Untitled Document
May 18, 2024 [GMT]
கனடாவில் இன்று 'அறைகூவல்' - நீதிக்கான அழைப்பு!
[Monday 2024-05-06 04:00]


தமிழினப் படுகொலையை நினைவு கூர்வோம்.



திகதி: திங்கட்கிழமை, May 06, 2024
 

நேரம்: மாலை 7:00 மணி 

முகவரி: 5637 Finch Ave E Unit 1, Scarborough, ON M1B 5K9

தமிழினப் படுகொலையை நினைவு கூர்வோம்.

திகதி: திங்கட்கிழமை, May 06, 2024

நேரம்: மாலை 7:00 மணி

முகவரி: 5637 Finch Ave E Unit 1, Scarborough, ON M1B 5K9

  

நமது ‘கனேடியத் தமிழர் கூட்டு’ ('கூட்டு' / 'COLLECTIVE' ) ஏற்பாடுசெய்துள்ள 'சமூக மன்றம்' நிகழ்வில் கலந்துகொள்ளுமாறு, உங்களை அன்புடன் அழைக்கின்றோம். ‘கனடிய தமிழர் பேரவை’ ('பேரவை'/ 'CTC') ஒரு அமைப்பாக தொடர்ந்து தோல்வியடைந்துள்ளமை குறித்து இந்நிகழ்வில் கவனம் செலுத்தப்படும். இந்நிகழ்வில் தமிழ் இனப்படுகொலை குறித்த பேரவையின் தொடர் மறுப்பு நிலைப்பாடு முக்கிய இடம்பிடிக்கிறது.

கனேடிய நாடாளுமன்றில், CTC விரைவில் முன்னெடுக்கவுள்ள 'முள்ளிவாய்க்கால் நினைவு நாள்' நிகழ்வு குறித்த எதிர்ப்பை நேரடியாகப் பதிவுசெய்யும் வகையில், இந்த 'சமூக மன்றம்’/ ‘COMMUNITY FORUM' நடைபெறவுள்ளது. பேரவை ஏற்பாடு செய்துள்ள நிகழ்வு, பெயரளவில் மட்டுமே நினைவு நாளாக அடையாளப்படுத்தும் முனைப்பாகும். உண்மையில், தமிழினப் படுகொலையை நினைவில் கொள்வதற்கு மாறாக, ஒரு எதிர்மறையான முறையில், அதனை மறக்கடிக்கும் வகையில் பேரவையின் முனைப்பு அமைந்துள்ளது.

CTC யின் இந்த நிகழ்வு தொடர்பான செய்திக் குறிப்பு, எவ்வித நீதிவழங்கலோ, பொறுப்புக்கூறலோ அவசியமற்ற ஏது நிலையை இலங்கை அரசுக்கு வழங்குகிறது. தமிழர்களுக்கு நடந்தவை குறித்த உண்மையை மீண்டும் ஒருமுறை ஒப்புக்கொள்ள பேரவை மறுக்கிறது.

யுத்தம் மற்றும் தமிழ் இனப்படுகொலை குறித்த உண்மைகளை அழிக்கும் இலங்கை அரசின் அணுகுமுறைக்கு, பேரவை உடந்தையாக இருக்கும் வகையில் அமைதி பேணுகிறது.

குறிப்பாக, தமிழினப்படுகொலை இடம்பெற்றது என்பதை CTC ஒப்புக்கொள்ளவில்லை. மாறாக, இதுவரை காலமும், தமிழ் இனப்படுகொலையை அங்கீகரிக்கும் விடயத்தில் கனடாவிலும், சர்வதேச அளவிலும் நாம் அடைந்த முன்னேற்றத்தை நாசம் செய்கிறது. பேரவையின் இந்நகர்வு, தமிழ் இனப்படுகொலையின் குற்றவாளியான இலங்கை அரசு, பொறுப்புக்கூறலில் இருந்து தப்பிக்க அனுமதிக்கும் வழிகளை உருவாக்குகின்றன.

குறிப்பாக, கனேடிய நாடாளுமன்ற உறுப்பினர்கள், தமிழ் இனப்படுகொலையை கூட்டாக அங்கீகரித்த அதே நாடாளுமன்றத் கட்டிடத்தில், பேரவையின் நிகழ்வு நடைபெறுவது குறிப்பாக கவலைக்குரியது. இந்நிகழ்வு, நாடாளுமன்ற உறுப்பினர்கள், கனேடியர்கள், மற்றும் சர்வதேச சமூகத்திற்கு என்ன செய்தியை தெரிவிக்கிறது என நாம் ஒரு சமூகமாக கேள்வி எழுப்ப வேண்டும்.

நாம் சமூகமாக தொடர்ந்து முன்னேற்றி வரும் விடயங்களை பேரவையின் இந்த அணுகுமுறை பின் நகர்த்துகிறது.

எனவே, இந்த 'முக்கியமான விடயங்கள் தொடர்பில் சமூக விழிப்புணர்வை ஏற்படுத்தவும், அது தொடர்பான உரையாடல்களை அதிகரிக்கவும், 'சமூக மன்றம்' நிகழ்வுக்கு நீங்கள் சமூகமளிப்பதும், அதில் உங்களது பங்கேற்பும் மிக அவசியமானது என்பதை தயவுடன் வலியுறுத்துகிறோம்.

இந்த விடயத்தில் விழிப்புணர்வை ஏற்படுத்தவும், நீதிக்காக வாதிடுவதற்கும் உங்கள் ஆதரவை நாங்கள் எதிர்பார்க்கிறோம்.

May 5 ஆம் திகதிக்குள் (+1) 647-560-7013 அல்லது canadiantamilcollective@gmail.com ஆகிய வழிமுறைகளில் உங்கள் வருகையை உறுதிப்படுத்தவும்.

உங்கள் பங்கேற்பை ஆவலுடன் எதிர்பார்க்கிறோம்.

உண்மையுள்ள,

கனேடியத் தமிழர் கூட்டு

  
   Bookmark and Share Seithy.com



முள்ளிவாய்க்காலில் தமிழினப் படுகொலையின் 15ஆவது ஆண்டு நினைவேந்தல்! - உணர்வுபூர்வமாக அனுஷ்டிப்பு. Top News
[Saturday 2024-05-18 20:00]

முள்ளிவாய்க்காலில் இடம்பெற்ற தமிழினப் படுகொலையின் 15ஆவது ஆண்டு நினைவேந்தல் முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தில் முற்பகல் 10.30 மணியளவில் பொதுச்சுடர் ஏற்றப்பட்டு உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டது.



முள்ளிவாய்க்கால் பிரகடனம் - 2024!
[Saturday 2024-05-18 20:00]

எமது பேரன்பிற்கும் பெருமதிப்பிற்குமுரிய எம் மக்களே!

தமிழினப்படுகொலை முள்ளிவாய்க்காலில் உச்சந்தொட்டு இன்றுடன் 15 ஆண்டுகள் நிறைவடைகின்றது. ஒவ்வொரு படுகொலைக்குப் பின்னரும் “இனிமேல் இது நடக்கவே கூடாது” என்ற உணர்வு பிரவாகம் வலுவாக எழுந்தாலும், அதுவே தொடர்கின்றது இனிமேல் நடக்கவே கூடாது என்ற உணர்வு பிரவாகம் அர்த்தமற்றதாகிவிட்டது.



மட்டக்களப்பு காந்தி பூங்காவில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்! Top News
[Saturday 2024-05-18 20:00]

முள்ளிவாய்க்கால் நினைவு தின நினைவேந்தல் நிகழ்வு இன்று காலை மட்டக்களப்பு காந்தி பூங்காவில் இடம்பெற்றது. வடக்கு கிழக்கு தமிழ் மக்கள் இணைந்து குறித்த நிகழ்வை ஏற்பாடு செய்திருந்தனர்



முள்ளிவாய்க்காலில் உயிர்நீத்த உறவுகளுக்கு நந்திக்கடலில் மலர்தூவி அஞ்சலி! Top News
[Saturday 2024-05-18 20:00]

முள்ளிவாய்க்கால் தமிழினப் படுகொலையின் 15ஆம் ஆண்டு நினைவுநாள் இன்றாகும். அந்தவகையில் முள்ளிவாய்க்காலில் உயிர்நீத்த உறவுகளுக்கு, முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் இன்று நந்திக்கடலில் மலர்தூவி அஞ்சலி செலுத்தியுள்ளார்.



மன்னாரில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்! Top News
[Saturday 2024-05-18 20:00]

இறுதிப் போரில் உயிர் நீத்த உறவுகளை நினைவுகூறும் முள்ளிவாய்க்கால் 15 ஆவது ஆண்டு நினைவேந்தல் இன்று வடக்கு -கிழக்கு பகுதிகளில் நினைவு கூறப்பட்டு வருகிறது. அதனடிப்படையில் மன்னாரில் இன்று காலை 8.30 மணியளவில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் இடம் பெற்றது.



நல்லூரில் இனப்படுகொலை வரலாற்று ஆவண காட்சியகம்! Top News
[Saturday 2024-05-18 20:00]

தமிழினப் படுகொலையின் வரலாறுகளை அடுத்த தலைமுறைக்கு கடத்தும் நோக்கில் அரச பயங்கரவாதத்தினால் நேர்ந்த இனப்படுகொலைகளை திகதி வாரியாக தொகுத்து யாழ்ப்பாணத்தில் ஆவண காட்சியகம் அமைக்கப்பட்டுள்ளது.



முள்ளிவாய்க்காலில் கொல்லப்பட்ட மக்களுக்காக பிதிர்க்கடன் நிறைவேற்றல்! Top News
[Saturday 2024-05-18 20:00]

முள்ளிவாய்க்காலில் கொல்லப்பட்ட மக்களின் ஆத்மசாந்தி பிரார்த்தனை, பிதிர்க்கடன் நிறைவேற்றல் இன்றைய தினம் சனிக்கிழமை முள்ளிவாய்க்கால் கப்பல் வீதியில் உள்ள கடற்கரைப் பகுதியில் நடைபெற்றது.



வெள்ளவத்தை கடற்கரையில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்! Top News
[Saturday 2024-05-18 20:00]

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு இன்று கொழும்பில் நடைபெற்றது. சிவில் சமூக செயற்பாட்டாளர்கள் மற்றும் மனித உரிமைகள் ஆர்வலர்களால் கூட்டாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்நிகழ்வு இன்று காலை 9.30 மணிக்கு வெள்ளவத்தை புகையிரத நிலையத்துக்கு அண்மையிலுள்ள கடற்கரையில் நடைபெற்றது.



யாழ். பல்கலைக்கழத்திலும் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்! Top News
[Saturday 2024-05-18 20:00]

யாழ்ப்பாணம் பல்கலைக் கழத்திலும் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு அனுஷ்டிக்கப்பட்டது. யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் இந்த நினைவேந்தல் நிகழ்வானது யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் தூபியில் நடைபெற்றது.



மரத்தில் இருந்து தவறி விழுந்த இளைஞன் மரணம்!
[Saturday 2024-05-18 20:00]

யாழ்ப்பாணம் - உடுவில் பகுதியில் மரத்திலிருந்து தவறிவிழுந்த இளைஞன் ஒருவர் வெள்ளிக்கிழமை உயிரிழந்துள்ளார். இதில் ஆலடி உடுவில் மானிப்பாயைச் சேர்ந்த சசிக்குமார் ரூபின்சன் என்ற 20 வயது இளைஞனே உயிரிழந்தவராவார்.



முள்ளிவாய்க்கால் இனஅழிப்பின் 15ஆம் ஆண்டு நினைவேந்தல் இன்று!- பிரதான நிகழ்வுகளுக்கு ஏற்பாடு.
[Saturday 2024-05-18 04:00]

முள்ளிவாய்க்கால் இனஅழிப்பின் 15ஆம் அண்டு நினைவேந்தல் நிகழ்வு இன்று 18 ஆம் திகதி சனிக்கிழமை முற்பகல் 10.30 மணிக்கு முள்ளிவாய்க்காலில் அமைந்துள்ள முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் முற்றத்தில் நடைபெறவுள்ளது.



கோட்டாவுக்கு அழைப்பாணை அனுப்ப உத்தரவு!
[Saturday 2024-05-18 04:00]

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிற்கு அழைப்பாணை அனுப்புமாறு உயர் நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டுள்ளது.



காணாமல் ஆக்கப்பட்டவர்களின் விவகாரத்துக் சர்வதேச விசாரணையே தீர்வு! - உறவுகள் வலியுறுத்தல்.
[Saturday 2024-05-18 04:00]

காணாமல் ஆக்கப்பட்டோர் விவகாரத்திற்கு சர்வதேச பொறிமுறையில் தீர்வுபெற்றுத்தர வேண்டுமென வடக்கு, கிழக்கு மாகாணங்களின் வலிந்துகாணாமல் ஆக்கப்பட்டோர் சங்கப்பிரதிநிதிகள் சர்வதேச மன்னிப்புச்சபையின் செயலாளர் நாயகம் அக்னஸ் கல்லமார்ட்டிடம் வலியுறுத்திக் கூறியுள்ளனர்.



முள்ளிவாய்க்கால் இனஅழிப்பு வாரம் - குமாரபுரத்தில் படுகொலையான மக்களுக்கு அஞ்சலி! Top News
[Saturday 2024-05-18 04:00]

திருகோணமலை மாவட்டம் குமரபுரத்தில் படுகொலை செய்யப்பட்ட தமிழ் மக்களுக்கு மட்டக்களப்பு சிவில் சமூகத்தினர் வெள்ளிக்கிழமை மாலை அஞ்சலி செலுத்தியுள்ளனர்.



மே.18, இன அழிப்புக்கான நீதிக்காக உழைப்போம் என உறுதி பூணும் நாள்! - நிமால் விநாயகமூர்த்தி
[Saturday 2024-05-18 04:00]

பதினைந்து வருடங்கள் சென்றுவிட்டன. இது போன்ற நாட்களில் தான் எல்லாமும் நடந்தேறியது. "எங்களை காப்பாற்ற எவராவது வரமாட்டார்களா?" என்னும் ஏக்கத்துடன் எங்கள் மக்கள் மரண உலகின் கைதியானார்கள். உலகம் காப்பாற்றும் என்று நாங்கள் நம்பினோம் - எங்களால் முடிந்தது எல்லாம் செய்தோம் - இறுதியில் எமது மக்கள் கொன்றொழிக்கப்பட்டனர் என்னும் செய்தி எங்களுக்கு கிடைத்தது.



மூன்றாவது ஆண்டாக இன அழிப்பு விழிப்புணர்வை ஏற்படுத்தும் சட்டமூலம்-104! Top News
[Saturday 2024-05-18 04:00]

தமிழ் இனப்படுகொலையின் உச்சக் கட்டமான 2009இல் முள்ளிவாய்க்காலில் நடத்தப்பட்ட இன அழிப்பின் 15ஆவது நினைவு ஆண்டு. இனப்படுகொலை என்பது ஒரு சில குறிப்பிட்ட நிகழ்வுகளால் மட்டும் அடையாளப்படுத்தப்படுவதில்லை. இது ஒரு தொடர்ச்சியான செயல்முறை. ஒரு குழுவை அல்லது இனத்தை அகற்றுவதற்கும் அழிப்பதற்கும் குறிப்பிட்ட தரப்பினால் திட்டமிட்டு, தொடர்ச்சியாக செயற்படுத்தப்படும் செயல்முறை. சுதந்திரம் அடைந்ததிலிருந்து இலங்கை அரசானது இனப்படுகொலையின் பாதையிலேயே திட்டமிட்டுப் பயணித்துக் கொண்டிருக்கிறது.



வடக்கு ஆளுநரைச் சந்தித்தார் அமெரிக்க தூதுவர்!
[Saturday 2024-05-18 04:00]

வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம். சார்ள்சுக்கும், இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சங்குக்கும் இடையில் நேற்று சந்திப்பு நடைபெற்றது. வடக்கு மாகாண ஆளுநர் அலுவலகத்தில் இந்த சந்திப்பு நடைபெற்றது.



வவுனியா இரட்டைக் கொலை - சாட்சிகளை அச்சுறுத்திய பெண் கிராம அலுவலர்!
[Saturday 2024-05-18 04:00]

வவுனியா- தோணிக்கல் பகுதியில் இடம்பெற்ற இரட்டை கொலை சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள பிரதான சந்தேக நபருடன் தொடர்பில் உள்ள பெண் கிராம அலுவலரால் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக சாட்சியாளர் வவுனியா நீதிமன்றத்தின் கவனத்திற்குக் கொண்டு வந்துள்ளதாக தெரிவித்துள்ளார்.



போர் என்பது வெற்றியல்ல - அது நாட்டினதும் மனித குலத்தினதும் தோல்வி!
[Saturday 2024-05-18 04:00]

போர் என்பது வெற்றியல்ல அது நாட்டினதும் அல்லது மனித குலத்தினதும் தோல்வியாகும். 30 வருட கால யுத்தம் இழப்புக்களை மாத்திரமே மிகுதியாக்கியுள்ளது. வெறுப்புக்கு பதிலாக அன்பை வெளிப்படுத்துவோம் என முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க நாட்டு மக்களிடம் வலியுறுத்தியுள்ளார்.



தெல்லிப்பழையில் நாய் இறைச்சிக் கொத்து? - உணவகத்துக்கு சீல்.
[Saturday 2024-05-18 04:00]

யாழ்ப்பாணம் - தெல்லிப்பழை பகுதியிலுள்ள உணவு விடுதி ஒன்றில் தரமற்ற இறைச்சி கொத்தினை வழங்கியமை தொடர்பில் குறித்த உணவகத்திற்கு சீல் வைக்கப்பட்டுள்ளது.


Asayan-Salon-2022-seithy
Ambikajewellers-01-08-2021-seithy
Airlinktravel-2020-01-01
Logan-Kumaresh-Homelife-02-02-2021
Kugeenthiran-200-2022-seithy
Mahesan-Remax-169515-Seithy
Vaheesan-Remax-2016
NKS-Ketha-04-11-2021
Karan Remax-2010
Rajeef sebarasha 2023/04/19
 gloriousprinters.com 2021
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> 12 10 2019 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Skanda Nite 2019 125th Anniversary நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா