Untitled Document
April 27, 2024 [GMT]
"வாங்க எல்லாரும் அரசியல் கட்சி ஆரம்பிங்க" - நடிகர் வடிவேலு பேட்டி!
[Wednesday 2024-02-07 06:00]

விஜய், தனது மக்கள் இயக்கத்தை அரசியல் கட்சியாக மாற்றியுள்ளார். தமிழக வெற்றி கழகம் எனத் தனது கட்சிக்குப் பெயர் வைத்துள்ளதாக அறிவித்த விஜய், அதை இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்ய விண்ணப்பித்துள்ளார். கட்சியின் பெயரை அறிவித்ததைத் தொடர்ந்து, தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் கட்சி நிர்வாகிகள் கேக் வெட்டியும், பட்டாசு வெடித்தும் கொண்டாடினர். மேலும் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி மகிழ்ந்தனர். அரசியல் தலைவர்கள், பிரபலங்கள் எனப் பலரும் விஜய்க்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

விஜய், தனது மக்கள் இயக்கத்தை அரசியல் கட்சியாக மாற்றியுள்ளார். தமிழக வெற்றி கழகம் எனத் தனது கட்சிக்குப் பெயர் வைத்துள்ளதாக அறிவித்த விஜய், அதை இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்ய விண்ணப்பித்துள்ளார். கட்சியின் பெயரை அறிவித்ததைத் தொடர்ந்து, தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் கட்சி நிர்வாகிகள் கேக் வெட்டியும், பட்டாசு வெடித்தும் கொண்டாடினர். மேலும் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி மகிழ்ந்தனர். அரசியல் தலைவர்கள், பிரபலங்கள் எனப் பலரும் விஜய்க்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

  

இந்நிலையில் ராமேஸ்வரத்தில் மோட்ச தீபம் ஏற்ற வந்த நடிகர் வடிவேலு செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், ''அம்மா இறந்து ஒரு வருடம் ஆகிறது. அம்மாவின் திதிக்கு இங்கு மோட்ச விளக்கு போடுவதற்காக நான் வந்திருக்கிறேன். என்னுடைய தெய்வம் அவர்கள். அவர் இறந்த துக்கம் என்னை விட்டு இன்னும் போகவில்லை.

அம்மா இறந்த ஆறு மாசத்தில் தம்பி இறந்துட்டாரு. அந்த இரண்டு துக்கமும் இன்னும் குடும்பத்தை போட்டு வாட்டுது. இன்னும் அதில் இருந்து நாங்கள் மீளவில்லை. இப்பதான் அம்மாவிற்கு முடிந்திருக்கிறது. இன்னும் ஆறு மாதம் கழித்து தம்பிக்காக இங்க வந்து மோட்ச தீபம் ஏத்தணும்'' என்றார்.

அப்பொழுது செய்தியாளர்கள் விஜய் அரசியல் கட்சி தொடங்கி இருப்பது குறித்து கேள்வி எழுப்பினர். அதற்கு, ''எல்லாருமே வரலாமே (செய்தியாளர்களை நோக்கி) நீங்களும் கூட வரலாம். வீடியோ கேமரா எடுத்துக் கொண்டிருக்காமல் நீங்களும் வரலாம். வேலை இருக்கிறதா? வர வேண்டியதுதானே. இப்படியே கேமராவை பிடித்துக் கொண்டு எத்தனை நாள் வேலை பார்ப்பீர்கள்.

டக்குனு நீங்கள் உள்ளே வந்து ஒரு கட்சிய ஆரம்பிங்க. வாங்க எல்லாரும் அரசியல் கட்சி ஆரம்பிங்க. மக்களுக்கு நல்லது செய்வதற்கு யாராக இருந்தாலும் வரலாம். யாரும் வரக்கூடாது என்று சொல்லக்கூடாது. எல்லாரும் வந்தார்கள். டி.ராஜேந்தர் வந்தாரு, ராமராஜன் வந்தாரு, பாக்யராஜ் வந்தாரு எல்லாரும் நல்லது செய்யத்தான் வந்தாங்க. அது மாதிரி நல்லது செய்ய வருகிறார்கள். வருபவர்களை வரவேற்கிறோம். வரட்டும் வந்து மக்களுக்கு நல்லது செய்வது தப்பில்லையே வரட்டும்'' என்றார்.

  
   Bookmark and Share Seithy.com



சிங்கம் போல் அடுத்தடுத்து 4-5 பாகங்களாக வரவிருக்கும் சூப்பர் ஹிட் படம்!
[Saturday 2024-04-27 18:00]

ஹரி மற்றும் சூர்யா கூட்டணியில் வெளியான சிங்கம் படம் மாபெரும் வெற்றி பெற்றது. இதனால் இதே கூட்டணியில் பார்ட் 2, பார்ட் 3 என அடுத்தடுத்த பாகங்களை எடுத்து வெற்றி கண்டனர். மேலும் சிங்கம் 4 படத்தையும் எடுக்க உள்ளதாக அறிவித்தனர். இந்த சூழலில் சிங்கம் படத்தை போல நான்கு, ஐந்து பார்ட் எடுக்க இயக்குனர் ஒருவர் திட்டம் போட்டிருக்கிறார். அதற்கான ஸ்கிரிப்ட்டையும் தயார் செய்து ரெடியாக வைத்திருக்கிறாராம்.



தொகுப்பாளினியிடம் கடுப்பான சித்தார்த்!
[Saturday 2024-04-27 18:00]

சித்தார்த் எப்போதுமே கலகலப்பாக ஜாலியாக பேசக்கூடியவர். அதேபோல் மனதில் பட்டதை பட்டென்று பேசிவிடுவார். அப்படித்தான் தற்போது ஒரு கேள்விக்கு ஓப்பன் ஆக பதில் அளித்துள்ளார். அதன்படி சமீபத்தில் இவர் கலந்து கொண்ட பேட்டியில் பல கேள்விகள் முன்வைக்கப்பட்டது. அதில் என்னை ஒரு சக மனிதனாக நினைத்து பேசும் பெண்களிடம் நான் பேசுவேன்.



அஜித் பிறந்தநாளுக்கு காத்திருக்கும் தரமான 4 அப்டேட்!
[Saturday 2024-04-27 18:00]

அஜித்தின் பிறந்த நாள் மே ஒன்றாம் தேதி ஒவ்வொரு வருடமும் ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள். அந்த வகையில் கடந்த ஆண்டு அஜித்துக்கு சொல்லிக் கொள்ளும் அளவுக்கு சினிமாவில் படங்களின் புதுவரவு எதுவுமே இல்லை. துணிவு படத்திற்கு பிறகு அஜித்தின் படங்கள் ரிலீஸ் ஆகாததால் அவரது ரசிகர்கள் சிறு அதிருப்தியில் இருக்கின்றனர். ஆனாலும் 2024 ஆம் ஆண்டு அஜித்துக்கு பொன்னான ஆண்டாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.



விஷால், ஹரி கூட்டணி வெற்றி பெறுமா?
[Saturday 2024-04-27 06:00]

இயக்குனர் ஹரி மற்றும் விஷால் கூட்டணி ரத்னம் படத்திற்கு முன்னதாகவே தாமிரபரணி மற்றும் பூஜை படங்களில் வெற்றி பெற்றது. அதிலும் குறிப்பாக தாமிரபரணி படம் விஷாலின் கேரியரில் மிக முக்கியமான படமாக அமைந்தது.



சன் டிவி ரசிகர்களுக்கு ஓர் அதிர்ச்சி!
[Saturday 2024-04-27 06:00]

டிவி சேனல்கள் தற்போது போட்டிபோட்டுக்கொண்டு புதுப்புது சீரியல்களாக ஒளிபரப்ப தொடங்கி இருக்கின்றன. அதற்காக தற்போது ஓடிக்கொண்டிருக்கும் சீரியல்கள் பலவும் முடிக்கப்படுவது ரசிகர்களுக்கு அதிர்ச்சி ஏற்படுத்தி வருகிறது.



கில்லி படத்தை தொடர்ந்து விஜய்யின் அடுத்த திரைப்படம் ரீ-ரிலீஸ்!
[Friday 2024-04-26 18:00]

முன்னணி நடிகர்களின் வெற்றிப் படங்கள் மீண்டும் திரையரங்குகளில் ரீ-ரிலீஸ் ஆவது வழக்கமான ஒரு விஷயமாகிவிட்டது. அப்படி கடந்த சில தினங்களுக்கு முன் வெளியாகி வெற்றிநடை போட்டுக் கொண்டிருக்கும் படம் விஜய்யின் கில்லி. தரணி இயக்கத்தில் விஜய்-த்ரிஷா நடிக்க 2004ம் ஆண்டு வெளியான இப்படம் திரையரங்குகளில் இப்போது வெற்றிநடை போட்டுக் கொண்டிருக்கிறது.



15 நிமிடங்கள் நடிக்க இத்தனை கோடி சம்பளம் வாங்குகிறாரா கமல்ஹாசன்?
[Friday 2024-04-26 18:00]

நடிகர் கமல்ஹாசன் நடிப்பை தாண்டி பல விஷயங்களை தமிழ் சினிமா ரசிகர்கள் தெரிந்துகொள்ள காரணமாக இருந்தவர். நிறைய தொழில்நுட்ப விஷயங்களை முதல் ஆளாக அறிமுகம் செய்து வந்தார். நடிப்பு, நடனம், கதை, திரைக்கதை, பாடல்கள் என அனைத்திலும் மாஸ் காட்டக்கூடியவர். இப்போது இந்தியன் 2, தக் லைஃப், கல்லி 2898 என தொடர்ந்து நிறைய படங்கள் நடித்து வருகிறார்.



விஜய்யுடன் மூன்றாவது முறையாக கைகோர்க்கும் 31 வயது நடிகை!
[Friday 2024-04-26 18:00]

தளபதி விஜய்யின் கடைசி படம் குறித்து பல தகவல்கள் தொடர்ந்து வெளியாகிறது. ஆனால், அவை யாவும் அதிகாரப்பூர்வமான தகவலாக இல்லை. ஹெச். வினோத் இப்படத்தை இயக்கப்போகிறார் என கூறப்படுகிறது. ஆனால், இதுவரை இப்படத்திற்கான தயாரிப்பாளர் யார் என தெரியவில்லை. ஏ.ஜி.எஸ் மற்றும் பேஷன் ஸ்டூடியோ ஆகிய நிறுவனம் இப்படத்தை கைப்பற்று ஆர்வம் காட்டி வருவதாக பிரபல பத்திரிகையாளர் கூறியிருந்தார்.



காதலரை பிரேக்கப் செய்த நடிகை ஸ்ருதி ஹாசன்!
[Friday 2024-04-26 06:00]

நடிகர் கமல்ஹாசனின் மகள் ஸ்ருதி ஹாசன் இந்திய அளவில் பாப்புலரான நடிகை தான். தமிழ், தெலுங்கு படங்களில் முக்கிய நடிகையாக இருப்பது மட்டுமின்றி, சோலோ பாடல்கள் மூலமாகவும் அவர் பாப்புலராகி வருகிறார்.



உச்சகட்ட கவர்ச்சியில் ஷில்பா மஞ்சுநாத்! Top News
[Friday 2024-04-26 06:00]

இஸ்பேட் ராஜாவும் இதயராணியும் படத்தில் ஹீரோயினாக நடித்து அறிமுகம் ஆனவர் ஷில்பா மஞ்சுநாத். தற்போது அவர் செம ஹாட் உடையில் இருக்கும் அழகிய ஸ்டில்கள் இதோ...



பணத்தாசையால் தமன்னாவுக்கு ஏற்பட்ட விபரீதம்!
[Thursday 2024-04-25 18:00]

டாப் நடிகையாக வலம் வந்த தமன்னா தமிழ் சினிமாவில் மார்க்கெட் குறையவே அக்கட தேசம் சென்றுவிட்டார். ஆனால் நெல்சனின் ஜெயிலர் படத்தில் இடம்பெற்ற காவாலா பாடலின் மூலம் மீண்டும் பட்டிதொட்டி எங்கும் பிரபலமானார்.



சிவகார்த்திகேயனுடன் மோத போகும் ஐயப்பனும் கோஷியும் நடிகர்!
[Thursday 2024-04-25 18:00]

சிவகார்த்திகேயன், ராஜ்குமார் இயக்கத்தில் கமல் தயாரிப்பில் உருவாகி வரும் அமரன் படத்தில் நடித்து வருகிறார். முகுந்த் வரதராஜனின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து இந்த படம் எடுக்கப்பட்டு வருகிறது.



இரண்டாம் திருமணத்திற்கு தயாராகும் VJ ரம்யா?
[Thursday 2024-04-25 18:00]

விஜய் டிவியில் பிரபல தொகுப்பாளராக இருந்தவர் ரம்யா சுப்ரமணியன். அவர் தற்போது படங்களில் சின்ன சின்ன ரோல்களில் நடித்து வருகிறார். அது மட்டுமின்றி உடல் எடையை எப்படி குறைக்க வேண்டும் என பிட்னெஸ் ட்ரெயினிங் வகுப்புகளையும் நடத்தி வருகிறார் அவர். ரம்யா தீவிர ஒர்கவுட் செய்து தனது எடையை குறைத்து ஸ்லிம் ஆன தோற்றத்துக்கு மாறி இருப்பது குறிப்பிடத்தக்கது.



மஞ்சுமல் பாய்ஸ் பட நடிகரை கரம்பிடித்த நடிகை அபர்ணா தாஸ்!
[Wednesday 2024-04-24 18:00]

மஞ்சுமல் பாய்ஸ் பட நடிகர் தீபக் பரம்போலுக்கும் டாடா பட நடிகை அபர்ணா தாஸுக்கும் இன்று கேரளாவில் பாரம்பரிய முறைப்படி திருமணம் இடம்டிபெற்றுள்ளது. அபர்ணா தாஸின் திருமண புகைப்படங்கள் தற்போது இணையத்தை ஆக்கிரமித்து வருகின்றது. அபர்ணா தாஸ் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியான பீஸ்ட் படத்தில் ஒரு சின்ன ரோலில் நடித்து தமிழக மக்கள் மனதில் இடம் பிடித்தவர் நடிகை அபர்ணா தாஸ்.



தேர்தல் முடிந்த கையோடு டெல்லிக்கு போன கமல்!
[Wednesday 2024-04-24 18:00]

கமலைப் பொறுத்தவரை கமர்சியலாக நடித்து வெற்றி பெற்று லாபத்தை பார்க்க வேண்டும் என்று நினைக்கக் கூடியவர் அல்ல. எத்தனை வருடங்கள் ஆனாலும் பேசும் படமாக சாதனை படைக்க வேண்டும் என்று ஆசைப்படுபவர். அப்படி இவருடைய கேரக்டரில் எத்தனையோ படங்கள் இருக்கிறது. அப்படிப்பட்ட இவரை வைத்து மணிரத்தினம் 34 வருடங்களுக்கு முன் எடுத்த நாயகன் படம் இப்பொழுதும் பெயர் பெற்று வருகிறது.



அதற்காக பிளாஸ்டிக் சர்ஜரி செய்தாரா யாஷிகா ஆனந்த்? - அவரே சொன்ன தகவல்!
[Wednesday 2024-04-24 18:00]

ஜீவா நடிப்பில் கடந்த 2016 ஆம் ஆண்டு வெளியான கவலை வேண்டாம் என்ற படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானவர் தான் யாஷிகா ஆனந்த். இதையடுத்து இரண்டு அறையில் முரட்டு குத்து என்ற படத்தின் மூலமாக இளைஞர்கள் மத்தியில் பிரபலமானார்.



ரஜினியை தாக்கி பேசிய பிரபலம்!
[Wednesday 2024-04-24 06:00]

சூப்பர்ஸ்டார் ரஜினி இதற்கு முன்பு சொன்ன காக்கா கழுகு கதை எவ்வளவு பெரிய பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது என எல்லோருக்கும் தெரியும். ரஜினி தன்னை கழுகு என்றும் விஜய்யை காக்கா என்றும் கூறிவிட்டார் என பேசப்பட்டது.



அட்லீ வீட்டுக்கு அருகில் குடியேறிய பிரபல ஹீரோயின்!
[Wednesday 2024-04-24 06:00]

நடிகை பூஜா ஹெக்டே தமிழில் முகமூடி படம் மூலமாக அறிமுகம் ஆனவர். அந்த படம் பெரிய தோல்வி ஆனதால் பல வருடங்களுக்கு தமிழ் பக்கமே அவர் வரவில்லை. அதன் பின் விஜய்யின் பீஸ்ட் படத்தில் நடித்தார் அவர். தற்போது ஹிந்தியில் தொடர்ந்து படங்கள் நடித்து வருகிறார் பூஜா ஹெக்டே.



நடிகர் சங்க கட்டட பணிகளுக்கு சிவகார்த்தியேன் உதவி!
[Tuesday 2024-04-23 18:00]

தென்னிந்திய நடிகர் சங்கத்துக்கு புதிதாக கட்டடம் கட்டப்பட்டு வருகிறது. பல ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கப்பட்ட கட்டுமான பணிகள் நிதிப் பற்றாக்குறை காரணமாக நிறைவு பெறாமல் இருந்தது. இந்தப் பணி நிறைவு பெற வங்கியில் ரூ.40 கோடி கடன் வாங்க ஒப்புதல் வாங்கியிருப்பதாக சங்க பொருளாளர் கார்த்தி 67வது சங்க பொதுக்குழுக் கூட்டத்தின் போது தெரிவித்திருந்தார்.



வீட்டு தேவைக்காக கழிவறை சுத்தம் செய்தேன் - அப்பாஸின் மறுப்பக்கம்!
[Tuesday 2024-04-23 18:00]

ஒரு காலத்தில் தமிழ் சினிமாவின் சாக்லேட் பாய் ஆக திகழ்ந்தவர் அப்பாஸ். இவர் நடிப்பில் வெளியான காதல் தேசம் பட்டித்தொட்டியெல்லாம் பட்டையை கிளப்பியது. அதை தொடர்ந்து பெரிய வெற்றி கொடுக்காமல் தொடர்ந்து சறுக்கி வந்தார். பிறகு படையப்பா, ஹேராம் என முன்னணி நடிகர்கள் படத்தில் சின்ன ரோலில் நடித்தார்.


NKS-Ketha-04-11-2021
Kugeenthiran-200-2022-seithy
Airlinktravel-2020-01-01
Asayan-Salon-2022-seithy
Vaheesan-Remax-2016
Ambikajewellers-01-08-2021-seithy
Logan-Kumaresh-Homelife-02-02-2021
Rajeef sebarasha 2023/04/19
Mahesan-Remax-169515-Seithy
 gloriousprinters.com 2021
Karan Remax-2010
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> 12 10 2019 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Skanda Nite 2019 125th Anniversary நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா