Untitled Document
May 7, 2024 [GMT]
கள்ளக்காதல் தகராறில் குழந்தைகளை தீர்த்துக்கட்டிய கொடூர தாய் சிக்கியது எப்படி? - பரபரப்பு வாக்குமூலம்
[Sunday 2018-09-02 16:00]

குன்றத்தூர் அருகே உள்ள மூன்றாம் கட்டளை திருவள்ளுவர் நகரில் வசித்து வருபவர் விஜய். இவரது மனைவி பெயர் அபிராமி. 7 வயதில் அஜய் என்ற மகனும், 4 வயதில் கார்னிகா என்ற மகளும் இருந்தனர்.

குறிஞ்சிப்பாடியை சேர்ந்த விஜய்க்கு தி.நகரில் உள்ள தனியார் வங்கியில் வேலை கிடைத்தது. இதனால் குடும்பத்தோடு குன்றத்தூர் பகுதியில் குடியேறினர். அழகான மனைவி, அன்பான குழந்தைகள் என விஜயின் குடும்ப வாழ்க்கை சந்தோ‌ஷமாகவே சென்று கொண்டிருந்தது.

குன்றத்தூர் அருகே உள்ள மூன்றாம் கட்டளை திருவள்ளுவர் நகரில் வசித்து வருபவர் விஜய். இவரது மனைவி பெயர் அபிராமி. 7 வயதில் அஜய் என்ற மகனும், 4 வயதில் கார்னிகா என்ற மகளும் இருந்தனர். குறிஞ்சிப்பாடியை சேர்ந்த விஜய்க்கு தி.நகரில் உள்ள தனியார் வங்கியில் வேலை கிடைத்தது. இதனால் குடும்பத்தோடு குன்றத்தூர் பகுதியில் குடியேறினர். அழகான மனைவி, அன்பான குழந்தைகள் என விஜயின் குடும்ப வாழ்க்கை சந்தோ‌ஷமாகவே சென்று கொண்டிருந்தது.

  

இந்த நிலையில் அதே பகுதியை சேர்ந்த பிரியாணி கடைக்கு விஜய் மனைவி, குழந்தைகளை அழைத்துச் சென்று குடும்பத்தோடு சாப்பிட்டார். அப்போது அங்கு பணிபுரிந்த வாலிபர் சுந்தரத்தின் மீது அபிராமியின் காதல் பார்வை விழுந்தது. இருவரும் அடிக்கடி சந்தித்துக் கொண்டனர். இந்த பழக்கம் கள்ளக்காதலாக மாறியது.

சில நாட்களுக்கு முன்னர் அபிராமி திடீரென காணாமல் போய்விட்டார். அவளை உறவினர்கள் தேடிக் கண்டுபிடித்து அறிவுரைகூறி கணவருடன் சேர்த்து வைத்தனர். அபிராமி-சுந்தரத்தின் கள்ளக்காதல் அப்பகுதி முழுவதுமே பரவத் தொடங்கியது. இதனால் விஜய் மனைவியை கண்டித்தார். இருப்பினும் அபிராமியால், சுந்தரத்துடனான கள்ளக்காதலை விட முடியவில்லை.

இந்தநிலையில் அபிராமியின் மனதில் விபரீத எண்ணம் தோன்றியது. கள்ளக்காதலுக்கு இடையூறாக இருக்கும் தனது குழந்தைகளை தீர்த்துக்கட்ட திட்டம் போட்டார். ஆனால் எதையும் அபிராமி வெளிக்காட்டிக் கொள்ளாமல் இருந்தார். நேற்று முன்தினம் விஜய்க்கு பிறந்த நாள். மனைவி மற்றும் குழந்தைகளுடன் பிறந்த நாளை கொண்டாடிவிட்டு மதியம் 12 மணியளவில் வேலைக்கு சென்றுவிட்டார்.

இதன்பிறகே அபிராமி கொடூர தாயாக மாறினார். இரவில் தூங்கச் செல்வதற்கு முன்னர் 2 குழந்தைகளுக்கும் வி‌ஷம் கலந்த பாலை கொடுத்தார். எதுவும் அறியாத அப்பாவி குழந்தைகளும் தாய் கொடுத்த பாலை வாங்கிக் குடித்தனர். சிறிது நேரத்திலேயே வாயில் நுரைதள்ளி குழந்தைகள் அஜய், கார்னிகா இருவரும் துடிதுடித்து பலியானார்கள்.

2 குழந்தை களையும் ஈவு இரக்கம் இல்லாமல் கொலை செய்த அபிராமி கதவை வெளிப்பக்கமாக தாழ்ப்பாள் போட்டு விட்டு தனது மொபட்டை எடுத்துக் கொண்டு தப்பிச்சென்றுவிட்டார். நேற்று முன்தினம் மதியம் வேலைக்கு சென்ற விஜய், வேலைப்பளு காரணமாக இரவில் வங்கியிலேயே தங்கிவிட்டார். நேற்று காலையில் அவர் வீட்டுக்கு வந்தபோதுதான் இது வெளியில் தெரியவந்தது.

இதுபற்றிய தகவல் கிடைத்ததும் குன்றத்தூர் போலீசார் விரைந்து சென்று குழந்தைகளின் உடலை கைப்பற்றி குரோம்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அந்த பகுதி முழுவதும் இக்கொலை சம்பவம் காட்டுத் தீயாக பரவியது. இதனால் கொலை நடந்த வீட்டு முன்பு ஏராளமான பொதுமக்களும் திரண்டனர். பெரும் பரபரப்பும் ஏற்பட்டது. தப்பி ஓடிய அபிராமியை பிடிக்க போலீசார் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது அவரது மொபட் கோயம்பேட்டில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. இதனால் அவர் வெளியூருக்கு தப்பி சென்றது தெரிய வந்தது.

இதற்கிடையே அபிராமியின் கள்ளக்காதலனான சுந்தரம் போலீசில் சிக்கினார். அவனை வைத்து அபிராமியை பிடிக்க திட்டம் வகுக்கப்பட்டது. இதன்படி சுந்தரத்தை உடன் வைத்துக் கொண்டே போலீசார் தேடுதல் வேட்டையை தொடங்கினர். அபிராமியிடம் சுந்தரத்தை போனில் பேசவைத்து எங்கு இருக்கிறாய்? என்று கேட்க சொன்னார்கள். அப்போது அபிராமி திருவனந்தபுரத்தில் இருப்பதாக தெரிவித்தார். உடனே போலீசார் நாகர்கோவிலுக்கு விரைந்து சென்றனர்.

அங்கு சென்றதும் சுந்தரம், அபிராமியிடம் போனில் பேசினார். நான் நாகர்கோவில் வந்துவிட்டேன். நீயும் வந்துவிடு என்று அழைத்தார். இதனை நம்பி நாகர்கோவில் வந்தபோது தான் அபிராமியை போலீசார் மடக்கி பிடித்து கைது செய்தனர். நேற்று இரவு போலீசில் சிக்கிய அபிராமி, இன்று காலை 10 மணி அளவில் சுந்தரத்துடன் சென்னைக்கு அழைத்து வரப்பட்டார். அபிராமி, சுந்தரம் இருவரிடமும் தொடர்ந்து விசாரணை நடத்திய போலீசார் 2 குழந்தைகளையும் கொல்வதற்கு சதித்திட்டம் தீட்டியது பற்றி பல்வேறு கேள்விகளை கேட்டனர்.

இதற்கு அவர்கள் அளித்த பதில்களை வாக்கு மூலமாக பதிவு செய்துள்ளனர். 2 பேரையும் இன்று நீதிபதியின் வீட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்க முடிவு செய்துள்ளனர். இதற்கிடையே குழந்தைகள் அஜய், கார்னிகா இருவரது உடலும் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு தந்தை விஜயிடம் ஒப்படைக்கப்பட்டது. நேற்று இரவே குழந்தைகள் உடலும் அடக்கம் செய்யப்பட்டுவிட்டன. குழந்தைகளின் உடல் ஒப்படைக்கப்பட்ட போது அரசு ஆஸ்பத்திரியில் கூடியிருந்த உறவினர்கள் கண்ணீர்விட்டு கதறி அழுதனர். இது நெஞ்சை உலுக்குவதாக இருந்தது.

கொலையாளி அபிராமி மீதும், கொலைக்கு உடந்தையாக இருந்த சுந்தரம் மீதும் குழந்தைகளின் உறவினர்கள் கடும் கோபத்தில் உள்ளனர். அவர்களால் ஏதேனும் அசம்பாவிதங்கள் ஏற்பட்டு விடக்கூடாது என்பதை கருத்தில் கொண்டு கூடுதல் போலீசாரும் குவிக்கப்பட்டுள்ளனர்.

2 குழந்தைகளை கொலை செய்த அபிராமி, போலீசில் அளித்துள்ள பரபரப்பு வாக்குமூலம் வருமாறு:- 8 ஆண்டுகளுக்கு முன்பு நானும், விஜயும் காதலித்து திருமணம் செய்து கொண்டோம். குன்றத்தூர் அருகே உள்ள மூன்றாம் கட்டளையில் வாடகை வீட்டில் குடிபுகுந்த பின்னர் அதே பகுதியில் உள்ள பிரியாணி கடைக்கு குடும்பத்தோடு சென்று வந்துள்ளோம். அப்போது அங்கு பில் போடும் பணியில் இருந்த சுந்தரத்துடன் எனக்கு பழக்கம் ஏற்பட்டது.

இதன் பின்னர்தான் அடிக்கடி பிரியாணி வாங்கு வதற்காக சென்றேன். இதனால் எங்களுக்கிடையே நெருக்கம் அதிகமானது. கள்ளக்காதல் காரணமாக குடும்பத்தை விட்டு விலகி விட நினைத்தேன். இதற்கு சுந்தரமும் உடன்பட்டார். இந்த நிலையில் கடந்த 10 நாட்களுக்கு முன்னர் கணவருடன் கோபித்துக் கொண்டு வெளியில் சென்ற நான், சுந்தரத்தின் வீட்டில் சென்று தங்கினேன். இதன் பின்னர் எனக்கும், கணவர் விஜய்க்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டது.

விஜயோடு 8 ஆண்டு குடும்பம் நடத்தியபோதிலும் சுந்தரத்துடன் 2 மாத கள்ளக் காதலை என்னால் விட முடியவில்லை. இதனால் இதற்கு என்ன வழி? என்று யோசித்தேன். அப்போது சுந்தரம், கணவர், குழந்தைகளை கொன்றுவிட்டு நாம் எந்த பிரச்சினையுமின்றி சந்தோ‌ஷமாக இருக்கலாம் என்று கூறினார். இதற்கு நானும் ஒத்துக் கொண்டேன். கடந்த 30-ந்தேதியில் இருந்தே 2 நாட்களாக கணவர், குழந்தைகளை கொலை செய்ய திட்டம் போட்டேன். 30-ந்தேதி இரவிலேயே 3 பேருக்கும் வி‌ஷ மாத்திரைகளை கலந்த பாலை கொடுத்தேன். மறுநாள் காலையில் யாரும் எழுந்திருக்க மாட்டார்கள் என்று நினைத்தேன்.

ஆனால் மறுநாள் (31-ந்தேதி) காலையில் கணவர் விஜயும், மகன் அஜயும் எழுந்து விட்டனர். மாத்திரையின் வீரியம் குறைவாக இருந்ததால் 2 பேரும் பிழைத்துக் கொண் டனர். ஆனால் மகள் கார்னிகா எழும்பவில்லை. அவள் 30-ந்தேதி இரவே உயிரிழந்திருப்பாள் என்று எண்ணுகிறேன். நேற்று முன்தினம் காலையில் கார்னிகா எழும்பாததால் அவளுக்கு முத்தம் கொடுத்து விட்டு வேலைக்கு செல்ல விஜய் சென்றார். நான், அதற்கு அனுமதிக்கவில்லை. அசந்து தூங்குகிறாள் நீங்கள் படுக்கை அறைக்கு சென்றால் விழித்துக் கொள்வாள் என்றேன். விஜயும் இதனை நம்பி வேலைக்கு சென்று விட்டார்.

இதன் பின்னர் மறுநாள் மீண்டும் மகன் அஜய்க்கு வி‌ஷம் கலந்த பாலை கொடுத்தேன். அவன் மயங்கிய பின்னர் கழுத்தை நெரித்து கொன் றேன். கொலை செய்துவிட்டு வெளியூருக்கு தப்பிச் செல்வதற்கு என்னிடம் பணம் இல்லை. இதனால் தாலி செயினை அடகு வைத்து பணத்தை தயார் செய்து வைத்திருந்தேன். இந்த பணத்துடன்தான் நாகர்கோவில் சென்றேன். இவ்வாறு அபிராமி வாக்குமூலம் அளித்துள்ளார்.

குழந்தைகள் கொலை வழக்கில் அபிராமி முதல் குற்றவாளியாகவும், கள்ளக் காதலன் சுந்தரம் 2-வது குற்றவாளியாகவும் சேர்க்கப் பட்டுள்ளனர். சுந்தரத்துக்கு திருமணமாகி 4 ஆண்டுகள் ஆகிறது. குழந்தைகள் இல்லை.

  
   Bookmark and Share Seithy.com



உ.பி.யில் வாக்களிக்க வந்த இஸ்லாமிய பெண்கள் மீது தாக்குதல்!
[Tuesday 2024-05-07 18:00]

நாடு முழுவதும் ஒவ்வொரு கட்டங்களாக தேர்தல் நடைபெற்று வருகிறது. முதற்கட்டமாக ஏப்ரல் 19ஆம் தேதி அன்று தமிழ்நாடு, மணிப்பூர், உள்ளிட்ட 102 தொகுதிகளுக்கும் தேர்தல் நடைபெற்றது. இதனையடுத்து, இரண்டாம் கட்டமாக ஏப்ரல் 26ஆம் தேதி கேரளா, கர்நாடகா உள்ளிட்ட 89 தொகுதிகளுக்கும் தேர்தல் நடைபெற்றது. டீ தொடர்ந்து உத்தரப்பிரதேசம் - 10, மேற்கு வங்கம் - 4 ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசத்திற்கு உட்பட்ட அனந்த்நாக் - ரஜௌரி - 1, தாத்ரா நகர் ஹவேலி, டாமன் டையூ ஆகிய தொகுதிகளிலும் மூன்றாம் கட்ட தேர்தல் நடைபெற்று வருகிறது.



பிரஜ்வல் ரேவண்ணா ஆபாச வீடியோ விவகாரம்: மெளனம் கலைத்த பிரதமர் மோடி!
[Tuesday 2024-05-07 18:00]

முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் பேரனும், ஹாசன் மக்களவைத் தொகுதியின் எம்.பி.யுமான பிரஜ்வல் ரேவண்ணா பல பெண்களைப் பாலியல் வன்கொடுமை செய்ததாகப் புகார் எழுந்தது. அதாவது தன்னிடம் உதவி கேட்டு வந்த ஏராளமான பெண்களை பிரஜ்வல் ரேவண்ணா பாலியல் தேவைகளுக்காகப் பயன்படுத்திக் கொண்டதாகப் பரபரப்பு குற்றச்சாட்டு எழுந்தது. மேலும் பிரஜ்வல் ரேவண்ணா பல பெண்களுடன் இருப்பது போன்ற ஆபாச காட்சிகள் வெளியாகி மக்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்தப் புகார் குறித்த நெருக்கடி அதிகரிப்பால் பிரஜ்வல் ரேவண்ணா கர்நாடகாவில் இருந்து ஜெர்மனிக்கு தப்பியோடியதாகவும் தகவல் வெளியாகி இருந்தது.



கணித பாடத்தில் தோல்வியடைந்ததால் பிளஸ் 2 மாணவி விபரீத முடிவு!
[Tuesday 2024-05-07 18:00]

கணித பாடத்தில் தோல்வியடைந்ததால் பன்னிரண்டாம் வகுப்பு மாணவி ஒருவர் விபரீத முடிவு எடுத்துள்ளார். தமிழக மாவட்டமான கடலூர், விருத்தாசலம் அடுத்த கோட்டேரி கிராமத்தை சேர்ந்தவர் ஆறுமுகம். இவரது மகள் அபிநயா (வயது 17) பேர்பெரியான்குப்பம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் படித்து வந்தார்.



இனிப்பு இல்லாததால் நின்று போன திருமணம்: தாலி கட்டும் முன்பு பிரச்சனை!
[Tuesday 2024-05-07 18:00]

திருமணத்திற்கு பரிமாறப்பட்ட விருந்தில் இனிப்பு இடம்பெறாததால் தாலி கட்டும் முன்பே திருமணம் நின்று போனது. தமிழக மாநிலமான கர்நாடகா, குடகு மாவட்டம் சோமவார்பேட்டை தாலுகா ஹனகல்லு கிராமம் சித்தார்த்தா படாவனே பகுதியில் வசித்து வரும் 23 வயது இளம்பெண்ணிற்கும், துமகூரு மாவட்டத்தைச் சேர்ந்த 27 வயது இளைஞருக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டது.



முதல் நாளே குவிந்த இ-பாஸ் விண்ணப்பங்கள்!
[Tuesday 2024-05-07 06:00]

கோடை காலம் தொடங்கி வெயிலின் தாக்கம் அதிகரித்து வருவதால் மலைப் பிரதேசமான உதகை மற்றும் கொடைக்கானலுக்கு ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வரத் தொடங்கியுள்ளனர். கடந்த சில வாரங்களாகவே சுற்றுலாப் பயணிகள் எண்ணிக்கை அதிகரித்த நிலையில், கடந்த ஏப்ரல் கடைசி தேதி முதல் அதிகப்படியான சுற்றுலாப் பயணிகள் உதகையில் குவிந்தனர். இதனால் உதகை நகர்ப் பகுதியில் சுற்றுலா வாகனங்கள் அணிவகுத்ததால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.



9 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!
[Tuesday 2024-05-07 06:00]

கோடை வெயில் வாட்டி வரும் நிலையில் தமிழகத்தில் சில இடங்களில் சூறைக்காற்றுடன் மழையும் பொழிந்து வருகிறது. இந்நிலையில் தமிழகத்தில் இரவு 10 மணி வரை 9 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு இருக்கும் எனச் சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.



"தேவையான அளவு இட ஒதுக்கீடு அளிப்போம்" - ராகுல் காந்தி உறுதி!
[Tuesday 2024-05-07 06:00]

நாடு முழுவதும் ஒவ்வொரு கட்டங்களாக தேர்தல் நடைபெற்று வருகிறது. முதற்கட்டமாக ஏப்ரல் 19ஆம் தேதி அன்று தமிழ்நாடு, மணிப்பூர், உள்ளிட்ட 102 தொகுதிகளுக்கும் தேர்தல் நடைபெற்றது. இதனையடுத்து, இரண்டாம் கட்டமாக ஏப்ரல் 26ஆம் தேதி கேரளா, கர்நாடகா உள்ளிட்ட 89 தொகுதிகளுக்கும் தேர்தல் நடைபெற்றது. அடுத்து வரவிருக்கும் மூன்றாம், நான்காம் கட்டத் தேர்தலுக்காக, காங்கிரஸ், பா.ஜ.க உள்ளிட்ட அரசியல் கட்சிகள் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதில் மூன்றாம் கட்டத் தேர்தல் நாளை (07-05-24) கர்நாடகா, குஜராத் உள்ளிட்ட சில மாநிலங்களில் நடைபெறவிருக்கிறது.



'இது கொலைதான்?' - விசாரணையை இறுக்கும் காவல்துறை!
[Monday 2024-05-06 18:00]

திருநெல்வேலி மாவட்டம் திசையன்விளை பகுதியைச் சேர்ந்தவர் ஜெயக்குமார் தனசிங் (வயது 60). இவர் காங்கிரஸ் கட்சியின் திருநெல்வேலி கிழக்கு மாவட்ட தலைவராக இருந்து வந்தார். தொழிலதிபரான ஜெயக்குமார் தனசிங் கடந்த 2 ஆம் தேதி (02.05.2024) வெளியே சென்று வருவதாக வீட்டில் கூறிவிட்டு சென்றுள்ளார். அதன் பின்னர் அவர் வீடு திரும்பவில்லை. அதனைத் தொடர்ந்து அவரின் குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் எனப் பலரும் பல இடங்களிலும் தேடியும் ஜெயக்குமார் கிடைக்கவில்லை. இதையடுத்து அவருடைய மகன் கருணையா ஜப்ரின் (வயது 28) உவரி காவல் துறையில் இது தொடர்பாக கடந்த 3 ஆம் தேதி (03.05.2024) புகார் அளித்திருந்தார்.



மாணவர்களுக்கு மனநல ஆலோசனை: தமிழக அரசு ஏற்பாடு!
[Monday 2024-05-06 18:00]

தமிழகத்தில் 2023 - 24 ஆம் கல்வியாண்டுக்கான 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் இன்று (06.05.2024) காலை 09.30 மணிக்கு வெளியானது. தேர்வுத்துறை இயக்குநர் சேதுராம வர்மா தேர்வு முடிவுகளை வெளியிட்டார். மாணவர்கள் தங்கள் தேர்வு முடிவுகளை www.tnresults.nic.in, www.dge.tn.gov.in இணையதள முகவரியில் தங்களது பதிவெண் மற்றும் பிறந்த தேதி ஆகியவற்றை பதிவு செய்து தேர்வு முடிவுகளை அறிந்து வருகின்றனர். அதே சமயம் பள்ளி மாணவர்கள் தாங்கள் படித்த பள்ளிகள் மூலமும் தேர்வு முடிவுகளை அறிந்துகொள்ள வசதிகள் செய்யப்பட்டுள்ளன. மேலும் மாணவ - மாணவிகள் வீட்டில் இருந்தபடியே தங்களது தேர்வு முடிவுகளை தெரிந்து கொள்ள ஏதுவாக பள்ளிகளில் பதிவு செய்திருந்த கைப்பேசி எண்ணுக்கு மதிப்பெண் விவரம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.



ராகுல் காந்தி ஒரு பிரிட்டிஷ் நாட்டவர்: வேட்புமனுவை நிராகரிக்க குடியுரிமையை காரணம் காட்டி புகார்!
[Monday 2024-05-06 18:00]

ராகுல் காந்தி பிரிட்டிஷ் நாட்டவர் என்றும் சிறை தண்டனை பெற்றவர் என்றும் காரணம் காட்டி ரேபரேலியில் அவரது வேட்புமனுவை நிராகரிக்க புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது. காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி, கடந்த வெள்ளிக்கிழமை உத்தர பிரதேச மாநிலம் ரேபரேலி தொகுதியில் வேட்பு மனு தாக்கல் செய்தார். இந்த தொகுதியில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி உடல்நலம் காரணமாக போட்டியிடவில்லை.



தமிழகத்தில் பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியீடு!
[Monday 2024-05-06 18:00]

தமிழகத்தில் வெளியான பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுகளில் மாணவர்களை விட மாணவிகளே அதிகம் தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளனர். தமிழகத்தில் இன்று (மே.6) காலை 9.30 மணியளவில் அரசுத் தேர்வுகள் இயக்குநர் சேதுராம வர்மா பிளஸ் 2 தேர்வு முடிவுகளை வெளியிட்டார். அதன்படி,கடந்த 2023 -ம் ஆண்டு 94.03 சதவீதம் தேர்ச்சி பதிவாகியிருந்த நிலையில், இந்த ஆண்டு 94.56 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்று தேர்ச்சி விகிதம் அதிகரித்துள்ளது.



மதுபோதையில் ரகளை செய்த மகனை அடித்துக்கொன்ற தாய்!
[Monday 2024-05-06 06:00]

மதுரையில் மது போதையில் தகராறு செய்த மகனை தாயே கட்டை மற்றும் கற்களால் அடித்துக் கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டம் உசிலம்பட்டி தும்மகுண்டு பகுதியைச் சேர்ந்தவர் சிவசாமி. திருமணமாகி விவாகரத்து பெற்ற நிலையில் சிவசாமி தாய் பாண்டியம்மாளுடன் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் மது போதைக்கு அடிமையான மகன் சிவசாமி அடிக்கடி மது குடித்து விட்டு வீட்டில் வந்து தகராறு செய்வதை வாடிக்கையாகக் கொண்டிருந்துள்ளார்.



காதலித்துவிட்டு ஏமாற்ற நினைத்த காதலன்: விடாப்பிடியாய் நடந்த திருமணம்!
[Monday 2024-05-06 06:00]

எட்டு ஆண்டுகளாக காதலித்து விட்டு திருமணம் செய்ய மறுத்த காதலனை உறவினர்கள் ஒன்று சேர்ந்து கட்டாயப்படுத்தி திருமணம் செய்து வைத்த நிகழ்வு உளுந்தூர்பேட்டையில் நிகழ்ந்துள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை சிறுதானூரை சேர்ந்தவர் தமிழரசன். இவர் கடந்த எட்டு வருடமாக ரோஸ்லின் என்பவரை காதலித்து வந்தார். இருவரும் காதலித்து வந்த நிலையில் கடந்த 2019 ஆம் ஆண்டு வேலை பார்ப்பதற்காக சென்னை வந்துள்ளனர். பெசன்ட் நகரில் உறவினர் வீட்டில் தங்கி இருந்து இருவரும் பணியாற்றி வந்தனர். இந்நிலையில் ரோஸ்லின் மேரி தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு தமிழரசனிடம் தெரிவித்துள்ளார். ஆனால் எப்போது திருமணம் பற்றி பேசினாலும் ஏதாவது காரணம் சொல்லி காலம் கடத்தி வந்துள்ளார் என்று கூறப்படுகிறது. இதனால் தன்னை காதலித்து ஏமாற்றியதாக சென்னை அடையாறு உட்பட நான்கு காவல் நிலையங்களில் ரோஸ்லின் புகார் அளித்தார்.



நீலகிரியில் இ-பாஸ்: நாளை முதல் விண்ணப்பிக்கலாம்!
[Monday 2024-05-06 06:00]

கோடை காலம் தொடங்கி வெயிலின் தாக்கம் அதிகரித்து வருவதால் பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்க அறிவுறுத்தல்கள் கொடுக்கப்பட்டு வருகிறது. நீர்ச்சத்து குறைபாட்டைத் தடுப்பதற்காக ஒவ்வொரு சுகாதார நிலையங்களிலும் ஓ.ஆர்.எஸ் கரைசல்களை ஆயத்தமாக வைத்திருக்கும்படி தமிழக அரசு அறிவித்துள்ளது. இந்நிலையில் கோடை காலம் தொடங்கி பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளதால் பலரும் சுற்றுலாத் தலங்களுக்கு படையெடுத்து வருகின்றனர்.



நாகப்பட்டினம் - இலங்கை இடையே கப்பல் சேவை!
[Sunday 2024-05-05 18:00]

நாகப்பட்டினம் சிறு துறைமுகத்திலிருந்து இலங்கை காங்கேசன் துறைமுகத்திற்கு பயணிகள் கப்பல் போக்குவரத்தை கடந்த ஆண்டு அக்டோபர் 14 ஆம் தேதி (14.10.2023) பிரதமர் மோடி டெல்லியில் இருந்து காணொளி காட்சி மூலம் தொடங்கி வைத்தார். நாகப்பட்டினம் துறைமுகத்தில் நடைபெற்ற இந்த விழாவில் மத்திய அமைச்சர் சர்பானந்த சோனாவால், தமிழக அமைச்சர் எ.வ.வேலு உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.



முடிந்தது 'நீட்' தேர்வு!
[Sunday 2024-05-05 18:00]

இந்தியாவில் எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். போன்ற இளநிலை மருத்துவ படிப்புகளில் சேருவதற்கு நீட் ( NEET - National Entrance Eliglibilty Entrance Exam) எனப்படும் நுழைவுத் தேர்வு ஆண்டுதோறும் நடத்தப்படுகிறது. இந்நிலையில் இந்த ஆண்டுக்கான நீட் நுழைவுத்தேர்வு தற்போது தமிழகம் உள்பட நாடு முழுவதும் தொடங்கி முடிந்துள்ளது. இன்று (05.05.2024) மதியம் 02.00 மணிக்கு தொடங்கிய நீட் நுழைவுத்தேர்வு மாலை 05.20 மணிக்கு நிறைவு பெற்றது.



ஜெயக்குமார் தனசிங் மரணம்: அடுத்தடுத்து சிக்கிய கடிதங்கள்!
[Sunday 2024-05-05 18:00]

திருநெல்வேலி மாவட்டம் திசையன்விளை பகுதியைச் சேர்ந்தவர் ஜெயக்குமார் தனசிங் (வயது 60). இவர் காங்கிரஸ் கட்சியின் திருநெல்வேலி கிழக்கு மாவட்ட தலைவராக இருந்து வந்தார். தொழிலதிபரான ஜெயக்குமார் தனசிங் கடந்த 2 ஆம் தேதி (02.05.2024) வெளியே சென்று வருவதாக வீட்டில் கூறிவிட்டு சென்றுள்ளார். அதன் பின்னர் அவர் வீடு திரும்பவில்லை எனக் கூறப்படுகிறது. அதனைத் தொடர்ந்து அவரின் குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் எனப் பலரும் பல இடங்களிலும் தேடிப் பார்த்துள்ளனர். அப்போதும் ஜெயக்குமார் கிடைக்கவில்லை. இதனையடுத்து அவருடைய மகன் கருணையா ஜப்ரின் (வயது 28) உவரி காவல்துறையில் இது தொடர்பாக கடந்த 3 ஆம் தேதி (03.05.2024) புகார் அளித்திருந்தார்.



போலந்து பெண்ணை கரம்பிடித்த தமிழக இளைஞர்!
[Sunday 2024-05-05 18:00]

தமிழ்நாட்டைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் போலந்து பெண்ணை காதலித்து கரம் பிடித்தார். கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனப்பள்ளியைச் சேர்ந்தவர் ரமேஷன். 33 வயதாகும் இவர் மேற்படிப்புக்காக போலந்து சென்றுள்ளார்.



பயங்கரவாதிகள் தாக்குதல்: விமானப்படை வீரருக்கு நேர்ந்த சோகம்!
[Sunday 2024-05-05 07:00]

ஜம்மு காஷ்மீர் மாநிலம் பூஞ்ச் மாவட்டம் சூரன்கோட் பகுதியில் உள்ள விமானப்படைத் தளத்திற்கு வீரர்கள் ஏற்றிக்கொண்டு விமானப்படைக்குச் சொந்தமான வாகனம் ஒன்று நேற்று மாலை (04.05.2024) சென்று கொண்டிருந்தது. அந்த வாகனம் சூரன்கோட் அருகே சென்று கொண்டிருந்த போது, மலைப்பகுதிகளில் தங்கியிருந்த பயங்கரவாதிகள் திடீரென்று விமானப்படை வாகனத்தை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்தினர். இந்த தாக்குதல் சம்பவத்திற்கு விமானப்படை வீரர்களும் தக்க பதிலடி கொடுத்துள்ளனர்.



“எனக்கு சொந்தமாக வீடு, சைக்கிள் கூட இல்லை” - பிரதமர் மோடி பேச்சு!
[Sunday 2024-05-05 07:00]

நாடு முழுவதும் ஒவ்வொரு கட்டங்களாக தேர்தல் நடைபெற்று வருகிறது. முதற்கட்டமாக ஏப்ரல் 19ஆம் தேதி அன்று தமிழ்நாடு, மணிப்பூர், உள்ளிட்ட 102 தொகுதிகளுக்கும் தேர்தல் நடைபெற்றது. இதனையடுத்து, இரண்டாம் கட்டமாக ஏப்ரல் 26ஆம் தேதி கேரளா, கர்நாடகா உள்ளிட்ட 89 தொகுதிகளுக்கும் தேர்தல் நடைபெற்றது. அடுத்து வரவிருக்கும் மூன்றாம், நான்காம் கட்டத் தேர்தலுக்காக, காங்கிரஸ், பா.ஜ.க உள்ளிட்ட அரசியல் கட்சிகள் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.


Vaheesan-Remax-2016
Rajeef sebarasha 2023/04/19
Asayan-Salon-2022-seithy
Logan-Kumaresh-Homelife-02-02-2021
Karan Remax-2010
Airlinktravel-2020-01-01
Mahesan-Remax-169515-Seithy
Kugeenthiran-200-2022-seithy
 gloriousprinters.com 2021
Ambikajewellers-01-08-2021-seithy
NKS-Ketha-04-11-2021
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> 12 10 2019 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Skanda Nite 2019 125th Anniversary நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா