Untitled Document
May 7, 2024 [GMT]
விஜயகலா கூறியது தவறு! - என்கிறார் சிவாஜிலிங்கம்
[Tuesday 2018-07-10 07:00]

இராஜாங்க அமைச்சர் என்ற பொறுப்பிலிருந்தவாறு மீண்டும் புலிகள் இயக்கம் உருவாக வேண்டுமென்று விஜயகலா மகேஸ்வரன் தெரிவிப்பது தவறு என வடமாகாண சபை உறுப்பினர் எம்.கே. சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார்

இராஜாங்க அமைச்சர் என்ற பொறுப்பிலிருந்தவாறு மீண்டும் புலிகள் இயக்கம் உருவாக வேண்டுமென்று விஜயகலா மகேஸ்வரன் தெரிவிப்பது தவறு என வடமாகாண சபை உறுப்பினர் எம்.கே. சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார்

  

விஜயகலா மகேஸ்வரனது கருத்தின் அடிப்படையிலேயே தற்போது தென்னிலங்கையில் பல்வேறு சர்ச்சைகள் உருவாகியுள்ளன. விடுதலைப்புலிகளின் காலத்தில் குற்றச்செயல்கள் இடம்பெறவில்லை எனக் கூறுவதற்கான முழு உரிமையும் அவருக்கிருக்கிறது என்பதை நானும் ஏற்றுக் கொள்கின்றேன். ஆனால், மீள விடுதலைப்புலிகள் அமைப்பு உருவாக வேண்டுமென விஜயகலா மகேஸ்வரன் கருத்துத் தெரிவித்திருந்தால் அது தவறானது.

சுழிபுரத்தில் ஆறுவயதுச் சிறுமி வன்புணர்வுக்குட்படுத்தப்பட்டுப் படுகொலை செய்யப்பட்டமை, வட்டுக் கோட்டையில் தனது கணவர் முன்பாகவே கைகள் கட்டப்பட்டுக் குடும்பப் பெண்ணொருவர் வன்புணர்வுக்குள்ளாக்கப்பட்டமை மற்றும் வாள்வெட்டுச் சம்பவங்கள் உள்ளிட்ட குற்றச்செயல்கள் என்றுமில்லாதவாறு யாழ்ப்பாணத்தில் தலைவிரித்தாடுகின்றன.

இந்தச் சம்பவங்களால் மன விரக்தியடைந்த விஜயகலா மகேஸ்வரன் கடந்தவாரம் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற ஜனாதிபதியின் நடமாடும் சேவையின் போது விடுதலைப்புலிகள் மீள உருவாக வேண்டுமென்ற அடிப்படையில் கருத்து வெளியிட்டுள்ளார்.

தமிழீழ விடுதலைப் புலிகளோ அல்லது எந்த தமிழர் விடுதலைப் போராட்ட இயக்கங்களோ எமது மக்கள் மத்தியில் சட்டம், ஒழுங்கை நிலைநாட்டுவதற்காக மாத்திரம் உருவாக்கப்பட்டதொரு அமைப்பல்ல. தேசிய இன விடுதலைப் போராட்டம் இடம்பெற்ற போது விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிகளில் அரசாங்கத்தை நடைமுறைப்படுத்திய போது குற்றச்செயல்களைத் தடுப்பதற்காக அவர்கள் கொண்டிருந்த ஆழமான உறுதிப்பாட்டின் காரணமாக பாரிய குற்றச் செயல்கள் இடம்பெறாத நிலை காணப்பட்டது. இதன் காரணமாக மக்கள் சுதந்திரமாகத் தமது அன்றாடச் செயற்பாடுகளை மேற்கொண்டார்கள்.

குறிப்பாக நள்ளிரவு 12 மணிக்குப் பின்னரும் ஒரு பெண் தங்க ஆபரணங்களை அணிந்து கொண்டு வீதியால் செல்லுமளவுக்கு நிலைமைகள் காணப்பட்டன என்பதை யாராலும் மறுக்க முடியாது.

விஜயகலா மகேஸ்வரன் எண்ணிக்கையில் சிறுபான்மையினரான தமிழினத்தைச் சேர்ந்தவர் என்ற வகையில் தான் அவருக்கெதிராக பரப்பப்படும் இனவாதக் கருத்துக்களை எம்மால் நோக்க முடிகிறது. அவர் தனது இராஜாங்க அமைச்சுப் பதவியைத் துறக்குமளவுக்கு நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளார்.

அவரது கருத்துத் தொடர்பான விசாரணை முன்னெடுப்புக்களும் இடம்பெறுகின்றன. எது எவ்வாறான போதும் அரசியலமைப்பை அவர் மீறவில்லை என்பது திட்டவட்டமாகத் தெரிகின்றது. எனவே, பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் மூலமாகவும் கூட விஜயகலா மகேஸ்வரனுக்கெதிராக குற்றஞ்சாட்ட முடியாது எனவும் அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.

  
   Bookmark and Share Seithy.com



வெலிக்கடை சிறையில் முன்னாள் போராளி உண்ணாவிரதம்! - சிறிதரன், கஜேந்திரன் பார்வையிட்டனர்.
[Tuesday 2024-05-07 16:00]

கடந்த பெப்ரவரி மாதம் பயங்கரவாத விசாரணைப் பிரிவினரால் விசாரணைக்கு அழைக்கப்பட்டு கொழும்பில் வைத்துக் கைது செய்யப்பட்ட வவுனியாவைச் சேர்ந்த முன்னாள் போராளி செல்வநாயகம் ஆனந்தவர்ணன் மற்றும் கடந்த ஒரு வருடத்திற்கும் மேலாக நீதிமன்றில் முற்படுத்தப்படாமல் அடைத்து வைக்கப்பட்டிருக்கும் மூதூரைச் சேரந்த எஸ்.சுதாகரன் ஆகிய இருவரையும் இன்று பாராளுமன்ற உறுப்பினர்களான செல்வராசா கஜேந்திரன் மற்றும் சிவஞானம் சிறீதரன் ஆகியோர் கொழும்பு விளக்கமறியல் சிறைச்சாலைக்குச் சென்று பார்வையிட்டார்கள் .



விஜயதாசவின் மனுவை விசாரணையின்றி நிராகரித்தது மேன்முறையீட்டு நீதிமன்றம்!
[Tuesday 2024-05-07 16:00]

நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்ஷவினால் தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரணையின்றி நிராகரித்து மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.



தாயின் கழுத்தை நெரித்துக் கொன்ற 16 வயது மகன்! - விசாரணையில் ஒப்புக்கொண்டான்.
[Tuesday 2024-05-07 16:00]

அம்மாவின் கழுத்தை நானே நெரித்து கொலை செய்தேன் என 16 வயது சிறுவன் பொலிஸ் விசாரணைகளில் தெரிவித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.



யாழ்ப்பாணத்தில் வெப்ப அலையினால் 5 பேர் பலி!
[Tuesday 2024-05-07 16:00]

யாழ்ப்பாணத்தில் நிலவும் அதிக வெப்பம் மற்றும் வெப்ப அலை காரணமாக 05 பேர் உயிரிழந்துள்ளனர் என யாழ்.போதான வைத்தியசாலையின் பொது மருத்துவ நிபுணர் ரி.பேரானந்தராஜா தெரிவித்துள்ளார்.



ஆட்சிக்கு வந்ததும் மதுபான உரிம பத்திரங்கள் ரத்து!- சஜித் அறிவிப்பு.
[Tuesday 2024-05-07 16:00]

தேர்தலை இலக்காக வைத்து மதுபான உரிம பத்திரங்களை வழங்கும் நடைமுறையை நிறுத்த வேண்டும். இந்த ஆண்டு இறுதிக்குள் மக்கள் ஆசிர்வாதத்துடன் ஆட்சிக்கு வந்தால் இது கட்டாயம் நிறுத்தப்படும். ஐக்கிய மக்கள் சக்தி அரசாங்கத்தில் இந்த உரிமங்கள் அனைத்தும் இரத்துச் செய்யப்படும். இது தொடர்பாக நீதிமன்றங்களை நாடினால், பாராளுமன்ற சட்டத்தின் மூலமாக இந்த உரிமங்களை தடை செய்வோம் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.



விசா நடைமுறையை மாற்ற விட்டால் பதவி விலகுவேன்! - ஹரீன் எச்சரிக்கை.
[Tuesday 2024-05-07 16:00]

புதிய விசா நடைமுறைகளில் மாற்றங்களை மேற்கொள்ளாவிட்டால் பதவி விலகுவேன் என சுற்றுலாத்துறை அமைச்சர் ஹரீன்பொணாண்டோ அமைச்சரவை கூட்டத்தில் எச்சரித்துள்ளார். புதிய திட்டம் முன்வைக்கப்பட்ட வேளை வி.எவ்.எஸ் கட்டணங்கள் குறித்து எதுவும் தெரிவிக்கப்படவில்லை. ஆனால் இது குறித்து தெரியவந்ததும் நான் எனது எதிர்ப்பை வெளியிட்டேன் என ஹரீன் பெர்ணாண்டோ தெரிவித்துள்ளார்.



மொட்டு எம்.பிக்கள், அமைப்பாளர்கள் அவசரமாக கொழும்புக்கு அழைப்பு!
[Tuesday 2024-05-07 16:00]

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவை பிரதிநிதித்துவப்படுத்தும் பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அனைத்து அமைப்பாளர்களும் கொழும்புக்கு அழைக்கப்பட்டுள்ளனர்.



வித்தியா கொலை வழக்கு - விசாரணையில் இருந்து விலகினார் நீதியரசர் துரைராஜா!
[Tuesday 2024-05-07 16:00]

புங்குடுதீவு மாணவி சிவலோக நாதன் வித்தியா கடத்தப்பட்டு கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் மரணதண்டனை விதிக்கப்பட்டவர்களின் மேன்முறையீட்டு மனுக்கள் மீதான விசாரணையில் இருந்து நீதியரசர் எஸ். துரைராஜா விலகியுள்ளார்.



போதை மாத்திரைகளுடன் கைது செய்யப்பட்ட திருகோணமலை ஊடகவியலாளர்!
[Tuesday 2024-05-07 16:00]

திருகோணமலையில்போதை மாத்திரைகளுடன் கைது செய்யப்பட்ட ஊடகவியலாளர், நீதிமன்ற உத்தரவின் பேரில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.



வீசா சேவைக் கட்டணத்துக்கு பாராளுமன்ற அனுமதி பெறப்படவில்லை!
[Tuesday 2024-05-07 16:00]

விசா கட்டணம் அதிகரிக்க பாராளுமன்றத்தில் அனுமதிக்கப்பட்டபோதும் வீ,எப்.எஸ். சேவை கட்டணத்துக்கு பாராளுமன்றத்தின் அனுமதி இல்லை. சட்டவிரோதமான முறையிலேயே வீ,எப்.எஸ். கட்டண அதிகரிப்பு பிரேரணை நுழைக்கப்பட்டுள்ளது. பாராளுமன்றத்தை பிழையாக வழிநடத்தப்பட்டிருப்பது தொடர்பில் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என எதிர்க்கட்சி பிரதம கொறடா லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்தார்.



விசா குழப்பம் - அமைச்சரவை அதிரடி முடிவு!
[Tuesday 2024-05-07 05:00]

வெளிநாட்டவர்கள் இலங்கைக்கு வரும்போது 30 நாள் விசாவிற்கு ஒருவருக்கு 50 டொலர் என்ற பழைய கட்டணத்தை பேணுவதற்கும், இந்தியா, சீனா, ரஷ்யா, ஜப்பான், மலேசியா, தாய்லாந்து மற்றும் இந்தோனேசியா ஆகிய ஏழு நாடுகளுக்கு இதுவரை வழங்கப்பட்ட இலவச விசா சேவையை நடைமுறைப்படுத்துவதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.



கட்டுநாயக்கவில் எதிர்ப்புக் குரல் எழுப்பிய இளைஞன் மீது சட்ட நடவடிக்கை பாயும்!
[Tuesday 2024-05-07 05:00]

கட்டுநாயக்க விமான நிலையத்தில் சண்டித்தனம் காட்டி, தவறான நிலைப்பாட்டை சமூகமயப்படுத்திய இளைஞருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும். சர்வதேச விமான நிலையத்தில் ஒழுக்கமற்ற வகையில் செயற்பட முடியாது என பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் தெரிவித்தார்.



விசா விவகாரம் பிணை முறி மோசடியை விட மோசமானது!
[Tuesday 2024-05-07 05:00]

எமது நாட்டில் நடைமுறையில் இருந்து வந்த விசா வழங்கும் திட்டத்தை மாற்றியமைத்ததன் மூலம், 18.50 டொலர்களை அறவிட்டு, அந்த வருமானம் வெளிநாட்டு நிறுவனங்களுக்கு வழங்கப்படுகிறது. இதனால், எமது நாட்டுக்கு கிடைக்கும் அதிக அளவிலான டொலர்களில் இழப்பு ஏற்படுகிறது. இவ்வாறான மாற்றத்தை ஏற்படுத்துவதன் அடிப்படையும், நோக்கமும் என்னவென எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச கேள்வி எழுப்பினார்.



விமான நிலைய கட்டமைப்பை ஆராய சிங்கப்பூர் அதிகாரிகள் வருகின்றனர்!
[Tuesday 2024-05-07 05:00]

இலங்கையின் விமான நிலையங்களின் கட்டமைப்பு, குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் கட்டமைப்பையும் ஆராய்வதற்கு சிங்கப்பூர் நாட்டின் குடிவரவு மற்றும் சோதனைச்சாவடிகள் அதிகார சபையின் அதிகாரிகள் எதிர்வரும் 27ஆம் திகதி இலங்கைக்கு வருகை தரவள்ளனர். சிங்கப்பூர் போல் மாற வேண்டும் என்று கனவு கண்டால் மாத்திரம் போதாது அதற்கான நடவடிக்கைகளையும் முன்னெடுக்க வேண்டும் என பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் தெரிவித்தார்.



தாயை கொலை செய்திருக்கலாம் என சந்தேகிக்கப்படும் சிறுவன் கைது!
[Tuesday 2024-05-07 05:00]

தெல்லிப்பழையில் உயிரிழந்த பெண்ணைக் கொலை செய்திருக்கலாம் எனச் சந்தேகிக்கப்படும் மகன் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். தெல்லிப்பழையிலுள்ள வீடொன்றிலிருந்து 4ஆம் திகதி பெண்ணொருவரின் சடலம் மீட்கப்பட்டது.



பரபரப்பை ஏற்படுத்திய பதவி விலகல் கடிதம்!
[Tuesday 2024-05-07 05:00]

சுற்றுலாத்துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ தனது பதவியில் இருந்து விலகியுள்ளதாக சமூக ஊடகங்களில் கடிதமொன்று பகிரப்பட்டுள்ளது. இந்த கடிதம் போலியானது என அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ பதில் வழங்கியுள்ளார்.



பிரித்தானிய உயரதிகாரி அனுரவுடன் சந்திப்பு!
[Tuesday 2024-05-07 05:00]

பிரித்தானிய வெளிவிவகார, பொதுநலவாய மற்றும் அபிவிருத்தி அலுவலகத்தின் இந்தோ-பசிபிக் பிராந்திய பணிப்பாளர் பென் மெல்லருக்கும் தேசிய மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்கவுக்கும் இடையிலான சந்திப்பொன்று ஜே.வி.பியின் தலைமை அலுவலகத்தில் திங்கட்கிழமை இடம்பெற்றது.



புத்தூரில் மரத்தில் இருந்து விழுந்த ஒருவர் மரணம்!
[Tuesday 2024-05-07 05:00]

யாழ். புத்தூர் பகுதியில் மரத்தில் இருந்து கீழே விழுந்து ஒருவர் உயிரிழந்துள்ளார். புத்தூர் மேற்கு சிவன் கோவிலுக்கு அருகாமையில் நேற்று குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.



சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகள் செப்டெம்பரில் வெளியாகும்!
[Tuesday 2024-05-07 05:00]

நேற்று ஆரம்பமான கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையின் பெறுபேறுகள் எதிர்வரும் செப்டெம்பர் மாதத்திற்குள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுவதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.



கோடரியால் மருமகன் தாக்கினார் - மாமனார் மரணம்!
[Tuesday 2024-05-07 05:00]

வவுனியா, மதுரா நகர் பகுதியில் மருமகனின் தாக்குதலுக்கு இலக்கான மாமனார் மரணமடைந்துள்ளார். வவுனியா, மதுராநகர் பகுதியில் உள்ள வீடு ஒன்றில் வசிக்கும் குறித்த இருவருக்கும் இடையில் நீண்ட நாட்களாக கருத்து முரண்பாடுகள் இருந்து வந்துள்ளது.


Asayan-Salon-2022-seithy
Karan Remax-2010
 gloriousprinters.com 2021
Rajeef sebarasha 2023/04/19
Vaheesan-Remax-2016
Mahesan-Remax-169515-Seithy
Kugeenthiran-200-2022-seithy
Airlinktravel-2020-01-01
Ambikajewellers-01-08-2021-seithy
Logan-Kumaresh-Homelife-02-02-2021
NKS-Ketha-04-11-2021
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> 12 10 2019 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Skanda Nite 2019 125th Anniversary நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா