Untitled Document
May 18, 2024 [GMT]
ஆப்கானிஸ்தான் விவகாரம்: சுவிஸ் அரசாங்கத்தை எச்சரித்த முக்கிய அரசியல் கட்சிகள்!
[Friday 2021-08-20 06:00]

ஆப்கானிஸ்தானின் தற்போதைய சூழலை கருத்தில் கொண்டு, அகதிகளின் பின்னணியை ஆராய வேண்டும் என்ற கோரிக்கையை முக்கிய அரசியல் கட்சிகள் முன்வைத்துள்ளது. கட்டுப்பாடின்றி அகதிகளுக்கு வாய்ப்பளித்தால், அது சுவிட்சர்லாந்தின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக மாறவும் வாய்ப்பிருப்பதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

ஆப்கானிஸ்தானின் தற்போதைய சூழலை கருத்தில் கொண்டு, அகதிகளின் பின்னணியை ஆராய வேண்டும் என்ற கோரிக்கையை முக்கிய அரசியல் கட்சிகள் முன்வைத்துள்ளது. கட்டுப்பாடின்றி அகதிகளுக்கு வாய்ப்பளித்தால், அது சுவிட்சர்லாந்தின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக மாறவும் வாய்ப்பிருப்பதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

  

சுவிட்சர்லாந்து குறைந்தபட்சம் 10,000 அகதிகளையாவது ஏற்றுக்கொள்ள வேண்டும் என SP தேசிய கவுன்சிலர் ஃபேபியன் மோலினா திங்கள்கிழமை வலியுறுத்தியிருந்தார்.

மட்டுமின்றி அதே நாள் பெடரல் கவுன்சிலுக்கும் இதே கோரிக்கையை SP முன்வைத்தது. ஆனால் ஆப்கான் அகதிகள் தொடர்பில் SVP முக்கியமான கருத்தை முன்வைத்துள்ளது.

அதில், இஸ்லாமிய போராளிகள், கடும் குற்றவாளிகள், சட்டத்திட்டங்களுடன் ஒத்துப்போகாதவர்கள் என சமூகத்திற்கு அச்சுறுத்தலானவர்கள் அகதிகள் போர்வையில் சுவிட்சர்லாந்துக்குள் வரலாம்.

இதனால், சுவிட்சர்லாந்துக்கு பாதுகாப்பு அச்சுறுத்தல் ஏற்படும் வாய்ப்புகள் அதிகம் என SVP எச்சரிக்கை விடுத்துள்ளது. ஆனால், அகதிகளின் பின்னணியை சோதிக்கும் அதே வேளை அவர்கள் சுவிட்சர்லாந்திற்கு வருவதற்கு முன்பு பாதுகாப்பு சோதனையும் மேற்கொள்ளப்படுகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, தாலிபான்களின் கொடுங்கோல் ஆட்சிக்கு பயந்து தப்பிக்கும் மக்களை கொடூர குற்றவாளிகள் என அடையாளப்படுத்துவது ஏற்க முடியாத கருத்து என அம்னஸ்டி சுவிட்சர்லாந்தின் Beat Gerber தெரிவித்துள்ளார்.

  
   Bookmark and Share Seithy.com



அமெரிக்காவில் கஞ்சாவுக்கு பச்சைகொடி காட்டிய ஜோ பைடன்!
[Saturday 2024-05-18 16:00]

அமெரிக்காவில் கஞ்சாவை குறைந்த ஆபத்து கொண்ட போதைப்பாருள் என மறுவகைப்படுத்த ஜோ பைடன் தலைமையிலான அரசாங்கம் முன்மொழிந்துள்ளது. இதனால் அமெரிக்காவில் இனிமேல் கஞ்சா பயன்படுத்துவது அதிகாரப்பூர்வாக்கப்படலாம் எனத எதிர்பார்க்கப்படுகிறது. அமெரிக்காவில் ஹெராயின், கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்கள் பயன்படுத்த தடைவிதிக்கப்பட்டுள்ளது.



கிர்கிஸ்தானில் தாக்குதல்; இந்திய மாணவர்களுக்கு எச்சரிக்கை!
[Saturday 2024-05-18 16:00]

மத்திய ஆசிய நாடான கிர்கிஸ்தானில் வெளிநாடுகளை சேர்ந்த மாணவர்கள் பலர் படித்து வருகிறார்கள். இந்த நிலையில் தலைநகர் பிஷ்கெக்கில் நேற்று நள்ளிரவு வெளிநாட்டு மாணவர்களை குறிவைத்து கும்பல் ஒன்று தாக்குதல் நடத்தியது.



புலம்பெயர் பணியாளர்களின் எதிர்காலத்தை கேள்விக்குறியாக்கியுள்ள கனடா அரசின் நடைமுறை!
[Saturday 2024-05-18 16:00]

கனடா அரசின் ஒரு நடைமுறை, புலம்பெயர் பணியாளர்களின் எதிர்காலத்தையே கேள்விக்குறியாக்கியுள்ளது. கனடாவில் நிரந்தரக் குடியிருப்பு அனுமதிக்கு விண்ணப்பிப்போரை, அவர்களுடைய வயது, கல்வி, ஆங்கிலப் புலமை மற்றும் பணி அனுபவம் போன்ற காரணிகளை வைத்து தரவரிசைப்படுத்தும் நடைமுறையே CRS என்னும் நடைமுறை.



பறந்து கொண்டிருந்த விமானத்தில் திருமண ஒத்திகை!
[Saturday 2024-05-18 16:00]

நடுவானில் விமானத்தில் பறந்து கொண்டிருந்தபோது விமான பணிப்பெண் ஒருவர் சக பயணி ஒருவருடன் திருமண சடங்கு ஒத்திகையில் ஈடுபடுவது தொடர்பான வீடியோ காட்சி இணையத்தில் காட்டுத்தீபோல பரவி வருகிறது.



இலங்கை தமிழர்களுக்காக சுதந்திர வாக்கெடுப்பு: அமெரிக்காவில் முன்வைக்கப்பட்ட வரலாற்று தீர்மானம்!
[Saturday 2024-05-18 08:00]

இலங்கையில் இனப்பிரச்சினைக்கு தீர்வு காண ஈழத் தமிழர்களுக்காக சுதந்திர வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என வலியுறுத்தி அமெரிக்க காங்கிரஸ் உறுப்பினர்கள், வரலாற்று தீர்மானம் ஒன்றை அமெரிக்க நாடாளுமன்றில் முன்வைத்துள்ளனர். அமெரிக்க காங்கிரஸின் 7 உறுப்பினர்களுடன் இணைந்த நிலையில் அதன் ஒரு உறுப்பினரான வைல்லி நிக்கலினால் (Wiley Nickel )இலங்கையின் மோதலுக்கு ஒரு தீர்வாக ஈழத் தமிழர்களுக்கான சுதந்திர வாக்கெடுப்புக்கு அழைப்பு விடுக்கும் இந்த முக்கிய தீர்மானத்தை அறிமுகப்படுத்தியுள்ளார்.



பிரித்தானியாவில் இலங்கை குடும்பமொன்று எதிர்நோக்கிய நெருக்கடி!
[Saturday 2024-05-18 08:00]

பிரித்தானியாவில் வசித்து வரும் இலங்கை குடும்பமொன்றின் தந்தை மற்றும் மகன் நாட்டில் வசிக்க முடியுமெனவும், தாய் நாட்டில் வசிக்க முடியாதெனவும் Home Office அறிவித்திருந்த சம்பவம் தொடர்பில் தகவல் வெளிவந்துள்ளது. இலங்கையை சேர்ந்த தாய், தந்தை மற்றும் பத்து வயது மகனை கொண்ட குடும்பத்திற்கே இந்த நிலைமை ஏற்பட்டுள்ளது.



பாலஸ்தீனிய மாணவியை நாடுகடத்த திட்டமிடும் பிரித்தானியா!
[Saturday 2024-05-18 08:00]

இஸ்ரேல் மீது ஹமாஸ்(israel-hamas) நடத்திய தாக்குதல் குறித்து கருத்து வெளியிட்ட பாலஸ்தீனிய மாணவியை பிரித்தானியா நாடுகடத்த திட்டமிடுவதாக தெரிவிக்கப்படுகிறது. கடந்த ஆண்டு, ஒக்டோபர் மாதம் 7ஆம் திகதி, ஹமாஸ் ஆயுதக்குழுவினர் இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தி 1,200க்கும் அதிகமான இஸ்ரேலியர்களைக் கொன்றதற்கு மறுநாள், பிரித்தானியாவிலுள்ள மான்செஸ்டர் (Manchester) பல்கலையில் சட்டம் பயிலும் பாலஸ்தீனிய மாணவியான டானா (Dana Abuqamar, 19), பாலஸ்தீன ஆதரவு பேரணி ஒன்றில் கலந்துகொண்டார்.



பிரித்தானிய நகரம் ஒன்றின் முதல்வராக இலங்கை தமிழர் பதவியேற்பு!
[Friday 2024-05-17 18:00]

பிரித்தானிய (British) நகரம் ஒன்றின் புதிய முதல்வராக இலங்கையிலிருந்து (Sri Lanka) ஏதிலியாக சென்ற தமிழர் பதவியேற்றுள்ளார். தொழில் கட்சியின் உறுப்பினரான இளங்கோ இளவழகன் (Elango Elavalakan) என்பவரே இப்ஸ்விச் (Ipswich) மாநகர முதல்வராக தெரிவு செய்யப்பட்ட நிலையில் பதவியை ஏற்றுக்கொண்டுள்ளார்.



கனடாவில் ஓன்லைன் சொப்பிங் செய்வோருக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவுறுத்தல்!
[Friday 2024-05-17 18:00]

கனடாவில் ஒன்லைனில் பொருட்களை கொள்வனவு செய்வோருக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது. கனடாவின் வியாபாரப் போட்டி முகவர் நிறுவனம் இந்த அறிவுறுத்தலை வெளியிட்டுள்ளது. இணைய வழியில் கொள்வனவு செய்யும் போது ஏதேனும் மறைமுகக் கட்டணங்கள் அறவீடு செய்யப்படுகின்றனவா என கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.



காஸாவிற்கு கடல் மார்க்க மிதக்கும் பாதை!
[Friday 2024-05-17 18:00]

காஸாவிற்கு கடல் மார்க்கமாக நிவாரணப் பொருட்களை எடுத்துச் செல்ல, மிதக்கும் பாலம் ஒன்றை அமெரிக்கா கட்டி முடித்துள்ளது. அமெரிக்க ராணுவ வீரர்களை நேரடியாக ஈடுபடுத்தாமல், இஸ்ரேல் ராணுவ பொறியாளர்களுக்கு பயிற்சி அளித்து அவர்கள் மூலம் மிதக்கும் பாலத்தை கட்டி முடித்ததாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.



கனடாவிலிருந்து நாடுகடத்தப்படும் அபாயத்திலிருக்கும் நூற்றுக்கணக்கான இந்திய மாணவர்கள் ஆர்ப்பாட்டம்!
[Friday 2024-05-17 18:00]

கனடாவிலிருந்து நாடுகடத்தப்படும் அபாயத்திலிருக்கும் நூற்றுக்கணக்கான இந்திய மாணவர்கள் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டு வருவதைக் காட்டும் காட்சிகள் வெளியாகியுள்ளன. கனடாவின் Prince Edward Island மாகாணம், 2024, அதாவது, இந்த ஆண்டில், மாகாண நாமினி திட்டத்தின் கீழ் வெளிநாட்டவர்களுக்கு வழங்கப்படும் நிரந்தரக் குடியிருப்பு அனுமதிகளின் எண்ணிக்கையை 25 சதவிகிதம் குறைக்க இருப்பதாக அறிவித்துள்ளது. மருத்துவ அமைப்புக்கு ஏற்பட்டுள்ள அழுத்தம் மற்றும் வீடுகள் தட்டுப்பாடு காரணமாக இந்த முடிவை எடுக்க இருப்பதாக அம்மாகாணம் அறிவித்துள்ளது.



இலங்கை தமிழ் வம்சாவளி பெண் எழுத்தாளருக்கு அமெரிக்காவில் கிடைத்துள்ள அங்கீகாரம்!
[Wednesday 2024-05-15 06:00]

அமெரிக்காவில் வசிக்கும் இலங்கை தமிழ் வம்சாவளி எழுத்தாளரான வி.வி.சுகி கணேசநந்தன் எழுதிய பிரதர்லெஸ் நைட் (Brotherless Night) என்ற நாவல், புனைக் கதைக்கான 2024 கரோல் ஷீல்ட்ஸ் (Carol Shields) பரிசை வென்றுள்ளது. இதற்காக அவருக்கு 150,000 அமெரிக்க டொலர்கள் பரிசு வழங்கப்பட்டுள்ளது. அத்துடன் அவர் கனடாவின் நியூஃபவுண்ட்லாந்தில் உள்ள ஃபோகோ தீவில் வசித்து வருகின்றார்.



பிரித்தானியாவில் சீனாவுக்கு உளவுபார்த்த 3 பேர் கைது!
[Wednesday 2024-05-15 06:00]

பிரித்தானியாவில் சீனாவுக்கு(China) உளவுபார்த்த மூன்று சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்தினை தொடர்ந்து சீனா மீது கடும் கண்டனம் வெளியிட்டுள்ளது. இந்நிலையில், லண்டனில் உள்ள சீன தூதரை அழைத்து பிரித்தானியா குறித்த கண்டனத்தை தெரிவித்துள்ளது.



கனடாவில் தற்காலிக விசாவில் உள்ள தமிழர்களுக்கு மகிழ்ச்சி தகவல்!
[Wednesday 2024-05-15 06:00]

கனடாவில் தற்காலிக விசாவில் உள்ள பலருக்கு நிரந்தர குடியுரிமை வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக, குடிவரவு அமைச்சர் மார்க் மில்லர் தெரிவித்துள்ளார். கனடாவில் தற்காலிக குடியிருப்பாளர்களின் எண்ணிக்கையை கட்டுப்படுத்துவதற்காக நிரந்தர வதிவிட நிலையை அதிகரிப்பதே இதற்கான சிறந்த தீர்வு என அவர் குறிப்பிட்டுள்ளார்.



இஸ்ரேலின் முக்கிய இராணுவத் தளத்தில் பாரிய தீப்பரவல்!
[Wednesday 2024-05-15 06:00]

இஸ்ரேலின் டெல் அவிவ்(tel aviv)இல் உள்ள முக்கிய இராணுவத் தளத்தில் பாரிய தீப்பரவல் ஒன்று ஏற்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. டெல் அவிவ் - ஹாஷோமர் இராணுவ தளத்தில் உள்ள கிடங்கு வளாகத்திலேயே இவ்வாறு தீப்பரவல் ஏற்பட்டுள்ளது.



பிரித்தானியாவில் கல்வி கற்கும் சர்வதேச மாணவர்களுக்கு வெளியான மகிழ்ச்சி தகவல்!
[Wednesday 2024-05-15 06:00]

பிரித்தானியாவிலுள்ள சர்வதேச மாணவர்களுக்கு பெரும் பதற்றத்தை உருவாக்கியிருந்த ஒரு விடயம், தற்போது அவர்களுக்கு பெருமகிழ்ச்சியை ஏற்படுத்தும் விடயமாக மாறியுள்ளது. பிரித்தானிய பல்கலைக்கழகங்களில் பயிலும் வெளிநாட்டு மாணவ மாணவியர், இரண்டு அல்லது மூன்று ஆண்டுகள் பிரித்தானியாவில் பணி செய்யும் வகையில், பட்டதாரி வீசா (graduate visa) என்னும் வீசா வழங்கப்பட்டு வருகிறது.



காசா அகதிமுகாமில் ஈவிரக்கமின்றி தாக்குதல்: 13 பேர் பலி!
[Tuesday 2024-05-14 16:00]

காசாவின் மத்திய பகுதியில் நுசைரெத் அகதிமுகாமில் உள்ள வீடொன்றின் மீது இஸ்ரேல் மேற்கொண்ட தாக்குதலில் 13 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. தாக்குதலில் உயிரிழந்தவர்களின் உடல்கள் இடிபாடுகளிற்குள் சிக்குண்டுள்ளதாக அல் அக்சா தியாகிகள் மருத்துவமனையின் மருத்துவர் ஒருவர் சிஎன்என்னிற்கு தெரிவித்துள்ளார்.



துபாயில் பறக்கும் டாக்ஸி சேவை!
[Tuesday 2024-05-14 16:00]

அடுத்த ஆண்டு முதல் துபாயில் பறக்கும் டாக்ஸி சேவையை இயக்க திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உலக போக்குவரத்து துறையில் புதிய புரட்சியை ஏற்படுத்தும் வகையில் இந்த பறக்கும் டாக்ஸி சேவை செயல்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் பயணம் செய்ய ஒரு நபருக்கு 350 எமிரேட்ஸ் திர்ஹாம் அறவிடப்படவுள்ளது.



ஆஸ்திரேலியாவில் 14 வயதுக்குட்பட்ட குழந்தைகள் சமூக ஊடகங்கள் பயன்படுத்த தடை!
[Tuesday 2024-05-14 16:00]

ஆஸ்திரேலியாவிலேயே முதன்முறையாக தெற்கு மாகாணத்தில் 14 வயதுக்குட்பட்ட குழந்தைகள் சமூக ஊடகங்கள் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. இன்றைய நவீன உலகில் சமூக ஊடகங்களைப் பயன்படுத்தாதவர்கள் யாரும் இல்லை, அவ்வளவு முக்கியப் பங்கு வகிக்கிறது. இருப்பினும், அதன் பயன்பாடு பல்வேறு தீமைகளையும் ஏற்படுத்துகிறது.



அரசை எதிர்த்து கனேடிய மாகாணமொன்றில் உண்ணாவிரதம்: புலம்பெயர்ந்தோர் முடிவு!
[Tuesday 2024-05-14 16:00]

கனேடிய மாகாணமொன்று வெளிநாட்டவர்களுக்கெதிராக எடுக்க இருக்கும் முடிவொன்றை எதிர்த்து புலம்பெயர்ந்தோர் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டு வரும் நிலையில், தங்கள் கோரிக்கைகள் நிறைவேற்றப்படாவிட்டால், சாகும் வரை உண்ணாவிரதம் மேற்கொள்ள முடிவு செய்துள்ளதாக அவர்கள் தெரிவித்துள்ளார்கள்.


Asayan-Salon-2022-seithy
 gloriousprinters.com 2021
Airlinktravel-2020-01-01
Rajeef sebarasha 2023/04/19
Ambikajewellers-01-08-2021-seithy
Karan Remax-2010
NKS-Ketha-04-11-2021
Logan-Kumaresh-Homelife-02-02-2021
Mahesan-Remax-169515-Seithy
Vaheesan-Remax-2016
Kugeenthiran-200-2022-seithy
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> 12 10 2019 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Skanda Nite 2019 125th Anniversary நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா