Untitled Document
May 17, 2024 [GMT]
எங்களுக்காக யாரும் போராட வரவில்லை! - காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள்
[Thursday 2019-06-27 07:00]

எங்களுக்காக எந்த அரசியல் பிரதிநிதிகளும்  உண்ணாவிரதம் இருக்கவுமில்லை போராட்டத்தில் அக்கறையுடன் கலந்து கொள்ளவுமில்லை என முல்லைத்தீவில் போராட்டம் நடத்திவரும் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் தெரிவித்துள்ளார்கள்.

எங்களுக்காக எந்த அரசியல் பிரதிநிதிகளும் உண்ணாவிரதம் இருக்கவுமில்லை போராட்டத்தில் அக்கறையுடன் கலந்து கொள்ளவுமில்லை என முல்லைத்தீவில் போராட்டம் நடத்திவரும் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் தெரிவித்துள்ளார்கள்.

  

முல்லைத்தீவு மாவட்டத்தில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவினர்கள் இன்றுடன் 842 ஆவது நாளாக தொடர் போராட்டத்தினை மேற்கொண்டு வருகின்றார்கள்.இந்நிலையில் நேற்றையதினம் முல்லைத்தீவில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்கள் .

இதன்போது முல்லைத்தீவு மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் சங்க தலைவி ம.ஈஸ்வரி கருத்து தெரிவிக்கையில் ,

இன்னும் சில நாட்களில் ஐக்கிய நாடுகள் சபையின் அமர்வு நடைபெற்றவிருக்கின்றது . கடந்த 40 ஆவது அமர்விலும் காணாமல் போனவர்கள் தொடர்பில் சாதகமான பதில் எதுவும் கிடைக்கவில்லை நாங்கள் இந்த போராட்டத்தினை தொடர்ச்சியாக செய்து கொண்டிருக்கின்றோம் என்பதை அனைவரும் உணரவேண்டும் .

அந்தவகையில் எதிர்வரும் 30 .06.2019 ஞாயிற்று கிழமை அன்று மாபெரும் கவனயீர்ப்பு போராட்டத்தினை முல்லைத்தீவு மாவட்டத்தில் நடாத்தவுள்ளோம் . அன்றையதினம் காலை 10 மணிக்கு நடைபெறும் கவனயீர்ப்பில் எமக்காக குரல்கொடுக்கக்கூடிய அனைத்து தரப்பினரையும் ஆதரவுக்காக வேண்டிநிற்கின்றோம் .அனைவரும் வருகைதந்து போராட்டத்தில் பங்குபற்றி எமக்கான நீதியை பெற்றுத்தருவதற்குகு குரல்கொடுக்குமாறு வேண்டுகின்றோம்.

நாங்கள் இன்று பத்து ஆண்டுகளாக காணாமல் ஆக்கப்பட்ட எம் உறவுகளை தேடி வருகின்றோம். எங்களுக்காக எந்த அரசியல் பிரதிநிதிகழும் உண்ணாவிரம் இருக்கவும் இல்லை போராட்டத்தில் தொடர்ந்து அக்கறையுடன் கலந்துகொள்ளவும் இல்லை எங்களைப்பற்றி எடுத்து கதைப்பதற்கு கூட நாதியற்றவர்களாக நாம் இருக்கின்றோம்.

இந்நிலையில், அண்மையில் கல்முனை பிரதேசத்தில் பிரதேச செயலக உயர்வுக்காக யாராரோ போராடி இருக்கின்றார்கள். இந்த நிலையில் எங்கள் அரசியல் பிரமுகர்கள் அந்த பிரச்சனையினை கையில் எடுத்து பேசினார்கள். பிரதமருடன் பேசி அவர் சொன்ன தீர்வை பெற்றுக்கொண்டு கல்முனைக்கு ஓடினார்கள். அதேபோன்று ஏன் 10 ஆண்டுகளாக நீதியை கோரியும் கடந்த 2 ஆண்டுகளுக்கு மேலாக தொடர் போராட்டத்தினையும் மேற்கொண்டுவரும் எமக்காகவும் எமது போராட்டத்துக்காகவும் இதே பிரதமருடனும் அரசுடனும் பேசி போராட்டத்திற்கான நீதியினை அரசிடம் இருந்து ஒரு சின்ன பதிலாவது பெற்றுக்கொண்டு எம்மிடம் எமது பிரதிநிதிகள் வரவில்லை? எமது உறவுகள் வெள்ளைவானில் கடத்தப்பட்டுள்ளார்கள்,படையினரிடம் ஒப்படைத்துள்ளோம், காணாமல் ஆக்கப்பட்டவர்கள் என்று பலதரப்பட்ட வித்தல் எங்கள் உறவுகள் காணப்படுகின்றார்கள்.

இவை அனைத்தும் எங்கள் அரசியல் தலைமைகளுக்கு தெரியும் அவர்கள் ஒரு சின்ன ஆறுதல் கூட எங்களுக்கு கூறவில்லை ஆனால் அவர்கள் சொல்கின்றார்கள் அதற்காகத்தான் காணாமல் போனவர்களுக்கான அலுவலகம் கொண்டுவந்துள்ளோம் என்று சொல்கின்றார்கள் அரசின் நிகழ்ச்சி நிரலில் வந்த அந்த அலுவலகம் எம்மை ஏமாற்றுவதற்க்காகவும் உலகை ஏமாற்றுவதற்க்காகவும் கொண்டுவரப்பட்டது அதற்குள் எங்களை கொண்டுசென்று திணிக்ககூடாது.

உண்மையாக எங்களுக்கும் பாரபட்சம் பார்க்காமல் எம்மையும் கவனியுங்கள் எங்கள் வலியுடனும்,வேதனையுடனும் இதனை தெரியப்படுத்துகின்றோம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

  
   Bookmark and Share Seithy.com



இனப்படுகொலை, பொதுசன வாக்கெடுப்பு - அமெரிக்க காங்கிரசில் பிரேரணை!
[Friday 2024-05-17 05:00]

இலங்கை அரசாங்கம் தமிழ் மக்களிற்கு எதிரான இனப்படுகொலையில் ஈடுபட்டது என்பதை அமெரிக்க காங்கிரஸ் ஏற்றுக்கொள்ளவேண்டும் ஈழத்தமிழர்களிற்கான சுதந்திரம் குறித்த சர்வஜன வாக்கெடுப்பை நடத்துவதை நோக்கிய செயற்பாடுகளில் ஈடுபடவேண்டும் என கோரும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தீர்மானம் அமெரிக்க காங்கிரஸில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.



முள்ளிவாய்க்கால் நினைவுக் கஞ்சிக்கு தடையை நீக்கியது மூதூர் நீதிமன்றம்! Top News
[Friday 2024-05-17 05:00]

முள்ளிவாய்க்கால் நினைவுக் கஞ்சியை வழங்குவதற்கு மூதூர் நீதிமன்றம் முன்னர் வழங்கியிருந்த தடை உத்தரவை வியாழக்கிழமை நீக்கியுள்ளது என இவ் வழக்கில் எதிராளிகள் சார்பில் முன்னிலையாகிய சட்டத்தரணி சுகாஸ் கூறியுள்ளார் .



கொக்குத்தொடுவாய் மனிதப்புதைகுழி அகழ்வு பணிகளை மீள ஆரம்பிக்க முடிவு!
[Friday 2024-05-17 05:00]

கொக்குத்தொடுவாய் மனிதப்புதைகுழி அகழ்வாய்வுப்பணிகளை மீள ஆரம்பிக்க முடிவெடுக்கப்பட்டுள்ளது.



நினைவேந்தல் தொடர்பில் பொது கொள்கை இல்லையா? - ரணிலின் மனோ கேள்வி.
[Friday 2024-05-17 05:00]

“நினைவேந்தல் தொடர்பில் ஒரு பொது கொள்கை ஏன் அரசுக்கு இல்லை என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம் நேற்றிரவு தொலைபேசியில் கேட்டேன். மேலும், தனிப்பட்ட இல்லம் ஒன்றுக்கு தேடி சென்று இறந்தவர்களை நினைவில் ஏந்தி நிற்கும் தமிழ் பெண்களை கதற வைத்து, இழுத்து சென்று கைது செய்யும் அளவுக்கு, ஸ்ரீலங்கா பொலிசுக்கு அப்படி என்ன அவசர தேவை இருக்கிறது?” என்றும் கேட்டேன்.



தமிழ்க்கட்சிகளின் ஒற்றுமையை வலியுறுத்தினார் அமெரிக்க தூதுவர்! Top News
[Friday 2024-05-17 05:00]

தமிழ்க்கட்சிகள் பிளவுபட்டு நிற்பது பலவீனத்தையே வெளிப்படுத்தும் எனவும், கட்சிகள் ஒன்றுபட்டு நின்றால் மாத்திரமே தமிழர் பிரச்சினைகளுக்கான தீர்வு குறித்து தம்மால் பேசமுடியும் என அமெரிக்கத்தூதுவர் ஜுலி சங்,தெரிவித்துள்ளார்.



நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் 4வது நாடாளுமன்றத்தின் தொடக்கக் கூட்டம்! Top News
[Friday 2024-05-17 05:00]

நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் 4வது நாடாளுமன்றத்தின்,தொடக்கக் கூட்டம் மே 17 முதல் 19 வரை நியூயார்க்கில் நடைபெறுகிறது.



சுமைகாவியின் கன்னத்தில் அறைந்த அமைச்சர்!
[Friday 2024-05-17 05:00]

கட்டுநாயக்க விமான நிலையத்தில் பயணிகளின் பயணப் பொதிகளை ஏற்றிச் செல்லும் சுமைகாவி ஒருவரை இராஜாங்க அமைச்சர் பிரசன்ன ரணவீர தாக்கியுள்ளார்.



காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களைச் சந்திக்கிறார் சர்வதேச மன்னிப்புச் சபையின் செயலாளர்!
[Friday 2024-05-17 05:00]

முதன்முறையாக இலங்கைக்கு வருகை தந்துள்ள சர்வதேச மன்னிப்புச்சபையின் செயலாளர் நாயகம் அக்னெஸ் கலமார்ட் இன்று முல்லைத்தீவில் வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவினர்களைச் சந்தித்துக் கலந்துரையாடவுள்ளார்.



மார்க்கம் தோர்ன்ஹில் தொகுதியில் கொன்சர்வேட்டிவ் வேட்பாளராக போட்டியிட தமிழர் தெரிவு!
[Friday 2024-05-17 05:00]

கனேடிய பொதுத் தேர்தலில் போட்டியிட கொன்சர்வேட்டிவ் கட்சியின் சார்பில் தமிழர் ஒருவர் வேட்பாளராக தெரிவாகியுள்ளதாக கனேடிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.



ஜூன் 4ஆம் திகதி உயர்தர வகுப்புகள் ஆரம்பம்!
[Friday 2024-05-17 05:00]

நடைபெற்ற கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சைக்கு தோற்றிய மாணவர்களுக்கான உயர்தர வகுப்புக்களை ஆரம்பிக்க தேவையான அனைத்து நடவடிக்கைகளும் தயார்படுத்தப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.



வெருகலிலும் முள்ளிவாய்க்கால் கஞ்சிக்கு தடை! - இரவில் வீடுகளுக்கு சென்று அச்சுறுத்தல்.
[Thursday 2024-05-16 15:00]

திருகோணமலை- வெருகல் பகுதியில் முள்ளிவாய்க்கால் நினைவுக் கஞ்சி பரிமாறும் நிகழ்வை முன்னெடுக்க முயன்ற சமூக செயற்பாட்டாளர்களின் வீடுகளுக்கு இரவோடு இரவாக சென்று, நிகழ்வை தடுக்கும் வகையில் பொலிஸார் அச்சுறுத்தியுள்ளனர்.



ஆட்சிக்கு வந்ததும் மதுக்கடைகளை மூடுவேன்! - சஜித் அதிரடி அறிவிப்பு.
[Thursday 2024-05-16 15:00]

எதிர்காலத்தில் அமையவுள்ள ஐக்கிய மக்கள் சக்தி (SJB) அரசாங்கம் அனைத்து மதுபானசாலைகள் மற்றும் மதுபானக் கடைகளை மூடும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இன்று தெரிவித்துள்ளார்.



அடுத்தவாரம் யாழ்ப்பாணம் வருகிறார் ஜனாதிபதி! - பாதுகாப்பு தீவிரம்.
[Thursday 2024-05-16 15:00]

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க எதிர்வரும் 24 ஆம் திகதி யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சிக்கு விஜயம் செய்யவுள்ளார். ஜனாதிபதியின் இந்த விஜயத்தை முன்னிட்டு பாதுகாப்ப பலப்படுத்தப்பட்டுள்ளது.



முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கலும், நினைவு நிகழ்வுகளும்! Top News
[Thursday 2024-05-16 15:00]

இலங்கை தமிழரசு கட்சியின் நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர் ஈஸ்வரவாதம் சரவணபவனின் ஏற்பாட்டில் வட்டுக்கோட்டை தொகுதி கிளையால் முள்ளிவாய்க்கால் கஞ்சி விநியோகமும் முள்ளிவாய்க்கால் நினைவு ஊர்தி பவனியும் நேற்றிரவு 7மணியளவில் மாவிட்டபுரம் மற்றும் தெல்லிப்பழையில் ஆகிய இடங்களில் இலங்கை தமிழரசு கட்சியின் தலைவர் மாவை சோ. சேனாதிராஜா தலைமையில் முன்னெடுக்கப்பட்டது.



அமைச்சர் ஷெஹான் சேமசிங்கவுக்கு கொலை மிரட்டல்!
[Thursday 2024-05-16 15:00]

நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்கவுக்கு எதிரான கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ள சம்பவம் தொடர்பான விசாரணைகளை கோட்டை பொலிஸ் நிலையம் ஆரம்பித்துள்ளது.



தாளையடியில் கொலை செய்யப்பட்ட பெண்ணின் கணவன் கைது!
[Thursday 2024-05-16 15:00]

யாழ்ப்பாணம் - தாளையடியில் பெண்ணொருவர் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டு, கழுத்து நெரித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக அவரது கணவன் சந்தேகத்தின் அடிப்படையில் கைது செய்யப்பட்டார்.



இந்தோனேசியா செல்கிறார் ஜனாதிபதி!
[Thursday 2024-05-16 15:00]

இந்தோனேசிய ஜனாதிபதி ஜோகோ விடோடோவின் அழைப்பின் பேரில் மே 18 முதல் 20 வரை இந்தோனேசியாவில் நடைபெறும் 10வது உலக நீர் மன்றத்தின் உயர்மட்டக் கூட்டத்தில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கலந்துகொள்வார் என்று ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.



இராணுவத்தினரின் எண்ணிக்கையை ஒரு இலட்சமாக குறைக்கத் திட்டம்!
[Thursday 2024-05-16 15:00]

2030 ஆம் ஆண்டளவில் இராணுவத்தினரின் எண்ணிக்கையை ஒரு இலட்சமாக குறைப்பதற்கு எதிர்பார்க்கப்படுவதாக பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரமித பண்டார தென்னகோன் தெரிவித்துள்ளார்.



ரஷ்யா செல்கிறது விசேட குழு!
[Thursday 2024-05-16 15:00]

ரஷ்யாவிற்கு கடத்தப்பட்ட இலங்கையர்களை நாடு திருப்புவதற்கான சாத்தியக்கூறுகளை ஆராய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க விசேட குழுவொன்றை ரஷ்யாவிற்கு அனுப்பியுள்ளார்.



இந்திய- இலங்கை கப்பல் சேவை மீண்டும் ஒத்திவைப்பு!
[Thursday 2024-05-16 15:00]

இந்தியா - இலங்கை இடையேயான பன்னாட்டு பயணியர் படகு போக்குவரத்து சேவை மீண்டும் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.


Vaheesan-Remax-2016
 gloriousprinters.com 2021
Karan Remax-2010
Logan-Kumaresh-Homelife-02-02-2021
NKS-Ketha-04-11-2021
Mahesan-Remax-169515-Seithy
Ambikajewellers-01-08-2021-seithy
Asayan-Salon-2022-seithy
Rajeef sebarasha 2023/04/19
Airlinktravel-2020-01-01
Kugeenthiran-200-2022-seithy
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> 12 10 2019 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Skanda Nite 2019 125th Anniversary நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா