Untitled Document
May 15, 2024 [GMT]
கள்ளக்காதலுடன் சேர்ந்து கணவரை கொன்ற மனைவி!
[Thursday 2018-05-31 08:00]

  

இதனால் அவர் மனைவி ரேகாவை கண்டித்தார். இதன் காரணமாக கணவன்- மனைவி இடையே அடிக்கடி வாக்குவாதம் ஏற்பட்டு வந்தது. இந்த நிலையில் நேற்று முன்தினம் கோவையில் இருந்து அறிவழகன் செம்பனார்கோவிலுக்கு வந்தார். வழக்கம் போல் கள்ளக்காதல் குறித்து மனைவியிடம் தகராறு செய்தார். தொடர்ந்து கணவர் அறிவழகன் கள்ளக்காதலுக்கு இடையூறு செய்து வந்ததால் ரேகா ஆத்திரமடைந்தார். இதனால் கள்ளக்காதலன் ராஜசேகரை சந்தித்து கணவர் அறிவழகனை கொல்ல திட்டம் தீட்டினார். அதற்கு ராஜசேகரும் உடன் பட்டார். இந்த நிலையில் நேற்று இரவு மது குடித்து விட்டு அறிவழகன் வீட்டுக்கு வந்தார். அப்போது அவர் குடிபோதையில் மனைவி ரேகாவிடம் அவரது கள்ளக்காதல் குறித்து தரக்குறைவாக திட்டினார். பின்னர் சிறிது நேரம் பேசிய அறிவழகன் அப்படியே தூங்கி விட்டார். இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி ரேகா, அறிவழகனை கொல்ல முடிவு செய்து கள்ளக்காதலன் ராஜசேகரனுக்கு தகவல் தெரிவித்தார். இதையடுத்து அவர் அங்கு வந்தார். வீட்டில் தூங்கி கொண்டிருந்த அறிவழகனை ராஜசேகரும், ரேகாவும் தலையணையால் அமுக்கினர். இதில் மூச்சு திணறி அறிவழகன் பரிதாபமாக இறந்தார்.

இருவரும் மாரடைப்பால் அறிவழகன் இறந்ததாக கூறி உறவினர்களை நம்பவைத்து விடலாம் என்று திட்டம் போட்டனர். அதன்படி ரேகா, அறிவழகன் தூங்கும் போது மாரடைப்பால் இறந்ததாக உறவினர்களிடம் தெரிவித்தார். இதனால் உறவினர்கள் இன்று காலை அறிவழகன் வீட்டுக்கு வந்து அவரது உடலை பார்த்து கதறி அழுதனர். அப்போது அவர்கள் ரேகா பேச்சில் சந்தேகம் அடைந்தனர். இதனால் அறிவழகன் சாவில் மர்மம் இருப்பதாக கூறி உறவினர்கள் செம்பனார் கோவில் போலீசில் புகார் செய்தனர். அதன்பேரில் மயிலாடுதுறை டி.எஸ்.பி. வெங்கடேசன் மற்றும் போலீசார் அறிவழகன் உடலை கைப்பற்றி மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதற்கிடையே ரேகாவிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். அப்போது அவர் கள்ளக்காதலன் ராஜசேகருடன் சேர்ந்து கணவர் அறிவழகனை கொலை செய்து விட்டதாக கூறினார். இதையடுத்து போலீசார் ரேகாவை கைது செய்து தொடர்ந்து விசாரித்து வருகின்றனர். தலைமறைவாக இருந்து வரும் ராஜசேகரை போலீசார் தேடி வருகின்றனர். கள்ளக்காதலுடன் சேர்ந்து மனைவி கணவரை கொன்ற சம்பவம் மயிலாடுதுறை பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

  
   Bookmark and Share Seithy.com



தொடரும் தண்ணீர் தொட்டி பிரச்சனை: குடிநீர்த் தொட்டியை ஆய்வு செய்த ஆட்சியர்!
[Wednesday 2024-05-15 06:00]

புதுக்கோட்டை மாவட்டத்தில் வேங்கை வயல் குடிநீர் தொட்டியில் மனித கழிவு கலந்த சம்பவம் நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதேபோல் தமிழகத்தில் பல இடங்களில் தண்ணீர் தொட்டி பிரச்சனைகள் எழுந்து அடங்கியுள்ளது.



பெட்ரோல் ஊற்றி எரித்த காதலி: சிகிச்சைப் பலனின்றி காதலன் உயிரிழப்பு!
[Wednesday 2024-05-15 06:00]

மயிலாடுதுறையில் காதலனை காதலியே பெட்ரோல் ஊற்றி எரித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருந்த நிலையில் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்த காதலன் உயிரிழந்தது மேலும் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது. கடந்த ஒன்பதாம் தேதி சிந்துஜா-ஆகாஷ் என்ற காதல் ஜோடி இருசக்கர வாகனத்தில் பூம்புகார் கடற்கரைக்கு சென்று விட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்தனர்.



“நிதியுதவி கிடைக்காமல் 2 லட்சம் தாய்மார்கள் அவதி” - ராமதாஸ்!
[Wednesday 2024-05-15 06:00]

மகப்பேறு நிதியுதவியை உடனடியாக வழங்க தமிழக அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழ்நாட்டில் கருவுற்ற பெண்கள் மற்றும் இளம் தாய்மார்களுக்கான மகப்பேறு நிதியுதவி திட்டத்தின் கீழ் 2 லட்சத்திற்கும் கூடுதலான பெண்களுக்கு வழங்கப்பட வேண்டிய ரூ.14,000 நிதி மற்றும் ரூ.4000 மதிப்புள்ள ஊட்டச்சத்துப் பெட்டகம் பல மாதங்களாக வழங்கப்படவில்லை என்று வெளியாகியுள்ள செய்திகள் மிகவும் அதிர்ச்சியளிக்கின்றன. மகப்பேறு நிதியுதவி வழங்கப்படுவதில் செய்யப்படும் தாமதம் கண்டிக்கத்தக்கது.



அஸ்ஸாமில் நிகழ்ந்த இரக்கமற்ற சம்பவம்!
[Wednesday 2024-05-15 06:00]

தாயைப் பிரிந்த குட்டி யானை, தாயைத் தேடி அலையும் சம்பவங்கள் பல இடங்களில் நிகழ்ந்துள்ளது. அண்மையில் தமிழகத்தில் நீலகிரியில் கூட இதுபோன்ற சம்பவம் நடந்திருந்தது. வனத்துறை அதிகாரிகள் குட்டி யானையுடன் காட்டு வழியில் பொடி நடை போட்டுக் கொண்டு நடந்து செல்லும் வீடியோக்களை யாரும் மறந்திருக்க முடியாது. தாயுடன் சேர்க்கப் படாத பாடுபட்ட அந்த நிகழ்வு செய்திகளாக வெளியாகி சமூக வலைத்தளங்களையும் ஆக்கிரமித்திருந்தது. இந்நிலையில் இதேபோன்ற ஒரு சம்பவம் அஸ்ஸாமில் நிகழ்ந்துள்ளது. ஆனால் நீலகிரியில் நிகழ்ந்திருந்த சம்பவத்திற்கு நேர் எதிராக நடந்தது தான் மிகவும் வேதனைக்குரிய ஒன்றாக உள்ளது.



ஈரானுடன் ஒப்பந்தம்: இந்தியாவுக்கு அமெரிக்கா எச்சரிக்கை!
[Wednesday 2024-05-15 06:00]

இஸ்ரேல் - ஹமாஸ் அமைப்பினர் இடையே நடைபெற்று வரும் போர் நாளுக்கு நாள் மோசமாகிக் கொண்டே வருகிறது. கடந்த ஆண்டு அக்டோபர் 7 ஆம் தேதி காசாவிலிருந்து ஹமாஸ் அமைப்பு இஸ்ரேல் மீது நடத்திய தாக்குதலில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இந்தப் போரில் அதிகளவில் பெண்களும், குழந்தைகளுமே உயிரிழந்துள்ளதாக ஐ.நா கவலை தெரிவித்துள்ளது.



தமிழீழ விடுதலைப்புலிகளை மீண்டும் தடை செய்த இந்தியா!
[Tuesday 2024-05-14 16:00]

தமிழீழ விடுதலைப் புலிகள் மீதான தடையை மேலும் 5 ஆண்டுகளுக்கு நீடித்து இந்திய மத்திய அரசு (Indian Central Government) அறிவித்தல் விடுத்துள்ளது. இலங்கையில், தனி நாடு கேட்டு, ஆயுதப் போராட்டம் நடத்தி வந்த, தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பினர், 1991இல், இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியை (Rajiv Gandhi) கொலை செய்ததாக குற்றம் சுமத்தப்பட்டிருந்தது.



மும்பையில் வீழ்ந்த பாரிய விளம்பர பலகை: 14 பேர் பலி!
[Tuesday 2024-05-14 16:00]

இந்தியாவின் (India) நிதித் தலைநகரான மும்பையில் (Mumbai) இடியுடன் கூடிய மழையினால் பாரிய விளம்பர பலகை கோபுரம் ஒன்று வீழ்ந்ததில் 14 பேர் உயிரிழந்ததோடு 75 பேர் வரை காயமடைந்துள்ளனர். அத்துடன், இடிபாடுகளுக்குள் இன்னும் பலர் சிக்கியிருக்கலாம் என்றும் அச்சம் வெளியிடப்பட்டுள்ளது.



“மிக கனமழைக்கு வாய்ப்பு” - ஆரஞ்ச் அலர்ட் கொடுத்த வானிலை மையம்!
[Tuesday 2024-05-14 16:00]

மிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளதால் வானிலை ஆய்வு மையம் ஆரஞ்ச் அலர்ட் விடுத்துள்ளது. கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளதால் பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டு பலரும் சுற்றுலாத் தலங்களுக்கு படையெடுத்து வருகின்றனர். இத்தகைய சூழலில் இந்திய வானிலை ஆய்வு மையம் சார்பில் தமிழகத்திற்கு தொடர்ந்து வெப்ப அலைக்கான மஞ்சள் எச்சரிக்கைகளும் விடுக்கப்பட்டு வந்தன.



அதிகரிக்கும் மஞ்சள் காய்ச்சல் நோய்: மத்திய அரசு எச்சரிக்கை!
[Tuesday 2024-05-14 16:00]

மஞ்சல் காய்ச்சல் நோய் என்பது ஒரு வகை வைரஸ் தொற்றினால் ஏற்படும் காய்ச்சல். டெங்குவைப் பரப்பும் ஏடிஎஸ் வகை கொசுக்களில் ஏடிஎஸ் ஜேசிஎப்டி என்றும் ஒருவகை கொசுவால் இந்த மஞ்சள் காய்ச்சல் தொற்று பரவுகிறது. கொரோனா, டெங்கு போன்ற வைரஸ் தொற்று சிகிச்சையைப் போன்றுதான் இந்த காய்ச்சலுக்கும் அதன் அறிகுறிகளை அடிப்படையாகக் கொண்டு சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.



மும்பையை புரட்டிப்போட்ட புழுதிப் புயல்: 8 பேர் உயிரிழப்பு!
[Tuesday 2024-05-14 06:00]

டெல்லியைத் தொடர்ந்து மும்பையில் பல பகுதிகளில் புழுதிப் புயல் வீசி வருகிறது. இந்நிலையில் புழுதிப் புயல் காரணமாக ராட்சத பேனர் விழுந்து 35 பேர் படுகாயம் அடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.



வாரணாசியில் வாகனப் பேரணி நடத்திய மோடி!
[Tuesday 2024-05-14 06:00]

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் நாடு முழுவதும் நடைபெற்று வருகிறது. அதன்படி முதற்கட்டமாக ஏப்ரல் 19ஆம் தேதியும், இரண்டாம் கட்டமாக ஏப்ரல் 26ஆம் தேதியும், மூன்றாம் கட்டமாக மே 7ஆம் தேதியும் பல்வேறு மாநிலங்களில் நடந்து முடிந்துள்ளது. இதனைத் தொடர்ந்து, அடுத்த கட்டத் தேர்தலான நான்காம் கட்ட வாக்குப்பதிவு, நாடு முழுவதும் 9 மாநிலங்கள் மற்றும் 1 யூனியன் பிரதேசம் உட்பட மொத்தம் 96 மக்களவைத் தொகுதிகளில் (13.05.2024) நடைபெற்று வருகிறது.



“எப்போது திருமணம்?’ - சிரித்துக்கொண்டே பதிலளித்த ராகுல் காந்தி!
[Tuesday 2024-05-14 06:00]

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் நாடு முழுவதும் நடைபெற்று வருகிறது. அதன்படி முதற்கட்டமாக ஏப்ரல் 19ஆம் தேதியும், இரண்டாம் கட்டமாக ஏப்ரல் 26ஆம் தேதியும், மூன்றாம் கட்டமாக மே 7ஆம் தேதியும் பல்வேறு மாநிலங்களில் நடந்து முடிந்துள்ளது. இதனைத் தொடர்ந்து, அடுத்த கட்டத் தேர்தலான நான்காம் கட்ட வாக்குப்பதிவு, நாடு முழுவதும் 9 மாநிலங்கள் மற்றும் 1 யூனியன் பிரதேசம் உட்பட மொத்தம் 96 மக்களவைத் தொகுதிகளில் இன்று (13.05.2024) நடைபெற்று முடிந்தது.



'உயிரா... பயிரா...' - வீட்டில் வீசப்பட்ட துண்டுச்சீட்டு; வயலில் அரங்கேறிய கொடூரம்!
[Monday 2024-05-13 18:00]

திமுக எம்எல்ஏவின் சகோதரி மகன் மர்ம நபர்களால் வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பு ஏற்படுத்தி இருக்கும் நிலையில் 'உயிரா... பயிரா... இது தொடரும் என எழுதி வைத்துவிட்டு சென்ற சம்பவம் அதிர்ச்சியைக் கொடுத்துள்ளது. தஞ்சாவூர் மாவட்டம் திருவிடைமருதூர் அடுத்துள்ள பந்தநல்லூரில் வசித்து வருபவர் கலைவாணன். இவர் ஜெயங்கொண்டம் திமுக எம்எல்ஏவின் சகோதரி மகன் ஆவார்.



வாரணாசி தொகுதி தேர்தலை ஒத்திவைக்க வேண்டும்: விவசாயிகள் சங்கம் போர்க்கொடி!
[Monday 2024-05-13 18:00]

வாரணாசி தொகுதியில் தேர்தலை ஒத்தி வைக்கவேண்டுமென தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கம் வலியுறுத்தியுள்ளது. இது குறித்து அச்சங்கத்தின் மாநிலத் தலைவர் அய்யாக்கண்ணு வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் கூறியிருப்பதாவது: 2019 மக்களவைத் தேர்தலின் போது, விவசாய விளை பொருள்களுக்கு லாபகரமான விலை, விவசாய கடன்கள் தள்ளுபடி, விவசாயிகளுக்கு ஓய்வூதியம், காவிரி - கோதாவரி நதிகள் இணைப்பு திட்டத்துக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என வழங்கப்பட்ட வாக்குறுதிகளை மத்திய பாஜக அரசு நிறைவேற்றவில்லை.



7 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு!
[Monday 2024-05-13 18:00]

கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளதால் பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்க அறிவுறுத்தல்கள் கொடுக்கப்பட்டது. நீர்ச்சத்து குறைபாட்டை தடுப்பதற்காக ஒவ்வொரு சுகாதார நிலையங்களிலும் ஓ.ஆர்.எஸ். கரைசல்களை ஆயத்தமாக வைத்திருக்கும்படி தமிழக அரசு அறிவுறுத்தியது. கோடை காலம் தொடங்கியதால் பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டு பலரும் சுற்றுலாத் தலங்களுக்கு படையெடுத்து வருகின்றனர்.



இந்தியாவில் மீண்டும் சாலை அமைக்கும் சீனா!
[Monday 2024-05-13 18:00]

காஸ்மீரின் சியாச்சின் (Kashmir Siachen) பனிப்பாறைக்கு அருகில் சட்டவிரோதமாக ஆக்கிரமிக்கப்பட்ட ஒரு பகுதியில் சீனாவால் சாலை ஒன்று அமைக்கப்படுதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. உலகின் மிக உயரமான போர்க்களமாக கருதப்படும் இந்த பகுதியில் சீனா சாலை அமைப்பில் ஈடுபட்டு வருகின்றமையை செயற்கைக்கோள் படங்கள் மூலம் தெரியவந்துள்ளது.



கட்சி தலைவரை எரித்தவர்களை கூட இன்னும் இந்த அரசு கண்டுபிடிக்கவில்லை' - வைகை செல்வன் குற்றச்சாட்டு!
[Monday 2024-05-13 06:00]

எடப்பாடி பழனிசாமியின் 70 வது பிறந்தநாளை முன்னிட்டு அவருடைய கட்சி தொண்டர்கள், நிர்வாகிகள் அதிமுக தலைமை அலுவலகத்தில் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். அதன் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த அதிமுகவின் வைகை செல்வம் பேசுவையில், ''எடப்பாடி பழனிசாமிக்கு இன்று 70 வது பிறந்தநாள். தமிழ்நாடு முழுவதும் அதிமுகவின் இரண்டு கோடி உடன்பிறப்புகளும் வாழ்த்துக்களை அவருக்கு தெரிவித்த வண்ணம் இருக்கிறார்கள்.



மீண்டும் திடீர் பள்ளம்: வாகன ஓட்டிகள் அவதி!
[Monday 2024-05-13 06:00]

திருச்சி திருவானைக்காவல் மீண்டும் சாலையில் ஏற்பட்ட திடீர் பள்ளம் பரபரப்பை ஏற்படுத்தியது. திருவானைக்காவல் பகுதியில் இருந்து திருவரங்கம் செல்லும் சாலையான காந்தி ரோடு திருப்பத்தில் உள்ள மாரியம்மன் கோவில் அருகில் இன்று அதிகாலை நடுரோட்டில் திடீரென்று பள்ளம் விழுந்தது. இதனைப் பார்த்த அப்பகுதி பொதுமக்கள் பள்ளம் வெகு ஆழமாக இருந்ததால் உடனடியாக அப்பகுதியைச் சேர்ந்த சிலர் பள்ளத்தை சுற்றி தடுப்புகளை வைத்தனர். இதனால் கனரக வாகனங்கள் பேருந்துகள் இப்பகுதியில் செல்ல முடியாமல் தடுத்து நிறுத்தப்பட்டது.



சலூனில் தீண்டாமை: இருவர் கைது!
[Monday 2024-05-13 06:00]

பட்டியலின சிறுவனுக்கு முடி திருத்தம் செய்ய மறுத்த கடை உரிமையாளரை காவல்துறையினர் கைது செய்த சம்பவம் தர்மபுரி நிகழ்ந்துள்ளது. தர்மபுரி மாவட்டம் அரூர் அடுத்துள்ளது கீரைப்பட்டி கிராமம். இந்த கிராமத்தில் யோகேஸ்வரன் என்பவர் 'யோகேஷ் பியூட்டி சலூன்' என்ற பெயரில் சலூன் கடை நடத்தி வருகறார். இந்த நிலையில் அவருடைய கடைக்கு 17 வயது சிறுவன் ஒருவன் முடி திருத்தம் செய்ய சென்றுள்ளார். அப்பொழுது சிறுவனிடம் ஊரை விசாரித்த யோகேஷ் சிறுவனுக்கு முடி திருத்தும் செய்ய மறுத்துள்ளார்.



அடுத்த 4 நாட்களுக்கு கனமழை எச்சரிக்கை!
[Sunday 2024-05-12 16:00]

தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் கோடை மழை பொழிந்து வருகிறது. பல பகுதிகளில் மாலை வேளையில் பலத்த காற்றுடன் கனமழை பொழிந்து வருகிறது. இந்நிலையில் தமிழகத்தில் அடுத்த நான்கு நாட்களுக்கு கனமழை எச்சரிக்கை கொடுக்கப்பட்டுள்ளது.


Rajeef sebarasha 2023/04/19
Vaheesan-Remax-2016
Airlinktravel-2020-01-01
Asayan-Salon-2022-seithy
Logan-Kumaresh-Homelife-02-02-2021
Karan Remax-2010
Mahesan-Remax-169515-Seithy
Ambikajewellers-01-08-2021-seithy
NKS-Ketha-04-11-2021
Kugeenthiran-200-2022-seithy
 gloriousprinters.com 2021
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> 12 10 2019 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Skanda Nite 2019 125th Anniversary நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா