Untitled Document
May 2, 2024 [GMT]
தமிழின அழிப்பின் 10ம் ஆண்டில் சர்வதேச நீதி விசாரணை கோரி அனைவரும் அணிதிரள்வோம்!
[Saturday 2019-05-18 08:00]

முள்ளிவாய்க்காலில் இடம்பெறும் நினைவேந்தல் நிகழ்வுக்கு எமது பூரண ஆதரவைத் தெரிவித்துக் கொள்வதுடன், இனவழிப்பு நினைவேந்தல் நிகழ்வுக்கு அனைத்துத் தமிழ் மக்களையும் அணிதிரளுமாறு அழைப்பு விடுக்கின்றோம் என்று தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் செயலாளர் செ.கஜேந்திரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

முள்ளிவாய்க்காலில் இடம்பெறும் நினைவேந்தல் நிகழ்வுக்கு எமது பூரண ஆதரவைத் தெரிவித்துக் கொள்வதுடன், இனவழிப்பு நினைவேந்தல் நிகழ்வுக்கு அனைத்துத் தமிழ் மக்களையும் அணிதிரளுமாறு அழைப்பு விடுக்கின்றோம் என்று தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் செயலாளர் செ.கஜேந்திரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

  

தமிழ் மக்கள் மீது சிறீலங்கா அரசு இனப்படுகொலையை அரங்கேற்றி 10 ஆண்டுகள் கடக்கின்றது. படுகொலை செய்யப்பட்டவர்களுக்கு நீதி விசாரணை கோரியும் காணாமல் ஆக்கபட்டவர்களை கண்டறியக் கோரியும் தமிழ் மக்கள் கடந்த 10 ஆண்டுகளாக போராடி வருகின்றபோதும் பொறுப்புக்கூறல் விடயத்திலோ, காணாமல் ஆக்கப்பட்டவர்களை கண்டறியும் விடயத்திலோ எவ்வித முன்னேற்றமும் ஏற்படவில்லை.

இலங்கையில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள், போர்க்குற்றங்கள், மனிதத்துவத்திற்கு எதிரான குற்றங்கள் தொடர்பில் பொறுப்புக்கூறல் நடைபெறவேண்டுமென கடந்த 2012ஆம் ஆண்டிலிருந்து ஐ,நா.மனித உரிமைகள் பேரவையில் தீர்மானங்கள் இயற்றப்பட்டு கால நீடிப்புக்கள் வழங்கப்பட்டு வருகின்றபோதிலும் தமிழ் மக்களுக்கு இன்னமும் நீதி கிடைக்கவில்லை.

மாறாக தமிழ் மக்கள் மீதான ஒடுக்குமுறைகள் தீவிரப்படுத்தப்பட்டே வருகின்றது. இந்நிலையிலேயே இனவழிப்பின் 10 ஆண்டினை நினைவு கூரும் நிகழ்வுகள் நடைபெறவுள்ளது. இந்நிகழ்வானது வெறுமனே படுகொலை செய்யப்பட்ட எம்வர்களுக்காக சுடரேற்றி நினைவுகூரும் நிகழ்வாக மட்டும் அமையக்கூடாது.

மாறாக இந்நிகழ்வில் அனைவரும் அணிதிரண்டு தமிழ் மக்கள் மீது ஸ்ரீலங்கா அரசு புரிந்தது திட்டமிட்ட இனப்படுகொலை என்பதனையும் அக்கொடூரமான இனப்படுகொலையை ஒருபோதும் மறக்கவும் மாட்டோம் மன்னிக்கவும் மாட்டோம் என்பதுடன், சர்வதேச நீதி கிடைக்கும் வரை ஓயவும் மாட்டோம் என்பதனை ஆணித்தரமாக வலியுறுத்துவோம்.

அதேவேளை ஸ்ரீலங்காவின் பேரினவாத ஆட்சியாளர்கள் வடக்கு கிழக்கில் அபிவிருத்தி (மகாவலி உட்பட) என்னும் பெயரிலும் ஏனைய வழிகளிலும் காணிகளை கபளீகரம் செய்தல், தமிழரது குடிப்பரம்பலை மாற்றியமைத்தல், தமிழரது மொழி, கலாசாரம், பொருளாதாரம் (விவசாயம், வர்த்தகம், கடல்சார்) என்பவற்றை அழித்தல் மூலம் பேரினவாத ஆதிக்கத்தை அதிகரித்தல், திட்டமிட்ட சிங்களக் குடியேற்றங்கள், பௌத்த மயமாக்கல் போன்ற வழிமுறைகளில் கட்டமைப்புசார் இனவழிப்புச் செயற்பாடுகளை தொடர்ந்து கொண்டேயிருக்கின்றார்கள். இவற்றுக்கு நிரந்தரமாக முற்றுப்புள்ளி வைத்து எம்தேசத்தை பாதுகாக்கும் நிலையை உருவாக்க நாம் அனைவரும் ஒன்றாய் அணிதிரளவேண்டும்.

தாயக மண்ணில் கூட்டாகப் படுகொலை செய்யப்பட்ட எமது உறவுகளை கூட்டாக நினைவு கூருவதற்கான உரிமை எமக்குள்ளது. இறந்தவர்களது ஆத்ம சாந்திக்காக முள்ளிவாய்;க்காலில் உயிர்நீத்த எம் உறவுகளுக்கான நினைவேந்தல் நிகழ்வுகளை ஏற்பாடு செய்துள்ள ஏற்பாட்டுக்குழுவானது இனவழிப்பு தினத்தில் (18) வெளியிடவுள்ள முக்கிய பிரகடனத்தில் உள்ளடக்கப்பட்டுள்ள விடயங்கள் எம்மால் ஏற்றுக் கொள்ளக்கூடியதாக உள்ள நிலையில் 18.05.2019 இல் நடைபெறும் முள்ளிவாய்க்காலில் இடம்பெறும் நினைவேந்தல் நிகழ்வுக்கு எமது பூரண ஆதரவைத் தெரிவித்துக் கொள்வதுடன், இனவழிப்பு நினைவேந்தல் நிகழ்வுக்கு அனைத்துத் தமிழ் மக்களையும் அணிதிரளுமாறு அழைப்பு விடுக்கின்றோம்.

  
   Bookmark and Share Seithy.com



13ஆவது திருத்தத்தை அவ்வாறே நடைமுறைப்படுத்துவோம்! Top News
[Wednesday 2024-05-01 17:00]

அரசியலமைப்பின் 13ஆவது திருத்தத்தை அவ்வாறே நடைமுறைப்படுத்த எமது ஆட்சியில் நடவடிக்கை எடுக்கப்படும் என எதிர்க்கட்சி தலைவர் சஜித் தெரிவித்தார். மேலும் திருத்தப்பட்ட மக்கள் சார்பான சர்வதேச நாணய நிதிய ஒப்பந்தம் எமது ஆட்சியில் நடைமுறைப்படுத்தப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.



மானிப்பாயில் ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணியின் மே தின நிகழ்வு! Top News
[Wednesday 2024-05-01 17:00]

ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணியின் மே தின நிகழ்வு இன்று மானிப்பாய் பிரதேச சபையின் பொது நோக்கு மண்டபத்தில் "அரசின் அடக்குமுறைகளை உடைத்தெறிவோம்" எனும் தொனிப்பொருளில் இடம்பெற்றது. நிகழ்வானது மங்கல விளக்கேற்றலுடன் ஆரம்பமாகி தொடர்ந்து தலைமை உரை, விருந்தினர்களின் உரைகள் என்பன இடம்பெற்றது.



கிளிநொச்சியில் பழைய நினைவுகளை மீட்டார் எரிக் சொல்ஹெய்ம்!
[Wednesday 2024-05-01 17:00]

நோர்வேயின் இலங்கைக்கான முன்னாள் சமாதான தூதுவர் எரிக் சொல்ஹெய்ம் இன்று கிளிநொச்சிக்கு தனிப்பட்ட பயணமொன்றை மேற்கொண்டார். தான் சமாதான தூதுவராக பணியாற்றிய போது கிளிநொச்சிக்கு பயணம் செய்து விடுதலைப்புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் மற்றும் அரசியல்துறைப் பொறுப்பாளர் சு.ப. தமிழ்ச்செல்வன் ஆகியோரைச் சந்தித்து பேச்சுவார்த்தை நடாத்திய இடங்களை மீண்டும் ஒரு தடவை பார்த்துவிட்டு செல்வதற்காக கிளிநொச்சிக்கு இன்று சென்றிருந்தார்.



கிளிநொச்சியில் தமிழ்த் தேசிய மே தினம்! Top News
[Wednesday 2024-05-01 17:00]

வடமாகாண ரீதியிலான தமிழ்த் தேசிய மே தினம் கிளிநொச்சி மத்திய கல்லூரி மைதானத்தில் நடைபெற்றது. கிளிநொச்சி மாவட்ட தொழிற்ச்சங்கங்களுடன் இணைந்து தமிழரசுக்கட்சியின் கிளிநொச்சி கிளை ஏற்பாடு செய்த மே தினம் மக்களின் எழுச்சி பேரணியோடு நடைபெற்றது.



காங்கேசன் துறைமுக அபிவிருத்திக்கான முழு நிதியையும் வழங்கும் இந்தியா!
[Wednesday 2024-05-01 17:00]

காங்கேசன் துறைமுக அபிவிருத்திக்கான மொத்த செலவையும் ஏற்க இந்தியா ஒப்புக்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கையின் வடக்கு மாகாணத்தில் அமைந்துள்ள காங்கேசன் துறைமுகம் மொத்தம் 16 ஏக்கர் பரப்பளவைக் கொண்டது ஆகும்.



நுணாவில் விபத்தில் ஒருவர் பலி- 5 பேர் படுகாயம்!
[Wednesday 2024-05-01 17:00]

சாவகச்சேரி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கைதடி-நுணாவில் ஏ9வீதியில் இன்று காலை இடம்பெற்ற விபத்தில் சிறியரக உழவு இயந்திரத்தில் பயணித்த ஒருவர் உயிரிழந்துள்ளார்.



உரும்பிராயில் சிக்கிய வாள்கள்!
[Wednesday 2024-05-01 17:00]

யாழ்ப்பாணம்- உரும்பிராய் பகுதியில் உள்ள வெற்று காணிக்குள் இருந்து மூன்று வாள்கள் மீட்கப்பட்டுள்ளன. கோப்பாய் பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் குறித்த காணிக்கு சென்ற பொலிஸார் மூன்று வாள்களையும் மீட்டு சென்றுள்ளனர். வாள்கள் மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பில் எவரும் கைது செய்யப்படாத நிலையில், அது தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.



மொட்டு, யானைக்கு பாஜக அழைப்பு!
[Wednesday 2024-05-01 17:00]

இந்தியாவில் லோக்சபா தேர்தல் பிரச்சாரம் சூடுபிடித்துள்ள நிலையில், ஆளும் கட்சியான பாரதிய ஜனதா கட்சி, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன மற்றும் ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதிநிதிகளை தேர்தல் நடைமுறைகள் குறித்து விழிப்புணர்வை பெற அழைப்பு விடுத்துள்ளதாக த ஹிந்து செய்தி வெளியிட்டுள்ளது.



மீன்பிடிக்கச் சென்றவர் சடலமாக மீட்பு!
[Wednesday 2024-05-01 17:00]

யாழ்ப்பாணத்தில் மீன் பிடிக்க சென்றவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். புங்குடுதீவு பகுதியை சேர்ந்த கதிரவேல் சுப்பிரமணியம் (வயது 64) என்பவரே சடலமாக மீட்கப்பட்டுள்ளார். சடலம் உடற்கூற்று பரிசோதனைக்காக யாழ்.போதனா வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ள நிலையில், ஊர்காவற்துறை பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துளள்னர்.



ஐதேக மேடையில் மொட்டு எம்.பி!
[Wednesday 2024-05-01 17:00]

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர் கயாஷான் நாவானந்த, ஐக்கிய தேசியக் கட்சியின் மே தினக் கூட்டத்தில் பங்கேற்றுள்ளார். ஐக்கிய தேசியக் கட்சியின் மே தினக் கூட்டம் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையில் கொழும்பு மாளிகாவத்தை பீ.டி.சிறிசேனா மைதானத்திற்கு முன்னால் நடைபெற்று வருகிறது.



தமிழ்ப் பொது வேட்பாளரை நிறுத்த தீர்மானம்!
[Wednesday 2024-05-01 03:00]

ஜனாதிபதி தேர்தலில் தமிழ்ப் பொது வேட்பாளரை நிறுத்துவதற்கு சிவில் சமூக செயற்பாட்டாளர்கள், மதத் தலைவர்கள் தீர்மானித்துள்ளனர்.



இலங்கையில் நீதி, பொறுப்புக்கூறலுக்கான அர்த்தமுள்ள நடவடிக்கைகளுக்கு ஆதரவளிக்கத் தயார்!
[Wednesday 2024-05-01 03:00]

இலங்கையில் நீதி, பொறுப்புக்கூறல், சமாதானம் மற்றும் நல்லிணக்கம் ஆகியவற்றுக்கு வழிவகுக்கக்கூடிய அர்த்தமுள்ள நடவடிக்கைகளுக்கு ஆதரவளிக்கத் தயாராக இருப்பதாக கொழும்பிலுள்ள கனேடிய உயர்ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது.



உயர்நீதிமன்ற நீதியரசர்களை நியமிக்க ஜனாதிபதிக்கு தடை!
[Wednesday 2024-05-01 03:00]

உயர்நீதிமன்றத்திற்கு பிரதம நீதியரசரை ஏனைய நீதியரசர்களை ஜனாதிபதி நியமிக்க முடியாது என உயர்நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது. சட்டத்தரணியொருவர் தாக்கல் செய்த அடிப்படை உரிமைமனுவை ஆராய்ந்த பின்னரே உயர்நீதிமன்றம் நேற்று இந்த இடைக்கால தடை உத்தரவை பிறப்பித்துள்ளது. சட்டத்தரணி சரித் மஹீபுத்திர பத்திரத்ன இந்த மனுவை தாக்கல் செய்திருந்தார்.



நள்ளிரவு முதல் குறைக்கப்பட்ட எரிபொருள் விலைகள்!
[Wednesday 2024-05-01 03:00]

நேற்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் எரிபொருட்களின் விலைகளை குறைத்துள்ளது.



கோட்டாவை வேட்பாளர் ஆக்குவதை எதிர்த்தேன்!
[Wednesday 2024-05-01 03:00]

நாடு இன்று எதிர்நோக்கும் நெருக்கடியிலிருந்து அனுபவம் வாய்ந்த முதிர்ந்த தலைவரால் மட்டுமே மீட்டெடுக்க முடியும் என்பதால், அனுபவமற்ற புதியவர்களிடம் நாட்டை ஒப்படைக்க நினைக்கவேண்டாம் என நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க மக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.



யாருக்கு வாக்களிக்க தூண்டுகிறேன்! - பேராயர் அறிக்கை.
[Wednesday 2024-05-01 03:00]

அண்மையில் இடம்பெற்ற பாராளுமன்ற விவாதத்தின் போது தம்மைப் பற்றி சில பாராளுமன்ற உறுப்பினர்கள் தெரிவித்த கருத்துக்கள் பொய்யானவை என கர்தினால் கொழும்பு பேராயர் மல்கம் கர்தினால் ரஞ்சித் ஆண்டகை வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளார்.



வவுனியாவில் வீட்டுக்குள் நுழைந்த முதலை!
[Wednesday 2024-05-01 03:00]

வவுனியா - கணேசபுரத்தில் உள்ள வீடு ஒன்றில் எட்டு அடி நீளமான முதலை ஒன்று நுழைந்துள்ளது. இதையடுத்து வீட்டு உரிமையாளர் வனஜீவராசிகள் திணைக்களத்துக்கு தகவல் வழங்கியதையடுத்து முதலை மீட்கப்பட்டது. அத்துடன் குறித்த முதலையினை பாதுகாப்பாக விடுவிப்பதற்குரிய நடவடிக்கையையும் வன ஜீவராசிகள் திணைக்களத்தினர் முன்னெடுத்திருந்தனர்.



உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை - நாட்டு மக்களுக்கும் நம்பிக்கையில்லை!
[Wednesday 2024-05-01 03:00]

உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல் சம்பவம் தொடர்பில் முன்வைத்த கேள்விகளுக்கு அரசாங்கம் முறையாக பதிலளிக்கவில்லை. விசாரணைகள் தொடர்பில் கத்தோலிக்க சபைக்கு மட்டுமல்ல நாட்டு மக்களுக்கும் நம்பிக்கையில்லை என பாராளுமன்ற உறுப்பினர் டிலான் பெரேரா தெரிவித்தார்.



மைதானத்தில் பேரணி நடத்தும் ஒரே கட்சி பெரமுனதானாம்!
[Wednesday 2024-05-01 03:00]

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனதனது மே தினக் கூட்டத்தை விளையாட்டு மைதானத்தில் நடத்தும் தனிப்பெரும் கட்சியாக மாறியுள்ளது, மற்றவர்களுக்கு இதேபோன்ற இடங்களைப் பெற்றுக்கொள்ள முடியவில்லை என்று கட்சியின் பொதுச் செயலாளர் பாராளுமன்ற உறுப்பினர் சாகர காரியவசம் தெரிவித்தார்.



ரத்துபஸ்வல துப்பாக்கிச் சூட்டு வழக்கின் தீர்ப்பு ஒத்திவைப்பு!
[Wednesday 2024-05-01 03:00]

கம்பஹா, வெலிவேரிய, ரத்துபஸ்வலயில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது, 3 பேரைச் சுட்டுக் கொன்று, 45 பேரைக் காயப்படுத்தியமைக்காக இராணுவ பிரிகேடியர் உட்பட 3 இராணுவ படையினருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கின் தீர்ப்பு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.


 gloriousprinters.com 2021
Vaheesan-Remax-2016
Rajeef sebarasha 2023/04/19
Airlinktravel-2020-01-01
Mahesan-Remax-169515-Seithy
NKS-Ketha-04-11-2021
Logan-Kumaresh-Homelife-02-02-2021
Ambikajewellers-01-08-2021-seithy
Karan Remax-2010
Kugeenthiran-200-2022-seithy
Asayan-Salon-2022-seithy
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> 12 10 2019 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Skanda Nite 2019 125th Anniversary நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா