Untitled Document
May 17, 2024 [GMT]
பெற்ற குழந்தையை தாக்கி உணர்வு இழக்க செய்த தந்தை!
[Thursday 2018-11-29 18:00]

கேரள மாநிலம் கோழிக்கோடு பகுதியை சேர்ந்தவர் ஹவச்சா (வயது 26). இவர் ஈரோட்டில் தங்கி வேலை பார்த்து வந்தார். அப்போது ஈரோடு பகுதியை சேர்ந்த அமானுல்லா கான் (30) என்பவருடன் காதல் ஏற்பட்டது. இருவரும் பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டனர். பெண் குழந்தை பிறந்தது.

கேரள மாநிலம் கோழிக்கோடு பகுதியை சேர்ந்தவர் ஹவச்சா (வயது 26). இவர் ஈரோட்டில் தங்கி வேலை பார்த்து வந்தார். அப்போது ஈரோடு பகுதியை சேர்ந்த அமானுல்லா கான் (30) என்பவருடன் காதல் ஏற்பட்டது. இருவரும் பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டனர். பெண் குழந்தை பிறந்தது.

  

இந்நிலையில் அமானுல்லா கான் வரதட்சணை கேட்டு மனைவியிடம் அடிக்கடி தகராறு செய்து வந்தார். சம்பவத்தன்றும் தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த அமானுல்லா கான் ஹவச்சா கையில் இருந்த குழந்தையின் தலையில் அடித்தார். இதில் குழந்தைக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. அடுத்த நாள் குழந்தையை ஈரோட்டில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு எடுத்துச்சென்றார்.

அங்கு பரிசோதனை செய்த டாக்டர் குழந்தைக்கு தலையில் ஏற்பட்ட பலத்த காயத்தால் குழந்தையின் உணர்வு பறிபோனதாக கூறினார். இதனையடுத்து சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால் எந்த முன்னேற்றமும் இல்லை. இந்நிலையில் குழந்தையை எடுத்துக்கொண்டு ஹவச்சா கேரளா சென்றார். அங்கு பல ஆஸ்பத்திரிகளில் குழந்தைக்கு சிகிச்சை அளித்தார். சிகிச்சை அளிக்க அளிக்க குழந்தை அசைவற்று மோசமான நிலையை எட்டியது.

குழந்தையின் இந்த நிலைக்கு காரணமான கணவர் மீது நடவடிக்கை எடுக்க போலீசில் புகார் செய்ய ஈரோடு வந்தார். ஈரோட்டில் உள்ள போலீசில் குழந்தையின் மருத்துவ குறிப்புகளை இணைத்து கணவர் மீது புகார் அளிதார். ஆனால் புகாரை ஏற்க போலீசார் மறுத்து விட்டனர். இதனால் அதிர்ச்சியடைந்த ஹவச்சா நேற்று ஈரோடு எஸ்.பி. அலுவலகத்திற்கு வந்தார். அங்கு எஸ்.பி.யிடம் கண்ணீர் மல்க புகாரை கூறினார். உரிய போலீஸ் நிலையத்தை தொடர்பு கொண்டு நடவடிக்கை எடுக்காத காரணத்தையும், உடனே நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிட்டார்.

தந்தையால் தாக்கப்பட்டு உணர்வு இழந்து அசைவற்று கிடக்கும் குழந்தைக்கு உரிய சிகிச்சை அளிக்க கலெக்டர் மூலம் நடவடிக்கை எடுக்கப்பட்டு வந்தது. இதன்பேரில் ஈரோடு மகளிர் போலீசார் அமானுல்லாகான் மட்டும் அவருடைய தாய், அக்காள், சித்தி ஆகியோர் மீது 4 பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்தனர். இந்நிலையில் இன்று அமானுல்லாகான் கைது செய்யப்பட்டார். அவரிடம் விசாரணை நடந்து வருகிறது.

  
   Bookmark and Share Seithy.com



“என் மகனை உங்களிடம் ஒப்படைக்கிறேன்” - சோனியா காந்தி பேச்சு!
[Friday 2024-05-17 18:00]

நாடு முழுவதும் ஏழு கட்டங்களாக மக்களவைத் தேர்தல் நடைபெற்று வருகிறது. அதன்படி, முதற்கட்டமாக ஏப்ரல் 19ஆம் தேதியும், இரண்டாம் கட்டமாக ஏப்ரல் 26ஆம் தேதியும், மூன்றாம் கட்டமாக மே 7ஆம் தேதியும், நான்காம் கட்டமாக ஏப்ரல் 13ஆம் தேதியும் தேர்தல் நடைபெற்று முடிந்தது. அதனைத் தொடர்ந்து, நடைபெறும் அடுத்தக்கட்ட தேர்தலை எதிர்கொண்டு காங்கிரஸ், பா.ஜ.க உள்ளிட்ட கட்சிகள் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன.



ஈரோட்டில் சட்டவிரோதமாகத் தங்கியிருந்த 3 வெளிநாட்டவர்கள் கைது!
[Friday 2024-05-17 18:00]

ஈரோடு மாவட்டத்தில் பெருந்துறை சிப்காட் வளாகத்தில் ஏராளமான தொழிற்சாலைகள் உள்ளன. இத்தொழிற்சாலைகளில் பெரும்பாலும் வடமாநில தொழிலாளர்கள் தங்கி பணியாற்றி வருகின்றனர். பெருந்துறை பனிக்கம்பாளையம், தோப்புபாளையம் உள்ளிட்ட பகுதிகளில் ஏராளமான வடமாநில தொழிலாளர்கள் வசித்து வருகின்றனர்.



6 லட்சம் அரவண பாயசம் கேன்களை அழிக்க டெண்டர்!
[Friday 2024-05-17 18:00]

சபரிமலை ஐயப்பன கோயிலில் வழங்கப்படும் அரவணை பாயசத்தை அழிப்பதற்கான டெண்டர் அறிவிப்பை திருவிதாங்கூர் தேவசம் போர்டு வெளியிட்டுள்ளது. கேரள மாநிலம் சபரிமலை ஐயப்பன் கோயிலில் வழங்கப்படும் அரவணை பாயசம் பக்தர்கள் மத்தியில் புகழ்பெற்றது. இந்த பிரசாதத்தில் சேர்க்கப்படும் ஏலக்காயில் பூச்சுக்கொல்லி பயன்படுத்தப்பட்டது தெரியவந்தது. ஏலக்காய் விளைச்சலின் போது பூச்சிக் கொல்லி மருந்து தெளிக்கப்படுகிறது.



“ராமர் கோயிலை புல்டோசர் வைத்து இடிப்பார்கள்” - பிரதமர் மோடி பேச்சு!
[Friday 2024-05-17 18:00]

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் நாடு முழுவதும் நடைபெற்று வருகிறது. அதன்படி முதற்கட்டமாக ஏப்ரல் 19ஆம் தேதியும், இரண்டாம் கட்டமாக ஏப்ரல் 26ஆம் தேதியும், மூன்றாம் கட்டமாக மே 7ஆம் தேதியும் பல்வேறு மாநிலங்களில் நடந்து முடிந்துள்ளது. இதனைத் தொடர்ந்து, நான்காம் கட்ட வாக்குப்பதிவு, நாடு முழுவதும் 9 மாநிலங்கள் மற்றும் 1 யூனியன் பிரதேசம் உட்பட மொத்தம் 96 மக்களவைத் தொகுதிகளில் கடந்த 13 ஆம் தேதி (13.05.2024) நடைபெற்று முடிந்தது. இதனைத் தொடர்ந்து, மே 20ஆம் தேதி நடைபெறும் ஐந்தாம் கட்டத் தேர்தலை எதிர்கொண்டு அரசியல் கட்சிகள் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன.



தொடரும் தண்ணீர் தொட்டி பிரச்சனை: குடிநீர்த் தொட்டியை ஆய்வு செய்த ஆட்சியர்!
[Wednesday 2024-05-15 06:00]

புதுக்கோட்டை மாவட்டத்தில் வேங்கை வயல் குடிநீர் தொட்டியில் மனித கழிவு கலந்த சம்பவம் நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதேபோல் தமிழகத்தில் பல இடங்களில் தண்ணீர் தொட்டி பிரச்சனைகள் எழுந்து அடங்கியுள்ளது.



பெட்ரோல் ஊற்றி எரித்த காதலி: சிகிச்சைப் பலனின்றி காதலன் உயிரிழப்பு!
[Wednesday 2024-05-15 06:00]

மயிலாடுதுறையில் காதலனை காதலியே பெட்ரோல் ஊற்றி எரித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருந்த நிலையில் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்த காதலன் உயிரிழந்தது மேலும் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது. கடந்த ஒன்பதாம் தேதி சிந்துஜா-ஆகாஷ் என்ற காதல் ஜோடி இருசக்கர வாகனத்தில் பூம்புகார் கடற்கரைக்கு சென்று விட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்தனர்.



“நிதியுதவி கிடைக்காமல் 2 லட்சம் தாய்மார்கள் அவதி” - ராமதாஸ்!
[Wednesday 2024-05-15 06:00]

மகப்பேறு நிதியுதவியை உடனடியாக வழங்க தமிழக அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழ்நாட்டில் கருவுற்ற பெண்கள் மற்றும் இளம் தாய்மார்களுக்கான மகப்பேறு நிதியுதவி திட்டத்தின் கீழ் 2 லட்சத்திற்கும் கூடுதலான பெண்களுக்கு வழங்கப்பட வேண்டிய ரூ.14,000 நிதி மற்றும் ரூ.4000 மதிப்புள்ள ஊட்டச்சத்துப் பெட்டகம் பல மாதங்களாக வழங்கப்படவில்லை என்று வெளியாகியுள்ள செய்திகள் மிகவும் அதிர்ச்சியளிக்கின்றன. மகப்பேறு நிதியுதவி வழங்கப்படுவதில் செய்யப்படும் தாமதம் கண்டிக்கத்தக்கது.



அஸ்ஸாமில் நிகழ்ந்த இரக்கமற்ற சம்பவம்!
[Wednesday 2024-05-15 06:00]

தாயைப் பிரிந்த குட்டி யானை, தாயைத் தேடி அலையும் சம்பவங்கள் பல இடங்களில் நிகழ்ந்துள்ளது. அண்மையில் தமிழகத்தில் நீலகிரியில் கூட இதுபோன்ற சம்பவம் நடந்திருந்தது. வனத்துறை அதிகாரிகள் குட்டி யானையுடன் காட்டு வழியில் பொடி நடை போட்டுக் கொண்டு நடந்து செல்லும் வீடியோக்களை யாரும் மறந்திருக்க முடியாது. தாயுடன் சேர்க்கப் படாத பாடுபட்ட அந்த நிகழ்வு செய்திகளாக வெளியாகி சமூக வலைத்தளங்களையும் ஆக்கிரமித்திருந்தது. இந்நிலையில் இதேபோன்ற ஒரு சம்பவம் அஸ்ஸாமில் நிகழ்ந்துள்ளது. ஆனால் நீலகிரியில் நிகழ்ந்திருந்த சம்பவத்திற்கு நேர் எதிராக நடந்தது தான் மிகவும் வேதனைக்குரிய ஒன்றாக உள்ளது.



ஈரானுடன் ஒப்பந்தம்: இந்தியாவுக்கு அமெரிக்கா எச்சரிக்கை!
[Wednesday 2024-05-15 06:00]

இஸ்ரேல் - ஹமாஸ் அமைப்பினர் இடையே நடைபெற்று வரும் போர் நாளுக்கு நாள் மோசமாகிக் கொண்டே வருகிறது. கடந்த ஆண்டு அக்டோபர் 7 ஆம் தேதி காசாவிலிருந்து ஹமாஸ் அமைப்பு இஸ்ரேல் மீது நடத்திய தாக்குதலில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இந்தப் போரில் அதிகளவில் பெண்களும், குழந்தைகளுமே உயிரிழந்துள்ளதாக ஐ.நா கவலை தெரிவித்துள்ளது.



தமிழீழ விடுதலைப்புலிகளை மீண்டும் தடை செய்த இந்தியா!
[Tuesday 2024-05-14 16:00]

தமிழீழ விடுதலைப் புலிகள் மீதான தடையை மேலும் 5 ஆண்டுகளுக்கு நீடித்து இந்திய மத்திய அரசு (Indian Central Government) அறிவித்தல் விடுத்துள்ளது. இலங்கையில், தனி நாடு கேட்டு, ஆயுதப் போராட்டம் நடத்தி வந்த, தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பினர், 1991இல், இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியை (Rajiv Gandhi) கொலை செய்ததாக குற்றம் சுமத்தப்பட்டிருந்தது.



மும்பையில் வீழ்ந்த பாரிய விளம்பர பலகை: 14 பேர் பலி!
[Tuesday 2024-05-14 16:00]

இந்தியாவின் (India) நிதித் தலைநகரான மும்பையில் (Mumbai) இடியுடன் கூடிய மழையினால் பாரிய விளம்பர பலகை கோபுரம் ஒன்று வீழ்ந்ததில் 14 பேர் உயிரிழந்ததோடு 75 பேர் வரை காயமடைந்துள்ளனர். அத்துடன், இடிபாடுகளுக்குள் இன்னும் பலர் சிக்கியிருக்கலாம் என்றும் அச்சம் வெளியிடப்பட்டுள்ளது.



“மிக கனமழைக்கு வாய்ப்பு” - ஆரஞ்ச் அலர்ட் கொடுத்த வானிலை மையம்!
[Tuesday 2024-05-14 16:00]

மிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளதால் வானிலை ஆய்வு மையம் ஆரஞ்ச் அலர்ட் விடுத்துள்ளது. கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளதால் பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டு பலரும் சுற்றுலாத் தலங்களுக்கு படையெடுத்து வருகின்றனர். இத்தகைய சூழலில் இந்திய வானிலை ஆய்வு மையம் சார்பில் தமிழகத்திற்கு தொடர்ந்து வெப்ப அலைக்கான மஞ்சள் எச்சரிக்கைகளும் விடுக்கப்பட்டு வந்தன.



அதிகரிக்கும் மஞ்சள் காய்ச்சல் நோய்: மத்திய அரசு எச்சரிக்கை!
[Tuesday 2024-05-14 16:00]

மஞ்சல் காய்ச்சல் நோய் என்பது ஒரு வகை வைரஸ் தொற்றினால் ஏற்படும் காய்ச்சல். டெங்குவைப் பரப்பும் ஏடிஎஸ் வகை கொசுக்களில் ஏடிஎஸ் ஜேசிஎப்டி என்றும் ஒருவகை கொசுவால் இந்த மஞ்சள் காய்ச்சல் தொற்று பரவுகிறது. கொரோனா, டெங்கு போன்ற வைரஸ் தொற்று சிகிச்சையைப் போன்றுதான் இந்த காய்ச்சலுக்கும் அதன் அறிகுறிகளை அடிப்படையாகக் கொண்டு சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.



மும்பையை புரட்டிப்போட்ட புழுதிப் புயல்: 8 பேர் உயிரிழப்பு!
[Tuesday 2024-05-14 06:00]

டெல்லியைத் தொடர்ந்து மும்பையில் பல பகுதிகளில் புழுதிப் புயல் வீசி வருகிறது. இந்நிலையில் புழுதிப் புயல் காரணமாக ராட்சத பேனர் விழுந்து 35 பேர் படுகாயம் அடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.



வாரணாசியில் வாகனப் பேரணி நடத்திய மோடி!
[Tuesday 2024-05-14 06:00]

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் நாடு முழுவதும் நடைபெற்று வருகிறது. அதன்படி முதற்கட்டமாக ஏப்ரல் 19ஆம் தேதியும், இரண்டாம் கட்டமாக ஏப்ரல் 26ஆம் தேதியும், மூன்றாம் கட்டமாக மே 7ஆம் தேதியும் பல்வேறு மாநிலங்களில் நடந்து முடிந்துள்ளது. இதனைத் தொடர்ந்து, அடுத்த கட்டத் தேர்தலான நான்காம் கட்ட வாக்குப்பதிவு, நாடு முழுவதும் 9 மாநிலங்கள் மற்றும் 1 யூனியன் பிரதேசம் உட்பட மொத்தம் 96 மக்களவைத் தொகுதிகளில் (13.05.2024) நடைபெற்று வருகிறது.



“எப்போது திருமணம்?’ - சிரித்துக்கொண்டே பதிலளித்த ராகுல் காந்தி!
[Tuesday 2024-05-14 06:00]

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் நாடு முழுவதும் நடைபெற்று வருகிறது. அதன்படி முதற்கட்டமாக ஏப்ரல் 19ஆம் தேதியும், இரண்டாம் கட்டமாக ஏப்ரல் 26ஆம் தேதியும், மூன்றாம் கட்டமாக மே 7ஆம் தேதியும் பல்வேறு மாநிலங்களில் நடந்து முடிந்துள்ளது. இதனைத் தொடர்ந்து, அடுத்த கட்டத் தேர்தலான நான்காம் கட்ட வாக்குப்பதிவு, நாடு முழுவதும் 9 மாநிலங்கள் மற்றும் 1 யூனியன் பிரதேசம் உட்பட மொத்தம் 96 மக்களவைத் தொகுதிகளில் இன்று (13.05.2024) நடைபெற்று முடிந்தது.



'உயிரா... பயிரா...' - வீட்டில் வீசப்பட்ட துண்டுச்சீட்டு; வயலில் அரங்கேறிய கொடூரம்!
[Monday 2024-05-13 18:00]

திமுக எம்எல்ஏவின் சகோதரி மகன் மர்ம நபர்களால் வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பு ஏற்படுத்தி இருக்கும் நிலையில் 'உயிரா... பயிரா... இது தொடரும் என எழுதி வைத்துவிட்டு சென்ற சம்பவம் அதிர்ச்சியைக் கொடுத்துள்ளது. தஞ்சாவூர் மாவட்டம் திருவிடைமருதூர் அடுத்துள்ள பந்தநல்லூரில் வசித்து வருபவர் கலைவாணன். இவர் ஜெயங்கொண்டம் திமுக எம்எல்ஏவின் சகோதரி மகன் ஆவார்.



வாரணாசி தொகுதி தேர்தலை ஒத்திவைக்க வேண்டும்: விவசாயிகள் சங்கம் போர்க்கொடி!
[Monday 2024-05-13 18:00]

வாரணாசி தொகுதியில் தேர்தலை ஒத்தி வைக்கவேண்டுமென தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கம் வலியுறுத்தியுள்ளது. இது குறித்து அச்சங்கத்தின் மாநிலத் தலைவர் அய்யாக்கண்ணு வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் கூறியிருப்பதாவது: 2019 மக்களவைத் தேர்தலின் போது, விவசாய விளை பொருள்களுக்கு லாபகரமான விலை, விவசாய கடன்கள் தள்ளுபடி, விவசாயிகளுக்கு ஓய்வூதியம், காவிரி - கோதாவரி நதிகள் இணைப்பு திட்டத்துக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என வழங்கப்பட்ட வாக்குறுதிகளை மத்திய பாஜக அரசு நிறைவேற்றவில்லை.



7 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு!
[Monday 2024-05-13 18:00]

கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளதால் பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்க அறிவுறுத்தல்கள் கொடுக்கப்பட்டது. நீர்ச்சத்து குறைபாட்டை தடுப்பதற்காக ஒவ்வொரு சுகாதார நிலையங்களிலும் ஓ.ஆர்.எஸ். கரைசல்களை ஆயத்தமாக வைத்திருக்கும்படி தமிழக அரசு அறிவுறுத்தியது. கோடை காலம் தொடங்கியதால் பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டு பலரும் சுற்றுலாத் தலங்களுக்கு படையெடுத்து வருகின்றனர்.



இந்தியாவில் மீண்டும் சாலை அமைக்கும் சீனா!
[Monday 2024-05-13 18:00]

காஸ்மீரின் சியாச்சின் (Kashmir Siachen) பனிப்பாறைக்கு அருகில் சட்டவிரோதமாக ஆக்கிரமிக்கப்பட்ட ஒரு பகுதியில் சீனாவால் சாலை ஒன்று அமைக்கப்படுதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. உலகின் மிக உயரமான போர்க்களமாக கருதப்படும் இந்த பகுதியில் சீனா சாலை அமைப்பில் ஈடுபட்டு வருகின்றமையை செயற்கைக்கோள் படங்கள் மூலம் தெரியவந்துள்ளது.


Rajeef sebarasha 2023/04/19
Asayan-Salon-2022-seithy
Logan-Kumaresh-Homelife-02-02-2021
Mahesan-Remax-169515-Seithy
 gloriousprinters.com 2021
Karan Remax-2010
Vaheesan-Remax-2016
Ambikajewellers-01-08-2021-seithy
Airlinktravel-2020-01-01
NKS-Ketha-04-11-2021
Kugeenthiran-200-2022-seithy
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> 12 10 2019 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Skanda Nite 2019 125th Anniversary நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா