Untitled Document
May 10, 2024 [GMT]
விபத்தில் இறந்தவர் கணவர் என்று தெரியாமல் சிகிச்சை அளித்த செவிலியர்!
[Monday 2018-09-24 08:00]
விபத்தில் இறந்தவர் கணவர் என்று தெரியாமல் சிகிச்சை அளித்த செவிலியர் பின்னர் முகத்தில் உள்ள ரத்தத்தை துடைத்து பார்த்து தனது கணவர் என அடையாளம் தெரிந்து கதறி அழுதது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டத்தை சேர்ந்த சீனிவாசன் என்பவர் திமுக மாவட்ட பிரதிநிதியாக உள்ளார்.

விபத்தில் இறந்தவர் கணவர் என்று தெரியாமல் சிகிச்சை அளித்த செவிலியர் பின்னர் முகத்தில் உள்ள ரத்தத்தை துடைத்து பார்த்து தனது கணவர் என அடையாளம் தெரிந்து கதறி அழுதது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டத்தை சேர்ந்த சீனிவாசன் என்பவர் திமுக மாவட்ட பிரதிநிதியாக உள்ளார்.

  

இவரது மனைவி சிவகாமி ஓமலூர் அரசு மருத்துவமனையில் செவிலியராக பணியாற்றி வருகிறார். இந்த நிலையில் மேச்சேரியில் இருந்து சேலம் செல்வதற்காக தனது மோட்டார் பைக்கில் சீனிவாசன் வந்து கொண்டிருந்தார். அப்போது ஓமலூர் அருகே உள்ள பச்சனம்பட்டி என்ற இடத்தில் போன் பேசுவதற்காக ரோட்டின் ஓரத்தில் இருசக்கர வாகனத்தை நிறுத்தி போன் போசிக்கொண்டிருந்தார் சீனிவாசன்.

அப்போது மேட்டூரில் இருந்து சேலம் சென்ற கார் அதிவேகமாக வந்தபோது ரோட்டின் ஓரத்தில் நின்றுகொண்டிருந்த சீனிவாசன் மீது மோதியது. இதில் அவர் தூக்கி வீசப்பட்டு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. ரத்தம் சொட்டிய நிலையில் அக்கம் பக்கத்தினர் மீட்டு ஓமலூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

சீனிவாசனுக்கு டாக்டர்கள் மற்றும் செவிலியர் சிவகாமி சிகிச்சையளித்தனர். வரும் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்தனர். அப்போது முகம் பகுதியில் அதிகமான ரத்தம் இருந்ததால் அடிப்பட்டவர் யார் என அடையாளம் தெரியவில்லை. நோயாளியின் மோதிரத்தை வைத்து அது தன் கணவர் என சிவகாமி அறிந்தார். அவர் இறந்ததை அறிந்து உடலை கட்டிப்பிடித்து கதறி அழுத காட்சி பார்ப்பவர்களை சோகத்தில் ஆழ்த்தியது.

  
   Bookmark and Share Seithy.com



பட்டாசு ஆலைகள் விதிமீறல்: உயிரிழப்பு 10ஆக உயர்ந்த நிலையில் எச்சரிக்கை!
[Friday 2024-05-10 06:00]

சிவகாசி ஸ்ரீசுதர்ஸன் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 10 ஆக உயர்ந்துள்ளது. உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ள நிலையில், வருவாய்த்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் ஆறுதல் கூறினார். மேலும், சிவகாசி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை நேரில் சந்தித்தார்.



பிரசாதம் சாப்பிட்டுவிட்டு கை கழுவ முயன்ற சிறுமிகளுக்கு நேர்ந்த சோகம்!
[Friday 2024-05-10 06:00]

நீர்நிலைகளில் சிறுவர், சிறுமிகள் முதல் பெரியவர்கள் வரை தவறி விழுந்து உயிரிழக்கும் சம்பவங்கள் தொடர்கதையாகி வரும் நிலையில் கன்னியாகுமரியில் கோவிலில் பிரசாதம் சாப்பிட்டு விட்டு குளத்தில் கை கழுவ முயன்ற சிறுமிகள் இருவர் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.



செல்போனால் சிதறிய கவனம்: தலைக்குப்புற கவிழ்ந்த அரசு பேருந்து!
[Friday 2024-05-10 06:00]

அண்மையில் ராஜபாளையத்தில் இருந்து ராமேஸ்வரத்திற்கு சென்று கொண்டிருந்த அரசு பேருந்து லாந்தை என்ற இடத்தில் பேருந்து சென்று கொண்டிருந்தபோது திடீரென பேருந்தின் முன்பக்க கண்ணாடி வெடித்துச் சிதறியது. இதில் பேருந்தின் ஓட்டுநர் முகத்தில் பட்டு காயம் ஏற்பட்டு ரத்தம் கொட்டியது. அதேபோல் பேருந்தில் முன்பக்க இருக்கையில் அமர்ந்திருந்த பெண் ஒருவரும் மயக்கம் அடைந்தார்.



பா.ஜ.க அரசை வீழ்த்த தீவிரம்: நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த ஆளுநரிடம் கோரிக்கை!
[Thursday 2024-05-09 18:00]

90 சட்டமன்றத் தொகுதிகள் கொண்ட ஹரியானா மாநிலத்தில் கடந்த 2019ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நடைபெற்றது. இந்தத் தேர்தலில், காங்கிரஸ், பா.ஜ.க மற்றும் மாநில கட்சியான ஜனநாயக ஜனதா கட்சி ஆகிய கட்சிகள் போட்டியிட்டன. இந்த மாநிலத்தில் ஆட்சி அமைக்க பெரும்பான்மைக்கு 45 எம்.எல்.ஏக்கள் தேவை என்ற பட்சத்தில் அந்தத் தேர்தல் நடைபெற்றது.



தமிழக அரசு தொடங்கிய திட்டத்தால் தொழிலதிபர்களாக மாறலாம்: என்ன திட்டம்?
[Thursday 2024-05-09 18:00]

அண்ணல் அம்பேத்கர் தொழில் முன்னோடிகள் திட்டத்தின் மூலம் 1303 ஆதி திராவிடர்கள் தொழிலதிபர்களாக மாறியுள்ளனர். தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பொருளாதாரத்தை உயர்த்துவதற்காக பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். அந்த வகையில், அண்ணல் அம்பேத்கர் தொழில் முன்னோடிகள் திட்டம் எனும் புதிய திட்டத்தை அறிவித்து, ரூ.100 கோடி அனுமதித்தார். இந்த திட்டமானது பட்டியல் இன, பழங்குடி இன இளைஞர்களைத் தொழில் முனைவோராக்கும் திட்டமாகும்.



லண்டனில் மகனுடன் இருக்கும் உதயநிதி ஸ்டாலின்!
[Thursday 2024-05-09 18:00]

தமிழக விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் லண்டனில் தனது மகனுடன் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். தமிழக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மக்களவை தேர்தலுக்காக 24 நாட்களாக தொடர்ந்து தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வந்தார். பின்னர், மக்களவை தேர்தல் வாக்குப்பதிவின் போது தேனாம்பேட்டையில் உள்ள எஸ்.ஐ.இ.டி. கல்லூரியில் மனைவியுடன் வந்து வாக்களித்தார்.



மதுரையில் நடக்க போகிறது விஜயின் முதல் அரசியல் மாநாடு!
[Thursday 2024-05-09 18:00]

நடிகர் விஜய் தனது தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் அரசியல் மாநாட்டை எப்போது நடத்துவது தொடர்பான தகவல்கள் வெளியகியுள்ளது. நடிகர்விஜய் 'தமிழக வெற்றிக் கழகம்’ என்ற பெயரில் புதிய கட்சியை தொடங்கியிருப்பதாக அறிவித்தார். அவர், வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் யாருக்கும் ஆதரவு இல்லை என்றும், 2026 -ம் ஆண்டில் தான் போட்டியிடப்போவதாகவும் தெரிவித்திருந்தார்.



அலையில் சிக்கி இளைஞர் உயிரிழப்பு: தொடரும் சோகம்!
[Thursday 2024-05-09 06:00]

அண்மையில் கடல் அலையில் இழுத்துச் செல்லப்பட்டு தந்தை, மகள் உயிரிழந்த சம்பவம் கன்னியாகுமரியில் சோகத்தை ஏற்படுத்தியிருந்த நிலையில் அதற்கு அடுத்த நாளே கன்னியாகுமரியில் சுற்றுலா சென்ற மருத்துவக் கல்லூரி மாணவர்கள் ஐந்து பேர் உயிரிழந்தது பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.



தீவட்டிப்பட்டி சம்பவம்: விசிக போராட்டம்!
[Thursday 2024-05-09 06:00]

சேலம் மாவட்டம் ஓமலூர் பகுதியில் உள்ள மாரியம்மன் கோவில் திருவிழாவில் இரு தரப்பினருக்கிடையே மோதல் ஏற்பட்டதால் கோவில் திருவிழா நிறுத்தப்பட்டது. இதனால் அந்தப் பகுதியில் ஏற்பட்ட கல்வீச்சு சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. இந்நிலையில் விசிகவினர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.



வெப்ப அலை வீச்சு காரணமாக விலக்கு கேட்கும் தூய்மை பணியாளர்கள்!
[Thursday 2024-05-09 06:00]

கரூர் மாவட்டத்திலுள்ள ஒரு மாநகராட்சி, 3 நகராட்சி, 8 பேரூராட்சி, 157 ஊராட்சிகளில் 5000-க்கும் மேற்பட்ட தூய்மை பணியாளர்கள் ஒப்பந்த, நிரந்தர அடிப்படையில் பணிபுரிந்து வருகின்றனர். இவர்களது பணி நேரம் என்பது கரூர் மாநகராட்சியில் காலை 6.00 மணி முதல் மதியம் 2 மணி வரையும், நகராட்சி, பேரூராட்சிகளில் காலை 6.00 மணி முதல் 11 மணி வரையும் மீண்டும் மதியம் 2:00 மணி முதல் மாலை 5.00 மணி வரையும், ஊராட்சிகளில் காலை 6.00 மணி முதல் மதியம் 2.00 மணி மற்றும் காலை 09.00 மணி முதல் மாலை 5.00 மணி என உள்ளது.



அரவிந்த் கெஜ்ரிவாலுக்காக பொதுநல மனு: அபராதம் விதித்து அதிரடி காட்டிய நீதிமன்றம்!
[Wednesday 2024-05-08 18:00]

டெல்லி 32 மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டு 849 சில்லறை விற்பனை நிலையங்களுக்கு மதுபானம் விற்பனை செய்ய உரிமம் வழங்கியதில் முறைகேடு நடந்ததாகவும், 100 கோடி ரூபாய் கைமாறியதாகவும் புகார் எழுந்தது. இது தொடர்பான வழக்கில் அமலாக்கத்துறை விசாரணை நடத்தி வருகிறது. இந்த வழக்கில் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டு திகார் சிறையில் இருந்து வருகிறார். அமலாக்கத்துறை கைது செய்யப்பட்டதை எதிர்த்து அரவிந்த் கெஜ்ரிவால் சார்பில் டெல்லி உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது. மேலும், தனக்கு ஜாமீன் வழங்கும்படி அரவிந்த் கெஜ்ரிவால் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இது தொடர்பான மனு உச்சநீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது.



கொடூரக் கொலை: கதைகட்டிய போலீஸ் - புலனாய்வில் அம்பலமான உண்மை!
[Wednesday 2024-05-08 18:00]

திருவள்ளூர் மாவட்டம், ஆவடி மாநகர காவல் எல்லைக்குட்பட்ட மீஞ்சூர் காந்தி சாலை, பஜார் வீதியில் புதிய வசந்த் அண்ட் கோ அருகே, மருத்துவமனையில் பயன்படுத்தப்படும், பச்சை நிற பெட்சீட்டில் சுற்றப்பட்ட நிலையில் தலை சிதைக்கப்பட்டு, கொடூரமாகக் கொலை செய்யப்பட்ட நிலையில் அடையாளம் தெரியாத ஆண் பிணம் கிடந்தது. அருகே துண்டாக்கப்பட்ட கைகளும் இருந்தன. கடந்த ஏப்ரல் 28-ஆம் தேதி, ஞாயிற்றுக்கிழமை அதிகாலையில், பஜார் சாலை வழியே வந்த பொதுமக்கள் இதைக் கண்டு அலறியடித்துக் கொண்டு ஓடினர். தகவலறிந்த மீஞ்சூர் போலீசார் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக சென்னை ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.



குறைபாடுள்ள பிள்ளையை முதலைக்கு இரையாக்கிய கொடூர தாய்!
[Wednesday 2024-05-08 18:00]

தங்கள் பிள்ளைக்கு பேச்சுத்திறனில் குறைபாடு உள்ளதால் அது தொடர்பாக ஒரு கணவன் மனைவிக்கிடையே அடிக்கடி சண்டை ஏற்பட்ட நிலையில், பிள்ளையை முதலை வாழும் கால்வாயில் வீசியுள்ளார் பெண்ணொருவர். இந்தியாவின் கர்நாடகா மாநிலத்திலுள்ள Dandeli என்னுமிடத்தில் வாழ்ந்துவருபவர்கள் சாவித்ரி, ரவி குமார் தம்பதியர் (Savitri Kumar Shelle, 26, Ravi Kumar Shelle, 27). தம்பதியரின் மகன் வினோத், பேச்சுத்திறன் குறைபாடு கொண்டவன். மகனுடைய குறைபாடு காரணமாக தம்பதியருக்குள் அடிக்கடி சண்டை வருவதுண்டாம்.



300 பணியாளர் ஒரே நேரத்தில் விடுப்பு: குழப்பத்தில் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்!
[Wednesday 2024-05-08 18:00]

விமான பணியாளர்களின் திடீர் விடுப்பு காரணமாக 86 ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானங்கள் கடைசி நேரத்தில் ரத்து செய்யப்பட்டுள்ளது. கடந்த புதன்கிழமை அன்று, குறைந்தது 86 ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானங்கள் திடீரென ரத்து செய்யப்பட்டதால், உள்நாட்டு மற்றும் சர்வதேச விமானப் போக்குவரத்தில் பெரும் பாதிப்பு ஏற்பட்டது.



'திமுகவின் முகவரியே நில அபகரிப்பு தான்' -ஆர்.பி.உதயகுமார் விமர்சனம்!
[Wednesday 2024-05-08 06:00]

திமுகவின் முகவரியே நில அபகரிப்பு தான் என முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் விமர்சனம் செய்துள்ளார். மதுரையில் செய்தியாளர்களைச் சந்தித்த முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமாரிடம் செய்தியாளர்கள் ஊட்டி, கொடைக்கானல் உள்ளிட்ட பகுதிகளுக்கு இ-பாஸ் நடைமுறைக்கு வந்துள்ளது குறித்து கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த அவர், ''ஒரே நேரத்தில் எல்லாரும் ஒரே இடத்திற்கு போகும் பொழுது அதை முறைப்படுத்த வேண்டியது அவசியம்.



“ராமர் கோவிலை இப்படியா கட்டுவது?” - இந்தியா கூட்டணி எம்.பி. பேச்சால் சர்ச்சை!
[Wednesday 2024-05-08 06:00]

உத்திரப் பிரதேச மாநிலம் அயோத்தியில் 2,000 கோடி மதிப்பில் மிகப் பிரம்மாண்டமாக ராமர் கோவில் கட்டப்பட்டுள்ளது. இக்கோவிலுக்காக ஒதுக்கப்பட்ட 70 ஏக்கர் நிலத்தில் 2.7 ஏக்கர் நிலத்தில் மட்டுமே ராமர் கோவில் கட்டப்பட்டது. இதனையடுத்து பிரதமர் மோடி தலைமையில் கடந்த மாதம் 22 ஆம் தேதி ராமர் கோவில் திறப்பு விழா நடைபெற்றது.



நீட் தேர்வை அமெரிக்க நிறுவனம் ஏன் நடத்த வேண்டும்? - சீமான் கேள்வி!
[Wednesday 2024-05-08 06:00]

நீட் தேர்வு குறித்து நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் காட்டமாக விமர்சித்துள்ளார். இயக்குநர் அமீர் நடிப்பில் உருவாகி உள்ள "உயிர் தமிழுக்கு" என்ற திரைப்படத்தின் நிகழ்ச்சி அண்மையில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நாம் தமிழர் கட்சி சீமான், நீட் தேர்வு குறித்து கருத்து தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக பேசிய அவர், "நீட் தேர்வானது போலி மருத்துவர்களை தான் உருவாக்குகிறது.



உ.பி.யில் வாக்களிக்க வந்த இஸ்லாமிய பெண்கள் மீது தாக்குதல்!
[Tuesday 2024-05-07 18:00]

நாடு முழுவதும் ஒவ்வொரு கட்டங்களாக தேர்தல் நடைபெற்று வருகிறது. முதற்கட்டமாக ஏப்ரல் 19ஆம் தேதி அன்று தமிழ்நாடு, மணிப்பூர், உள்ளிட்ட 102 தொகுதிகளுக்கும் தேர்தல் நடைபெற்றது. இதனையடுத்து, இரண்டாம் கட்டமாக ஏப்ரல் 26ஆம் தேதி கேரளா, கர்நாடகா உள்ளிட்ட 89 தொகுதிகளுக்கும் தேர்தல் நடைபெற்றது. டீ தொடர்ந்து உத்தரப்பிரதேசம் - 10, மேற்கு வங்கம் - 4 ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசத்திற்கு உட்பட்ட அனந்த்நாக் - ரஜௌரி - 1, தாத்ரா நகர் ஹவேலி, டாமன் டையூ ஆகிய தொகுதிகளிலும் மூன்றாம் கட்ட தேர்தல் நடைபெற்று வருகிறது.



பிரஜ்வல் ரேவண்ணா ஆபாச வீடியோ விவகாரம்: மெளனம் கலைத்த பிரதமர் மோடி!
[Tuesday 2024-05-07 18:00]

முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் பேரனும், ஹாசன் மக்களவைத் தொகுதியின் எம்.பி.யுமான பிரஜ்வல் ரேவண்ணா பல பெண்களைப் பாலியல் வன்கொடுமை செய்ததாகப் புகார் எழுந்தது. அதாவது தன்னிடம் உதவி கேட்டு வந்த ஏராளமான பெண்களை பிரஜ்வல் ரேவண்ணா பாலியல் தேவைகளுக்காகப் பயன்படுத்திக் கொண்டதாகப் பரபரப்பு குற்றச்சாட்டு எழுந்தது. மேலும் பிரஜ்வல் ரேவண்ணா பல பெண்களுடன் இருப்பது போன்ற ஆபாச காட்சிகள் வெளியாகி மக்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்தப் புகார் குறித்த நெருக்கடி அதிகரிப்பால் பிரஜ்வல் ரேவண்ணா கர்நாடகாவில் இருந்து ஜெர்மனிக்கு தப்பியோடியதாகவும் தகவல் வெளியாகி இருந்தது.



கணித பாடத்தில் தோல்வியடைந்ததால் பிளஸ் 2 மாணவி விபரீத முடிவு!
[Tuesday 2024-05-07 18:00]

கணித பாடத்தில் தோல்வியடைந்ததால் பன்னிரண்டாம் வகுப்பு மாணவி ஒருவர் விபரீத முடிவு எடுத்துள்ளார். தமிழக மாவட்டமான கடலூர், விருத்தாசலம் அடுத்த கோட்டேரி கிராமத்தை சேர்ந்தவர் ஆறுமுகம். இவரது மகள் அபிநயா (வயது 17) பேர்பெரியான்குப்பம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் படித்து வந்தார்.


Airlinktravel-2020-01-01
Vaheesan-Remax-2016
Rajeef sebarasha 2023/04/19
Logan-Kumaresh-Homelife-02-02-2021
Mahesan-Remax-169515-Seithy
NKS-Ketha-04-11-2021
Asayan-Salon-2022-seithy
 gloriousprinters.com 2021
Ambikajewellers-01-08-2021-seithy
Kugeenthiran-200-2022-seithy
Karan Remax-2010
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> 12 10 2019 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Skanda Nite 2019 125th Anniversary நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா