Untitled Document
May 14, 2024 [GMT]
அமெரிக்க பொது தேர்தல் 2020: மக்கள் தெரிந்துகொள்ள வேண்டியவை!...
[Sunday 2020-01-19 18:00]

வெள்ளை மாளிகையில் குடியேறுவதற்கான போட்டி உற்சாகத்துடன் தொடங்கியுள்ளது. 2020 அமெரிக்க பொதுத் தேர்தலின் முடிவு, உலகம் முழுக்க தாக்கத்தை ஏற்படுத்தும். எனவே, இப்போதைய நிலை என்ன என்பதை இந்தக் கட்டுரையில் பார்க்கலாம். ஜனநாயகக் கட்சியின் வேட்பாளராக தேர்வு செய்யப்படுவதற்கான போட்டியில் இருப்பவர்களுடைய பிரச்சாரம் கடந்த ஆண்டே தொடங்கிவிட்டது. நவம்பர் மாதம் நடைபெறவுள்ள தேர்தலில் அதிபர் டொனால்ட் டிரம்ப்பை எதிர்த்து போட்டியிடப் போவது யார் என்பதை, வரக் கூடிய மாதங்களில் நடைபெறும் வாக்கெடுப்புகள் தீர்மானிக்கும். அரசியல் கட்சிக் கூட்டங்கள் முதல், மரபு நெறிகள் வரை, அதிபர் பதவிக்கான தேர்தல் பற்றி நீங்கள் அறிந்து கொள்ள வேண்டிய விஷயங்களை இங்கே தொகுத்து அளித்துள்ளோம். 2020 அதிபர் பதவிக்கான தேர்தல் எப்போது நடக்கப் போகிறது?
அமெரிக்க அதிபர் பதவிக்கான தேர்தல் 2020 நவம்பர் 3ஆம் தேதி நடைபெற உள்ளது.

வெள்ளை மாளிகையில் குடியேறுவதற்கான போட்டி உற்சாகத்துடன் தொடங்கியுள்ளது. 2020 அமெரிக்க பொதுத் தேர்தலின் முடிவு, உலகம் முழுக்க தாக்கத்தை ஏற்படுத்தும். எனவே, இப்போதைய நிலை என்ன என்பதை இந்தக் கட்டுரையில் பார்க்கலாம். ஜனநாயகக் கட்சியின் வேட்பாளராக தேர்வு செய்யப்படுவதற்கான போட்டியில் இருப்பவர்களுடைய பிரச்சாரம் கடந்த ஆண்டே தொடங்கிவிட்டது. நவம்பர் மாதம் நடைபெறவுள்ள தேர்தலில் அதிபர் டொனால்ட் டிரம்ப்பை எதிர்த்து போட்டியிடப் போவது யார் என்பதை, வரக் கூடிய மாதங்களில் நடைபெறும் வாக்கெடுப்புகள் தீர்மானிக்கும். அரசியல் கட்சிக் கூட்டங்கள் முதல், மரபு நெறிகள் வரை, அதிபர் பதவிக்கான தேர்தல் பற்றி நீங்கள் அறிந்து கொள்ள வேண்டிய விஷயங்களை இங்கே தொகுத்து அளித்துள்ளோம். 2020 அதிபர் பதவிக்கான தேர்தல் எப்போது நடக்கப் போகிறது? அமெரிக்க அதிபர் பதவிக்கான தேர்தல் 2020 நவம்பர் 3ஆம் தேதி நடைபெற உள்ளது.

  

பிரதான கட்சிகள் எவை?

அமெரிக்காவின் இரண்டு அரசியல் கட்சிகள் காட்டும் சிலைகள் மற்ற பல நாடுகளைப் போல அல்லாமல், அமெரிக்காவில் பெரும்பாலான வாக்காளர்கள் இரண்டு கட்சிகளை மட்டுமே கணக்கில் எடுத்துக் கொள்கிறார்கள்: ஜனநாயகக் கட்சி, குடியரசுக் கட்சி. ஜனநாயகக் கட்சி நவீன தாராளவாத சிந்தனைகளுக்கு ஆதரவானது. அரசின் தலையீடுகள், எல்லோருக்கும் சுகாதார வசதி கிடைக்கச் செய்தல், குறைந்த செலவில் கல்வி கிடைக்கச் செய்தல், சமூக நலத் திட்டங்கள், சுற்றுச்சூழல் பாதுகாப்புக் கொள்கைகள் மற்றும் தொழில் சங்கங்கள் போன்றவற்றில் நம்பிக்கை கொண்ட கட்சி. அந்தக் கட்சி சார்பில் கடந்த முறை போட்டியிட்டவர் ஹிலாரி கிளின்டன். குடியரசுக் கட்சி வேட்பாளர் டொனால்ட் டிரம்ப்பிடம் அவர் தோற்றுப் போனார்.

மிகவும் பழமையான கட்சி அல்லது ஜிஓபி என கூறப்படும் குடியரசுக் கட்சி, அமெரிக்க அடிப்படைவாத சிந்தனைகளை வலியுறுத்தக் கூடியதாக - அரசின் குறுக்கீடுகளுக்கு வரம்பு நிர்ணயித்துக் கொள்ளும், கீழ்நிலை வரிகளை மற்றும் தாராளமய சந்தை முதலாளித்துவத்தை ஊக்குவிக்கக் கூடிய, துப்பாக்கி உரிமங்கள் தருவதை ஆதரிக்கக் கூடிய, தொழில் சங்கங்களின் கட்டுப்பாடுகளை தளர்த்துவதை விரும்பும், குடியேற்றம் மற்றும் கருக்கலைப்பு போன்ற விஷயங்களில் கட்டுப்பாடுகளை விதிக்கும் கட்சியாக உள்ளது. லிபர்ட்டேரியன், கிரீன் போன்ற மற்ற சிறிய அரசியல் அமைப்புகளும், தனிப்பட்ட கட்சிகளும், எப்போதாவது தங்கள் சார்பில் வேட்பாளர்களை நிறுத்துவது உண்டு.

இப்போது என்ன நடைபெறுகிறது?

முன்னாள் துணை அதிபர் ஜோ பிடன் தனது பிரசாரத்தை மேற்கொண்டு வருகிறார். அதிபர் பதவிக்கான போட்டியில் இறங்க விரும்புவோர் கட்சியின் சார்பில் தேர்வு செய்யப்படுவதற்கு நாடு முழுக்க நடைபெறும் முதல்கட்டத் தேர்தல் போட்டியில் இறங்கியுள்ளனர். அமெரிக்க அரசியல் சாசனத்தில் இந்த பூர்வாங்க நிலை போட்டியாளர்கள் பற்றி எதுவும் இல்லை. எனவே இந்தப் போட்டி, கட்சி மற்றும் மாகாண சட்டங்களின்படி நடத்தப்படுகிறது. இதை அரசியல் கட்சிகள் நடத்துவது இல்லை - மாகாண அரசுகள் நடத்துகின்றன. பொதுத் தேர்தலைப் போலவே இந்த பூர்வாங்கத் தேர்தலும் நடத்தப்படும்.

அரசியல் கட்சிகளில் பதிவு செய்துள்ளவர்கள் மட்டுமே வாக்களிக்கக் கூடியதா அல்லது பதிவு செய்யாத வாக்காளர்களும் வாக்களிக்கும் திறந்த முறையில் தேர்தலை நடத்துவதா என்பதை மாகாண சட்டங்கள் தீர்மானிக்கும். ஒரு வேட்பாளர் பூர்வாங்கத் தேர்தலில் வெற்றி பெற்றால், மாகாண பிரதிநிதிகள் அனைவருடைய அல்லது விகிதாச்சார எண்ணிக்கையில் கட்சி விதிகளைப் பொருத்து பிரதிநிதிகளைப் பெறுவார்கள். இந்தப் பிரதிநிதிகள் கட்சியின் மாநாட்டில் அவர்களுக்கு வாக்களிப்பார்கள். அங்கு அதிபர் பதவிக்கான அதிகாரப்பூர்வ வேட்பாளர் அறிவிக்கப்படுவார். இந்தப் பூர்வாங்கத் தேர்தல் நடைமுறை அமெரிக்காவில் மட்டும் கடைபிடிக்கப்படும் பிரத்யேகமான விஷயமாக உள்ளது. ஆனால், ஆஸ்திரேலியா மற்றும் இஸ்ரேல் நாடுகளிலும் இதுபோல, வேட்பாளர்களை `முன்கூட்டியே தேர்வு செய்யும்' நடைமுறைகள் உள்ளன.

அரசியல் கட்சி கருத்தெடுப்புகள் எவை?

இயோவா போன்ற மாகாணங்களில், பூர்வாங்கத் தேர்தலுக்குப் பதிலாக அரசியல் கட்சி சார்பில் கருத்தெடுப்பாக இது நடக்கும். மாகாண அளவில் அரசியல் கட்சிகள் சார்பில் இது நடத்தப்படும். மாகாண அரசுகள் அதை நடத்துவதில்லை என்பதால், அதில் யார் வாக்களிக்கலாம் என்பதை தீர்மானிக்க கட்சிகள் விட்டுக்கொடுத்து முடிவு செய்யும். ஜனநாயகக் கட்சியின் கருத்தெடுப்பில், வாக்குச் சீட்டு முறை கிடையாது. ஆதரிப்பவர்கள் ஒரு குழுவாக அறையில் எழுந்து நிற்பதன் மூலம் ஆதரவு தீர்மானிக்கப்படுகிறது.

சூப்பர் செவ்வாய் என்பது என்ன?

பெரும்பாலான மாகாணங்கள் பூர்வாங்கத் தேர்தல்கள் அல்லது கட்சி கருத்தெடுப்புகளை நடத்தும் நாள் தான் அது. இந்த ஆண்டு சூப்பர் செவ்வாய் மார்ச் 3 ஆம் தேதி வருகிறது.

இவையெல்லாம் எவ்வளவு காலம் நடக்கும்?

அமெரிக்கா முழுக்க பூர்வாங்கத் தேர்தல்கள் மற்றும் கட்சி கருத்தெடுப்புகள் பிப்ரவரியில் தொடங்கி ஜூன் மாதம் வரை நடைபெறும். ஜனநாயகக் கட்சி சார்பில் யார் போட்டியிடுவார் என்பது அதற்குள் தெரிந்துவிடும். ஏனெனில் ஒவ்வொரு பூர்வாங்கத் தேர்தல் அல்லது அரசியல் கருத்தெடுப்பில் தேர்வாகும் பிரதிநிதிகளின் ஆதரவை வேட்பாளர்கள் பெறத் தொடங்குவார்கள். பிரச்சார காலத்துக்கு சட்டபூர்வ வரையறை அளிக்கப்படும், பிரிட்டன் பிரான்ஸ் போன்ற நாடுகளில் உள்ளதைப் போல அல்லாமல், அமெரிக்காவில் வேட்பாளர்கள் விரும்பும் காலம் முன்னதாக பிரச்சாரத்தை தொடங்கிடலாம். அதிபர் தேர்தல் பணிகள் தொடங்கி முடிவடைவதற்கு சுமார் 18 மாதங்கள் ஆகிறது.

டிரம்ப் எப்போது உண்மையாக போட்டியாளரை எதிர்கொள்வார்?

ஜனநாயகக் கட்சியின் தேசிய அளவிலான மாநாட்டில் அதிபர் மற்றும் துணை அதிபர் பதவிக்கான வேட்பாளர்கள் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படுவார்கள். அந்த மாநாடு ஜூலை 13 முதல் 16 ஆம் தேதி வரை நடைபெறுகிறது. குடியரசுக் கட்சியின் தேசிய மாநாடு, அதன் பிறகு ஆகஸ்ட் 24 முதல் 27 ஆம் தேதி வரை நடைபெறுகிறது. (மாநாட்டில் அறிவிக்கப்படும் வரையில், அந்தக் கட்சியின் அதிகாரப்பூர்வ வேட்பாளராக டிரம்ப் இருக்க மாட்டார்.) அதன்பிறகு நான்கு விவாதங்கள் நடைபெறும். அதிபர் டிரம்ப், துணை அதிபர் மைக் பென்ஸ் ஆகியோர், அவர்களை எதிர்த்துப் போட்டியிடும் ஜனநாயகக் கட்சி வேட்பாளர்களுடன் விவாதத்தில் பங்கேற்க வேண்டும்.

1987ல் உருவாக்கப்பட்ட அதிபர் தேர்தல் விவாதங்களுக்கான கட்சி சார்பற்ற ஆணையம் இதற்கு ஏற்பாடு செய்து, நடத்துகிறது. அதிபர் பதவிக்கான மூன்று விவாதங்களில், முதலாவது விவாதம் செப்டம்பர் 29 ஆம் தேதி இன்டியானாவில் நடைபெறுகிறது. அடுத்து மேலும் இரு விவாதங்கள் அக்டோபர் மாதம் நடைபெறும். துணை அதிபர் பதவிக்கு போட்டியிடுவோருக்கான விவாதம் உட்டாஹ்-ல் அக்டோபர் 7 ஆம் தேதி நடைபெறும்.

பொதுத் தேர்தலில் ஒருவர் எப்படி வெற்றி பெறுகிறார்?

மக்களின் வாக்குகளுக்கு - அதாவது ஒவ்வொரு வேட்பாளரும் பெறக் கூடிய வாக்குகளின் எண்ணிக்கை - நவம்பர் 3 ஆம் தேதி பொதுத் தேர்தல் வெற்றியாளரை நிர்ணயிப்பதில் எந்தப் பங்கும் இல்லை. ஏனெனில் அமெரிக்க அதிபர் மக்களால் நேரடியாகத் தேர்ந்தெடுக்கப் படுவதில்லை. ``மாகாணப் பிரதிநிதிகள்'' எனப்படுபவர்களால் மறைமுகமாக அதிபர் தேர்வு செய்யப்படுகிறார். அமெரிக்க அரசியல் சாசனத்தில் விவரிக்கப்பட்டுள்ளபடி, மாகாண மற்றும் மத்திய அரசுகளின் தொகுப்பு சட்டங்களுக்கு உள்பட்டு அதிபர் தேர்வு செய்யப்படுகிறார்.

ஏட்டளவில் பார்த்தால், பெரும்பாலான வாக்குகள் பெற்றவரை பிரதிநிதிகள் சபை தேர்வு செய்யும் - ஆனால் எல்லா சமயங்களிலும் அப்படி நடப்பதில்லை. மொத்தம் உள்ள 538 வாக்குகளில், 270 வாக்குகளைப் பெற்றால் வெள்ளை மாளிகையில் குடியேறும் உரிமை கிடைத்துவிடும். அதனால் அதிக மக்கள் தொகை கொண்ட மாகாணங்களில், பிரதிநிதிகள் எண்ணிக்கை அதிகமாக இருக்கும் என்பதால், வேட்பாளர்களுக்கு சில மாகாணங்கள் மிக முக்கியமானவையாகக் கருதப்படுகின்றன. மக்களின் வாக்குகள் அதிகமாகக் கிடைத்து, பிரதிநிதிகள் எண்ணிக்கை குறைவாக போவதற்கு வாய்ப்பு உள்ளது. 2000வது ஆண்டில் ஜனநாயகக் கட்சி வேட்பாளர் அல் கோரேவுக்கும், 2016ல் ஹிலாரி கிளின்டனுக்கும் இதுபோல நடந்தது.

பிரதிநிதிகள் மன்றம் என்பது என்ன, அது எப்படி செயல்படுகிறது?

பிரதிநிதிகள் மன்றம் என்பது, அதிகாரிகள் அல்லது ``தேர்ந்தெடுப்பவர்களை'' கொண்ட அமைப்புக்கான பெயர். அமெரிக்காவின் அதிபர் மற்றும் துணை அதிபரை தேர்வு செய்ய இது நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை உருவாகிறது. நாடாளுமன்றத்தில் உள்ள பிரதிநிதித்துவத்துக்கு ஏற்ப ஒவ்வொரு மாகாணத்துக்கும் பிரதிநிதிகள் எண்ணிக்கை உள்ளது: செனட் உறுப்பினர்களின் எண்ணிக்கை (ஒவ்வொரு மாகாணத்துக்கும் இருவர்) மற்றும் பிரதிநிதிகள் சபை உறுப்பினர்களின் எண்ணிக்கை (மக்களின் வாக்குகளால் தீர்மானிக்கப்படுவது) ஆகியவற்றின் கூட்டுத் தொகையாக இது இருக்கும்.

கலிபோர்னியா (55), டெக்சாஸ் (38), நியூயார்க் (29), புளோரிடா (29), இல்லினாய்ஸ் (20), பெனிசில்வேனியா (20) ஆகியவை பெரிய மாகாணங்களாக உள்ளன. இந்த நடைமுறையில் சிறிய மாகாணங்களுக்கு அதிக முக்கியத்துவம் தரப்படுகிறது. அதாவது, ஒரு வேட்பாளர் நாடு முழுக்க பரவலாக வாக்குகளைப் பெற்றிட வேண்டும்.

ஊசலாட்ட, சிவப்பு மற்றும் நீல மாகாணங்கள் என்றால் என்ன?

குடியரசுக் கட்சிக்கு அதிக ஆதரவு உள்ள இடாஹோ, அலாஸ்கா மற்றும் பல தெற்கு மாகாணங்கள் `சிவப்பு மாகாணங்கள்' எனப்படுகின்றன. ஜனநாயகக் கட்சிக்கு அதிக ஆதரவு உள்ள கலிபோர்னியா, இல்லினாய்ஸ், வடகிழக்கு கடலோரம் நியூ இங்கிலாந்து பகுதியில் பல பகுதிகள் ``நீல மாகாணங்கள்'' எனப்படுகின்றன. வேட்பாளர் யார் என்பதைப் பொறுத்து சில மாகாணங்களில் ஆதரவு நிலை மாறிக் கொண்டிருக்கும். அவை ஊசலாட்ட மாகாணங்கள் எனப்படுகின்றன.

வெற்றி பெற முடியாத பகுதிகளில் பிரச்சாரம் அல்லது சக்தியை வீணடிக்கும் வகையில் பிரச்சாரம் இருப்பதில்லை. ஓஹியோ, புளோரிடா போன்ற ஊசலாட்ட மாகாணங்களின் ஆதரவைப் பெறுவதில் தான் பெரும்பாலான பிரச்சாரங்கள் இருக்கும். 2020 தேர்தலில் அரிசோனா, பெனிசில்வேனியா, விஸ்கான்சின் மாகாணங்கள் ஊசலாட்ட மாகாணங்களாக இருக்கலாம் என கருதப்படுகிறது.

வாக்காளர்கள் எவ்வளவு நாட்கள் வாக்களிக்கலாம்?

அமெரிக்காவில் பல விஷயங்கள் மாறுபடுவதைப் போல, இதுவும் மாகாணத்துக்கு ஏற்ப மாறும். பெரும்பாலானவற்றில் சீக்கிரம் வாக்குப் பதிவு நடைபெறும். பதிவு செய்த வாக்காளர்கள், தேர்தல் நாளுக்கு முன்னதாகவே வாக்களிக்க அவை அனுமதிக்கும். உடல் நலம் இல்லாதவர்கள், வர இயலாத வகையில் முடங்கியவர்கள், பயணத்தில் இருப்பவர்கள் அல்லது மாகாணத்துக்கு வெளியே கல்வி கற்பவர்களுக்காக, தபால் முறை வாக்குகளும் உண்டு.

தேர்தல் நாளன்று வாக்களிப்பவர்கள், அதிகாரப்பூர்வ வாக்குச் சாவடிக்கு நேரடியாகச் செல்ல வேண்டும். ஆன்லைன் வாக்களிப்பு முறை எதுவும் கிடையாது. வாக்கு எண்ணிக்கையை ஒவ்வொரு மாகாணமும் நடத்தும். வெற்றியாளர் அதே இரவில் அறிவிக்கப்படுவார்.

பிரதிநிதிகள் மன்றத்தில் யாரும் வெற்றி பெறாவிட்டால் என்ன நடக்கும்?

பிரதிநிதி வாக்காளர்களின் பெரும்பான்மை ஆதரவு எந்த வேட்பாளருக்கும் கிடைக்காமல் போனால், முதல் மூன்று வேட்பாளர்களில் இருந்து அதிபரை பிரதிநிதிகள் சபை தேர்வு செய்யும். மீதி இரண்டு வேட்பாளர்களில் இருந்து துணை அதிபரை செனட் தேர்வு செய்யும். அது அபூர்வமான சூழ்நிலைதான். ஆனால், முன்பு ஒரு முறை இப்படி நடந்துள்ளது. 1824 ஆம் ஆண்டில் ஜனநாயகக் கட்சி வேட்பாளர் ஜான் குவின்சி ஆடம்ஸ் அந்த முறையில் தான் வெள்ளை மாளிகையில் நுழைந்தார்.

வெற்றியாளர் அறிவிக்கப்பட்ட பிறகு என்ன நடக்கும்?

தேர்தல்களுக்குப் பிறகு, ஆட்சி மாற்ற காலம் இருக்கும். புதிய அதிபர், அமைச்சர்களை தேர்வு செய்ய, திட்டங்களைத் தயாரிக்க இந்த அவகாசம் உதவியாக இருக்கும். புதிய அதிபர் (அல்லது ஏற்கெனவே பதவியில் இருந்து மீண்டும் வெற்றி பெற்றவர்) ஜனவரி மாதத்தில் பதவி ஏற்றுக் கொள்வார். இது தொடக்க நிகழ்ச்சி எனப்படும். தொடக்க நிகழ்ச்சி ஜனவரி 20 ஆம் தேதி நடைபெறும். நாடாளுமன்றத்தில் நிகழ்ச்சியை முடித்துக் கொண்டு, அதிபர் வெள்ளை மாளிகைக்கு அணிவகுப்புடன் திரும்பி செல்வார். அடுத்த நான்காண்டு பதவிக் காலத்தை அங்கு தொடங்குவார்.

  
   Bookmark and Share Seithy.com



காசா அகதிமுகாமில் ஈவிரக்கமின்றி தாக்குதல்: 13 பேர் பலி!
[Tuesday 2024-05-14 16:00]

காசாவின் மத்திய பகுதியில் நுசைரெத் அகதிமுகாமில் உள்ள வீடொன்றின் மீது இஸ்ரேல் மேற்கொண்ட தாக்குதலில் 13 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. தாக்குதலில் உயிரிழந்தவர்களின் உடல்கள் இடிபாடுகளிற்குள் சிக்குண்டுள்ளதாக அல் அக்சா தியாகிகள் மருத்துவமனையின் மருத்துவர் ஒருவர் சிஎன்என்னிற்கு தெரிவித்துள்ளார்.



துபாயில் பறக்கும் டாக்ஸி சேவை!
[Tuesday 2024-05-14 16:00]

அடுத்த ஆண்டு முதல் துபாயில் பறக்கும் டாக்ஸி சேவையை இயக்க திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உலக போக்குவரத்து துறையில் புதிய புரட்சியை ஏற்படுத்தும் வகையில் இந்த பறக்கும் டாக்ஸி சேவை செயல்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் பயணம் செய்ய ஒரு நபருக்கு 350 எமிரேட்ஸ் திர்ஹாம் அறவிடப்படவுள்ளது.



ஆஸ்திரேலியாவில் 14 வயதுக்குட்பட்ட குழந்தைகள் சமூக ஊடகங்கள் பயன்படுத்த தடை!
[Tuesday 2024-05-14 16:00]

ஆஸ்திரேலியாவிலேயே முதன்முறையாக தெற்கு மாகாணத்தில் 14 வயதுக்குட்பட்ட குழந்தைகள் சமூக ஊடகங்கள் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. இன்றைய நவீன உலகில் சமூக ஊடகங்களைப் பயன்படுத்தாதவர்கள் யாரும் இல்லை, அவ்வளவு முக்கியப் பங்கு வகிக்கிறது. இருப்பினும், அதன் பயன்பாடு பல்வேறு தீமைகளையும் ஏற்படுத்துகிறது.



அரசை எதிர்த்து கனேடிய மாகாணமொன்றில் உண்ணாவிரதம்: புலம்பெயர்ந்தோர் முடிவு!
[Tuesday 2024-05-14 16:00]

கனேடிய மாகாணமொன்று வெளிநாட்டவர்களுக்கெதிராக எடுக்க இருக்கும் முடிவொன்றை எதிர்த்து புலம்பெயர்ந்தோர் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டு வரும் நிலையில், தங்கள் கோரிக்கைகள் நிறைவேற்றப்படாவிட்டால், சாகும் வரை உண்ணாவிரதம் மேற்கொள்ள முடிவு செய்துள்ளதாக அவர்கள் தெரிவித்துள்ளார்கள்.



ரிஷி சுனக் தரப்பு மீது பகிரங்க குற்றச்சாட்டு!
[Tuesday 2024-05-14 06:00]

உள்ளாட்சித் தேர்தல்களில் பெரும் வெற்றியைக் கண்டுள்ள பிரித்தானிய(UK) எதிர்க்கட்சியான லேபர் கட்சியின் துணைத்தலைவர் மீது சில குற்றச்சாட்டுகளை ஆளுங்கட்சியினர் முன்வைத்துள்ளனர். எனினும், ஆளுங்கட்சி உறுப்பினர்கள் சிலரே வரி ஏய்ப்பு விடயங்களை செய்துள்ளதான குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளன.



பிரித்தானிய பல்கலைக்கழகங்களில் வீழ்ச்சியடைந்துள்ள சர்வதேச மாணவர்களின் எண்ணிக்கை!
[Tuesday 2024-05-14 06:00]

பிரித்தானிய பல்கலைக்கழகங்களில் சர்வதேச மாணவர்களின் எண்ணிக்கை பெருமளவு வீழ்ச்சியடைந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. மாணவர்களுக்கான வீசாவில் மேலும் கட்டுப்பாடுகள் விதிக்கப்படலாம் என்ற அச்சம் காரணமாகவே மாணவர்கள் விண்ணப்பிக்க மறுப்பதாகவும் கூறப்படுகிறது.



"ரஷ்யாவின் தாக்குதலை சந்திக்க மேற்குலகம் தயாராக இருக்கவேண்டும்" - அமெரிக்க இராணுவம்!
[Tuesday 2024-05-14 06:00]

உக்ரைன் போரில் தனது இராணுவ வீரர்களின் இழப்பை ரஷ்யா(Russia) சந்தித்தபோதும், மேற்கு நாடுகளை எவ்வாறு தோற்கடிப்பது என்பதை புடின் தரப்பு கற்றுக்கொள்கிறது என அமெரிக்க இராணுவம் தெரிவித்துள்ளது. உக்ரைன் மீது ரஷ்யாவின் படையெடுப்பு தொடங்கியதில் இருந்து, ரஷ்ய படைகளின் இறப்பு எண்ணிக்கை 465,000க்கும் அதிகம் என பிரித்தானியாவின் பாதுகாப்பு அமைச்சகம் அறிக்கை வெளியிட்டுள்ளது.



கனடாவில் மளிகைப் பொருட்கள் விலை குறைந்த இடம்?
[Monday 2024-05-13 18:00]

கனடாவில் சில இடங்களில் மளிகைப் பொருட்களின் விலை அதிகமாகவும் சில இடங்களில் மளிகைப் பொருட்கள் குறைவாகவும் காணப்படுகின்றன. வசிக்கும் பிரதேசத்தின் அடிப்படையில் மளிகைப் பொருட்களின் விலைகளில் மாற்றம் பதிவாவதாக தெரிவிக்கப்படுகின்றது. மாகாணம், நகரம் என்பனவற்றின் அடிப்படையில் விலைகளில் மாற்றம் காணப்படுவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.



வடகொரியாவில் விசித்திர தடைபோட்ட கிம் ஜாங் உன்!
[Monday 2024-05-13 18:00]

வடகொரிய தலைவர் கிம் ஜாங் உன் நாட்டு மக்கள் மீது விசித்திரமான சட்டங்களை திணிப்பதில் பிரபலமானவர். அந்த வகையில் தற்போது வடகொரியாவில் சிவப்பு உதட்டுச்சாயத்தை தடை செய்யும் நடவடிக்கையை ஜனாதிபதி கிம் ஜாங்-உன் மேற்கொண்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.



கொவிட் தடுப்பூசிகளால் உலகம் முழுவதும் 11,000 க்கும் மேற்பட்டோர் பலி!
[Monday 2024-05-13 18:00]

கொவிட் வைரஸை கட்டுப்படுத்த பெறப்பட்ட தடுப்பூசிகளால் உலகம் முழுவதும் 11,000 க்கும் மேற்பட்டோர் இறந்துள்ளனர். 2023 இல் ஐரோப்பிய மருந்துகள் முகமை வெளியிட்ட அறிக்கையை மேற்கோள் காட்டி, இந்த தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி ஃபைசர் தடுப்பூசி போட்ட 8,000 பேர் உயிரிழந்துள்ளதாக கூறப்படும் நிலையில், அஸ்ட்ராஜெனிகா தடுப்பூசியைப் பெற்ற 1,500 பேர் மட்டுமே இறந்துள்ளனர்.



சுவிஸில் கவனக்குறைவால் கனேடிய பெண் சந்தித்த கசப்பான அனுபவம்!
[Monday 2024-05-13 18:00]

சுற்றுலா சென்றிருந்த கனேடிய பெண்ணொருவர், சுவிட்சர்லாந்தில் அபராதம் செலுத்த நேர்ந்ததால், வருத்தம் அடைந்துள்ளதாக தெரிவித்துள்ளார். கனேடிய குடிமகளான பூர்ணிமா தேவி (Poorneema Devi Bujun, 38) என்னும் பெண், ஜேர்மனிக்கு சுற்றுலா சென்றுள்ளார். மூன்று மாதங்கள் ஜேர்மனியில் தங்கியபின், மொரிஷியஸில் இருக்கும் தனது குடும்பத்தினரை சந்திக்க திட்டமிட்ட அவர், சுவிட்சர்லாந்து வழியாக விமானத்தில் செல்ல முடிவு செய்துள்ளார்.



டென்மார்க்கில் இடம்பெற்ற முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுகள்!
[Monday 2024-05-13 06:00]

டென்மார்க்கில் உள்ள மத வழிபாட்டு இடங்களில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுகள் இடம்பெற்றுள்ளன. டென்மார்க் நாஸ்ட்வேட்(Naestved) நகரில் எழுந்தருளியுள்ள அருள்மிகு கற்பக விநாயகர் ஆலயத்தில் (11.05.2024)முள்ளிவாய்க்காலில் நடந்தேறிய தமிழின அழிப்பின் மூலம், தங்கள் இன்னுயிர்களை ஈர்ந்த மக்களுக்கும் மாவீரர்களுக்குமான சிறப்பு நினைவேந்தல் வழிபாடு பொதுமக்களால் உணர்வுடன் ஏற்பாடு செய்யப்பட்டது.



கனடாவில் அதிகரித்துள்ள வீட்டு வாடகைத் தொகை!
[Monday 2024-05-13 06:00]

கனடாவில்(Canada) வீட்டு வாடகைத் தொகையில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. கடந்த ஏப்ரல் மாதம் வாடகைத் தொகையானது 9.3 வீதமாக அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்நிலையில் 2023ஆம் ஆண்டுடன் ஒப்பீடு செய்யும் போது இவ்வாறு அதிகரித்துள்ளமையானது ஆய்வுகளின் மூலம்தெரியவந்துள்ளது.



எவரெஸ்ட் சிகரத்தை 29ஆவது முறையாக அடைந்து சாதனை படைத்த நேபாளி!
[Monday 2024-05-13 06:00]

நேபாள மலையேற்ற வீரர் கமி ரீட்டா 29ஆவது முறையாகவும் எவரெஸ்ட் சிகரத்தில் ஏறி வரலாற்று படைத்துள்ளார். நேபாளத்தில் சாகர்மாதா என்று அழைக்கப்படும் எவரெஸ்ட், கடல் மட்டத்திலிருந்து 8,848.86 மீட்டர் உயரத்தில் உள்ளது, இது பூமியின் மிக உயரமான மலை சிகரமாகும். இந்நிலையில் ‘எவரெஸ்ட் மேன்’ என்று அழைக்கப்படும் 54 வயதான நேபாள மலையேற்ற வீரர் கமி ரீட்டா 29ஆவது முறையாக எவரெஸ்ட் சிகரத்தை ஏறி தனது சொந்த சாதனையை முறியடித்துள்ளார்.



மீண்டும் மிரட்டும் பாபா வாங்கா கணிப்பு!
[Sunday 2024-05-12 16:00]

2024ல் பெரும் பொருளாதார பேரழிவை ஏற்படுத்தும் என பாபா வாங்கா கணித்துள்ளதாக கூறப்படுகின்றது. 2024 ஆம் ஆண்டு பிறந்து நான்கு மாதங்கள் கடந்துவிட்டன. உலகம் முழுவதும் பல்வேறு வகையான அசௌகரியங்கள் நடந்து வருகின்றன. இந்நிலையில் பல்கேரியாவை சேர்ந்த பார்வையற்ற தீர்க்கதரிசி பாபா வங்கா 1996 இல் தனது 85 வயதில் காலமானதற்கு முன் கூறிய சில கணிப்புகள் ஏற்கனவே கவனத்தை ஈர்த்து வருகின்றன.



அமெரிக்காவில் மரபணு மாற்றப்பட்ட பன்றி சிறுநீரக மாற்று சிகிச்சையின் முதல் பயனாளி மரணம்!
[Sunday 2024-05-12 16:00]

அமெரிக்காவில் (America) மரபணு மாற்றப்பட்ட பன்றி சிறுநீரக மாற்று சிகிச்சையின் முதல் பயனாளி சிகிச்சை முடிந்து இரண்டு மாதங்களுக்குப் பின்னர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அவரது குடும்பத்தினரும் அறுவை சிகிச்சை செய்த மருத்துவமனை வைத்தியர்களும் நேற்று (11) இந்த செய்தியை உறுதிப்படுத்தியுள்ளனர்.



காசாவில் கட்டிடங்களின் இடிபாடுகளில் 10000 உடல்கள்!
[Sunday 2024-05-12 16:00]

இஸ்ரேலின் தாக்குதலால் காசாவில் தகர்க்கப்பட்ட கட்டிடங்களின் இடிபாடுகளின் கீழ் பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட உடல்கள் உள்ளன என காசாவின் சிவில் பாதுகாப்பு பிரிவினர் தெரிவித்துள்ளனர். இஸ்ரேல் ஒரு குறிப்பிட்ட பகுதியில் தாக்குதலை மேற்கொண்டதும் மருத்துபிரிவினரும் காசாவின் சிவில் பாதுகாப்பு பிரிவினருமே முதலில் அங்கு செல்கின்றனர்.



"பெஞ்சமின் நெட்டன்யாகு ஒரு இனப்படுகொலையான்" - கொலம்பிய ஜனாதிபதி விமர்சனம்!
[Sunday 2024-05-12 16:00]

வரலாற்றில் இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெட்டன்யாகு ஒரு இனப்படுகொலையாளன் என பதிவுசெய்யப்படுவார் என கொலம்பிய ஜனாதிபதி கஸ்டவோ பெட்டிரோ பதிவிட்டுள்ளார். பெஞ்சமின் நெட்டன்யாகு அப்பாவி சிறுவர்கள் பெண்கள் முதியவர்கள் மீது ஆயிரக்கணக்கில் குண்டுகளை வீசுகின்றார் இதன் காரணமாக அவர் கதாநாயகனாக மாற முடியாது என அவர் பதிவிட்டுள்ளார்.



மியான்மார் கடற்படையினரால் கைது செய்யப்பட்ட 15 இலங்கையர்கள் விடுதலை!
[Sunday 2024-05-12 06:00]

மியான்மார் கடற்படையினரால் கைதுசெய்யப்பட்டு அந்நாட்டுச் சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டிருந்த 15 இலங்கை கடற்றொழிலாளர்கள் நாட்டை வந்தடைந்துள்ளனர். கட்டுநாயக்க விமான நிலையம் ஊடாக நேற்று இவர்கள் நாட்டை வந்தடைந்தடைந்துள்ளனர். இந்நிலையில் குறித்த 15 பேரும் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளனர்.



இளவரசி கேட்டின் உடல் நிலை தொடர்பில் இளவரசர் வில்லியம் விளக்கம்!
[Sunday 2024-05-12 06:00]

பிரித்தானிய இளவரசி(Catherine, Princess) கேட்டின் உடல் நிலை சீராக இருப்பதாக இளவரசர் வில்லியம் தெரிவித்துள்ளார். இளவரசர் வில்லியம், மருத்துவமனை ஒன்றின் புதிய கட்டிட கட்டுமானப்பணியின் ஆரம்ப விழாக்கு நேற்று சென்றிருந்த நிலையில் மேற்படி கூறியுள்ளார்.


Mahesan-Remax-169515-Seithy
Logan-Kumaresh-Homelife-02-02-2021
Asayan-Salon-2022-seithy
Kugeenthiran-200-2022-seithy
Ambikajewellers-01-08-2021-seithy
Airlinktravel-2020-01-01
Vaheesan-Remax-2016
 gloriousprinters.com 2021
NKS-Ketha-04-11-2021
Karan Remax-2010
Rajeef sebarasha 2023/04/19
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> 12 10 2019 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Skanda Nite 2019 125th Anniversary நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா