Untitled Document
May 17, 2024 [GMT]
வவுணதீவில் இரண்டு பொலிசாரை கொன்றது எப்படி? - சஹ்ரானின் கூட்டாளிகள் பரபரப்பு வாக்குமூலம்
[Friday 2019-05-31 18:00]

“ பொலிஸ் சோதனைச் சாவடிக்குள் ஒருவர் தூங்கிக்கொண்டிருந்தார். மற்றையவர் வீதியில் நின்றிருந்தார். அவரிடம் பேச்சைக் கொடுத்துக் கொண்டிருந்தபோது, தூங்கிக் கொண்டிருந்தவரின் முகத்தை வலையால் மூடி கத்தியால் குத்தினோம். அவர் சத்தம் போட்டுவிட்டார். காலால் உதைத்தார். இதனால், திடுக்கிட்டு வீதியில் நின்றிருந்த பொலிஸார், துப்பாக்கியை தூக்கிவிட்டார். உடனடியாக லொக்போட்டு மடக்கிப் பிடித்து கத்தியால் குத்தினோம்” என தற்கொலைதாரி சஹ்ரான் ஹாஷிமினின் முக்கிய சகாக்கள் மூவரும் வாக்குமூலம் அளித்துள்ளனர்.

“ பொலிஸ் சோதனைச் சாவடிக்குள் ஒருவர் தூங்கிக்கொண்டிருந்தார். மற்றையவர் வீதியில் நின்றிருந்தார். அவரிடம் பேச்சைக் கொடுத்துக் கொண்டிருந்தபோது, தூங்கிக் கொண்டிருந்தவரின் முகத்தை வலையால் மூடி கத்தியால் குத்தினோம். அவர் சத்தம் போட்டுவிட்டார். காலால் உதைத்தார். இதனால், திடுக்கிட்டு வீதியில் நின்றிருந்த பொலிஸார், துப்பாக்கியை தூக்கிவிட்டார். உடனடியாக லொக்போட்டு மடக்கிப் பிடித்து கத்தியால் குத்தினோம்” என தற்கொலைதாரி சஹ்ரான் ஹாஷிமினின் முக்கிய சகாக்கள் மூவரும் வாக்குமூலம் அளித்துள்ளனர்.

  

வவுணதீவு சோதனைச் சாவடியில் பொலிஸார் இருவர், நவம்பர் 29 ஆம் திகதி, குத்தியும், துப்பாக்கிப் பிரயோகம் ​​மேற்கொண்டும் படுகொலை செய்யப்பட்டிருந்தனர். இந்தச் சம்பவம் தொடர்பில், தேசிய தௌஹீத் ஜமாஅத் அமைப்பின் தற்கொலைதாரி சஹ்ரான் ஹாஷிமினின் முக்கிய சகாக்கள் மூவர் கைது செய்யப்பட்டனர். சி.ஐ.டியினரால் கைதுசெய்யப்பட்ட அந்த மூவரும், கொழும்பிலிருந்து வவுணதீவு சோதனைச் சாவடிக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். அங்கு ஒத்திகைப் பார்க்கப்பட்டது. இதன்போதே, அம்மூவரும் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளனர் என பொலிஸ் உயரதிகாரியொருவர் தெரிவித்தார்.

“ஆயுதங்களை எடுப்பதற்கான கட்டளையை சஹ்ரான் பிறப்பித்திருந்தார். அதனடிப்படியில், சிரியாவில் ஐ.எஸ். பயிற்சி பெற்ற முஹமது ஆப்தீன் நில்கான் தலைமையிலான நால்வர் கொண்ட குழு, அவ்விரு பொலிஸாரையும் படுகொலை செய்து விட்டு, இரண்டு ஆயுதங்களையும் அபகரித்து சென்றது” என்றனர்.

இந்தச் சம்பவம் தொடர்பாக ஏப்ரல் மாதம் 27 ஆம் திகதி சஹ்ரானின் சாரதியான முஹமது சரீப் ஆதம்பாலெப்பை கபூர் (வயது 54), கம்சா முகைதீன் இம்ரான் (வயது 31) முஹமது ஆசிம் சியாம் (வயது 34) ஆகியோர் கைதுசெய்யப்பட்டனர். இவர்கள் அனைவரும் காத்தான்குடியைச் சேர்ந்தவர்களாவர்.

திஹாரியில், வேலை ஒன்று இருக்கின்றது அதற்கு ரி- 56 ரக துப்பாக்கிகள் தேவை. எனவே, அதனை எடுக்குமாறு வவுணதீவு பொலிஸார் கொலைச் சம்பவம் இடம்பெறுவதற்கு ஒரு மாதத்துக்கு முன்னர், சஹ்ரான் கட்டளையிட்டிருந்தார்.

வவுணதீவு சம்பவம் இடம்பெறுவதற்கு, 3 தினங்களுக்கு முன்னர் கொழும்பில் வைத்து கபூரிடம் ரி- 56 ரக துப்பாக்கியை கொடுத்த சஹ்ரான், அவரை கொழும்பு- அக்கரைப்பற்று பஸ்வண்டியில் எற்றி அனுப்பியுள்ளார். கபூர் காத்தான்குடியில் வந்திறங்கியபோது அவரை ஏற்றிச் செல்வதற்கு கார் ஒன்று ஆயத்தமாக இருந்துள்ளது. அதிலேறிய கபூர், ஒல்லிக்குளம் பகுதிக்குச் சென்று, அங்கு அந்த துப்பாக்கியை மறைத்து வைத்துள்ளார்.

வவுணதீவு சம்பவம் இடம்பெறுவதற்கு 3 கிழமைக்கு முன்னர் நில்கான், இம்ரான் மற்றும் சியாம் ஆகியோர் உன்னிச்சை பகுதியிலிருக்கும் கபூரின் நண்பனின் வாடிக்கு (கொட்டகை) சென்றுள்ளனர். இதன்போது வவுணதீவு வலையிறவு பாலத்தில் பொலிஸ் சோதனைச்சாவடியில் பொலிஸ் இருப்பதை அவதானித்தனர். இதனையடுத்து இந்த சோதனைச் சாவடியை தெரிவு செய்துள்ளனர்.

நவம்பர் 29 ஆம் திகதியை தெரிவு செய்தோம். ஏனென்றால் 27 ஆம் திகதி விடுதலைப் புலிகளின் மாவீரர் தினம் ஆகும். அதன் பின்னர் பொலிஸாரைக் கொன்றால் அது புலிகளின் முன்னாள் போராளிகள் மீது பாதுகாப்பு படையினர் முழு சந்தேகமும் ஏற்படும். எனவே, எங்கள் மீது ஒரு துளிகூட சந்தேகம் ஏற்படாது என்பதற்காக இந்த இடம் மற்றும் திகதியைத் தெரிவு செய்தோம் என்றார்.

அன்றையதினம், முஹமது ஆப்தீன் நில்கான் தலைமையில் இந்தத் தாக்குதலுக்கு, ஒல்லிக்குளம் பகுதியில் அமைந்திருந்த முகாமிலிருந்து கபூரும், நில்கானும் சூட்டிபப் ரக மோட்டார் சைக்கிளில் ரி- 56 ரக துப்பாக்கியும் மாடு அறுக்கும் கூரிய கிறிஸ்ரக கத்திகளையும் மோட்டர் சைக்கிள் உட்பட இரு மோட்டார் சைக்கிளில் அங்கிருந்து நள்ளிரவு 1 மணிக்கு வெளியேறி காத்தான்குடி பகுதிக்கு வரும்போது இடையில் காத்திருந்த இம்ரானை ஏற்றிக் கொண்டனர்.

கல்லடி பாலத்தின் வாவிக்கரை வீதி ஊடாக பயணித்த மோட்டார் சைக்கிள், மட்டு பொலிஸ் நிலையத்துக்கு அருகிலுள்ள எரிபொருள் நிரப்பும் நிலையத்தில் பெற்றோலை நிரப்பிக்கொண்டு ஏறாவூர் செங்கலடி சந்திக்குச் சென்று அங்கிருந்து பதுளை வீதி ஊடாக கரடியனாறு, ஆயித்திமலைக்குச் சென்றுள்ளது.

அங்கிருந்து வவுணதீவு பொலிஸ் நிலையத்துக்கு முன்னாள் உள்ள சந்திக்குச் சென்று அங்கு பொலிஸ் சோதனைச் சாவடிக்கு சென்றுள்ளது. அப்போது, சோதனைச் சாவடிக்கு முன்பாக நடுவீதியில் நின்றுள்ளனர்.

இந்த நிலையில், வழமையாக மாடு ஏற்றும் தொழிலில் ஈடுபட்டுவந்த முஹமது ஆசீம் சியாம், மாடு ஏற்றும் லொறியுடன் சென்று பொலிஸ் சோதனைச் சாவடிக்கு அருகாமையில் அன்றையதினம் நின்றிருந்தார். லொறியில் சியாம் காத்திருந்துள்ளார்.

இந்த நிலையில், வேவு பார்ப்பதற்கு சோதனைச் சாவடிக்கு அருகில் சென்று திரும்பி வந்த இம்ரான், காத்திருந்த நில்கான், கபூர் ஆகியோரிடம் இரு பொலிஸார் நிற்பதாகத் தெரிவித்துள்ளளார்.

அப்போது லொறியை சோதனைச் சாவடிக்கு அருகில் செல்லுமாறு உத்தரவிட்டனர். அந்த லொறியிலிருந்து சியாம் இறங்கியதும், அந்த லொறி வவுணதீவு பிரதேசத்தை நோக்கிச் சென்றது. அந்தச் சந்தர்ப்பத்தில் மற்றுமொரு மோட்டார் சைக்கிள் அப்பகுதியூடாக வந்து கொண்டிருந்துள்ளது. அது மட்டக்களப்பு பகுதியை நோக்கி செல்லும் வரை சகலரும் காத்திருந்தனர்.

அதன் பின்னர், மோட்டார் சைக்கிளில் நான்கு பேரும் சோதனைச் சாவடிக்கு அருகில் சென்று அங்கு மோட்டார் சைக்கிளை நிறுத்திவிட்டு கபூரும், இம்ரானும் பொலிஸ் உத்தியோகத்தரான கணேஸ் டினேஸ்க்கு அருகில் சென்று பேசிக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு இருட்டான பகுதியில் நில்கானும் சியாமும் சென்று நின்றிருந்தனர். இதன்போது சோதனைச் சாவடியின் உட்பகுதியில் பொலிஸ் சார்ஜனான நிரோசன் இந்திர பிரசன்னா நித்திரையில் இருந்துள்ளார்.

இந்தவேளை, நள்ளிரவு 2.40 மணிக்கு டினேஸ் உடன் இம்ரான் நன்றாக கதைத்துக் கொண்டிருந்துள்ள போது அங்கிருந்து கபூரும் இருட்டில் பதுங்கிருந்த நில்கானும் சோதனைச் சாவடி உள்பகுதில் படுத்திருந்த பொலிஸ் சாஜன் இந்திக பிரசன்னாவின் முகம், கழுத்து பகுதியை வலையால் மூடினர். அப்போது, கத்தியால் கபூர் குத்தியுள்ளார். திமிறிய அவ்விருவர் மீதும் பொலிஸ் சாஜன் உதைத்துள்ளார்.

இதன்போதே, வெளியிலிருந்த பொலிஸ் டினேஸ்க்கு சத்தம் கேட்டுள்ளது. அவர் தன்னை ஆயத்தமாகி கொள்வதற்கு இடையில் அவரை லெக்போட்டு இம்ரான் பிடித்துக்கொண்டார். கத்தியால் சியாம் வெட்டியதையடுத்து அவர் கீழே வீழ்ந்து மயங்கியுள்ளார்.

இதன் பின்னர், பொலிஸ் சாஜன் பிரசன்னாவை குப்புற போட்டுக்கொண்டு, நில்கான் கொண்டு சென்ற ரி-56 ரக துப்பாக்கியால் , அவர் மீது இரண்டு தடவைகள், சுட்டுள்ளார். அதன்போது கபூர் அவர் மீது கத்தியால் 9 தரம் குத்தியுள்ளார். பின்னர் மயங்கிக் கிடந்த பொலிஸ் உத்தியோகத்தர் டினேஸின் இரண்டு கைகளையும் பின்னால் வைத்து கட்டிப்போட்டு அவர் மீது கத்தியால் தாக்குதல் நடாத்திவிட்டு துப்பாக்கியால் சுட்டுக் கொன்றனர்.

அதன்பின்னர் உடனடியாக பொலிஸாரிடமிருந்த ரிவோல்வர் ரக கை துப்பாக்கி இரண்டையும் எடுத்துக் கொண்டு வவுணதீவு ஊடாக கொக்கட்டி ச்சோலை சென்று அங்கிருந்து மண்முனை பாலத்துக்கு சென்றுகொண்டிருந்த போது, ஒரு மோட்டார் சைக்கிளின் டயர் காற்றுப் போயுள்ளதையடுத்து அதனை உருட்டிக் கொண்டு ஒல்லிக்குள ப்பகுதியில் அமைத்திருந்த முகாமுக்கு சென்றனர்.

அங்கிருந்து பொலிஸாரிடம் கைப்பற்றப்பட்ட றிவோல்வர் ஒன்றை நிந்தவூர் பகுதியில் புதைத்து வைத்ததுடன் மற்ற ரிவோல்வர் உட்பட 6 கைத் துப்பாக்கிகளையும் புத்தளம் பகுதிக்கு எடுத்துசென்ற கபூர், அங்கு புதைத்து வைத்துள்ளார்

இந்தத் தாக்குதலுக்குப் பயன்படுத்திய ரி- 56 ரக துப்பாக்கியை சஹ்ரானின் தம்பியிடம் ஒப்படைத்துள்ளதாகவும் அதன் பின்னர் சாய்ந்தமருதில் இடம்பெற்ற தற்கொலை குண்டு தாக்குதலில் உயிரிழந்த ஒருவரின் கைகளில் இருந்து அந்தத் துப்பாக்கியைப் படையினர் மீட்டுள்ளனர் என சி.ஐ.டி யினரின் ஆரம்ப விசாரணையில் தெரியவந்துள்ளது

இதேவேளை, இந்தத் திட்டத்துக்கு தலைமை தாங்கிய நில்கான், சவூதி அரோபியாவுக்குச் செல்வதற்கான, விசா, விமான சீட்டு என்பவற்றை ஏற்கெனவே ஒழுங்குபடுத்தி விட்டு வந்திருந்தமையால், தாக்குதல் நடத்திய கையுடன், சவூதி அரோபியாவுக்கு அவர் உடனடியாகத் தப்பிச் சென்றார்.

நில்கானை அந்நாட்டு பொலிஸார் கைது செய்துள்ளனர் எனத் தெரிவித்த சி.ஐ.டியின் அதிகாரியொருவர், அவரை இலங்கைக்கு அழைத்து வருவதற்கான இராஜதந்திர நடவடிக்கையில் குற்றப் புலனாய்வு பிரிவினர் மேற்கொண்டு வருகின்றனர் என்றார்.

  
   Bookmark and Share Seithy.com



இனப்படுகொலை, பொதுசன வாக்கெடுப்பு - அமெரிக்க காங்கிரசில் பிரேரணை!
[Friday 2024-05-17 05:00]

இலங்கை அரசாங்கம் தமிழ் மக்களிற்கு எதிரான இனப்படுகொலையில் ஈடுபட்டது என்பதை அமெரிக்க காங்கிரஸ் ஏற்றுக்கொள்ளவேண்டும் ஈழத்தமிழர்களிற்கான சுதந்திரம் குறித்த சர்வஜன வாக்கெடுப்பை நடத்துவதை நோக்கிய செயற்பாடுகளில் ஈடுபடவேண்டும் என கோரும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தீர்மானம் அமெரிக்க காங்கிரஸில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.



முள்ளிவாய்க்கால் நினைவுக் கஞ்சிக்கு தடையை நீக்கியது மூதூர் நீதிமன்றம்! Top News
[Friday 2024-05-17 05:00]

முள்ளிவாய்க்கால் நினைவுக் கஞ்சியை வழங்குவதற்கு மூதூர் நீதிமன்றம் முன்னர் வழங்கியிருந்த தடை உத்தரவை வியாழக்கிழமை நீக்கியுள்ளது என இவ் வழக்கில் எதிராளிகள் சார்பில் முன்னிலையாகிய சட்டத்தரணி சுகாஸ் கூறியுள்ளார் .



கொக்குத்தொடுவாய் மனிதப்புதைகுழி அகழ்வு பணிகளை மீள ஆரம்பிக்க முடிவு!
[Friday 2024-05-17 05:00]

கொக்குத்தொடுவாய் மனிதப்புதைகுழி அகழ்வாய்வுப்பணிகளை மீள ஆரம்பிக்க முடிவெடுக்கப்பட்டுள்ளது.



நினைவேந்தல் தொடர்பில் பொது கொள்கை இல்லையா? - ரணிலின் மனோ கேள்வி.
[Friday 2024-05-17 05:00]

“நினைவேந்தல் தொடர்பில் ஒரு பொது கொள்கை ஏன் அரசுக்கு இல்லை என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம் நேற்றிரவு தொலைபேசியில் கேட்டேன். மேலும், தனிப்பட்ட இல்லம் ஒன்றுக்கு தேடி சென்று இறந்தவர்களை நினைவில் ஏந்தி நிற்கும் தமிழ் பெண்களை கதற வைத்து, இழுத்து சென்று கைது செய்யும் அளவுக்கு, ஸ்ரீலங்கா பொலிசுக்கு அப்படி என்ன அவசர தேவை இருக்கிறது?” என்றும் கேட்டேன்.



தமிழ்க்கட்சிகளின் ஒற்றுமையை வலியுறுத்தினார் அமெரிக்க தூதுவர்! Top News
[Friday 2024-05-17 05:00]

தமிழ்க்கட்சிகள் பிளவுபட்டு நிற்பது பலவீனத்தையே வெளிப்படுத்தும் எனவும், கட்சிகள் ஒன்றுபட்டு நின்றால் மாத்திரமே தமிழர் பிரச்சினைகளுக்கான தீர்வு குறித்து தம்மால் பேசமுடியும் என அமெரிக்கத்தூதுவர் ஜுலி சங்,தெரிவித்துள்ளார்.



நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் 4வது நாடாளுமன்றத்தின் தொடக்கக் கூட்டம்! Top News
[Friday 2024-05-17 05:00]

நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் 4வது நாடாளுமன்றத்தின்,தொடக்கக் கூட்டம் மே 17 முதல் 19 வரை நியூயார்க்கில் நடைபெறுகிறது.



சுமைகாவியின் கன்னத்தில் அறைந்த அமைச்சர்!
[Friday 2024-05-17 05:00]

கட்டுநாயக்க விமான நிலையத்தில் பயணிகளின் பயணப் பொதிகளை ஏற்றிச் செல்லும் சுமைகாவி ஒருவரை இராஜாங்க அமைச்சர் பிரசன்ன ரணவீர தாக்கியுள்ளார்.



காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களைச் சந்திக்கிறார் சர்வதேச மன்னிப்புச் சபையின் செயலாளர்!
[Friday 2024-05-17 05:00]

முதன்முறையாக இலங்கைக்கு வருகை தந்துள்ள சர்வதேச மன்னிப்புச்சபையின் செயலாளர் நாயகம் அக்னெஸ் கலமார்ட் இன்று முல்லைத்தீவில் வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவினர்களைச் சந்தித்துக் கலந்துரையாடவுள்ளார்.



மார்க்கம் தோர்ன்ஹில் தொகுதியில் கொன்சர்வேட்டிவ் வேட்பாளராக போட்டியிட தமிழர் தெரிவு!
[Friday 2024-05-17 05:00]

கனேடிய பொதுத் தேர்தலில் போட்டியிட கொன்சர்வேட்டிவ் கட்சியின் சார்பில் தமிழர் ஒருவர் வேட்பாளராக தெரிவாகியுள்ளதாக கனேடிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.



ஜூன் 4ஆம் திகதி உயர்தர வகுப்புகள் ஆரம்பம்!
[Friday 2024-05-17 05:00]

நடைபெற்ற கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சைக்கு தோற்றிய மாணவர்களுக்கான உயர்தர வகுப்புக்களை ஆரம்பிக்க தேவையான அனைத்து நடவடிக்கைகளும் தயார்படுத்தப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.



வெருகலிலும் முள்ளிவாய்க்கால் கஞ்சிக்கு தடை! - இரவில் வீடுகளுக்கு சென்று அச்சுறுத்தல்.
[Thursday 2024-05-16 15:00]

திருகோணமலை- வெருகல் பகுதியில் முள்ளிவாய்க்கால் நினைவுக் கஞ்சி பரிமாறும் நிகழ்வை முன்னெடுக்க முயன்ற சமூக செயற்பாட்டாளர்களின் வீடுகளுக்கு இரவோடு இரவாக சென்று, நிகழ்வை தடுக்கும் வகையில் பொலிஸார் அச்சுறுத்தியுள்ளனர்.



ஆட்சிக்கு வந்ததும் மதுக்கடைகளை மூடுவேன்! - சஜித் அதிரடி அறிவிப்பு.
[Thursday 2024-05-16 15:00]

எதிர்காலத்தில் அமையவுள்ள ஐக்கிய மக்கள் சக்தி (SJB) அரசாங்கம் அனைத்து மதுபானசாலைகள் மற்றும் மதுபானக் கடைகளை மூடும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இன்று தெரிவித்துள்ளார்.



அடுத்தவாரம் யாழ்ப்பாணம் வருகிறார் ஜனாதிபதி! - பாதுகாப்பு தீவிரம்.
[Thursday 2024-05-16 15:00]

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க எதிர்வரும் 24 ஆம் திகதி யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சிக்கு விஜயம் செய்யவுள்ளார். ஜனாதிபதியின் இந்த விஜயத்தை முன்னிட்டு பாதுகாப்ப பலப்படுத்தப்பட்டுள்ளது.



முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கலும், நினைவு நிகழ்வுகளும்! Top News
[Thursday 2024-05-16 15:00]

இலங்கை தமிழரசு கட்சியின் நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர் ஈஸ்வரவாதம் சரவணபவனின் ஏற்பாட்டில் வட்டுக்கோட்டை தொகுதி கிளையால் முள்ளிவாய்க்கால் கஞ்சி விநியோகமும் முள்ளிவாய்க்கால் நினைவு ஊர்தி பவனியும் நேற்றிரவு 7மணியளவில் மாவிட்டபுரம் மற்றும் தெல்லிப்பழையில் ஆகிய இடங்களில் இலங்கை தமிழரசு கட்சியின் தலைவர் மாவை சோ. சேனாதிராஜா தலைமையில் முன்னெடுக்கப்பட்டது.



அமைச்சர் ஷெஹான் சேமசிங்கவுக்கு கொலை மிரட்டல்!
[Thursday 2024-05-16 15:00]

நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்கவுக்கு எதிரான கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ள சம்பவம் தொடர்பான விசாரணைகளை கோட்டை பொலிஸ் நிலையம் ஆரம்பித்துள்ளது.



தாளையடியில் கொலை செய்யப்பட்ட பெண்ணின் கணவன் கைது!
[Thursday 2024-05-16 15:00]

யாழ்ப்பாணம் - தாளையடியில் பெண்ணொருவர் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டு, கழுத்து நெரித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக அவரது கணவன் சந்தேகத்தின் அடிப்படையில் கைது செய்யப்பட்டார்.



இந்தோனேசியா செல்கிறார் ஜனாதிபதி!
[Thursday 2024-05-16 15:00]

இந்தோனேசிய ஜனாதிபதி ஜோகோ விடோடோவின் அழைப்பின் பேரில் மே 18 முதல் 20 வரை இந்தோனேசியாவில் நடைபெறும் 10வது உலக நீர் மன்றத்தின் உயர்மட்டக் கூட்டத்தில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கலந்துகொள்வார் என்று ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.



இராணுவத்தினரின் எண்ணிக்கையை ஒரு இலட்சமாக குறைக்கத் திட்டம்!
[Thursday 2024-05-16 15:00]

2030 ஆம் ஆண்டளவில் இராணுவத்தினரின் எண்ணிக்கையை ஒரு இலட்சமாக குறைப்பதற்கு எதிர்பார்க்கப்படுவதாக பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரமித பண்டார தென்னகோன் தெரிவித்துள்ளார்.



ரஷ்யா செல்கிறது விசேட குழு!
[Thursday 2024-05-16 15:00]

ரஷ்யாவிற்கு கடத்தப்பட்ட இலங்கையர்களை நாடு திருப்புவதற்கான சாத்தியக்கூறுகளை ஆராய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க விசேட குழுவொன்றை ரஷ்யாவிற்கு அனுப்பியுள்ளார்.



இந்திய- இலங்கை கப்பல் சேவை மீண்டும் ஒத்திவைப்பு!
[Thursday 2024-05-16 15:00]

இந்தியா - இலங்கை இடையேயான பன்னாட்டு பயணியர் படகு போக்குவரத்து சேவை மீண்டும் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.


Karan Remax-2010
Mahesan-Remax-169515-Seithy
Rajeef sebarasha 2023/04/19
 gloriousprinters.com 2021
Logan-Kumaresh-Homelife-02-02-2021
Airlinktravel-2020-01-01
Asayan-Salon-2022-seithy
Vaheesan-Remax-2016
NKS-Ketha-04-11-2021
Kugeenthiran-200-2022-seithy
Ambikajewellers-01-08-2021-seithy
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> 12 10 2019 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Skanda Nite 2019 125th Anniversary நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா