் பரபரப்பு குற்றச்சாட்டு எழுந்தது. மேலும் பிரஜ்வல் ரேவண்ணா பல பெண்களுடன் இருப்பது போன்ற ஆபாச காட்சிகள் வெளியாகி மக்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்தப் புகார் குறித்த நெருக்கடி அதிகரிப்பால் பிரஜ்வல் ரேவண்ணா கர்நாடகாவில் இருந்து ஜெர்மனிக்கு தப்பியோடியதாகவும் தகவல் வெளியாகி இருந்தது.



கணித பாடத்தில் தோல்வியடைந்ததால் பிளஸ் 2 மாணவி விபரீத முடிவு!
[Tuesday 2024-05-07 18:00]

கணித பாடத்தில் தோல்வியடைந்ததால் பன்னிரண்டாம் வகுப்பு மாணவி ஒருவர் விபரீத முடிவு எடுத்துள்ளார். தமிழக மாவட்டமான கடலூர், விருத்தாசலம் அடுத்த கோட்டேரி கிராமத்தை சேர்ந்தவர் ஆறுமுகம். இவரது மகள் அபிநயா (வயது 17) பேர்பெரியான்குப்பம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் படித்து வந்தார்.



இனிப்பு இல்லாததால் நின்று போன திருமணம்: தாலி கட்டும் முன்பு பிரச்சனை!
[Tuesday 2024-05-07 18:00]

திருமணத்திற்கு பரிமாறப்பட்ட விருந்தில் இனிப்பு இடம்பெறாததால் தாலி கட்டும் முன்பே திருமணம் நின்று போனது. தமிழக மாநிலமான கர்நாடகா, குடகு மாவட்டம் சோமவார்பேட்டை தாலுகா ஹனகல்லு கிராமம் சித்தார்த்தா படாவனே பகுதியில் வசித்து வரும் 23 வயது இளம்பெண்ணிற்கும், துமகூரு மாவட்டத்தைச் சேர்ந்த 27 வயது இளைஞருக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டது.



முதல் நாளே குவிந்த இ-பாஸ் விண்ணப்பங்கள்!
[Tuesday 2024-05-07 06:00]

கோடை காலம் தொடங்கி வெயிலின் தாக்கம் அதிகரித்து வருவதால் மலைப் பிரதேசமான உதகை மற்றும் கொடைக்கானலுக்கு ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வரத் தொடங்கியுள்ளனர். கடந்த சில வாரங்களாகவே சுற்றுலாப் பயணிகள் எண்ணிக்கை அதிகரித்த நிலையில், கடந்த ஏப்ரல் கடைசி தேதி முதல் அதிகப்படியான சுற்றுலாப் பயணிகள் உதகையில் குவிந்தனர். இதனால் உதகை நகர்ப் பகுதியில் சுற்றுலா வாகனங்கள் அணிவகுத்ததால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.



9 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!
[Tuesday 2024-05-07 06:00]

கோடை வெயில் வாட்டி வரும் நிலையில் தமிழகத்தில் சில இடங்களில் சூறைக்காற்றுடன் மழையும் பொழிந்து வருகிறது. இந்நிலையில் தமிழகத்தில் இரவு 10 மணி வரை 9 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு இருக்கும் எனச் சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.



"தேவையான அளவு இட ஒதுக்கீடு அளிப்போம்" - ராகுல் காந்தி உறுதி!
[Tuesday 2024-05-07 06:00]

நாடு முழுவதும் ஒவ்வொரு கட்டங்களாக தேர்தல் நடைபெற்று வருகிறது. முதற்கட்டமாக ஏப்ரல் 19ஆம் தேதி அன்று தமிழ்நாடு, மணிப்பூர், உள்ளிட்ட 102 தொகுதிகளுக்கும் தேர்தல் நடைபெற்றது. இதனையடுத்து, இரண்டாம் கட்டமாக ஏப்ரல் 26ஆம் தேதி கேரளா, கர்நாடகா உள்ளிட்ட 89 தொகுதிகளுக்கும் தேர்தல் நடைபெற்றது. அடுத்து வரவிருக்கும் மூன்றாம், நான்காம் கட்டத் தேர்தலுக்காக, காங்கிரஸ், பா.ஜ.க உள்ளிட்ட அரசியல் கட்சிகள் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதில் மூன்றாம் கட்டத் தேர்தல் நாளை (07-05-24) கர்நாடகா, குஜராத் உள்ளிட்ட சில மாநிலங்களில் நடைபெறவிருக்கிறது.



'இது கொலைதான்?' - விசாரணையை இறுக்கும் காவல்துறை!
[Monday 2024-05-06 18:00]

திருநெல்வேலி மாவட்டம் திசையன்விளை பகுதியைச் சேர்ந்தவர் ஜெயக்குமார் தனசிங் (வயது 60). இவர் காங்கிரஸ் கட்சியின் திருநெல்வேலி கிழக்கு மாவட்ட தலைவராக இருந்து வந்தார். தொழிலதிபரான ஜெயக்குமார் தனசிங் கடந்த 2 ஆம் தேதி (02.05.2024) வெளியே சென்று வருவதாக வீட்டில் கூறிவிட்டு சென்றுள்ளார். அதன் பின்னர் அவர் வீடு திரும்பவில்லை. அதனைத் தொடர்ந்து அவரின் குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் எனப் பலரும் பல இடங்களிலும் தேடியும் ஜெயக்குமார் கிடைக்கவில்லை. இதையடுத்து அவருடைய மகன் கருணையா ஜப்ரின் (வயது 28) உவரி காவல் துறையில் இது தொடர்பாக கடந்த 3 ஆம் தேதி (03.05.2024) புகார் அளித்திருந்தார்.



மாணவர்களுக்கு மனநல ஆலோசனை: தமிழக அரசு ஏற்பாடு!
[Monday 2024-05-06 18:00]

தமிழகத்தில் 2023 - 24 ஆம் கல்வியாண்டுக்கான 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் இன்று (06.05.2024) காலை 09.30 மணிக்கு வெளியானது. தேர்வுத்துறை இயக்குநர் சேதுராம வர்மா தேர்வு முடிவுகளை வெளியிட்டார். மாணவர்கள் தங்கள் தேர்வு முடிவுகளை www.tnresults.nic.in, www.dge.tn.gov.in இணையதள முகவரியில் தங்களது பதிவெண் மற்றும் பிறந்த தேதி ஆகியவற்றை பதிவு செய்து தேர்வு முடிவுகளை அறிந்து வருகின்றனர். அதே சமயம் பள்ளி மாணவர்கள் தாங்கள் படித்த பள்ளிகள் மூலமும் தேர்வு முடிவுகளை அறிந்துகொள்ள வசதிகள் செய்யப்பட்டுள்ளன. மேலும் மாணவ - மாணவிகள் வீட்டில் இருந்தபடியே தங்களது தேர்வு முடிவுகளை தெரிந்து கொள்ள ஏதுவாக பள்ளிகளில் பதிவு செய்திருந்த கைப்பேசி எண்ணுக்கு மதிப்பெண் விவரம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.



ராகுல் காந்தி ஒரு பிரிட்டிஷ் நாட்டவர்: வேட்புமனுவை நிராகரிக்க குடியுரிமையை காரணம் காட்டி புகார்!
[Monday 2024-05-06 18:00]

ராகுல் காந்தி பிரிட்டிஷ் நாட்டவர் என்றும் சிறை தண்டனை பெற்றவர் என்றும் காரணம் காட்டி ரேபரேலியில் அவரது வேட்புமனுவை நிராகரிக்க புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது. காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி, கடந்த வெள்ளிக்கிழமை உத்தர பிரதேச மாநிலம் ரேபரேலி தொகுதியில் வேட்பு மனு தாக்கல் செய்தார். இந்த தொகுதியில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி உடல்நலம் காரணமாக போட்டியிடவில்லை.



தமிழகத்தில் பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியீடு!
[Monday 2024-05-06 18:00]

தமிழகத்தில் வெளியான பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுகளில் மாணவர்களை விட மாணவிகளே அதிகம் தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளனர். தமிழகத்தில் இன்று (மே.6) காலை 9.30 மணியளவில் அரசுத் தேர்வுகள் இயக்குநர் சேதுராம வர்மா பிளஸ் 2 தேர்வு முடிவுகளை வெளியிட்டார். அதன்படி,கடந்த 2023 -ம் ஆண்டு 94.03 சதவீதம் தேர்ச்சி பதிவாகியிருந்த நிலையில், இந்த ஆண்டு 94.56 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்று தேர்ச்சி விகிதம் அதிகரித்துள்ளது.



மதுபோதையில் ரகளை செய்த மகனை அடித்துக்கொன்ற தாய்!
[Monday 2024-05-06 06:00]

மதுரையில் மது போதையில் தகராறு செய்த மகனை தாயே கட்டை மற்றும் கற்களால் அடித்துக் கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டம் உசிலம்பட்டி தும்மகுண்டு பகுதியைச் சேர்ந்தவர் சிவசாமி. திருமணமாகி விவாகரத்து பெற்ற நிலையில் சிவசாமி தாய் பாண்டியம்மாளுடன் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் மது போதைக்கு அடிமையான மகன் சிவசாமி அடிக்கடி மது குடித்து விட்டு வீட்டில் வந்து தகராறு செய்வதை வாடிக்கையாகக் கொண்டிருந்துள்ளார்.



காதலித்துவிட்டு ஏமாற்ற நினைத்த காதலன்: விடாப்பிடியாய் நடந்த திருமணம்!
[Monday 2024-05-06 06:00]

எட்டு ஆண்டுகளாக காதலித்து விட்டு திருமணம் செய்ய மறுத்த காதலனை உறவினர்கள் ஒன்று சேர்ந்து கட்டாயப்படுத்தி திருமணம் செய்து வைத்த நிகழ்வு உளுந்தூர்பேட்டையில் நிகழ்ந்துள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை சிறுதானூரை சேர்ந்தவர் தமிழரசன். இவர் கடந்த எட்டு வருடமாக ரோஸ்லின் என்பவரை காதலித்து வந்தார். இருவரும் காதலித்து வந்த நிலையில் கடந்த 2019 ஆம் ஆண்டு வேலை பார்ப்பதற்காக சென்னை வந்துள்ளனர். பெசன்ட் நகரில் உறவினர் வீட்டில் தங்கி இருந்து இருவரும் பணியாற்றி வந்தனர். இந்நிலையில் ரோஸ்லின் மேரி தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு தமிழரசனிடம் தெரிவித்துள்ளார். ஆனால் எப்போது திருமணம் பற்றி பேசினாலும் ஏதாவது காரணம் சொல்லி காலம் கடத்தி வந்துள்ளார் என்று கூறப்படுகிறது. இதனால் தன்னை காதலித்து ஏமாற்றியதாக சென்னை அடையாறு உட்பட நான்கு காவல் நிலையங்களில் ரோஸ்லின் புகார் அளித்தார்.



நீலகிரியில் இ-பாஸ்: நாளை முதல் விண்ணப்பிக்கலாம்!
[Monday 2024-05-06 06:00]

கோடை காலம் தொடங்கி வெயிலின் தாக்கம் அதிகரித்து வருவதால் பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்க அறிவுறுத்தல்கள் கொடுக்கப்பட்டு வருகிறது. நீர்ச்சத்து குறைபாட்டைத் தடுப்பதற்காக ஒவ்வொரு சுகாதார நிலையங்களிலும் ஓ.ஆர்.எஸ் கரைசல்களை ஆயத்தமாக வைத்திருக்கும்படி தமிழக அரசு அறிவித்துள்ளது. இந்நிலையில் கோடை காலம் தொடங்கி பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளதால் பலரும் சுற்றுலாத் தலங்களுக்கு படையெடுத்து வருகின்றனர்.



நாகப்பட்டினம் - இலங்கை இடையே கப்பல் சேவை!
[Sunday 2024-05-05 18:00]

நாகப்பட்டினம் சிறு துறைமுகத்திலிருந்து இலங்கை காங்கேசன் துறைமுகத்திற்கு பயணிகள் கப்பல் போக்குவரத்தை கடந்த ஆண்டு அக்டோபர் 14 ஆம் தேதி (14.10.2023) பிரதமர் மோடி டெல்லியில் இருந்து காணொளி காட்சி மூலம் தொடங்கி வைத்தார். நாகப்பட்டினம் துறைமுகத்தில் நடைபெற்ற இந்த விழாவில் மத்திய அமைச்சர் சர்பானந்த சோனாவால், தமிழக அமைச்சர் எ.வ.வேலு உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.



முடிந்தது 'நீட்' தேர்வு!
[Sunday 2024-05-05 18:00]

இந்தியாவில் எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். போன்ற இளநிலை மருத்துவ படிப்புகளில் சேருவதற்கு நீட் ( NEET - National Entrance Eliglibilty Entrance Exam) எனப்படும் நுழைவுத் தேர்வு ஆண்டுதோறும் நடத்தப்படுகிறது. இந்நிலையில் இந்த ஆண்டுக்கான நீட் நுழைவுத்தேர்வு தற்போது தமிழகம் உள்பட நாடு முழுவதும் தொடங்கி முடிந்துள்ளது. இன்று (05.05.2024) மதியம் 02.00 மணிக்கு தொடங்கிய நீட் நுழைவுத்தேர்வு மாலை 05.20 மணிக்கு நிறைவு பெற்றது.



ஜெயக்குமார் தனசிங் மரணம்: அடுத்தடுத்து சிக்கிய கடிதங்கள்!
[Sunday 2024-05-05 18:00]

திருநெல்வேலி மாவட்டம் திசையன்விளை பகுதியைச் சேர்ந்தவர் ஜெயக்குமார் தனசிங் (வயது 60). இவர் காங்கிரஸ் கட்சியின் திருநெல்வேலி கிழக்கு மாவட்ட தலைவராக இருந்து வந்தார். தொழிலதிபரான ஜெயக்குமார் தனசிங் கடந்த 2 ஆம் தேதி (02.05.2024) வெளியே சென்று வருவதாக வீட்டில் கூறிவிட்டு சென்றுள்ளார். அதன் பின்னர் அவர் வீடு திரும்பவில்லை எனக் கூறப்படுகிறது. அதனைத் தொடர்ந்து அவரின் குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் எனப் பலரும் பல இடங்களிலும் தேடிப் பார்த்துள்ளனர். அப்போதும் ஜெயக்குமார் கிடைக்கவில்லை. இதனையடுத்து அவருடைய மகன் கருணையா ஜப்ரின் (வயது 28) உவரி காவல்துறையில் இது தொடர்பாக கடந்த 3 ஆம் தேதி (03.05.2024) புகார் அளித்திருந்தார்.



போலந்து பெண்ணை கரம்பிடித்த தமிழக இளைஞர்!
[Sunday 2024-05-05 18:00]

தமிழ்நாட்டைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் போலந்து பெண்ணை காதலித்து கரம் பிடித்தார். கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனப்பள்ளியைச் சேர்ந்தவர் ரமேஷன். 33 வயதாகும் இவர் மேற்படிப்புக்காக போலந்து சென்றுள்ளார்.



பயங்கரவாதிகள் தாக்குதல்: விமானப்படை வீரருக்கு நேர்ந்த சோகம்!
[Sunday 2024-05-05 07:00]

ஜம்மு காஷ்மீர் மாநிலம் பூஞ்ச் மாவட்டம் சூரன்கோட் பகுதியில் உள்ள விமானப்படைத் தளத்திற்கு வீரர்கள் ஏற்றிக்கொண்டு விமானப்படைக்குச் சொந்தமான வாகனம் ஒன்று நேற்று மாலை (04.05.2024) சென்று கொண்டிருந்தது. அந்த வாகனம் சூரன்கோட் அருகே சென்று கொண்டிருந்த போது, மலைப்பகுதிகளில் தங்கியிருந்த பயங்கரவாதிகள் திடீரென்று விமானப்படை வாகனத்தை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்தினர். இந்த தாக்குதல் சம்பவத்திற்கு விமானப்படை வீரர்களும் தக்க பதிலடி கொடுத்துள்ளனர்.



“எனக்கு சொந்தமாக வீடு, சைக்கிள் கூட இல்லை” - பிரதமர் மோடி பேச்சு!
[Sunday 2024-05-05 07:00]

நாடு முழுவதும் ஒவ்வொரு கட்டங்களாக தேர்தல் நடைபெற்று வருகிறது. முதற்கட்டமாக ஏப்ரல் 19ஆம் தேதி அன்று தமிழ்நாடு, மணிப்பூர், உள்ளிட்ட 102 தொகுதிகளுக்கும் தேர்தல் நடைபெற்றது. இதனையடுத்து, இரண்டாம் கட்டமாக ஏப்ரல் 26ஆம் தேதி கேரளா, கர்நாடகா உள்ளிட்ட 89 தொகுதிகளுக்கும் தேர்தல் நடைபெற்றது. அடுத்து வரவிருக்கும் மூன்றாம், நான்காம் கட்டத் தேர்தலுக்காக, காங்கிரஸ், பா.ஜ.க உள்ளிட்ட அரசியல் கட்சிகள் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.


Vaheesan-Remax-2016
NKS-Ketha-04-11-2021
 gloriousprinters.com 2021
Rajeef sebarasha 2023/04/19
Logan-Kumaresh-Homelife-02-02-2021
Mahesan-Remax-169515-Seithy
Ambikajewellers-01-08-2021-seithy
Karan Remax-2010
Asayan-Salon-2022-seithy
Airlinktravel-2020-01-01
Kugeenthiran-200-2022-seithy
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> 12 10 2019 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Skanda Nite 2019 125th Anniversary நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா