Untitled Document
April 27, 2024 [GMT]
"ஜனநாயகத்திற்கு கிடைத்த வெற்றி" - தர்ணா போராட்டத்தை கைவிட்ட மம்தா.
[Wednesday 2019-02-06 08:00]

தனது போராட்டத்தை வாபஸ் பெறுவதாக அறிவிப்பு வெளியிட்ட மம்தா,

தனது போராட்டத்தை வாபஸ் பெறுவதாக அறிவிப்பு வெளியிட்ட மம்தா, "உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு எங்களின் தார்மீக வெற்றியாகும், நாங்கள் நீதித்துறைக்கு மதிப்பளிக்கிறோம், ராஜீவ் குமார் ஒருபோதும் விசாரணைக்கு ஒத்துழைக்க தயாராக இல்லை என்று கூறவில்லை" என்றார். ''இந்த தர்ணா போராட்டம் ஜனநாயகத்திற்கும், அரசியலமைப்புக்கும் கிடைத்த வெற்றி'' என்று மம்தா பானர்ஜி கூறினார். சாரதா நிதி நிறுவன மோசடி மற்றும் ரோஸ் வேலி ஆகிய வழக்குகளில் கொல்கத்தா காவல் ஆணையர் ராஜீவ் குமாரை விசாரிக்க கொல்கத்தாவில் உள்ள அவரது இல்லத்திற்கு சி.பி.ஐ அதிகாரிகள் கடந்த ஞாயிறு மாலை சென்றனர். அங்கு, சி.பி.ஐ அதிகாரிகளை கொல்கத்தா போலீசார் தடுத்து நிறுத்தி காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர். பின்னர், சி.பி.ஐ அதிகாரிகள் விடுவிக்கப்பட்டனர். இதனையடுத்து, காவல் ஆணையர் ராஜீவ் குமார் வீட்டில் ஆலோசனை நடத்திய முதல்வர் மம்தா , கூட்டாட்சி முறையை பாதுகாக்க வலியுறுத்தி தர்ணா போராட்டத்தில் ஈடுபடப் போவதாக அறிவித்தார். உடனடியாக, கொல்கத்தா மெட்ரோ சாலைப் பகுதியில் தர்ணாவையும் தொடங்கினார். அவருடன் கொல்கத்தா காவல் ஆணையர் ராஜீவ் குமார் உள்ளிட்டோர் தர்ணாவில் ஈடுபட்டு வந்தனர்.

  

இந்நிலையில், இந்த விவகாரம் குறித்து உடனடியாக விசாரிக்க வேண்டும் என உச்சநீதிமன்றத்தில் சிபிஐ மனு தொடுத்தது. இதுதொடர்பாக உச்சநீதிமன்றம், கொல்கத்தா காவல் ஆணையர் ராஜீவ் குமார் மற்றும் மேற்கு வங்க அரசுக்கு நோட்டீஸ் வழங்கியது. ராஜீவ் குமார் சிபிஐக்கு ஒத்துழைப்பு தர வேண்டும் என்றும், ஷில்லாங்கில் உள்ள சிபிஐ அலுவலகத்தில் அஜராக வேண்டும் என்றும் தெரிவித்துள்ள உச்சநீதிமன்றம் காவல் ஆணையரை கைது செய்ய இயலாது என்றும் தெரிவித்தது. மேலும் இந்த வழக்கு பிப்ரவரி 20ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது. இப்படியான சூழ்நிலையில் மம்தா தனது தர்ணா போராட்டத்தை வாபஸ் பெற்றுள்ளார்.

மம்தா பானர்ஜி ஏன் தர்ணாவில் அமர்ந்தார்?

இந்த அரசியல் களேபரங்களை எல்லாம் கூர்ந்து கவனித்தோமானால் இந்த தர்ணா, இந்த அரசியல் பரபரப்பு அனைத்தும் ராஜிவ் குமார் எனும் ஒற்றை மனிதரிடமிருந்துதான் தொடங்கி இருக்கிறது.

சரி. யார் இந்த ராஜிவ் குமார்?

ராஜிவ் குமார் 1989ஆம் ஆண்டு, மேற்கு வங்க பிரிவை சேர்ந்த ஐ.பி.எஸ் அதிகாரி. அவர் தற்சமயம் கொல்கத்தா போலீஸ் ஆணையராக பணியாற்றுகிறார். ராஜிவ் குமார் உத்தர பிரதேச மாநில அஜாம்கார்க் மாவட்டத்தில் பிறந்தவர். ஐ.ஐ.டி கான்பூரில் கணினி துறையில் பொறியியல் படித்தவர்.

இந்த தொழிற்நுட்ப அறிவை அவர் தனது போலீஸ் பணியில் பெரிதும் பயன்படுத்தி இருக்கிறார். தொழில்நுட்பத்தை திறமையாக பயன்படுத்தி கண்காணிப்பு பணியை மேற்கொண்டவராகவே அவர் மேற்கு வங்கத்தில் அறியப்படுகிறார். நிலக்கரி சுரங்க மாஃபியாக்களுக்கு எதிராக 90களில் அவர் மிகத்திறமையாக பணியாற்றினார். அவர் பிர்பும் மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளராக இருந்தபோது சுரங்க மாஃபியாக்களுக்கு எதிராக பிரசாரம் மேற்கொண்டிருக்கிறார்.

அவர் பல சுரங்க மாஃபியாக்களை கைது செய்திருக்கிறார். அந்த சமயத்தில் அதிகாரிகள் யாரும் நிலக்கரி சுரங்க மாஃபியாக்களுக்கு எதிராக செயல்பட்டதில்லை. மம்தாவின் இந்த போராட்டத்தில் மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் பெயர் ஓங்கி ஒலித்தது. மம்தாவின் போராட்டத்தின்போது சமூக ஊடகங்களில் ராஜமன்னார் கமிட்டி குறித்து பலர் இடுகைகளை பகிர்ந்தனர்.

'ராஜமன்னார் கமிட்டி'

ராஜமன்னார் கமிட்டி 1969ஆம் ஆண்டு கருணாநிதியால் அமைக்கப்பட்ட ஒன்று. இந்த கமிட்டியானது மத்திய மாநில அரசுகளின் அதிகார பகிர்வு குறித்து ஆராய அமைக்கப்பட்டது. சரியாக 50 ஆண்டுகளுக்கு முன்பு, அதாவது 1969ஆம் ஆண்டு1969 மார்ச் 17-ல் டெல்லியில் பத்திரிகையாளர்களைச் சந்தித்த கருணாநிதி, மத்திய - மாநில அரசுகளின் அதிகாரங்கள் குறித்து ஆராய ஒரு குழு அமைக்கப்படும் என்று அறிவித்தார்.

மாநிலங்களுக்கு இடையேயான கவுன்சில் ஒன்றை அமைக்கவும், மத்திய அரசு மாநில அரசைக் கலைக்க அதிகாரம் வழங்கும் இந்திய அரசியல் அமைப்பின் பிரிவு 365ஐ ஒழிக்கவும் அந்த கமிட்டி பரிந்துரை செய்தது. அக்குழுவின் அறிக்கை மத்திய-மாநிலங்களிடையே எழுகிற பிரச்சனைகளுக்குத் தீர்வு சொல்லும் முக்கிய சாசனமாக கருதப்பட்டது. மத்திய - மாநில உறவுகளை ஆராய அமைக்கப்பட்ட சர்க்காரியா குழுவுக்கு ராஜமன்னார் குழுவின் அறிக்கையே முக்கியக் காரணம்.

  
   Bookmark and Share Seithy.com



நூதன மோசடியில் ஈடுபட்ட சட்டக்கல்லூரி மாணவர் கைது!
[Saturday 2024-04-27 06:00]

தலைமைச் செயலகத்தில் வேலை வாங்கித் தருவதாக மோசடி செய்ததாக சட்டக்கல்லூரி மாணவர் ஒருவர் கைது செய்யப்பட்ட சம்பவம் புதுக்கோட்டையில் நடந்துள்ளது. புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி சன்னதிவயல் பகுதியைச் சேர்ந்தவர் ராஜேந்திரன் மகன் சத்யராஜ் (37). தனியார் நிதி நிறுவனத்தில் வசூல் செய்யும் ஊழியராக உள்ளார். இவர் கடந்த 25 அம் தேதி அறந்தாங்கி காவல் நிலையத்தில் கொடுத்துள்ள புகாரில் 'நான் அரிமளம் பகுதிக்கு சென்றிருந்த போது மீனாட்சிபுரம் ரோடு பகுதியைச் சேர்ந்த கோவிந்தராஜ் மகன் கார்த்திக் அறிமுகமானார். தான் சென்னை செட்டியார் சட்டக்கல்லூரி மாணவர் என்றும் சோசியல் மீடியாவில் நிறைய பதிவுகள் போடுவேன். எனக்கு அரசியல்வாதிகள், அதிகாரிகளுடன் நல்ல பழக்கம் உள்ளது என்றும் சொன்னார்.



வெப்ப அலை முன்னெச்சரிக்கை: ஓ.ஆர்.எஸ் கொடுக்க ஏற்பாடு!
[Saturday 2024-04-27 06:00]

கோடை காலம் தொடங்கிய நிலையில் தமிழகத்தில் வெப்ப அலைக்கான எச்சரிக்கைகளை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. சில நாட்களாகவே தமிழகத்தில் வெயில் செஞ்சுரி அடித்து வருகிறது. இந்தநிலையில் வெட்ப அலை காரணமாக மக்களுக்கு நீர்ச்சத்து இழப்பு ஏற்படுவதை தடுப்பதற்கு ஓ.ஆர்.எஸ் கரைசல் வழங்க பொது சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது. அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் போதிய அளவில் ஓ.ஆர்.எஸ் கரைசல் பாக்கெட்டுகள் இருப்பில் வைக்கும்படி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.



நாடாளுமன்றத்தில் ஹெலிகாப்டர் மூலம் இறங்கிய என்.எஸ்.ஜி வீரர்கள்!
[Saturday 2024-04-27 06:00]

டெல்லியில் நாடாளுமன்ற வளாகத்தில் தேசிய பாதுகாப்புப் படை வீரர்கள் ஹெலிகாப்டர் மூலம் நாடாளுமன்ற வளாகத்துக்குள் இறங்கி ஒத்திகை நிகழ்வில் ஈடுபட்டனர். சில மாதங்களுக்கு முன்பு நாடாளுமன்றத்தில் பார்வையாளர் மாடத்தில் இருந்து அத்து மீறி சிலர் வண்ணத்தை உமிழும் பொருட்களை எடுத்துக்கொண்டு நாடாளுமன்றத்தின் மைய மண்டபத்திற்குள் ஓடியது பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. இது தொடர்பாக சிலர் கைது செய்யப்பட்டிருந்தனர்.



அதீத வெப்பத்தால் வெளிரிப்போகும் பவளப்பாறைகள்: அபாயத்தின் எச்சரிக்கையா?
[Friday 2024-04-26 18:00]

பல்லுயிர் பெருக்கம் நிறைந்த மன்னார் வளைகுடா கடல் உயிர்க்கோள காப்பகத்தில் பவளப்பாறைகள் அதன் நிறங்களை இழந்து வெளிரிப்போக ஆரம்பித்ததால் மனிதனுக்கு இயற்கை சொல்லும் அபாய எச்சரிக்கையாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது. வெளிரிப்போகும் பவளப்பாறைகள் (Coral Reefs) இந்த நிலைமையின் தீவிரத்தை மதிப்பிடுவதற்காக நீருக்கடியில் விரைவான ஆய்வுகளை மேற்கொள்ள மாநில வனத்துறை உத்தரவிட்டுள்ளது.



இந்திய மக்களவை தேர்தலுக்கு ஏற்பட்ட செலவு தெரியுமா?
[Friday 2024-04-26 18:00]

உலகிலேயே மிகவும் விலை உயர்ந்த தேர்தல் என்றால் அது இந்திய மக்களவைத் தேர்தல் 2024 என்று கூறப்படுகிறது. இந்தியாவில் 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை மக்களவை தேர்தல் நடத்தப்பட்டு வருகிறது. இந்த தேர்தல், உலகம் முழுவதும் கவனத்தை பெற்றுள்ளது. உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழா என அழைக்கப்படும் இந்திய மக்களவைத் தேர்தல் 2019 -ம் ஆண்டு நடைபெற்றது.



குடும்பத்தோடு மாலத்தீவுக்கு செல்லும் தமிழக முதலமைச்சர்!
[Friday 2024-04-26 18:00]

தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஏப்ரல் 29 -ம் திகதி குடும்பத்தினருடன் மாலத்தீவுக்கு பயணம் மேற்கொள்ள இருக்கிறார். தமிழகத்தில் நடைபெற்ற மக்களவை தேர்தலுக்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சூறாவளி பிரச்சாரம் மேற்கொண்டார். பொதுக்கூட்டங்களில் பங்கேற்று திமுக மற்றும் கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து தீவிர பிரச்சாரம் மேற்கொண்டார்.



நிர்மலா தேவி வழக்கின் தீர்ப்பு திடீர் ஒத்திவைப்பு!
[Friday 2024-04-26 18:00]

கல்லூரி மாணவிகளை தவறாக வழிநடத்த முயன்ற பேராசிரியை நிர்மலா தேவி வழக்கின் தீர்ப்பை நீதிமன்றம் ஒத்தி வைத்தது. அருப்புக்கோட்டை தனியார் கல்லூரி மாணவிகளை தவறாக வழிநடத்த முயற்சித்ததாக பேராசிரியை நிர்மலா தேவி, மதுரை காமராசர் பல்கலை. பேராசிரியர் முருகன் மற்றும் ஆய்வு மாணவர் கருப்பசாமி ஆகியோர் மீது கடந்த 2018 -ம் ஆண்டு வழக்குப்பதிவு செய்யப்பட்டது.



பள்ளிகளில் வழங்கப்படும் தண்டனை தொடர்பான வழக்கு: பள்ளிக்கல்வித்துறைக்கு நீதிமன்றம் உத்தரவு!
[Friday 2024-04-26 06:00]

சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவில், ‘தமிழ்நாடு முழுவதும் பள்ளிக் கல்வித்துறை கட்டுப்பாட்டில் உள்ள பள்ளிகளில் குழந்தைகளை அடிப்பது போன்ற கடுமையான தண்டனை விதிப்பதை தடை செய்ய வேண்டும் என்ற தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணைய விதிகளை அமல்படுத்த உத்தரவிட வேண்டும்’ எனத் தெரிவிக்கப்பட்டது.



தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு: அதிகாரிகளுக்கு நீதிமன்றம் கெடு!
[Friday 2024-04-26 06:00]

தூத்துக்குடியில் கடந்த அதிமுக ஆட்சிக் காலத்தில், 22-5-2018 அன்று ஸ்டெர்லைட் தாமிர உருக்காலையை நிரந்தரமாக மூடக்கோரி போராட்டம் நடைபெற்றது. அப்போது நடந்த துப்பாக்கிச் சூட்டில் ஏற்பட்ட உயிரிழப்புகள், காயங்கள் குறித்தும், பொது மற்றும் தனியார் சொத்துகளுக்கு ஏற்பட்ட சேதங்கள் குறித்தும் விசாரிப்பதற்காக சென்னை உயர்நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டது.



“இஸ்லாமியர்களுக்கு வழங்கப்படும் இட ஒதுக்கீட்டை பா.ஜ.க ரத்து செய்யும்” - அமித்ஷா!
[Friday 2024-04-26 06:00]

7 கட்டங்களாக நாடு முழுவதும் மக்களவைத் தேர்தல் நடைபெறுகிறது. கடந்த ஏப்ரல் 19ஆம் தேதி முதற்கட்ட வாக்குப்பதிவு 102 தொகுதிகளில் முடிந்துள்ளது. 2வது கட்ட வாக்குப்பதிவு, ராஜஸ்தான் உள்ளிட்ட 88 தொகுதிகளில் வரும் ஏப்ரல் 26ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான தேர்தல் பிரச்சாரம் சூடுபிடித்துள்ளது.



தமிழகத்தில் மீண்டும் ஒரு வேங்கை வயல் சம்பவம்!
[Thursday 2024-04-25 18:00]

புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் ஒன்றியம் வேங்கைவயல் கிராமத்தில் உள்ள குடிநீர் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி தண்ணீரில் மனிதக் கழிவு கலந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. குடிநீரில் மனிதக் கழிவு கலந்த சமூக விரோதிகள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி பல்வேறு அரசியல் கட்சிகள், அமைப்புகள், மனித உரிமை ஆணையம் எனப் பல தரப்பிலிருந்தும் அழுத்தம் கொடுக்கப்பட்டது. இதனையடுத்து சம்பவம் நடைபெற்ற 20ஆவது நாளில் இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி. போலீசாருக்கு மாற்றப்பட்டு சிபிசிஐடி அதிகாரிகள் விசாரணை செய்து வருகின்றனர்.



“தேர்தல் அறிக்கையை விளக்க வேண்டும்” - பிரதமரை சந்திக்க நேரம் கேட்ட கார்கே!
[Thursday 2024-04-25 18:00]

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக நேற்று முன்தினம் (19.04.2024) தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது.



தமிழகத்தை உலுக்கிய வழக்கில் நாளை தீர்ப்பு!
[Thursday 2024-04-25 18:00]

தமிழகத்தில் பேராசிரியை நிர்மலாதேவி, கல்லூரி மாணவிகளை தவறான வழியில் ஈடுபடுத்த முயன்ற வழக்கில் நாளை தீர்ப்பு வெளியாக உள்ளது. 2018 ஆண்டில் கல்லூரி மாணவிகள் சிலரை, ஆசைவார்த்தை கூறி பாலியல் ரீதியாக பயன்படுத்த முயன்றதாக பேராசிரியை நிர்மலாதேவி கைது செய்யப்பட்டார்.



பிரதமர் மோடி, ராகுல் காந்தி விளக்கம் அளிக்க தேர்தல் ஆணையம் உத்தரவு!
[Thursday 2024-04-25 18:00]

பிரதமர் நரேந்திர மோடி, ராகுல் காந்தி தேர்தல் நடத்தை விதிகளை மீறியதாக எழுந்த புகாரினைத் தொடர்ந்து, விளக்கம் அளிக்க தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. இந்தியாவில் மக்களவைத் தேர்தல் கடந்த 19ஆம் திகதி தொடங்கி, 7 கட்டங்களாக நடந்து வருகிறது. இதற்கான பிரச்சாரங்களில் கட்சி பிரமுகர்கள் ஈடுபட்டு வருகின்றன.



“ஒரு கட்சி அரசியல் சாசனத்தின் மீது தாக்குதல் நடத்துவது இதுவே முதல்முறை” - ராகுல் காந்தி!
[Thursday 2024-04-25 06:00]

ராஜஸ்தான் மாநிலம் பன்ஸ்வாரா பரப்புரையில் பேசிய பிரதமர் மோடி, ''நாட்டின் சொத்தில் இஸ்லாமியர்களுக்கே முதல் அதிகாரம் என்று காங்கிரஸ் ஆட்சியில் சொன்னார்கள். இதனால் இந்துக்களின் சொத்துகள் போகிறது. இந்துக்களின் பணத்தை எடுத்து இஸ்லாமியர்களுக்கு கொடுக்க நினைக்கிறது காங்கிரஸ். இதன் பொருள் அவர்கள் இந்தச் செல்வத்தை அதிக குழந்தைகளைப் பெற்றவர்களுக்கும், ஊடுருவல்காரர்களுக்கும் பகிர்ந்தளிப்பார்கள்.



“வீரர்களுடைய மனைவிகளின் தாலியைப் பறித்தது யார்?” - டிம்பிள் யாதவ் கேள்வி!
[Thursday 2024-04-25 06:00]

ராஜஸ்தான் மாநிலம் பன்ஸ்வாரா பரப்புரையில் பேசிய பிரதமர் மோடி, ''நாட்டின் சொத்தில் இஸ்லாமியர்களுக்கே முதல் அதிகாரம் என்று காங்கிரஸ் ஆட்சியில் சொன்னார்கள். இதனால் இந்துக்களின் சொத்துகள் போகிறது. இந்துக்களின் பணத்தை எடுத்து இஸ்லாமியர்களுக்கு கொடுக்க நினைக்கிறது காங்கிரஸ். இதன் பொருள் அவர்கள் இந்தச் செல்வத்தை அதிக குழந்தைகளைப் பெற்றவர்களுக்கும், ஊடுருவல்காரர்களுக்கும் பகிர்ந்தளிப்பார்கள்.



“ராகுல் காந்தி மாவோயிஸ்ட் தலைவர் என்று நினைக்கிறாரா?” - தேவகவுடா தாக்கு!
[Thursday 2024-04-25 06:00]

ராஜஸ்தான் மாநிலம் பன்ஸ்வாரா பரப்புரையில் பேசிய பிரதமர் மோடி, ''நாட்டின் சொத்தில் இஸ்லாமியர்களுக்கே முதல் அதிகாரம் என்று காங்கிரஸ் ஆட்சியில் சொன்னார்கள். இதனால் இந்துக்களின் சொத்துகள் போகிறது. இந்துக்களின் பணத்தை எடுத்து இஸ்லாமியர்களுக்கு கொடுக்க நினைக்கிறது காங்கிரஸ். இதன் பொருள் அவர்கள் இந்தச் செல்வத்தை அதிக குழந்தைகளைப் பெற்றவர்களுக்கும், ஊடுருவல்காரர்களுக்கும் பகிர்ந்தளிப்பார்கள்.



தேர்வில் முதலிடம் பிடித்த மாணவியின் தோற்றத்தை வைத்து கிண்டல்: பெருகும் ஆதரவு!
[Wednesday 2024-04-24 18:00]

பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் முதலிடம் பிடித்த மாணவியின் தோற்றத்தை வைத்து கிண்டல் செய்யும் நெட்டிசன்களுக்கு எதிரான கருத்துக்களை பலரும் தெரிவித்து வருகின்றனர். இந்திய மாநிலமான உத்தர பிரதேசம், சீதாபூரைச் சேர்ந்த மாணவி பிராச்சி நிகம் (Prachi Nigam). இவர், பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் 98.5 சதவிகித மதிப்பெண்களுடன் முதலிடம் பிடித்துள்ளார்.



உடல் பருமனை குறைக்க அறுவை சிகிச்சை மேற்கொண்ட இளைஞர் மரணம்!
[Wednesday 2024-04-24 18:00]

உடல் பருமனை குறைக்க அறுவை சிகிச்சைக்கு சென்ற இளைஞர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. புதுச்சேரி முத்தியால்பேட்டை டி.வி. நகரைச் சேர்ந்தவர் செல்வநாதன். இவருக்கு, ஹேமசந்திரன், ஹேமராஜன் (26) என்று இரட்டை ஆண் மகன்கள் உள்ளனர். இதில் ஹேமசந்திரன் பி.எஸ்.சி. ஐ.டி. முடித்து டிசைனிங் பணியிலும், ஹேமராஜன் சித்தா பார்மசிஸ்ட் பணியிலும் இருந்தனர்.



பெற்றோர்களுக்கு தமிழக அரசு விடுத்துள்ள எச்சரிக்கை!
[Wednesday 2024-04-24 18:00]

குழந்தைகள் ஸ்மோக் பிஸ்கட் உட்கொள்ள வேண்டாம் எனவும், உயிருக்கு ஆபத்து எனவும் தமிழக உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். கர்நாடகா மாநிலத்தில் ஸ்மோக் பிஸ்கட் உட்கொண்ட சிறுவன் ஒருவன் வலியால் துடித்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.


Mahesan-Remax-169515-Seithy
NKS-Ketha-04-11-2021
Vaheesan-Remax-2016
Asayan-Salon-2022-seithy
Rajeef sebarasha 2023/04/19
Karan Remax-2010
Airlinktravel-2020-01-01
Logan-Kumaresh-Homelife-02-02-2021
 gloriousprinters.com 2021
Kugeenthiran-200-2022-seithy
Ambikajewellers-01-08-2021-seithy
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> 12 10 2019 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Skanda Nite 2019 125th Anniversary நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா