Untitled Document
April 30, 2024 [GMT]
தங்கர் பச்சானுக்கு கிளி ஜோதிடம் பார்த்த ஜோதிடர் கைது: தமிழக அரசியலில் பரபரப்பு!
[Tuesday 2024-04-09 18:00]

பாமக வேட்பாளர் தங்கர்பச்சானுக்கு கிளி ஜோதிடம் பார்த்த நபர் வனவிலங்கு பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள்ளார். வரும் மக்களவை தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி வைப்பதாக பாமக அதிகாரபூர்வமாக அறிவித்த நிலையில், பாமகவுக்கு 10 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதில் கடலூர் மக்களவை தொகுதியில் பாஜக கூட்டணியில் இருக்கும் பாமக சார்பில் இயக்குநர் தங்கர் பச்சான் போட்டியிடுகிறார். இந்நிலையில் கடலூர் சுற்றுவட்டாரத்தில் தங்கர் பச்சான் தீவிரமாக பரப்புரை மேற்கொண்டு வருகிறார்.

பாமக வேட்பாளர் தங்கர்பச்சானுக்கு கிளி ஜோதிடம் பார்த்த நபர் வனவிலங்கு பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள்ளார். வரும் மக்களவை தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி வைப்பதாக பாமக அதிகாரபூர்வமாக அறிவித்த நிலையில், பாமகவுக்கு 10 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதில் கடலூர் மக்களவை தொகுதியில் பாஜக கூட்டணியில் இருக்கும் பாமக சார்பில் இயக்குநர் தங்கர் பச்சான் போட்டியிடுகிறார். இந்நிலையில் கடலூர் சுற்றுவட்டாரத்தில் தங்கர் பச்சான் தீவிரமாக பரப்புரை மேற்கொண்டு வருகிறார்.

  

அந்தவகையில், இரண்டு நாட்களுக்கு முன்பு கடலூர் தென்னம்பாக்கம் பகுதியில் தங்கர் பச்சான் பிரச்சாரம் மேற்கொண்டார்.

அங்கு, கிளி ஜோதிடம் பார்த்து பார்த்து கொண்டிருந்தவரிடம் தங்கர் பச்சான் ஜோதிடம் பார்த்தார். அப்போது அவருக்கு அழகுமுத்து அய்யனார் படம் வந்ததால் நீங்கள் வெற்றி பெறுவீர்கள் என்று கிளி ஜோதிடர் கூறினார்.

இதுதொடர்பான வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலான நிலையில், தங்கர்பச்சானுக்கு கிளி ஜோதிடம் பார்த்த ஜோதிடர் வனவிலங்கு பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார்.

அதாவது, பாதுகாக்கப்பட்ட பட்டியலில் உள்ள பச்சைக்கிளிகளை கூண்டில் அடைத்து வைத்து ஜோதிடம் பார்த்ததற்காக கைது செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் விளக்கம் அளித்துள்ளனர். இச்சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

  
   Bookmark and Share Seithy.com



பெண் வயிற்றிலிருந்து 5 கிலோ சினைப்பைக் கட்டி அகற்றம்: அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவர்கள் சாதனை!
[Tuesday 2024-04-30 06:00]

பெண்ணின் வயிற்றில் இருந்த 5 கிலோ சினைப்பைக் கட்டியை அகற்றி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவர்கள் சாதனை படைத்துள்ளனர். சிதம்பரத்தில் உள்ள கடலூர் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு, மயிலாடுதுறை மாவட்டம் அளக்குடி கிராம பகுதியைச் சேர்ந்த வீரமணி மனைவி சசிகலா(38) வயிற்று வலி காரணமாக அனுமதிக்கப்பட்டார். அப்போது மருத்துவர்கள் பரிசோதனை செய்து போது அவரது கருப்பையில் 22 செ.மீ நீள அகலத்தில் 5.1 கிலோ சினைப்பைக் கட்டி இருப்பது தெரிய வந்தது.



தடுமாறிய ஹெலிகாப்டர்: உயிர் தப்பிய அமித்ஷா!
[Tuesday 2024-04-30 06:00]

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக கடந்த 19ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது.



பிரதமர் மோடிக்கு எதிரான மனு தள்ளுபடி!
[Tuesday 2024-04-30 06:00]

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டியுள்ளது. அதன்படி கடந்த 19 ஆம் தேதி (19.04.2024) தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. அதில் முதற்கட்டமாக தமிழகம் உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு கடந்த 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து நாடு முழுவதும் 13 மாநிலங்களில் உள்ள 87 மக்களவைத் தொகுதிகளில் கடந்த 26 ஆம் தேத் (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்றது.



பெண்களுக்கு ரூ.25 லட்சம் வரை மருத்துவ காப்பீடு: ராகுல் காந்தி உறுதி!
[Monday 2024-04-29 18:00]

காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வந்தால் பெண்களுக்கு ரூ.25 லட்சம் மதிப்பில் மருத்துவ காப்பீடு வழங்கப்படும் என்றும், எனவே தங்கள் தாலியை அவர்கள் அடகு வைக்க தேவையில்லை என்றும் காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி கூறியுள்ளார். கடந்த 2019ம் ஆண்டை போலவே இந்த முறையும் நாடு முழுவதும் 7 கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது. மொத்தம் உள்ள 543 லோக்சபா தொகுதிகளில் முதற்கட்டமாக 21 மாநிலங்களில் 102 தொகுதிகளுக்கு ஏப்ரல் 19ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது.



வேட்புமனு வாபஸ் பெற சிறிது நேரம் இருந்தபோது இந்தூர் காங்கிரஸ் வேட்பாளர் பாஜகவில் சேர்ப்பு!
[Monday 2024-04-29 18:00]

காங்கிரஸ் கட்சிக்கு பெரும் பின்னடைவாக இந்தூரில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் அக்ஷய் பாம், கடைசி நேரத்தில் தனது வேட்புமனுவை வாபஸ் பெற்றுவிட்டு பாஜகவில் ஐக்கியமானார். நமது நாட்டில் மொத்தம் ஏழு கட்டங்களாக லோக்சபா தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அதில் 2 கட்ட வாக்குப்பதிவு நடந்து முடிந்துவிட்டது. வரும் வாரங்களில் இன்னும் 5 கட்ட வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.



"முதலிடம் பிடிக்காமலேயே இருந்திருக்கலாம்" - தோற்றத்தால் கேலி செய்யப்பட்ட மாணவி உருக்கம்!
[Monday 2024-04-29 18:00]

உத்தர பிரதேசத்தில் 10-ஆம் பொதுத்தேர்வில் மாநில அளவில் முதலிடம் பிடித்த மாணவி, இப்போது அதற்காக வருத்தப்படும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார். பிராச்சி நிகம் (Prachi Nigam), சமீபத்தில் ஊடகங்களில் மிகவும் பிரபலமாக வலம்வந்த பெயர் இது. உத்தரபிரதேசத்தில் பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் வந்தபோது, ​​98.5 மதிப்பெண்கள் பெற்று மாநிலத்திலேயே முதலிடம் பிடித்து எல்லோரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கினார்.



கல்லூரி மாணவிகளை தவறாக வழிநடத்திய வழக்கு: நீதிமன்றத்தின் தீர்ப்பு!
[Monday 2024-04-29 18:00]

கல்லூரி மாணவிகளை தவறாக வழிநடத்தியதாக தொடரப்பட்ட வழக்கில் பேராசிரியை நிர்மலா தேவி குற்றவாளி என தீர்ப்பளித்து ஸ்ரீவில்லிபுத்தூர் விரைவு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும் இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட மதுரை காமராஜர் பல்கலைகழக உதவி பேராசிரியர் முருகன் மற்றும் ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமி விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.



'எப்படி கேமராக்கள் செயலிழக்கும்?' - அதிமுக ஜெயக்குமார் கேள்வி!
[Monday 2024-04-29 06:00]

மக்களவைத் தேர்தலுக்கான முதல்கட்ட தேர்தல் தமிழகத்தில் முடிந்திருக்கும் நிலையில் அடுத்தடுத்த கட்டங்களாக பல மாநிலங்களில் தேர்தல் நடைபெற்று வருகிறது. இந்தநிலையில் நீலகிரியில் வாக்கு பெட்டிகள் வைக்கப்பட்டிருக்கும் ஸ்ட்ராங் ரூமில் வைக்கப்பட்டிருந்த சிசிடிவி கேமராக்கள் நேற்று திடீரென 20 நிமிடங்கள் செயலிழந்து பின்னர் சரியானது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.



'வகுப்புக்கு ஓர் ஆசிரியரை உறுதி செய்ய வேண்டும்' - ராமதாஸ் கோரிக்கை!
[Monday 2024-04-29 06:00]

'தமிழ்நாட்டில் தொடக்கக் கல்வித் துறையின் கீழ் செயல்பட்டு வரும் அரசு தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் தேவைக்கும் கூடுதலாக 2236 இடைநிலை ஆசிரியர்கள் இருப்பதாக தொடக்கக் கல்வி இயக்குனர் கூறியிருப்பது நகைப்பை ஏற்படுத்துவதாக பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.



கட்டுப்பாட்டை இழந்த லாரி: தப்பிக்க முயன்ற ஓட்டுநர் உயிரிழப்பு!
[Monday 2024-04-29 06:00]

கட்டுப்பாட்டை இழந்த லாரியில் இருந்து குதித்து உயிர் தப்பிக்க முயன்ற லாரி ஓட்டுநர் லாரியின் டயரிலேயே சிக்கி உயிரிழந்த சம்பவம் தூத்துக்குடியில் நிகழ்ந்துள்ளது. நெல்லையில் இருந்து சிவகாசி நோக்கி பழைய பேப்பர்களை ஏற்றிக்கொண்டு சென்ற லாரி இனாம்மணியாச்சி பாலம் அருகே சென்று கொண்டிருந்தது. லாரியை தூத்துக்குடி சேர்ந்த இலந்தைகுளம் பகுதியைச் சேர்ந்த ராமகிருஷ்ணன் (60 வயது) என்பவர் லாரியை ஓட்டிக் கொண்டிருந்தார்.



அடுத்தடுத்து சிக்கிய போதைப் பொருட்கள்: பரபரப்பில் குஜராத்!
[Sunday 2024-04-28 18:00]

குஜராத் மாநிலம் வழியாக இந்தியாவிற்கு அதிகளவில் போதைப் பொருள்கள் கடத்தப்பட்டு வருவது அதிகரித்துள்ளது. இதன் காரணமாக குஜராத்தில் போதைப்பொருள் தடுப்பு பிரிவினர் தொடர்ந்து சோதனை மேற்கொண்டு வருகின்றனர். குஜராத்தின் அகமதாபாத்தில் நாட்டின் மிகப்பெரிய போதைப் பொருள் தயாரிப்புக் கூடங்களை போதைப் பொருள் தடுப்புப் பிரிவினர் கண்டுபிடித்தனர். அப்போது அங்கு இருந்த பல கோடி ரூபாய் மதிப்புள்ள பல்வேறு போதைப் பொருட்களைப் பறிமுதல் செய்தனர்.



திக் திக் நொடிகள்: சென்னையை கலங்கடித்த சம்பவம்!
[Sunday 2024-04-28 18:00]

சென்னை ஆவடியில் நான்காவது மாடியில் இருந்து கீழே தவறிவிழ முற்பட்ட நிலையில் குழந்தை காப்பாற்றப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பான வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.



குழந்தையின்மை சண்டையால் உயிரை மாய்த்துக்கொண்ட பெண்!
[Sunday 2024-04-28 18:00]

தமிழக மாவட்டம் வேலூரில் பெண்ணொருவர் குழந்தையின்மையால் கணவருடன் ஏற்பட்ட தகராறில், தனது உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது. வேலூர் மாவட்டம் கொசவன்புதூரைச் சேர்ந்தவர் லிஷா (33). இவரது கணவர் பிரதீப் (40) கே.வி.குப்பம் சட்டமன்ற தொகுதி அமமுக பொறுப்பாளராக உள்ளார்.



தமிழகத்தின் வெப்பநிலை குறித்து வானிலை மையம் எச்சரிக்கை!
[Sunday 2024-04-28 18:00]

குமரிக்கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது என சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது. இதனால் இன்று கன்னியாகுமரி, திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் மிதமான மழை பெய்யும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.



மதுரையில் ‘தமிழ்க் கவிஞர் நாள்’ கொண்டாட்டம் - தமிழக அரசு தகவல்!
[Sunday 2024-04-28 08:00]

தமிழ் வளர்ச்சித் துறையின் சார்ப்பில் பாவேந்தர் பாரதிதாசனின் 133 ஆம் பிறந்தநாள் நிகழ்வு தமிழ்க் கவிஞர் நாளாக நாளை (29.04.2024) காலை 10.30 மணிக்கு மதுரை உலகத் தமிழ்ச் சங்கப் பெருந்திட்ட வளாக அரங்கில் நடைபெறவுள்ளது. இந்நிகழ்வு தமிழ்நாடு இயல், இசை, நாடகமன்றம் வழங்கும் கலை நிகழ்ச்சியோடு நிகழ்வு தொடங்குகிறது. தொடக்க விழாவில் தமிழ் வளர்ச்சித் துறை இயக்குநர் ஔவை அருள் நோக்கவுரை ஆற்றவுள்ளார். இந்நிகழ்விற்கு மதுரை மாவட்ட ஆட்சியர் மா.சௌ.சங்கீதா தலைமையுரை வழங்கவுள்ளார்.



குஜராத்தில் ரூ.300 கோடி மதிப்பிலான போதைப்பொருட்கள் பறிமுதல்!
[Sunday 2024-04-28 08:00]

குஜராத் மாநிலம் வழியாக இந்தியாவிற்கு அதிகளவில் போதைப் பொருள்கள் கடத்தப்பட்டு வருவது அதிகரித்துள்ளது. இதன் காரணமாக குஜராத்தில் போதைப்பொருள் தடுப்பு பிரிவினர் தொடர்ந்து சோதனை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் குஜராத்தின் அகமதாபாத்தில் நாட்டின் மிகப்பெரிய போதைப் பொருள் தயாரிப்புக் கூடங்களை போதைப் பொருள் தடுப்புப் பிரிவினர் கண்டுபிடித்தனர். அப்போது அங்கு இருந்த பல கோடி ரூபாய் மதிப்புள்ள பல்வேறு போதைப் பொருட்களைப் பறிமுதல் செய்தனர்.



முறைநீர் கூட்டமைப்பு அலுவலகத்தை முற்றுகையிட்ட விவசாயிகள் கைது!
[Sunday 2024-04-28 08:00]

விவசாயிகள் கூட்டமைப்பு அலுவலகத்தை முற்றுகையிட முயன்ற விவசாயிகள் கைது செய்யப்பட்ட சம்பவம் ஈரோட்டில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு பஸ் நிலையம் அருகே கீழ்பவானி முறை நீர் விவசாயிகள் கூட்டமைப்பின் அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் அந்த அலுவலகத்தை சேர்ந்த நிர்வாகிகள், நீர்வளத்துறையின் தவறான நீர் நிர்வாகத்திற்கு துணையாக இருந்தும், கீழ்பவானி கால்வாயில் ஐந்தாவது நனைப்பிற்கு தண்ணீர் இல்லாமல் போக காரணமாக இருந்தும், நீர் பாசனத்திற்கு நம்பகத் தன்மையை இழக்க செய்து போலியாக செயல்படும் கீழ்பவானி முறை நீர் விவசாயிகள் கூட்டமைப்பை சேர்ந்த நிர்வாகிகளிடம் கீழ்பவானி பாசன உரிமை பெற்ற விவசாயிகள் முறையிடுவதாக அறிவித்திருந்தனர்.



மணிப்பூரில் பயங்கரவாத தாக்குதல்: 2 வீரர்கள் பலி!
[Saturday 2024-04-27 18:00]

மணிப்பூரில் இந்திய - மியான்மர் எல்லையில் உள்ளூர் பயங்கரவாத குழு நடத்திய தாக்குதலில் இரண்டு இந்திய வீரர்கள் பலியாகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த தாக்குதலைத் தொடர்ந்து அந்தப் பகுதியில் பாதுகாப்புப் பலப்படுத்தப்பட்டுள்ளது. மணிப்பூரில் நேற்றைய தினம் நாடாளுமன்ற தேர்தல் வாக்குபதிவு நடைபெற்றிருந்தது.



ஹெலிகாப்டரில் ஏறும் போது தவறி விழுந்த மம்தா பானர்ஜி!
[Saturday 2024-04-27 18:00]

மேற்கு வாங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி ஹெலிகாப்டரில் ஏறும் போது இருக்கைக்கு அருகே தவறி விழுந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவில் 2024 -ம் ஆண்டுக்கான மக்களவை தேர்தல் அறிவிக்கப்பட்டு தீவிர பிரச்சாரம் செய்யப்பட்டு வருகிறது. நேற்று இந்தியாவில் உள்ள பல மாநிலங்களில் இரண்டாம் கட்ட தேர்தல் நடைபெற்றது.



விடைத்தாளில் ஜெய் ஸ்ரீராம் என எழுதிய மாணவர்களுக்கு அதிக மதிப்பெண்கள்: ஆசிரியர்கள் செய்த செயல்!
[Saturday 2024-04-27 18:00]

தேர்வு விடைத்தாளில் ஜெய் ஸ்ரீராம் என்று எழுதிய 4 மாணவர்களுக்கு 50 சதவீதத்திற்கு மேல் மதிப்பெண் வழங்கிய 2 பேராசிரியர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். உத்தர பிரதேசம், ஜோன்பூரில் வீர் பகதூர் சிங் பூர்வாஞ்சல் பல்கலைக்கழகம் ஒன்று உள்ளது. இந்த பல்கலைக்கழகத்தின் பி.பார்ம் செமஸ்டர் தேர்வின் முடிவுகள் கடந்த ஆகஸ்ட் மாதத்தில் வெளியாகின.


Karan Remax-2010
Mahesan-Remax-169515-Seithy
Kugeenthiran-200-2022-seithy
Airlinktravel-2020-01-01
Ambikajewellers-01-08-2021-seithy
Vaheesan-Remax-2016
Logan-Kumaresh-Homelife-02-02-2021
NKS-Ketha-04-11-2021
 gloriousprinters.com 2021
Rajeef sebarasha 2023/04/19
Asayan-Salon-2022-seithy
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> 12 10 2019 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Skanda Nite 2019 125th Anniversary நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா