Untitled Document
March 19, 2024 [GMT]
  
   Bookmark and Share Seithy.com



வெடுக்குநாறிமலைக்கு 2 அதிகாரிகளை அனுப்பியது மனித உரிமைகள் ஆணைக்குழு!
[Tuesday 2024-03-19 05:00]

வெடுக்குநாறிமலை ஆதிசிவன் ஆலய விவகாரத்தில் கைதுசெய்யப்பட்டோர் குறித்து ஆராய்வதற்கு ஏற்கனவே 2 அதிகாரிகள் வவுனியாவுக்கு அனுப்பிவைக்கப்பட்டிருப்பதாகவும், இவ்விவகாரம் தொடர்பில் வவுனியா பிராந்திய அலுவலக ஒருங்கிணைப்பாளரின் அறிக்கை நாளை மறுநாள் கிடைக்கப்பெறும் எனவும் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.



பூவரசங்குளத்தில் பேருந்து சில்லில் சிக்கி முதியவர் மரணம்!
[Tuesday 2024-03-19 05:00]

வவுனியா பூவரசங்குளத்தில் பேரூந்தில் ஏற முற்பட்ட வரை பேரூந்து மோதியதில் சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்துள்ளார். பூவரசங்குளம் சந்தியிலுள்ள பேரூந்து தரிப்பிடத்தில் நேற்று காலை இடம்பெற்ற இவ் விபத்தில் மணியர்குளம் பகுதியினை சேர்ந்த 76 வயதுடைய சிவக்கொழுந்து வள்ளிப்பிள்ளை என்பவரே உயிரிழந்துள்ளார்.



எட்கா ஒப்பந்தத்தின் உள்ளடக்கத்தை பகிரங்கப்படுத்த வேண்டும்!
[Tuesday 2024-03-19 05:00]

இந்திய பொதுத்தேர்தல் நிறைவு பெற்றதன் பின்னர் இந்தியாவுடனான எட்கா ஒப்பந்தத்தை கைச்சாத்திட அரசாங்கம் உத்தேசித்துள்ளது. எட்கா ஒப்பந்தம் இலங்கைக்கு சாதகமாக அமையுமா என்பது சந்தேகத்துக்குரியது. ஒப்பந்தத்தின் உள்ளடக்கத்தை நாட்டு மக்களுக்குப் பகிரங்கப்படுத்த வேண்டும் என பிவிதுரு ஹெல உறுமய கட்சியின் தலைவரும்,பாராளுமன்ற உறுப்பினருமான உதய கம்மன்பில தெரிவித்தார்.



ஈரானிய கப்பலில் சுற்றும் கடற்கொள்ளையர்கள்! - அரபிக் கடலில் ஆபத்து.
[Tuesday 2024-03-19 05:00]

கடந்த சனிக்கிழமை அரபிக்கடலில் சோமாலிய ஆயுதக் குழுவொன்றினால் ஈரானிய மீன்பிடி படகு ஒன்று கடத்தப்பட்டதை தொடர்ந்து, அரபிக்கடலில் மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டாம் என கடற்றொழில் மற்றும் நீரியல்வள திணைக்களம் இலங்கை மீனவர்களுக்கு அறிவித்துள்ளது.



யாழ். பல்கலைக்கழக முன்றலில் நாளை போராட்டம்!
[Monday 2024-03-18 17:00]

தமிழர் தாயகத்தில் தொல்லியல் என்ற போர்வையிலான பண்பாட்டு அழிப்பையும் சிங்கள - பௌத்தமயமாக்கலையும் உடன் நிறுத்துமாறு கோரியும், வவுனியா வடக்கு, வெடுக்குநாறிமலை ஆலயத்தில் நெடுங்கேணிப் பொலிஸாரால் திட்டமிட்டுக் கைது செய்யப்பட்டவர்களை உடன் விடுதலை செய்யுமாறு வலியுறுத்தியும் நாளை போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.



வெடுக்குநாறிமலையில் கைது செய்யப்பட்டவர்களை விடுவிக்க கோரி மூதூரில் பேரணி! Top News
[Monday 2024-03-18 17:00]

வெடுக்குநாறி மலையில் கைது செய்யப்பட்டவர்களை விடுதலை செய்ய வலியுறுத்தியும், மத வழிபாட்டு உரிமையை உறுதி செய்யக் கோரியும் இன்று மூதூரில் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.



ஒட்டாவாவில் நேற்று 6 இலங்கையர்களினதும் இறுதிக்கிரியைகள்!
[Monday 2024-03-18 17:00]

கனடாவில் கொலை செய்யப்பட்ட 06 இலங்கையர்களின் இறுதிக்கிரியைகள் நேற்று பிற்பகல் ஒட்டாவாவில் இடம்பெற்றன.



நாடாளுமன்றம், அரசியல் கட்சிகள் மீதான மக்களின் நம்பிக்கை வீழ்ச்சி!
[Monday 2024-03-18 17:00]

நாடாளுமன்றம் மற்றும் அரசியல் கட்சிகள் மீதான மக்களின் நம்பிக்கை குறைவடைந்துள்ளதாகவும், நாடாளுமன்றத்தின் மீது 22 சத வீதமான மக்களும், அரசியல் கட்சிகள் மீது, 19 சத வீதமான மக்களும் நம்பிக்கை கொண்டிருப்பதாக, மாற்றுக் கொள்கைகளுக்கான நிலையம் தெரிவித்துள்ளது.



வெடுக்குநாறிமலை விவகாரம் -பிரித்தானிய தமிழர் பேரவை கண்டனம்!
[Monday 2024-03-18 17:00]

சிறிலங்கா அரசும் அதன் இராணுவ, போலீஸ் நிர்வாகங்களும் தொடர்ச்சியாக தமிழர்களுக்கு எதிராக மேற்கொண்டு வரும் கைதுகள், நில அபகரிப்பு மற்றும் பொது மக்களின் அன்றாட செயற்பாடுகளில் ஏற்படுத்தப்படும் அச்சுறுத்தல்கள், இடையூறுகள் தொடர்பில் பிரித்தானிய தமிழர் பேரவை கண்டனத்தை தெரிவித்து கொள்கிறது.



வெப்பநிலை அதிகரிப்பினால் ஆபத்து அதிகம்!
[Monday 2024-03-18 17:00]

சுற்றுச்சூழலின் வெப்பநிலை உடல் வெப்பநிலையை எட்டினால், அது படபடப்பை அதிகரித்து, மூளைக்கு ஒக்ஸிஜன் வழங்குவதைக் குறைக்கும், இதனால் வெப்ப அதிர்ச்சிகள், மயக்கம் மற்றும் மரணம் ஏற்படலாம் என சீமாட்டி ரிஜ்வே மருத்துவமனை ஆலோசகர் குழந்தைகள் நல மருத்துவர் வைத்தியர் தீபால் பெரேரா தெரிவித்தார்.



பட்டிமன்ற விவகாரம் - யாழ். பல்கலைக்கழக நிர்வாகத்திடமும் விசாரணை நடத்த உத்தரவு!
[Monday 2024-03-18 17:00]

இன நல்லிணக்கத்துக்குக் குந்தகம் ஏற்படுத்தும் வகையிலான பட்டிமன்றம் யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் நடத்தப்பட்டமை தொடர்பில் யாழ். பல்கலைக்கழக நிர்வாகத்திடமும் விசாரணைகளை மேற்கொள்ளுமாறு பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவரிடம் கல்வி அமைச்சு கோரியுள்ளது.



வரி விதிப்பினால் பேக்கரி உற்பத்திகளின் விற்பனை 40 வீதம் சரிவு!
[Monday 2024-03-18 17:00]

பேக்கரி பொருட்களுக்கு பயன்படுத்தப்படும் சேர்மானங்களுக்கு வரி விதிக்கப்பட்டுள்ளதால், பாண் போன்ற பேக்கரி பொருட்களின் விற்பனை குறைந்துள்ளதாக நுகர்வோர் உரிமைகள் பாதுகாப்பு தேசிய இயக்கத்தின் தலைவர் ரஞ்சித் விதானகே தெரிவித்துள்ளார்.



உரும்பிராய் விபத்தில் ஒருவர் காயம்!
[Monday 2024-03-18 17:00]

யாழ்ப்பாணம் - உரும்பிராய் பகுதியில் நேற்றுமுச்சக்கரவண்டியுடன் பட்டாரக வாகனம் மோதி விபத்துக்குள்ளானதில் ஒருவர் காயமடைந்தார். காயமடைந்தவர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.



தோட்டக் கிணற்றில் தவறி விழுந்து இளம்பெண் மரணம்!
[Monday 2024-03-18 17:00]

வவுனியா- சமனங்குளம் பகுதியில் தோட்ட கிணற்றில் தவறி விழுந்து இளம் யுவதி ஒருவர் மரணமடைந்துள்ளார். இந்தச் சம்பவம் ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றுள்ளதாக சிதம்பரபுரம் பொலிஸார் தெரிவித்துள்ளனர்



புதனன்று வாக்கெடுப்பில் கட்சி தாவல்களுக்கு வாய்ப்பு?- தொடங்கியது பேரம்.
[Monday 2024-03-18 05:00]

சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் முன்வைத்துள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணையை வெற்றி கொள்வதற்காக பாராளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவைப் பெறுவதற்கு எதிர்க்கட்சிகளும் ஆளும் தரப்பும் இந்த நாட்களில் இரகசிய பேச்சுவார்த்தைகளை ஆரம்பித்துள்ளதாக அரசியல் வட்டாரங்களில் இருந்து அறியமுடிகிறது.



வெடுக்குநாறிமலை அராஜகத்தைக் கண்டித்து திருகோணமலையில் போராட்டம்! Top News
[Monday 2024-03-18 05:00]

சிவராத்திரி தினத்தன்று வெடுக்குநாறி மலை சிவன் ஆலயத்தில் வழிபாட்டின் போது கைது செய்யப்பட்ட எண்மரை விடுதலை செய்யக்கோரியும் அச் சம்பவத்தைக் கண்டித்தும் திருகோணமலை சிவன்கோவிலுக்கு முன்னால் நேற்று மாலை கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று இடம்பெற்றது .



மருதங்கேணியில் காணாமல் போன மீனவர் சடலமாக மீட்பு!
[Monday 2024-03-18 05:00]

வடமராட்சி கிழக்கு மருதங்கேணியில் சனிக் கிழமை கடலுக்கு சென்று காணாமல் போன மீனவர் நேற்று சடலமாக மீட்கப்பட்டார். மீன்பிடிப்பதற்காக தெப்பம் மூலம் கடலுக்கு சென்றவர் காணாமல் போன நிலையில் இரண்டு நாட்களாக கடற்படையினர் மீனவர்களின் உதவியுடன் தேடி வந்தனர். இந்நிலையில் மருதங்கேணி வடக்கைச் சேர்ந்த 60 வயதுடைய முத்துச்சாமி தவராசா என்னும் குடும்பஸ்தரின் சடலம் நேற்று மாலை மீட்கப்பட்டது.



முதியோர் இல்லமாகி விட்டது பாராளுமன்றம்!
[Monday 2024-03-18 05:00]

நாட்டை கட்டியெழுப்ப வேண்டுமானால் பாராளுமன்றத்தில் உள்ள முதியோர்களை வெளியேற்றி விட்டு, இளைஞர்களுக்கு வாய்ப்பு வழங்க வேண்டுமென கெட்டம்பே ஸ்ரீ ராஜோப வானராமாதிபதி ராமன்ய நிகாயா கப்பிட்டியாகொட சிறிவிமல தேரர் தெரிவித்துள்ளார்.



யாழ்ப்பாணத்தில் பெண் மயங்கி விழுந்து மரணம்!
[Monday 2024-03-18 05:00]

யாழ்ப்பாணம் - தொல்புரம் கிழக்கு பகுதியில் பெண்ணொருவர் இன்றுசடலமாக மீட்கப்பட்டுள்ளார். கதிரவேலு செல்வநிதி என்ற 49 வயதான பெண்ணே சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.



எவராலும் தனித்து ஆட்சி அமைக்க முடியாது!
[Monday 2024-03-18 05:00]

எதிர்வரும் தேர்தலில் உங்கள் வாக்குகளை புத்திசாலித்தனமாக பயன்படுத்துங்கள், இந்த நாட்டை அழித்த பார்ப்பாரற்ற அரசியல்வாதிகளுக்கு ஏமாறாமல், அரசியல்வாதிகளின் கடந்த கால தவறுகளை ஆராய்ந்து உங்கள் வாக்குகளை புத்திசாலித்தனமாக பயன்படுத்துங்கள் என முன்னாள் இராணுவ தளபதியான பாராளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா கேட்டுக்கொண்டார்.


Karan Remax-2010
Asayan-Salon-2022-seithy
 gloriousprinters.com 2021
Vaheesan-Remax-2016
Mahesan-Remax-169515-Seithy
Ambikajewellers-01-08-2021-seithy
NKS-Ketha-04-11-2021
Airlinktravel-2020-01-01
Kugeenthiran-200-2022-seithy
Rajeef sebarasha 2023/04/19
Logan-Kumaresh-Homelife-02-02-2021
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> 12 10 2019 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Skanda Nite 2019 125th Anniversary நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா