Untitled Document
May 15, 2024 [GMT]
1987-88ல் டிஜிடல் படம் எடுத்து இமெயில் அனுப்பினாரா நரேந்திர மோதி! - கேலி செய்யும் சமூக ஊடகம்.
[Tuesday 2019-05-14 08:00]

"1987-88ல் டிஜிட்டல் கேமிரா பயன்படுத்தி அத்வானியை புகைப்படம் எடுத்தேன். அப்போது ஒரு சிலரிடம் மட்டுமே இ-மெயில் வசதி இருந்தது. நான் எடுத்த புகைப்படத்தை இ-மெயில் மூலம் டெல்லிக்கு அனுப்பினேன். அடுத்த நாளே அப்புகைப்படம் வெளியானதை பார்த்து வியந்துவிட்டார் அத்வானி" என்று இந்தி மொழி தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு பிரதமர் நரேந்திர மோதி அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார். மோதியின் இந்த கூற்று அடங்கிய 40 வினாடி நீளமுள்ள காணொளி சமூக ஊடகங்களில் வைரலாக பரவி வருகிறது. 80களிலேயே தன்னிடம் டிஜிட்டல் கேமரா இருந்ததாக பிரதமர் மோதி அதில் கூறியுள்ளார்.

  

80களில் இ-மெயில் வசதியே வந்திருக்கவில்லை. மேலும், ஏழைக் குடும்பத்தில் இருந்து வந்ததாக கூறும் மோதி அப்போதே டிஜிட்டல் கேமரா வைத்திருந்தாரா என்று சமூக ஊடக வாசிகள் பலர் கேள்வி எழுப்பியுள்ளனர். மேலும், இ-மெயில் வசதி 1990களில்தான் வந்தது என்றும், பிரதமர் மோதி எப்படி அப்போதே மின்னஞ்சல் அனுப்பினார் என்றும் கிண்டலடித்து வருகின்றனர். அதே போல டிஜிட்டல் கேமராக்கள் 1987-88ல் இந்தியாவில் பயன்பாட்டுக்கு வரவில்லை என்றும் கூறப்படுகிறது.

தொழில்நுட்பம் மற்றும் மின்சாதன பொருட்கள் குறித்து மதிப்பாய்வு செய்யும் பிரபல அமெரிக்க வலைதளமான CNETல், முதல் டிஜிட்டல் கேமரா 1988ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டதாகவும், ஆனால் அது விற்பனை செய்யப்படவில்லை என்று குறிப்பிட்டுள்ளது. பின்னர் 1990ஆம் ஆண்டுதான் டைகாம் மாடல் 1 என்ற டிஜிட்டல் கேமரா விற்பனைக்கு வந்ததாகவும் அந்த வலைதளம் கூறுகிறது.

1977-78ல் இ-மெயில்?

பிரிட்டனை சேர்ந்த கணிணி விஞ்ஞானியான சர் டிம் பெர்னர்ஸ் லீ, www எனப்படும் வர்ல்ட் வைட் வெப்-ஐ 1989-ம் ஆண்டு உருவாக்கினார். 1991ஆம் ஆண்டுதான் பெர்னர்ஸ் லீ தனது www மென்பொருளை வெளியிட்டார். பின்னர் இது பிற உலக நாடுகளில் அறிமுகமானது. இந்தியாவில் இணைய சேவையை அரசின் விதேஷ் சன்சர் நிகாம் லிமிட்டட் (VSNL) நிறுவனம் 1995ல்தான் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவந்ததாகவும், மோதி அளவற்ற பொய் சொல்வதாகவும் ட்விட்டர் வாசிகள் பதிவிட்டுள்ளனர்.

முன்னதாக பாலகோட் தாக்குதல் நாள் அன்று காலநிலை சரியில்லாமல் இருந்ததால், தாக்குதல் தேதியை மாற்றிவைக்கலாமா என்று ஆலோசனை கூறப்பட்டபோது, மேகங்கள் சூழ்ந்திருப்பதால் இந்திய விமானங்கள் பாகிஸ்தான் ரேடார்களின் கண்காணிப்பில் இருந்து தப்பிக்கும் என்று வல்லுநர்களுக்கு தாம் யோசனை அளித்ததாகவும் மோதி கூறியிருந்தார். இந்த கருத்தும் பெரும் கேலி கிண்டலுக்கு உண்டானது குறிப்பிடத்தக்கது.

  
   Bookmark and Share Seithy.com



தொடரும் தண்ணீர் தொட்டி பிரச்சனை: குடிநீர்த் தொட்டியை ஆய்வு செய்த ஆட்சியர்!
[Wednesday 2024-05-15 06:00]

புதுக்கோட்டை மாவட்டத்தில் வேங்கை வயல் குடிநீர் தொட்டியில் மனித கழிவு கலந்த சம்பவம் நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதேபோல் தமிழகத்தில் பல இடங்களில் தண்ணீர் தொட்டி பிரச்சனைகள் எழுந்து அடங்கியுள்ளது.



பெட்ரோல் ஊற்றி எரித்த காதலி: சிகிச்சைப் பலனின்றி காதலன் உயிரிழப்பு!
[Wednesday 2024-05-15 06:00]

மயிலாடுதுறையில் காதலனை காதலியே பெட்ரோல் ஊற்றி எரித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருந்த நிலையில் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்த காதலன் உயிரிழந்தது மேலும் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது. கடந்த ஒன்பதாம் தேதி சிந்துஜா-ஆகாஷ் என்ற காதல் ஜோடி இருசக்கர வாகனத்தில் பூம்புகார் கடற்கரைக்கு சென்று விட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்தனர்.



“நிதியுதவி கிடைக்காமல் 2 லட்சம் தாய்மார்கள் அவதி” - ராமதாஸ்!
[Wednesday 2024-05-15 06:00]

மகப்பேறு நிதியுதவியை உடனடியாக வழங்க தமிழக அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழ்நாட்டில் கருவுற்ற பெண்கள் மற்றும் இளம் தாய்மார்களுக்கான மகப்பேறு நிதியுதவி திட்டத்தின் கீழ் 2 லட்சத்திற்கும் கூடுதலான பெண்களுக்கு வழங்கப்பட வேண்டிய ரூ.14,000 நிதி மற்றும் ரூ.4000 மதிப்புள்ள ஊட்டச்சத்துப் பெட்டகம் பல மாதங்களாக வழங்கப்படவில்லை என்று வெளியாகியுள்ள செய்திகள் மிகவும் அதிர்ச்சியளிக்கின்றன. மகப்பேறு நிதியுதவி வழங்கப்படுவதில் செய்யப்படும் தாமதம் கண்டிக்கத்தக்கது.



அஸ்ஸாமில் நிகழ்ந்த இரக்கமற்ற சம்பவம்!
[Wednesday 2024-05-15 06:00]

தாயைப் பிரிந்த குட்டி யானை, தாயைத் தேடி அலையும் சம்பவங்கள் பல இடங்களில் நிகழ்ந்துள்ளது. அண்மையில் தமிழகத்தில் நீலகிரியில் கூட இதுபோன்ற சம்பவம் நடந்திருந்தது. வனத்துறை அதிகாரிகள் குட்டி யானையுடன் காட்டு வழியில் பொடி நடை போட்டுக் கொண்டு நடந்து செல்லும் வீடியோக்களை யாரும் மறந்திருக்க முடியாது. தாயுடன் சேர்க்கப் படாத பாடுபட்ட அந்த நிகழ்வு செய்திகளாக வெளியாகி சமூக வலைத்தளங்களையும் ஆக்கிரமித்திருந்தது. இந்நிலையில் இதேபோன்ற ஒரு சம்பவம் அஸ்ஸாமில் நிகழ்ந்துள்ளது. ஆனால் நீலகிரியில் நிகழ்ந்திருந்த சம்பவத்திற்கு நேர் எதிராக நடந்தது தான் மிகவும் வேதனைக்குரிய ஒன்றாக உள்ளது.



ஈரானுடன் ஒப்பந்தம்: இந்தியாவுக்கு அமெரிக்கா எச்சரிக்கை!
[Wednesday 2024-05-15 06:00]

இஸ்ரேல் - ஹமாஸ் அமைப்பினர் இடையே நடைபெற்று வரும் போர் நாளுக்கு நாள் மோசமாகிக் கொண்டே வருகிறது. கடந்த ஆண்டு அக்டோபர் 7 ஆம் தேதி காசாவிலிருந்து ஹமாஸ் அமைப்பு இஸ்ரேல் மீது நடத்திய தாக்குதலில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இந்தப் போரில் அதிகளவில் பெண்களும், குழந்தைகளுமே உயிரிழந்துள்ளதாக ஐ.நா கவலை தெரிவித்துள்ளது.



தமிழீழ விடுதலைப்புலிகளை மீண்டும் தடை செய்த இந்தியா!
[Tuesday 2024-05-14 16:00]

தமிழீழ விடுதலைப் புலிகள் மீதான தடையை மேலும் 5 ஆண்டுகளுக்கு நீடித்து இந்திய மத்திய அரசு (Indian Central Government) அறிவித்தல் விடுத்துள்ளது. இலங்கையில், தனி நாடு கேட்டு, ஆயுதப் போராட்டம் நடத்தி வந்த, தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பினர், 1991இல், இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியை (Rajiv Gandhi) கொலை செய்ததாக குற்றம் சுமத்தப்பட்டிருந்தது.



மும்பையில் வீழ்ந்த பாரிய விளம்பர பலகை: 14 பேர் பலி!
[Tuesday 2024-05-14 16:00]

இந்தியாவின் (India) நிதித் தலைநகரான மும்பையில் (Mumbai) இடியுடன் கூடிய மழையினால் பாரிய விளம்பர பலகை கோபுரம் ஒன்று வீழ்ந்ததில் 14 பேர் உயிரிழந்ததோடு 75 பேர் வரை காயமடைந்துள்ளனர். அத்துடன், இடிபாடுகளுக்குள் இன்னும் பலர் சிக்கியிருக்கலாம் என்றும் அச்சம் வெளியிடப்பட்டுள்ளது.



“மிக கனமழைக்கு வாய்ப்பு” - ஆரஞ்ச் அலர்ட் கொடுத்த வானிலை மையம்!
[Tuesday 2024-05-14 16:00]

மிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளதால் வானிலை ஆய்வு மையம் ஆரஞ்ச் அலர்ட் விடுத்துள்ளது. கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளதால் பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டு பலரும் சுற்றுலாத் தலங்களுக்கு படையெடுத்து வருகின்றனர். இத்தகைய சூழலில் இந்திய வானிலை ஆய்வு மையம் சார்பில் தமிழகத்திற்கு தொடர்ந்து வெப்ப அலைக்கான மஞ்சள் எச்சரிக்கைகளும் விடுக்கப்பட்டு வந்தன.



அதிகரிக்கும் மஞ்சள் காய்ச்சல் நோய்: மத்திய அரசு எச்சரிக்கை!
[Tuesday 2024-05-14 16:00]

மஞ்சல் காய்ச்சல் நோய் என்பது ஒரு வகை வைரஸ் தொற்றினால் ஏற்படும் காய்ச்சல். டெங்குவைப் பரப்பும் ஏடிஎஸ் வகை கொசுக்களில் ஏடிஎஸ் ஜேசிஎப்டி என்றும் ஒருவகை கொசுவால் இந்த மஞ்சள் காய்ச்சல் தொற்று பரவுகிறது. கொரோனா, டெங்கு போன்ற வைரஸ் தொற்று சிகிச்சையைப் போன்றுதான் இந்த காய்ச்சலுக்கும் அதன் அறிகுறிகளை அடிப்படையாகக் கொண்டு சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.



மும்பையை புரட்டிப்போட்ட புழுதிப் புயல்: 8 பேர் உயிரிழப்பு!
[Tuesday 2024-05-14 06:00]

டெல்லியைத் தொடர்ந்து மும்பையில் பல பகுதிகளில் புழுதிப் புயல் வீசி வருகிறது. இந்நிலையில் புழுதிப் புயல் காரணமாக ராட்சத பேனர் விழுந்து 35 பேர் படுகாயம் அடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.



வாரணாசியில் வாகனப் பேரணி நடத்திய மோடி!
[Tuesday 2024-05-14 06:00]

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் நாடு முழுவதும் நடைபெற்று வருகிறது. அதன்படி முதற்கட்டமாக ஏப்ரல் 19ஆம் தேதியும், இரண்டாம் கட்டமாக ஏப்ரல் 26ஆம் தேதியும், மூன்றாம் கட்டமாக மே 7ஆம் தேதியும் பல்வேறு மாநிலங்களில் நடந்து முடிந்துள்ளது. இதனைத் தொடர்ந்து, அடுத்த கட்டத் தேர்தலான நான்காம் கட்ட வாக்குப்பதிவு, நாடு முழுவதும் 9 மாநிலங்கள் மற்றும் 1 யூனியன் பிரதேசம் உட்பட மொத்தம் 96 மக்களவைத் தொகுதிகளில் (13.05.2024) நடைபெற்று வருகிறது.



“எப்போது திருமணம்?’ - சிரித்துக்கொண்டே பதிலளித்த ராகுல் காந்தி!
[Tuesday 2024-05-14 06:00]

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் நாடு முழுவதும் நடைபெற்று வருகிறது. அதன்படி முதற்கட்டமாக ஏப்ரல் 19ஆம் தேதியும், இரண்டாம் கட்டமாக ஏப்ரல் 26ஆம் தேதியும், மூன்றாம் கட்டமாக மே 7ஆம் தேதியும் பல்வேறு மாநிலங்களில் நடந்து முடிந்துள்ளது. இதனைத் தொடர்ந்து, அடுத்த கட்டத் தேர்தலான நான்காம் கட்ட வாக்குப்பதிவு, நாடு முழுவதும் 9 மாநிலங்கள் மற்றும் 1 யூனியன் பிரதேசம் உட்பட மொத்தம் 96 மக்களவைத் தொகுதிகளில் இன்று (13.05.2024) நடைபெற்று முடிந்தது.



'உயிரா... பயிரா...' - வீட்டில் வீசப்பட்ட துண்டுச்சீட்டு; வயலில் அரங்கேறிய கொடூரம்!
[Monday 2024-05-13 18:00]

திமுக எம்எல்ஏவின் சகோதரி மகன் மர்ம நபர்களால் வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பு ஏற்படுத்தி இருக்கும் நிலையில் 'உயிரா... பயிரா... இது தொடரும் என எழுதி வைத்துவிட்டு சென்ற சம்பவம் அதிர்ச்சியைக் கொடுத்துள்ளது. தஞ்சாவூர் மாவட்டம் திருவிடைமருதூர் அடுத்துள்ள பந்தநல்லூரில் வசித்து வருபவர் கலைவாணன். இவர் ஜெயங்கொண்டம் திமுக எம்எல்ஏவின் சகோதரி மகன் ஆவார்.



வாரணாசி தொகுதி தேர்தலை ஒத்திவைக்க வேண்டும்: விவசாயிகள் சங்கம் போர்க்கொடி!
[Monday 2024-05-13 18:00]

வாரணாசி தொகுதியில் தேர்தலை ஒத்தி வைக்கவேண்டுமென தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கம் வலியுறுத்தியுள்ளது. இது குறித்து அச்சங்கத்தின் மாநிலத் தலைவர் அய்யாக்கண்ணு வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் கூறியிருப்பதாவது: 2019 மக்களவைத் தேர்தலின் போது, விவசாய விளை பொருள்களுக்கு லாபகரமான விலை, விவசாய கடன்கள் தள்ளுபடி, விவசாயிகளுக்கு ஓய்வூதியம், காவிரி - கோதாவரி நதிகள் இணைப்பு திட்டத்துக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என வழங்கப்பட்ட வாக்குறுதிகளை மத்திய பாஜக அரசு நிறைவேற்றவில்லை.



7 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு!
[Monday 2024-05-13 18:00]

கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளதால் பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்க அறிவுறுத்தல்கள் கொடுக்கப்பட்டது. நீர்ச்சத்து குறைபாட்டை தடுப்பதற்காக ஒவ்வொரு சுகாதார நிலையங்களிலும் ஓ.ஆர்.எஸ். கரைசல்களை ஆயத்தமாக வைத்திருக்கும்படி தமிழக அரசு அறிவுறுத்தியது. கோடை காலம் தொடங்கியதால் பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டு பலரும் சுற்றுலாத் தலங்களுக்கு படையெடுத்து வருகின்றனர்.



இந்தியாவில் மீண்டும் சாலை அமைக்கும் சீனா!
[Monday 2024-05-13 18:00]

காஸ்மீரின் சியாச்சின் (Kashmir Siachen) பனிப்பாறைக்கு அருகில் சட்டவிரோதமாக ஆக்கிரமிக்கப்பட்ட ஒரு பகுதியில் சீனாவால் சாலை ஒன்று அமைக்கப்படுதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. உலகின் மிக உயரமான போர்க்களமாக கருதப்படும் இந்த பகுதியில் சீனா சாலை அமைப்பில் ஈடுபட்டு வருகின்றமையை செயற்கைக்கோள் படங்கள் மூலம் தெரியவந்துள்ளது.



கட்சி தலைவரை எரித்தவர்களை கூட இன்னும் இந்த அரசு கண்டுபிடிக்கவில்லை' - வைகை செல்வன் குற்றச்சாட்டு!
[Monday 2024-05-13 06:00]

எடப்பாடி பழனிசாமியின் 70 வது பிறந்தநாளை முன்னிட்டு அவருடைய கட்சி தொண்டர்கள், நிர்வாகிகள் அதிமுக தலைமை அலுவலகத்தில் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். அதன் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த அதிமுகவின் வைகை செல்வம் பேசுவையில், ''எடப்பாடி பழனிசாமிக்கு இன்று 70 வது பிறந்தநாள். தமிழ்நாடு முழுவதும் அதிமுகவின் இரண்டு கோடி உடன்பிறப்புகளும் வாழ்த்துக்களை அவருக்கு தெரிவித்த வண்ணம் இருக்கிறார்கள்.



மீண்டும் திடீர் பள்ளம்: வாகன ஓட்டிகள் அவதி!
[Monday 2024-05-13 06:00]

திருச்சி திருவானைக்காவல் மீண்டும் சாலையில் ஏற்பட்ட திடீர் பள்ளம் பரபரப்பை ஏற்படுத்தியது. திருவானைக்காவல் பகுதியில் இருந்து திருவரங்கம் செல்லும் சாலையான காந்தி ரோடு திருப்பத்தில் உள்ள மாரியம்மன் கோவில் அருகில் இன்று அதிகாலை நடுரோட்டில் திடீரென்று பள்ளம் விழுந்தது. இதனைப் பார்த்த அப்பகுதி பொதுமக்கள் பள்ளம் வெகு ஆழமாக இருந்ததால் உடனடியாக அப்பகுதியைச் சேர்ந்த சிலர் பள்ளத்தை சுற்றி தடுப்புகளை வைத்தனர். இதனால் கனரக வாகனங்கள் பேருந்துகள் இப்பகுதியில் செல்ல முடியாமல் தடுத்து நிறுத்தப்பட்டது.



சலூனில் தீண்டாமை: இருவர் கைது!
[Monday 2024-05-13 06:00]

பட்டியலின சிறுவனுக்கு முடி திருத்தம் செய்ய மறுத்த கடை உரிமையாளரை காவல்துறையினர் கைது செய்த சம்பவம் தர்மபுரி நிகழ்ந்துள்ளது. தர்மபுரி மாவட்டம் அரூர் அடுத்துள்ளது கீரைப்பட்டி கிராமம். இந்த கிராமத்தில் யோகேஸ்வரன் என்பவர் 'யோகேஷ் பியூட்டி சலூன்' என்ற பெயரில் சலூன் கடை நடத்தி வருகறார். இந்த நிலையில் அவருடைய கடைக்கு 17 வயது சிறுவன் ஒருவன் முடி திருத்தம் செய்ய சென்றுள்ளார். அப்பொழுது சிறுவனிடம் ஊரை விசாரித்த யோகேஷ் சிறுவனுக்கு முடி திருத்தும் செய்ய மறுத்துள்ளார்.



அடுத்த 4 நாட்களுக்கு கனமழை எச்சரிக்கை!
[Sunday 2024-05-12 16:00]

தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் கோடை மழை பொழிந்து வருகிறது. பல பகுதிகளில் மாலை வேளையில் பலத்த காற்றுடன் கனமழை பொழிந்து வருகிறது. இந்நிலையில் தமிழகத்தில் அடுத்த நான்கு நாட்களுக்கு கனமழை எச்சரிக்கை கொடுக்கப்பட்டுள்ளது.


 gloriousprinters.com 2021
Logan-Kumaresh-Homelife-02-02-2021
Airlinktravel-2020-01-01
Mahesan-Remax-169515-Seithy
NKS-Ketha-04-11-2021
Vaheesan-Remax-2016
Ambikajewellers-01-08-2021-seithy
Asayan-Salon-2022-seithy
Rajeef sebarasha 2023/04/19
Karan Remax-2010
Kugeenthiran-200-2022-seithy
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> 12 10 2019 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Skanda Nite 2019 125th Anniversary நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா