Untitled Document
May 2, 2024 [GMT]
ஈழத்தமிழர்களை ஈவிரக்கமின்றி திட்டமிட்டு படுகொலை செய்தவர் ராஜபக்ச: - வைகோ
[Saturday 2018-10-27 07:00]
இலங்கையின் பிரதமராக பதவியேற்ற ராஜபக்ச ஈழத்தமிழர்களை ஈவிரக்கமின்றி திட்டமிட்டு படுகொலை செய்தவர் என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ அறிக்கை வெளியிட்டுள்ளார். ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு அரசில் இருந்து வெளியேறிய சிறிசேனா கட்சி, திடீரென மகிந்த ராஜபக்சவுடன் கூட்டணி அமைத்ததால், இரவோடு இரவாக ராஜபக்ச இலங்கையின் புதிய பிரதமராக பதவியேற்றார்.

இலங்கையின் பிரதமராக பதவியேற்ற ராஜபக்ச ஈழத்தமிழர்களை ஈவிரக்கமின்றி திட்டமிட்டு படுகொலை செய்தவர் என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ அறிக்கை வெளியிட்டுள்ளார். ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு அரசில் இருந்து வெளியேறிய சிறிசேனா கட்சி, திடீரென மகிந்த ராஜபக்சவுடன் கூட்டணி அமைத்ததால், இரவோடு இரவாக ராஜபக்ச இலங்கையின் புதிய பிரதமராக பதவியேற்றார்.

  

இதற்கு தமிழககத்தை சேர்ந்த பல்வேறு மூத்த அரசியல்வாதிகளும் தங்களது கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில், இலங்கைத் தீவில் மிகக் கொடூரமான ஈழத் தமிழ் இனப்படுகொலையைத் திட்டமிட்டு ஈவு இரக்கமின்றி நடத்திய கொடிய குற்றவாளி அதிபர் பொறுப்பிலிருந்த மகிந்த ராஜபக்சே என்பதை ஐ.நா.மன்றத்தின் பொதுச்செயலாளர் 2010 நியமித்த மார்சுகி தாருஸ்மன் தலைமையிலான குழுவின் ஆய்வு அறிக்கை உலகத்துக்கு அம்பலப்படுத்தியது.

குழந்தைகள் முதல் வயோதிகர்கள் வரை ஒன்றரை இலட்சம் தமிழர்கள் கோரமாகக் கொல்லப்பட்டனர். ஹிட்லரின் நாஜிகள் இரண்டாம் உலகப்போரின் போது நடத்திய படுகொலைகளுக்குப் பிறகு ராஜபக்சே அரசு நடத்திய இனப் படுகொலையில் கர்ப்பிணித் தாய்மார்களும் கொல்லப்பட்டனர். எண்ணற்ற தமிழ்ப் பெண்கள் கற்பழிக்கப்பட்டுக் கொல்லப்பட்டனர். ஏராளமான இளைஞர்கள் சித்ரவதை செய்து அழிக்கப்பட்டனர்.

இந்த இனப்படுகொலையை இலங்கை அதிபர் பொறுப்பில் இருந்த ராஜபக்சே நடத்தியபோது, அதனைச் செயல்படுத்திய பாதுகாப்புத் துறை அமைச்சராக இருந்தவர்தான் மைத்திரிபால சிறிசேனா ஆவார். இருவருமே தமிழ் இனக்கொலையின் கூட்டுக் குற்றவாளிகள் ஆவார்கள்.

2015 தேர்தலின்போது மைத்திரிபால சிறிசேனா ஐக்கிய தேசியக் கட்சியுடன் சேர்ந்து ஒரு நாடகம் நடத்தினார். ஈழத் தமிழ் இனத்தையே கருவறுத்துப் பூண்டோடு அழித்துவிட வேண்டும் என்ற வன்மம் கொண்டவர்தான் ராஜபக்சே என்பதை மானத் தமிழர்கள் ஒருபோதும் மறக்க மாட்டார்கள். இலங்கை அரசியலில் நடைபெறுகிற சதுரங்கப் போட்டியில், சிங்கள அரசியல்வாதிகள் அனைவருமே ஈழத் தமிழ் இனத்தின் தனித்தன்மையை அழிக்கும் குறிக்கோளைக் கொண்டவர்கள்தாம். 015 ஆம் ஆண்டு ஐ.நா.வின் மனித உரிமைக் கவுன்சிலில் கொண்டுவரப்பட்ட தீர்மானத்தின்படி இலங்கையில் நடைபெற்ற தமிழர் படுகொலைகள் குறித்து விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும், அதில் உலக நாடுகளின் நீதிபதிகள், குறிப்பாக காமன்வெல்த் நாடுகளின் நீதிபதிகள் இடம் பெறுவதற்கு இலங்கை முதலில் எதிர்ப்புக் காட்டியபோதும், பின்னர் ஒப்புக்கொண்டது. ஆனால் அப்படிப்பட்ட நீதி விசாரணை எதுவும் கடந்த மூன்றாண்டு காலத்தில் நடைபெறவே இல்லை.

போரின்போது காணாமல் போன தமிழர்களைக் கண்டுபிடிக்கவும், விபரங்களை அறியவும் ஆணையம் அமைப்பதாக ஒப்புக்கொண்ட இலங்கை அரசு, கண் துடைப்புக்காக ஒரு ஆணையத்தை அமைத்ததே தவிர, அது செயல்படவே இல்லை. அரசாங்கத்தால் பறிக்கப்பட்ட தமிழர்களின் நிலங்களை தமிழர்களிடம் ஒப்படைக்கவில்லை. உலகத்தை ஏமாற்றுவதற்காக இதுகுறித்துப் பொய்யான தகவலையே சிங்கள அரசு கூறியது.

ஈழத்தமிழர் தாயகத்தில், குறிப்பாக வடக்கு மாகாணத்தில் குவிக்கப்பட்டு இருக்கின்ற இராணுவத்தை திரும்பப் பெறுவதாக ஒப்புக்கொண்ட சிங்கள அரசு, அதனைச் செயல்படுத்தவே இல்லை. ஐந்து தமிழர்களுக்கு ஒரு சிங்கள இராணுவச் சிப்பாய் என்கிற வீதத்தில் தமிழர் தாயகமே சிங்கள இராணுவ முகாம் ஆக்கப்பட்டுவிட்டது. அரசியல் சட்டத் திருத்தம், அதிகாரப் பகிர்வு என்று 2015 இல் உலக நாடுகளை ஏமாற்றிய சிங்கள அரசு, அதற்கான எந்த முயற்சியிலும் ஈடுபடவில்லை. 2015 இல் மனித உரிமைக் கவுன்சிலில் கொண்டுவரப்பட்ட தீர்மானத்தின் கால அவகாசத்தை நீட்டிக்க வேண்டும் என்ற சிங்கள அரசின் கோரிக்கையை மனித உரிமைக் கவுன்சில் ஏற்றுக்கொண்ட போதிலும், 2019 மார்ச்சில் அந்தக் கால அவகாசம் முடிவடைய இருக்கிறது. மாலத் தீவு தேர்தலில் நடைபெற்ற அதிகார மாற்றத்தால் ஆத்திரமடைந்த சீனா, இலங்கையில் தனது ஆதிக்கத்தை வலுப்படுத்திக்கொள்வதற்காக ஏற்கனவே அம்மன்தோட்டா துறைமுகத்தைப் பெற்றதோடு, மீண்டும் ராஜபக்சே கைகளில் அதிகாரம் வரவேண்டும் என்று திட்டமிட்டுக் காய் நகர்த்துகிறது.

தமிழ் இனக்கொலையாளி ராஜபக்சே இந்தியாவுக்கு வந்து, பிரதமர் மோடியைச் சந்தித்ததும், மூன்று நாட்கள் டெல்லியில் முகாமிட்டதும் பல்வேறு சந்தேகங்களை ஏற்படுத்துகிறது. தமிழர்களின் மனக்காயங்களுக்கு மருந்திட்டதைப் போல வடக்கு மாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன் அவர்கள், வடக்கு மாகாண சபையில் வரலாற்றுச் சிறப்புமிக்கத் தீர்மானத்தை எந்த எதிர்ப்பும் இன்றி ஒருமனதாக நிறைவேற்றினார். அத்தீர்மானத்தின்படி, சிங்கள இராணுவமும், சிங்களக் குடியேற்றங்களும் தமிழர் தாயகத்திலிருந்து வெளியேற்றப்பட்டு, நடைபெற்ற இனக்கொலை குறித்து பன்னாட்டு நீதி விசாரணையும், தமிழ் ஈழத்துக்கான பொதுவாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்பதாகும்.

தாய்த் தமிழகத்தில் உள்ள தமிழர்களும், உலக நாடுகளில் வாழ்கிற புலம்பெயர் ஈழத் தமிழர்களும் இலக்காகக் கொள்ளவேண்டியது எல்லாம், நடைபெற்ற இனக்கொலைக்கு பன்னாட்டு நீதிப் பொறிமுறை அமைப்பதும், தமிழர் தாயகத்திலிருந்து இராணுவத்தையும், சிங்களக் குடியேற்றங்களை வெளியேற்றச் செய்வதும், சுதந்திரத் தமிழ் ஈழ நாடு அமைப்பதற்காக இலங்கையில் தமிழர் தாயகத்திலும், உலகெங்கும் வாழும் ஈழத் தமிழர்களிடத்திலும் பொது வாக்கெடுப்பு நடத்துவதும்தான் என்பதை உணர்ந்து, அந்தக் கடமையை மனதில் கொண்டு செயல்பட வேண்டும் என்பதுதான்.

இலங்கை அரசியல் சட்டத்தில் கொண்டுவரப்பட்ட 1 9 ஆவது திருத்தத்தின்படி, ராஜபக்சே நியமனம் செல்லாது என்றும், தானே பிரதமர் என்றும் ரணில் விக்கிரமசிங்கே கூறி இருக்கிறார். எது எப்படி இருப்பிலும் சிங்களர்கள் எந்தக் கட்சியைச் சார்ந்தவராக இருந்தாலும் தமிழ் இன அழிப்பையே நோக்கமாகக் கொண்டவர்கள் என்பதும், தமிழர்களுக்கு நீதி கிடைக்காது என்பதும் உண்மையாகும். இலட்சக்கணக்கான ஈழத் தமிழர்கள் சிங்கள அரசால் கொல்லப்பட்டதையும், அதனைத் தடுப்பதற்காக முத்துக்குமார் உள்ளிட்ட 19 தமிழர்கள் தங்கள் உயிர்களை நெருப்புக்குத் தாரைவார்த்துப் பலியாகி தியாகம் செய்து மடிந்ததையும் மனதில் கொண்டு தமிழர்கள் செயலாற்ற வேண்டும். இலங்கை அரசாங்கத்தினுடைய மோசடியையும், சதி நாடகத்தையும் உலக நாடுகள் உணர்ந்துகொள்ள வேண்டும்.

இந்தியாவில் ஆட்சிப் பொறுப்புக்கு வந்த நரேந்திர மோடி அரசு தொடக்கத்திலிருந்தே மனித உரிமைக் கவுன்சிலிலும், ஈழத்தமிழர்கள் குறித்த அனைத்துப் பிரச்சினைகளிலும் சிங்கள அரசுக்கு ஆதரவாகவே நடந்து வருகிறது என்பதையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

  
   Bookmark and Share Seithy.com



உலகில் அதிக சம்பளம் வாங்கும் இந்தியர்: யார் அந்த தமிழர்?
[Thursday 2024-05-02 06:00]

உலகின் அதிக சம்பளம் வாங்கும் இந்தியர் யார் தெரியுமா? அது வேறு யாரும் இல்லை, நம்ம சொந்த தமிழர் சுந்தர் பிச்சை தான்! கூகுள் நிறுவனத்தின் CEO ஆக இருக்கும் சுந்தர் பிச்சை, வெளிநாடுகளில் வேலை செய்யும் இந்தியர்கள் மற்றும் இந்திய வம்சாவளிகளில் அதிக சம்பளம் வாங்குபவர் என்ற பெருமைக்குரியவர்.



"2 எருமை மாடுகள் இருந்தால் காங்கிரஸ் ஆட்சியில் ஒன்றை பறித்துக்கொள்வார்கள்" - பிரதமர் மோடி பேச்சு!
[Thursday 2024-05-02 06:00]

உங்களிடம் 2 எருமை மாடுகள் இருந்தால், காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்று ஆட்சிக்கு வந்தால் ஒரு எருமை மாட்டை உங்களிடம் இருந்து பறித்துவிடுவார்கள் என குஜராத்தில் மாடுகள் வளர்க்கும் மக்கள் அதிகம் உள்ள பகுதியில் நடைபெற்ற தேர்தல் பிரசாரத்தில் பிரதமர் மோடி பேசியுள்ளார். நாடு முழுவதும் லோக்சபா தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற்று வருகிறது. முதற்கட்டமாக தமிழ்நாடு, புதுச்சேரி உள்பட 21 மாநிலங்களில் உள்ள 102 தொகுதிகளுக்கு கடந்த ஏப்ரல் 19ஆம் தேதி லோக்சபா தேர்தல் நடந்தது.



நிலவின் தென்துருவத்தில் தண்ணீர்: உறுதி செய்த இஸ்ரோ!
[Thursday 2024-05-02 06:00]

இந்தியா சார்பில் நிலவின் தென் துருவத்தை ஆராயக் கடந்த ஜூலை 14 ஆம் தேதி விண்ணில் பாய்ந்த சந்திரயான் - 3 நிலவின் ஈர்ப்பு விசைக்குள் செலுத்தப்பட்டு நிலவுக்கு மிக அருகில் சென்றதைத் தொடர்ந்து கடந்த வருடம் ஆகஸ்ட் 23ம் தேதி மாலை 6.2 மணிக்கு நிலவின் தென் துருவத்தில் இறங்கி சாதனை படைத்தது. அதனைத் தொடர்ந்து லேண்டரில் இருந்த ரோவர் வெளியே வந்து நிலவில் ஆய்வுகளை செய்து வருகிறது.



ரஷ்யாவிலிருந்து வந்த இ-மெயில்: தகிக்கும் டெல்லி!
[Wednesday 2024-05-01 16:00]

டெல்லியில் 80க்கும் மேற்பட்ட பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. டெல்லியில் உள்ள மூன்று பள்ளிக்கு இன்று காலை இ - மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து பள்ளிக்கு வந்த மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் பள்ளியிலிருந்து வெளியேற்றப்பட்டனர். உடனடியாக சம்பந்தப்பட்ட பள்ளிகளுக்கு வந்த வெடிகுண்டு நிபுணர்கள் சோதனை நடத்தினர். இதனால் அங்குப் பரபரப்பு ஏற்பட்டது.



திட்டவட்டமாக மறுத்த கர்நாடக அரசு: உச்சநீதிமன்றத்தை நாடும் தமிழக அரசு!
[Wednesday 2024-05-01 16:00]

காவிரியில் இருந்து தமிழகத்திற்குத் தரவேண்டிய தண்ணீரை தர கர்நாடக அரசு தொடர்ந்து மறுத்து வருகிறது. இந்த நிலையில் காவிரி ஒழுங்காற்றுக்குழு கூட்டம் தலைவர் வினீத் குப்தா தலைமையில் காணொலி வாயிலாக நடைபெற்றது. இந்த கூட்டத்தில் தமிழகம் உள்ளிட்ட 4 மாநில அதிகாரிகள் கலந்துகொண்டனர்.



கோவிஷீல்டு தடுப்பூசியால் ஏற்படும் பக்கவிளைவுகள்: இந்திய மருத்துவர்கள் சொல்வது என்ன?
[Wednesday 2024-05-01 16:00]

இந்தியாவில் சுமார் 175 கோடிக்கும் அதிகமான கோவிஷீல்டு தடுப்பூசிகள் செலுத்தப்பட்ட நிலையில், பக்கவிளைவுகள் ஏற்படும் என்று தயாரிப்பு நிறுவனம் ஒப்புக் கொண்டுள்ளது. சீன நாட்டில் உருவான கொரோனா வைரஸ் உலகம் முழுவதுமாக பரவி பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது. இந்த கொரோனா பாதிப்பை தடுப்பதற்காக பல்வேறு ஆராய்ச்சிகள் நடத்தப்பட்டன.



வரதட்சணை கொடுமை: விவாகரத்து வாங்கிய மகளை மேள தாளத்துடன் வரவேற்ற தந்தை!
[Wednesday 2024-05-01 16:00]

கணவரிடம் இருந்து விவாகரத்து வாங்கிக் கொண்டு வந்த மகளை மேளதாளத்துடன் தந்தை வரவேற்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்திய மாநிலமான உத்தர பிரதேசத்தைச் சேர்ந்தவர் அனில்குமார். இவருடைய மகள் ஊர்வி (36) கம்ப்யூட்டர் என்ஜினீரிங் படித்தவர். இவர், கடந்த 2016 -ம் ஆண்டு கணினி பொறியாளர் ஒருவரை திருமணம் செய்து டெல்லியில் வாழ்ந்து வந்தார். இவர்களுக்கு பெண் குழந்தை உள்ளது.



2,976 ஆபாச வீடியோ: பிரஜ்வல்லின் அந்தரங்க பென்டிரைவ் மாஜி டிரைவரிடம் சிக்கியது எப்படி?
[Wednesday 2024-05-01 07:00]

முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் பேரனும், எம்பியுமான பிரஜ்வல் ரேவண்ணா பெண்களுடன் நெருக்கமாக இருக்கும் ஆபாச வீடியோக்கள் வெளியாகி பெரும் பரபரப்பை கிளப்பி உள்ளன. இந்நிலையில் தான் ஆபாச வீடியோ என்பது பிரஜ்வல்லின் முன்னாள் டிரைவர் கார்த்தி மூலம் தான் வெளியாகி உள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் தான் கார்த்திக்கிடம் ஆபாச வீடியோ எப்படி சிக்கியது? பிரஜ்வல் ரேவண்ணா இடையே என்ன பிரச்சனை? எப்படி வீடியோ வெளியானது என்பது பற்றி இங்கு பார்ப்போம்.



மூன்றாவது முறையாக ஸ்ட்ராங் ரூம் சிசிடிவி கேமரா செயலிழப்பு: எங்கு தெரியுமா?
[Wednesday 2024-05-01 07:00]

18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக கடந்த 19ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. முதற்கட்டமாக தமிழகம் உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது. இதனையடுத்து வாக்கு பெட்டிகள் அனைத்தும் ஸ்ட்ராங் ரூம் எனப்படும் ஐந்து அடுக்கு பாதுகாப்பு அறைக்குள் வைக்கப்பட்டுள்ளன.



ஏற்காடு பேருந்து விபத்து: உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரிப்பு!
[Wednesday 2024-05-01 07:00]

ஏற்காடு மலைப்பகுதியில் சென்று கொண்டிருந்த தனியார் பேருந்து கட்டுப்பாட்டை இழந்து பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. இந்தச் சம்பவத்தில் 20 பேர் பலத்த காயங்களுடன் மீட்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.



ஆபாச வீடியோ விவகாரம்: “நாங்கள் நடவடிக்கை எடுக்க வேண்டியதில்லை” - அமித்ஷா!
[Tuesday 2024-04-30 18:00]

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் நாடு முழுவதும் நடைபெற்று வருகிறது. அதன்படி முதற்கட்டமாக கடந்த 19ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது. இதனையடுத்து 13 மாநிலங்களில் உள்ள 88 மக்களவைத் தொகுதிகளில் கடந்த 26ஆம் தேதி 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்றது. மொத்தம் 28 தொகுதிகள் கொண்ட கர்நாடகா மாநிலத்தில் ஏப்ரல் 26 ஆம் தேதி 14 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடந்து முடிந்துள்ளது. மே 7 ஆம் தேதி மற்ற 14 தொகுதிகளில் தேர்தல் நடைபெறவிருக்கிறது.



நிர்மலா தேவிக்கு தண்டனை அறிவிப்பு!
[Tuesday 2024-04-30 18:00]

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையைச் சேர்ந்த கல்லூரி பேராசிரியை நிர்மலா தேவி, மாணவிகளைத் தவறான பாதைக்கு அழைத்ததாக குற்றச் சாட்டு எழுந்தது. இதனைத் தொடர்ந்து இது குறித்து வழக்குப்பதிவு செய்யப்பட்டது. பின்னர் கடந்த 2018 ஆம் ஆண்டு ஏப்ரல் 16 ஆம் தேதி நிர்மலாதேவி கைது செய்யப்பட்டார். மேலும் மதுரை காமராஜர் பல்கலைக்கழகப் பேராசிரியர் முருகன் மற்றும் ஆய்வு மாணவர் கருப்பசாமியும் கைது செய்யப்பட்டனர். இவ்வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது. அப்போது சிபிசிஐடி எஸ்.பி.யாக இருந்த ராஜேஸ்வரி தலைமையில் 9 தனிப்படையினர் விசாரணை மேற்கொண்டனர். இந்த வழக்கை ஸ்ரீவில்லிபுத்தூர் மகிளா நீதிமன்றம் தொடர்ந்து விசாரணை நடத்தியது.



செந்தில் பாலாஜி வழக்கு: அமலாக்கத்துறைக்கு நீதிமன்றம் அதிரடி உத்தரவு!
[Tuesday 2024-04-30 18:00]

போக்குவரத்துத்துறையில் சட்ட விரோதமாகப் பணப்பரிமாற்றம் செய்ததாகப் பதியப்பட்ட வழக்கில், கடந்த ஆண்டு ஜூன் மாதம் 14 ஆம் தேதி சட்ட விரோதப் பணப்பரிமாற்றத் தடுப்பு சட்டத்தின் கீழ், அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி, அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு நீதிமன்றக் காவலில் இருந்து வருகிறார். இந்த வழக்கு தொடர்பாகச் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் செந்தில் பாலாஜிக்கு எதிராகக் கடந்த ஆண்டு ஆகஸ்ட் 12 ஆம் தேதி குற்றப்பத்திரிகை மற்றும் வழக்கு தொடர்பான ஆவணங்களை அமலாக்கத்துறையினர் தாக்கல் செய்தனர்.



மணிப்பூரில் 2 பெண்கள் நிர்வாணப்படுத்தப்பட்ட சம்பவம்: குலைநடுங்க செய்யும் குற்றப்பத்திரிகை!
[Tuesday 2024-04-30 18:00]

நாட்டையே உலுக்கிய மணிப்பூரின் 2 பெண்கள் நிர்வாணமாக்கப்பட்டு இழுத்துச் செல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக சிபிஐ தாக்கல் செய்த குற்றப்பத்திரிகையில் பல அதிர்ச்சித் தகவல்கள் இடம் பெற்றுள்ளன. மணிப்பூரில் குக்கி மற்றும் மைத்தேயி இனப் பழங்குடிகளிடையே கடந்த ஆண்டு மிகப் பெரும் வன்முறை வெடித்தது. இந்த வன்முறை சம்பவங்கள் தற்போது வரை ஓயவில்லை. இந்த வன்முறையின் உச்சமாக இரு குக்கி இனப் பழங்குடிப் பெண்கள் நிர்வாணமாக இழுத்துச் செல்லப்பட்டது ஒட்டுமொத்த தேசத்தையே உலுக்கி எடுத்தது. இந்த சம்பவம் தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்தி வருகிறது.



பெண் வயிற்றிலிருந்து 5 கிலோ சினைப்பைக் கட்டி அகற்றம்: அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவர்கள் சாதனை!
[Tuesday 2024-04-30 06:00]

பெண்ணின் வயிற்றில் இருந்த 5 கிலோ சினைப்பைக் கட்டியை அகற்றி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவர்கள் சாதனை படைத்துள்ளனர். சிதம்பரத்தில் உள்ள கடலூர் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு, மயிலாடுதுறை மாவட்டம் அளக்குடி கிராம பகுதியைச் சேர்ந்த வீரமணி மனைவி சசிகலா(38) வயிற்று வலி காரணமாக அனுமதிக்கப்பட்டார். அப்போது மருத்துவர்கள் பரிசோதனை செய்து போது அவரது கருப்பையில் 22 செ.மீ நீள அகலத்தில் 5.1 கிலோ சினைப்பைக் கட்டி இருப்பது தெரிய வந்தது.



தடுமாறிய ஹெலிகாப்டர்: உயிர் தப்பிய அமித்ஷா!
[Tuesday 2024-04-30 06:00]

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக கடந்த 19ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது.



பிரதமர் மோடிக்கு எதிரான மனு தள்ளுபடி!
[Tuesday 2024-04-30 06:00]

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டியுள்ளது. அதன்படி கடந்த 19 ஆம் தேதி (19.04.2024) தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. அதில் முதற்கட்டமாக தமிழகம் உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு கடந்த 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து நாடு முழுவதும் 13 மாநிலங்களில் உள்ள 87 மக்களவைத் தொகுதிகளில் கடந்த 26 ஆம் தேத் (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்றது.



பெண்களுக்கு ரூ.25 லட்சம் வரை மருத்துவ காப்பீடு: ராகுல் காந்தி உறுதி!
[Monday 2024-04-29 18:00]

காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வந்தால் பெண்களுக்கு ரூ.25 லட்சம் மதிப்பில் மருத்துவ காப்பீடு வழங்கப்படும் என்றும், எனவே தங்கள் தாலியை அவர்கள் அடகு வைக்க தேவையில்லை என்றும் காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி கூறியுள்ளார். கடந்த 2019ம் ஆண்டை போலவே இந்த முறையும் நாடு முழுவதும் 7 கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது. மொத்தம் உள்ள 543 லோக்சபா தொகுதிகளில் முதற்கட்டமாக 21 மாநிலங்களில் 102 தொகுதிகளுக்கு ஏப்ரல் 19ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது.



வேட்புமனு வாபஸ் பெற சிறிது நேரம் இருந்தபோது இந்தூர் காங்கிரஸ் வேட்பாளர் பாஜகவில் சேர்ப்பு!
[Monday 2024-04-29 18:00]

காங்கிரஸ் கட்சிக்கு பெரும் பின்னடைவாக இந்தூரில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் அக்ஷய் பாம், கடைசி நேரத்தில் தனது வேட்புமனுவை வாபஸ் பெற்றுவிட்டு பாஜகவில் ஐக்கியமானார். நமது நாட்டில் மொத்தம் ஏழு கட்டங்களாக லோக்சபா தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அதில் 2 கட்ட வாக்குப்பதிவு நடந்து முடிந்துவிட்டது. வரும் வாரங்களில் இன்னும் 5 கட்ட வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.



"முதலிடம் பிடிக்காமலேயே இருந்திருக்கலாம்" - தோற்றத்தால் கேலி செய்யப்பட்ட மாணவி உருக்கம்!
[Monday 2024-04-29 18:00]

உத்தர பிரதேசத்தில் 10-ஆம் பொதுத்தேர்வில் மாநில அளவில் முதலிடம் பிடித்த மாணவி, இப்போது அதற்காக வருத்தப்படும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார். பிராச்சி நிகம் (Prachi Nigam), சமீபத்தில் ஊடகங்களில் மிகவும் பிரபலமாக வலம்வந்த பெயர் இது. உத்தரபிரதேசத்தில் பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் வந்தபோது, ​​98.5 மதிப்பெண்கள் பெற்று மாநிலத்திலேயே முதலிடம் பிடித்து எல்லோரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கினார்.


Rajeef sebarasha 2023/04/19
NKS-Ketha-04-11-2021
Vaheesan-Remax-2016
 gloriousprinters.com 2021
Airlinktravel-2020-01-01
Mahesan-Remax-169515-Seithy
Logan-Kumaresh-Homelife-02-02-2021
Kugeenthiran-200-2022-seithy
Karan Remax-2010
Ambikajewellers-01-08-2021-seithy
Asayan-Salon-2022-seithy
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> 12 10 2019 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Skanda Nite 2019 125th Anniversary நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா